அலைவரிசை 35

Image
  “பொதுவா திறமைசாலிங்களுக்கு யார் மேலயும் பொறாமை வராது... பின்ன யாருக்கு வரும்? எந்த ஃபீல்ட்லயும் அரைகுறை நாலெட்ஜ் இருக்குறவங்களுக்கும், நாலேட்ஜ் இல்லனா கூட இருக்குற மாதிரி சீன் போடுற காலி டப்பாக்களுக்கும் தான் பொறாமை வரும்... ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க, எல்லாரும் எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு பிறக்குறதில்ல... புது விசயத்த கத்துக்கிற ஆர்வமும், ஹார்ட் ஒர்க்கும் இருந்தா யார் வேணும்னாலும் எந்த விசயத்தையும் கத்துக்கலாம்... சோ ஆர்வமும் ஹார்ட் ஒர்க்கும் இல்லாத சோம்பேறி திலகங்கள், ஓவர் நைட்ல ஒபாமா ஆக ஆசைப்படுற ஹாஃப் பாயில்ஸ் எந்த ஃபீல்ட்லயும் முன்னேறாம முன்னேறிப் போறவங்களைப் பாத்து பொறாமைப்படுறதும் அவங்களை பத்தி காஸிப் பேசுறதுமா இருப்பாங்க”                                               -கே.கேவின் மனதின் குரல் சென்னை சிட்டி பண்பலை அலுவலகம், எழும்பூர் (எக்மோர்)... “ பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. ஆடியோ கன்சோலில் பாடலை இடை

அலைவரிசை 28

 


“Indecision is the theif of opportunity. It’ll steal youனு ஜூலியஸ் சீசர் சொல்லிருக்கார்... தப்பான முடிவால உண்டாகுற இழப்பை விட முடிவு எடுக்காம தடுமாறுறதால உண்டாகுற இழப்பு தான் அதிகமாம்... நிறைய நேரங்கள்ல மனுசங்களோட தோல்விக்கு முடிவெடுக்க தடுமாறுற குணம் தான் காரணமா இருக்கு... ஒரு காரியத்தை செய்யுறதுக்கு முன்னாடி அது நியாயமானதானு நம்மளோட மனசு யோசிக்கும்... இன்னொரு பக்கம் அந்த காரியம் நமக்குச் சந்தோசத்த குடுக்கும்னா நியாய அநியாயத்தை பத்தி ஏன் யோசிக்கனும்னு தோணும்... இந்த ரெண்டுக்கும் நடுவுல சிக்கி சின்னாபின்னாமாகி எந்த முடிவுக்கும் வர முடியாம அல்லாடுறவங்க நிறைய பேர் இருக்காங்க... எந்த முடிவா இருந்தாலும் அதை சுயமா சரியான நேரத்துல எடுங்க... அது சரியான முடிவா இருந்தா கிடைக்கிற நல்ல பலனை அனுபவிங்க... தப்பான முடிவா இருந்தா அந்த தப்புல இருந்து பாடம் கத்துக்கோங்க... ஆனா முடிவை எடுக்குறதை மட்டும் டிலே பண்ணாதிங்க”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ்...

அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த பிருத்விக்கு வக்கணையாகச் சமைக்கும் வேலையை மகிழினியின் தலையில் கட்டியிருந்தாள் பிரக்ருதி.

பிரக்யாவும் பிரணவியும் அவர்களிடம் முகம் கொடுத்துப் பேசாததால் அவர்கள் இருவரும் தகல்வதொடர்பு ஊடகமாக பிரக்ருதியைப் பயன்படுத்திக் கொண்டனர்.

பிரக்யாவும் பிரணவியும் ஒதுங்கியது போல தானும் ஒதுங்க பிரக்ருதிக்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. ஆனால் மனோகர் மீது வைத்திருக்கும் மரியாதைக்காக அவர்களிடம் இயல்பாக பேசினாள்.

மகிழினி டிபன் பாக்சை மைந்தனிடம் நீட்டிய போதே “புள்ளதாச்சி பொண்ணு ஃப்ளைட்ல போறது ரிஸ்காம்... என் ஃப்ரெண்ட் மங்கை சொன்னா” என்று பிரக்ருதியின் காதில் போட்டு வைத்தார்.



“ஹை ரிஸ்க் ப்ரெக்னென்சியில தான் ஃப்ளைட் ட்ராவல் பண்ணக்கூடாது அத்தை... நவிக்கு எல்லாமே நார்மலா இருக்கு.. அவளும் பேபியும் ஹெல்தியா இருக்காங்க... சோ டோண்ட் வொரி” என்ற பிரக்ருதி கிண்ணத்திலிருந்த முந்திரியைக் கொறிக்க ஆரம்பித்தாள்.

மகிழினி அவள் அமர்ந்திருந்த தோரணையப் பார்த்து மனதிற்குள் புகைந்தது வேறு கதை. அந்தப்  புகைச்சலை காட்டிக்கொள்ளாமல் “அவ ஆசை அதுன்னா நம்ம என்ன செய்ய முடியும்?” என்று இழுத்தபடி மைந்தனை பார்க்க அவனது முகமோ சோகரசத்தில் மூழ்கியிருந்தது.





“நான் கிளம்புறேன்மா” என்றவனின் பார்வை பிரணவி தற்போது தங்கியுள்ள அறையை நோக்கியது.

“அக்காவும் பிரகியும் வாக்கிங் போயாச்சு”

பிரக்ருதி கூறவும் தலையசைத்து விட்டு கிளம்பினான் பிருத்வி.

நவம்பர் மாத குளிரில் என்ன வாக்கிங் வேண்டியிருக்கிறது என சீற முடியாமல் மகிழினி அவரது அறைக்குள் போய்விட பிரக்ருதிக்குப் போரடித்தது.

வெளியே மேகமூட்டமாக இருந்த வானிலை அவளுக்குப் பிடித்திருக்க தெர்மல்வியரை அணிந்து கொண்டு ஃப்ளாட்டை விட்டு வெளியேறினாள். கையில் வைத்திருந்த நான்கைந்து முந்திரிகளை கொறித்தபடி சாக்சனி அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே நடந்தவள் திடீரென தூறல் விழவும் அதை ரசித்தபடி சென்றாள்.

தொலைவில் பம்பிள் பி ட்ரக் நிற்க புன்னகை பூத்தது அவளது இதழில்.

வேகமாக அதை நோக்கி நடந்தவள் இன்னும் வியாபாரம் ஆரம்பிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டாள்.

அன்று ஷ்ரவனை காணவில்லை. கேசவ் மட்டும் கரும்பலகையில் அன்றைய மெனுவை எழுதிக் கொண்டிருந்தான்.



வாட்டர்ஃப்ரூஃப் ரெய்ன் ஜாக்கெட் அணிந்திருந்தவனின் கவனம் கரும்பலகை மீதிருக்க பிரக்ருதியின் கவனம் அவன் மீதிருந்தது.

“க்க்ஹூம்”

தொண்டையைச் செருமியவள் அவன் திரும்பிப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

“குட் மானிங்”

“வெரி வெரி பேட் மானிங்”

“ஏன் இப்பிடி காத்தால ஆக்கங்கெட்ட மாதிரி பேசுற கிரிஷ்?” என்று கேட்டவாறு ட்ரக்கினுள் சென்றவளை

“ஏய் யாரை கேட்டு உள்ள போற?” என்றபடி தொடர்ந்தான் அவன்.

“யாரைக் கேக்கணும்? இது என்னோட ஓல்ட் ஒர்க் ப்ளேஸ்... இதுக்குள்ள நான் வர்றதுக்கு  யார் கிட்டவும் பெர்மிஷன் கேக்க வேண்டிய அவசியம் இல்ல... ஷ்ரவன் எங்க?”

“சொல்லமுடியாது போடி”

“நீ என்னை ‘டி’ போட்டு கூப்பிட்டா அப்ப ‘அது’ தானே கிரிஷ்?”

வெட்கப்படுபவளைப் போல காலின் பெருவிரலை ட்ரக்கில் தேய்த்தாள் பிரக்ருதி.

“போதும்... ஓவரா தேய்ச்சு ட்ரக்ல இருந்து டேரக்டா பாதாளத்துக்குப் போயிடாத” என்றவன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்.

வெளியே மெல்லியதாக ஆரம்பித்த தூறல் பலமாகவும் ட்ரக்கினுள் தண்ணீர் தெறித்தது.

கேசவ் அவசரமாக ட்ரக்கின் கதவை மூடியவன் பிரக்ருதி அங்கே இருந்த நாற்காலிகளில் ஒன்றில் சாய்ந்து அமர்ந்து மற்றொன்றில் கால் நீட்டியிருப்பதையும் பார்த்துவிட்டு காதில் புகைவராத குறையாக நின்றான்.

“ஏன் நிக்குற கிரிஷ்? முன்னாள் காதலிங்கிற மரியாதை மனசுல இருந்தா போதும்... உக்காரு”

இன்னொரு நாற்காலியை அவள் சுட்டிக்காட்டியதை விட அவள் கூறிய ‘முன்னாள் காதலி’யைத் தான் கேசவ் கவனித்தான்.

“முன்னாள் காதலியா?” என்று கேட்டபடியே அமர்ந்தவனுக்கு ஆமென்பது போல தலையாட்டினாள் பிரக்ருதி.

“நீ சொல்லுறதை கேக்குறப்ப எனக்கு அப்பிடியே மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு” என்றான் அவன் பற்களை கடித்தபடி.

“அஹான்! அப்ப உன் மனசுல நான் இன்னும் இருக்கேன்... அப்பிடி தான?”



கைகளை தலைக்கு அண்டை கொடுத்து சாய்ந்தமர்ந்து காலை ஆட்டியபடி அவள் கேட்ட விதத்தில் அவனது எரிச்சல் மட்டுப்பட்டு முகத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்தது.

பிரக்ருதி அவனது சிரிப்பை ரசித்தவள் “எத்தனை  நாளாச்சு நீ இப்பிடி சிரிச்சு? உம்மணாமூஞ்சியா இருக்காத கிரிஷ்... என்ன நடந்தாலும் ஜாலியா இருக்கணும்... நான் உன் கிட்ட இன்னும் நிறைய சேஞ்சஸை எதிர்பாக்குறேன்” என்றபடி அவனது தோளில் தட்டினாள்.

கேசவ் ஆமென்பது போல தலையாட்டியவன் “நானும் அதை தான் யோசிக்குறேன்... உன்னை லவ் பண்ணுற அளவுக்கு எனக்குத் தகுதியில்லனு அசிங்கப்படுத்துனவ நீ... நியாயப்படி உன்னைய நான் ட்ரக்ல இருந்து வெளிய தள்ளி கதவைச் சாத்திருக்கணும்... ஆனா ஜீவகாருண்யம் என் கையை கட்டிப் போட்டுடுச்சு” என்றான் குத்தலாக.

“அதுக்கு பேர் மனிதாபிமானம்... ஹியூமானிட்டி... கரெக்டா சொல்லு”

“மனுசங்களுக்கு இரக்கப்பட்டா தான் ஹியூமானிட்டி... நீ மனுசினு நான் எப்ப சொன்னேன்?”

“ஏய்! அப்ப நீ என்னை அனிமல்னு சொல்லுறியா?”

“அதை இப்ப தான் கண்டுபிடிக்கிறியா?”

முகத்தை அப்பாவி போல வைத்துக்கொண்டாள் பிரக்ருதி. திடீரென கேசவிடம் திரும்பினாள்.

“உன்னோட நெக்ஸ்ட் ப்ளான் என்ன கிரிஷ்? பம்பிள் பி தான் உன் லைஃபா? அடுத்த கட்டத்துக்கு அப்கிரேட் ஆகுற ஆசையில்லயா?”

“இல்ல” என்றவன் அலட்டாமல் இருக்க

“ஏன்டா?” என சோகமாக வினவினாள் அவள்.

“பிகாஸ் ஆசையே துன்பத்திற்கு காரணம்னு புத்தர் சொல்லிருக்குறார்”

அசராமல் பதிலடி கொடுத்தவன் அவனது திட்டம் பற்றி அவளிடம் மூச்சு விடவில்லை.

“லுக்! நான் இப்ப சம்பாதிக்குறது எனக்கு போதுமானதா இருக்கு... நாளைக்கே என்னோட எக்ஸ்பெக்டேசனுக்கு மேட்ச் ஆகுற மாதிரி ஒரு பொண்ணை நான் டேட் பண்ணுனா என் நிலமை இது தான்னு அவளுக்குப் புரிய வச்சிடுவேன்... எனக்கு லைஃப்ல பெருசா எந்த ஆசையும் இல்ல...

இந்த பம்பிள் பி ட்ரக்ல ஓடியாடி வேலை செய்யணும்... வீக்கெண்ட்ல என் லைஃப் பார்ட்னர் கூட ஜாலியா அவுட்டிங் போகணும்... கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு எங்களுக்குனு ஒரு வீடு வாங்குனதுக்கு அப்புறமா மேரேஜ் பண்ணிக்கணும்... ஆப்டர் மேரேஜ் நாங்க வாழுற ஒவ்வொரு செகண்ட்லயும் எங்களோட லவ் குறையாம பாத்துக்கணும்... ஒன்னா வேலை செய்யணும்... ஒன்னா சந்தோசமா இருக்கணும்... கஷ்டத்தை ஷேர் பண்ணிக்கணும்... விண்டர் டைம்ல தெர்மல்வியருக்கு ஒன் ஃபார்ட்டி ஃபோர் போட்டுட்டு மழையில ஃபீவர் வர்ற வரைக்கும் அவளோட நனையனும்... ஸ்னோ ஃபால் வந்தா அவ கூட சேர்ந்து ஸ்னோமேன் செய்யணும்... ஒவ்வொரு நாளையும் வேலண்டைன்ஸ் டே மாதிரி ஸ்வீட்டோட ஆரம்பிச்சு கிஸ்ஸோட முடிக்கணும்”

கண்களில் கனவுகள் மின்ன அவன் கூறிய அனைத்தையும் கற்பனையில் பார்த்துவிட்டாள் பிரக்ருதி.

“அந்த லைஃப் செமய்யா இருக்கும்ல” என்ற வார்த்தை அவளை அறியாது வந்துவிட கேசவின் கண்கள் பளிச்சிட்டது.

அவள் இன்னும் கற்பனையிலிருந்து விடுபடவில்லை.

“அவளும் நானும் மட்டும் காத்து கூட நுழையாத அளவுக்கு ஹக் பண்ணிட்டு உக்காந்து நெட்ஃபிளிக்ஸ் சீரீஸ் பாக்கணும்... நிறைய சண்டை போடணும்... பட் ஒவ்வொரு சண்டையையும் சாக்கா வச்சு ரொமான்ஸ் பண்ணி தீர்த்துடணும்”

“ம்ம்ம்”

கேசவ் அவளது முகத்தைப் பார்த்தபடி தான் சொல்லிக்கொண்டிருந்தான். இன்னும் பிரக்ருதியின் மானசீக நிகழ்வுகள் முடிவுறவில்லை.

“கிருதி” என்று அவளது கன்னத்தைத் தட்டியவன் அவளது கற்பனை கலைந்துவிடவும் கைகளைக் கட்டிக்கொண்டான்.



பிரக்ருதி அனைத்தும் கற்பனை என்பதை அறிந்து தன் தலையில் குட்டிக்கொண்டாள்.

“எதுக்கு கொட்டுற?”

“லூசுத்தனமா என்னென்னமோ யோசிச்சிட்டேன்... அதான்” சிரித்து மலுப்ப நினைத்தவளை கூரிய பார்வையால் அளவிட்டான் கேசவ்.

“லூசுத்தனத்துக்காக உன்னை நான் கொட்டணும்னா உன் தலை அடையாளம் தெரியாத மாதிரி வீங்கியிருக்கும்”

வழக்கம் போல கலாய்த்தவன் எழுந்த போது அவனது மொபைல் கீழே விழுந்து தொடுதிரைக்கு உயிர் வந்துவிட அதில் ஸ்க்ரீன்சேவராக புடவையில் சிரித்துக்கொண்டிருந்தாள் பிரக்ருதி.

இக்காட்சியைக் கண்டதும் பிரக்ருதி கேசவை முந்திக்கொண்டு மொபைலை எடுத்தாள்.

“என்னடா இது?” என்று தொடுதிரையைக் காட்டி கேட்டாள் அவள்.

கேசவ் பதில் கூறாமல் மொபைலை கொடுக்குமாறு கேட்க “முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு” என பிடிவாதம் பிடித்தாள்.

“ஒழுங்கா போனை குடு”

“முடியாது”

அவளது பிடிவாதத்தில் எரிச்சலுற்றவன் “நான் தான் உன்னை போட்டோ எடுத்தேன்... இந்த பிக்ல நீ அழகா இருந்த... சோ ஸ்க்ரீன்சேவரா வச்சிருக்குறேன்” என்றான்.

பிரக்ருதி பொங்கி வந்த சிரிப்பை உதட்டுக்குள் பூட்டிக்கொண்டாள்.

வேண்டுமென்றே கிண்டல் செய்யும் குரலில் “உனக்கு என்னை பிடிக்காதுனு நினைச்சேன்... ஆனா ஸ்க்ரீன்சேவரா வைக்குற அளவுக்குப் பிடிக்கும்னு இப்ப தான தெரியுது” என்றவள் மொபைலை கொடுக்காமல் போக்கு காட்ட

“நீ கேவலமா என்னை ரிஜக்ட் பண்ணுனதுக்கு அப்புறமும் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்... போதுமா? இதை தான கேக்கணும்னு ஆசைப்பட்ட? கேட்டுட்டல்ல, மொபைலை குடு” என்று அவளிடமிருந்து பறிக்க வந்தான் கேசவ்.

“அது எப்பிடி உன்னை அசிங்கப்படுத்துனவளை உனக்குப் பிடிக்கும்?”

“ஏன்னா நான் உன்னை உண்மையா லவ் பண்ணுனேன்டி... இதெல்லாம் உனக்கு எங்க புரியப்போகுது? மொபைலை குடுத்துட்டு இடத்தை காலி பண்ணு”

பிரக்ருதி மொபைலை ஒப்படைத்தவள் வெளியே மழை பெய்வதாக கூற “ஒரு ஓரமா அமைதியா இருக்கணும்... உன் வால்தனத்தைக் காட்டுனா வெளிய பிடிச்சு தள்ளிடுவேன்” என்றவன் ஹாட்-டாகைச் சூடாக்க ஆரம்பித்தான்.

அதிலொன்றை அவளிடம் நீட்டியவன் அவள் மறுக்கவும் “ஓவரா சீன் போடாத... நீ இதுக்காக தான வந்த” என்று கைகளில் திணித்தான்.



பிரக்ருதி வாங்கிக் கொண்டு அவரமாக வாயில் திணித்தவள் சூடுபட்டு நாக்கு பொத்துவிடவும் “அவ்ஸ்... அம்மா” என்றபடி குதித்தாள்.

“அதுக்குள்ள என்ன அவசரம்? இப்பிடி குடு” என்றவன் அதன் சூடை குறைக்க ஊதினான்.

பிரக்ருதி ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடி தண்ணீரைக் குடித்தாள்.

கோபத்தில் கொதித்தாலும் தன் மீதான நேசம் இப்போது வரை அவனுக்குக் குறையவில்லை என்ற உண்மை அவளுக்குத் தேனாய் தித்தித்தது.

சூடு குறைந்ததும் ஹாட்டாகை நீட்டியவனிடம் வாங்கியவள் சாப்பிட்டபடியே அவன் சற்று முன்னர் கூறிய கற்பனைகளை மீண்டும் ரீவைண்ட் செய்து பார்த்தாள்.

ஒருவேளை அவள் யோசித்தது போல காதல், திருமணவாழ்க்கைக்கு பெரிதாக எந்த வசதிகளும் தேவையில்லையோ! இருப்பதை கொண்டு கழிப்பேன் என இவன் கூறும் கற்பனை வாழ்க்கையே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால் உண்மையாக வாழ்ந்து பார்த்தால் அது சொர்க்கமாக தானே இருக்கும்!



நினைக்கும் போது ஹாட்-டாக் கூட இனித்தது.

“எப்பிடி இருக்கு?”

“ஸ்வீட் கொஞ்சம் அதிகம்” என உளறினாள் பிரக்ருதி.

“ஸ்வீட்டா? ஹேய் இது ஹாட்-டாக்... இதுல எங்க இருந்து ஸ்வீட் வந்துச்சு?” புரியாமல் கேட்டான் கேசவ்.

பிரக்ருதிக்குத் தான் என்ன கூறினோம் என்பது நினைவில் உறைக்கவும் நெற்றியில் மென்மையாக தட்டிக்கொண்டாள்.

“சும்மா ஃபன் ஃபன்”

அவள் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி நகைத்ததில் விறைப்பாக இருந்த கேசவின் முகத்திலும் புன்னகை துளிர்க்க அவளது புகைப்படம் ஸ்க்ரீன்சேவராக இருந்த மொபைலின் தொடுதிரையைத் வருடிக்கொண்டான் பிரக்ருதி அறியாவண்ணம்.


Comments