அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 11



“இந்த உலகத்துல மாறாத ஒன்னுனா அது மாற்றம் மட்டும் தான். மனுசங்களோட எண்ணவோட்டங்களும் கொள்கை கோட்பாடுகளும் கூட காலப்போக்குல மாறக்கூடியது தான். டீனேஜ்ல நமக்குப் பிடிச்ச பொண்ணை ஃபாலோ பண்ணி போறது ஜாலியா இருக்கும், அதுல என்ன தப்பிருக்குனு கூட தோணும். ஆனா வளர்ந்ததுக்கு அப்புறம் தான் சிவிலைஸ்ட் சொசைட்டில ஸ்டாக்கிங் எவ்ளோ பெரிய க்ரைம்னு புத்தியில உறைக்கும். அதுக்கு அப்புறம் ஒரு பொண்ணை நமக்குப் பிடிச்சாலும் ஃபாலோ பண்ணாம எப்பிடி அவளை கண்ணியமா அப்ரோச் பண்ணலாம்னு நம்ம மைண்ட் யோசிக்க ஆரம்பிச்சிடும். இப்பிடி ஒரு காலத்துல நமக்குப் பிடிச்ச விசயங்களோட சாதக பாதகங்களை அனலைஸ் பண்ணி, அது தப்புனா மாத்திக்கிற பக்குவம் நமக்கு வரலைனா மனசளவுல நம்ம வளரவே இல்லனு அர்த்தம்”

                                              -கே.கேவின் மனதின் குரல்

ஒய்ட் ராக் லேக் பகுதி...

ஒய்ட் ராக் க்ரீக் என்ற சிற்றோடையானது ஒய்ட் ராக் ஏரியாக விரிவடைந்து கிழக்கு டல்லாஸில் கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓடிக்கொண்டிருக்கிறது. டிரினிட்டி நதியின் துணை நதிகளில் இந்த ஒய்ட் ராக் ஏரி மிகவும் முக்கியமானது.

அரிய வகை தாவரங்கள் மற்றும் பறவைகளுக்குப் புகலிடமாக விளங்கும் இந்த ஒய்ட் ராக் லேக் என்ற ஏரியில் சைக்ளிங், மீன் பிடித்தல், பேர்ட் வாட்சிங், நடைபயிற்சி என மக்களின் ஓய்வு நேரத்தை உபயோகமாக்கும் அனைத்து வசதிகளும் இருந்தன.

அது போக படகு சவாரி வசதியும் அங்குண்டு. அந்த ஏரியின் கரையோரமாக கிடந்த கருப்புவண்ண பெஞ்சில் அமர்ந்திருந்தனர் ஷ்ரவனும் பிரக்யாவும்.


இருவருக்குமிடையே ஷ்ரவன் வாங்கி வந்த மியூசிக் பாக்ஸ் கிப்ட் ராப் செய்யப்பட்டு அமர்ந்திருந்தது.

அவர்களிடமிருந்து சில அடிகள் தொலைவில் ஏரிக்குள் செல்லும் மரப்பாலத்தில் அமர்ந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தது ஒரு குடும்பம். குழந்தைகள் அங்கிருந்த நடைபாதையில் இருந்த காட்டுச்செடிகளின் மலர்களை பறித்து நதியில் வீசி விளையாடிக்கொண்டிருந்தனர்.

அக்காட்சியை ஷ்ரவனிடம் காட்டினாள் பிரக்யா.

“இந்தியன் பீபிள் வெஸ்டர்ன் கண்ட்ரீஸ்ல வாழுற மக்களுக்கு குடும்பம்ங்கிற அமைப்போட அருமை தெரியுறதில்லனு சொல்லுவாங்க... லைக் நட்சத்திரம் எல்லாமே நைட் மட்டும் தான் வரும்ங்கிற மாதிரி... பட் வீ ஆல் நோ, சன் இஸ் ஆல்சோ அ ஸ்டார்... இந்த மாதிரி பொதுவா முத்திரை குத்துறவங்க இந்த சீனை பாக்கணும்”

“ஜெனரலைசேஷன் ஒரு கொடுமையான வியாதி... அதுக்கு யாரும் விதிவிலக்கு இல்ல”

ஷ்ரவன் தோளைக் குலுக்கவும் பிரக்யாவும் அதை ஆமோதித்தாள். அவள் தலையாட்டுவதைக் கண்டதும் குபீரென சிரித்தான் அவன்.

“இப்ப ஏன் சிரிக்குற?”

“நாட் அ பிக் டீல்... நம்ம இங்க எதுக்கு வந்தோம், பட் இப்ப என்ன பண்ணிட்டிருக்குறோம்னு யோசிச்சேன்... சிரிப்பு வந்துடுச்சு”

பிரக்யாவும் அதை கேட்டு புன்னகைத்தாள். சிரிப்பில் விரிந்த இதழ்களில் மயங்கிய மனதை அரும்பாடு பட்டு கட்டுப்படுத்தினான் ஷ்ரவன்.

தங்கள் இருவருக்கும் இடையே இருந்த பரிசை அவளிடம் நீட்டினான்.

“திஸ் இஸ் ஃபார் யூ”

பிரக்யா ஆவலோடு வாங்கி பிரித்துப் பார்த்தவள் அதிலிருந்த மியூசிக் பாக்சை கண்டதும் ஆர்வத்தோடு அதன் கீயை முறுக்கினாள்.



அடுத்த நொடி அதனுள்ளிருந்து ‘வில் யூ பி மை சோல்மேட்?’ என்ற வாக்கியத்தோடு மரத்துண்டு ஒன்று இசையோடு மேலெழுந்தது.

அதையும் அதை கொடுத்தவனையும் மாறி மாறி பார்த்தாள் பிரக்யா.

“ஐ அண்டர்ஸ்டாண்ட், டேட்டிங்னு கூட்டிட்டு வந்தவன் இப்பிடி சிக்கலான கேள்வியை கேக்குறானேனு உனக்குத் தோணும்... பட் ஐ காண்ட் கண்ட்ரோல் மைசெல்ஃப்... கே.கே, எங்கப்பாவை தவிர வேற யாரையும் நான் என் சர்க்கிள்குள்ள கொண்டு வந்ததில்ல... கேஸ்வலா பேசுறது பழகுறது மட்டும் தான்... ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ணு என் கூட லைஃப் லாங் ட்ராவல் பண்ணுனா நல்லா இருக்கும்னு யோசிக்குறேன்... அது நீயா இருந்தா இன்னும் நல்லா இருக்கும் பிரகி... என்னடா டேட்டிங்னு சொன்னவன் இப்ப ப்ரபோஸ் பண்ணுறானே, இவனை நம்பலாமா வேண்டாமானு உனக்குக் குழப்பம் வருதுல்ல”

இல்லை என்பது போல தலையசைத்தாள் பிரக்யா. அதில் ஷ்ரவனின் முகம் பளிச்சிட்டது.

“குழப்பமெல்லாம் இல்ல... எனக்கு ஒரு கன்ஃபர்மேஷன் தேவைப்படுது”

“என்ன கன்ஃபர்மேஷன்?”

“இது வரைக்கும் உன்னோட பழக்கவழக்கம் எப்பிடி வேணும்னாலும் இருந்திருக்கலாம்... பட் இனிமே என்னைத் தவிர வேற எந்த பொண்ணு கிட்டவும் ஃப்ளர்ட் பண்ணுறது, கடலை போடுறது, டயலாக் பேசுறதுலாம் நடந்துச்சுனா...” என கூறிக்கொண்டே அவள் ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்ட அந்த விரலோடு சேர்த்து கையையும் பற்றிக்கொண்டான் ஷ்ரவன்.

“அப்பிடி ஒரு இன்சிடெண்ட் நடக்க வாய்ப்பே இல்ல... ஐ ப்ராமிஸ், நோ ஒன் கேன் கம் இன் பிட்வீன் அஸ்” என்றான் அவன்.

பிரக்யா புன்னகைக்கவும் “நம்மளும் அங்க போய் உக்காரலாமா?” என்று நதிக்குள்ளிருந்த மரப்பாலத்தைக் காட்டினான் அவன்.

இருவரும் அந்தப் பாலத்தில் அமர்ந்து நதியில் காலை அலைந்தபடி பேச ஆரம்பித்தனர்.

நேரம் எப்படி போனதோ தெரியவில்லை, இருளும் வந்துவிட கிளம்பலாமா என்று கேட்டாள் பிரக்யா.

ஷ்ரவனோ “அதுக்குள்ளவா? டேட்டிங் வந்தோம்னு தான் பேர்... இட்டாலியன் ரெஸ்ட்ராண்ட்ல நல்லா சாப்பிட்டுட்டு இங்க வந்து கதை பேசுனோம்... நீ என் பக்கத்துல உக்கார கூட இல்ல” என்று குறைபட்டான்.

பிரக்யாவோ தங்களிடையே இருந்த இடைவெளியைப் பார்த்து நகைத்தாள்.

“கொஞ்சம் பக்கத்துல வந்து உக்காந்தா நான் சந்தோசப்படுவேன்... அப்பிடியே தோள்ல சாஞ்சா டபிள் சந்தோசம்” என்றபடி அவனே அவளருகே வந்து அமர பிரக்யா தள்ளி அமர்ந்தாள்.

ஷ்ரவன் விசமப்புன்னகையோடு அவளைப் பார்த்தான்.

“இந்த ஒயிட் ராக் லேகை பத்தி ஒரு அர்பன் லெஜண்ட் (Urban Legend) உண்டு... நீ கேள்விப்பட்டிருக்கியா?” என அவன் கேட்க பிரக்யா இல்லையென தலையசைத்தாள்.

“அச்சச்சோ... ஒட்டுமொத்த டல்லாஸ்கே தெரிஞ்சது உனக்குத் தெரியாம போயிடுச்சே” என்று உச்சு கொட்டினான் அவன்.

“இப்ப தெரிஞ்சிக்கிறேன்... சொல்லு” என்ற பிரக்யா ஆவலோடு அவன் கூறுவதை கேட்க தயாரானாள்.

“நைட் நேரம் இங்க இருக்குற ஈஸ்ட் லாதர் ட்ரைவ்ல ஒரு பொண்ணு ஈரமான ஒயிட் கவுன் போட்டுட்டு போற வர்ற காரை நிறுத்துமாம்... கார்ல போறவங்க இறங்கி லிப்ட் குடுத்தா பின் சீட்ல போய் உக்காந்துக்குமாம்... அப்புறம் இறங்க வேண்டிய இடம் வந்ததும் கார் ஓனர் திரும்பிப் பாத்தா பின் சீட் ஈரமா இருக்குமாம்... ஆனா அந்தப் பொண்ணு அங்க இருக்க மாட்டாளாம்... அவளை ‘தி லேடி ஆப் ஒயிட் ராக் லேக்’னு சொல்லுவாங்க”

அவன் கூறி முடித்ததும் பிரக்யாவின் கண்களில் சிறு பீதி. ஆனால் அதை மறைத்துக்கொண்டு “அர்பன் லெஜண்ட்னாலே பொய் கலந்த பேய் கதை தானே... இதுவும் பொய்யா தான் இருக்கும்” என்றாள் அலட்சியமாக.

“நீ நம்பலனா போ... நைண்டீன் தேர்ட்டீஸ்ல அந்தப் பொண்ணு இந்த ஏரில போட்டிங் போனப்ப தவறி விழுந்து இறந்துட்டாளாம்... அவ தான் டெய்லி நைட் பேயா வருவானு அர்பன் லெஜண்ட் சொல்லுது... யாருக்குத் தெரியும், நம்ம காலை கூட அவ ஏரிக்குள்ள இருந்து பிடிச்சு இழுக்கலாம்” என்று அவன் பயமுறுத்தும் குரலில் சொல்லவும் பிரக்யா கதி கலங்கி போனாள்.



மெதுவாக தனது கண்களால் சுற்றுபுறத்தை அலச ஆரம்பித்தாள்.

அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே நின்ற பெரிய விருட்சங்கள் எல்லாம் பூதங்கள் போல தோற்றமளித்தது. அங்கே இருந்த விளக்குக்கம்பத்திலிருந்து கசிந்த ஒளியில் மினுமினுத்த ஏரியின் நீர் இப்போது பயங்கரமாக தோன்றியது.

மெல்லிய குளிர்க்காற்று வீசவும் மருண்டவளிடம் “அங்க பாரு... ஒயிட் கவுனோட ஒரு பொண்ணு நடந்து வர்றா” என்று கிழக்கு திசையைக் காட்டினான் ஷ்ரவன்.

பிரக்யாவோ அங்கே பார்க்க பயந்தவளாக அவனை நெருங்கி அமர்ந்தவள் “நான் எதையும் பாக்க மாட்டேன்... என்னை எப்பிடியாச்சும் இந்த இடத்துல இருந்து கூட்டிட்டுப் போயிடு” என்று கண்களை மூடிக்கொண்டாள்.

“எப்பிடியாச்சும்னா எப்பிடி?” என்று வேண்டுமென்றே எழுந்தவன் அவளை விட்டு நகர எத்தனிக்க அவனது காலடியோசை கேட்டு கண் விழித்தாள் பிரக்யா.

தனியே விட்டு செல்பவனிடம் ஓடோடி வந்தவள் “உன்னை நம்பி டேட்டிங் வந்ததுக்கு இப்பிடி பேயும் பிசாசும் நடமாடுற இடத்துல என்னைத் தனியா விட்டுட்டு ஓடுறியா?” என்றபடி அவனது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

ஷ்ரவன் பக்கென்று நகைக்கவும் “ஐயோ இவன் சிரிக்குறது கூட பேய்ச்சிரிப்பு மாதிரி இருக்குதே” என்று வாய் விட்டு அவள் புலம்பினாள்.

“சிரிக்குறத விட்டுட்டு தயவு பண்ணி என்னை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடு” என்றவளை அணைத்தபடி அங்கிருந்து வெளியேறினான் ஷ்ரவன்.

இருவரும் வெளியே வந்து மீண்டும் இட்டாலியன் ரெஸ்ட்ராண்டை அடைந்த போது அங்கே பிரக்ருதி பாஸ்தாவை மென்று கொண்டிருந்தாள்.

அவர்களைக் கண்டதும் “என்னப்பா டேட்டிங்லாம் சிறப்பா முடிஞ்சுதா? பிரகி ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்குறா? ஹலோ, என் ஃப்ரெண்டை என்ன பண்ணுன மேன்?” என்று ஷ்ரவனை மிரட்டியபடி அமர இருக்கைகளை இழுத்துப் போட்டாள்.

“இனிமே இவன் கூட நான் எங்கயும் போகமாட்டேன்டி... இவன் ரொம்ப மோசம்” என்று அமர்ந்ததும் குற்றம் சாட்ட துவங்கினாள் பிரக்யா.

உடனே பிரக்ருதி ஷ்ரவனை முறைத்தாள்.

“முறைக்காதம்மா... அவ சொன்னதை நீ தப்பான அர்த்தத்துல புரிஞ்சிக்கிட்ட... ஒயிட் ராக் லேகை பத்தி ஒரு அர்பன் லெஜண்ட் உண்டு... அதை சொன்னதும் உன் ஃப்ரெண்ட் பயந்துட்டா”

“டேட்டிங் போன இடத்துல பேய் கதை பேசுனவன் நீயா தான் இருப்ப... அட போங்கயா” என்று சலிப்பாகச் சொன்னவள் இருவருக்கும் மோஜிட்டோ ஆர்டர் செய்தாள்.

“எனிஹவ், நாளைக்கு நானும் டேட்டிங் போறேன்” என்று அறிவித்தவள் பாஸ்தாவை முட்கரண்டியால் குத்தி வாயிலிட்டுச் சுவைத்தாள்.



அதை கேட்டதும் இருவரது முகத்திலும் ஆச்சரியம்.

“என்ன பாக்குறிங்க?” என்றவள் தனது மொபைலில் இருந்த நிஷாந்தின் புகைப்படத்தைக் காட்டினாள்.

“இவன் நிஷாந்த் அகர்வால்... டூ வீக்ஸுக்கு முன்னாடி டிண்டர்ல பேச ஆரம்பிச்சோம்” என ஆரம்பித்தவள் கே.கேவிடம் சொன்ன புராணத்தை ஒரு வரி விடாது அவர்களிடமும் ஒப்பித்தாள்.

பிரக்யா ரிசார்ட் என்றதும் யோசித்தாள்.

“ரிசார்ட்டுக்குலாம் போகணுமா கிருதி? எனக்கு என்னமோ தப்பா படுதுடி”

ஷ்ரவன் அதிலென்ன தவறு இருக்கிறது என்று கேட்டு மோஜிட்டோக்கள் வரவும் அதை வாங்கிக்கொண்டான்.

பிரக்ருதியும் அதானே என்பது போல பார்க்க பிரக்யாவோ அவர்களுக்குப் புரிய வைக்க சில பாயிண்ட்களை அடுக்க ஆரம்பித்தாள்.

“ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ணு கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும்னு நினைக்குறவன் ஏன் ரிசார்ட்டுக்குக் கூப்பிடுறான்? டல்லாஸ்ல எவ்ளோ ரெஸ்ட்ராண்ட்ஸ் இருக்கு... அங்க டைம் ஸ்பெண்ட் பண்ணுனாலே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம்... இன்னொரு ரீசன் நீ அவனை டிண்டர்ல மட்டும் தான் பாத்திருக்க... அவன் ரிச்சா இருக்கலாம்... பட் அவனோட குணம் என்ன? எப்பிடிப்பட்டவன்னு உனக்குத் தெரியுமா? எந்த நம்பிக்கையில நேர்ல இது வரைக்கும் பாக்காத ஒருத்தனை நம்பி ரிசார்ட்டுக்குப் போற?”

இப்போது பிரக்ருதியும் சற்று யோசித்தாள். ஷ்ரவனோ பிரக்யாவின் வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

“நீ இன்னும் தமிழ்நாட்டுல இருக்குற ஃபீல்லயே பேசுற பிரகி... அந்தப் பையனோட ஃபேமிலி தாத்தா காலத்துலயே யூ.எஸ்ல செட்டில் ஆனவங்க... அவனுக்கு இது தப்பா தோணிருக்காது”

“என்னமோ போ... என்னால இதை அக்சப்ட் பண்ணிக்க முடியல... பட் இது உன்னோட லைஃப்... உன் சாய்ஸ் பெஸ்டா இருந்தா நான் அதுக்கு குறுக்க வரமாட்டேன்”

பிரக்ருதி குழப்பத்தோடு உம் கொட்டினாள். பின்னர் மூவரும் சாப்பிட்டு முடிக்கவும் ஷ்ரவன் அவர்களிருவரும் டாக்சி ஏறும் வரை காத்திருந்துவிட்டு தனது காரில் சாக்சனியை நோக்கி கிளம்பினான்.

அவர்களுக்கு முன்னரே வீடு திரும்பியவனின் மனமெங்கும் டேட்டிங் தருணங்கள் நிறைந்திருந்தது. இது அனைத்தும் ஃப்ளாட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழையும் வரை தான்.

அங்கே நுழைந்ததும் ஹாலில் கலங்கிப் போன முகத்தோடு அமர்ந்திருந்த கே.கேவைக் கண்டதும் அனைத்தையும் மறந்து “என்னாச்சு மச்சி?” என்றவாறு அவனை நோக்கி ஓடினான்.

ஷ்ரவனைக் கண்டதும் எழுந்தவன் நண்பனை அணைத்துக்கொண்டான்.

“நீரவ் என் கனவுல வந்தான் ஷ்ரவன்”

அதை கேட்டதும் ஷ்ரவனும் சோகமாகிவிட்டான்.

“முடிஞ்ச எதையும் நம்மளால மாத்த முடியாது கே.கே... நீ அழுதாலும் அவன் திரும்பி வரமாட்டான்”



“என்னால தான் அவன் இறந்தான் ஷ்ரவன்... நான் நினைச்சிருந்தா அவனைத் தடுத்திருக்க முடியும்... அவன் இறந்ததுக்கு அவரும் அவளும் மட்டும் காரணமில்ல... நானும் தான் ஷ்ரவன்”

“நீ தேவையில்லாம உன்னை குத்தம் சொல்லாத கே.கே... நீரவ் இறந்ததுக்கு அவனோட அப்பாவும் அந்தப் பொண்ணும் மட்டும் காரணமில்லனு எனக்கும் நல்லா தெரியும்... அதுக்குத் தூண்டுதலா இருந்தவன் அந்த துரோகி... அவன் கூட இருந்து திட்டம் போட்டு குழி பறிச்சவன் அவனோட அப்பன்... அவங்க ரெண்டு பேரையும் நம்பி சொந்த மகனை கைவிட்ட நீரவோட அப்பாவும் அந்தப் பொண்ணும் ரெண்டாங்கட்ட துரோகிகள் தான்டா”

“எனக்கு அவர் கால் பண்ணுனார் ஷ்ரவன்”

“எதுக்கு கால் பண்ணுனார்? என்ன விசயம்? மறுபடியும் உன்னை ப்ளேம் பண்ணுனாரா? லாஸ்ட் டைம் ஆர்லிங்டன் வந்தப்ப எனக்குக் கால் பண்ணி உன்னை பாக்கணும்னு சொன்னாருடா... உன் நிம்மதிய ஏன் கெடுக்கணும்னு நானே நேர்ல போய் பாத்து பேசிட்டு வந்தேன்... அவருக்கு இப்ப என்னவாம்?”

“நாளைக்கு நீரவோட ஃபர்ஸ்ட் இயர் டெத் அனிவர்சரி”

அதை கேட்டதும் ஷ்ரவனும் ஸ்தம்பித்து நின்றான்.

“எல்லாம் நடந்து முடிஞ்சு ஒரு வருசம் ஓடிடுச்சுல்ல... முடியலைடா ஷ்ரவன்”

சொல்லி முடித்ததும் விம்மி அழ ஆரம்பித்தான் கே.கே.

அவனை தன்னோடு அணைத்துக்கொண்டான் ஷ்ரவன். அவன் கண்களிலும் கண்ணீர். அதை விழுங்கிக்கொண்டவன்

“விடு மச்சி... நீ சாப்பிட்டியா? வா! சாப்பிட்டுட்டு டேப்ளட் போட்டு தூங்கு... நாளைக்குப் பேசிக்கலாம்” என்றபடி அவனை உணவு மேஜையில் அமரச் சொன்னான்.

சூடாக பேன் கேக் தயார் செய்து அவன் முன்னே வைத்தவன் “சாப்பிடு” என்க

“நீ?” என கேட்டான் கே.கே.

“நான் சாப்பிட்டுட்டேன் மச்சி”

கே.கே மௌனமாக சாப்பிட்டான். பின்னர் ஷ்ரவன் நீட்டிய மாத்திரைகளை விழுங்கியவன் தனது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான்.

“டோண்ட் லாக் த டோர் மச்சி”

ஷ்ரவன் அதட்டவும் கதவின் தாழை திறந்தவன் “நான் சூசைட் பண்ணிக்க மாட்டேன்டா... பயப்படாத” என்றான்.

“என் ரூம்ல ஹீட்டர் வேலை செய்யல... நானும் உன் ரூம்ல தான் தூங்கணும்... அதுக்குத் தான் லாக் பண்ணாதனு சொன்னேன் பிரகஸ்பதியே” என ஷ்ரவன் கேலி போல கூறவும் அவன் முகத்தில் புன்னகை உதயமானது.

“இதே சிரிப்போட தூங்கு போ... குட் நைட்”

“குட் நைட் ஷ்ரவன்”

அவன் சென்றதும் ஃப்ளாட்டின் கதவை உட்பக்கம் தாழிடப்போனவன் அழைப்புமணி ஒலிக்கவும் கதவைத் திறந்தான்.

வெளியே பிரக்ருதி நின்று கொண்டிருந்தாள்.

“நான் கே.கே கிட்ட கொஞ்சம் பேசணும்”

“அவன் இப்ப தான் டேப்ளட் போட்டுட்டு தூங்க போனான் போனான் கிருதி”

“டேப்ளட்டா? எதுவும் பிரச்சனையா?” என கவலையாய் கேட்டாள் அவள்.

“பிரச்சனை எதுவுமில்ல... தூக்கம் வரலைனு சொன்னான்... வேற ஒன்னுமில்ல”

“ஓ.கே... நான் அவனை தொந்தரவு பண்ணல... நீயும் போய் தூங்கு... குட் நைட்” என்றவள் சென்றுவிட ஷ்ரவனும் கதவைத் தாழிட்டான்.

அவனது மனமெங்கும் கே.கேவின் பேச்சே எதிரொலித்ததால் பிரக்ருதியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை அவன் கவனிக்கவில்லை.

Comments