அலைவரிசை 37

Image
  “எங்கம்மா ஞாபகமறதிங்கிறது கடவுள் மனுசனுக்குக் குடுத்த கிப்ட்னு சொல்லுவாங்க... அப்ப என்னடா இப்பிடி உளறுறாங்கனு தோணுச்சு... ஆனா ஒவ்வொரு நிமிசமும் பாராசைட் மாதிரி என்னோட சந்தோசத்த உறிஞ்சி குடிக்கிற கிருதியோட மெமரிசை மறக்க முடியாம கஷ்டப்படுறப்ப தான் அம்மாவோட வார்த்தைக்கு அர்த்தம் புரியுது... கடவுளுக்கு என் மேல என்ன கோவம்னு தெரியல, ஞாபகமறதிய எனக்குக் குடுக்காம படைச்சிட்டார்... மறக்கணும் மறக்கணும்னு தௌசண்ட் டைம்ஸ் உருப்போட்டாலும் சரியா நைட் நைன் ஓ க்ளாக் ‘இது காதலும் காதல் சேர்ந்த நேரமும்’னு எஃப்.எம்ல அவளோட குரலை கேக்கலனா ட்ரக் அடிக்ட்கு கை கால் உதறுற மாதிரி என் நிலமை மோசமாகிடுது... ஐ அம் அடிக்டட் டு ஹெர் மெமரீஸ் அண்ட் ஐ காண்ட் ஓவர்கம்”                                               -கே.கேவின் மனதின் குரல் சென்னை சர்வதேச விமானநிலையம்... மஹதி வருவதாகச் சொல்லியிருந்த விமான நேரத்திற்கு அரைமணி நேரம் தாமதமாகிவிட வேகமாக விமானநிலையத்தின் உள்ளே வந்தனர் பிரக்ருதியும் கவினும். “நீ கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம்டா” “நான் என்ன பண்ணுறது? மெட்ரோவை மிஸ் பண்ணுவேன்னு கனவா கண்டேன்? சரியா ஸ்டேசன் கிளம்புற நே

அலைவரிசை 32

 



“True talent and hardwork always winனு சொல்லுவாங்க... இது ரியாலிட்டில அவ்ளோ சீக்கிரம் பாசிபில் இல்ல... ஏன்னா இங்க ஹார்ட் ஒர்க் பண்ணுற திறமைசாலிங்களை விட போற போக்குல எதையோ செஞ்சுட்டு அதை விளம்பரப்படுத்துற காலி டப்பாக்கள் தான் ஜெயிக்கிறாங்க... உதாரணத்துக்கு சினி ஃபீல்டை எடுத்துக்கோங்க... அடுத்தவங்க கதைய திருடி மூவி எடுக்குறவங்க தான் இன்ஸ்டெண்ட் வெற்றிய ருசிக்கிறாங்க... ஹார்ட் ஒர்க் பண்ணுற டைரக்டர், வித்தியாசமான முயற்சி பண்ணுற டைரக்டர் ஜெயிக்கிறதுக்கு குறைஞ்ச பட்சம் ஃபைவ் டு டென் இயர்ஸ் ஆகுது... லைக்வைஸ் ஆர்ட்டிஸ்டா பெர்ஃபார்ம் பண்ணுற ஆக்ட்ரசை விட க்ளாமர் காட்ட ரெடியா இருக்குறவங்க தான் சீக்கிரமா ஸ்டார் அந்தஸ்தை அடையுறாங்க... அவங்களை ரசிக்கிற கூட்டம் தான் அதிகம்... பட் கூட்டம் வரணும்ங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்ங்கிற மனப்பான்மை ரொம்ப கேவலமானது... சோ லேட்டா ஜெயிச்சாலும் உங்க உழைப்பாலயும் திறமையாலயும் மட்டும் ஜெயிக்க பாருங்க... அந்த வெற்றிய தான் உங்களால மத்தவங்க கிட்ட பெருமையா சொல்லிக்க முடியும்... கேவலமான வழியில ஜெயிச்சா அந்த வெற்றியும் நிலையா இருக்காது... நான் இப்பிடி தான் ஜெயிச்சேன்னு வெளிய கௌரவமா சொல்லிக்கவும் முடியாது... இது எல்லா ஃபீல்டுக்கும் பொருந்தும்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

கேசவின் கோபத்தையும் அருவருப்பையும் பிரக்ருதியால் தாங்க முடியவில்லை. பத்மானந்தின் முகத்தில் ஒளிந்திருந்த வெற்றிப்புன்னகையைக் கவனித்தவள் 

“இந்த மனுசன் உன்னையும் என்னையும் பொய் சொல்லி பிரிக்க பாக்குறார் கிரிஷ்... சத்தியமா நீ பணக்காரன்னு இவர் என் கிட்ட சொல்லல... நம்ம மேரேஜ் பண்ணிக்கிட்டா உன்னை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வச்சிடுவேன்னு தான் சொன்னார்” என்றாள் கேசவிடம்.

கேசவ் தந்தையை நோக்க, பிசினஸில் இது போல பல சவால்களை சந்தித்தவருக்கு பிரக்ருதியின் பேச்சை பொய் என்று ஆக்குவது ஒன்றும் கடினமாக இல்லை.

“உன்னையும் இவனையும் பிரிச்சு எனக்கு என்ன ஆகப்போகுதும்மா? சொல்லு... இங்க பாரு கிரிஷ், நீ இந்தப் பொண்ணை மேரேஜ் பண்ணணும்னு நினைச்சா நான் அதுக்குக் குறுக்க நிக்க மாட்டேன்... எனக்குனு இருக்குறவன் நீ மட்டும் தான்... உன்னை இழக்குறதுக்கு எனக்கு விருப்பமில்ல... பிரக்ருதிய என் மருமகளாக்கிக்க எனக்கு முழு சம்மதம்பா... ஆனா இவளை தயவுபண்ணி பொய் சொல்ல வேண்டாம்னு சொல்லிடு” என்று கூறினார் அவர்.

கேசவ் தந்தையின் பேச்சில் சற்று திகைத்தான். பொதுவாக பத்மானந்த் தங்களை விட செல்வநிலையில் குறைந்தவர்கள் மனிதர்களாக கூட மதிக்க மாட்டார். அவரே பிரக்ருதியை ஏற்றுக்கொண்டார் என்றால் ஏன் தன்னிடம் பொய் கூறப்போகிறார்? கூடவே தனது காதலை ஏற்றுக்கொண்டவர் ஏன் அதை பிரிக்க நினைப்பார்? அவர் மறுத்தாலும் அவன் அப்போதிருந்த நிலையில் பிரக்ருதியைத் தனது வாழ்க்கைத்துணை ஆக்கிக்கொள்வதை அவரால் தடுத்திருக்க இயலாது. அப்படியிருக்கையில் பொய் கூறினால் மட்டும் என்ன நடக்கப் போகிறது?

ஆனால் பிரக்ருதியை இது வரை அவன் கணித்ததிலிருந்து பணம் என்ற ஒன்றை அவள் வாழ்க்கைக்கு பிரதானமாக கருதுவது அவளே கூறி அவன் அறிந்த உண்மை. தந்தையிடம் பேசிய பிறகு தன்னிடம் காதலைக் கூறுகிறாள் என்றால் கட்டாயம் பொய் கூறுபவள் அவளாகத் தானே இருக்க வேண்டும்.

எரிச்சல் மேலிட அவளைப் பார்வையால் சுட்டவன் “இதோட நிறுத்திக்க... இதுக்கு மேலயும் பொய் சொல்லி உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காத கிருதி” என எச்சரித்தான்.



ஆனால் பிரக்ருதியால் அமைதியாக இருக்க முடியவில்லை. செய்யாத தவறுக்கு பழியேற்க அவளுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது! கேசவிடம் புரியவைப்பது இயலாதென்பது தெரிந்து பத்மானந்திடம் வந்தாள் அவள்.

“வாய் கூசாம பொய் சொல்லாதிங்க அங்கிள்... நீங்க என் கிட்ட கிரிஷ்சோட அப்பானு மட்டும் இன்ட்ரோ பண்ணிக்கிட்டிங்க... வேற எதுவும் சொல்லல... இங்க வந்து ஏன் மாத்தி பேசுறிங்க?”

“அட நான் ஏன்மா பொய் சொல்லப்போறேன்? நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டேன்... இதுக்கு மேலயும் ஏன்மா பொய்ய உண்மைனு நிரூபிக்க போராடுற?”

பத்மானந்த் இனி உண்மையைக் கூறமாட்டார். மீண்டும் கேசவிடமே வந்தாள் அவள்.

“கிரிஷ் ப்ளீஸ் என்னை நம்பு” கரம் கூப்பி கேட்டாள் பிரக்ருதி. எங்கும் எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவள் காதலுக்காக கேசவ் முன்னே கரம் கூப்பி நின்றாள்.

ஆனால் கேசவின் மனம் தான் கோபத்தால் நிறைந்திருந்ததே. கோபம் கொண்ட மனதால் யாருடைய கண்ணீரையும் உணர்ந்துகொள்ள இயலாது. அதை நாடகமாக மட்டுமே எண்ணும் அந்தக் கோபவயப்பட்ட மனம். கேசவின் மனம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

“வேற எந்த விசயத்துலயும் நான் உன்னை நம்புவேன்.. ஆனா இந்த விசயத்துல நம்பவே மாட்டேன் கிருதி”


கேசவ் ஆணித்தரமாகக் கூற பத்மானந்தின் முகம் விசமச்சிரிப்பில் மிளிர்ந்தது. அவரது சிரிப்பு பிரக்ருதியை உசுப்பிவிட்டது. வயதில் பெரியவர் என்ற எண்ணமெல்லாம் விலகிவிட ஆத்திரம் பிரக்ருதியின் கண்ணை மறைத்தது.



கோபம் பொங்கியெழ “யோவ் நீயெல்லாம் பெரிய மனுசனா? இப்பிடி வாய் கூசாம பொய் சொல்லுறியே” என்று கடுப்பில் அவரை நோக்கி அவள் கத்திய அடுத்த நொடி அவளது கன்னத்தில் பதிந்தது கேசவின் கரம்.

பத்மானந்த் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஒன்று சேர்ந்தால் கேசவின் கவனம் சிதறி தொழிலை கவனிக்கமாட்டான் என்ற அச்சத்தாலும், தங்களை விட செல்வநிலையில் குறைந்தவளை மருமகளாக்கிக்கொள்ள விருப்பமில்லை என்பதாலும் பொய் கூறிவிட்டார். ஆனால் மைந்தன் பிரக்ருதியை அறைவான் என்று சற்றும் எண்ணவில்லை.

பிரக்ருதி அவனது கரம் பதிந்ததில் எரிந்த கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நிற்க ஆட்காட்டி விரலை நீட்டி அவளை எச்சரித்தான் கேசவ்.

“இன்னொரு வார்த்தை மரியாதை தப்பா வந்துச்சுனா, உன்னை கொன்னுடுவேன்... அவர் யாருனு நினைச்சடி? என் அப்பா... எனக்கும் அவருக்கும் இடையில எவ்ளோ பிரச்சனை வேணும்னாலும் இருக்கலாம்... அதுக்குனு உன்னை மாதிரி சீப்பான ஒருத்தி அவரை மரியாதை குறைவா பேசுனா, வேடிக்கை பாத்துட்டிருக்க நான் ஒன்னும் கையாலாகாதவன் இல்ல... என் அப்பானு இல்ல, மூனாவது மனுசனா இருந்தாலும் வயசுக்கு மரியாதை குடுக்கணும்னு தெரியாது உனக்கு?”



தான் பேசியது தவறு என்பது பிரக்ருதிக்கும் தெரியும். ஆனால் இப்படி வாய் கூசாமல் பொய்சொல்லும் நபருக்கு எப்படி மரியாதை கொடுக்க முடியும்? தனது காதல் கோட்டையை பொய் எனும் வெடிகுண்டால் சுக்கல் சுக்கலாக தகர்த்தெறிந்த பத்மானந்திற்கு ஏன் மரியாதை கொடுக்க வேண்டும்? இருப்பினும் அவளால் கேசவின் கோபத்தைப் பார்க்க முடியவில்லை. எனவே அவனிடம் மட்டும் மன்னிப்பு வேண்ட விழைந்தாள்.

“நான் கோவத்துல பேசிட்டேன் கிரிஷ்... ஆனா இவர் என் கிட்ட...” என விளக்கமளிக்க வந்தவளை அவன் பேசவிடவில்லை. அவனையும் தான் ஆத்திரம் உருமாற்றியிருந்ததே!

“எதுவும் பேசாத... பணம் பணம்னு அதை பத்தி மட்டும் தான நீ யோசிப்ப... பணக்காரன்ங்கிற ஒரே காரணத்துக்காக நிஷாந்த் கூட தனி ரூம் வரைக்கும் போனவ தான நீ... உன்னால இந்த பொய்ய சொல்ல முடியாதாடி? உன்னைப் பாத்தாலே அருவருப்பா இருக்கு”



கேசவ் கூறியதில் அதிர்ந்து நின்றாள் பிரக்ருதி. இனி பேசுவதற்கோ விளக்குவதோ ஏதுமில்லை. அவளால் செய்யாத தவறுக்குப் பொறுப்பேற்கவும் முடியவில்லை. அதை எந்த மொழியில் கூறினாலும் கேசவ் புரிந்துகொள்ள மாட்டான். எல்லாம் முடிந்துவிட்டது.

யோசிக்க கஷ்டமாக இருந்தாலும் அது தானே உண்மை! முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நின்றவனிடம் இதற்கு மேல் பேச விரும்பவில்லை அவள். ஏனெனில் அவளைத் திட்ட அவன் வேறேதும் விசயங்களை மேற்கோள் காட்டியிருந்தால் பரவாயில்லை. நிஷாந்தைப் பற்றியும், அவனுடன் தனியறைக்குப் போனதையும் அருவருப்போடு அவன் சொன்ன விதம் அவளைக் கேவலமான பெண்ணாக சித்தரித்தது.

அவன் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் பிரக்ருதி அவர்களை சும்மா விட்டிருக்க மாட்டாள். இந்த வார்த்தை பேசியபிறகு இனி அவனுக்கும் தனக்கும் இடையே என்ன இருக்கிறது? அவன் முன்னே அழ விருப்பமின்றி கட்டுப்படுத்திக்கொண்டாள்.

இதற்கெல்லாம் காரணமான பத்மானந்தை நோக்கியவள் “உங்க பேர் என்னனு சொன்னிங்க அங்கிள்?” என்று கேட்க

“பத்மானந்த்” என்றார் அவர்.

“இனிமே நாரதர்னு மாத்திக்கோங்க” என்றவள் இதற்கு மேல் அங்கே நின்று தனது நிலையைத் தாழ்த்திக்கொள்ளும் விருப்பமின்றி சென்று விட்டாள்.

கேசவ் திரும்பி நின்றவன் தனக்குள் எழுந்த வேதனையை கோபமெனும் முகமூடியை அணிவித்து சாதுரியமாக மறைத்துக்கொண்டான்.

பத்மானந்த் அவனது தோளில் ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தார்.

“பாஸிங் க்ளவுட் கிரிஷ்... போகலாம் வா”

கேசவ் அவரது கையை எடுத்துவிட்டவன் “உங்க ஆறுதல் எனக்குத் தேவையில்லாத ஆணி... அடுத்த ஃப்ளைட் எப்பனு கேட்டு ஷ்ரவனை டிக்கெட் புக் பண்ண சொல்லுறேன்... இந்தியாக்குக் கிளம்புவோம்” என்றான்.

பத்மானந்தின் மனம் நிம்மதியுற்றதை அவரது முகமே காட்டியது.

“ஆனா ஒரு கண்டிஷன்... அங்க போனதுக்கு அப்புறம் கார்கி குரூப்போட எதிர்காலத்துக்காக நான் என்ன ஆக்சன் எடுத்தாலும் நீங்க அதுக்கு குறுக்க வரக்கூடாது” 

“சத்தியமா வரமாட்டேன் கிரிஷ்”

“உங்க சத்தியத்த நம்புறதுக்கு நான் ஒன்னும் நீரவ் இல்ல... கிரிஷ்... என்ன செய்யணும்னு நான் யோசிச்சு வச்சிருக்குறேன்... அதுபடி நடந்தா நீங்க ஆசைப்பட்டது நடக்கும்... இல்லனா நான் ஆசைப்பட்டது நடக்கும்... ரெண்டுல எது நடந்தாலும் எனக்குப் பாதகம் இல்ல... சோ என் கிட்ட வாக்கு குடுக்குறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சுக்கோங்க”

“உன்னை நான் பரிபூரணமா நம்புறேன் கிரிஷ்... டூ வாட்டெவர் யூ வாண்ட்... ஐ வில் சப்போர்ட் யூ... அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்ய தயாரா இருக்குறேன்”

“இந்தியா போனதுக்கு அப்புறம் இந்த வார்த்தைய தண்ணில எழுதலாமா இல்ல, காத்துல எழுதலாமானு யோசிக்குறேன்... இப்ப என்னோட லக்கேஜை பேக் பண்ணப்போறேன்”

கறாராகப் பேசிவிட்டு இடத்தைக் காலி செய்தான் அவரது மைந்தன்.

பத்மானந்த் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி லென்சில் இல்லாத தூசியை ஊதினார்.

“நாரதராம் நான்... சில்லி கேர்ள்... நாரதர் கலகம் நன்மையில் முடியும்னு சொல்லுவாங்க... இன்னைக்கு நான் ஆரம்பிச்சு வச்ச இந்தக் கலகம் எப்பவுமே நன்மையில முடியாது”

கிண்டலாக எண்ணியபடி மகனது ஃப்ளாட்டை நோக்கி நடந்தார் அவர்.

அதே நேரம் பிரக்ருதியோ அவர்களின் ஃப்ளாட்டுக்குப் போகாமல் பிரக்யாவை மட்டும் தன்னுடன் பூங்காவிற்கு வரும்படி அழைத்தாள்.

அங்கே வந்து சேர்ந்த பிரக்யா தோழியின் முகம் வருத்தத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டதும் அவளிடம் யோசனையோடு வந்தாள்.

“என்னாச்சு கிருதி?”

மௌனமாக எழுந்தாள் பிரக்ருதி.

“லவ்வ சொல்லப்போறேன்னு போனல்ல... என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?”

பிரக்யாவின் ஆறுதலான குரலில் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளியே வந்துவிட்டது. கூடவே அமைதியும் கலைந்தது.



“என்னை அவன் ரொம்ப திட்டிட்டான் பிரகி... பணத்துக்காக நான் நீரவ் கூட தனியா ரூம் வரைக்கும் போனேன், அது இதுனு... நான் முட்டாளா இருந்திருக்கலாம்... ஆனா அவன் என்னை பணத்துக்காக எதையும் பண்ணுற கோல்ட்-டிக்கர்ங்கிர ரேஞ்சுல திட்டிட்டான்”

“என்னடி ஆச்சு? இன்னுமா கிரிஷுக்குக் கோவம் தீரல?”

“கோவம்லாம் தீர்ந்து நான் என் லவ்வையும் சொல்லிட்டேன்... அவனும் சந்தோசமா தான் இருந்தான்... ஆனா அவனோட அப்பா...” என்றவள் நடந்ததை மறைக்காமல் கூறி முடித்தாள்.

“இனிமே எனக்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்ல”

கண்ணீரைத் துடைத்தபடி கூறினாள் பிரக்ருதி.

“நான் வேணும்னா ஷ்ரவன் கிட்ட சொல்லி கிரிஷை சமாதானப்படுத்த சொல்லட்டுமா?”

பிரக்யா ஷ்ரவனின் எண்ணுக்கு அழைக்கப் போக அவளைத் தடுத்தாள் பிரக்ருதி.

“வேண்டாம் பிரகி... பணக்காரனை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டப்ப எனக்கு ரியாலிட்டி புரியல... ஆனா மிஸ்டர் பத்மானந்த் அதை செருப்பால அடிச்சு புரியவச்சிட்டார்... இதுக்கு மேலயும் நான் அவரோட மகன் முன்னாடி போய் காதலுக்காக பிச்சை எடுக்க விரும்பல... எனக்கும் கிரிஷுக்கும் இடையில நடந்த எதுவும் உன்னையும் ஷ்ரவனையும் பாதிச்சிடக்கூடாதுனு நான் நினைக்குறேன்... இனிமே இதை பத்தி அவன் கிட்ட பேசாத”

“இப்ப நீ என்ன தான் செய்யப்போறடி?” பிரக்யா கவலையாய் கேட்க பிரக்ருதியோ முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.

வருத்தமற்றவள் போல “நான் மட்டும் பையனா இருந்தா சரக்கடிச்சிட்டு சூப் பாயா மாறி ‘இந்த ஆம்பளைங்களே இப்படி தான் புரிஞ்சுப்போச்சுடி’னு பாட்டு பாடிருப்பேன்... பொண்ணா போயிட்டேனே... நாலு கப் ஃப்ராப்புசீனோ குடிச்சு புண்பட்ட மனசை தேத்திக்க வேண்டியது தான்” என தலையைக் குனிந்துகொண்டு முன்பு போல விளையாட்டாக பேசினாள்.

அவள் கவலையாக கூறியிருந்தால் கூட பிரக்யா பெரிதாக யோசித்திருக்கமாட்டாள். இவ்வளவு பெரிய பிரச்சனையை விளையாட்டாக கூறினாள் என்றால் மனதளவில் அவள் பட்ட காயம் எத்துணை ஆழமானது என்பது பிரக்யாவுக்குப் புரிந்தது.

இதை இப்படியே விட்டால் காதல் தோல்வியால் உண்டான சோகத்தை அடக்குகிறேன் என பிரக்ருதிக்கு மன அழுத்தம் ஏதும் வந்துவிடுமோ என பயந்தவள் “கொஞ்சம் நிமிர்ந்து பாரு” என்றாள்.

பிரக்ருதி தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தாள்.

“நான் ஒன்னு சொல்லட்டுமா? வாழ்க்கை நமக்கு அடிக்கடி காயத்த குடுக்கும்... ஒவ்வொரு தடவையும் நீ காயப்படாத மாதிரியே நடிச்சிட்டிருந்தேனு வை, உன்னோட காயம் ஆறுறதுக்கான சான்ஸை வாழ்க்கை உனக்குக் குடுக்காது... வலிக்குதுனா வலிக்குதுனு சொல்லு... அதை விட்டுட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி நடிக்காத கிருதி... அது உன் மென்டல் ஹெல்தை ஸ்பாயில் பண்ணிடும்”

பிரக்யா பேசி முடிக்கவும் பிரக்ருதியின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. 

“எனக்கு என்ன செய்யணும்னே தெரியல பிரகி” என்று புரியாமல் குழந்தை போல விழித்தவள் பின்னர் மூக்கு விடைக்க அழத் துவங்கினாள்.



“எனக்கு நிஜமாவே அவன் அவ்ளோ பெரிய பிசினஸ்மேன்னு தெரியாது... அவனோட அப்பா, அந்த பூமர் அங்கிள் தான் எல்லாத்துக்கும் காரணம்... பொய் சொல்லி கிரிஷை நம்ப வச்சிட்டார்.. ஃபைனலி என் வாய் தான் எனக்கு எதிரியாயிடுச்சு... என் முட்டாள்தனம் தான் நான் இன்னைக்கு கிரிஷ் கிட்ட அசிங்கப்பட்டதுக்குக் காரணம்... எனக்கே நான் தப்பானவளோனு தோண ஆரம்பிச்சிட்டு பிரகி... இப்பிடிலாம் ஆகும்னு நான் யோசிச்சதே இல்ல” என்று சொன்னபடி பிரக்யாவிடம் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

அவளது முதுகில் தட்டிக்கொடுத்தாள் பிரக்யா. அவள் அழட்டுமென விட்டுவிட்டாள்.

அவளுக்குப் பிரக்ருதியைப் பற்றி நன்றாக தெரியும். பணம் அதிகமாக இருந்தால் வாழ்க்கையில் கவலையின்றி சந்தோசமாக வாழலாம் என்ற அவளது எண்ணம் முட்டாள்தனமானது என்பதில் பிரக்யாவுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருந்ததில்லை.

அதற்காக பிரக்ருதி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவாள் என்பதை அவளால் என்றைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மனிதமனம் தன்னிடமில்லாதவற்றுக்காக ஏங்கி அவற்றை அடைய ஆசை கொள்ளும். அப்படிப்பட்ட ஆசை தான் பணக்காரனை மணமுடிக்க விரும்பிய பிரக்ருதியின் ஆசையும். பணத்துக்கும் சந்தோசத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை அவள் புரிந்துகொண்டு வெகுநாட்கள் ஆகியிருந்தது என்றாலும் அதை கேசவிடம் தக்க சமயத்தில் கூறாமல் காலம் தாழ்த்தியது தான் பிரக்ருதி செய்த தவறு.

முடிவெடுப்பதில் காலம் தாழ்த்தினால் எத்தகைய அனர்த்தம் நிகழுமென்பதற்கு வாழும் உதாரணமாகிப்போனாள் பிரக்ருதி.


Comments

Post a Comment