அலைவரிசை 35

Image
  “பொதுவா திறமைசாலிங்களுக்கு யார் மேலயும் பொறாமை வராது... பின்ன யாருக்கு வரும்? எந்த ஃபீல்ட்லயும் அரைகுறை நாலெட்ஜ் இருக்குறவங்களுக்கும், நாலேட்ஜ் இல்லனா கூட இருக்குற மாதிரி சீன் போடுற காலி டப்பாக்களுக்கும் தான் பொறாமை வரும்... ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க, எல்லாரும் எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு பிறக்குறதில்ல... புது விசயத்த கத்துக்கிற ஆர்வமும், ஹார்ட் ஒர்க்கும் இருந்தா யார் வேணும்னாலும் எந்த விசயத்தையும் கத்துக்கலாம்... சோ ஆர்வமும் ஹார்ட் ஒர்க்கும் இல்லாத சோம்பேறி திலகங்கள், ஓவர் நைட்ல ஒபாமா ஆக ஆசைப்படுற ஹாஃப் பாயில்ஸ் எந்த ஃபீல்ட்லயும் முன்னேறாம முன்னேறிப் போறவங்களைப் பாத்து பொறாமைப்படுறதும் அவங்களை பத்தி காஸிப் பேசுறதுமா இருப்பாங்க”                                               -கே.கேவின் மனதின் குரல் சென்னை சிட்டி பண்பலை அலுவலகம், எழும்பூர் (எக்மோர்)... “ பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. ஆடியோ கன்சோலில் பாடலை இடை

அலைவரிசை 26



“இந்த யூனிவர்ஸ் எவ்ளோ பெருசு! அதுல நம்ம கேலக்ஸி ஒரு சின்ன துகள் மாதிரி... நம்ம கேலக்ஸில நம்மளோட சோலார் சிஸ்டம் ஒரு துளி மாதிரி... அந்த சோலார் சிஸ்டத்துல நம்மளோட பூமி கிட்டத்தட்ட தூசி மாதிரி... இத்தனை மாதிரிகளை கடந்து இந்த பூமில வாழுற நம்ம எல்லாம் நம்மளை ரொம்ப பெரியவங்கனு நினைச்சிட்டிருக்குறோம்... How funny! இந்த உண்மைய நிதானமா யோசிச்சா எந்த மனுசனுக்கும் தற்பெருமையோ தலைக்கனமோ வராது... ஆனா அதெல்லாம் யோசிக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி வர்றதுக்குள்ள நம்மள்ல பல பேர் ஆயுளோட விளிம்புக்கு வந்துடுவோம்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

மகிழினியும் பிருத்வியும் தீவிரமான முகபாவனையுடன் அமர்ந்திருக்க பிரக்யாவை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தனர் பிரக்ருதியும் பிரணவியும்.

“இன்னும் என்னென்ன விசயத்தை மறைச்சிருக்கானு தெரியலடா பிருத்வி... நான் எப்பிடி உங்க அத்தை முகத்துல முழிப்பேன்?”

“நானா உங்களை மாப்பிள்ளை பாக்க சொன்னேன்?”





பிரக்யா கேள்வி எழுப்ப “வாயை மூடு பிரகி” என்ற அதட்டல் பிருத்வியிடமிருந்து பிறந்தது.

“அம்மாவோட ஆதங்கம் நியாயமானது தான... நீ இங்க படிக்க வந்துட்டு லவ் அது இதுனு சுத்துனா அவங்களுக்குக் கோவம் வராதா?” என அவனும் மகிழினியின் பக்கமே பேசினான்.

பிரணவி அவனிடம் ஏதோ சொல்ல வர அவளைத் தடுத்தார் மகிழினி.



“இது எங்க குடும்ப விவகாரம்... நீ தலையிட வேண்டாம்”

அவரது இந்த வார்த்தை தவறு என்று பிருத்வியாவது கூறியிருக்கலாம். ஆனால் அவனது கெட்டநேரம் அவன் அமைதியாக இருந்துவிட்டான்.

பிரணவி அடிபட்டாற்போல அவனைப் பார்க்க பிருத்வியோ மீண்டும் பிரக்யாவிடம் விசாரணை செய்ய முற்பட்டான். எதிலோ தோற்றுப்போன உணர்வு பிரணவிக்குள் எழுந்தது.

எடுத்துச் சொல்ல வேண்டியவன் வாயை மூடிக்கொண்டாலும் அவனது தங்கை அண்ணிக்காக பேசினாள்.

“உனக்கு என் மேல கோவம் இருந்தா என்னை திட்டும்மா... அதை விட்டுட்டு அண்ணிக்கும் நம்ம குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசாத... இட்ஸ் ரிடிகுலஸ்”

“போதும்டி... அவ இந்த வீட்டுக்கு வாழ வந்தவ தான்... வந்ததும் அவ கூட ஒன்னு மண்ணா பழகி எல்லா உரிமையையும் குடுக்க முடியாது”

“அப்ப அவங்க குழந்தைய மட்டும் எந்த உரிமையில நீ நம்ம குடும்பத்து வாரிசுனு சொல்லுற?”

“அது என் மகன் பிள்ளைடி”

“மருமகள் இல்லாம மகன் மட்டும் பெத்துக்கப் போற பிள்ளையா? ஏன்மா இப்பிடி இருக்க?”



தனது தமக்கையை எப்போதும் இரண்டாம்பட்சமாக நடத்தும் மகிழினியை நறுக்கென்று நான்கு வார்த்தைகள் கேட்க துறுதுறுவென்று வந்த நாக்கை, பிரக்யா அதை செய்ததால் கட்டுப்படுத்திக் கொண்டாள் பிரக்ருதி.

“உன் கிட்ட எனக்கு என்னடி பேச்சு? அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு கனவுல கூட நினைக்காத”

ஆணித்தரமாக மறுத்தார் மகிழினி.

“நீ என்ன சொல்லுறண்ணா?”

தமையனிடம் கேட்டாள் பிரக்யா.

“அம்மா சொல்லுறது தான் எனக்கும் சரினு படுது... நீ லீலா அத்தையோட மகனை மேரேஜ் பண்ணுனா லைஃப்ல செட்டில் ஆகிடுவ பிரகி... இந்த ஷ்ரவன் ஒரு ஃபுட் ட்ரக்ல காசு வாங்கி போடுறவன்... அவனால உனக்கு கம்ஃபர்டபிளான லைஃபை குடுக்க முடியாது”

பிருத்வி தன் காதலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் தான் பிரக்யா ஆச்சரியப்பட்டிருப்பாள். அவனது மறுப்பை அவள் பொருட்படுத்தவில்லை.

“உனக்குச் சரினு படல, அம்மாக்குப் பிடிக்கலங்கிறதுக்காகலாம் என்னால என் லவ்வை விட்டுக்குடுக்க முடியாது... நான் ஷ்ரவனை லவ் பண்ணுறேன், அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்... அவன் என்னை மகாராணியா வச்சுக்கணும்னு நான் ஆசைப்படல... அவனோட பெட்டர் ஹாஃபா வச்சுக்கிட்டா மட்டும் போதும்... நீ பயப்படாதண்ணா, அவன் உன்னை மாதிரி அவனோட பேரண்ட்ஸ் கிட்ட என்னை விட்டுக்குடுத்துட மாட்டான்... பொண்டாட்டியோட வளர்ச்சியை பாத்து பொருமவும் மாட்டான்... நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு அழகான வாழ்க்கையை வாழ முடியும்னு நம்புறோம்... உங்களால முடிஞ்சா எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க.. முடியலனா நோ இஸ்யூஸ்... என் வாழ்க்கையை பாத்துக்க என்னால முடியும்”

எப்போதும் பொறுமையும் நிதானமுமாக இருக்கும் பிரக்யா, அடுத்தவர் மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை உதிர்க்க தயங்கும் பிரக்யா- அன்று அவளது அன்னையையும் தமையனையும் என் காதலுக்குத் தடையாக வராதீர்கள் என்று மறைமுகமாக எச்சரித்தாள்.

அவளது தைரியம் பிரணவிக்கும் பிரக்ருதிக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால் மகிழினியும் பிருத்வியும் கோபத்தில் கொந்தளித்தனர்.

“அப்பவே அந்த மனுசன் கிட்ட இவளை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம்னு சொன்னேன்... இப்ப பாரு, எவ்ளோ திமிரா நடந்துக்கிறா”

“பொண்ணுங்களுக்குச் சொந்தக்கால்ல நிக்குறோம்ங்கிற நம்பிக்கை வந்துட்டா அவங்க குடும்பத்தை மதிக்க மாட்டாங்கனு நான் ஏன் சொல்லுறேன்னு இப்ப புரியுதா பிரணவி?” 

பிருத்வி மனைவியை தனக்குப் பரிந்து பேச அழைக்க அவளோ மாமியாரின் பேச்சை இன்னும் அவன் கண்டிக்கவில்லை என்பதால் பேச விருப்பமின்றி முகத்தைத் திருப்பிக்கொண்டாள். 

பிரக்யா தனது முடிவில் உறுதியாக இருக்க மகிழினியின் புலம்பல்களும் பிருத்வியின் புகார்களும் வலுவிழந்து போயின. முடிவில் மனோகரிடம் கூறி அவளது காதலை பிரிப்போமென அன்னையும் மகனும் கூற பிரக்யாவோ நக்கலாக சிரித்துவிட்டு பிரக்ருதியோடு நீரூற்றின் அருகே பேச சென்றுவிட்டாள்.

“இருட்டுன அப்புறம் எங்கடி போறிங்க?” என்ற மகிழினியின் அதட்டலுக்கு இனி அவளிடம் மரியாதை இருக்கப் போவதில்லை.

மகள் தன்னை மதிக்காமல் செல்வதை பார்த்துவிட்டு மைந்தனிடம் புலம்பினார் மகிழினி. அவன் அவருக்குச் சமாதானம் சொல்லிவிட்டு மனைவியைத் தேடி சென்றான்.

பிரணவி மடிக்கணியில் எதையோ நோண்டிக்கொண்டிருக்க “மடியில லேப் வச்சு யூஸ் பண்ணுனா பேபிக்கு ஹீட் ஏறாதா நவி?” என்றபடி அறைக்குள் நுழைந்தவனுக்கு மறுமொழி பகர அவனது மனைவிக்கு விருப்பமில்லை.



அவளது அமைதி விசித்திரமாக தோன்ற “என்னாச்சு நவி?” என்று அவளது தோளைத் தொட்டான் பிருத்வி.

பிரணவியோ நாசூக்காக அவனது கரத்தை விலக்கியவள் மீண்டும் மடிக்கணியில் கண்ணானாள்.

“நான் உன் கிட்ட தான் பேசுறேன் நவி... சைலண்டா இருந்தா என்ன அர்த்தம்?”

அதற்கும் மௌனம் தான்.

“என் மேல கோவமா நவி?”

இப்போது விழிகளை மட்டும் மடிக்கணினி திரையிலிருந்து உயர்த்தினாள் அவள்.

“கோவப்படுற கட்டத்தை நான் தாண்டி ரொம்ப நாளாச்சு பிருத்வி”

அமைதியாக கூறியவள் மீண்டும் மடிக்கணினியின் விசைப்பலகையைத் தட்ட ஆரம்பித்தாள்.

பிருத்வி அவளது கையைப் பற்றினான்.

“அம்மா சொன்னதை நினைச்சு உனக்குக் கோவம் தானே?”

பிரணவி சட்டென நகைத்தாள்.

“என்னமோ புதுசா உங்கம்மா என்னை ஒதுக்கி வைக்குற மாதிரி பேசுறிங்களே பிருத்வி... மனோகர் அங்கிள், பிரகிய தவிர அந்த வீட்டுல இருக்குற நீங்க ரெண்டு பேரும் என்னை எப்பவும் உங்க ஃபேமிலியில ஒருத்தியா நினைச்சதே இல்லனு மறந்துட்டிங்களா? உங்க குடும்ப விவகாரம் பேசுறப்ப நான் அந்த ரூம்ல இருந்தா நீங்க மொபைலை எடுத்துட்டு வெளியே போயிடுவிங்க... சென்னை வீட்டுல இருந்தா உங்கம்மா டேரக்டாவே என்னை வெளிய அனுப்பி இரகசியம் பேசுவாங்க... எனக்கு இதெல்லாம் பழகிப்போனது தான்... உங்க பிள்ளைய என் வயித்துல சுமக்குறதால மட்டும் நீங்க ரெண்டு பேரும் என்னை உங்க குடும்பத்து ஆளா நினைக்கணுமா என்ன? நான் யாரு? உங்க வீட்டு வாரிசை சுமந்துட்டிருக்குற அன்பெய்ட் சரோகேட்டட் மதர்... எனக்கு இந்த மரியாதையே ஜாஸ்தி”

வேதனையைக் காட்டிக்கொள்ளாது கல் போன்ற முகத்தோடு மடிக்கணினியைப் பார்த்தபடி கூறியவளின் பேச்சில் செருப்பால் அடி வாங்கியது போல உணர்ந்தான் பிருத்வி.

“இப்பிடிலாம் பேசாத நவி... அவங்க பொண்ணு வாழ்க்கைய பத்தி அவங்க என்னமோ பேசுறாங்க... அதை பத்தி நாம ஏன் ஒபீனியன் சொல்லணும்?”

“நாம, நம்ம இந்த வார்த்தை எல்லாம் உங்கம்மா முன்னாடி மறந்து போயிடுதுல்ல... இனாஃப்”

“நவி இப்ப நீ ஃபீல் பண்ணுனா பேபியும் ஃபீல் பண்ணும்டி”

வெடுக்கென அவனை நோக்கியவளின் பார்வையில் கோபத்தீ பற்றிக்கொண்டது.

“பயப்படாதிங்க... செத்தாலும் உங்க பிள்ளைய பத்திரமா பெத்து குடுத்துட்டு தான் சாவேன்... டென்சன் ஆகாம போய் உங்கம்மா கூட சேர்ந்து பிரகியோட வாழ்க்கைய எப்பிடி நாசம் பண்ணலாம்னு திட்டம் போடுங்க”

“நவி...”

கத்தியபடி எழுந்த பிருத்வி கோபத்தில் பிரணவியை அறைந்து விட்டான். 

அவன் அறைந்ததில் கன்னம் எரிய அமர்ந்திருந்தாள் பிரணவி.

செத்துவிடுவேன் என்ற வார்த்தையை தாங்காமல் அவன் அறைந்திருந்தான். ஆனால் அவனது மனைவியோ அவர்களின் குடும்ப விவகாரத்தில் தலையிட்டதற்காக அறைந்தான் என வேறு விதமாக எண்ணிக்கொண்டாள்.

“இன்னொரு தடவை என் மேல கை வச்சிங்கனா நடக்குறதே வேற... நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுறதால என்னை உங்களோட அடிமைனு நினைச்சிட்டிங்களா பிருத்வி? நீங்க என்னை லவ் பண்ணி உங்கம்மாவோட எதிர்ப்பையும் மீறி கல்யாணம் பண்ணுனிங்க... அந்தக் காதலை இன்னைக்கு வரைக்கும் நான் மதிக்கிறேன்... அதுக்காக மட்டும் தான் உங்களோட எல்லா செய்கையையும் பொறுத்துட்டுப் போறேன்... நான் தெரியாம தான் கேக்குறேன், அம்மா பிள்ளை ரெண்டு பேருக்கும் பாம்பு மாதிரி ரெட்டை நாக்கா?

நீங்க மட்டும் லவ் பண்ணுனவளை கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கலாம்... ஆனா உங்க தங்கச்சி மட்டும் லவ்வை விட்டுக்குடுத்துடணும்... உங்கம்மாக்கு நான் மூனாவது மனுசி... ஆனா என் பிள்ளை மட்டும் அவங்க வீட்டு வாரிசு... என்ன மாதிரி மனுசங்க நீங்கல்லாம்? இதோட முடிச்சுக்கோங்க... உங்களோட நான் இருக்குறதால உங்களை அண்டி இருக்குறேன்னு நீங்க நினைச்சிட்டிருக்கிங்க போல... அந்த எண்ணத்தை உடைச்சுக் காட்டுறேன்”

அவனிடம் சூளுரைத்துவிட்டு ஏழு மாத வயிற்றின் பாரத்தைச் சுமந்தபடி அந்த அறையிலிருந்து வெளியேறியவள் ஹாலில் இருந்த மாமியார் “இருட்டுனதுக்கு அப்புறம் புள்ளதாச்சி வெளிய சுத்தக்கூடாது” என்று கூறியதை கவனிக்காமல் தங்கையும் நாத்தனாரும் அமர்ந்திருக்கும் நீரூற்றை நோக்கி விரைந்தாள்.



பிரக்யாவும் பிரக்ருதியும் தங்களை நோக்கி சோர்ந்த முகத்தோடு வரும் பிரணவியை திகைப்போடு நோக்கினர்.

பிரணவியை இந்நேரத்தில் மகிழினி வீட்டை விட்டு வெளியே செல்ல எப்படி அனுமதித்தார் என்ற கேள்வி இருவருக்கும் உதயமானது.

வந்தவளோ மனபாரம் தாங்காமல் அங்கிருந்த கல்பெஞ்சில் அமர்ந்து வானத்தை வெறிக்க ஆரம்பித்தாள்.

பிரக்யாவின் “அண்ணி” என்ற அழைப்போ பிரக்ருதியின் “ஆர் யூ ஓ.கே நவி?” என்ற அக்கறையோ அவளது கருத்தில் பதியவில்லை. அதே நேரம் பிருத்வி அறைந்ததை அவர்களிடம் கூறவும் மனம் வரவில்லை.



இருவரும் கலக்கத்தோடு அவளருகே அமர்ந்தனர்.

“என்னாச்சு அண்ணி?” பிரக்யா கவலையோடு கேட்டாள்.

வானத்திலிருந்து பார்வையை மீட்டுக்கொண்டவள் “இன்னும் ஒரு வாரத்துல நான் சென்னைக்குப் போகலாம்னு இருக்குறேன்... ஹாரி மூலமா இந்தியாக்கு டிக்கெட் புக் பண்ணிடுவியா?” என்க

“என்ன சொல்லுற நவி?” என பிரக்ருதி அதிர

“நீ அடிக்கடி என் கிட்ட ஒரு கேள்வி கேப்பல்ல, உனக்குலாம் சுயமரியாதைனு ஒன்னு இருக்குதா இல்லையானு... அதே கேள்விய இன்னைக்கு என் மனசாட்சி என்னை பாத்து கேட்டுது கிருதி... சத்தியமா எனக்குச் சுயமரியாதைனு ஒன்னு இல்லவேல்லனு புரிஞ்சுக்கிட்டேன்... அது மட்டும் இருந்திருந்தா கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல ஒரு தடவை கூட குடும்பத்துல ஒருத்தியா பாக்காத மாமியாரையும் புருசனையும் எப்பவோ எதிர்த்திருப்பேனே” என்றாள் பிரணவி.

“அம்மாவும் அண்ணாவும் உங்களை திட்டுனாங்களா அண்ணி? அவங்களை...” என பற்களை கடித்துக்கொண்டு கிளம்பிய பிரக்யாவைத் தடுத்தாள் அவள்.

“இப்ப நீ சண்டை போடலாம்... ஆனா உன்னை தூண்டிவிட்டேன்னு என் மேல தான் பழி வரும் பிரகி... என் பிள்ளை பிறக்குற வரைக்கும் நான் நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்... என்னை இந்தியாக்கு அழைச்சிட்டுப் போயிடுங்கம்மா”

“நவி” நா தழுதழுத்தது பிரக்ருதிக்கு. தமக்கையைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் அவள்.

இத்தனை நாட்களில் தமக்கை மனவேதனையுற்று அவள் பார்த்தது இல்லை.

“என் பிள்ளைய பிருத்வி தான் முதல்ல கையில வாங்கணும்... லேபர் ரூம்ல அவர் என் கூடவே இருப்பேன்னு சொல்லிருக்கார்” என நிமிடத்துக்கு நிமிடம் வாய் ஓயாமல் கணவன் புகழ் பாடுபவள் இன்று இந்தியாக்குச் சென்று தான் குழந்தை பெற்றுக்கொள்வேன் என பிடிவாதம் பிடிக்கிறாள் என்றால் கண்டிப்பாக அதற்கு வலுவான காரணம் இருக்கும்.

அவளது தோளில் தட்டிக்கொடுத்தாள் பிரக்ருதி.

“ஹாரி கிட்ட சொல்லி டிக்கெட் புக் பண்ணிடலாம்... நம்ம ரெண்டு பேரும் இந்தியாக்குப் போகலாம்... நீ வருத்தப்படாத”

“ரெண்டு பேர் இல்ல... மூனு பேர்” என பிரக்யாவும் சேர்ந்து கொண்டாள்.

“இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னா கண்டிப்பா பர்ஸ்ட் அவுட் ஆகிடுவேன்... இந்தியா போனா அப்பா கிட்ட ஷ்ரவனை பத்தி சொல்லி புரியவைப்பேன்... அதுமட்டுமில்ல, என் மருமகப்பிள்ளைய நான் பாக்க வேண்டாமா? என்னை பெத்த தாய்க்கிழவியும் அது பெத்த முசுட்டு முனுசாமியும் இங்கயே தனியா கிடந்து அல்லாடட்டும்” என அவள் கூற பிரணவி சோகம் மறந்து முறுவலித்தாள்.

“வெரி குட்... இப்பிடியே சிரிச்சிட்டு இருக்கணும்” என தோழியர் இருவரும் கூற பிரணவி தலையாட்டினாள்.

பிரக்யா ஷ்ரவனை பிரிவதற்காக வருத்தம் கொள்ளவில்லை. பல சமயங்களில் தூரம் தான் காதலை அதிகரிக்குமாம். எப்படியாவது அவனைச் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு கூடிய விரைவில் அவனும் கேசவும் இந்தியாவுக்குத் திரும்புவதாக கூறியிருந்ததால் இந்தியப்பயணம் அவளுக்கு அசவுகரியமாகத் தோன்றவில்லை.

மூவரும் மீண்டும் ஃப்ளாட்டுக்குத் திரும்பிய போது பிருத்வியும் மகிழினியும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

பிரணவியிடம் அவர்கள் ஏதோ பேச வர அவளோ “நான் இனிமே உங்க கூட ஸ்டெ பண்ணிக்குறேன்” என்றவாறு பிரக்ருதியும் பிரக்யாவும் பகிர்ந்திருந்த அறைக்குள் சென்றுவிட்டாள். 

பிருத்வி அதை குழப்பத்தோடு பார்த்துவிட்டு தங்கைக்கு அறிவுரை கூற வந்தான். ஆனால் பிரக்யா அவனது பேச்சை கேட்க விரும்பவில்லை.

“நீ மட்டும் லவ் பண்ணுனவங்களை கல்யாணம் பண்ணுவ.. நான் மட்டும் இவங்க காட்டுற சுப்பனையோ குப்பனையோ கல்யாணம் பண்ணிக்கணுமா? உங்க ரெண்டு பேருக்கும் அப்பா கிட்ட இருக்கு” என மிரட்டிவிட்டு பிரக்ருதியைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டாள் அவள்.

அவளது காதலனோ வளைகாப்பு முடித்து வந்ததிலிருந்து பிரக்யாவிடமிருந்து மொபைல் அழைப்பு எதுவும் வராமல் தவித்துப் போய்விட்டான்.

அவன் குட்டி போட்ட பூனையாக அங்குமிங்கும் உலாவுவதை பார்த்துவிட்டு 

“என்னடா ஆச்சு உனக்கு? வந்ததுல இருந்து நீ ரெஸ்ட்லெஸ்சா இருக்க” என வினவினான் கேசவ்.



“பிரகி கிட்ட இருந்து ஒரு கால் கூட வரல மச்சி” என சோககீதம் வாசித்தவன் அவனது மொபைல் “அன்பே என் ‘பே’ நீதானே” என இசைக்கவும் முகம் மலர்ந்தான்.

கேசவ் திகைத்தவன் “எப்படா ரிங்டோன் மாத்துன?” என்று கேட்க அவனிடம் கண் சிமிட்டிவிட்டு “சொல்லு பிரகி... ஏன் இவ்ளோ நேரம் கால் பண்ணல?” என்று கேட்டபடி அறைக்குள் சென்றுவிட்டான்.



பிரக்யா நடந்ததை கூறினாள்.

“நான் இந்தியா போனதும் அப்பா கிட்ட உன்னை பத்தி சொல்லப்போறேன்” என்றாள்.

“என்னை பத்தி மீன்ஸ், எல்லாத்தையும் சொல்லுவியா பிரகி?” என கவலையாய் கேட்டான் ஷ்ரவன்.

அக்கேள்வியில் கடுப்புற்றாள் பிரக்யா.

“வேற வழியில்லடா எருமை... உன் ஹிஸ்டரிய நான் சொல்லலனா எங்கப்பா அவரே கண்டுபிடிச்சிடுவார்”

“அதில்ல... சொல்லுற மாதிரி இருந்தா நானே உங்கப்பா கிட்ட சொல்லிடுவேன்... நம்ம வரலாறு கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்குதே”

“ஐயோ! என் பொறுமைய சோதிக்காத... நீ ஏன்டா அப்பிடி இருந்த?” என அவனது பழைய வாழ்க்கையை சுட்டிக்காட்டினாள் பிரக்யா.



“அம்மா தாயே! நாலு வருசம் கழிச்சு நீ என் லைஃப்ல வருவனு அப்ப எனக்கு ஜோசியமா தெரியும்? வாலிப வயசுல்ல... அதான்...” என இழுத்தான் அவன்.

“அஹான்! இதே பதிலை நான் சொன்னா எப்பிடி இருக்கும்?”

“பிரகி”

“போதும்... இந்தக் கேள்வியை கேட்டா ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டிங்க... போடா... எனக்குத் தெரியாதுப்பா, நான் எங்கப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன்”

“சரி சொல்லு... உண்மைய மறைக்கிறது தப்பு... அதை விடு, ஏன் திடீர்னு இந்தியாக்குப் போறீங்க?”

“அண்ணிக்கு இங்க இருக்க பிடிக்கல”

“நம்ம லவ்வால அவங்களை உங்கம்மா எதுவும் சொல்லிடல தானே? பாவம் அவங்களுக்கும் இன்னைக்குத் தானே தெரிஞ்சிருக்கும்?”

“இது வேற பிரச்சனை ஷ்ரவன்... சொன்னா உனக்குப் புரியாது... நான் ஒன்னு கேக்கட்டுமா?”

“ஒன்னு என்ன, தௌசண்ட் கூட கேளு”

“ஆப்டர் மேரேஜ் நீ என்னை எந்த இடத்துலயும் விட்டுக்குடுக்க மாட்டல்ல?”

“உன்னை விட்டுக்குடுத்து இன்னொருத்தரை சேர்த்துக்குற அளவுக்கு எனக்குச் சொந்தபந்தம்னு யார் இருக்குறா பிரகி? அப்பா, நீ, கிரிஷ் தவிர வேற யாரும் எனக்குனு இல்லடி... உன்னை நான் விட்டுக்குடுத்தேன்னு வையேன், இந்த ரெண்டு பேருமே என்னை கொன்னுடுவாங்க... எனக்கு உயிர் பயம் ஜாஸ்திம்மா” 

ஷ்ரவன் பயப்படுவது போல நடித்தான். அதற்கு பிரக்யா சிரிக்க அவன் அந்தக் கேள்வியை அவளிடம் கேட்டே விட்டான்.

“நீயும் கிருதி மாதிரி யோசிச்சு கம்ஃபர்டபிளான லைஃபை குடுக்காதவன் எனக்குத் தேவையில்லனு ஏன் என் லவ்வ ரிஜக்ட் பண்ணல?”

பிரக்யா ஒரு நொடி நிதானித்தாள்.

“ஏன்னா பிரகியும் கிருதியும் ஒன்னு இல்ல... ஒரு கையில இருக்குற ஐந்து விரலும் ஒன்னு போல இருக்காதுல்ல... அதே மாதிரி எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டாங்க... கிருதி யோசிக்கிற பாயிண்ட் ஆப் வியூ அவளுக்குச் சரினு தோணுது... என்னோட பாய்ண்ட் ஆப் வியூ எனக்குச் சரினு படுது... இப்ப புரிஞ்சுதா?”

“புரியுது... உன்னை மாதிரி ஒருத்தி கிரிஷுக்கு கேர்ள் ஃப்ரெண்டா கிடைச்சிருக்கலாம்”

“டேய் இப்ப தானே சொன்னேன்... உன் ஃப்ரெண்டோட ரஃப் அண்ட் டஃப் கேரக்டருக்கு கிருதி மாதிரி கறார் பேர்வழி தான் கரெக்டா இருப்பாங்க... அவங்கல்லாம் டாம் அண்ட் ஜெர்ரி கேட்டகரி கபிள்”

“நீ என்னமோ சொல்லுற... அவங்களை கபிளா பாக்குறதுலாம் இனிமே நடக்காதுனு எனக்குத் தோணுது... எனக்கு கிரிஷ் பத்தி நல்லா தெரியும்... அவனுக்கு ஒருத்தவங்களை பிடிக்காம போச்சுனா மறுபடியும் அவங்களால அவன் கிட்ட நல்ல பாண்டிங்கை உருவாக்கிக்க முடியாது... அதுக்கு விதிவிலக்கு நான் மட்டும் தான்”

“என்னடா சொல்லுற?”

“ஒன்ஸ் அபான் அ டைம், அவனுக்கு என்னைச் சுத்தமா பிடிக்காது... என் அப்பாவும் அவனோட அப்பாவும் க்ளாஸ்மேட்ஸ்... என்னோட அகாடெமிக் ரெக்கார்ட் எல்லாம் அவனை விட ஸ்ட்ராங்கா இருக்கும்... அதனால அவனோட அப்பா என்னை வச்சு அவனை திட்டுவார்... அப்ப இருந்து அவனுக்கு என்னை பிடிக்காது... அதை விட ஸ்ட்ராங்கான இன்னொரு காரணமும் இருக்கு... நீ இந்தியாக்குப் போனதும் அதை தெரிஞ்சிப்ப”

“ஷப்பா, ட்விஸ்ட் வச்சு வச்சே க்யூரியாசிட்டிய கிளப்புற நீ... இன்னும் உங்க லைஃப்ல என்ன சீக்ரேட்ஸ் இருக்குனு யோசிச்சால தலை வலிக்குதுடா”

“அப்ப யோசிக்காத... நீ எல்லா விசயத்தையும் தெரிஞ்சிக்கிறப்ப உனக்கு அது சர்ப்ரைஸா இருக்கனும்னா எதை பத்தியும் ஓவரா யோசிக்காத”

 இருவரும் பேசி முடித்ததும் ஹாலுக்கு வந்த ஷ்ரவன் கேசவிடம் பிரக்யா கூறிய அனைத்தையும் வெளிப்படையாக கூறினான்.

“யூ ஆர் வெரி வெரி லக்கி ஷ்ரவன்... யூ பீபிள் ஆர் மேட் ஃபார் ஈச் அதர்”

“பிரகி இன்னொன்னும் சொன்னா... அதை கேட்டா நீ என்னை அடிக்க வருவ கிரிஷ்”

“சொல்லு... கேட்டு வைப்போம்”

“நீயும் கிருதியும் டாம் அண்ட் ஜெர்ரி கபிளாம்”



“அடச்சீ! உன் வாயை ஹார்பிக் ஊத்தி கழுவுடா... கபிளாம்... அது ஒன்னு தான் இப்ப கேடு”

எரிந்து விழுந்தவன் ஷ்ரவனின் முதுகில் அடித்தான். அவனைப் பொறுத்தவரைக்கும் பிரக்ருதி மீதான காதல் அவனது அதிகபட்ச முட்டாள்தனத்துக்கு விதி கொடுத்த தண்டனை. ஒரு தடவை அனுபவித்த போதே உயிர் போகும் வலியைக் கொடுத்துவிட்டதை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கும் அளவுக்கு அவனிடம் மனவலிமை இல்லை. அந்த வகையில் அவனும் பலகீனனே! 

இதெல்லாம் கேசவின் எண்ணம் மட்டும் தான். நாம் ஒவ்வொருவரும் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்களை புதைத்திருப்போம். அந்த எண்ணப்போக்கில் தான் நமது வாழ்க்கை நகர்கிறதா என்ன?

Comments

Post a Comment