அலைவரிசை 32

Image
  “True talent and hardwork always winனு சொல்லுவாங்க... இது ரியாலிட்டில அவ்ளோ சீக்கிரம் பாசிபில் இல்ல... ஏன்னா இங்க ஹார்ட் ஒர்க் பண்ணுற திறமைசாலிங்களை விட போற போக்குல எதையோ செஞ்சுட்டு அதை விளம்பரப்படுத்துற காலி டப்பாக்கள் தான் ஜெயிக்கிறாங்க... உதாரணத்துக்கு சினி ஃபீல்டை எடுத்துக்கோங்க... அடுத்தவங்க கதைய திருடி மூவி எடுக்குறவங்க தான் இன்ஸ்டெண்ட் வெற்றிய ருசிக்கிறாங்க... ஹார்ட் ஒர்க் பண்ணுற டைரக்டர், வித்தியாசமான முயற்சி பண்ணுற டைரக்டர் ஜெயிக்கிறதுக்கு குறைஞ்ச பட்சம் ஃபைவ் டு டென் இயர்ஸ் ஆகுது... லைக்வைஸ் ஆர்ட்டிஸ்டா பெர்ஃபார்ம் பண்ணுற ஆக்ட்ரசை விட க்ளாமர் காட்ட ரெடியா இருக்குறவங்க தான் சீக்கிரமா ஸ்டார் அந்தஸ்தை அடையுறாங்க... அவங்களை ரசிக்கிற கூட்டம் தான் அதிகம்... பட் கூட்டம் வரணும்ங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்ங்கிற மனப்பான்மை ரொம்ப கேவலமானது... சோ லேட்டா ஜெயிச்சாலும் உங்க உழைப்பாலயும் திறமையாலயும் மட்டும் ஜெயிக்க பாருங்க... அந்த வெற்றிய தான் உங்களால மத்தவங்க கிட்ட பெருமையா சொல்லிக்க முடியும்... கேவலமான வழியில ஜெயிச்சா அந்த வெற்றியும் நிலையா இருக்காது... நான் இப்பிடி தான் ஜெய

அலைவரிசை 10

 



The mind is like an iceberg, it floats with one-seventh of its bulk above water அப்பிடினு சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்லுறார். அதே மாதிரி தான் மனுசங்க நம்ம கிட்ட காட்டுற குணம் அவங்களோட முழு சுபாவம் கிடையாது. அவங்களோட முழு சுபாவத்துல ஏழுல ஒரு பங்கை மட்டும் தான் நம்மளோட பழகுற நேரத்துல அவங்க வெளிப்படுத்துவாங்க. சொல்லப் போனா இந்த மறைக்கப்பட்ட சுபாவங்களும், சின்ன சின்ன ரகசியங்களும் தான் மனுசங்களை நமக்குச் சுவாரசியமா காட்டும். ஒருத்தர் ஓபன் புக்கா இருந்தா அவங்க கூட பழகுறதுல பெருசா இன்ட்ரெஸ்ட் இருக்காது. சப்போஸ் புதிரான மனுசனா இருந்தா அவங்க நம்ம கிட்ட எதை மறைக்கிறாங்கங்கிற கியூரியாசிட்டிலயே அவங்க கூட பழகிப் பாக்க தோணும்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

ஸ்டார்பக்சிலிருந்து சாக்சனிக்குத் திரும்பியிருந்தனர் பிரக்ருதியும் கே.கேவும். காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவர்களிடையே நடந்த சண்டையை மறந்து சமாதானமாகிவிட்டனர்.

“டுமாரோ நான் நியூ டிஷ் ஒன்னு செய்யலாம்னு இருக்குறேன்... நீ அதை டேஸ்ட் பண்ணி எப்பிடி இருக்குனு சொல்லுறியா?”

ஆர்வமாக கேட்டான் கே.கே. ஆனால் பிரக்ருதியோ மறுப்பாக தலையசைத்தாள்.

“நாளைக்கு நான் கொஞ்சம் பிஸி... ஈவ்னிங் தான் ஃப்ரீ ஆவேன் கே.கே” என்று தோளைக் குலுக்கினாள் அவள்.

“ஏன்? நாளைக்கு என்ன அப்பிடி வெட்டி முறிக்கிற வேலை?”

“அது வந்து....” என்று நாணியவள் கால் பெருவிரலால் அங்கிருந்த லானில் கோலமிட அவளை விசித்திரமாக பார்த்தான் கே.கே.

“ஏய் இரு இரு... இப்ப ஏன் நீ வியர்டா பிஹேவ் பண்ணுற? தலையில எதுவும் அடி பட்டுடுச்சா?” என்றபடி அவளது கூந்தலை கலைத்து தலையை பரிசோதிக்க ஆரம்பித்தான் அவன்.

அவனிடமிருந்து கூந்தலையும் தலையையும் அரும்பாடுப்பட்டு காப்பாற்றிய பிரக்ருதி “என் தலை நல்லா தான் இருக்கு... நாளைக்கு நான் டேட்டிங் போறேன்... அங்க வெக்கப்படணும்ல... அதுக்கு ப்ராக்டிஷ் பண்ணிப் பாத்தேன்” என்று சிடுசிடுக்க

“வாட்? டேட்டிங்கா? பொய் சொல்லாத கிருதி... அப்புறம் பின்னோசியோ மாதிரி மூக்கு நீளமா வளந்துடப் போகுது” என்று நம்பவியலாத குரலில் கூறினான் கே.கே.



“நான் பொய் சொல்லலை... நிஜமாவே டேட்டிங் தான்”

“இந்தக் கொடுமைய வேற நான் பாக்கணுமா?”

அவன் புலம்புவது போல நடிக்க பிரக்ருதி அவனை நறுக்கென்று கிள்ளினாள்.

“நீ என்னை ரொம்ப அண்டர்-எஸ்டிமேட் பண்ணுற கே.கே... ஆனா நிஷாந்த் அப்பிடி இல்ல தெரியுமா?” என்று அவள் யாரோ ஒருவனைப் பற்றி புகழவும், அவள் உண்மையைத் தான் கூறுகிறாள் என்பது கே.கேவுக்குப் புரிந்தது.

“அது யாரு நிஷாந்த்?”

“நிஷாந்த் அகர்வால்... நாளைக்கு நானும் அவனும் தான் டேட்டிங் போகப்போறோம்”

“ஒரு வழியா உன் கொள்கைக்கு ஏத்த ஆளை தேடி கண்டுபிடிச்சிட்ட போல”

“நான் எங்க கண்டுபிடிச்சேன்? அவனா தான் என்னைத் தேடி வந்தான்”

“அப்பிடியா? ஹவ் இஸ் திஸ் பாஸிபிள்?”

“எதுக்கு மொபைல்ல டிண்டர், பம்பிள்னு வரிசையா ஆப்ஸ் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கோம்?”

“நீ பிழைச்சுப்ப... பையன் என்ன பண்ணுறான்?”

“அவங்க அப்பாவோட டெக்ஸ்டைல் கம்பெனியை மேனேஜ் பண்ணப்போறானாம்... போன மாசம் கூட டெக்சாஸோட கவர்னர் ‘பெஸ்ட் க்ரோயிங் கம்பெனி’னு அவார்ட் குடுத்தாரே, அந்த வீனஸ் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியோட சி.ஈ.ஓ பராஸ் அகர்வாலோட பையன்... அவங்க கம்பெனி டர்ன் ஓவர் வருசத்துக்கு அறுபது மில்லியனாம்... இன்னும் ஃபைவ் இயர்ஸ்ல ஹன்ட்ரெட் மில்லியனா ஆக்குறதுக்காக ஹார்ட் ஒர்க் பண்ணப்போறோம்னு நிஷாந்த் சொன்னான்”

மூச்சு விடாமல் நிஷாந்த் புராணம் படித்தாள் பிரக்ருதி. கே.கே அவள் கூறுவதை ஏதோ குழந்தை கதை சொல்லுவதைப் போல கேட்டுக் கொண்டிருந்தான்.

“நான் சொல்லிட்டே இருக்குறேன்... நீ எதுவும் பேசாம தலையாட்டுற?” என அவள் குறைபடவும்

“உன் லைஃப்ல உனக்குப் பிடிச்ச மாதிரி ஒருத்தன் வரப்போறான்... அவனைப் பத்தி நீ பேசுறப்ப இடையில நான் கொஸ்டீன் கேக்குறது நல்லா இருக்காதுல்ல?” என்றான் அவன்.

பிரக்ருதி கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.

“இது தான் காரணா? இல்ல, நம்மளை சைட் அடிக்குற பொண்ணு இன்னொருத்தன் கூட டேட்டிங் போறாளேனு பொறாமையா இருக்குதா?” என்று கேட்டாள்.

கே.கேவுக்கு அவளது கேள்வியில் சிரிப்பு தான் வந்தது. இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது என்பதே அவனது சிரிப்புக்குக் காரணம்.

பிரக்ருதிக்குத் தான் அது புரியவில்லை. மேலே சொல் என்பது போல கை காட்டினான் அவன்.

“நானும் நிஷாந்தும் ஆஸ்டின்ல இருக்குற ஆபர்க் ரிசார்ட்சுக்கு போகப்போறோம்... ஈவ்னிங் வரைக்கும் அங்க தான் இருப்போம்”

“தட் மீன்ஸ்?”

“ஏய் நீ யோசிக்கிற மாதிரில்லாம் இல்ல... பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க வேண்டாமா? அதுக்குத் தான் போறோம்” என்றவளின் கண்களில் எங்கே தன்னை கே.கே தவறாக நினைத்துவிடுவானோ என்ற ஆதங்கம் நிறைந்திருந்தது.

கே.கே அதை புரிந்து கொண்டான்.

“நீ அவனை லவ் பண்ணுறியா?”

“லவ்வா? நானும் அவனும் டிண்டர்ல பேச ஆரம்பிச்சு டூ வீக்ஸ் தான் ஆகுது கே.கே... நான் எதிர்பாத்த மாதிரி அவன் வெல்-டு-டூ ஃபேமிலி பையன்... சோ வருங்காலத்துல நான் ஃபினான்ஷியலா கஷ்டப்பட வேண்டாம்... இந்திய வம்சாவளி பையனா இருக்குறதால அப்பாவை சம்மதிக்க வைக்குறதும் ஈஸி” என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாள் பிரக்ருதி.

“பட் நார்த் இந்தியன் போல இருக்கே?” என்று கே.கே யோசனையாக கூற

“சோ வாட்? சவுத்தும் நார்த்தும் சேர்ந்து வாழ முடியாதா? நீ டூ ஸ்டேஸ்ட்ஸ், சென்னை எக்ஸ்பிரஸ் மூவில்லாம் பாத்தது இல்லயா? அதை விடு... சவுத் அண்ட் நார்த் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர்னு சயின்ஸ்ல தியரி கூட இருக்கு” என்றாள் அவள்.

கே.கே ஆச்சரியமாய் புருவம் உயர்த்தியவன் மேற்கொண்டு ஏதோ சொல்ல வரும் போது மொபைலில் அழைப்பு வர தொடுதிரையைப் பார்த்ததும் அதில் வந்த பெயரைக் கண்டதும் அமைதியானான்.

பிரக்ருதி அவனது பதிலுக்காக ஆவலோடு காத்திருப்பதை அறிந்து “ஓ.கே... நீ இவ்ளோ தூரம் யோசிச்சிருக்க... கண்டிப்பா அந்தப் பையன் உனக்குப் பொருத்தமானவனா தான் இருப்பான்... ஒளிவு மறைவு இல்லாம பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க... பழகி பாத்து அதுக்கு மேல லவ் வந்தா மேரேஜ் பண்ணிக்குற முடிவுக்கு வாங்க... ஆல் த பெஸ்ட்” என்று அவளது தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

இவ்வளவு அவசரமாக பேச்சைக் கூட முடிக்காமல் ஏன் ஓடுகிறான் என்ற கேள்வியோடு செல்பவனை பார்த்தாள் பிரக்ருதி.

கே.கேவோ காதில் மொபைலை வைத்து தீவிரக்குரலில் ஏதோ பேசியபடி சென்று கொண்டிருந்தான்.

பெருமூச்சுடன் அங்கிருந்து தங்களது ஃப்ளாட்டுக்கு வந்தவளிடம் இவ்வளவு நேரம் எங்கே சென்றாய் என விசாரணையை ஆரம்பித்தாள் பிரணவி.

“கே.கே கூட டார்கெட் வரைக்கும் போயிருந்தேன்... திடீர்னு ஃப்ராப்புசீனோ குடிக்கணும் போல இருந்துச்சு... அதான் ஸ்டார்பக்ஸ்ல குடிப்போம்னு அவனை அழைச்சிட்டுப் போனேன்”



“அந்தப் பையனே அருமையா ஃப்ராப்புசீனோ ப்ரிப்பேர் பண்ணுவானே... ஏன் வீணா அவனை அலைய வச்ச?”

“உன் டேஸ்டுக்கு அவனோட தள்ளுவண்டிக்கடை ஃப்ராப்புசீனோ அமிர்தமா தெரியலாம்... எனக்குலாம் ஸ்டார்பக்ஸ்ல குடிச்சா தான் திருப்தி... கம் ஆன் நவி! என் டேஸ்ட் வேற உன் டேஸ்ட் வேற”

அலட்டலாய் சொன்னபடி சென்ற தங்கையைப் பார்த்து தலையிலடித்துக்கொண்டு சென்றுவிட்டாள் பிரணவி.

எப்படியோ அவளைச் சமாளித்துவிட்ட திருப்தியோடு அறைக்குள் நுழைந்த பிரக்ருதி மெத்தையின் மீது சிதறிக் கிடந்த உடைகளைப் பார்த்ததும் திகைத்தாள்.


ட்ரஸ்சிங் டேபிள் முன்னே


நின்று பர்பிள் வண்ண லாங் கவுனை தன் மீது வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த பிரக்யாவின் தோளில் பட்டென்று அடித்தவள்

“ஏன்டி ட்ரஸ்சை சிதறி போட்டுருக்க? இதை ஒதுங்க வைக்கவே இன்னைக்கு டைம் சரியா இருக்கும் போல” என்று கூற

“ப்ச்.. எனக்காக இதை கூட செய்ய மாட்டியா கிருதி?” என்று சொன்னபடியே பர்பிள் வண்ண கவுனை ட்ரஸ்சிங் டேபிள் மீது வைத்தாள் அவள்.

பிரக்ருதி அவளை மேலும் கீழுமாக பார்த்தாள். பின்னர் கவுனுக்குப் பொருத்தமாக பர்பிள் வண்ண ஸ்டில்லட்டோ, பர்பிள் வண்ணத்தில் பாசிமணிகள் மின்னும் ப்ரேஸ்லெட் என அவள் எடுத்து வைத்திருக்கவும் பிரக்ருதிக்குச் சந்தேகம் வந்துவிட்டது.

அதை நிவர்த்தி செய்தே ஆகவேண்டும். இல்லை என்றால் அவளது தலை வெடித்துவிடும். உடனே தோழியிடம் எதற்காக இந்த பர்பிள்மயம் என்று கேட்டாள் அவள்.

பிரக்யா ஓடிச் சென்று அறைக்கதவை தாழிட்டுவிட்டு வந்தாள். பின்னர் மெதுவான குரலில்

“நான் இன்னைக்கு ஈவ்னிங் டேட் போறேன்” என்றாள் கண்ணின் கருமணிகள் ஆர்வத்தில் மின்ன.



பிரக்ருதி முதலில் திகைப்பில் வாயைப் பிளந்தாள். பின்னர் அவளது முகத்தில் குறும்புத்தனம் உதயமானது.

“ஷ்ரவன் கூட தானே போற?” என்று கூறி பிரக்யாவின் தோளை இடித்தாள் அவள்.

“உனக்கு எப்பிடி தெரியும்?”

“ஷாக்கை குறை ஷாக்கை குறை... நீயும் அவனும் லான்ல ஓட்டுன மினி சினிமாவ நான் பாத்துட்டேனே”

பிரக்யா வெட்கச்சிரிப்புடன் முகத்தை மூடிக்கொண்டாள்.

“வெக்கப்படுறதுலாம் அழகா இருக்கு... மிஸ்டர் அண்ட் மிசஸ் பிருத்வி கிட்ட என்ன சொல்லிட்டுப் போறதா உத்தேசம்?”

அவள் கேட்கவும் பிரக்யாவின் முகத்தில் சோகம்.

“உடனே முகத்தை சோகமா வச்சுக்காத... ஹாரிய பாக்க போறேன்னு சொல்லிட்டுக் கிளம்பு... பட் லேட் நைட் வரைக்கும் சுத்தாதிங்க... கொஞ்சம் சீக்கிரமா வரப் பாரு... என்ஜாய் யுவர் டே”

பிரக்ருதி நம்பிக்கை கொடுத்ததும் அவளையும் அழைத்துக்கொண்டு பிரணவியிடம் சென்று நின்றாள் பிரக்யா. ஹாரியைப் பார்க்கச் செல்வதாக கூறி அனுமதி கேட்டாள்.

பிரணவியும் வேறேதும் யோசிக்காமல் அனுமதி கொடுத்துவிட்டாள். பிருத்வி வழக்கம் போல குறுக்கு விசாரணை நடத்திவிட்டு சீக்கிரம் வீடு திரும்பிவிடவேண்டுமென்ற நிபந்தனையோடு அனுமதி கொடுத்தான்.

ஆனால் தனியே செல்லாமல் பிரக்ருதியையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கூற இரு பெண்களும் திருதிருவென விழித்தனர்.

பிரக்ருதி அவசரமாக “நான் எதுக்கு மாமா? அவங்க ஃப்ரெண்ட்ஸ் என்னமோ பேசிப்பாங்க... நான் இடையில இருந்தா நல்லாவா இருக்கும்?” என்று ஆட்சேபிக்க

“இதுக்கு முன்னாடி இவளோட க்ளாஸ்மேட்ஸ் கூட நீ அவுட்டிங் போனதே இல்லையா?”

“போயிருக்குறேன் மாமா... ஆனா இந்த தடவை கொஞ்சம் வேற மாதிரி சிச்சுவேசன்”

“என்ன சிச்சுவேசன்?”

பிருத்வி துருவி துருவி கேட்கவும் பிரக்ருதிக்கு ஆயாசமாகி விட்டது.

“சரி மாமா... நானும் இவளோட போறேன்”

“குட்... மறந்துடாதிங்க, சீக்கிரம் வீட்டுக்கு வந்துடணும்”

“சரி மாமா”

“நீயும் தான்” பிரக்யாவிடம் கறாராக கூறினான் பிருத்வி.

“சரிண்ணா” என்று வேகமாகத் தலையாட்டினாள் அவள்.

“இப்ப போய் ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க”

இருவரும் மறுபேச்சின்றி அவர்களின் அறைக்கு நல்லப்பெண்களைப் போல திரும்பினர். அறைக்குள் நுழைந்து கதவை அடைத்ததும்

“ஐய் ஜாலி ஜாலி! அண்ணா நான் சொன்னத நம்பிட்டான்” என பிரக்யா துள்ளி குதிக்க

“இன்னும் ஹை டெசிபல்ல கத்து... அவரே வந்து பெர்மிசனை ரிவோக் பண்ணிடுவார்” என்றாள் பிரக்ருதி.

“அச்சச்சோ! ஆமா கிருதி... அண்ணா செஞ்சாலும் செய்வான்... இங்க இருந்து கிளம்புற வரைக்கு அவனுக்குச் சந்தேகமே வரக்கூடாது... நீயும் என் கூட டாக்சில வா... ஒய்ட் ராக் லேக் ஏரியால இருந்து நாங்க திரும்பி வர்ற வரைக்கும் நீ என்ன பண்ணுவ?”

“அங்க சுத்துவட்டாரத்துல எதாச்சும் ரெஸ்ட்ராண்ட் இருந்தா அங்க போய் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்... நீ கிளம்புனதும் கால் பண்ணு பிரகி... நம்ம வீட்டுக்கு ஒன்னா வந்துடலாம்”

“டன்” இரு கரங்களின் பெருவிரலையும் உயர்த்திக் காட்டினாள் பிரக்யா.

இங்கே தோழிகள் எப்படியோ சமாளித்துவிட E15 ஃப்ளாட்டிலோ ஷ்ரவன் வேறு விதமான யோசனையைக் கேட்டு கே.கேவை பாடாய்படுத்திக் கொண்டிருந்தான்.

“அவளுக்கு எதாவது கிப்ட் வாங்கிட்டுப் போகணும்னு ஆசையா இருக்கு மச்சி... ஆனா என்ன வாங்கணும்னு தான் தெரியல... ப்ளீஸ்டா எதாச்சும் ஐடியா குடேன்”

“பொண்ணுங்களுக்கு எப்பவும் ஃப்ளார்ஸ் மேல ஒரு கண்ணு... சோ நீ பியூட்டிஃபுல்லா ஒரு ரெட் ரோஸ் பொக்கேவ கிப்ட் பண்ணு”

“பொக்கே குடுக்குறதுலாம் க்ளிச்சேவா இருக்கும்டா... வேற எதாச்சும் புதுசா யோசி கே.கே”

“டேட் போறவன் நீ... உனக்காக நான் புதுசா யோசிக்கணுமா? என்னடா இது பித்தலாட்டமா இருக்கு?”

சலிப்பாக சொல்லிவிட்டு அறைக்குள் கிடந்த பீன்பேக்கில் சரிந்தான் கே.கே.

அவனருகே முட்டியிட்டு அமர்ந்தான் ஷ்ரவன்.

“எனக்குனு இருக்குற ஒன் அண்ட் ஒன்லி ஃப்ரெண்ட் நீ மட்டும் தானே... ப்ளீஸ்டா ஐடியா குடு... என் செல்லம்ல, என் தங்கம்ல, என் கிரிஷ் நல்ல பையன்ல” என்று அவனைக் கொஞ்சினான்.

ஆரம்பத்தில் இயல்பாக சிரித்த கே.கேவின் முகம் கிரிஷ் என்ற பெயரைக் கேட்டதும் இறுகியது.

வேகமாக பீன்பேக்கிலிருந்து எழுந்தவன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

ஷ்ரவன் தான் செய்த தவறு புரிந்து நாக்கைக் கடித்துக்கொண்டான்.

கண்களை மூடியபடி நிற்கும் நண்பனின் தோளில் கை போட்டு “சாரிடா மச்சி... உன்னை கிரிஷ்னு கூப்பிட்டா பழசுலாம் ஞாபகம் வந்துடும்ங்கிறதை மறந்துட்டேன்” என்றான் குற்றவுணர்ச்சியோடு.

கே.கே தன்னை சமாளிக்கப் போராடினான். அதை புரிந்துகொண்ட ஷ்ரவன் அவனைத் தனியே விட்டு நகர்ந்தான்.

ஹாலுக்கு வந்தவன் தனது மடமையை எண்ணி தன்னைத் தானே நொந்து கொண்டான்.

“லூசுத்தனமான காரியத்தைப் பண்ணிட்டியே ஷ்ரவன்... இன்னைக்கு முழுக்க அவனால நிம்மதியாவே இருக்க முடியாது... உன் டேட்டிங்க ஒதுக்கி வச்சிட்டு அவன் கூட இரு” என அவனுக்கு அறிவுறுத்தியது மனசாட்சி.

ஷ்ரவனும் அம்முடிவுக்கு வந்த தருணத்தில் அவன் தோள் மீது படிந்தது கே.கேவின் கரம்.

“மச்சி” என்றபடி திரும்பியவனிடம்

“சோல் மேட் மியூசிக் பாக்ஸ் வாங்கி குடுடா... பொண்ணுங்களுக்கு மியூசிக் பிடிக்கும்” என்றான் கே.கே.

அவனை அணைத்துக்கொண்ட ஷ்ரவன் “ஆர் யூ ஓ.கே?” என்று வினவ

“ஐ அம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என


பதிலளித்தவன் அவனைக் கையோடு அழைத்துச் சென்று மரத்தினாலான மியூசிக் பாக்ஸ் ஒன்றை பரிசாக வாங்கியும் கொடுத்தான்.

“இதுல இருக்குற கீயை திருகுனா பாக்ஸ் உள்ள இருந்து ‘வில் யூ பி மை சோல்மேட்?’னு எழுதியிருக்குற வுட்டன் கார்ட் மியூஸிக்கோட வரும்” என்று சொன்னபடி கிப்ட் ராப் செய்தார் கடைக்காரர்.

பரிசை வாங்கிக்கொண்டு சாக்சனிக்குத் திரும்பிய போது மாலையாகிவிட்டது. ஷ்ரவன் கே.கேவிடம் மாத்திரை போட்டுவிட்டு ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு பிரக்யாவுடனான டேட்டுக்கு ஆயத்தமானான்.

வெண்ணிற டீசர், ஆகாயநீலவண்ண கேஸ்வல் ஷேர்ட், டெனிம் பேண்ட் அணிந்து கையில் பரிசுடன் நின்றவனிடம் வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தான் கே.கே.

அவன் கிளம்பியதும் மாத்திரையின் உபயத்தால் கண்கள் உறக்கத்திற்கு ஏங்க ஆரம்பிக்க படுக்கையில் விழுந்தவன் உறங்கிப் போனான்.

சில மணித்துளிகள் அமைதியான நித்திரையாக நீண்ட உறக்கம் திடீரென கொடுங்கனவுகளோடு கூடிய சோதனையாக மாறியது.

கனவு போல இல்லாமல் கண் முன்னே நடப்பது போல நிகழ்வுகள் வரிசையாக அரங்கேறின.

அந்தக் கனவில் கே.கே முகமெங்கும் பதற்றமும் பயமும் சூழ நின்று கொண்டிருந்தான்.

அவனுக்கு முன்னே ‘Don’t cross’ என்ற வெள்ளை எழுத்துகள் எழுதப்பட்ட சிவப்பு பாலீதீன் நாடா கட்டப்பட்டிருந்தது.




தூரத்தில் இருந்து ஒரு குரல் “சார்! தலை தெரியுது” என்க அந்த நாடாவைத் தாண்டி ஓடினான் அவன்.

“சார் நில்லுங்க... அங்கல்லாம் நீங்க போகக்கூடாது”

யாரோ அவனைத் தடுக்க பின்னே ஓடி வந்தார்கள். ஆனால் அவர்கள் தடுக்கும் முன்னர் குரல் வந்த இடத்தை அடைந்துவிட்டான் கே.கே.

அங்கே சேறும் சகதியுமாக மலை போல குவிந்து கிடக்க அதனுள் இருந்து தெரிந்தது சிகையோடு கூடிய மனித தலை ஒன்று.

மெதுவாக அந்த சேறு சகதியை அகற்றிய பிறகு அவற்றின் நடுவே மூடிய விழிகளோடு ஒரு ஆண்மகனின் முகம் தெரிந்தது.

அதைக் கண்டதும் மின்சாரம் தாக்கியது போல துடித்துப் போய் நின்றான் கே.கே.

“சார் நீங்க இங்கலாம் வரக்கூடாது” என காவல்துறை அதிகாரி ஒருவர் தடுக்க அதை பொருட்படுத்தாமல் அந்த சேற்றுக்குவியலின் அருகே சென்றான்.

“ஒரு வாரம் பெஞ்ச மழையால சகதிக்குள்ள மாட்டுன பாடி அழுக ஆரம்பிச்சிடுச்சு சார்” என யாரோ கூறினார்கள்.

மெதுவாக துர்நாற்றம் நாசியை நெருட ஈரத்தில் ஊறி ஊதிப்போன அந்த ஆண்மகனின் சடலத்தை அருகே பார்த்ததும் கே.கேவின் இதயம் வெடிக்க “நீரவ்வ்வ்” என்ற அலறலோடு அதை எடுக்க ஓடினான் அவன்.

“சார் பாடிய தொடக்கூடாது” என காவலர்கள் தடுக்க

“என்னை விடுங்க... அவன் ஒன்னும் பாடி இல்ல.. நீரவ்” என்று திமிறினான் கே.கே.

“என்னை விடுங்க... என்னை விடுங்க” என கை கால்களை முறுக்கியவனுக்கு உணர்வு வந்த போது தான் மெத்தை மீது கிடக்கிறோம் என்பதே புரிந்தது.

விருட்டென எழுந்து அமர்ந்தவனுக்கு உறக்கமும் கனவும் கலைந்துவிட்டது.





உடலில் வியர்வை பெருகியிருக்க தலை விண்விண்னென வலித்தது. வலித்த தலையைப் பிடித்துக்கொண்டவன் “நான் தடுத்தும் நீ அங்க போயிருக்கக்கூடாது நீரவ்” என்று சொன்னபடியே அழ ஆரம்பித்தான்.

ஆண்கள் அழக்கூடாது என்ற சமுதாயத்தின் வெட்டிக்கோட்பாட்டைச் சுக்குநூறாக உடைத்துக்கொண்டு அவனது விழிகள் கண்ணீர் மழையைப் பொழிய ஆரம்பித்தன.

Comments