அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 12

 


“அழகுக்குப் பின்னாடி எப்பவும் ஆபத்து ஒளிஞ்சிருக்கும். வைரம் எவ்ளோ அழகானது, ஆனா அந்த வைரத்தால ஒருத்தர் உயிரைக் குடிக்க முடியும். பாம்பு பாக்குறதுக்கு பளபளனு இருக்கும். ஆனா அதோட விஷம் கண நேரத்துல ஒருத்தரை கொன்னுடும். இதெல்லாம் எக்சாம்பிள்ஸ் தான். அழகு மட்டுமில்ல, நம்மளை புத்தி தடுமாற வைக்குற ஒவ்வொரு விசயத்துக்குப் பின்னாடியும் ஆபத்து கட்டாயம் இருக்கும். இதை ஒருத்தர் சொல்லி நம்ம புரிஞ்சிக்கிறதை விட அனுபவத்தால புரிஞ்சிக்கிட்டோம்னா அந்த ஆபத்துல சிக்கிக்காம சுதாரிச்சுப்போம்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ், மோண்ட்ஃபோர்ட் ட்ரைவ்...

ஸ்ட்ரெய்டனிங் செய்த கூந்தலை மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து திருப்தியானாள் பிரக்ருதி.

சற்று முன்னர் தான் நிஷாந்திடமிருந்து அழைப்பு வந்திருந்தது. எப்போது வருவாயென கேட்டவனிடம் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக கூறியிருந்தாள் பிரக்ருதி. காரணம் பிருத்வி.

டேட்டிங் பற்றியெல்லாம் அவள் இன்னும் அவனிடம் கூறவில்லை. பிரணவிக்கும் இது எதுவும் தெரியாது. இருவருக்கும் தெரிந்தால் கட்டாயம் இப்படி தனியாக செல்ல ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது பிரக்ருதியின் எண்ணம்.

பிரக்யாவும் அதையே கூறினாள்.

“பார்ட்டிக்குப் போறதுக்கே அண்ணா ஆயிரம் கண்டிஷன் போடுவான்... டேட்டிங் பத்தி மட்டும் தெரிஞ்சா உன்னை சென்னைக்கு பேக் பண்ணி அனுப்பி வச்சிடுவான்... நீயும் நிஷாந்தும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு விரும்ப ஆரம்பிச்சதுக்கு அப்புறமா சொல்லிக்கலாம்”

“நான் பண்ணுறது தப்புனு தோணுச்சுனா சொல்லிடு பிரகி”

“இதுல சரி தப்பு எதுவும் இல்லடி... போய் பேசி பாரு.. நான் உனக்கு குடுக்குற அட்வைஸ் ஒன்னே ஒன்னு தான்... பணக்காரனை கல்யாணம் பண்ணிக்கிட்டா லைஃப் எந்தப் பிரச்சனையும் இல்லாம போகும்ங்கிற உன்னோட எண்ணம் தப்பில்ல... அதுக்காக மத்த விசயத்தை மறந்துடாத... அவனுக்கு உன் மேல உண்மையாவே விருப்பமிருக்குதா, அவனோட குணம் என்ன, ஒழுக்கமானவனா இதையெல்லாம் பத்தி தெரிஞ்சிக்கிட்டு அப்புறமா தான் முடிவெடுக்கணும்”

பிரக்யா கூறிய அறிவுரையை மனதில் பதிய வைத்துக்கொண்டவள் இதோ கிளம்பியும் விட்டாள்.

செல்லும் முன்னர் கே.கேவிடம் பேசிவிட்டுக் கிளம்பலாமென E13 ஃப்ளாட்டை பார்த்தவளுக்கு மூடிய கதவு தரிசனம் கிடைக்கவும் வேறு வழியின்றி கிளம்பினாள்.

நிஷாந்த் அவளை வரச் சொல்லியிருந்த ஆபர்க் ரிசார்ட் அமைந்திருந்த ஆஸ்டினுக்கு கேபில் சென்று இறங்கினாள்.

ஆபர்க் ரிசார்ட்டானது மேன்சன், அறைகள் என இரு வகையாக கட்டமைக்கப்பட்டது. இரண்டுக்கும் பொதுவாக லுட்டீஸ் கார்டன் என்ற ரெஸ்ட்ராண்ட் இருந்தது.

ரிசார்ட்டின் முன்னே இறங்கியதும் நிஷாந்த் அவளுக்காக காத்திருந்தான்.

அவனை இது வரை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருந்தவள் நேரில் கண்டதும் அவன் டிண்டரில் பதிவிட்ட எதுவும் ஃபில்டர் போடாத புகைப்படங்கள் என்பதை புரிந்து கொண்டாள்.

வட இந்திய இளைஞர்களை நினைவுறுத்தும் வாட்டசாட்டமான தோற்றம், கோல்கேட் புன்னகை, இலகுவான உடல்மொழி என பார்க்கும் போதே மனம் என்னமோ இவன் எனக்குப் பொருத்தமானவன் தான் என்று கூறியது.

தோற்றத்தைக் கண்டு ஒருவரை பற்றி கணிப்பது முட்டாள்தனம். அதை இன்னு சில மணித்துளிகளில் பிரக்ருதியும் புரிந்து கொள்வாள்.



“ஹாய்” என்று கையசைத்தவன் சாய்ந்திருந்த மெக்லாரன் 765LT காரின் பளபளக்கும் கருமைவண்ணம் அவனது செல்வச்செழிப்பை பிரக்ருதிக்குச் சொல்லாமல் சொன்னது.



“ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறிங்களா?” என்றவளிடம்

“ஜஸ்ட் ஹாஃப் அண்ட் ஹவர்” என்று சிரித்தபடி கூறிய நிஷாந்த் அவளை அணைக்க வர பிரக்ருதியோ சங்கடத்துடன் விலகினாள்.

அவளது விலகலில் ஒரு நொடி முகம் சுளித்தவன் பிரக்ருதி தன்னை பார்க்கும் முன்னர் முகபாவத்தை மாற்றிக்கொண்டான்.

“ரெஸ்ட்ராண்ட் போய் சாப்பிட்டுட்டே பேசலாமா?” என்றான்.

“ஒய் நாட்?” என்றபடி அவனோடு சென்றவளிடம் அவளது அழகை பற்றிய பிரலாபங்களை அவன் எடுத்து விடவும் முன்பை விட தர்மசங்கடமாக உணர்ந்தாள் பிரக்ருதி.

எடுத்ததும் அவளது அழகை புகழ்ந்தவன் அதோடு நிறுத்தியிருந்தால் பிரக்ருதியின் தர்மசங்கடம் அதோடு தீர்ந்திருக்கும். ஆனால் அவனோ அவளை லேசர் பார்வை பார்த்தபடி அமர்ந்தான்.

“உன் பாடி ஸ்ட்ரெக்சருக்கு நீ க்ராப் டாப்பும், மைக்ரோ மினி ஸ்கர்ட்டும் போட்டா செம ஹாட்டா இருப்ப”

அக்கணம் பிரக்ருதியும் உடல் கூசியது என்னவோ உண்மை. என்ன இவன் இப்படி பேசுகிறான் என்று எரிச்சலுற்றவளிடம் “நீ அவன் பணக்காரன்னதும் யோசிக்காம டேட்டிங் வந்தல்ல, இப்ப அனுபவி” என்று கேவலமாக கழுவி ஊற்றியது மனசாட்சி.

அவள் ஒன்றும் அதிநாகரிக ஆடைகளுக்கு விரோதி இல்லை. அவற்றை அணிபவர்கள் மோசமானவர்கள் என்று எண்ணும் அளவுக்கு பத்தாம்பசலியும் இல்லை.

ஆனால் ஆடை அணிவது அவரவர் வசதிக்காகவும் சௌகரியத்துக்காகவும் என ஆணித்தரமாக நம்புபவள். எந்த உடை அவளுக்கு வசதி படுமோ அதை மட்டும் அணியத் தான் விரும்புவாளேயன்றி, அதிநாகரிக ஆடை அணியும் பெண்களை விமர்ச்சிப்பது எல்லாம் பிரக்ருதிக்கு பிடித்தமற்ற காரியம்.

“எனக்கு இந்த ஜீன்சும் ஷேர்ட்டுமே கம்ஃபர்டபிளா இருக்கு நிஷாந்த்... ஹாட்டா தெரியணும்ங்கிறதுக்காக எனக்கு அன்கம்ஃபர்டபிளா இருக்குற ட்ரஸ்சை நான் போடமாட்டேன்”

“ஓ! இன்னும் இந்தியன் டச் மாறலை”

“நீங்க இந்தியன் கேர்ள்சை புரிஞ்சு வச்சிருக்கிறது இவ்ளோ தான்... மைக்ரோ மினி ஸ்கர்ட்டும் க்ராப் டாப்பும் போடுற பொண்ணுங்க அங்கயும் இருக்காங்க... எனக்கு அப்பிடி போட பிடிக்கலங்கிறது என்னோட பெர்ஷ்னல் ஒபீனியன்... அல்ட்ரா மாடர்ன் ட்ரஸ் போட்டா தான் மாடர்ன் கேர்ளா என்ன?”

பிரக்ருதி தோளை குலுக்கி பதிலளிக்க நிஷாந்த் ஏளனமாக புன்னகைத்தான். பாவம்! அதை பிரக்ருதி கண்டுகொள்ளவில்லை.

“அப்ப நீ மாடர்ன் கேர்ள்னு ஒத்துக்கற?”

“அஃப்கோர்ஸ்”



இருவரும் பேசும் போதே நிஷாந்த் ஆர்டர் செய்தவை வந்துவிட சாப்பிட்டபடியே பேச ஆரம்பித்தனர் இருவரும்.

பிரக்ருதி தனது குடும்பம், தன்னுடைய கனவு என அனைத்தையும் அவனிடம் கூற அவனோ தங்களது நிறுவனத்தை மேலாண்மை செய்ய ஆரம்பித்திருப்பதை பற்றி கதை கதையாக கூறினான்.

அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவனிடமுள்ள பணத்தின் அளவை மட்டுமே சுற்றி வந்தது.

“ஆக்ஸ்வலி உனக்காக ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்தேன்” என்றபடி ஒரு சிறு பெட்டியை எடுத்தவன் பிரக்ருதியின் வலது கரத்தைப் பற்றி அவளது சம்மதமின்றி மோதிரம் ஒன்றை போட்டுவிட்டான்.



அவள் திகைக்கும் போதே “சாலிட்டேர் டைமண்ட் ரிங்... உனக்காக தேடிப் பிடிச்சு வாங்குனேன்” என்கவும் பிரக்ருதியின் கண்கள் விரிந்தது.

வெட்டி ஜொலித்த வைரத்தின் முன்னே வேறு எதுவும் அவள் புத்தியில் உறைக்கவில்லை.

“தேங்க்யூ” என்றாள் பூரிப்போடு.

நிஷாந்த் அவளை தலை சரித்து பார்த்துவிட்டு “எனக்கு எதுவும் கிப்ட் கிடையாதா?” என்று கேட்க பிரக்ருதி திணறினாள்.

“இட்ஸ் ஓ.கே... எனக்கு வேணும்ங்கிறதை நானே எடுத்துக்கிறேன்” என்றவன் எழுந்து அவளருகே வர பிரக்ருதி புரியாமல் விழித்தாள்.

நிஷாந்த் அவளது முகமருகே குனியவும் அவன் என்ன செய்யப்போகிறான் என்பது புரிபட அவசரமாக அவனை தள்ளினாள்.

“ஐ டோண்ட் லைக் இட் நிஷாந்த்... நம்ம டேட்டுக்குத் தானே வந்திருக்குறோம்” என்றவளின் முகத்தில் உஷ்ணம் ஏறியது.

நிஷாந்த் ஏமாற்றத்துடன் நின்றான்.

பின்னர் “சாரி” என்று முணுமுணுத்துவிட்டு அவனது இருக்கையில் அமர்ந்தான்.

பிரக்ருதி சற்று பதற்றத்துடன் இருக்கவும் மேஜை மீதிருந்த அவளது கரத்தைப் பற்றியவன்

“ஐ அம் சாரி... என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஜஸ்ட் அ கிஸ்...  உனக்கு அப்பிடி இல்லனு புரியுது” என்கவும்

“என்னைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்க்ஸ்... கடல் கடந்து வந்தாலும் சில விசயங்களை மாத்திக்க முடியலை” என்றாள் அவள்.

அவன் மன்னிப்பு கேட்கவும் நிஷாந்த் மீதான மரியாதை அதிகரித்தது.

பின்னர் இருவரும் விட்ட இடத்திலிருந்து மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்கள்.

பேச்சினிடையே “நான் நமக்காக இங்க இருக்குற மேன்சன் ஒன்னை புக் பண்ணிருக்குறேன்” என்று அவன் கூறவும்

“ஏன்?” என்று கேட்டாள் அவள்.

“இன்னைக்கு நாள் முழுசும் உனக்காக ஸ்பெண்ட் பண்ணுறதா முடிவு பண்ணியாச்சு... எவ்ளோ நேரம் தான் ரெஸ்ட்ராண்ட்லயே இருக்குறது? நமக்குனு மேன்சன் இருந்துச்சுனா அங்க டி.வி பாக்கலாம்... லஞ்ச் அங்க வச்சே முடிச்சிடலாம்” என்றான் அவன்.

பிரக்ருதிக்கும் அவன் மன்னிப்பு கேட்ட பிற்பாடு தவறாக எதுவும் தோன்றவில்லை. எனவே அவனோடு மேன்சன் அறைக்குச் செல்ல சம்மதித்தாள்.

நிஷாந்தோ அவள் வரச் சம்மதித்ததும் மனதுக்குள் மகிழ்ந்தான். இருவரும் சேர்ந்து அறைக்குச் சென்றதும் அனைத்தும் இயல்பாகவே இருந்தது.

நிஷாந்த் அவளது விரலில் இருந்த மோதிரத்தை வருடும் சாக்கில் கையைப் பற்றும் வரை. பிரக்ருதி அவனது கரத்தின் அழுத்தத்தை உணர்ந்து விடுவித்துக்கொள்ள முயன்றாள்.

அவன் விடாமல் இருக்கவும் “லீவ் மை ஹேண்ட் நிஷாந்த்” என்று பேச்சுவாக்கில் இரண்டு மூன்று முறைகள் கூறினாள். அதை அவன் பேச்சு சுவாரசியத்தில் கவனிக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருந்தானா என்று புரியவில்லை.

கையை விடாமல் வைத்திருந்தவன் விரலில் முத்தமிடவும் கையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டாள் பிரக்ருதி.

“ஹேய் வாட் ஹேப்பண்ட்?”

“ஐ டோண்ட் லைக் இட்... நம்ம வெளியே போயிடலாம் நிஷாந்த்”

மனதில் ஏதோ தவறென்று படவும் எழுந்தவள் கதவை நோக்கி வேகமாக நடைபோட்டாள்.



ஆனால் அதற்குள் குறுக்கே வந்த நிஷாந்தோ “கம் ஆன் பேபி... இந்த கேம் எனக்கு போரடிக்குது” என்றபடி அவளை நெருங்க

“என்ன கேம்? நீ பேசுறது புரியல நிஷாந்த்” என பதறி பின்னே செல்ல ஆரம்பித்தாள்.

“யூ ஆர் ப்ளேயிங் ஹார்ட் டு கெட்... இப்பிடி பண்ணுறது தான் இந்தியன் கேர்ள்ஸ் சுபாவம்னு எனக்கு நல்லா தெரியும்... கம் ஆன், டெல் மீ, வாட் யூ வாண்ட்?” என்று கேட்க

“ஆர் யூ க்ரேசி? நான் சீரியஸா சொல்லுறேன், எனக்கு நீ அட்வான்டேஜ் எடுத்துக்குறது பிடிக்கல” என்றாள் பிரக்ருதி சுள்ளென்று.

“பிடிக்கலனா எதுக்கு டேட்டிங் வந்த? லாஸ்ட் டைம் நான் டேட் பண்ணுன பொண்ணு ரொம்ப ஓபன் டைப்... வீ வேர் மேக்கிங் லவ் அட் அவர் ஃபர்ஸ்ட் டேட்.... பட் நீ? ப்ச்! இரிட்டேட் பண்ணாம கிட்ட வா... போக போக யூ வில் லைக் திஸ்” 

அவன் கூறுவதை கேட்டதும் பிரக்ருதியின் முகம் அருவருப்பில் சுளித்துவிட்டது.

“சீ! நான் தான் உன்னோட மனசுல புகுந்த முதல் பொண்ணுனு சொன்ன... பொய் சொன்னியா நீ?” என்று கடுப்பாய் கேட்டாள் அவள்.

“அது உன்னை டேட்டிங் வர வைக்குறதுக்காக சொன்ன பொய்... பேசி டைமை வேஸ்ட் பண்ணாத” என்றபடி அவன் அவளை அணைக்க பிரக்ருதி அவனிடமிருந்து விடுபட போராடினாள்.

“யூ கான்ட் டச் மீ வித்தவுட் மை கன்சென்ட்... யூ இடியட், லீவ் மீ”

அவளை அணைத்தவனோ “இதெல்லாம் இப்ப யோசிச்சு நோ யூஸ்... பணக்காரப்பையன்னதும் வழிஞ்சு பேசி டேட்டிங் வந்தல்ல, அப்ப இதெல்லாம் சகிச்சு தான் ஆகணும்... இன்னைக்கு உன்னோட பெர்ஃபாமன்ஸை பாத்துட்டு தான் உன்னை லைஃப் பார்ட்னரா ஏத்துக்கலாமா இல்லையானு நான் டிசைட் பண்ணுவேன்” என்று கேவலமாக பேச

“பாஸ்டர்ட்” என்றாள் பிரக்ருதி பற்களைக் கடித்தபடி.

சென்சார் செய்ய வேண்டிய கெட்ட வார்த்தை அவள் வாயிலிருந்து வர பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி அவனை விலக்கி நிறுத்தினாள். பின்னரும் அவன் நெருங்க, சமயோசிதமாக யோசித்து இருவரும் நின்று கொண்டிருந்த தரைவிரிப்பிலிருந்து விலகி அதை விருட்டென்று இழுத்தாள்.

அதன் மீது நின்று கொண்டிருந்த நிஷாந்தோ எதிர்பாராமல் நடந்த இச்செயலில் நிலை தடுமாறி விழ அவனது தலை தரையில் இடித்து மயங்கினான்.

பிரக்ருதி அவனை விழச் செய்துவிட்டு தப்பிக்கலாம் என்று எண்ணியே அவ்வாறு செய்திருக்க ஆனால் நடந்ததோ வேறு. விழுந்தவனின் தலையிலிருந்து இரத்தம் வர ஆரம்பிக்கவும் பதறிப்போனாள் அவள்.

என்ன செய்யவென்றே புரியவில்லை. அவனைத் தொட்டுத் தூக்கவோ அருவருவப்பாக இருந்தது.

“கட்டுனா பணக்காரனை தான் கட்டுவேன்னு சபதம் போட்டியே... பாரு இந்தப் பணக்காரனோட லட்சணத்தை... உன் முட்டாள்தனத்துக்கு நீ தண்டனை அனுபவிக்கப் போற கிருதி... இங்க இருந்து நீ தப்பிக்கலாம்... ஆனா இவனை கொலை பண்ண ட்ரை பண்ணுனதா இவன் கம்ப்ளைண்ட் பண்ணுனா நீ என்ன செய்வ? அக்கா, மாமா ரெண்டு பேர் கிட்டவும் சொல்லாம அதிகப்பிரசங்கித்தனமா இவன் கூட தனி ரூம் வரைக்கும் வந்தல்ல, இப்ப அனுபவி” என்று மனசாட்சி பயமுறுத்த பிரக்ருதிக்குப் பயத்தில் கண்ணீர் வந்தது.

“இங்க இருந்து வெளியே போகணும்... ஆனா எப்பிடி போறது? பிரகிக்குக் கால் பண்ணி வரச் சொல்லுவோமா? வேண்டாம், அவ இன்னும் பயந்துடுவா... கே.கே... ஹான், கே.கேக்கு கால் பண்ணுவோம்” என பதற்றத்தில் உளறியபடியே வேகமாக கே.கேவின் எண்ணுக்கு அழைத்தாள்.



“ஹலோ” என அவன் கூறவும்

“நான் தப்பு பண்ணிட்டேன் கிரிஷ்” என அழுகையினூடே பேச ஆரம்பித்தாள் பிரக்ருதி.

அவள் முழுவதும் சொல்லி முடிக்கவும் “நீ பயப்படாத... டென்சன் ஆகாத... நான் அங்க வர்றேன்... அழாத கிருதி” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன் சொன்னபடி அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே வந்து நின்றான்.

கதவு திறக்கவும் திடுக்கிட்ட பிரக்ருதி கே.கே உள்ளே நுழையவும் “கிரிஷ்” என்று அழுதபடியே ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.



“நான் இவனை கொலை பண்ணிட்டேன் கிரிஷ்... என்னை போலீஸ் பிடிச்சிடுவாங்களா? அக்கா மாமாக்குத் தெரிஞ்சா அவங்க நிலமை என்னாகும்? எங்கப்பா... ஐயோ எங்கப்பாக்குத் தெரிஞ்சா நான் செத்தேன்... ஊருல எதாச்சும் குப்பன் சுப்பனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வச்சிடுவாரே... என் ஆர்.ஜே கனவு கனவாவே போயிடும் போலயே”

நீட்டி முழக்கி அவள் பேசியதில் களைத்துப் போனவன் என்னவோ கே.கே தான்.

“கிருதி ரிலாக்ஸ்”

“கிருதி டென்சன் ஆகாத”

“கிருதி ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரும்மா”

மூன்று முறைகள் பொறுமையின் திருவுருவாக பேசியவன் நான்காவது முறை “வில் யூ ஷட்டப் இடியட்?” என்று உறும பிரக்ருதி அமைதியாகிவிட்டாள்.

“ஃபர்ஸ்ட் டேட்லயே ஒருத்தன் ரூமுக்குக் கூப்புடுறானே, அவன் கூட போகலாமா வேண்டாமானு யோசிக்கல... நீ நின்ன இடத்துக்குப் பக்கத்துல தானே பாத்ரூம் இருக்கு... அதுல ஒளிஞ்சிருக்கலாமே... அதை விட்டுட்டு ஃப்ளோர் ரக்கை இழுத்து இவனுக்கு காயமாகி.. எனக்கு மூளைக்குப் பதிலா தெர்மாகோல் இருக்குனு சொன்னல்ல, உனக்கு அங்க வெறும் வேகண்ட் ஸ்பேஸ் தான் இருக்கு... உன் ஒப்பாரிய நிறுத்துடி”

அவன் கோபத்தில் சிடுசிடுத்ததில் பிரக்ருதி பதறி விழிக்கவும் வலுக்கட்டாயமாக பொறுமையை வரவழைத்தவன்

“ஓ.கே! ஓ.கே! டோண்ட் கெட் பேனிக்... ஐ வில் டேக் கேர் ஆப் திஸ் மேட்டர்... இங்க நடந்தது வெளிய தெரியாது... நீயும் சொல்லக்கூடாது... இப்பிடி ஒரு இன்சிடெண்ட் நடந்ததையே நீ மறந்துடணும்” என்றான்.

பிரக்ருதி ஈரமான கன்னத்தைத் துடைத்தவள் “இது ஒன்னும் இன்சிடெண்ட் இல்ல, ஆக்சிடெண்ட்” என்கவும்

“கவுண்டர் டயலாக்குக்குலாம் ஒரு குறைச்சலும் இல்ல... இந்த மாதிரி சிச்சுவேசன்ல கூட உன் மைண்ட் இப்பிடி யோசிக்குது பாரேன், சான்சே இல்ல, நீ ஒரு யூனிக் பீஸ்” என்றவன் அதிக நேரத்தை அங்கே வீணாக்காது பிரக்ருதியை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

அவனுடன் காரில் ஏறிய பிரக்ருதி ரிசார்ட் வளாகத்தை விட்டு கார் வெளியே சென்றதும் தான் மூச்சு விட்டாள். இருப்பினும் மனதிற்குள் பயம் நிரம்பியிருந்தது.

அது முகத்திலும் பிரதிபலித்தது. கே.கே அதை ஓரக்கண்ணால் கவனித்தவன் காரை அவர்களது ட்ரக் நிற்கும் கமிஷரியில் நிறுத்தினான்.

அங்கே ஜேக்கப்பும் ஷ்ரவனும் ட்ரக்கில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரையும் கண்டதும்

“என்னடா ஜோடியா வர்றீங்க?” என கேள்வியோடு வரவேற்றான் ஷ்ரவன்.

அவனிடம் நடந்த அனைத்தையும் விளக்கினான் கே.கே. கூடவே இருந்த ஜேக்கப்பிடம் பிரக்ருதிக்கு அவனால் உதவ முடியுமா என்று கேட்டான்.

அவனால் எப்படி தனக்கு உதவ முடியும் என பிரக்ருதி யோசிக்கும் போதே

“டோண்ட் வொரி கய்ஸ்... என் கேர்ள் ஃப்ரெண்ட் டல்லாஸ் போலீஸ்ல டிவிஷன் கமாண்டரா இருக்குறா... அவ கிட்ட பேசி ப்ராப்ளமை சால்வ் பண்ணிடலாம்” என்றான் ஜேக்கப்.

“பட் அவன் பணக்காரப்பையன்” என்றாள் பிரக்ருதி.



“பணக்காரனோ ஏழையோ இங்க செக்சுவல் ஹராஸ்மெண்ட் யார் பண்ணுனாலும் பனிஷ்மெண்ட் உண்டு” என்றான் அவன்.

ஷ்ரவன் ஃப்ராப்புசீனோவை எடுத்து வந்து பிரக்ருதியிடம் நீட்டினான்.

“ஸ்டார்பக்ஸ் டேஸ்டை எதிர்பாக்காம சாப்பிடு... அமவுண்டை நாளைக்கு பே பண்ணுனா போதும்” என அவன் கூறவும் அவள் மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.



இன்னும் அதிர்ச்சி விலகாமல் இருப்பவளை பார்த்தபடியே நின்றான் கே.கே. இப்படி எல்லாம் நடக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. அந்த மாதிரி சூழலில் தன்னை பிரக்ருதி அழைத்தது ஏனோ அவனுக்குப் பிடித்திருந்தது.

மனதுக்கு நெருக்கமானவர்களை தானே இக்கட்டான நேரத்தில் நாம் தேடுவோம். அந்த மனநிலையில் பிரக்ருதி தன்னை கிரிஷ் என்று அழைத்தது கூட அவனுக்கு வித்தியாசமாகப் படவில்லை.


Comments