அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 20

 



“உங்களுக்குனு வாழ்க்கையில சில ஆசைகள் கனவுகள் இருக்கும். எந்தக் காரணத்துக்காகவும் அதை விட்டுக்குடுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருப்பிங்க... ஆனா திடீர்னு ஏதோ ஒரு மேஜிக் மொமண்ட் வந்து உங்களோட கனவுக்கு அப்பிடியே ஆப்போசிட்டா உங்க லைஃபை மாத்திடும்... நியாயப்படி அதுக்காக நீங்க வருத்தப்படணும்... ஆனா உங்க மனசுல சின்னதா சந்தோசம் பூக்கும்... லைஃப்ல உருவான அந்த சேஞ்சை நீங்க ரசிப்பிங்க... அதுக்குக் காரணமானவங்களை பாக்குறப்ப உங்களுக்குள்ள நீங்க அறியாம ஒரு தடுமாற்றம் வரும்... அமைதியான உங்க மனசுல அழகான சலனம் வர்றதை நீங்க ஆத்மார்த்தமா ஏத்துப்பிங்க... இத்தனை வார்த்தையில வளவளனு பேசுறத விட்டுட்டு ஒரே வார்த்தையில ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லணும்னா அந்த மாற்றம் தான் காதல்... எவ்ளோ பிடிவாதமான அசட்டுத்தனமான ஆசைகளையும் உண்மையான காதல் மாத்திடும்... எப்பேர்ப்பட்ட பிடிவாதக்காரங்களையும் அழகா மோல்ட் பண்ணி ரோமியோ ஜூலியட்டா மாத்த காதலால மட்டும் தான் முடியும்... இதெல்லாம் சொல்லுறத விட அனுபவிச்சுப் பாருங்க... அப்ப புரியும் அந்த மேஜிக்கல் மொமண்ட் எப்பிடிப்பட்டதுனு!”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

பெர்கின்ஸ் சேப்பல், பிஷப் Blvd, டல்லாஸ்...

1951ல் உருவான பெர்கின்ஸ் சேப்பல் என்ற தேவாலயத்தில் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான திருமணங்கள் நடந்தேறும்.



அந்த தேவாலயம் அமைந்திருக்கும் ‘பெர்கின்ஸ் ஸ்கூல் ஆப் தியாலஜி’ வளாகத்துக்குள் கருப்பு வண்ண லாங்க் கவுனை ஒரு கரத்தில் பிடித்துக்கொண்டு மற்றொரு கரத்தில் ‘ப்ரைட்ஸ்மெய்ட்’ பொக்கேயை ஏந்தியபடி வேகமாக நடந்து கொண்டிருந்தாள் பிரக்ருதி.

அவள் பின்னே நடந்து வந்து கொண்டிருந்தான் கே.கே. ஒன்பது மணி திருமணத்திற்காக ஆறு மணியிலிருந்தே கிளம்பினாலும் கடைசி நேரத்தில் பிரக்ருதியின் கவுன் சதி செய்துவிட்டது.

அவளைப் போல இன்னும் இருவர் அணியுமளவுக்கு இருந்த கவுனை ஆன்லைனில் ஆர்டர் செய்த குற்றத்திற்கான தண்டனை தான் இப்போதைய கடைசிநேர பரபரப்பு.

அவள் அணிந்திருந்த கவுனின் துணி தரையில் புரண்டு கே.கேவின் ஷூ கால்களில் மிதிபட்டது.

“நீ ஏன்டா என் பின்னாடியே வர்ற? முன்னாடி நடக்க வேண்டியது தானே?” என எரிச்சலாக மொழிந்தபடி நடந்தாள் அவள்.



“ஏன் திட்ட மாட்ட? கடைசி நேரத்துல லூஸான கவுனை கரெக்ட் பண்ணணும்னு என்னை இழுத்துட்டுப் போயிட்டு கரெக்டா மேரேஜ் டைமுக்கு ஓடி வந்தது உன் தப்பு... இதுல முன்னாடி வா பின்னாடி வானு ஆயிரத்தெட்டு கண்டிஷன் வேற” என பதிலடி கொடுத்தான் கே.கே.

தேவாலயத்தை நெருங்கியதும் பிரக்ருதி திரும்பி நின்று கே.கேவிடம்

“நான் அழகா இருக்குறேனா? செக் பண்ணி சொல்லேன்” என்க அவனும் தலையிலிருந்து கால் வரை பார்த்துவிட்டு



“சூப்பர்” என மூன்று விரல்களால் அபினயம் பிடித்துக் காட்டினான்.

“இந்த லிப்ஸ்டிக் தான் கொஞ்சம் ஓவரா இருக்கு” என்று சொன்னபடி நமட்டுச்சிரிப்பு சிரித்தவனின் பார்வை ஹூடா பியூட்டியில் குளித்திருந்த அவளது செவ்விதழ்களில் மையம் கொள்ளவும் பிரக்ருதியின் காது மூக்கில் புகை வராத குறை.

“உன் கண்ணுக்கு எப்ப பாத்தாலும் லிப்ஸ்டிக் மட்டும் தான் படுமா?”



“யாருக்கு எதுல இண்ட்ரெஸ்ட் அதிகமோ அதுல மட்டும் தான் அவங்க கான்சென்ட்ரேட் பண்ணுவாங்க” என எங்கேயோ பார்த்தபடி கே.கே கூற

“உன் கான்சென்ட்ரேசன்ல கான்க்ரீட் அள்ளி கொட்ட” என்று கடுகடுத்தபடி தேவாலயத்திற்குள் ஓடினாள் அவள்.

திருமணச்சடங்கை நடத்தி வைக்கும் ‘மினிஸ்டர்’ என்றழைக்கப்படும் பாதிரியாரும், அவரைத் தொடர்ந்து மணமகனும் ‘க்ரூம்ஸ்மென்’ என்ற மணமகன் தோழர்களும் உள்ளே சென்றுவிட்டிருந்தனர்.

அடுத்து ப்ரெய்ட்ஸ்மெய்ட்கள் ஃப்ளவர் கேர்ள்சுடன் உள்ளே செல்ல வேண்டும். பிரக்ருதி அவர்களுடன் ஓடிப் போய் இணைந்து கொண்டாள்.

அவர்களைக் கடந்து வேகமாக நடந்த கே.கே க்ரூம்ஸ்மென்களில் ஒருவனாக நிற்கும் ஷ்ரவனின் அருகில் சென்று நின்றுகொண்டான்.

இப்போது மணமகள் உள்ளே வரவேண்டும். மணப்பெண்ணான லியானாவின் கரத்தைப் பற்றி அவளை உள்ளே அழைத்து வந்தார் அவளது தந்தை.

ஜேக்கப்பின் அருகே அவளை நிற்க வைத்துவிட்டு அவர் பின்னே செல்ல இனிதே திருமணம் ஆரம்பித்தது.

பிரக்ருதியின் கருப்பு கவுனை மேலும் கீழும் பார்த்தபடி பொக்கேயை சுமந்துகொண்டு நின்றாள் பிரக்யா.

“அண்ணா மூனு தடவை கால் பண்ணிட்டான்... ஏன் இவ்ளோ நேரம்?”

“ட்ரஸ்சை கரெக்ட் பண்ண டைம் ஆயிடுச்சுடி” என்ற பிரக்ருதியின் பார்வை லியானாவின் உறவினர்களோடு நின்று கொண்டிருந்த பிரணவியிடம் சென்றது.



வெண்ணிற கவுனில் உப்பிய வயிறுடன் திருமணச்சடங்குகளை ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தவளின் வதனத்தில் சோர்வு இல்லை என்றதும் திருப்தியுற்றவள் மணமக்கள் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.

அங்கே பாதிரியார் ‘செரிமோனி மெசேஜை’ கூறிக்கொண்டிருந்தார்.

“Love is patient and kind; love does not envy or boast; it is not arrogant or rude. It does not insist on its own way; it is not irritable or resentful; it does not rejoice at wrongdoing, but rejoices with the truth”

பின்னர் திருமணத்திற்கான ப்ரேயர் ஆரம்பித்தது. அடுத்து மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் கடவுள் முன்னிலையில் உறுதியளிக்க ஆரம்பித்தனர்.

“I, Jacob, take you, Liyana, to be my wife. I promise to be faithful to you, in good times and in bad, in sickness and in health, to love you and to honor you all the days of my life”

ஜேக்கப் சொல்லி முடிக்கவும் லியானாவும் கடவுள் முன்னிலையில் தனது கணவனுக்கு அதே வாக்கை அளித்தாள்.



பின்னர் பாதிரியாரின் சில கேள்விகளுக்குப் பிறகு அவர்களின் வழக்கப்படி மோதிரங்களை மாற்றிக்கொண்டனர் இருவரும்.

“யூ மே நவ் கிஸ் ஈச் அதர்” என்றார் பாதிரியார்.

இருவரும் முத்தமிட்டுக்கொள்ள இனிதே திருமணம் நிறைவுற்றது.

தேவாலயத்திற்குள் ஃப்ளாஷ் மின்னக்கூடாது என்பது அங்கே விதி. எனவே புகைப்படக்கலைஞர்கள் அமைதியாக அத்தருணத்தைப் படம் பிடித்தனர்.

மணமக்கள் இருவரும் வெளியேற அவர்களைத் தொடர்ந்து ப்ரைட்ஸ்மெய்ட்களும் க்ரூம்ஸ்மென்களும் வெளியேறினர்.

அடுத்து லியானா பூங்கொத்தை தூக்க வீசவேண்டிய தருணம். யார் அதை லாவகமாக பிடிக்கிறார்களோ அவர்களுக்கு வெகு விரைவில் மணமாகும் என்பது நம்பிக்கை.

அதை பிடிக்க போட்டாபோட்டி நடக்க பிரக்ருதி ஆர்வக்கோளாறில் பிடித்து வைத்திருந்த கவுனை தரையில் விட மீண்டும் அது பூமிப்பெண்ணை முத்தமிட ஆரம்பித்தது.

அதோடு விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் கொஞ்சம் கூட யோசனையின்றி அவளுக்கு அடுத்து நின்ற கே.கேவின் ஷூ கால்களுடனும் அந்த கவுன் உறவாட ஆரம்பித்தது.

“கம் ஆன் லியா... சீக்கிரம் வீசு”

பிரக்ருதி சத்தமாக கூற லியானாவும் பூங்கொத்தை எறிய அதை பிடிக்கும் ஆவலில் கவுனை கவனிக்காமல் விட்டவள், கே.கேவின் காலுக்கு அடியில் கிடந்த கவுனை அவன் அழுத்தமாக மிதித்ததால் பூங்கொத்தை தவறவிட்டு தடுமாறி அவன் மீது விழுந்து வைத்தாள்.

அவனும் விளையாட்டுத்தனமாக பூங்கொத்தை பிடிக்க வந்தவன் பிரக்ருதியின் கவுனின் தயவாலும் அவளது உடல் எடையின் உதவியாலும் கீழே விழ அவன் மீது விழுந்த பிரக்ருதியின் ஹூடா பியூட்டி பூச்சு இதழ்கள் அவனது உதடுகளை உரசி உறவாடியது.



மீண்டும் ஒரு விபத்து! மீண்டும் ஒரு மின்சார அதிர்வு! கடந்த முறை போலவே இம்முறையும் பிரக்ருதி அதிர்ந்து போனாள். ஆனால் கே.கே அதிரவில்லை.

விலகப் போனவளின் உதட்டில் தானே முன் வந்து முத்திரையைப் பதித்தவன் அவளது கண்கள் விரியும் அழகை ரசித்தவாறு எழுப்பி விட்டான்.

இக்காட்சியைக் காணாமல் அனைவரும் பொக்கேயைக் கைப்பற்றிய ஷ்ரவனையும் பிரக்யாவையும் வாழ்த்திக் கொண்டிருந்தனர்.

தங்கையின் நிலையைக் கவனியாமல் நாத்தனாரின் வதனம் ஷ்ரவனோடு சேர்ந்து நிற்கையில் செவ்வண்ணம் பூசுவதைக் கண்டு ஆச்சரியத்தில் திளைத்து நின்றிருந்தாள் பிரணவி.



பிரக்ருதி பதற்றத்தில் நடுங்கிய கரங்களை கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்தவள் கே.கேவை முறைக்க அவனோ மென்மையாகப் புன்னகைத்தான்.

“நான் சொன்னபடி மேட் லிப்ஸ்டிக் போட்டதால நீ செஞ்ச தப்புக்கு இந்த தடவை எவிடென்ஸ் இல்லாம போயிடுச்சு” என்று அவன் கிண்டல் செய்ய

“யாரு? நானா தப்பு பண்ணுனேன்? மனசாட்சி இல்லாத மலைமாடே, நான் ஆக்சிடெண்டலா தான் விழுந்தேன்... ஆனா எழுந்திரிக்கப் போனவளை மறுபடியும் கிஸ் பண்ணுனவன் நீ தான்” என்று கடுகடுத்தாள் பிரக்ருதி.

கே.கே தோள்களை குலுக்கினான்.

“நான் ஒன்னும் ரோபோ இல்ல... நார்மல் மனுசன்... இவ்ளோ அழகான பொண்ணோட கிஸ்சை ‘ஜஸ்ட் லைக் தட்’னு துடைச்சிட்டுப்போற அளவுக்கு நான் மகாநல்லவனா இன்னும் மாறல கிருதி”

“அடேங்கப்பா, நல்ல டெவலப்மெண்ட்... பொண்ணுங்களே பிடிக்காதுனு சொல்லிட்டு இப்ப இழுத்து வச்சு கிஸ் அடிக்குற... உன்னை...” என்று பற்களை கடித்துக்கொண்டு அவனது கழுத்தை நெறிக்க நெருங்கினாள் பிரக்ருதி.

“Wanna kiss me again? No problem” என்றவன் கண்களை மூடி நிற்க

“கிஸ்சா கேக்குது கிஸ்... இன்னொரு தடவை இப்பிடி பண்ணு, உன் வாயில பச்சைமிளகாய தேச்சு விடுறேன்... ஆளும் மூஞ்சியும் குருவிக்கூடு மண்டையும்...  போடா” என்று கத்திவிட்டு தரையில் புரண்ட கவுனை தூக்கிக்கொண்டு ஓடினாள் பிரக்ருதி.

மணமக்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் லியானாவை தூக்கிச் சென்று அமர வைத்தான் ஜேக்கப். அவர்களின் கார் கிளம்பியதும் பிரக்யா கேப் புக் செய்ய அதுவும் வந்து நின்றது.

பிரணவி மற்றும் பிரக்யாவோடு பிரக்ருதியும் கேபில் ஏறப் போக ஷ்ரவனை அவசரமாக அவர்களோடு அனுப்பி வைத்தான் கே.கே.

பிரக்ருதி புரியாமல் விழிக்கும் போதே “நான் கிருதிய அழைச்சுட்டு வர்றேன்... ஃபுட் ட்ரக் பத்தி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணணும்” என்றான் அவன்.

பிரணவியும் எதுவும் கேட்காமல் தலையாட்ட “உனக்கு என்னை ஃபேஸ் பண்ண தைரியமில்லனா போ” என்று அவள் காதில் முணுமுணுத்தான் கே.கே.



பிரக்ருதி அவனை சவாலாகப் பார்த்துவிட்டு “நீங்க கிளம்புங்க... நான் வந்துடுவேன்” என்க கேபும் கிளம்பியது.

அவர்கள் சென்றதும் “என்னடா பேசணும்?” என்று கடுகடுப்போடு வினவினாள் அவள்.

“கார்ல போய் பேசலாமா?”

“ஏன்? அங்க தான் கிஸ் பண்ண வசதியா இருக்குமா?”

“இது அமெரிக்கா... இங்க கிஸ் பண்ணுறதுக்குக் காருக்குத் தான் போகணும்னு அவசியமில்ல... எனக்கு இப்பவே உன்னை கிஸ் பண்ணணும்னு தோணுச்சுனா தாராளமா பண்ணுவேன்”

பிரக்ருதி ஒரு அடி பின்னே எடுத்து வைத்தவாறே “உனக்கு இன்னைக்கு என்னாச்சு கிரிஷ்?” என்க

“இன்னைக்கு இல்ல... அன்னைக்கு” என்றவன் அவள் கண் முன்னே கொசுவர்த்தி சுருள் போல விரல்களால் வரைந்து காட்ட அவன் சொன்ன ‘அன்று’ என்பது எந்த தினம் என பிரக்ருதிக்குப் புரிந்து போனது.

“ஹேய் அது ஒரு ஆக்சிடெண்ட் கிரிஷ்... நான் அந்தப் பசங்க பேயோனு நினைச்சு பயந்து ஓடி விழுந்து... ப்ச்”

“ஏன் நிறுத்திட்ட? கிஸ் பண்ணிட்டேன்னு கம்ப்ளீட்டா சொல்லு”

“சரி சரி! கிஸ் பண்ணிட்டேன்... அதுக்கு தவுசண்ட் டைம்ஸ் சாரி”



அவள் மன்னிப்பு கேட்கும் விதமாகக் கரம் குவித்தாள்.

“இப்ப நீ சாரி கேட்டு என்னை வில்லனாக்குற கிருதி... என் லைஃப்ல நான் ஃபர்ஸ்ட் டைம் உன்னால சலனப்பட்டு நிக்குறேன்... அண்ட் ஐ பிலீவ், திஸ் இஸ் லவ்”

“என்னது? லவ்வா? சரி லவ்வாவே இருக்கட்டும்... அதை ப்ரபோஸ் பண்ணுறதுக்குனு ஒரு வரைமுறை இருக்குல்ல... இப்பிடி திடுதிடுப்புனா ப்ரபோஸ் பண்ணுவாங்க?”

“லுக்! பால்கனில ஏறி சானட் பாடி ப்ரபோஸ் பண்ணுறதுக்கு நான் ரோமியோவும் இல்ல, நீ ஜூலியட்டும் இல்ல... ஐ திங்க், திஸ் இஸ் த மொமண்ட்... சோ இதை யூஸ் பண்ணிட்டுச் சொல்லிட்டேன்”

பிரக்ருதி அவன் பேச பேச வியப்பில் விழி விரித்தாள்.

“என்ன லுக்? நீ யோசிக்கிறத பாத்தா அதுக்குள்ள பம்பிள், டிண்டர்ல வேற யார் கூடவே டேட்டிங்குக்கு ரெடியாயிட்ட போலயே... போன வாரம் தான் டெல்லியில அஃப்தாப்னு ஒருத்தன் லிவிங் டுகெதர்ல இருந்த பொண்ணை கொன்னுட்டு பம்பிள்ல இன்னொரு பொண்ணு கூட டேட்டிங் பண்ணுனானாம்... கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு... இல்லனா நீயும் இந்த மாதிரி சைகோ கிட்ட மாட்டிப்ப கிருதி”

கே.கே பயமுறுத்தும் குரலில் கூற மெய்யாகவே பிரக்ருதியின் முகத்தில் கலவரம்.

“எனக்கு என்னமோ நீ என்னை வார்ன் பண்ணுற மாதிரி தெரியல, உன்னோட லவ்வ நம்பாததுக்குச் சாபம் குடுக்குற மாதிரி தோணுது” என்றாள் அவள்.

கே.கே பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க சிரமப்பட்டான்.

“சிரிக்காத கிரிஷ்... நான் யோசிக்கணும்” என்று குழந்தை போல உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

கே.கே அவளை ஆர்வமாக நோக்கினான்.

“நீ ஆசைப்பட்ட மாதிரி நான் பணக்காரன் இல்லங்கிறதால யோசிக்கிறியா?”

“அதுவும் ஒரு காரணம் தான்...” என அவள் இழுக்க அவனது முகம் மாறியது.

உடனே அவசரமாக “அது மட்டும் காரணமில்ல கிரிஷ்... உடனே என்னை தப்பா நினைச்சுக்காத... நான் ஆர்.ஜே ஆகணும்... அப்பாவ சம்மதிக்க வைக்கணும்... அப்புறம்” என்று அவள் அடுக்கிக்கொண்டே செல்ல

“உங்க வீட்டுல நாய்க்குட்டி பூனைக்குட்டி இருந்தா அதை சம்மதிக்க வைக்கணும்... சப்போஸ் அதுங்க ப்ரெக்னெண்டா இருந்தா அதுங்க போடுற குட்டியையும் சம்மதிக்க வைக்கணும்” என கே.கே கேலி செய்தான்.

ஆனால் இப்போது பிரக்ருதி சிரிக்கவில்லை.

“உனக்கு டக்குனு என் மேல எப்பிடி லவ் வந்துச்சுனு எனக்குப் புரியல கிரிஷ்... நம்ம ஃப்ரெண்ட்ஸ் தானே”

“லவ் இஸ் லைக் அ ஸ்பார்க் கிருதி” என்றவன் அவளை நெருங்க

“ஏய்! மறுபடியும் கிஸ் பண்ணுனா கொன்னுடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் அவள்.

அவன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டான்.

“ப்லீவ் மீ! நான் அட்வாண்டேஜ் எடுத்துக்க மாட்டேன்”

“உன் வாய் ஒன்னு சொல்லுது... ஆனா கண்ணு வேற என்னமோ சொல்லுது... உன்னை நான் இந்த விசயத்துல துளி கூட நம்ப மாட்டேன் கிரிஷ்”



“சரி நம்பாத... பட் ஐ அம் ஸ்ட்ராங்க், வாட் ஐ அம் சேயிங்... ஐ லவ் யூ... என்னடா லவ் பண்ணுறானேனு என் கிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணாத... நீ என்னை லவ் பண்ணலனா நம்ம ஃப்ரெண்டா லைஃப் லாங்க் இருக்கலாம் கிருதி... தி பால் இஸ் இன் யுவர் கோர்ட்”

கைகளை விரித்து சொல்லிவிட்டு அவன் காரை நோக்கி நடக்க “இவரு பெரிய ஷாரூக்கான்.. கைய நீட்டி போஸ் குடுக்குறான்... ஒன் கப் காபி ப்ளீஸ்ங்கிற மாதிரி லவ்வ சொல்லிட்டுப் போறான்... ஒரு எமோஷன் இல்ல, க்ரேஸ் இல்ல... அட்லீஸ்ட் ஒரு ரெட் ரோஸ் கூட இல்ல” என்று புலம்பியபடியே அவனைத் தொடர்ந்தாள் பிரக்ருதி.



அதே நேரம் சாக்சனி அப்பார்ட்மெண்ட்சை அடைந்த மூவரும் அவரவர் ஃப்ளாட்டுக்குச் சென்றுவிட்டனர். ஷ்ரவன் பொக்கேயை பிரக்யாவிடமே கொடுத்துவிட்டான்.

அதை கண்டும் காணாமலும் நடந்து கொண்டாள் பிரணவி. ஆனால் ஃப்ளாட்டுக்குள் வந்ததும் பிரக்யாவை நிற்க வைத்து விசாரணையை ஆரம்பித்துவிட்டாள்.

“உனக்கும் ஷ்ரவனுக்கும் நடுவுல என்ன நடக்குது பிரகி? நான் இன்னைக்கு நடந்த எல்லாத்தையும் கவனிச்சேன்... நீ எங்க கிட்ட எதையும் மறைக்கிறியா?”

“நான் ஷ்ரவனை லவ் பண்ணுறேன் அண்ணி”

வெளிப்படையாக கூறினாள் பிரக்யா. பிரணவி அதில் அதிர்ந்து போனாள்.

“நீ லவ் பண்ணுறத நான் தப்புனு சொல்லமாட்டேன்... பட் உங்கம்மா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்கம்மா... தெரிஞ்சும் நீ எப்பிடி துணிஞ்ச?”

“அவங்களை என்னால சம்மதிக்க வைக்க முடியும்ங்கிற நம்பிக்கை இருக்கு அண்ணி... அப்பா எனக்குச் சப்போர்ட் பண்ணுவார்... கிருதியும் நீங்களும் அம்மாக்கு எடுத்துச் சொல்லுவிங்க”

“ஏய்! நான் எப்ப உன் லவ்வை அக்செப்ட் பண்ணுனேன்?”

பிரணவி பதறியெழ “நோ டென்சன் அண்ணி” என்று அவளது தோளை அணைத்து அமர வைத்தாள் பிரக்யா. கூடவே அமர்ந்தவள்

“நீங்க எங்க லவ்வ அக்செப்ட் பண்ணிப்பிங்க... நானும் கிருதியும் உங்களுக்கு ஒன்னு தான்னு சொல்லுவிங்கல்... நீங்க என் அம்மாவ மாதிரி அடுத்தவங்க மனசை கஷ்டப்படுத்தி காரியம் சாதிக்கிற டைப் இல்ல... என் அண்ணாவ மாதிரி பொண்ணுங்கனா கூண்டுக்குள்ள அடைபட்டு கிடக்கணும்னு ஆர்கியூ பண்ணுற டைப்பும் இல்ல... நீங்க வாசன் அங்கிளோட பொண்ணு... என் சைட்ல நின்னு யோசிச்சுப் பாருங்க... என்னோட லவ் உங்களுக்குத் தப்பாவே தெரியாது” என தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தாள் பிரக்யா.

பிரணவியும் அதை முழுமையாக கேட்டாள். ஷ்ரவன் நல்லவன் தான். இருப்பினும் மாமியாரையும் கணவனையும் மீறி ஒரு முடிவெடுக்கும் அளவுக்கு அவளுக்குத் தைரியம் இல்லை.

அதற்கு அடிப்படை பிருத்வி மீதான பயம் இல்லை. பிருத்வி மீது அவள் கொண்டிருக்கும் பேரன்பு. எங்கே மாமியாரின் மனம் கோணினால் கணவன் வருந்துவானோ என்ற தயக்கம்.

ஆனால் அருகே அமர்ந்திருக்கும் பிரக்யா அவளுக்குத் தங்கை போன்றவள் அல்லவா! எனவே அவளுக்காக அவளது காதலை ஆதரிக்கும் முடிவுக்கு வந்தாள் பிரணவி.

அதை பிரக்யாவிடம் கூற அவள் சந்தோசமிகுதியில் பிரணவியைக் கட்டியணைத்து முத்தமிட்டாள்.



“தேங்க்யூ அண்ணி... தேங்க்யூ சோ மச்”

அவள் நன்றி நவிழ்ந்து முடிக்கையில் ப்ளாட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள் பிரக்ருதி. அவள் மனமெங்கும் கே.கேவின் வார்த்தைகளே உலா வர இருவரும் அவளை அழைப்பதை கூற கவனியாமல் அறைக்குள் தஞ்சமடைந்தாள் அவள்.

அன்றைய தினத்தில் இரு காதல்களில் ஒன்று அங்கீகாரத்திற்கான முதல் படியில் ஏறிவிட மற்றொன்றோ இன்னும் காத்திருப்போர் பட்டியலில் குடியேறிவிட்டது.

Comments