அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 18

 



“ரெஸ்பெக்ட்’ ‘லவ்’ – இந்த ரெண்டும் சிமிலரான குவாலிட்டியா தோணலாம். ஆனா உண்மை என்னனா இந்த ரெண்டும் ரொம்ப வித்தியாசமான குவாலிட்டிஸ். நீங்க அன்பு காட்டாத மனுசங்க மேல கூட உங்களுக்கு மரியாதை வரலாம். உங்க அன்புக்குச் சொந்தமானவங்க மேல வச்சிருந்த மரியாதையை இழக்குற நிலமையும் வரலாம். சோ ஒரு ரிலேசன்ஷிப்ல அன்பை விட மரியாதை தான் முக்கியமானது. எங்க மரியாதை கேள்விக்குறியாகுதோ அங்க காட்டப்படுற அன்பு அடிமைத்தனத்தை தான் உருவாக்கும். மரியாதை இல்லாத அன்பு வீக்கான பேஸ்மெண்ட்ல கட்டப்படுற கட்டிடம் மாதிரி. எப்ப வேணும்னாலும் அந்த அன்பு சரிஞ்சு மண்ணோட மண்ணா போயிடும்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

“அர்பன் லெஜண்டுக்குப் பிறந்தவங்க... நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? அந்தக் குட்டி பிசாசுங்களாச்சும் ஹாலோவீன் கெட்டப்னு சொல்லிருக்கலாம்”

ஜேக்கப் லியானாவின் திருமண அறிவிப்பு பார்ட்டியில் நடந்ததை பிரணவியிடம் கூறிக்கொண்டிருந்தாள் பிரக்ருதி. கவனமாக கே.கேவுடன் விபத்தாக நடந்தேறிய முத்தத்தை மட்டும் தவிர்த்துவிட்டாள்.

அவள் கூறுவதைக் கேட்டு பிரணவியோடு சேர்ந்து பிரக்யாவும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“அதுங்க கிரிஷ் கிட்ட என்னமோ சொல்லுச்சே... ஹான், ட்ரிக் ஆர் ட்ரீட்... அப்பிடினா என்ன நவி?” என தமக்கையிடம் கேட்டாள் பிரக்ருதி.

“ஹாலோவீனுக்காக பசங்க விதவிதமான கெட்டப் போட்டுட்டு பக்கத்துவீட்டுக்காரங்க கிட்ட சாக்லேட் வாங்க வருவாங்க... அவங்க எந்த வீட்டுக்கதவைத் தட்டுறாங்களோ அந்த வீட்டுக்காரங்க கிட்ட ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’னு கேப்பாங்க... வீட்டுக்காரங்க ட்ரிக்னு சொன்னாங்கனா அந்தப் பசங்க என்ன கெட்டப் போட்டிருக்காங்களோ அதுக்கேத்த மாதிரி நடிச்சோ அல்லது குறும்புத்தனமோ ஏதாவது சேட்டையோ பண்ணிக் காட்டுவாங்க... சப்போஸ் அந்த வீட்டுக்காரங்க ட்ரீட்னு சொன்னாங்கனா சாக்லேட் எடுத்து அந்தப் பசங்க கிட்ட குடுப்பாங்க... இது தான் ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’டுக்கான அர்த்தம்”





பிரணவி விளக்கமளித்ததும் “உன்னோட பொண்ணும் வளந்ததுக்கு அப்புறம் ஹாலோவீனுக்கு அவளுக்கு விதவிதமா கெட்டப் போட்டுவிடுவல்ல?” என கேட்டாள் பிரக்ருதி.

“நான் அவளுக்கு பம்ப்கின் கெட்டப் போட்டுவிடுவேன்”

“இல்லண்ணி.... ஹாரிபார்ட்டர்ல வர்ற மேஜிக் ஹேட் கெட்டப் போடலாம்”

“அது நல்லாவா இருக்கும்?”

மூவரும் பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் பிரணவி களைப்பாகிவிட “நீங்க தூங்குங்க அண்ணி... அப்புறமா பேசிக்கலாம்” என்க பிரணவியும் தூங்க சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் பிரக்ருதி பிரக்யாவைத் தனியே அழைத்துச் சென்றாள்.

வழக்கமாக அமரும் நீரூற்றின் அருகே வந்தமர்ந்தனர்.

“நீ ஷ்ரவன் கிட்ட அவனோட ஃபேமிலி பத்தி விசாரிச்சியா?”

“நான் ஆரம்பிச்சேன் கிருதி... ஆனா அவன் பிடி குடுக்கவேல்ல... நான் ஒன்னும் அக்யூஸ்ட் இல்ல... பயப்படாதனு சொல்லிட்டான்... நம்ம ஜேக் கிட்ட கேட்டுப் பாக்கலாமா?”

“வாய்ப்பே இல்ல... அவன் மேல கே.கேவும் ஷ்ரவனும் ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க... கே.கேவும் பெருசா எதுவும் சொல்லல... அவனோட டாக்டர் பழசு எதையும் பேசக்கூடாதுனு சொன்னாராம்”



பிரக்ருதி சொல்லிக்கொண்டெ இருக்கையில் பாதியில் நிறுத்தினாள்.

“ஹேய் பிரகி! டாக்டர்... அந்த டாக்டருக்கு இவங்க ரெண்டு பேரை பத்தியும் ஓரளவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்ல... நாம ஏன் அவங்க கிட்ட கேக்கக்கூடாது?”

உடனே பிரக்யாவின் முகம் பளிச்சிட்டது. அதுவே சரியான வழியென இருவருக்கும் தோன்றிவிட பிரக்ருதி மெதுவாக கே.கேவிடம் மாதாந்திர கவுன்சலிங் தேதியைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

அந்நாளில் இருவரும் கே.கேவைப் பின் தொடர்ந்து சென்று மருத்துவரிடம் அவர்கள் குறித்த விவரத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஷ்ரவனும் கே.கேவும் மைண்ட்ஃபுல் ஹெல்த் சொல்யூசனில் மருத்துவர் சுஷ்ருதா பீட்டர்ஸை காண ஆடிசன் சென்ற போது அவர்களிருவருக்கும் தெரியாமல் பிரக்யாவைத் தன்னோடு அழைத்துச் சென்றாள் பிரக்ருதி.

இதை அறியாத கே.கே சுஷ்ருதா கேட்ட கேள்விகளுக்கு முன்பு போலன்றி இயல்பான உற்சாகத்துடன் பதிலளித்துக் கொண்டிருந்தான்.

“சோ உங்களால இப்ப தேர்ட் பெர்சன்ஸ் கூட இயல்பா பழக முடியுது, ஃப்ரெண்ட்ஷிப் ஏற்படுத்திக்க முடியுது... ஃபைனலி உங்க மெண்டல் ஹெல்த் இயல்பா மாறிடுச்சு... ஆனா உங்களோட இயல்பான உணர்வுகளை நீங்க கண்ட்ரோல் பண்ணிக்கிறிங்கனு ஷ்ரவன் சொல்லுறார்... அது எந்தளவுக்கு உண்மை?” என்று கேட்டார் சுஷ்ருதா.



“நீங்க என்னை கோவப்படக்கூடாதுனு சொல்லிருக்கீங்க... அதை நான் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணிட்டிருக்குறேன் மேம்... ஷ்ரவன் சொன்ன விசயத்துக்குலாம் நான் கோவப்பட்டா என்னோட மெண்டல் ஹெல்த் பழையபடி பாதாளத்துக்குப் போயிடுமோனு ஒரு பயம் எனக்குள்ள இருக்கு” என அவனளித்த பதிலை தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டவர் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி டீபாய் மீது வைத்தார்.

ஒரு நொடி கே.கேவை ஆழ்ந்து நோக்கி புன்னகைத்தார்.

“உங்களை நான் பழையபடி கேசவ் கிரிஷ்சா தான் மாறச் சொன்னேன்... கோவமே படாத புண்ணியாத்மாவாவோ, காந்தி புத்தராவோ மாறச் சொல்லல கேசவ்.... நீங்களும் உங்க மனசும் இயல்புக்குத் திரும்பணும்ங்கிறது தான் நம்ம ட்ரீட்மெண்டோட ப்ரைமரி கோல்... அதுக்கு நீங்க அவாய்ட் பண்ண வேண்டியது அனாவசியமான கோவத்தை மட்டும் தான்... ஆனா நீங்க அதை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க போல”

“இப்பவும் நீங்க சொல்லுறது எனக்குப் புரியல மேடம்”

“உங்களுக்கு ஆங்கர் இஸ்யூ இருந்தது உண்மை... எடுத்ததுக்கெல்லாம் கோவப்பட்டு ரூடா பிஹேவ் பண்ணுறதை குறைச்சிக்கணும்னு நான் தான் சொன்னேன்... ஆனா நியாயமா உங்க கோவத்தை காட்ட வேண்டிய இடத்துல கூட நீங்க சைலண்டா கடந்து போறிங்கனு ஷ்ரவன் வருத்தப்படுறார்... அவர் பாத்த கிரிஷ் இது இல்லனு ஃபீல் பண்ணுறார்”

கே.கே குழம்பி தவித்தான்.

“உங்களுக்கு ஒரு எக்சாம்பிள் சொல்லுறேன்... நீங்க ஆசையா வாங்குன கிறிஸ்டல் பொம்மைய யாரோ ஒருத்தவங்க தெரியாம தள்ளி விட்டு உடைச்சிட்டாங்க... அப்ப உங்களுக்குக் கோவம் வரும்... ஆனா அந்தக் கோவத்த அப்பிடியே கொட்டி உடைச்சவங்க கிட்ட நீங்க ரூடா பிஹேவ் பண்ணுனிங்கனா அது தான் தப்பு... ஏன்னா யாரும் இன்னொருத்தரோட உடைமைய வேணும்னு உடைக்கிறதில்ல...

ஆனா, உங்களை ஒருத்தன் கத்தியால குத்த திட்டம் போடுறான்... குத்தவும் வர்றான்... அப்பவும் நீங்க கோவப்படாம அவன் குத்துனா குத்தட்டும்னு சைலண்டா இருந்திங்கனா அது ஆங்கர் மேனேஜ்மெண்ட் இல்ல கேசவ்... முட்டாள்தனம்... இன்னைக்கு உங்களை குத்தட்டும்னு நீங்க விட்டிங்கனா அவன் அடுத்தடுத்து ஒவ்வொருத்தரையா கொலை பண்ணிட்டுப் போயிட்டே இருப்பான்... சோ மறைமுகமா ஒருத்தன் தப்பு பண்ணுறதுக்கு நீங்க காரணமாயிடுறிங்க... இந்த இடத்துல நீங்க உங்க கோவத்தை காட்டியிருந்தாலோ தற்காப்புக்கு அவனை தாக்கியிருந்தாலோ அடுத்த தடவை உங்கள அட்டாக் பண்ண அவன் பயப்படுவான்... இப்பவாச்சும் நான் சொல்ல வர்றது புரியுதா?”

கே.கேவின் மனம் இப்போது தெளிந்தது. எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுவது முரட்டுத்தனம் என்றால் நியாயமான இடத்தில் கோபத்தைக் காட்டாமலிருப்பது முட்டாள்தனம்.

தன்னை முரடனாக வேண்டாமென்று மட்டும் தான் சுஷ்ருதா கூறுகிறாரேயன்றி முட்டாளாக மாறச் சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டான் அவன்.

“கோவம்ங்கிறது சாப்பாட்டுல போடுற உப்பு மாதிரி கேசவ்... அது இல்லனா சாப்பாட்டை வாய்ல வைக்க முடியாது... அதிகமாயிடுச்சுனாலும் அதே நிலமை தான்... யூ ஹேவ் டு பேலன்ஸ் தட்”

“ஸ்யூர் டாக்டர்”

“இதோட உங்களோட சைகோதெரபி முடியுது... நவ் யூ ஆர் ஃப்ரீ ஃப்ரம் ஆன்சைட்டி அண்ட் டிப்ரசன்... பட் மெடிஷின் மட்டும் இன்னும் ஒன் மன்த்கு கண்டினியூ பண்ணுங்க... ஆல் த பெஸ்ட்”

சுஷ்ருதா அவனிடம் கை குலுக்கி மனநிறைவோடு விடை கொடுத்தார். அவனுக்காக காத்திருந்த ஷ்ரவனிடம் கே.கே விசயத்தைக் கூற அவனும் மகிழ்ச்சி.

“இனிமே யார் எப்பிடி போனா எனக்கென்னனு சொல்ல மாட்டியே?”

“கண்டிப்பா சொல்ல மாட்டேன் ஷ்ரவன்”

“உனக்குச் சொந்தமான எதையும் விட்டுக்குடுக்க மாட்டியே?”

“நெவர்”

“இது தான் பழைய கிரிஷ்” என்றவன் ஒரு நொடி நிதானித்து “உன்னை நான் கிரிஷ்னு கூப்பிடலாம் தானே?” என யோசனையோடு கேட்க கே.கே அவனை அணைத்துக் கொண்டான்.

“தாராளமா... இனிமே எப்ப நான் என்ன செய்வேனோனு நீ பயத்தோட இருக்க வேண்டியதில்ல... நமக்குக் கிடைச்ச எல்லாத்தையும் திருப்பிக் குடுப்போம் ஷ்ரவன்... அதுவும் டபுள் மடங்கா”

“கண்டிப்பா குடுக்கணும்... நீரவ்கு நடந்த எதையும் அவ்ளோ ஈசியா விட்டுட முடியாது கிரிஷ்”

இருவரும் பேசிக்கொள்வதை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் பிரக்ருதியும் பிரக்யாவும்.

“நீரவ்னா யாருடி?” என பிரக்யா கேட்க

“இந்த நேமை நான் ஆல்ரெடி கேட்டுருக்குறேன்... ஐ திங் கிரிஷ்சோட ஃப்ரெண்ட்... ஐ மீன், கிரிஷுக்கும் ஷ்ரவனுக்கும் அந்த நீரவ் ஃப்ரெண்டா இருக்கணும்” என அடுக்கிய பிரக்ருதி திடீரென ஏதோ புத்தியில் உறைக்கவும்

“ஹேய்! ஃப்ரெண்ட்னா இந்த ஃப்ரெண்டுக்காக தான் அவன் திதி குடுக்கப் போயிருப்பானோ? அந்த நீரவோட டெத் தான் கிரிஷை இப்பிடி மாத்திருக்குமோ?” என கேட்க

“டாக்டர் கிட்ட கேட்டுட்டா எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிடப் போகுது” என்றாள் பிரக்யா.

கே.கேவும் ஷ்ரவனும் அங்கிருந்து நகர்ந்ததும் மெதுவாக இருவரும் மருத்துவரின் ஆலோசனை அறைக்குள் நுழைந்தனர்.

சுஷ்ருதா அன்றைய அப்பாயிண்ட்மெண்ட்கள் அனைத்தும் முடிந்த நிலையில் கிளம்ப எத்தனித்தவர் இரு பெண்களையும் பார்த்ததும் குழப்பத்துடன் புன்னகைத்தார்.

“இன்னைக்கு கேசவ் தான் கடைசி நபர்னு மிச்செல் சொன்னாங்க... நீங்க?” என கேட்டவரிடம்

“நாங்க உங்க கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வரல டாக்டர்... நாங்க கிரிஷோட ஃப்ரெண்ட்ஸ்... அவனோட ஹெல்த் எப்பிடி இருக்குனு கேட்டுட்டுப் போகலாம்னு வந்திருக்குறோம்” என்று அவசரமாக கூறினாள் பிரக்ருதி.

“ஹீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் நவ்... இதுக்கு மேல என் பேஷண்ட் பத்தி நான் உங்க கிட்ட வேற எதையும் சொல்ல முடியாது” என்றவாறு புன்னகைத்தார் அவர்.

“பட் அவனுக்கு என்ன தான் ஆச்சுனு எங்களுக்குத் தெரியணுமே”

“தெரிஞ்சு என்ன பண்ணப்போறிங்க?”

கூர்மையாகப் பார்த்தபடி வினவினார் சுஷ்ருதா.

பெண்களிருவரும் அவரது பார்வை கூர்மையில் தடுமாறினர். பின்னர் பிரக்ருதி சுதாரித்துக்கொண்டாள்.

“எனக்குக் கண்டிப்பா அவனை பத்தி தெரியணும்... ஏன்னா நான் அவனை லவ் பண்ணுறேன்... கல்யாணம் பண்ணிக்கவும் போறேன்... அவனை பத்தி தெரிஞ்சிக்காம நான் எப்பிடி வீட்டுல பேச முடியும்? அவன் கிட்ட கேட்டப்ப என்னோட டாக்டர் பழசு எதையும் பேசக்கூடாதுனு சொல்லிட்டாங்கனு மழுப்புறான்... ப்ளீஸ் டாக்டர்... ஏன் கிரிஷ்கு இப்பிடி ஆச்சு? அவனுக்கு இந்தியால ஏதோ ப்ராப்ளம்னு தெரியும்... என்ன ப்ராப்ளம்? ஏன் யூ.எஸ் வந்தான்?”



“என் பேஷண்ட் பத்தி என்னால ஓப்பனா எதையும் சொல்ல முடியாது... கேசவோட நிலமைக்குக் காரணம் நெருங்குனவங்களோட மரணம்... அதை தடுக்க முடியலையேங்கிற குற்றவுணர்ச்சி அவரை ஆன்சைட்டி, டிப்ரசன்ல தள்ளிடுச்சு... அண்ட் ஷ்ரவனை தவிர மத்தவங்க யார் மேலயும் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்ல... முக்கியமா அவருக்குப் பொண்ணுங்கனாலே வெறுப்பு... ஆனா இந்த பிரச்சனை எல்லாம் வர்றதுக்கு முன்னாடி இருந்த கேசவ் நம்மளை மாதிரி இயல்பான மனுசன்... அவருக்கு எந்த கிரிமினல் பேக்ரவுண்டும் இல்ல... அவரும் ஷ்ரவனும் அந்த மரணங்களை தாங்கிக்க முடியாம அமெரிக்காவுக்கு வந்தாங்க... அவங்களுக்கு நம்ம எல்லாரை மாதிரி இந்தியால ஃபேமிலி இருக்கு, அவங்களுக்குனு புரொபசன் இருக்கு... நிறைய கடமைகளும் இருக்கு... நீங்க தாராளமா இதை பத்தி கேசவ் கிட்ட டேரக்டா பேசிடலாம்... அது தான் பெஸ்ட்”

சுஷ்ருதா அளித்த விளக்கத்தில் பிரக்ருதியும் பிரக்யாவும் கொஞ்சம் திருப்தியுற்ற கணத்தில் அறைக்கதவு தட்டப்படும் ஓசை எழ “யெஸ் கமின்” என்றார் சுஷ்ருதா.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ஷ்ரவனைக் கண்டதும் இரு பெண்களும் பேயறைந்தாற்போல நிற்க அவனோ வியப்போடு அவர்களை நெருங்கினான்.

“நீங்க இங்க என்ன பண்ணுறிங்க?”

சந்தேகமாக அவன் வினவ அவர்கள் பதிலளிக்க திணறினர். சுஷ்ருதாவிடம் மருந்து ப்ரிஸ்கிரிப்ஷன் குறித்த சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, கையோடு அவர்களையும் அழைத்துக்கொண்டு வெளியேறப்போனவனிடம் சுஷ்ருதா கேட்ட கேள்வியில் அவன் வாயடைத்துப் போனான்.

“கேசவ்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க ஷ்ரவன்... மேரேஜ் எங்க? இந்தியாலயா ஆர் யூ.எஸ்லயா?”

“என்ன மேரேஜ்? யாருக்கு மேரேஜ்?” என அவன் வெளிப்படையாகக் கேட்க பிரக்ருதியோ அவசரமாக அவனது கையை அழுத்தினாள்.

“எனக்கும் கிரிஷ்கும் இன்னும் கொஞ்சநாள்ல மேரேஜ் ஆகப்போகுதுல்ல... அதை தான் மேம் கேக்குறாங்க”

“எதே? இது எப்ப?” என அவன் படபடக்க

“ஓ.கே மேம்... உங்களோட ஒர்க்கிங் ஹவர்ஸ்ல டிஸ்டர்ப் பண்ணுறோம்.... சாரி... கண்டிப்பா நான் இந்தியால தான் மேரேஜ் பண்ணிப்பேன்... நீங்க கட்டாயம் வரணும்” என்று மடமடவென ஒப்பித்துவிட்டு பிரக்யாவோடு சேர்ந்து அவனையும் இழுத்துக்கொண்டு வெளியேறினாள் பிரக்ருதி.

வெளியே வந்ததும் “அடச்சீ! கைய விடுங்க... என்னமா ட்ராமா பண்ணுறிங்கடா எப்பா” என அவர்களை உதறித் தள்ளிவிட்டு வேகமாக நடந்தான் ஷ்ரவன்.



பிரக்யா பதற்றத்தோடு நிற்க “என்னடி மசமசனு நிக்குற? போய் அவனைத் தடுத்து நிறுத்து... இல்லனா இவன் கிரிஷ் கிட்ட மேரேஜ் அது இதுனு சொல்லி என் மானத்தை கே.ஜி இவ்ளோனு ஹோல்சேலுக்கு வித்துடுவான்... ஆல்ரெடி அவன் மேட் லிப்ஸ்டிக் மண்ணாங்கட்டினு என்னை கலாய்க்கிறான்” என பிரக்ருதி அவசரப்பட

“என்ன லிப்ஸ்டிக்? அவன் ஏன் உன்னை கலாய்க்கிறான்?” என அவளிடமே திருப்பிக் கேட்டாள் பிரக்யா.

“அடியே! இப்ப இது ரொம்ப முக்கியம் பாரு... அவன் என் இமேஜை டேமேஜ் பண்ணுறதுக்குள்ள நானே போய் தடுத்து நிறுத்துறேன்” என்று சொன்னபடியே அவன் பின்னே ஓடினாள் பிரக்ருதி.

சரியாக வாகனத்தரிப்பிடத்தில் கே.கேவிடம் போய் ஷ்ரவன் நிற்க அவனை அடுத்து ஓடி வந்து நின்றாள் பிரக்ருதி.

அவளைப் பார்த்ததும் கே.கேவுக்கு ஆச்சரியம்.

“நீ இங்க என்ன பண்ணுற கிருதி?”

ஷ்ரவன் அவள் பதிலளிக்கும் முன்னர் முந்திக்கொண்டான்.

“உங்க மேரேஜுக்கு சுஷ் மேமை இன்வைட் பண்ண வந்திருக்குறா”

“மேரேஜா?” என கே.கே அதிர

“ஆமா மச்சி... உனக்கும் நம்ம கிருதிக்கும்” என நக்கலடித்தான் அவன்.

கே.கே பிரக்ருதியை நோக்க அவளோ கைகளை பிசைந்தாள்.

“இப்ப என்ன குட்டி கலாட்டா பண்ணிட்டு வந்திருக்குற?” என நேரடியாக கேட்டான்.

“நான் ஒரு பொய் சொல்லிட்டேன்” என்றபடி தலையைக் குனிந்தாள் அவள்.



உடனே ஷ்ரவனின் தோளில் அடித்தான் கே.கே.

“இதுல்லாம் ஒரு மேட்டரா மச்சி? இவளுக்குப் பொய் சொல்லுறது பொங்கல் சாப்பிடுற மாதிரி... இந்த தடவை எனக்கும் இவளுக்கும் மேரேஜ்னு சுஷ் மேம் கிட்ட பொய் சொல்லிருக்கானு புரியுது... ஆனா ஏன் சொன்னானு புரியல... அதை நீயே சொன்னா நல்லா இருக்கும் கிருதி”

பிரக்ருதி பதிலளிக்கப் போக அதற்குள் பிரக்யாவின் குரல் இடையிட்டது.



“எனக்காக தான் சொன்னா”

“உனக்காகவா? ஏன்?”

“உங்களை பத்தி உங்க ஃபேமிலிய பத்தி தெரிஞ்சிக்கணும்ங்கிறதுக்காக அப்பிடி சொன்னா”

ஷ்ரவன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு பிரக்யாவை குற்றவாளியைப் போல பார்த்தான்.

“அப்பிடி பாக்காத ஷ்ரவன்... எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு... ஆனா அண்ணா கிட்ட உன்னை பத்தி நான் என்னனு சொல்லுவேன்? நம்ம லவ் பண்ணுறோம், ஃப்யூச்சர்ல கல்யாணமும் பண்ணிப்போம்... அதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்ல... லவ் பண்ணுறதுக்கு நம்ம ரெண்டு பேர் மட்டும் போதும்... ஆனா மேரேஜ்னு வந்தா ரெண்டு ஃபேமிலியும் கலந்து பேசணும் ஷ்ரவன்... இதை உன் கிட்ட எப்பிடியெல்லாமோ கேட்டு டயர்ட் ஆகிட்டேன்... அதான் டாக்டர் கிட்ட கேட்டுக்கலாம்னு வந்தோம்”

ஷ்ரவன் கே.கேவை பார்த்தான்.

“ஷீ இஸ் ரைட்... இதுக்கு மேலயும் ஏன் மறைச்சு மறைச்சு பேசணும்? மௌலி அங்கிளுக்கு வீடியோ கால் பண்ணு... அவரும் அவரோட மருமகளும் பேசிக்கட்டும்” என்றான் அவன்.

“அது யாரு?” என பிரக்யா கேட்க

“சந்திரமௌலி... எங்க அப்பா” என்றான் ஷ்ரவன்.

“அப்பாவா?” என அவள் விழிக்க

“ஏன் ஷாக் ஆகுற? பொய் சொல்லி டாக்டர் கிட்ட தகவலை கறக்குறத விட என்னைப் பெத்தவர் கிட்ட டேரக்டா பேசுறது நல்லது தானே” என்றான் ஷ்ரவன்.

பிரக்ருதி பிரக்யாவின் காதில் “சரினு சொல்லு... எல்லா டவுட்டையும் க்ளியர் பண்ணிக்கலாம்... அப்புறம் எந்தக் குழப்பமும் இருக்காது” என்கவும் அவளும் சம்மதமாகத் தலையாட்டினாள்.

ஷ்ரவன் தனது தந்தையும் பத்மானந்தின் நண்பருமான சந்திரமௌலியை வீடியா காலில் அழைக்க தடதடக்கும் இதயத்தோடு காத்திருந்தாள் பிரக்யா.


Comments

Post a Comment