அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 21

 



“ரொம்ப ஜோவியலா இருக்குற பெர்சன்சுக்கு சீரியஸ்னெஸ்னா என்னனு தெரியாது, அவங்க எதையும் சீரியஸா எடுத்துக்காம ஈஸியா மூவ் ஆன் ஆகிடுவாங்கனு நம்மள்ல பல பேர் நினைச்சிட்டிருப்போம்... ஆனா அது உண்மை இல்ல... ஜோவியலான பெர்சன்ஸ் எந்தளவுக்கு அடுத்தவங்களோட ஈஸியா மிங்கில் ஆகி ஜாலியா இருக்குறாங்களோ அதை விட பல மடங்கு அதிகமா அவங்க உடைஞ்சும் போவாங்க... அவங்க காயப்பட்டாங்கனா ஈஸியா அவங்க அதை மறந்துட மாட்டாங்க... அவங்களை ஹர்ட் பண்ணிட்டு மறுபடியும் அவங்களோட பேட்ச்-அப் பண்ணுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்... அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி ஒரு சூழ்நிலை வந்துச்சுனா உங்களால அவங்களை அந்த சூழ்நிலையில இருந்து சுலபமா வெளிய கொண்டு வரமுடியாது... சோ ஒருத்தவங்க நம்ம என்ன சொன்னாலும் சீரியசா எடுத்துக்காம ஃபன் பண்ணிட்டு ஜாலியா சுத்துறாங்கனு அவங்களை அடிக்கடி ஹர்ட் பண்ணாதிங்க... உங்களால மறுபடி அவங்களை பழையபடி பாக்கவே முடியாத நிலமை வந்துடும்”

                                              -கே.கேவின் மனதின் குரல்

தி சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ்...

உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்லும் வழியில் ஷ்ரவன் காத்திருப்பதைப் பார்த்துவிட்டு அவனை நெருங்கினாள் பிரக்ருதி.

“யாருக்காக வெயிட் பண்ணுற ப்ரோ?” என்றவளிடம்

“பிரகிக்காக” என்றான் அவன்.

“ஓ! அவுட்டிங்கா?” என்று கேட்டு கண் சிமிட்டியவளை நோக்கி புன்னகைத்தான்.

“கண்டுபிடிச்சிட்டியே! நானும் அவளும் அவுட்டிங் போய் ரொம்ப நாளாகுது கிருதி... நவி சிஸ்டர் கிட்ட பெர்மிசன் வாங்குறதுல பிரச்சனை இல்ல... பிருத்வி ப்ரோ வந்துட்டார்னா சிரமம்” என்றான் அவன்.

“மாமா இன்னைக்கு லேட்டா தான் வருவார்... டோண்ட் வொரி... என்னமோ ரொமாண்டிக்கா டைம் ஸ்பெண்ட் பண்ணப் போற மாதிரியே பேசுறது... எப்பிடியும் பேய்க்கதை சொல்லி அவளை அலற வைக்கப் போறிங்க” நமட்டுச்சிரிப்புடன் பிரக்ருதி கூற

“அது ஒரு ட்ரிக் கிருதி... சொன்னா உனக்குப் புரியாது” என்றான் ஷ்ரவன்.

“அதுல்லாம் புரியும்... நான் ஒன்னும் குழந்தை இல்ல”

“இந்த சீக்ரேட் நமக்குள்ள இருக்கணும்... யார் கிட்டவும் சொல்லக்கூடாது”

“உங்க மேல சத்தியமா இந்த சீக்ரேட் வெளிய போகாது”

அவன் தலையிலடித்து சத்தியம் செய்தாள் பிரக்ருதி.

“பேய்க்கதை சொன்னா பிரகி பயப்படுவா... அப்ப அவளுக்கு தைரியம் சொல்லுற மாதிரி லைட்டா ஒரு ஹக், சின்னதா ஒரு கிஸ், அப்புறமா...”

அவன் பேசிக்கொண்டே செல்லும் போதே “நாராயணா நாராயணா” என்று காதுகளைப் பொத்திக்கொண்டாள் பிரக்ருதி.



“நான் இன்னும் முடிக்கல” என்றவனிடம்

“முடிக்கவே வேண்டாம்ங்கிறேன்... நீங்களும் அந்த கிரிஷும் இதே பொழைப்பா தான் சுத்துறிங்க போல... இங்க பாருங்க மிஸ்டர் ஷ்ரவன், நீங்க லவ் பண்ண மட்டும் தான் நவி பெர்மிசன் குடுத்திருக்குறா... ரொமான்ஸ் பண்ணுறதுக்கு இல்ல... எங்க மகிழினி ஆன்ட்டி பத்தி உங்களுக்குத் தெரியல... அவங்க ஆயிரம் பிருத்வி மாமாக்குச் சமம்... அவங்களை சம்மதிக்க வைக்காம நீங்க எங்க வீட்டுப்பொண்ணு கூட ரொமான்ஸ் பண்ணலாம்னு கனவுல கூட நினைக்காதிங்க” என எச்சரித்தாள் பிரக்ருதி.

ஷ்ரவன் தலையாட்டியபடி அவள் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தவன் இடையில் கே.கேவின் பெயர் வரவும் புருவம் சுருக்கினான்.

“இரு இரு... இப்ப எதுக்கு கிரிஷை இழுக்குற நீ?”

சந்தேகமாக அவன் வினவவும் மாட்டிக்கொண்டவளைப் போல விழித்தாள் பிரக்ருதி.

“என்ன திருதிருனு முழிக்கிற? இப்ப ஏன் கிரிஷ் பேரை சொன்ன நீ?”

“நான் எங்க கிரிஷ் பேரை சொன்னேன்? உனக்குக் காதல் மயக்கத்துல காது அடைச்சிடுச்சு ப்ரோ... சும்மா இமேஜின் பண்ணிக்காம அவுட்டிங்கை பத்தி கனவு கண்டுக்கிட்டே காத்திரு... டாட்டா”

 அவனுக்குப் பதில் அளிக்காமல் உடற்பயிற்சிக்கூடத்துக்கு ஓடிவிட்டாள் பிரக்ருதி.

அங்கே போனவளின் கண்கள் அவள் கண்ட காட்சியில் இமைக்க மறந்தது.

ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் கே.கே. அவனைக் கண்களால் களவாட முயன்றபடி லாட் புல்டவுனில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள் அந்த அப்பார்ட்மெண்ட்வாசியான இளம்பெண் ஒருத்தி.



இக்காட்சியைக் கண்டதும் பிரக்ருதியின் நாடி நரம்புகளில் இரத்தத்துக்குப் பதிலாக கோபம் பாய ஆரம்பித்தது.

விறுவிறுவென கே.கேவின் அருகே இருந்த ட்ரெட்மில்லில் ஏறியவள் அதில் நடந்தபடியே

“உன்னை யாரு ஸ்லீவ்லெஸ் பனியன் போட சொன்னது?” என கடுகடுக்க

“பனியன் எல்லாமே ஸ்லீவ்லெஸா தான் இருக்கும்” என்றவன் திரும்பி லாட் புல்டவுனில் அமர்ந்திருந்த பெண்ணை நோக்கி கண் சிமிட்ட பிரக்ருதி ஓடிக்கொண்டிருந்த ட்ரெட்மில்லை நிறுத்திவிட்டு அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

“நான் பக்கத்துல இருக்குறப்பவே நீ எனக்குத் துரோகம் பண்ணுற கிரிஷ்”



அவளது குற்றச்சாட்டில் வியந்து விசித்திரமாக அவளைப் பார்த்தான் கே.கே.

“என்னடா லுக்கு?”

“என்னமோ நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி நாலஞ்சு புள்ளைங்களை பெத்த மாதிரி நீ என்னை ப்ளேம் பண்ணுற கிருதி... நான் ஜஸ்ட் உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணிருக்குறேன் அவ்ளோ தான்”

தான் கூறிய பதிலில் அவள் முகம் சுருக்குவதைக் கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு ட்ரெட்மில்லில் தனது ஓட்டத்தைத் தொடர்ந்தான் கே.கே.

“ஜஸ்ட் ப்ரபோஸ் பண்ணுனியா? நீ என்னை டூ டைம்ஸ் கிஸ் பண்ணிருக்குற... அதை மறந்துட்டியா?” என்று அவள் மீண்டும் குற்றம் சாட்ட

“கிஸ் பண்ணுன பொண்ணுக்கு உண்மையா இருக்கணும்னு ஏதாவது ரூல் இருக்குதா? இல்ல, ப்ரபோஸ் பண்ணுன பொண்ணு இருக்குறப்ப வேற ஒரு அழகான பொண்ணைப் பாக்க கூடாதுனு புதுசா சட்டம் ஏதாவது போட்டிருக்காங்களா?” என வேண்டுமென்றே குரலில் அலட்சியம் காட்டி வினவினான் கே.கே.

“அப்ப சட்டம் போட்டா தான் நீ உண்மையா இருப்ப... இல்லனா உன் இஷ்டத்துக்கு எல்லா பொண்ணுங்களையும் சைட் அடிப்ப... ஆனா டயலாக் மட்டும் மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல, ஏலியன் காதல்ங்கிற அளவுக்குத் தாராளமா பேசுவ”

சொன்னவளின் முகம் சுருங்கிப் போகவும் சத்தமாகவே நகைத்தான் கே.கே.

“நீ தான் என்னை லவ் பண்ணலயே... அப்புறம் எதுக்குக் கோவப்படுற கிருதி? நீ மட்டும் இப்பவே என்னை லவ் பண்ணுறேன்னு சொல்லு... அதுக்கு அப்புறம் மிஸ் யூனிவர்ஸே என் கண்ணெதிர்ல வந்தாலும் நான் கண்டுக்க மாட்டேன்”

பிரக்ருதி அவன் கூறியதைக் கேட்டு உதட்டைச் சுழித்தாள்.

“இதுக்காகலாம் உன்னை லவ் பண்ண முடியாது”

அவள் அலட்சியமாக கடந்து சென்றவள் அவனருகே இருந்த இன்னொரு ட்ரெட்மில்லில் ஓடத் துவங்கினாள்.

கே.கே புன்னகைத்தபடி அவளையே பார்க்க “என்னை இப்பிடி பாத்துட்டே இருந்தா உன் உடம்புல கலோரி பர்ன் ஆகும்னு யாரும் சொன்னாங்களா?” என கேலி செய்தாள்.

“பாக்குறதால கலோரி பர்ன் ஆகுமானு தெரியல... பட் கிஸ் பண்ணுனா ஆகும்”

விசமமாக அவன் மொழிய “பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுடா” என்றாள் அவள்.

“இது சயிண்டிஃபிக் ட்ரூத் கிருதி... நார்மல் கிஸ்ல நிமிசத்துக்கு மூனு கலோரி பர்ன் ஆகும்... அதுவே டீப் கிஸ்ஸா இருந்தா ஃபைவ் டு ட்வென்ட்டி சிக்ஸ் கலோரி பர்ன் ஆகும்... இந்த ட்ரெட்மில்ல மாங்கு மாங்குனு ஓடாம ஸ்மார்ட்டா உடம்பை குறைக்க கத்துக்க... உனக்கு அப்ஜெக்சன் இல்லனா நான் அதுக்கு ஹெல்ப் பண்ணுறேன்”

பிரக்ருதி ட்ரெட்மில்லை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கினாள்.

“உன்னோட ஃபிட்னெஸ்ஸை டிப்சை அங்க உக்காந்து உன்னை சைட் அடிக்குறாளே, அவ கிட்ட சொல்லு” என்றவள் கிளம்ப எத்தனிக்க

“இப்போதைக்கு உன்னை கிஸ் பண்ணுற ஐடியா எனக்கு இல்ல கிருதி... கேரி ஆன்” என்றவன் அவள் பதில் பேசும் முன்னர் மொபைல் அடிக்கவும் பிரக்ருதியை விட்டு அதில் கவனமானான்.

அழைத்தவரின் பெயரை கண்டதும் அவனது விழிகளில் சொல்லவொண்ணா வெறுப்பு நிரம்பியது.

கடனே என அழைப்பை ஏற்றவன் “சொல்லுங்க” என்க

“ஷேர் ட்ரான்ஸ்ஃபர் பத்தி உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றது மறுமுனை.

“எதுவா இருந்தாலும் ஷ்ரவன் கிட்ட பேசுங்க... அவன் பெர்ஷ்னல் வேலையா வெளிய போயிருக்குறான்” என்றான் கே.கே அலட்சியமாக.

“நான் உன் கூட தான் பேசணும் கிரிஷ்”

வெகு அழுத்தமாக உரைத்தது மறுமுனை.

“நீங்க நினைச்சப்பலாம் பேசுறதுக்கு நான் ஒன்னும் உங்களோட எம்ப்ளாயி இல்ல”

இறுகிப் போன குரலில் அவன் கூற இந்த சம்பாஷனைகளில் சிலவற்றை கேட்டு பிரக்ருதி ட்ரெட்மில்லில் இருந்து இறங்கி அவனை நெருங்கினாள்.

அதே நேரம் “நீ என் எம்ப்ளாயியா இருந்தா இவ்ளோ தூரம் இறங்கி வந்து நான் ஏன்டா பேசப்போறேன்? இப்ப புத்திக்கெட்டு போனாலும் ஒரு காலத்துல என் மனசறிஞ்சு நடந்த என்னோட சின்ன மகன் நீ... உன் கிட்ட இறங்கி வந்து பேசுறது எனக்குத் தப்பா தெரியல” என்றார் மறுமுனையில் அவ்வளவு நேரம் அவனிடம் பேசிக்கொண்டிருந்த பத்மானந்த்.



அவரது சின்ன மகன் என்ற வார்த்தை கே.கேவிற்குள் பிரளயத்தை உண்டாக்கியது. அவர் சொன்னது போல பத்மானந்தின் ஒட்டுமொத்த நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமாக ஒரு காலத்தில் இருந்த அவரது சின்ன மகன் கேசவ் கிரிஷ் இன்று அவரை அடியோடு வெறுத்து ஒதுக்கிவிட்டு தனக்கான நிம்மதியை கடல் கடந்து தேடி வந்து வாழ்கிறான்!

கடந்த ஆறு மாதங்களில் பத்மானந்த் என்ற பெயரைக் கூட யாரும் உச்சரித்தால் அவனுக்குப் பிடிக்காது.

முப்பொழுதும் தொழிலைப் பற்றியே யோசிக்கும் பத்மானந்தால் அன்பு என்ற ஒன்றை யார் மீதேனும் செலுத்த முடிந்தது என்றால் அந்த ஒருவன் கேசவ் மட்டுமே (இனி அவன் நமக்கும் ‘கேசவ்’, ‘கிரிஷ்’ தான்!)

“இன்னொரு தடவை உங்க வாயால என்னை மகன்னு சொல்லாதிங்க... நீங்க ஒரு கொலைகாரன்... என் அம்மாவையும் அண்ணனையும் கொன்னுட்டு எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு என் கிட்ட பேசுறிங்க? நான் யூ.எஸ் வர்றதுக்கு முன்னாடி என்னமோ சொன்னிங்களே! ஹான், ‘எனக்குக் குடும்பம் பொண்டாட்டி பசங்களை விட இத்தனை வருசம் நான் கட்டிக் காப்பாத்துன என்னோட கௌரவம் தான் முக்கியம்’... இப்ப அந்த கௌரவம் எங்க போச்சு மிஸ்டர் பத்மானந்த்?”

அத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த கோபம், இயலாமை அனைத்தையும் வார்த்தைகளின் உதவியால் மூட்டையாய் கட்டி அவர் மீது எறிந்து கொண்டிருந்தான் கேசவ்.

“கேசவ்!”

அதட்டலாக ஒலித்தது பத்மானந்தின் குரல்.

“ஷட்டப்! இந்த அதட்டல் உருட்டல் மிரட்டலை எல்லாம் உங்களோட தம்பி கிட்ட வச்சுக்கோங்க... அந்தக் குள்ளநரியும் அது பெத்துப்போட்ட கழுதைப்புலியும் தான் உங்களோட மிரட்டலுக்குப் பயப்படும்... நான் கிரிஷ்... கார்கியோட மகன்... என் கிட்ட உங்க பாச்சா எதுவும் பலிக்காது... இதுவே நீங்க எனக்குக் கால் பண்ணுற கடைசி முறையா இருக்கட்டும்”

உறுமித் தீர்த்துவிட்டு மொபைலை சுவரில் எறியப்போனான் கேசவ்.

“ஹேய் கிரிஷ்”

வேகமாக வந்து அவனது கையைப் பிடித்து மொபைலுக்கு நேரவிருந்த கோர மரணத்தைத் தடுத்து நிறுத்தினாள் பிரக்ருதி.



அவனது மூச்சுக்காற்றில் கலந்திருந்த கோபம் அனலாக அவள் மீது மோதியது. ஃப்ளாட்டிலிருந்து அவளை வெளியே பிடித்து தள்ளிய போது இக்கோபத்தைக் கேசவிடம் பிரக்ருதி கண்டிருக்கிறாள். அதன் பின்னர் இப்போது தான் பார்க்கிறாள்.

“கோவப்படாத கிரிஷ்... யாரும் கெட்டவங்க இல்ல.... சந்தர்ப்பம் தான் மனுசங்களை கெட்டவங்களாவும் நல்லவங்களாவும் நமக்குக் காட்டுது... உன்னோட ஃபாதர் கண்டிப்பா மோசமானவரா இருக்க முடியாது”



கேசவ் கோபத்தை எப்படியோ கட்டுப்படுத்திக்கொண்டான்.

“நீ அந்த மனுசனை பாத்தது கூட இல்ல... எப்பிடி இவ்ளோ தீர்மானமா சொல்லுற?”

“ஏன்னா அவர் உன்னோட அப்பா... அவர் கோவக்காரரா இருக்கலாம்... ஈகோயிஸ்டா இருக்கலாம்... ஏன், திமிர் பிடிச்சவரா கூட இருக்கலாம்... ஆனா நீ சொன்னியே, கொலைகாரன்னு, அப்பிடி இருக்க வாய்ப்பே இல்ல கிரிஷ்... எந்த தகப்பனும் சொந்த மகனை கொன்னு கௌரவத்தைக் காப்பாத்திக்க நினைக்க மாட்டான்... எந்தப் புருசனும் பொண்டாட்டிய விட கௌரவம் தான் முக்கியம்னு யோசிக்க மாட்டான்”

“சோ நான் பேசுன எல்லாத்தையும் நீ கேட்டுட்ட”

“என்னமோ நீ சைலண்டா பேசுனதை நான் ஒட்டுக்கேட்ட மாதிரி சொல்லாத கிரிஷ்... நீ கத்துனது கடல் கடந்து இந்தியால இருக்குற உன் அப்பாவுக்கே கேட்டுருக்கும்”

கேசவ் பதில் சொல்ல இயலாமல் ஓடாமல் கிடந்த ட்ரெட் மில்லில் ஓய்ந்து போய் அமர்ந்து சிகையைக் கோதிக்கொண்டான்.



பிரக்ருதி அவனருகே அமர்ந்தவள் “நீ ஏன் ரூடா பிஹேவ் பண்ணுறனு நான் அடிக்கடி யோசிச்சிருக்குறேன்... உன்னோட பாஸ்ட் லைஃப்ல என்ன நடந்துச்சுனு எத்தனையோ தடவை உன் கிட்ட கேக்கலாம்னு கூட நினைச்சிருக்குறேன்... ஆனா நீயே மறக்க நினைக்குற விசயத்த நான் கேட்டு உன் ட்ரீட்மென்ட்ல எதுவும் பிரச்சனை வந்துடுமோனு பயந்து அமைதியா போயிடுவேன்... நீ உன் அண்ணாவையும் அம்மாவையும் இழந்திருக்குற... அந்த இழப்பு உன்னை மனசளவுல பாதிச்சிருக்கு... அதுக்குக் காரணம் உன் அப்பா தான்னு நினைச்சு நீ அவர் மேல கோவமா இருக்குற... ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்” என்றாள் அவனது தோளை ஆதரவாக அணைத்தபடி.

கேசவ் அவளது ஆறுதலைக் கேட்டுவிட்டு சிரித்தான்.

“இப்பவும் உனக்கு முழுசா எதுவும் தெரியல கிருதி... ஆனா நான் லவ் பண்ணுற பொண்ணு இவ்ளோ குளோஸா என் பக்கத்துல உக்காந்து ஆறுதல் சொல்லுறது மனசுக்கு இதமா இருக்கு... இதுக்காகவே அடிக்கடி அவர் மேல கோவப்படலாம்னு தோணுது”

அவன் குறும்பாக முடிக்கவும் பிரக்ருதி சட்டென்று அவனது தோளை அணைத்திருந்த கரத்தை விலக்கப் போக கேசவ் அவசரமாக கையை இழுத்து மீண்டும் தனது தோளோடு பிடித்துக்கொண்டான்.



“கிரிஷ்”

“இப்பவும் நான் யாரு, என் அப்பா யாரு, என் ஃபேமிலி எப்பிடிப்பட்டதுனு எதுவும் உனக்குத் தெரியாது... இது எதுவும் உனக்குத் தெரியாம இருக்குறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு... என் பாஸ்ட்ல நான் எப்பிடி இருந்தேன்ங்கிறத இனிமே நானே யோசிக்கப் போறதில்ல... இனி என்னோட பாஸ்ட் லைஃபை நான் கண்டினியூ பண்ணப்போறதும் இல்ல... பிகாஸ் ஐ ஹேட் தட் லைஃப் அண்ட் தோஸ் பெர்சன்ஸ்... இப்ப இருக்குற இந்த லைஃப், பம்பிள் பி ட்ரக், நீ, ஷ்ரவன், உன்னோட ஃபேமிலி இது போதும் எனக்கு... நீ மிசஸ் கிரிஷா தான் வேணும்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன்... ஆனா அப்பிடி வந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்”

பிரக்ருதி அவனது புதிரான பேச்சின் இறுதி வாக்கியங்களில் மெய் மறந்து போனாள்.

ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தாமல் அதே நேரம் தனது மனதிலுள்ளதை அவளுக்குப் புரிய வைக்கும் கேசவின் முயற்சி அவளுக்குப் பிடித்திருந்தது.

வாழ்க்கைத்துணை எப்படி இருக்க வேண்டுமென அவள் வைத்திருந்த கற்பனைகளுக்குக் கிஞ்சித்தும் பொருந்தாதவனாக தான் கேசவ் அவளுக்குத் தோன்றினான். ஆனாலும் வார்த்தை ஜாலத்தாலேயே தன்னை அவன் காதலிக்க வைத்துவிடுவானோ என்ற எண்ணம் அவளுக்குள் முகிழ்த்தது.

புன்னகை பூக்க அவனை நோக்கியவள் “தசாவாதாரம் படத்துல ஆண்டவர் ஒரு டயலாக் பேசுவார்... கடவுள் இல்லனு நான் சொல்லல... இருந்தா நல்லா இருக்குமேனு தான் சொல்லுறேன்னு அவர் ட்விஸ்டா பேசுவார்... அதே டெக்னிக்கை தான் நீ இப்ப யூஸ் பண்ணிருக்குற... எனி ஹவ், உன் பாஸ்ட் லைஃப், உன் ஃபேமிலி எதுவும் எனக்குத் தெரிய வேண்டாம்... முதல்ல நான் உன்னை பார்டெண்டர்னு நினைச்சேன்... இல்ல ஃபுட் ட்ரக் வச்சிருக்குறேன்னு நீ என்னை ஆச்சரியப்படுத்துன... எனக்கு ஃபுட் ட்ரக்ல சாக்லேட் ட்ரிங் ப்ரிப்பேர் பண்ணுற கிரிஷை தான் பிடிச்சிருக்கு... ஐ மீன், ஃப்ரெண்டா பிடிச்சிருக்கு... நீ சொல்ல விரும்பாத பாஸ்ட் நமக்குள்ள எப்பவும் வரவேண்டாம் கிரிஷ்” என்றாள்.

அதே நேரம் காருக்குள் ஷ்ரவனுடன் அமர்ந்திருந்த பிரக்யா ஷீட் பெல்டை மாட்டிவிடுகிறேன் என அவன் செய்த குறும்பில் நாணி சிவக்க அந்த நாணச்சிவப்பில் லயித்து அவள் கன்னத்தில் ஷ்ரவன் முத்தமிட்ட நொடியில் பிரக்யாவின் மொபைல் கரடியாக கத்தி இனிய தருணத்தை கலைத்தது.



“ப்ச்! யாருப்பா அது?”

“ஹாரி... இப்ப எதுக்குக் கால் பண்ணிருக்குறான்?” என்றபடி அழைப்பை ஏற்றாள் பிரக்யா.

“சொல்லு ஹாரி”

மறுமுனையில் ஹாரி என்ன கூறினானோ, பிரக்யாவின் முகத்தில் கலக்கம் வந்தது.

“நோ நோ ஹாரி... அப்பிடி எதுவும் பண்ணிடாத... நான் வர்றேன்... வந்ததும் பேசி முடிவெடுக்கலாம்... நோ ஹாரி... இது என் மேல ப்ராமிஸ்”

ஷ்ரவன் அவளது பதற்றத்தைக் கண்ணுற்று என்னவென சைகைமொழியில் கேட்டான்.

“சொல்லுறேன்” என்று கை காட்டியவள் ஹாரியிடம் ஆறுதல் மொழிகளை கூறி அமைதிப்படுத்தினாள். பேச்சுவார்த்தை முடிந்ததும் அழைப்பைத் துண்டித்தவள்

“சாரி ஷ்ரவன்... என்னால இப்ப அவுட்டிங் வர முடியாது” என்றாள் பரிதாபமாக.

“ஏன்?”

“ஹாரியோட கேர்ள்ஃப்ரெண்ட் அவனை ஏமாத்திட்டாளாம்... அவன் கூட ரிலேசன்ஷிப்ல இருந்தப்பவே இன்னொரு பையன் கூட பழகிருக்கா... ஹாரிக்கு இன்னும் நல்ல ஜாப் கிடைக்காததால அவனும் அவளும் ஒன்னா இருந்த வீட்டை விட்டு அவனைத் துரத்திட்டு புது பாய் ஃப்ரெண்டோட அங்க இருக்குறாளாம்... பாவம் ஹாரி, அழுறான்”

ஷ்ரவனுக்கும் ஹாரியின் நிலமை பரிதாபமாக தான் இருந்தது. ஆனால் பிரக்யா ஆறுதல் கூறுமளவுக்கு ஒன்றும் அவனது நிலை சோகமில்லை.

இம்மாதிரியான சம்பவங்கள் மேலைநாடுகளில் சகஜம். இவ்வளவு ஏன், சமீபத்தில் மணமான லியானாவும் ஜேக்கப்புக்கும் கூட இதற்கு முன்னர் காதல் தோல்விகளை சந்தித்திருந்தனர்.

அதை பிரக்யாவிடம் கூற அவளோ

“ஹாரியோட நிலமை வேற... அவங்க நிலமை வேற... அந்தப் பொண்ணு ஹாரிக்குத் துரோகம் பண்ணிருக்குறா... பாவம் அவன்” என்றாள் மீண்டும் மீண்டும்.



ஒரு கட்டத்தில் ஷ்ரவன் எரிச்சலுற்றுவிட்டான். தன் மீதான காதலை விட ஹாரியின் நட்பு அவளுக்கு முக்கியமாகிவிட்டதே என்ற எரிச்சலோடு பிரக்யா மீது உரிமையுணர்வும் எழுந்தது.

“ரொம்ப நாள் கழிச்சு உன் கூட அவுட்டிங் போகலாம்னு நினைச்சேன்... ஆனா உனக்கு என்னை விட ஹாரி தான் முக்கியமா போயிட்டான்ல... நீ இறங்கு... அவன் கூட சேர்ந்து நீயும் ஒப்பாரி வை” என்று காரை விட்டு வெளியேறியவன் கார்க்கதவை படாரென அறைந்து சாத்த பிரக்யா ஒரு நொடி திடுக்கிட்டு பின்னர் காரை விட்டு வெளியே வந்தாள்.

“நாளைக்கு நம்ம அவுட்டிங் போகலாம் ஷ்ரவன்”

“ஆணியே புடுங்க வேண்டாம்... கிளம்புங்க மதர் தெரசா”

பட்டென கைகூப்பியவன் அங்கிருந்து சென்றுவிட பிரக்யாவோ அப்போதைக்கு ஹாரியின் பிரச்சனையைத் தீர்ப்பதே முக்கியமென எண்ணி கேப் ஒன்றை புக் செய்து அங்கிருந்து கிளம்பினாள்.

ஷ்ரவன் ஃப்ளாட்டிற்கு திரும்பிய போது அங்கே கேசவ் யோசனை கப்பிய முகத்தோடு அவனை வரவேற்றான்.



“ஷேர் ட்ரான்ஸ்ஃபர் பத்தி எனக்கு எல்லா டீடெய்ல்சும் வேணும் ஷ்ரவன்... உன்னோட பி.ஏ இன்னும் அங்க தானே ஒர்க் பண்ணுறார்... அவர் மூலமா டீடெய்ல் கலெக்ட் பண்ணுடா”

“என்னாச்சு மச்சி?”

“மிஸ்டர் பத்மானந்த் கால் பண்ணுனார்... காரணமில்லாம அவருக்கு என் ஞாபகம் வந்திருக்காது... இப்ப அவங்க ஷேர் ட்ரான்ஸ்ஃபர்ல மும்முரமா இருக்காங்க... அவங்களுக்கு என் கிட்ட இருக்குற பத்து பர்செண்டேஜ் ஷேர் ரொம்ப அர்ஜெண்டா தேவைப்படுதோனு தோணுது... அப்பிடி அந்த ஷேரை யாருக்குக் குடுக்கப் போறாங்கனு எனக்குத் தெரியணும்”

“ஒருவேளை சரணுக்கு...”

“அந்த ராஸ்கலுக்காக தான் அவர் பேசுனார்னா இனிமே ஒரு குண்டூசி கூட அவனுக்குக் கிடைக்கக்கூடாது... அதுக்காக நான் எதையும் செய்ய தயாரா இருக்குறேன்” என்றான் கேசவ் உறுதியாக.

ஷ்ரவனும் பிரக்யாவுடனான ஊடலை மறந்தவனாக உடனே தனது உதவியாளராக ஒரு காலத்தில் இருந்த அபராஜித்தைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தான்.

தனது கடந்தகால வாழ்க்கைக்குள் மீண்டும் செல்ல விரும்பாதவனை விதியானது பத்மானந்த் உருவில் அங்கேயே அழைத்துச் செல்லுமா? 

Comments

Post a Comment