Posts

Showing posts from March, 2024

அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 22

Image
  “வாழ்க்கையில எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விசயங்கள் ரெண்டு இருக்கு... நம்பர் ஒன் நான் செய்யாத விசயத்துக்காக என்னை ப்ளேம் பண்ணுறது, நம்பர் டூ நான் செஞ்ச நல்ல விசயத்த மறந்துட்டு என்னைத் துச்சமா நடத்துறது... இந்த ரெண்டுல ஒன்னை யாராவது எனக்குப் பண்ணுனாங்கனா ஐ வோண்ட் ஃபர்கிவ் தெம் ஈஸிலி... ஜாலியா ஜோவியலா இருக்கிறது தப்பில்ல, ஆனா அடுத்தவங்களோட முட்டாள்தனமான கோவத்துக்கு ஈஸியா இரையாகிற கோமாளியா இருக்குறது தப்பு”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் பம்பிள் பி ட்ரக்கின் வாடிக்கையாளர்களிடம் பெற்ற பணத்தையும் QR கோட் மற்றும் மொபைல் வாலட் மூலம் பெற்ற பணத்தையும் சரி பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்ரவன். ஜேக்கப் லியானாவோடு தேனிலவுக்குச் சென்றுவிட்டதால் சமைக்கும் பொறுப்பு முழுவதும் கேசவின் தலையில் விழுந்திருந்தது. அவன் மும்முரமாக வாடிக்கையாளர்கள் கேட்பதை எடுத்துக் கொடுக்க ஷ்ரவன் கணக்கு வழக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென “ஒன் லிக்யூட் ட்ரஃபிள் ஹாட் சாக்லேட் ப்ளீஸ்” என்று பழக்கப்பட்ட குரல் ஒன்று ஒலிக்க தலையை நிமிர்ந்து பார்த்தான் அவன். அங்கே பிரக்

அலைவரிசை 21

Image
  “ரொம்ப ஜோவியலா இருக்குற பெர்சன்சுக்கு சீரியஸ்னெஸ்னா என்னனு தெரியாது, அவங்க எதையும் சீரியஸா எடுத்துக்காம ஈஸியா மூவ் ஆன் ஆகிடுவாங்கனு நம்மள்ல பல பேர் நினைச்சிட்டிருப்போம்... ஆனா அது உண்மை இல்ல... ஜோவியலான பெர்சன்ஸ் எந்தளவுக்கு அடுத்தவங்களோட ஈஸியா மிங்கில் ஆகி ஜாலியா இருக்குறாங்களோ அதை விட பல மடங்கு அதிகமா அவங்க உடைஞ்சும் போவாங்க... அவங்க காயப்பட்டாங்கனா ஈஸியா அவங்க அதை மறந்துட மாட்டாங்க... அவங்களை ஹர்ட் பண்ணிட்டு மறுபடியும் அவங்களோட பேட்ச்-அப் பண்ணுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்... அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி ஒரு சூழ்நிலை வந்துச்சுனா உங்களால அவங்களை அந்த சூழ்நிலையில இருந்து சுலபமா வெளிய கொண்டு வரமுடியாது... சோ ஒருத்தவங்க நம்ம என்ன சொன்னாலும் சீரியசா எடுத்துக்காம ஃபன் பண்ணிட்டு ஜாலியா சுத்துறாங்கனு அவங்களை அடிக்கடி ஹர்ட் பண்ணாதிங்க... உங்களால மறுபடி அவங்களை பழையபடி பாக்கவே முடியாத நிலமை வந்துடும்”                                               -கே.கேவின் மனதின் குரல் தி சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ்... உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்லும் வழியில் ஷ்ரவன் காத்திருப்பதைப் பார்த்துவிட்டு அவனை நெரு