பூங்காற்று 40

மாலை நேரமே குளிருக்கான
முகாந்திரம் தெரிந்ததால் மணிக்கட்டு வரை இழுத்துவிட்ட ஸ்வெட்டர், முரட்டு ஜீன்ஸ், மலைப்பகுதியில்
நடக்க ஏதுவான பூட்ஸ்கள், குளிரில் சருமம் வறண்டுவிடாமல் இருக்க மாய்சுரைசர், உதடுகளில்
லிப் பாம், உயரத்தூக்கி குதிரைவாலாகக் கட்டிய கூந்தல் அலங்காரத்துடன் அதிரதன் அவளை
வரச் சொன்ன இடத்தை அடைந்தாள்.
அங்கே அவளுக்காகக்
காத்திருந்தவன் பளீர் புன்னகையோடு கைகளை கேமராவாக்கி ‘க்ளிக்’ செய்வது போல காட்ட தரங்கிணி
விளையாட்டாக அவனது தோளில் அடித்தாள்.
“நீ கொஞ்சம் கூட
மாறல அதி”
“நீ மட்டும்தான்
இப்பிடி சொல்லுற சீனியர்… எதை வச்சு நான் மாறலனு சொல்லுற?”
“உன்னை விட மூனு
வயசு பெரியவளை இப்பவும் நீ வா போனு சிங்குலர்ல கூப்பிடுறியே, அதை வச்சு சொல்லுறேன்”
பேசியபடியே பைன்
மரக்கூட்டங்கள் நிறைந்த பகுதிக்குள் நடக்கத் தொடங்கினார்கள் இருவரும்.
“நான் உன்னை மறுபடி
பாப்பேன்னு நினைச்சதே இல்ல தரு”
அப்படியா என்பது
போல பார்த்தவளுக்கும் அதே எண்ணம்தான். ஆனால் வாய் விட்டுச் சொல்லவில்லை.
“பட் டெய்லி ஒரு
தடவையாச்சும் உன்னைப் பத்தி நினைப்பேன்… நீ என்ன பண்ணுற? உன் கரியரை நெக்ஸ்ட் லெவலுக்குக்
கொண்டு போயிட்டியா? உனக்குக் கல்யாணம் ஆகிருக்குமா? ப்ளா ப்ளா ப்ளா… ஆனா நீ என்னை ரொம்ப
ஈசியா மறந்துட்டல்ல”
குறைபட்டவனிடம் கை
கூப்பியபடி நடந்தாள் தரங்கிணி.
“லைஃப்ல ரொம்ப அடி
பட்டுட்டேன் அதி… அந்த வேதனைல சில நேரம் தரங்கிணினு ஒருத்தியா வாழணும்ங்கிறதையே நான்
மறந்து போயிருக்கேன்… இந்த மூனு வருசமாதான் மூச்சு விடுறேன்… ஆனா அதுவும் முழுமையா
இல்ல”
சிரிப்பைப் பூசியபடி
அவள் சொன்னாலும் அதிரதனுக்கு அவள் சொன்ன தகவல்கள் கொடுத்த அதிர்ச்சி அதீதம்.
இருவரும் நடந்தபடியே
வந்து நின்ற இடம் அழகான ஒரு மரவீடு. அதை நோக்கி கை காட்டினான் அதிரதன்.
“இங்க வந்தா ரிலாக்ஸ்
பண்ணுறதுக்காக கட்டுன வுட் ஹவுஸ்… இதுக்குள்ள யாரையும் அழைச்சிட்டு வந்ததில்ல… நீ தான்
முதல் கெஸ்ட்… உள்ள வா… அப்புறமா எல்லாத்தையும் பேசிக்கலாம்”
இருவருமாகச் சேர்ந்து
மரவீட்டின் படிகளில் ஏறினார்கள். தரங்கிணிக்கு உயரம் என்றால் பயம். ஆனால் இப்போது பிடித்திருந்தது.
பைன் மரங்களுக்கு
நிகராக தானும் வளர்ந்தது போன்ற பிரமை அவளுக்கு.
வீட்டின் வராண்டா
பகுதியில் படிகள் முடிவடைந்தன. அது கிட்டத்தட்ட ஒரு சிட்டவுட் போல இருந்தது. அங்கே
நின்றபடி பைன் இலைகளிடையே கண்ணாமூச்சி ஆடிய மலைச்சிகரங்களை ரசித்தவள், அதிரதன் வீட்டின்
கதவைத் திறந்து ஒரு மர டீபாயையும் மூங்கில் நாற்காலிகளையும் எடுத்துச் சிட்டவுட்டில்
போடவும் அதில் அமர்ந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில்
ரெட் ஒயின் அடங்கிய கண்ணாடி குவளைகள் ‘கிணிங்’ என்ற ரிதத்துடன் மோதிக்கொள்ள இருவரும்
பேச ஆரம்பித்தனர்.
“இட் சீம்ஸ் லைக்
அ டேட்” விசமப்புன்னகையுடன் அதிரதன் கூற சத்தமாக நகைத்தாள் தரங்கிணி.
“யாஹ்! அ டிவோர்சி
விமன் டேட்ஸ் தி மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்”
அவள் கேலியாகச் சொல்லவும்
மறுப்பாய் தலையசைத்தான் அதிரதன்.
“நோ”
“ஏன் நோ? நீ மோஸ்ட்
எலிஜிபிள் பேச்சிலர் தானே?”
“நான் பேச்சிலர்
தான்… ஆனா நீ இன்னும் டிவோர்சி இல்ல… கம் ஆன் லேடி, யூ ஆர் சிங்கிள் நவ்”
“அஹான்”
மனதுக்குள் மெதுவாய்
முணுமுணுக்கத் தொடங்கிய நினைவுகளைக் கட்டிப்போட்டுவிட்டு ரெட் ஒயினை ஒரு மிடறு அருந்தினாள்
தரங்கிணி.
அதிரதன் அவளைக் கண்கள்
கனிய பார்த்தான்.
நீண்டதொரு பெருமூச்சுடன்
“த ஹெல் இஸ் எம்ப்டி, ஆல் த டெவில்ஸ் ஆர் ஹியர்” என்றாள் அவள்.
சொல்லிவிட்டுத் தலையைக்
குனிந்தவள் கண்ணீரை விழுங்குகிறாளோ என்ற ஐயம் அவனுக்கு.
“ஆர் யூ ஓ.கே தரு?”
தரங்கிணி எதுவும்
பேசாமல் ரெட் ஒயின் இருந்த குவளையின் விளிம்பை தனது விரலால் வட்டமிட்டாள்.
“என்னாச்சு தரு?
தரங்கிணி ரவிசந்திரன்னு நீ சொன்னதும் ஒரு செகண்ட் சந்தோசப்பட்டாலும் ஐயோ என்னாச்சுனு
மனசு தவிச்சு போச்சு தரு”
உணர்ச்சிவசப்பட்ட
குரலில் அதிரதன் பேசவும் தரங்கிணி கண்ணாடி குவளையிலிருந்து பார்வையை உயர்த்தி அவனை
விசாரிக்கும் பார்வை பார்த்தாள்.
சூப்பர் மா 👌👌👌👌😍😍🥰😘
ReplyDeleteThank you sis 🥰
Deleteசூப்பர் மா 👌👌👌👌😍🥰😘
ReplyDeleteThank you sis
DeleteTeaser super
ReplyDeleteThank you sis
DeleteTeaser super a irukku waiting for the next epi
ReplyDeleteThank you 😍
DeleteSuper pa👌👌
ReplyDeleteThank you sis 🤩
DeleteWow...super... I love this story ❤ have chance to read 2nd time
ReplyDelete