NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

Image
  ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன்.  1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story

ஊரடங்கு தளர்வா? ஹாலிடேவா?

 ஊரடங்கு தளர்வா? ஹாலிடேவா?



நம்ம எல்லாருக்குமே தெரியும், எந்தளவுக்குக் கொரானா இரண்டாம் அலை வேகமா பரவுதுனு... அரசாங்கம் தன்னோட பக்கத்துல இருந்து முழுவீச்சா செயல்படுறாங்க... ஆனா மக்கள் இன்னும் இரண்டாம் அலையோட தீவிரத்தை உணரலயோனு எனக்குச் சந்தேகம்... அதுக்கு முதல் காரணம் எங்க தென் தமிழக மாவட்டங்கள்ல தடுப்பூசி பத்தி உருவான அலட்சியம்... சென்னைல தடுப்பூசி ஸ்லாட் இல்லாம மக்கள் திண்டாடுறப்ப எங்க மாவட்டத்துல தடுப்பூசி போட ஆள் இல்லாம ஆரம்பசுகாதார நிலையங்கள் காத்து வாங்குது... 

இரண்டாவது காரணம் இன்னும் ஒரு வாரத்துக்கு முழு வீச்சுல ஊரடங்குனு நேத்து அறிவிச்ச முதல்வர் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், சொந்த ஊர்களுக்குப் போகவும் ஊரடங்கை தளர்த்துறதா அறிவிச்சார்... அறிவிப்பு வந்தது தான் தாமதம், நம்ம மக்கள் சுற்றுலா மோடுக்குப் போயிட்டாங்க... காலையில இருந்தே சாலைகள்ல வாகனமயம்... காரணகாரியத்தோட சிலர், காரணமே இல்லாம பலர்னு இன்னைக்கு சாலைகள் ஜெகஜோதியா நிறைஞ்சு இருந்துச்சு...


 

மளிகைப்பொருட்கள், காய்கறி வீட்டு வாசலுக்கே வந்துடும்னு முதல்வர் அறிக்கைல தெளிவா சொல்லியிருந்தும் மக்கள் இந்த ஏழு நாள் முடிஞ்சு எட்டாம் நாள் உலகம் அழிஞ்சிடுமோனு பயந்து இன்னைக்கே ஒரு ஊருக்கு தேவையான அளவுக்கு ஸ்டாக் வைக்க வாங்கிட்டாங்க போல... 

இது போதாதுனு நகைக்கடை ஜவுளிக்கடைகள்ல அலைகடலென திரண்டு குவிந்த மக்கள்னு செய்தி பாக்குறப்ப மக்களுக்குத் தங்களோட உயிரும் முக்கியமில்ல, தன்னை சார்ந்தவங்க மேலயும் அக்கறை இல்லனு புரிஞ்சுது... 

எது எப்பிடியோ இவங்களால எனக்கு மீம் போட கண்டெண்ட் கிடைச்சுது... அதை பாத்துட்டு சிரிங்க மக்களே!




 
இன்னிக்கு போனதும் போகட்டும்... இனிமே கவனமா இருப்போம்... Stay Home Stay Safe, Use double mask, Take vaccine... Gud ni8😴😴😴

Comments

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.