NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)
சாந்தனு சொல்றதும் உண்மை தான்...! வீடு, கார், சேவிங்ஸ் இன்வெஸ்ட்மென்ட் எல்லாத்தையும் உடனுக்குடனே
திட்டமிடுபவர்கள், இந்த குழந்தை விஷயத்தையும் திட்டமிட்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது.
குழந்தைகள் என்பது ஒரு வரம் மாதிரி. அது காசு பணம் மாதிரி கிடையாது. அது நமக்கு எப்ப, எப்படி கிடைக்குமோ நமக்கேத் தெரியாது. நம்மளால தள்ளிப் போட கூட முடியும். ஆனா, உடனேங்கறது மட்டும் நம்ம கையில கிடையாது. ஏன்னா, இப்பவுள்ள சூழ்நிலையில உடல் சார்ந்த நிறைய பிரச்சினைகள் பெண்ணுக்கும், பையனுக்கும் ரெண்டு பேருக்குமே இருக்குது. அதை ஆரம்பத்துலயே கண்டு பிடிச்சிட்டா, அடுத்த மூணு வருசத்துல நமக்கே நமக்குன்னு அட்லீஸ்ட் ஒரு பேபியாவது நம்ம கையில தவழும். நிறைய பேருக்கு ரெண்டாவது குழந்தைங்கறது இப்பவெல்லாம் தலை கீழ நின்னு தண்ணி குடிக்கிற மாதிரி தான். அது தவிர, குறைகள் இருந்தாலும் நாம எடுத்துக்கிற ட்ரீட்மெண்ட்லயே தெரிஞ்சிதறதோட, உடல் சார்ந்த பிரச்சினைக்கு உடனுக்குடனே தீர்வும் கிடைச்சிடும். அப்படி பிரச்சினைகள் தீராத பட்சத்துல வேறெதாவது வழியில் குழந்தையை பெற முயற்சிப்பதோ, அல்லது வழியே இல்லாத பட்சத்தில் குழந்தையை தத்தெடுப்பதோ, அல்லது நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர் என்று வாழ்வை இருவராகவே தொடருவதோ, அல்லது பரஸ்பர புரிதலின் அடிப்படையில் பிரிந்து செல்வது என்று நம் வாழ்க்கையை நாமே சீரமைத்துக் கொள்ளலாம் தானே....? தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், பல சங்கடங்களையும், அதிரடி திருப்பங்களையும் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
ம்... சாந்தனுவும் சம்முவும் அப்படியொரு புரிதல் இல்லாத தன்மையால் தான், இப்படி கிழக்கும் மேற்குமாக வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் விக்கிக் கொண்டு திரிகிறார்களோ என்று தோன்றுகிறது. அதுவே தானோ...???
😆😆😆
CRVS (or) CRVS 2797