Posts

அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 30

Image
  “வாழ்க்கையில நம்ம இழந்த எல்லாமே கண்டிப்பா என்னைக்கோ ஒரு நாள் நம்ம கிட்ட திரும்ப வந்துடும்... ஆனா நம்ம எதிர்பார்த்த வழியில வராது... இதை நான் சொல்லல... ஜே.கே.ரௌலிங் தான் சொல்லிருக்குறாங்க... சோ, ஐயோ போச்சேனு மூலைல உக்காந்து அழுறத விட அடுத்து என்னனு வேலைய பாக்க கிளம்புறது தான் புத்திசாலித்தனம்... இழந்தத நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா நம்ம அனுபவிக்க வேண்டிய அழகான மொமண்ட்சை தவற விட்டுடுவோம்”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் தங்களது அறையில் கிடந்த பீன்பேக்கில் படுத்துக்கொண்டு மொபைலில் ஷ்ரவனிடம் மொக்கை போட்டுக்கொண்டிருந்தாள் பிரக்யா. அவளைக் கண் காட்டி பிரணவியிடம் ஏதோ கூறி சிரித்தாள் பிரக்ருதி. பிரணவி அவளது காதைத் திருகியவள் “லவ் பண்ணிப் பாரு... அப்ப தான் உனக்குப் புரியும்” என்றாள். இவர்களது அரட்டையைக் கவனியாது பிரக்யா – ஷ்ரவனின் உரையாடல் மொபைலில் தொடர்ந்தது. “தேர் ஆர் த்ரீ டைப்ஸ் ஆப் லவ்... தெரியுமா?” என ஷ்ரவன் கூற “நான் இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் லவ் பண்ணுறேன்... சோ எனக்கு உங்க அளவுக்கு இந்த சப்ஜெக்ட்ல நாலெட்ஜ் இல்ல புரொபசர்” என்று

அலைவரிசை 29

Image
  “ரொம்ப வேதனையான விசயம் என்ன தெரியுமா? மனசுக்குப் பிடிச்சவங்களை அளவுக்கு அதிகமா லவ் பண்ணுறப்ப நாம நம்மளை இழந்துடுறோம்... நாம லவ் பண்ணுற பெர்ஷன் மாதிரி நம்மளும் ஸ்பெஷலான ஆளுங்கிறத சுத்தமா மறந்துடுறோம்... சில ரிலேசன்ஷிப்ஸ் கண்ணாடி க்ளாஸ் மாதிரி... அது உடைஞ்சுதுனா அப்பிடியே விட்டுடுறது பெட்டர்... மறுபடியும் ஒட்ட வைக்குறேன்னு இறங்குனா கண்ணாடி கையை கிழிச்சு ரத்தம் வர்ற அளவுக்கு நம்ம தான் காயப்பட்டுப் போவோம்”                                               -கே.கேவின் மனதின் குரல் சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ்... வாரயிறுதியில் இந்தியாவுக்குச் செல்ல விமான பயணச்சீட்டுகள் உறுதியான நிலையில் பெண்கள் மூவரும் தங்களது உடமைகளை எடுத்து வைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பிரக்ருதியும் பிரக்யாவும் இனி அமெரிக்கா திரும்ப போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தனர். பிரணவி எந்தச் சலனமுமின்றி தனது மருத்துவ அறிக்கைகள், ஸ்கேன் ரிப்போர்ட்கள் என அனைத்தையும் சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அவர்களின் அறைக்கதவு டொக் டொக்கென்று தட்டப்பட மூவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே வாடிய முகத்தோடு நின்று கொண்ட