அத்தியாயம் 11

  அத்தியாயம் 11 நாம் அனைவரும் ஒரு ‘ ஜட்ஜ்மெண்டல் சொசைட்டி ’ யில் வாழ்ந்து வருகிறோம் . நமது அன்றாட நடவடிக்கைகள் நம்மை அறிந்தவர்களாலும் முன்பின்னறியாத நபர்களாலும் விமர்சனத்துக்குள்ளாவதை கண்டுகொள்ளாமல் நகர்வதற்கு நாம் பழகிக்கொண்டிருக்கிறோம் . ஏன் என்னைப் பற்றி இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்பதற்கான தைரியத்தை நாம் வளர்த்துக்கொள்வதில்லை . வளர்ப்பதற்கு இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிப்பதும் இல்லை .                                                           இப்படிக்கு சந்திரிகை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி , மில்லர் மெமோரியல் லைப்ரரி ... சோர்ந்து போயிருந்த சந்தோஷை அழைத்துக்கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்தாள் சந்திரிகா . அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைண்மெண்டுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடியவாறு மிகவும் மெதுவான குரலில் சந்தோஷிடம் அவனது சோர்வுக்கான காரணத்தைக் கேட்டாள் . “ இன்னைக்கு எங்கண்ணி நான் வச்சிருந்த பி . டி . எஸ் ஆல்பம் கலெக்சன் எல்லாத்தையும் தூக்கி குப்பையில வீசிட்டாங்க சந்து ... நான் இல்லாத நேரத்துல செஞ்சிருக்காங்க ... இன்னைக்கு மானி

இந்த மாத கிண்டில் நாவல்







 ஹலோ மக்களே!

கிண்டில்ல ஒவ்வொரு மாசமும் அப்லோட் பண்ணுற கதையோட டீடெய்ல்ஸ் அண்ட் லிங்ஸ் இங்க ஷேர் பண்ணப்படும்...

இந்த மாதத்திற்கான கிண்டில் நாவல் 'உன்னில் இதயம் அளாவுதே'. அருணோதயம் பதிப்பகத்தில் இந்த நாவலைப் புத்தகமாகவும் வாங்கி படிக்கலாம்.

கதை சுருக்கம்

உன்னில் இதயம் அளாவுதே – 2024 ஆகஸ்ட் மாத வெளியீடாக அருணோதயம் பதிப்பகம் மூலம் வெளிவந்த நூல். சராசரி நடுத்தர குடும்பத்து இளைஞனான அகிலன் வாழ்க்கை காதல் தோல்வியால் தடம் புரண்டு போக அவனுக்கு மனைவியாகிறாள் அவனது சிறுவயது தோழியான ஆனந்தி. அடாவடி பேர்வழியான ஆனந்தியின் வரவு அகிலனின் காயத்தை ஆற்றி அவனை நல்வழி படுத்துமா? படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!


#amazonkindle #உன்னில்_இதயம்_அளாவுதே (After marriage + middle class love story)


இப்போது அமேசானில்... படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்துக்கோங்க மக்களே!


கதையிலிருந்து சில வரிகள்....


“பொண்டாட்டி கிட்ட காசு வாங்க கௌரவம் இடம் குடுக்க மாட்டுக்குதோ?” கேலியாகக் கேட்டாள் ஆனந்தி.

“அப்பிடிலாம் இல்லையே” என்று சொன்னாலும் தயங்கியபடியே பெட்டியை அடுக்கினான் அகிலன்.

ஆனந்தி வேறேதும் யோசிக்கவில்லை. தனது டெபிட் கார்டை எடுத்தவள் அவனைத் திருப்பி அவனது சட்டை பாக்கெட்டில் வைத்தாள்.

அப்போது தான் குளித்திருந்தாள் என்பதால் விரல் நுனிகள் இன்னும் தண்ணீரின் சிலுசிலுப்பை இழக்காமல் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட வெண்டைக்காய்களைப் போல குளுமையாக அவனது மேலிரண்டு பட்டன்கள் திறக்கப்பட்ட சட்டைக்கு நடுவே தெரிந்த மார்பு ரோமத்திக்கிடையே தீண்டி மீண்டது.

அகிலன் புதிதாகத் தோன்றிய பெண்ணொருத்தியின் ஸ்பரிசத்தில் திகைத்து கண்ணிமைக்க மறந்து நிற்க ஆனந்தியோ அதைக் கண்டுகொள்ளாது

“என்னடா உடம்பு இப்பிடி காய்ச்சல் கண்டவன் மாதிரி கொதிக்குது? நைட் திண்ணைல படுத்திருந்தியே, குளிர்ல காய்ச்சல் எதுவும் வந்துடுச்சா?” என சாதாரணமாக கேட்டபடி நகர்ந்து சென்று கண்ணாடியைப் பார்த்து தனது ஈரக்கூந்தலைச் சுற்றியிருந்த டவலை அகற்றி துவட்ட ஆரம்பித்தாள்.

“அதில்ல...” என்றபடி அவளருகே வந்தவன் டப்டப்பென அவள் கூந்தலை டவலால் உதறியதால் தெறித்த நீர்த்துளிகள் முகத்தில் பட்டத்தில் மீண்டும் பேச மறந்து நின்றான்.

அவளிடம் வீசிய பியர்ஸ் சோப்பின் வாசனை! கூந்தலில் கமழ்ந்த பேண்டீன் ஷாம்புவின் நறுமணம்! புதிதாக உடுத்தியிருந்த காட்டன் சேலையிலிருந்து வீசிய புத்தாடைக்கே உரித்தான சுகந்தம்!

அனைத்துக்கும் மேலாக இருபத்தெட்டு ஆண்டுகள் அந்த அறையில் அவன் அனுபவத்தறியாத பெண்ணின் வாசனை, நாசிக்குள் ஏறும் போதே உடலின் ஒவ்வொரு அணுவையும் சோதித்தது.

திருமணமாகி நான்கு நாட்கள் ஆகியிருந்த நிலையிலும் அவள் அவனுக்குப் புதியவளே! காதல் மனைவி என்று கூறவியலாதபடி பெரியவர்களின் கட்டாயத்துக்காக நடந்தேறிய திருமணத்தில் அவளிடம் அவன் உரிமை எடுத்துக்கொள்ள முடியுமா என்ன?

India

https://www.amazon.in/dp/B0DM8DCK8Y

USA 

https://www.amazon.com/dp/B0DM8DCK8Y

UK 

https://www.amazon.co.uk/dp/B0DM8DCK8Y

Canada 

https://www.amazon.ca/dp/B0DM8DCK8Y

Australia 

https://www.amazon.com.au/dp/B0DM8DCK8Y






alt="amazon kindle" Click the image to Follow me on amazon kindle...

Comments

  1. நல்ல ஒரு தகவல் தெரிஞ்சு கிட்டேன் நித்தி சிஸ்டர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog