அலைவரிசை 34

Image
  “லீடர்ஷிப் குவாலிட்டி, ஹெல்பிங் டெண்டன்சி இந்த ரெண்டு குணத்துக்கும் ஒரு சிமிலாரிட்டி உண்டு... இது ரெண்டுமே ஒருத்தருக்குப் பிறவியிலயே வரணும்... இடையில நம்மளால வலுக்கட்டாயமா இந்தக் குணங்களை ஒருத்தருக்குள்ள திணிக்க முடியாது... இன்னொரு ஒற்றுமை என்ன தெரியுமா? தலைமைப்பண்பு நிறைஞ்சவங்களும் சரி, உதவுற மனப்பான்மை உள்ளவங்களும் சரி, நான் அப்பிடியாக்கும் இப்பிடியாக்கும்னு பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணமாட்டாங்க... அவங்க செய்ய வேண்டியத அழகா ப்ளான் பண்ணி சைலண்டா பெர்ஃபெக்டா செஞ்சு முடிச்சிடுவாங்க... உண்மையான தலைவன் பேசி சீன் போட்டுட்டுருக்க மாட்டான்... அதே போல உதவும் மனப்பான்மை உள்ளவங்க வலது கை செய்யுறத இடது கைக்குத் தெரியாத மாதிரி பாத்துப்பாங்க”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் தனது புதிய ரெஸ்ட்ராண்டுக்கு செண்டிமெண்ட் காரணமாக ‘பம்பிள் பி’ என்ற பெயரையே சூட்டியிருந்தான் ஜேக்கப். அதன் திறப்புவிழாவுக்குப் பிரக்ருதியும் பிரக்யாவும் மட்டும் வந்திருந்தனர். பிரணவி கால் வீக்கத்தால் அன்று வீட்டிலேயே இருந்து கொண்டாள். லியானாவின் தொழில்முறை நண்பர்களும் இருவரின் பெற்றோர்

அலைவரிசை 22

 





“வாழ்க்கையில எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விசயங்கள் ரெண்டு இருக்கு... நம்பர் ஒன் நான் செய்யாத விசயத்துக்காக என்னை ப்ளேம் பண்ணுறது, நம்பர் டூ நான் செஞ்ச நல்ல விசயத்த மறந்துட்டு என்னைத் துச்சமா நடத்துறது... இந்த ரெண்டுல ஒன்னை யாராவது எனக்குப் பண்ணுனாங்கனா ஐ வோண்ட் ஃபர்கிவ் தெம் ஈஸிலி... ஜாலியா ஜோவியலா இருக்கிறது தப்பில்ல, ஆனா அடுத்தவங்களோட முட்டாள்தனமான கோவத்துக்கு ஈஸியா இரையாகிற கோமாளியா இருக்குறது தப்பு”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

பம்பிள் பி ட்ரக்கின் வாடிக்கையாளர்களிடம் பெற்ற பணத்தையும் QR கோட் மற்றும் மொபைல் வாலட் மூலம் பெற்ற பணத்தையும் சரி பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்ரவன்.



ஜேக்கப் லியானாவோடு தேனிலவுக்குச் சென்றுவிட்டதால் சமைக்கும் பொறுப்பு முழுவதும் கேசவின் தலையில் விழுந்திருந்தது. அவன் மும்முரமாக வாடிக்கையாளர்கள் கேட்பதை எடுத்துக் கொடுக்க ஷ்ரவன் கணக்கு வழக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென “ஒன் லிக்யூட் ட்ரஃபிள் ஹாட் சாக்லேட் ப்ளீஸ்” என்று பழக்கப்பட்ட குரல் ஒன்று ஒலிக்க தலையை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

அங்கே பிரக்யாவும் பிரக்ருதியும் நின்று கொண்டிருந்தனர். பிரக்ருதியிடம் மட்டும் புன்னகையை வீசியவன் பிரக்யாவைக் கண்டதும் உதட்டை இறுக்கமாகப் பூட்டிவைத்தான்.



அவள் முகம் வாட அதை கவனித்த கேசவ் லிக்யூட் ட்ரஃபிள் ஹாட் சாக்லேட் பானத்தை அவள் கைகளில் திணித்ததோடு “கணக்கு வழக்கை நான் பாத்துக்குறேன்... உன் கிட்ட பேசுறதுக்காக வந்திருக்குறவளை அவாய்ட் பண்ணாம கிளம்பு” என்று ஷ்ரவனிடம் கட்டளையிட்டான்.

“நோ மச்சி... அவங்களுக்கு அவங்களோட சோ கால்ட் ஃப்ரெண்ட் முக்கியம்னா எனக்குச் சோறு போடுற இந்த வேலை முக்கியம்” என அவன் முறுக்கிக்கொள்ள

“எப்பா சாமி, இந்த வேலை இல்லனா நமக்குச் சாப்பாட்டுக்கே வழியில்லாத மாதிரி பேசாதடா... போய் பேசு... இல்லனா நானே குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போய் வெளிய விட்டுடுவேன்” என்றபடி அவனை நெருங்கினான் கேசவ்

உடனே வேகமாக எழுந்த ஷ்ரவன் ஒரு முறைப்போடு பிரக்யாவைத் தொடர்ந்தான்.

அவளோ அவனிடம் முதல் முறை பேசுபவளைப் போல சற்று பதற்றத்தோடு தனியே வந்தாள்.

ஷ்ரவன் அவளது கையிலிருந்த கோப்பையில் விப்ட் க்ரீம் அலங்காரத்துடன் இருந்த லிக்யூட் ட்ரஃபிள் ஹாட் சாக்லேட் பானத்தைப் பார்த்தவன் “குடிச்சிக்கிட்டே கூட பேசலாம்” என யாரிடமோ பேசுவது போல கூற

“சாரி ஷ்ரவன்” என்றாள் பிரக்யா.

“நான் குடிக்கச் சொன்னேன்”

அதட்டலாக அவன் கூறவும் குடிக்க ஆரம்பித்தவள் விப்ட் க்ரீம் அவளது மேலுதட்டில் உருவாக்கிய மீசையைக் கவனியாமல் மீண்டும் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தாள்.

“சாரி ஷ்ரவன்... நான் மட்டும் சரியான நேரத்துக்கு அன்னைக்கு போகலனா ஹாரி சூசைட் பண்ணிருப்பான் தெரியுமா? ரொம்ப கஷ்டப்பட்டு அவனை நார்மல் ஆக்குனேன்... இப்ப அவன் தெளிவாகிட்டான்”

“வெய்ட்... இப்ப நீ என் கிட்ட சாரி கேக்க வந்தியா? இல்ல உன் ஃப்ரெண்டோட கண்டிசன் பத்தி அப்டேட் குடுக்க வந்தியா?”

“சாரி கேக்க தான்”

சொல்லும் போதே அவளது குரல் உள்ளே போய்விட்டது.

“எனக்கு கேக்கல”

“உன் கிட்ட சாரி கேக்க வந்தேன் ஷ்ரவன்”

“அப்ப சாரி மட்டும் கேளு... அதை விட்டுட்டு மறுபடியும் அவனை நம்மளோட கான்வர்சேசனுக்குள்ள கொண்டு வராத... இட்ஸ் இரிட்டேட்டிங்”

எரிச்சல் மண்டிய குரலில் அவன் உரைக்க பிரக்யா அவனைச் சமாதானம் செய்யும் வழியறியாது விழித்தாள்.

மூக்குக்கண்ணாடி ஃப்ரேமுக்குள் அங்குமிங்கும் ஓடிய அவளது கோலிகுண்டு விழிகளை பார்க்கையில் அவனுக்குள் இருந்த கோபம் மறைந்து பரவசம் இழையோடியது. அதை மறைத்துக்கொண்டவன் “நான் உன்னை சாரி கேக்க சொன்னேன்” என்றான் விறைப்பாக.

“நான் தான் வந்ததுமே சாரி கேட்டுட்டேனே”

அப்பாவியாய் அவள் மொழிய அவளது கையிலிருந்த கோப்பையை வாங்கிக்கொண்டவன் பிரக்யாவின் மேலுதட்டிலிருந்த தற்காலிக விப்ட் க்ரீம் மீசையை தனது விரலால் துடைத்துவிட்டான்.



அவள் திகைக்கும் போதே “நான் ரொம்ப ரொம்ப பொசஷிவ்... நான் நேசிக்கிற பொண்ணு எனக்கு மட்டும் தான் இம்பார்டென்ஸ் குடுக்கணும்ங்கிறதுல பிடிவாதமா இருக்குறேன்... என்னை மீறி உனக்கு வேற யாரும் குளோஸா இருந்தா செம கடுப்பாகுதுடி” என்றான் ஆதங்கத்துடன்.

“கிருதி இருந்தா கூடவா?”

கண்களில் ஆச்சரியத்தைப் பூசிக் கேட்டாள் பிரக்யா.

“அவளுக்கு மட்டும் எக்சப்சன்... வேற யார் வந்தாலும் மர் கயா தான்”

கழுத்தின் குறுக்கே பெருவிரலை வைத்து கோடிழுத்துக் காட்டவும் பிரக்யாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அவனது கையிலிருந்த கோப்பையை வாங்க கை நீட்டியவளிடம் கொடுக்க மறுத்தவன் ஒரே மிடறில் கோப்பையைக் காலி செய்தான்.

“ஏய் என்னடா பண்ணுற? ஐயோ நான் ஆசையா வாங்குனேனே” என அவள் உதட்டைப் பிதுக்கி ஏமாற்றத்துடன் காலை உதைக்க

“என்னை டீல்ல விட்டுட்டு ஹாரிய பாக்க ஓடுனல்ல... அதுக்கு பனிஷ்மெண்ட் இது” என ஷ்ரவன் அமர்த்தலாக உரைத்தான்.

“உன் பனிஷ்மெண்ட்லாம் ஒரு தினுசா தான் இருக்கு”

“ஓ! உனக்கு பனிஷ்மெண்ட் கூட ரொமாண்டிக்கா இருந்தா தானே பிடிக்கும்”

விசமப்பார்வையுடன் கூறியவனின் கவனம் தன் மீது குவிவதைக் கண்டு வேகமாக விலகினாள் பிரக்யா. 



அதற்கு வாய்ப்பளிக்காமல் அவளை அணைப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தவன் குரல் கேட்கும் தூரத்திலிருந்த ட்ரக்கை நோக்கி கத்தினான்.

“இன்னைக்கு எனக்கு ஹாஃப் டே லீவ் வேணும் கிரிஷ்”

“எதுக்குடா?”

கேசவும் அங்கிருந்து கத்தினான்.

“என் ஹாட் சாக்லேட் கூட அவுட்டிங் போறேன்டா”

இது என்ன புதுப்பெயர் என்று பிரக்யா விழிக்கும் போதே கேசவ் அனுமதியளித்துவிட “போலாமா டார்லிங்?” என்று அவளிடம் கேட்டபடி இழுத்துச் சென்றான் ஷ்ரவன்.

இக்காட்சியை ட்ரக் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்த பிரக்ருதி உச்சு கொட்டினாள்.

“காதல் வேகத்துல உன் ஃப்ரெண்டுக்கு வேலை எல்லாம் ஒன்னுமே இல்ல போல... அவன் போற வேகத்துக்குச் சீக்கிரமே ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் வரப்போகுது”

“என்ன உளறுற?”

“எங்க மகிழினி ஆன்ட்டி இன்னும் ஒன் வீக்ல இங்க வரப்போறாங்க”

“வாட்?”

“ஷாக் ஆகாத... எந்த மாமியார் தான் ப்ரெக்னெண்டா இருக்குற மருமகளை பிறந்தவீட்டுப்பொறுப்புல விடுவாங்க? அவங்களே இருந்து மருமகளுக்குப் பாத்து பாத்து செய்யணுமாம்... அவங்க இங்க வந்தா அவுட்டிங்லாம் கனவு தான் பாத்துக்க”

“அவங்க கண்ட்ரோல் பிரகியோட நிக்குமா? இல்ல உன் வரைக்கும் வருமா?”

யோசனையாய் கேட்டவனை உதட்டைச் சுழித்தபடி ஒரு பார்வை பார்த்தாள் பிரக்ருதி.



“என்ன பாக்குற? நானும் உன்னை லவ் பண்ணுறேன்மா... எனக்கும் உன்னைப் பாக்கணும்னு தோணும்ல... அந்த ஆன்ட்டி அதுக்கும் ஒன் ஃபார்ட்டி ஃபோர் போட்டா நான் பாவம்ல”

ஏதோ குழந்தைக்குச் சாக்லேட் சாப்பிட தோணுவது போல அவன் கூற அவளுக்குச் சிரிப்பும் திகைப்பும் ஒரு சேர வந்தது.

“இப்ப மட்டும் நம்ம காதலில் கசிந்துருகுற மாதிரி பேசுற” என்றவள் கிளம்ப எத்தனிக்க

“இன்னைக்கு நான் மட்டும் தனியா எல்லா வேலையும் பாக்கணும்... கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமே” என்றான் கேசவ்.

“ஹெல்ப் பண்ணுறதுலாம் ஒரு மேட்டரே இல்ல... எனக்கு எவ்ளோ சேலரி தருவ?”

“ஜேக் ஒன்டேக்கு எவ்ளோ குடுத்தானோ அதே சேலரி”

“க்கும்! அப்ப கூட எக்ஸ்ட்ராவா அஞ்சு பத்து குடுக்குறேன்னு சொல்லுறியா பாரு... இதுல நான் உன்னை லவ் பண்ணுறேன்னு பத்து பக்கத்துக்கு டயலாக் வேற”

சலித்துக்கொண்டாலும் அவனுக்கு உதவியாக பம்பிள் பி ட்ரக்கில் பணியாற்ற ஒப்புக்கொண்டாள் பிரக்ருதி.



இருவரும் சேர்ந்தே மிச்சமிருந்த சாக்லேட் பானங்களையும் சிற்றுண்டிகளையும் விற்று தீர்த்துவிட்டு ட்ரக்கை ஜேக்கபின் கராஜில் விடுவதற்கு கிளம்பினர்.

“ஜேக்கும் லியாவும் எப்ப திரும்பி வருவாங்க?”

“இன்னும் ஒன் வீக் ஆகும்... அதுக்கு மேல போலீஸ்காரம்மாக்கு லீவ் கிடைக்காதாம்”

பேசிக்கொண்டே கட்டர்மில் ட்ரைவுக்கு வந்துவிட்டனர் இருவரும். கராஜுக்குள் ட்ரக்கை நிறுத்திவிட்டு இருவரும் கிளம்ப போன தருணத்தில் கேசவின் மொபைலில் அழைப்பு வந்தது.

அழைத்தவன் ஜேக்கப். அழைப்பை ஏற்றதுமே அவனது குரலிலிருந்த பரபரப்பு கேசவையும் பற்றிக்கொண்டது.




“என்னோட கிரெடிட் கார்ட்ஸ் எதையும் நான் எடுத்துட்டு வரல கேசவ்... மொபைல் வாலட்ல பே பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்... பட் இன்னைக்கு என் கிரெடிட் கார்ட்ல இருந்து மூனு தடவை ட்ரான்சாக்ஷன் நடந்திருக்குனு மெயில் வந்திருக்கு... உனக்கு என் வீட்டோட பாஸ்கோட் தெரியும்ல... கொஞ்சம் என் கிரெடிட் கார்ட்ஸ் அங்க தான் இருக்குதானு செக் பண்ணிடேன் ப்ளீஸ்”

“ஓ.கே... பட் எதுக்கும் லியானா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடு டூட்”

“அவ பக்கத்துல ஷாப்பிங் போயிருக்கா கேசவ்... பட் ஷீ ஆல்வேஸ் யூசஸ் ஹெர் ஓன் கார்ட்... அவ என்னோடதை யூஸ் பண்ண மாட்டா கேசவ்... தட்ஸ் ஒய் ஐ அம் ஆஸ்கிங் யூ டு செக் மை ஹோம்”

“சரி! நீ டென்சன் ஆகாத... நான் செக் பண்ணிட்டு உடனே இன்ஃபார்ம் பண்ணுறேன்”

பிரக்ருதியிடம் விசயத்தைக் கூறியவன் அவளோடு சேர்ந்து ஜேக்கபின் வீட்டுக்குள் பிரவேசித்தனர். கேசவ் மட்டும் உள்ளே செல்ல பிரக்ருதி கதவுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள்.

எலக்ட்ரானிக் லாக்கில் எதையோ தொட்டுப் பார்த்தபடி மொபைலை நோண்டிக்கொண்டிருந்தவள் ‘ENTER YOUR PASSCODE’  என்ற வார்த்தையைக் கவனியாமல் ஏதோ சில எண்களை அழுத்தியபடி முகப்புத்தகத்தில் மூழ்கியவாறு வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.



அப்போது பாஸ்கோட் தவறானது என்ற அலாரம் அடிக்க கேசவ் அதை கவனித்துவிட்டான். கவனித்தவன் பிரக்ருதியை நோக்க அவளோ தப்பு செய்து மாட்டிக்கொண்ட சிறுகுழந்தையைப் போல விழித்தாள்.

“இப்ப எதுக்கு அலார்ம் அடிச்சுது?” என்ற கேள்வி வேறு!

கேசவ் எதையோ யோசித்து சிரித்துக்கொண்டவன் “நத்திங்.. நீயும் வந்து கிரெடிட் கார்டை தேடு” என்க இருவரும் ஜேக்கப் சொன்ன இடத்தில் கிரெடிட் கார்டுகளை தேட ஆரம்பித்தனர்.

ஒருவழியாக பதினைந்து நிமிட தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஜேக்கபின் மேஜை உள்ளறையிலிருந்து  இரண்டு கார்டுகள் எட்டிப் பார்க்க கேசவ் அவனதுக்கு அழைத்து விவரம் தெரிவித்தான்.

ஆனால் மறுமுனையில் ஜேக்கப்போ “என்னோட மூனாவது கார்ட்ல இருந்து பேமெண்ட் போயிருக்கு கேசவ்... நான் ரொம்ப டென்சன் ஆகிட்டேன்... அப்புறம் தான் லியானா அந்தக் கார்டை எமர்ஜென்சிக்கு யூஸ் பண்ணிட்டேன்னு சொன்னா... சாரி கேசவ்... என்னால உனக்கு ரொம்ப சிரமம்” என்றான்.

“இட்ஸ் ஓ.கே ஜேக்... உனக்கு எலக்ட்ரானிக் கீபேட்ல இருந்து எதுவும் மெயில் வந்துச்சா?” என்று வினவினான் கேசவ்.

“வெயிட்... ஐ வில் செக்”

சில நொடிகளுக்குப் பிறகு “பாஸ்கோட் தப்புனு வந்திருக்கு... எதுவும் பிரச்சனையா கேசவ்?” என அவன் கேட்க

“ஒன்னுமில்ல... கிருதி தெரியாம ராங் பாஸ்கோடை போட்டுட்டா... த்ரீ டைம்ஸ் ராங்கா போட்டா தானே டோர் லாக் ஆகும்?” என்று பதிலுக்குக் கேட்டான் கேசவ்.

“ஆமா”

“டோண்ட் வொரி... அவ ஒரு தடவை தான் போட்டா... நீ உன் ஹனிமூனை என்ஜாய் பண்ணு... நாங்க கிளம்புறோம்”

ஜேக்கபிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் இன்னும் தவறு செய்த பாவனையில் கையை பிசைந்தபடி நின்று கொண்டிருந்த பிரக்ருதியிடம் வந்தான்.

“என்ன பாக்குற?”

“டோர் லாக் ஆகிடுச்சா கிரிஷ்? நான் தெரியாம ராங் பாஸ்கோட் போட்டுட்டேன்... இப்ப எப்பிடி பாஸ்கோடை ரீசெட் பண்ணுறது?”

“யாருக்குத் தெரியும்?” என்றபடி கைகளை உயரே தூக்கி சோம்பல் முறித்துக்கொண்டான் கேசவ்.

அவன் அங்கே கிடந்த பீன் பேக்கில் சரிந்து அமர பிரக்ருதியோ பதற்றத்துடன் கதவைத் திறக்க சென்றாள்.

“ஏய் எங்க போற?”

வேகமாக ஓடிச்சென்று அவளைத் தடுத்து நிறுத்தினான் கேசவ்.

“கதவைத் திறக்க முடியாது... நீ தான் ராங் பாஸ்கோட் போட்டு லாக் பண்ணிட்டியே... ஒழுங்கா வந்து உக்காரு” என்றான்.

“நான் வேணும்னு பண்ணல கிரிஷ்”

பரிதாபமாக கூறியவள் “எப்பிடி இதை ரீசெட் பண்ணுவ?” என்க

“பொறுமை பொறுமை... இப்பிடி வந்து உக்காரு” என்றபடி மீண்டும் பீன்பேக்கில் சென்று அமர்ந்தான்.

பிரக்ருதி சோகமாக அவனெதிரே கிடந்த மற்றொரு பீன்பேக்கில் அமர்ந்தாள்.



நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்தவளிடம் “ஏன் இவ்ளோ டென்சன்?” என வினவினான் அவன்.

“வேற எதுக்கு நான் டென்சனா இருக்க போறேன்? எல்லாம் உன்னை நினைச்சு தான்”

“என்னை நினைச்சா? புரியல”

“நீ பப்ளிக் ப்ளேஸ்லயே பச்சக் பச்சக்னு கிஸ் பண்ணுவ... இப்ப தனியா வேற இருக்குறோமா அதான் டென்சன்”

கேசவ் அதை கேட்டு உரக்க சிரித்தான்.

“எமன் கிட்ட கூட விளையாடு.. எலக்ட்ரானிக் டிவைஸ் கிட்ட விளையாடதனு சும்மாவா சொல்லி வச்சாங்க? இப்ப பாரு, வீட்டுக்குள்ள ஜெயில் கைதி போல அடைஞ்சு கிடக்கோம்”

கண்ணீர் விடாத குறையாக புலம்பித் தீர்த்தாள் பிரக்ருதி.

“புலம்புனது போதும்... நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்... சைலண்டா கவனிக்கிறியா?”

அவள் புலம்பலை நிறுத்திவிட்டு கேசவின் பேச்சுக்குக் காது கொடுத்தாள்.

“காமெடி பண்ணாம சீரியஸா யோசிச்சு பதில் சொல்லு... டூ யூ லவ் மீ?”

“இப்போதைக்கு இல்ல”

தீர்மானமாக உரைத்தாள் அவள்.

“ரீசன்?”

“லவ் பண்ணுறதுக்குக் காரணம் வேணுமா கிரிஷ்?”

“டேட்டிங் ஆப்ல லவ்வை தேடுனவ பேசுற பேச்சா இது?”

பிரக்ருதி கண்களை மூடித் திறந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

பின்னர் தெளிவான குரலில் இயம்ப ஆரம்பித்தாள்.

“லிசன்! எனக்கு காவியக்காதல் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல... நான் பக்கா ப்ராக்டிக்கலான பொண்ணு... ஃபினான்ஷியலி ஸ்ட்ராங்கா இல்லாத ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சு அவனோட சேர்ந்து லைஃப் லாங்க் கஷ்டப்படணும்னு எனக்கு என்ன தலையெழுத்து சொல்லு... அதனால தான் பணக்காரனா பாத்து லவ் பண்ணணும்னு நினைச்சேன்... ஆனா...”

பாதியில் நிறுத்தியவள் நிஷாந்துடனான பிரச்சனை நினைவுக்கு வரவும் வேதனையில் முகம் சுளித்தாள். அந்த நேரத்தில் அவளது கரத்தை ஆறுதலாகப் பற்றினான் கேசவ்.

அப்போது அவளது மோதிரவிரல் உறுத்தவும் அதை திருப்பிப் பார்த்தவன் விரலில் மின்னிய சாலிட்டேர் வைர மோதிரத்தைக் கண்டதும் புருவம் சுருக்கினான்.

அதைத் தொட்டு “இது என்ன கிருதி?” என்று கேட்க



“பாத்தா தெரியல? சாலிட்டேர் டைமண்ட் ரிங்” என அசிரத்தையாக கூறினாள் அவள்.

“அது தெரியுது... இவ்ளோ காஸ்ட்லி டைமண்ட் ரிங் உனக்கு எப்பிடி கிடைச்சுது?”

“நிஷாந்த் போட்டுவிட்ட ரிங் இது”

அவள் சொன்னதும் தீச்சுட்டாற்போல அவளது கையிலிருந்து தனது கரத்தை விலக்கிக் கொண்டான் கேசவ். பிரக்ருதி வித்தியாசமாக உணர்ந்தவள் குழப்பமாக அவனை ஏறிட்டாள்.

இன்னுமா இவள் இந்த மோதிரத்தை போட்டிருக்கிறாள்? நான் ஒருவன் இவள் மனதில் புகுவதற்கு என்ன வழி என தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இவளோ இன்னும் பணக்காரனாக பார்த்து தான் காதலிக்கவேண்டுமென்ற முடிவில் மாறாமல் இருக்கிறாள்.

கடைசியில் இவளும் பணம் மட்டும் இருந்தால் போதுமென எண்ணும் பெண்களில் வரிசையில் சேர்ந்துவிட்டாளே என்ற கசப்பு அவனது மனதில் மெதுவாக பரவியது.

இப்போது கூட கதவு லாக் ஆகிவிட்டது என்று பொய் சொல்லி அவளிடம் தனது மனதிலுள்ள காதலின் தீவிரத்தைப்  புரியவைக்கலாமென எண்ணியிருந்தவன் நிஷாந்த் அணிவித்திருந்த மோதிரத்தையும் அவளது நிலைப்பாடை வாய்மொழியாக அவள் கூறியதையும் கேட்டு ஏமாற்றமடைந்தான்.

“நீ இன்னும் இதை கழட்டலனா என்ன அர்த்தம்?” என்று கேட்டவன் அவள் குழப்பத்தில் விழிக்கவும் எரிச்சலோடு எழுந்துவிட்டான்.

“இந்த ரிங்கை....” என்று பதில் பேச வந்தவளிடம் கையுயர்த்தி நிறுத்துமாறு சைகை செய்தவன்

“ஐ டோண்ட் வாண்ட் எனி எக்ஸ்ப்ளனேசன்... இதை கழட்டுறதும் கழட்டாம இருக்குறதும் உன் இஷ்டம்... உனக்கு என் மேல லவ் வராதுனு புரிஞ்சு போச்சு... நீ உனக்கேத்த பணக்காரனா தேடி கண்டுபிடிச்சு லவ் பண்ணு... இனிமே இந்த டாபிக்கை நான் பேச மாட்டேன்... கிளம்பலாமா?”

“ஆனா கதவு லாக் ஆகிடுச்சே”

“இனிமே கதவு திறக்கும்” என்றவன் வேகமாக சென்று கதவைத் தொட அது வழக்கம் போல திறந்தது.

பிரக்ருதி மீண்டும் குழப்பத்துடன் “கதவு லாக் ஆகிடுச்சுனு நீ தானே சொன்ன?” என்க

“நான் என்னமோ நினைச்சுட்டு வந்தேன்... அது எதுவும் உனக்குப் புரியப்போறதில்ல... புரிஞ்சிக்க விரும்பாதவங்க கிட்ட பேசுறது எனக்குப் பிடிக்காது... போலாமா?” என விறைப்பாக அவன் கேட்கவும் வேறு வழியின்றி தலையாட்டியபடி அவனோடு கிளம்பினாள் பிரக்ருதி.

கதவை மீண்டும் சரியான பாஸ்கோட் போட்டு மூடியவன் வேதனையோடு அங்கே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் ஏறினான். அவனைத் தொடர்ந்து பிரக்ருதியும் அமர கார் மோண்ட்ஃபோர்ட் ட்ரைவை நோக்கி கிளம்பியது.

“கிரிஷ் நீ என் மேல கோவமா இருக்கியா?”



“இல்ல... நான் ஒன்னு சொல்லுறேன், கேப்பியா?”

என்னவென்பது போல ஏறிட்டாள் அவள்.

“லவ் பண்ணுனா பணக்காரனை தான் பண்ணுவேன்னு சபதம் எடுத்த மாதிரி ஃப்ரெண்ட்ஷிப்பையும் பணக்காரங்க கூட மட்டும் வச்சுக்க கிருதி... ஏன்னா காதலை மாதிரி நட்பும் புனிதமான உணர்வு தான்... அதுக்கும் பணத்தையே அளவுகோலா வச்சுக்க”

அவனது வார்த்தை பிரயோகங்களில் கோபமுற்றாள் பிரக்ருதி. ஏற்கெனவே ஜேக்கபின் வீட்டில் அவனது நடத்தை திடீரென மாறியதில் உண்டான குழப்பம் இப்போதைய எரிச்சலோடு கலந்து கோபமாக உருவெடுத்தது.

அதன் விளைவாக அவளிடமிருந்து வார்த்தைகள் வரம்பு மீறி வெளிவர ஆரம்பித்தது.

“நான் யார் கூட பேசணும், பழகணும், ஃப்ரெண்ட்ஷிப் வச்சிக்கணும்னு நீ எனக்கு க்ளாஸ் எடுக்க வேண்டாம் கிரிஷ்... உன்னோட லவ்வை நான் அக்செப்ட் பண்ணலனா என்ன வேணும்னாலும் பேசுவியா? காட், இந்த உலகத்துல உன்னை தவிர வேற ஆம்பளையே இல்லங்கிற நிலமை வந்தாலும் நான் உன்னை லவ் பண்ண மாட்டேன்டா”



“ஏன்னா நான் பணக்காரன் இல்ல... அதானே?”

“ஆமா! இங்க பாத்தியா? வெறுமெனே டேட்டிங்குக்கு வர்றப்பவே சாலிட்டர் டைமண்ட் ரிங் போட்டுவிட்டான் ஒருத்தன்... உன்னால எனக்கு என்ன தர முடியும்? மிஞ்சி மிஞ்சி போனா நாலு கப் ஃப்ராப்புசீனோ குடுப்பியா? விடு கிரிஷ்”

அவளது பதிலடியில் கேசவின் முகம் கறுத்தது.

பணம்! பணம்! பணம்!

இதை தவிர வேறு பேச்சே இல்லையா? தொழில் சாம்ராஜ்ஜியத்தில் பெயர் பெற்ற கார்கி குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவன் நான் என பிரக்ருதியிடம் கூற ஒரு நிமிடம் கூட ஆகாது அவனுக்கு.

ஒருவேளை தன்னை அவ்வாறு அறிமுகம் செய்து கொண்டு அதன் பிறகு பிரக்ருதி தன்னைக் காதலித்தால் அதை விட பெரிய அவமானம் அவனுக்கு வேறில்லை.

பிரக்ருதி கூறியது போன்ற வார்த்தைகள் ஒரு காலத்தில் ஒருவனின் மரணத்துக்குக் காரணமாக இருந்தன. இன்று அதே வார்த்தைகளே அவன் மனதில் அரும்பு விட்ட காதலை சாகடித்து அடைத்து வைக்கும் சவப்பெட்டியின் முதல் ஆணியாக இறங்கின.

“இதோட நீயும் நானும் பேசிக்கிறது கடைசியா இருக்கட்டும்”

இறுக்கமான குரலில் உரைத்தவன் காரைச் செலுத்துவதில் கவனமாகிவிட பிரக்ருதியோ அவனது வார்த்தைகளின் தீவிரத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

Comments

Post a Comment