அலைவரிசை 30

Image
  “வாழ்க்கையில நம்ம இழந்த எல்லாமே கண்டிப்பா என்னைக்கோ ஒரு நாள் நம்ம கிட்ட திரும்ப வந்துடும்... ஆனா நம்ம எதிர்பார்த்த வழியில வராது... இதை நான் சொல்லல... ஜே.கே.ரௌலிங் தான் சொல்லிருக்குறாங்க... சோ, ஐயோ போச்சேனு மூலைல உக்காந்து அழுறத விட அடுத்து என்னனு வேலைய பாக்க கிளம்புறது தான் புத்திசாலித்தனம்... இழந்தத நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா நம்ம அனுபவிக்க வேண்டிய அழகான மொமண்ட்சை தவற விட்டுடுவோம்”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் தங்களது அறையில் கிடந்த பீன்பேக்கில் படுத்துக்கொண்டு மொபைலில் ஷ்ரவனிடம் மொக்கை போட்டுக்கொண்டிருந்தாள் பிரக்யா. அவளைக் கண் காட்டி பிரணவியிடம் ஏதோ கூறி சிரித்தாள் பிரக்ருதி. பிரணவி அவளது காதைத் திருகியவள் “லவ் பண்ணிப் பாரு... அப்ப தான் உனக்குப் புரியும்” என்றாள். இவர்களது அரட்டையைக் கவனியாது பிரக்யா – ஷ்ரவனின் உரையாடல் மொபைலில் தொடர்ந்தது. “தேர் ஆர் த்ரீ டைப்ஸ் ஆப் லவ்... தெரியுமா?” என ஷ்ரவன் கூற “நான் இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் லவ் பண்ணுறேன்... சோ எனக்கு உங்க அளவுக்கு இந்த சப்ஜெக்ட்ல நாலெட்ஜ் இல்ல புரொபசர்” என்று

அலைவரிசை 15

 


“தினமும் மானிங் கண் முழிக்கிறப்ப நமக்குப் புதுசா ஒரு நாள் கிடைச்சிருக்குனு ஜாலியா ஆரம்பிக்கிறோம். ஆனா ரியாலிட்டி என்ன தெரியுமா? நம்ம வாழ்நாள்ல ஒரு நாள் குறையுது. இப்ப நம்ம புதுநாளுக்காக சந்தோசப்படணுமா? இல்ல வாழ்நாள் குறையுதேனு வருத்தப்படணுமா? இப்பிடி தான் எந்த ஒரு காரியத்துக்கும் ரெண்டு விதமான கோணம் இருக்கும். அதை நல்லா எடுத்துக்குறதும் கெட்டதா எடுத்துக்குறதும் ஒவ்வொருத்தரோட மனநிலைய பொறுத்தது”

                                              -கே.கேவின் மனதின் குரல்

கே.கேவும் ஷ்ரவனும் அன்று காலை ஆர்லிங்டனிலிருந்து டல்லாசுக்குத் திரும்பியிருந்தனர். அவர்களின் கார் தரிப்பிடத்துக்கு வருவதை அப்பார்ட்மெண்டின் ஜிம்மிலிருந்து வெளியே வரும் போது பார்த்துவிட்டாள் பிரக்ருதி.





உடனே அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் நேரே தங்களது ஃப்ளாட்டுக்கு வந்தவள் பிரக்யாவிடம் தகவலைக் கூறிவிட்டாள். பிரக்யா ஷ்ரவனிடம் பேச விரைய அவளைத் தடுத்து நிறுத்தினாள் பிரக்ருதி.

“இப்ப தான் வந்திருக்காங்க பிரகி... டயர்டா இருப்பாங்க... ஈவ்னிங் பேசிக்கலாம்டி”

“அவன் கிட்ட பேசி ப்ராப்ளமை சால்வ் பண்ணலனா எனக்கு தலையே வெடிச்சிடும் கிருதி... மைண்ட் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கு”

“எனக்குப் புரியுது... பட் இப்பவே போய் நிக்க வேண்டாம்... அராம் சே பேட்டி”

இலகுவாகப் பேசி அவளை வேறு மனநிலைக்கு மாற்றினாள் பிரக்ருதி.

பிரணவியிடம் இன்னும் அவர்களின் காதல் விவகாரத்தைக் கூறவில்லை. மெதுவாக கூறிக்கொள்ளலாம் என்ற அசட்டைத்தனம் இல்லை. எப்படியும் ஷ்ரவனை தமக்கையோ பிருத்வியோ வேண்டாமென கூறப்போவதில்லை என்ற தைரியம்.

பிரக்ருதி கூறியதால் மாலை வரை அமைதியாக இருந்த பிரக்யா அதற்கு மேல் பொறுமை தாங்காமல் E15 ஃப்ளாட்டின் அழைப்புமணியை அழுத்தினாள்.

கதவைத் திறந்தவன் கே.கே. பிரக்யாவைப் பார்த்ததும் புன்னகைத்தான்.

“உள்ள வாம்மா”

உள்ளே வந்தவளின் கண்கள் ஷ்ரவனைத் தேடியது. கே.கே அவனது அறைக்குச் சென்றவன் உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பினான்.

“ஷ்ரவன் எழுந்திரிடா”

“தூங்க விடு மச்சி!” என்றபடி புரண்டு படுத்தான் அவன்.

“டேய் பிரகி வந்திருக்காடா”

“அவளா? அவளை வாசலோட துரத்தி விடு... இப்ப என்னை தூங்க விடு”

பாவம்! மூன்று நாட்கள் நண்பன் நீரவின் நினைவில் அவனுக்கு உறக்கம் சுத்தமாக இல்லை. இங்கே திரும்பியதும் தான் கொஞ்சம் ஆசுவாசமுற்று உறங்கினான். அவனை எழுப்ப கே.கேவுக்கும் விருப்பமில்லை. ஆனால் வந்திருப்பவள் பிரக்யா ஆயிற்றே!

வேறு வழியின்றி ஹாலில் அமர்ந்திருப்பவளிடம் வந்தவன் “அவன் ரொம்ப டயர்டா இருந்தான்... அதான் தூங்குறான்” என்றான்.

“இட்ஸ் ஓ.கே ப்ரோ... நான் வெயிட் பண்ணி பாத்துட்டுப் போறேன்” என்றாள் பிரக்யா.

“ஓ.கே... காபி?” என்றவனிடம் சரியென்றாள் அவள்.

கே.கே காபி போடச் சென்றதும் நகம் கடிக்க ஆரம்பித்தவளின் எண்ணம் மூன்று நாட்களுக்கு முன்னர் அவர்களின் மொபைல் உரையாடலை நோக்கி விரிந்தது.

அதில் அத்துமீறி பேசியது அவளே! என்ன தான் கோபம் இருந்தாலும் ஒருவனின் நடத்தையைத் தவறாக காட்டும் வார்த்தையை தனது நாவு உச்சரிக்கலாமா?

தன்னை நொந்தபடி கே.கே கொடுத்த காபியைச் சுவைக்க ஆரம்பித்தாள். முதலில் மிடறை சும்மா அருந்தியவள் பின்னர் மெய்யாகவே காபியின் சுவையில் மயங்கிப் போனாள்.

“வாவ்! நீங்க சூப்பரா காபி போடுறிங்க ப்ரோ”

அவனுக்குப் பாராட்டு வழங்க தயங்காதவள் போன வேலை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததா என்று கேட்டாள். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் உறக்கம் கலைந்து எழுந்து வந்தான் ஷ்ரவன்.

சோம்பல் முறித்தபடி “மச்சி ஒரு காபி” என்றவன் அப்போது தான் அங்கே உட்கார்ந்திருந்த பிரக்யாவைப் பார்த்தான். அவ்வளவு நேரமிருந்த சோம்பல் ஓடி மறைந்தது. முகத்தில் கோபம் குடியேறியது.

வேகமாக அவளருகே சென்றவன் “இங்க எதுக்கு வந்திருக்க? நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்குறோமா இல்ல ஏதாவது பொண்ணை வீட்டுல ஒளிச்சு வச்சிருக்குறேனானு பாக்க வந்தியா?” என்று ஆவேசத்தோடு கேட்கவும் பிரக்யா விழிகளை உருட்டியபடி எழுந்தாள்.



“இல்ல...” என்று விளக்கமளிக்க வந்தவளின் கையிலிருந்த காபி கோப்பையை வாங்கியவன் கதவைக் காட்டினான்.

“கெட் அவுட்”

கே.கே அவனது செய்கையில் திகைத்து விழித்தான். பின்னர் நண்பனின் கையிலிருந்த கோப்பையை வாங்கிக்கொண்டான்.

“வாட் இஸ் திஸ்டா? யூ ஆர் பிஹேவிங் ரூட் ஷ்ரவன்”

நண்பனை எச்சரித்தான் அவன்.

ஆனால் ஷ்ரவனோ கடுப்பு மேலோங்க அங்கே இன்னும் சிலையாய் நின்றவளின் கையைப் பிடித்து இழுத்து கதவைத் திறந்து வெளியே தள்ளினான்.

பிரக்யா சுழன்று சென்று தரையில் விழுந்தவள் நிமிர்ந்து பார்க்கும் போது அங்கே பிரக்ருதி நின்று கொண்டிருந்தாள்.

அவளது பார்வை ஷ்ரனையும் கே.கேவையும் குற்றம் சாட்டியது.

தோழி எழுந்திருக்க கை கொடுத்து உதவினாள் அவள்.



பின்னர் ஷ்ரவனிடம் “உங்க ரெண்டு பேருக்கும் பொண்ணுங்களை வீட்டை விட்டு வெளிய தள்ளுறது ஒரு வியாதி போல” என குத்தலாகப் பேசினாள்.

“உனக்கு என்ன நடந்துச்சுனு தெரியாது” – ஷ்ரவன்.

“ச்சூ! வெளிய நின்னு கத்தாத ஷ்ரவன்... யார் காதுலயாச்சும் விழுந்தா பிரச்சனை ஆகிடும்”

நண்பனை கட்டுப்படுத்த முயன்றான் கே.கே.

“நீ அவனை விடு கிரிஷ்” என்றவள்

“இங்க பாரு... என் ஃப்ரெண்ட் பேசுன வார்த்தை ரொம்ப ரொம்ப தப்பானது... அதுக்காக நீ அவ கூட சண்டை போட்டுக்க... விளக்கம் கேட்டுக்க... பட் இப்பிடி அவமானப்படுத்தாத” என ஷ்ரவனிடம் கூறினாள்.

பிரக்யா முட்டைக்கண்களை உருட்டி விழித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“எங்க விளக்கம் கேக்குறது? இப்ப கூட நீ தான் அவளுக்காக பேசுற... அவ வாயில இருந்து ஒரு வார்த்தை வருதானு பாரு” என ஷ்ரவன் பொரும

“உன் கிட்ட பேசி மன்னிப்பு கேக்க வந்தவளை நீ தான வெளிய தள்ளுன... எக்ஸ்ப்ளைன் பண்ண வாய்ப்பு குடுக்காம பாப்கார்ன் மாதிரி குதிக்கிறதை நிறுத்திட்டு அவ கூட பொறுமையா பேசி ப்ராப்ளமை ஷார்ட் அவுட் பண்ணுற வழிய பாரு” என்றாள் பிரக்ருதி.

கே.கேவுக்கோ தலையும் புரியவில்லை. பிரக்ருதி அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு கே.கேவை தன்னோடு வரும்படி அழைத்தாள்.

அவனும் கூட வர இருவரும் அப்பார்ட்மெண்டிலிருக்கும் நீரூற்றுகளில் ஒன்றன் அருகே கிடந்த பெஞ்சில் அமர்ந்தனர்.

“என்ன தான் பிரச்சனை?” என்றவனிடம் நடந்ததை கூறினாள் அவள்.

கே.கே அனைத்தையும் கேட்டுவிட்டு “பிரகி ஏதோ கோவத்துல சொல்லிருப்பா... இதுல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல... ஐ திங் ஷ்ரவன் இவ்ளோ கோவப்பட வேண்டாம்” என்றான்.

“வாட்? இவ்ளோ கூலா சொல்லுற... என்னைக் கேட்டா நான் ஷ்ரவனுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவேன்... அவன் ஒன்னும் அவனோட குணத்தை மறைக்கலயே... நான் இப்பிடி தான் இருந்தேன், இனிமே என் வாழ்க்கையில நீ மட்டும் தான்னு சொன்னவனை கோவத்துல கூட இப்பிடி ஒரு வார்த்தை சொன்னது பெரிய தப்பு... நம்மளை நேசிக்கிறவங்களோட பலவீனத்தையோ கடந்தகால தப்பையோ சொல்லிக் காட்டுறது நல்ல பழக்கம் இல்ல கிரிஷ்”

கே.கே அவளது முகம் தீவிர பாவனையில் இருப்பதை கவனித்துவிட்டு “ஓ.கே! ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்... அவங்க பிரச்சனைய பேசி தீர்த்துப்பாங்கனு நம்புவோம்... இப்ப உன் விசயத்துக்கு வருவோம்” என்றவன் பெஞ்சில் காலை மடக்கி சம்மணமிட்டான்.

“சொல்லு! மூனு நாள் எப்பிடி போச்சு?”

“ஹூம்” என பெருமூச்சு விட்டாள் பிரக்ருதி.

“என்ன பெருமூச்சுலாம் பலமா இருக்கு” கேலியாக கேட்டவனிடம்

“இந்த த்ரீ டேய்ஸ் நீ இல்லாம யாரையும் ஃப்ளர்ட் பண்ண முடியாம நான் தவிச்சுப் போயிட்டேன் கிரிஷ்” என அப்பாவியாய் உதட்டைப் பிதுக்கிக் கூறினாள் அவள்.

“நீ திருந்தவே மாட்டல்ல... எப்ப உன்னோட ஃப்ளர்ட்டிங் லிஸ்ட்ல இருந்து எனக்கு விடுதலை?”

“எனக்குனு ஒரு இளிச்சவாயன் வந்து மாட்டுற வரைக்கும்... ஹான்! அவன் உன்னை விட ஹாண்ட்சம்மா இருந்தா மட்டும் தான் லைஃப் பார்ட்னரா ஏத்துப்பேன்... அப்புறம் தான் உனக்கு விடுதலை”



கே.கே அவள் தலையில் நங்கென்று குட்டினான்.

“எப்பவும் ஃப்ளர்ட்டிங், சைட்டிங்னு மொக்கை போடாம இந்த த்ரீ டேய்ஸ்ல ஜேக்கை என்னென்ன டார்ச்சர் பண்ணுனனு சொல்லு... அதுவாச்சும் இன்ட்ரெஸ்டா இருக்கும்”

“நான் ஒன்னும் அவனை டார்ச்சர் பண்ணல... என்னை மாதிரி அசிஸ்டண்ட் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்னு ஜேக் சொன்னான் தெரியுமா? ஹேய்! உனக்கு இன்னொரு மேட்டர் தெரியுமா? ஜேக்கும் அவனோட ரோஸும் ஐ மீன் லியானாவும் கூடிய சீக்கிரமே மேரேஜ் பண்ணிக்கப் போறாங்க”

“இட்ஸ் அ ஹேப்பி நியூஸ்” என்றவனிடம்

“ஆமா! இந்த மூனு நாள்ல நீ என்னை மிஸ் பண்ணுனியா?” என்று விசமமாக கேட்டாள் பிரக்ருதி.

“நிறைய மிஸ் பண்ணுனேன்... ஜிம்ல, ஜாகிங் போறப்ப, ட்ரக்ல ஸ்னாக்ஸ் வாங்க வர்றப்பனு நீ குடுக்குற கிரிஞ்ச் ரியாக்சன்ஸ், அப்ப பேசுற மொக்கை டயலாக்ஸ் இதை எல்லாமே மிஸ் பண்ணுனேன்”

“இன்னும் ஆறு மாசம் தான் இதெல்லாம் நீ பாக்க முடியும்... அதுக்கு அப்புறம் நான் இந்தியாக்குப் பறந்து போயிடுவேன்” என்று கூறிக்கொண்டே கையில் விமானம் ஓட்டிக்காட்டினாள் பிரக்ருதி.

“ஆறு மாசம் வரைக்கும் இந்த துன்பத்தை நான் அனுபவிக்கணுமா?” என சோகமாக கூறியவனின் புஜத்தில் கிள்ளினாள் அவள்.

கையைத் தடவிக்கொண்டே “இந்தியா போனதும் என்ன பண்ண போற?” என்றவனிடம்

“ஆர்.ஜே ஆகப் போறேன்” என கண்களில் நட்சத்திரங்கள் மின்ன கூறினாள் பிரக்ருதி.

“ரேடியோ ஜாக்கி... உன்னோட லொடலொடா வாய்கு இது தான் கரெக்டான வேலை”

“அது என்னவோ உண்மை”

“ஒரு சாம்பிள்கு பேசி காட்டு பாப்போம்”

சவாலாக கேட்டான் கே.கே.

“திடீர்னு கேட்டா எப்பிடி பேசுறது?” என திருதிருவென விழித்தவளைப் பார்த்து அவன் கேலிப்புன்னகை பூக்க பிரக்ருதி சிலிர்த்தெழுந்தாள்.

“எதுக்கு சிரிக்குற? எனக்குப் பேச தெரியாதுனு நினைக்குறியா? இருடா பேசி காட்டுறேன்” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.

மனதுக்குள் ஆர்.ஜேவாக தன்னை உருவகித்தாள்.

“ஃபர்ஸ்ட் ஆடியன்ஸை க்ரீட் பண்ணனும்... அடுத்து ரேடியாவோட நேம் ஃப்ரீக்குவன்ஸி, அடுத்து சிட்டியோட ஸ்பெஷாலிட்டி, வெதர் சொன்னா இன்னும் நல்லா இருக்கும்... அப்புறம் ஒரு இன்ட்ரோ சாங்க்... அதோட மியூசிக் டைரக்டர், அவரோட ஸ்பெஷாலிட்டி... ம்ம் சொல்லுறதுக்கு எவ்ளோ இருக்கு”

மூளை வேகமாக யோசனைகளை கொட்டியது. பின்னர் பேச வேண்டியது தெளிவாக தோன்றிவிட

“ஹலோ டல்லாஸ்வாசிகளே! நான் கிருதி, இது நம்ம காதல் எஃப்.எம் ட்வென்டி நைன் பாயிண்ட் ட்வெண்டி ஃபோர்... அக்டோபர் மன்த் சில் ஈவ்னிங், இதோ இப்பவே வந்து டோட்டல் சிட்டிக்கும் ஷவர் பாத் குடுக்கப் போறேன்னு சொல்லுற மழை... இந்த ப்ளசண்ட் டைம்ல நம்ம ட்ரக் டீலரோட மியூசிக்ல ஒரு சாங் கேப்போமா? ட்ரக் டீலர்னதும் ஏடாகூடமா உங்க மைண்ட் போகவேண்டாம் மக்களே! ஐ அம் டாக்கிங் அபவுட் தி எவர்க்ரீன் மியூசிக் ட்ரக் டீலர் யுவனோட மியூசிக்ல வரப் போற மழைய வரவேற்குற மாதிரியான ஒரு அழகான சாங், இதோ உங்களுக்காக! ஃப்ரம் பையா மூவி” என்று அவள் முடிக்கவும்



“சூப்பர்ப்” என்று விசிலடித்து கை தட்டினான் கே.கே. மிதமிஞ்சிய உற்சாகம் அவன் கண்களில். தோழமையின் திறமையைக் கண்ணெதிரே கண்ட உற்சாகமாக இருக்கலாம்!

பிரக்ருதி எழுந்து இடை வரை குனிந்து “தேங்க்யூ தேங்க்யூ” என்றவள் “காம்பியரிங் மட்டும் போதுமா? சாங் வேண்டாமா?” என்று கேட்டாள்.

“பேசுறப்ப உன் வாய்ஸ் மேக்னடிக்கா இருக்கு..., பாடுனா எப்பிடி இருக்குமோ?”

“பயப்படாத” என்றவள் “இதோ உங்களுக்கான பாடல்” என இராகமாக சொன்னபடி மொபைலில் பாடலை ஒலிக்கவிட்டாள்.

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

பாடல் ஒலிக்கும் போதே பிரக்ருதி கூறியபடி டல்லாஸ் நகரை ஷவரில் குளிப்பாட்ட தூறல் போட்டபடி மழை வந்து சேர்ந்தது.

“ஹேய் மழை” என்றபடி இருவரும் நனையாமல் இருக்க ஓட அதே நேரம் E15 அப்பார்ட்மெண்டில் டல்லாஸில் நிலவிய சீதோஷ்ணத்துக்கு விரோதமாக கொதித்துக் கொண்டிருந்தான் ஷ்ரவன்.

“உன் மனசுல என்னை பத்தி என்ன தான் ஓடுது பிரகி? ஐ அம் லுக்கிங் லைக் அ ப்ளேபாய்? வாயை திறந்து பேசு... எனக்கு டெலிபதி தெரியாது” என்று கடுகடுத்தான்.

“நான் கோவத்துல பேசிட்டேன் ஷ்ரவன்... ஐ அம் சாரி” என சோகமான முகத்தோடு கூறினாள் பிரக்யா.

“சாரினு ஒரு வார்த்தைய பேக்கப் மாதிரி யூஸ் பண்ணிக்கிட்டு என்ன வேணும்னாலும் பேசிக்கலாம்ல”

அவள் மௌனமாகிவிட்டாள்.

“வார்த்தைய விட்டா அள்ள முடியாது பிரகி... இதை விட மோசமான வார்த்தைய கூட என்னை பத்தி மத்தவங்க பேசி நான் கேட்டுருக்குறேன்... ஆனா அவங்கல்லாம் யாரோ ஒருத்தவங்க... நீ இல்ல... அதான் நான் கோவப்பட்டதில்ல... நீ இப்பிடி பேசுனதை என்னால ஜீரணிக்கவே முடியல”

“சாரி ஷ்ரவன்” என்றபடி கண் கலங்கியவள் அவனை அணைத்துக்கொண்டாள்.

“இப்ப நான் என்ன செய்யணும்? உன்னை மன்னிச்சு விடணுமா?”

“அது உன் இஷ்டம்... நீ கோவப்படு... ஆனா என் கிட்ட பேச்சை நிறுத்தாம கோவப்படு... உன் கோவம் குறையற வரைக்கும் எத்தனை தடவை வேணும்னாலும் என்னைத் திட்டிக்க”

“நீ ரொம்ப புத்திசாலி... ஒருத்தனோட கோவத்தை எப்பிடி காணாம போக வைக்கலாம்னு தெரிஞ்சிருக்கு... எப்பிடி அவனை சமாதானம் பண்ணலாம்னு தெரிஞ்சிருக்கு... ஆனா முகம் பாத்தா ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி இருக்கு” என்றவன் அவளது கண்ணாடியைக் கழற்றி அதிலிருந்த கண்ணீரை தனது டீசர்ட்டில் துடைத்து மீண்டும் போட்டுவிட்டான்.

“நான் உன்னை மன்னிச்சிட்டேன்... கடைசியா ஒரு தடவை கேட்டுக்க... என் லைஃப்ல வேற ஒரு பொண்ணு இனிமே வரப்போறதில்ல... விளையாட்டுக்குக் கூட இன்னொரு தடவை அந்த வார்த்தைய சொல்லாத”

“ப்ராமிஸா சொல்லமாட்டேன்”

அவள் சத்தியம் செய்ததும் சமாதானமுற்றான் ஷ்ரவன்.

“அதுக்காக உன்னை பனிஷ் பண்ணாம இருக்க முடியாது” என்றபடி அவளது கண்களை தனது கைகளால் பொத்தினான்.

பிரக்யா என்னென்னமோ நினைக்க ஆனால் அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றவன் “என்னை பேசுனதுக்கு உனக்கு பனிஷ்மெண்ட் இது தான்” என்றபடி கைகளை எடுக்க அங்கிருந்த ஷிங்கில் கே.கே காபி போட்ட பாத்திரங்களும் கோப்பையும் கிடந்தது. அவற்றைக் காட்டி கழுவும்படி கட்டளையிட்டான்.

பிரக்யா ஏமாற்றத்தை விழுங்கியபடியே “டிஷ்வாஷர் இருக்குல்ல?” என்றாள்.

“இருக்கு... ஆனா டிஷ்வாஷருக்கு இன்னைக்கு லீவ்... சோ நீ கழுவி வை”

“போடா! நானும் பனிஷ்மெண்ட்னதும் என்னவோ நினைச்சேன்... ஆனா உனக்கு கடுகு அளவு கூட ரொமான்ஸ் வராது போல” என சோகமாக புலம்பிக்கொண்டே பாத்திரங்களை அவள் கழுவ ஆரம்பிக்க

“புலம்பாம கழுவு... ஒரு பொட்டு கூட அழுக்கு இருக்க கூடாது” என அதட்டினான் ஷ்ரவன்.

பிரக்யா அவனை முறைத்தவள் “கொஞ்சம் என் கண்ணாடிய சரி பண்ணு” என்றாள். அவளது ஒரு கரம் பாத்திரத்தைப் பிடித்திருக்க இன்னொரு கரம் ஸ்கரப்பரைப் பிடித்திருந்தது.

ஷ்ரவன் அவளது கண்ணாடியை மூக்கிலிருந்து ஏற்றிவிட அருகே செல்ல அந்நொடிக்காக காத்திருந்த பிரக்யா சற்றும் தாமதிக்காமல் அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவன் இன்ப அதிர்ச்சியோடு சிரித்தபடி அவளைப் பார்க்க “ஐ லவ் யூ” என்று புன்னகைத்தவள் மீண்டும் பாத்திரத்தைக் கழுவ ஆரம்பித்தாள் அவள்.

அவள் கூந்தலைக் கலைத்துவிட்டு “ஐ லவ் யூ டூ” என்றான் ஷ்ரவன்.



இவ்வாறாக அவர்களின் முதல் சண்டை வினோதமான தண்டனையுடன் நிறைவுற்றது.

Comments

Post a Comment