அலைவரிசை 34

Image
  “லீடர்ஷிப் குவாலிட்டி, ஹெல்பிங் டெண்டன்சி இந்த ரெண்டு குணத்துக்கும் ஒரு சிமிலாரிட்டி உண்டு... இது ரெண்டுமே ஒருத்தருக்குப் பிறவியிலயே வரணும்... இடையில நம்மளால வலுக்கட்டாயமா இந்தக் குணங்களை ஒருத்தருக்குள்ள திணிக்க முடியாது... இன்னொரு ஒற்றுமை என்ன தெரியுமா? தலைமைப்பண்பு நிறைஞ்சவங்களும் சரி, உதவுற மனப்பான்மை உள்ளவங்களும் சரி, நான் அப்பிடியாக்கும் இப்பிடியாக்கும்னு பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணமாட்டாங்க... அவங்க செய்ய வேண்டியத அழகா ப்ளான் பண்ணி சைலண்டா பெர்ஃபெக்டா செஞ்சு முடிச்சிடுவாங்க... உண்மையான தலைவன் பேசி சீன் போட்டுட்டுருக்க மாட்டான்... அதே போல உதவும் மனப்பான்மை உள்ளவங்க வலது கை செய்யுறத இடது கைக்குத் தெரியாத மாதிரி பாத்துப்பாங்க”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் தனது புதிய ரெஸ்ட்ராண்டுக்கு செண்டிமெண்ட் காரணமாக ‘பம்பிள் பி’ என்ற பெயரையே சூட்டியிருந்தான் ஜேக்கப். அதன் திறப்புவிழாவுக்குப் பிரக்ருதியும் பிரக்யாவும் மட்டும் வந்திருந்தனர். பிரணவி கால் வீக்கத்தால் அன்று வீட்டிலேயே இருந்து கொண்டாள். லியானாவின் தொழில்முறை நண்பர்களும் இருவரின் பெற்றோர்

அலைவரிசை 30

 


“வாழ்க்கையில நம்ம இழந்த எல்லாமே கண்டிப்பா என்னைக்கோ ஒரு நாள் நம்ம கிட்ட திரும்ப வந்துடும்... ஆனா நம்ம எதிர்பார்த்த வழியில வராது... இதை நான் சொல்லல... ஜே.கே.ரௌலிங் தான் சொல்லிருக்குறாங்க... சோ, ஐயோ போச்சேனு மூலைல உக்காந்து அழுறத விட அடுத்து என்னனு வேலைய பாக்க கிளம்புறது தான் புத்திசாலித்தனம்... இழந்தத நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா நம்ம அனுபவிக்க வேண்டிய அழகான மொமண்ட்சை தவற விட்டுடுவோம்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

தங்களது அறையில் கிடந்த பீன்பேக்கில் படுத்துக்கொண்டு மொபைலில் ஷ்ரவனிடம் மொக்கை போட்டுக்கொண்டிருந்தாள் பிரக்யா.

அவளைக் கண் காட்டி பிரணவியிடம் ஏதோ கூறி சிரித்தாள் பிரக்ருதி. பிரணவி அவளது காதைத் திருகியவள் “லவ் பண்ணிப் பாரு... அப்ப தான் உனக்குப் புரியும்” என்றாள்.

இவர்களது அரட்டையைக் கவனியாது பிரக்யா – ஷ்ரவனின் உரையாடல் மொபைலில் தொடர்ந்தது.

“தேர் ஆர் த்ரீ டைப்ஸ் ஆப் லவ்... தெரியுமா?” என ஷ்ரவன் கூற



“நான் இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் லவ் பண்ணுறேன்... சோ எனக்கு உங்க அளவுக்கு இந்த சப்ஜெக்ட்ல நாலெட்ஜ் இல்ல புரொபசர்” என்று சொல்லி சிரித்தாள் பிரக்யா.

“அட எனக்கும் லவ் புதுசு தான்மா... இன்னைக்கு இன்ஸ்டால ஜெய் ஷெட்டி வீடியோ ஒன்னு பாத்தேன்... அதுல அவர் த்ரீ டைப்ஸ் ஆப் லவ் பத்தி அழகா எக்ஸ்ப்ளைன் பண்ணிருந்தார்... ஷால் ஐ எக்ஸ்ப்ளைன்?”

“வேண்டாம்பா... நீ டெக்னிக்கல் வேர்ட்ஸ்ல சொல்லுவ... என் மண்டைல அது ஏறாது.. உடனே உனக்குக் கோவம் வரும்... எதுக்கு? நீ ஜெய் ஷெட்டியோட வீடியோ லிங் அனுப்பு... நானே பாத்துக்குறேன்”

இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருகையில் ஷ்ரவனை கேசவ் அழைக்க “கிரிஷ் கூப்பிடுறான்... நான் லிங்கை வாட்சப் பண்ணிட்டேன் பாரு” என்றபடி பேச்சை முடித்துக்கொண்டான் ஷ்ரவன்.

பிரக்யா அழைப்பைத் துண்டிக்க மனமின்றி துண்டித்தவள் டொய்ங் என்ற சத்தத்துடன் வந்த மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கர் ஜெய் ஷெட்டியின் வீடியோ இணைப்பை பார்க்க ஆரம்பித்தாள்.

பிரக்ருதி ஆர்வமாக ஃப்ரீ ஃபயர் விளையாடிக் கொண்டிருந்தவள் அந்த வீடியோவின் ஒலியை மட்டும் கேட்டாள்.

“ஃபர்ஸ்ட் டைப் லவ் இஸ்...” என்று இரு வகையான காதல்களை விளக்கியவர் மூன்றாம் வகை காதலை விளக்கிய போது பிரக்ருதி கூர்ந்து கவனித்தாள்.



ஏனெனில் முதல் இரண்டு வகை காதல்களில் அவளது காதல் சேராது. முதல் வகை காதல் வாழ்க்கையில் மிகவும் இளம்பருவத்தில் எதிர்பாலினர் மீது வரும் காதல். அதை ‘love that look right’ என்றார் அவர்.

“வெளிப்புற தோற்றத்தை வைத்தும் மற்றவரின் உந்துதலாலும் உருவாகும் இத்தகைய காதலுக்கு எடுத்துக்காட்டாக பள்ளிக்கூட பிள்ளைகளின் காதலைக் கூறலாம். தாங்கள் காதலிப்பதாக அவர்கள் எண்ணிக்கொள்வார்கள். ஆனால் இன்று வரை அப்பருவத்தில் வரும் காதலை உண்மை காதல் என்று  சொல்ல முடிவதில்லை”

அவர் அமெரிக்க ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்க “ஓ! இதை தான் இன்ஃபாக்சுவேசன்னு சொல்லுவாங்க போல” என்றாள் பிரக்ருதி.

“அப்பிடியும் இருக்கலாம்... இல்லனா க்ரஷா கூட இருக்கலாம் கிருதி” என பிரணவி தனது அனுமானத்தைக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அடுத்து இரண்டாம் வகை காதல்.

“இரண்டாம் வகை காதலை ‘hard love’ என்பார்கள். இத்தகைய காதலில் வேதனைகளும், சண்டைகளும், உடல்ரீதியான தாக்குதல்களும் உக்கிரமாக நடந்தேறும். அதனிடையே நம்பிக்கையிழப்பு ஏற்பட்டால் காதல் உடைவது திண்ணம். இத்தகைய காதல் டாக்சிக் (toxic) ஆனது. இந்த டாக்சிக்கான உறவில் இருப்பதும் உறவை விட்டு விலகுவதும் சம்பந்தப்பட்ட காதலர்களின் விருப்பம். பெரும்பாலான காதலர்கள் டாக்சிக் லவ் உண்டாக்கிய காயத்துடன் பிரிவார்கள்”

பிரக்யா பிரக்ருதியை நோக்க “ஏன்டி என்னை  பாக்குற? என்னோட லவ் சத்தியமா இந்த டைப் இல்ல... ஏன்னா நாங்க ரெண்டு பேரும் டாக்சிக் பெர்ஷ்னாலிட்டி இல்லடி சோடாபுட்டி” என்று முறைத்தாள் பிரக்ருதி.

“அஹான்! அப்ப அடுத்த டைப்ப கேளு”

பிரக்ருதி மூன்றாவது வகை காதல் எப்படிப்பட்டது என்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.

“மூன்றாவது வகை காதல் ‘love that lasts’. நாம் ஒவ்வொருவரும் கனவு கண்டுகொண்டிருக்கும் காதல் இத்தகையது தான். பாதுகாப்பும், புரிந்து கொள்ளுதலும் நிறைந்த இந்தக் காதல் தான் இறுதி வரை நிலைக்கும். இந்தக் காதலில் நீங்கள் சுயத்தை இழக்க மாட்டீர்கள். இதிலும் வேதனைகள், சண்டை சச்சரவுகள் வரலாம். ஆனால் அவை அனைத்தையும் பேசி தீர்த்துக்கொள்ளும் புரிந்துணர்வு காதலர்களிடம் இருக்கும். இத்தகைய காதலர்கள் காதலுக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருப்பார்கள். சோகத்திலும் சந்தோசத்திலும் ஒன்றாக இருப்பார்கள். இந்தக் காதலில் மட்டும் தான் நீங்கள் நீங்களாக இருக்க முடியும். நீங்கள் நீங்களாக இருப்பதை உங்கள் காதலர்/காதலி மனதார ஏற்றுக்கொள்வது இந்தக் காதலில் மட்டுமே சாத்தியம்”

ஜெய் ஷெட்டியின் உரை முடிந்ததும் பிரக்யா பிரக்ருதியின் தோளை இடித்தாள்.

“புரியுதாடி? நீயும் கிரிஷும் எந்த டைப் லவ்வர்ஸ்னு உனக்கு இப்பவாச்சும் க்ளாரிட்டி வந்துச்சா? அந்த மனுசன் நீ எப்பிடி இருக்கியோ அப்பிடியே உன்னை லவ் பண்ணுனான்... நீ மெச்சூர்டான பொண்ணும் இல்ல, சைல்டிஷானவளும் இல்ல... உனக்குத் தெளிவா முடிவெடுக்க தெரியாது... உன்னால வாழ்க்கையில எது முக்கியம், யார் நல்லவங்கனு எதையுமே சரியா கண்டுபிடிக்க தெரியாது... இது எல்லாமே எங்களுக்கு நல்லா தெரியும்... நாங்க கிருதிய கிருதியாவே ஏத்துக்கிட்டு பாசம் காட்டுறோம்... அதே மாதிரி தான் கிரிஷ் எவ்ளோ இம்பெர்ஃபெக்ஷன் இருந்தும் உன்னை நீயாவே ஏத்துக்கிட்டு லவ் பண்ணுனார்... காதல் விசயத்துல நீ ரொம்ப யோசிக்குற கிருதி... நீ சொல்லுற மாதிரி எல்லாம் செட் ஆகுற நேரத்துல உன் மனசுல காதல் இருக்கும்... ஆனா கிரிஷோட லவ் காணாம போயிடும்... ஏன்னா ஒருதலைக்காதலோட ஆயுள் ரொம்ப கம்மி... புரிஞ்சிக்க”

மண்டையிலடித்தாற்போல தெளிவாக சொன்னவள் தன் கடமை முடிந்ததென யூடியூபில் ஆழ்ந்துவிட பிரக்ருதியின் மனம் அவளது கடைசி வாக்கியங்களில் நின்றது.

“ஒருதலைக்காதலோட ஆயுள் ரொம்ப கம்மி”

பிரக்ருதி உதட்டைக் கடித்தபடி சிந்தனையில் ஆழ்ந்தாள்.

இதுநாள் வரை அவள் தன்னை காதலிப்பதை கேசவ் அறிந்திருக்கவில்லை. அவனது கோணத்தில் பார்த்தால் அவனுடையது ஒருதலைக்காதல் தானே. ஒரு கட்டத்தில் அவன் பிரக்ருதியை வெறுத்துவிட்டு வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுவிட்டால் அவளால் அதை சத்தியமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏன் இப்போதே கேசவை சந்தித்து தனது மனதிலுள்ளதை கூறிவிடக்கூடாது?

உப்புசப்பற்ற காரணங்களுக்காக இத்தனை நாட்கள் தாமதித்தவளுக்கு அன்று ஜெய் ஷெட்டியின் வீடியோ கண்திறப்பாக அமைந்தது.

உடனே படுக்கையிலிருந்து எழுந்தவள் பிரக்யாவின் முன்னே போய் நின்றாள்.

“நான் பாக்க அழகா இருக்கேனா?”

திடீரென அவள் அப்படி கேட்கவும் பிரக்யா குழம்பினாள்.

“கன்பியூஸ் ஆகிட்டல்ல... ஆக்ஸ்வலி, லவ்வ ப்ரபோஸ் பண்ண போறப்ப என் லுக் ப்ரெசண்டபிளா இருந்தா தானே எனக்கு கான்பிடன்ஸ் வரும்... தட்ஸ் ஒய் ஐ அம் ஆஸ்கிங்... போலோ பேட்டி, அம் ஐ லுக்கிங் பிரிட்டி?”

கண்களை சிமிட்டி கேட்டவளுக்கு மகிழ்ச்சியோடு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள் பிரக்யா.

“என் செல்லக்குட்டி... இப்பவாச்சும் உனக்கு புத்தி வந்துச்சே... உனக்கென்ன குறை? நீ தூங்கி எழுந்திரிச்சு ப்ரஷ் பண்ணாம தலைய சொறிஞ்சிட்டு நிக்குறப்ப கூட ப்ரிட்டியா தான் இருப்ப... இப்ப சொல்லவா வேணும்? கிளம்புடி செல்லம்... போய் கிரிஷ் கிட்ட உன் மனசுல இருக்குறத பூராவும் கொட்டிடு”

இருவரும் ஒருவர் கரத்தை மற்றொருவர் ஃபிஸ்ட் பம்ப் (fist bump) செய்து கொண்டனர்.



பிரக்ருதி E15 ஃப்ளாட்டை நோக்கி ஓடினாள். ஆனால் ஃப்ளாட் பூட்டியிருந்தது. அன்று வாரயிறுதி. பம்பிள் பி ட்ரக்குக்கு விடுமுறை. வழக்கமாக ஷ்ரவனும் கேசவும் வீட்டில் தான் இருப்பார்கள். இன்று எங்கே சென்றிருப்பார்கள் என்ற கேள்வி எழவும் உடனே அவள் அழைத்தது ஜேக்கபின் எண்ணுக்குத் தான்.

ஷ்ரவனுக்கோ கேசவிற்கோ அழைத்தால் ஏன் எதற்கு  என ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்கள் என்பதால் ஜேக்கபை அழைத்தாள் பிரக்ருதி.

அழைப்பை ஏற்றதும் அவனது புதிய ரெஸ்ட்ராண்ட் திறப்புவிழாவுக்கு வாழ்த்துகள் கூறிவிட்டு இரு தோழர்களைப் பற்றியும் விசாரித்தாள்.

“ரெண்டு பேரும் ஏர்போர்ட்டுக்குப் போயிருக்காங்க கிருதி... இன்னைக்கு கேசவோட அப்பா இந்தியால இருந்து வர்றார்”

ஜேக்கப்  கூறிய தகவலைக் கேட்டதும் பிரக்ருதிக்குக் கொஞ்சம் ஜெர்க் ஆனது. இன்னும் மகனிடமே காதலைக் கூறவில்லை. இதில் தந்தை வேறு வந்துவிட்டால் தான் எப்படி தனது காதலை அவரிடம் விளக்கப்போகிறோம் என்ற மலைப்பு.

கேசவின் தந்தை ஷ்ரவனின் தந்தையைப் போல பரந்த உள்ளம் கொண்டவராக இருந்தால் பரவாயில்லை. அப்படி இல்லை என்றால் தன் பாடு திண்டாட்டம் தான்!

விமானநிலையம் சென்றிருப்பவர்கள் வரும் வரை நீரூற்றின் அருகே காத்திருப்போமென அங்கே சென்று அமர்ந்துவிட்டாள் பிரக்ருதி.

அவள் யாரை நினைத்து  பயந்தாளோ அந்த பத்மானந்தை தனது காரில் சாக்சனி அப்பார்ட்மெண்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தான் ஷ்ரவன்.

ஏனோ அவரை அழைத்து வர கேசவிற்கு விருப்பமில்லை. அவன் அப்பார்ட்மெண்டின் ஜிம்மில் இருந்து கொண்டான். ஷ்ரவன் மட்டும் தான் விமானநிலையத்திற்கு சென்றிருந்தான்.

ஆனால் விதியானது ஜேக்கபின் ரூபத்தில் பிரக்ருதியின் வாழ்க்கையில் விளையாடிவிட்டதே! அவன் கூறியபடி ஷ்ரவனும் கேசவும் சேர்ந்து விமானநிலையம் போகவில்லை, ஜிம்மில் தான் இருக்கிறான் என்று தெரிந்திருந்தால் பிரக்ருதி தாமதிக்காமல் தனது காதலை அவனிடம் கூறியிருப்பாள்.

.காரில் வரும் போதே கேசவைப் பற்றி விசாரித்தார் பத்மானந்த்.

“ஹீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் அங்கிள்... ஆன்சைட்டி, டிப்ரசன் எல்லாம் போயாச்சு... இப்ப அவன் பழைய கிரிஷ்”

உற்சாகமாக சொன்னபடி காரோட்டினான் ஷ்ரவன்.

“எனக்குனு இருக்குற ஒரே நம்பிக்கை அவன் மட்டும் தான் ஷ்ரவன்... என்னால யாரையும் உறுதியா நம்ப முடியல”

“உங்க தம்பியும் தம்பி மகனும் உங்களோட ரைட் ஹேண்ட்னு சொல்லுவிங்களே?”

“இப்பவும் அதுல மாற்றமில்ல... பிசினஸ்ல அவங்களோட முடிவு எதுவும் சரியில்ல... கிரிஷ் மாதிரி நிதானமா யோசிக்கிற ஒருத்தன் எனக்குத் தேவைப்படுறான்”



“சோ இங்க பிள்ளைய தேடிவரல... உங்க  பிசினஸை தூக்கி நிறுத்த ஒருத்தன் வேணும்னு வந்திருக்கிங்க... அப்பிடி  தானே அங்கிள்?”

“அப்பிடியும் வச்சுக்கலாம் ஷ்ரவன்”

அவரது பதிலில் ஷ்ரவனுக்கு எரிச்சல் வந்தது. இந்த மனிதருக்குப் பரிவு பாசம் இதற்கெல்லாம் அர்த்தமே தெரியாதா?

கடுப்பை குரலில்  காட்டியவனாக “அப்ப உங்க பிசினஸ் பழையபடி ஆனதும் என் ஃப்ரெண்டை உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்னு நினைக்கக்கூடாது... ஆல்ரெடி அப்பிடி செஞ்சு ஒருத்தனை இல்லாமலே பண்ணிட்டிங்க” என்றான் ஷ்ரவன்.

பத்மானந்த் புருவத்தைச் சுருக்கினார்.

“உங்களுக்குப் புரியலயா? நீரவ் விசயத்துல ஓவரா தலையிட்டு காரியத்த கெடுத்த மாதிரி கிரிஷ் விசயத்துலயும் எதாச்சும் செய்யலாம்னு யோசிக்காதிங்க... அவன் இப்ப தான் ஒரு பெரிய இழப்பு குடுத்த மன அழுத்தத்துல இருந்து வெளிய வந்திருக்குறான்... அவனுக்குனு இருக்குற ஆசாபாசம், லவ் இது எதுலயும் தலையிடாதிங்க”

“வாட்? கிரிஷ் லவ் பண்ணுறானா?”

“ஏன்? பண்ணக்கூடாதா? அது அவ்ளோ பெரிய பாவமா?”

எரிச்சலாக வினவினான் ஷ்ரவன்.

“நோ... நாட் அட் ஆல்... பை த வே, மே ஐ நோ, ஹூ இஸ் தட் கேர்ள்?”

“தெரிஞ்சு என்ன பண்ணப்போறிங்க? அவங்க காதல்ல புகுந்து பப்ஜி விளையாட போறிங்களா?”

பத்மானந்த் பதிலளிக்காமல் அமைதி காக்கவும் ஷ்ரவனுக்குச் சங்கடமாகிவிட்டது.

என்ன இருந்தாலும் பெரிய மனிதர். தந்தையின் நண்பரும் கூட. அவரை இப்படி மட்டுமரியாதையின்றி பேசுவது அநாகரிகம்.

குரலில் இருந்த எரிச்சலை விரட்டிவிட்டு பேச ஆரம்பித்தான்.

“சாக்சனில அவன் ஒரு தமிழ் கேர்ளை மீட் பண்ணுனான்... ஹீ லவ்ஸ் ஹெர் அ லாட்... ஹெர் நேம் இஸ் பிரக்ருதி”

ஷ்ரவன் கேசவின் காதலைப் பற்றி பத்மானந்திடம் கூறிவிட்டான்.

அவரோ அதை வேறு விதமாக யோசித்தார். காதல் அது இதென்று வந்தால் கேசவின் கவனம் பிசகுமே. ஏற்கெனவே ஒருவனின் காதல் கார்கி குழுமத்திற்கு எப்பேர்ப்பட அடியைக் கொடுத்திருக்கிறது. இப்போது கேசவும் அதே வழியில் பயணிக்கிறானே!

ஏதோ தோன்ற “அந்தப் பொண்ணு என்ன பண்ணுறா ஷ்ரவன்?” என்று கேட்டார்.

“அவங்க அக்கா ப்ரெக்னெண்டா இருக்காங்கனு ஹெல்பா வந்திருக்கா... அவளோட ஆம்பிஷன் ஆர்.ஜே ஆகுறது தானாம்”

உடனே பத்மானந்த் முகம் சுளித்ததை ஷ்ரவன் கவனிக்கவில்லை. அவன் கவனிப்பதற்குள் முகபாவத்தை மாற்றிக்கொண்டார் மனிதர்.

“மிடில் கிளாஸ் கேர்ளா? உஃப்... இவனை புத்திசாலினு நினைச்சேன்... பட் இவனும் அவங்கம்மா மாதிரி எமோஷ்னல் இடியட் தான்... இதை இப்பிடியே விட்டா சரியா வராது”

விபரீதமாக யோசித்தது அவரது மூளை. இதை அறியாது காரை சாக்சனி அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள் செலுத்தினான் ஷ்ரவன்.

தரிப்பிடத்தில் கார் நின்றதும் பத்மானந்த் இறங்கினார். சுற்றும் முற்றும் பார்த்தார்.

“நாட் பேட்”

ஷ்ரவன் கடுப்பைக் காட்டிக்கொள்ளாமல் அவருடன் நடக்க ஆரம்பித்தான். அப்போது தான் நீரூற்றின் அருகே அமர்ந்திருந்த பிரக்ருதி அவர்கள் இருவரையும்  பார்த்துவிட்டாள்.

புன்னகையோடு எழுந்தவள் ஷ்ரவன் அருகே வரவும் ஆர்வத்துடன் பத்மானந்தை நோக்கினாள்.

“அங்கிள் தான் கிரிஷோட அப்பா”

ஷ்ரவன் அறிமுகம் செய்ததும் “வணக்கம் அங்கிள்” என்று கரம் குவித்தாள் பிரக்ருதி.



“வணக்கம்மா... நீங்க?” என அவர் இழுக்க

“ஷீ இஸ் பிரக்ருதி” என்றான் ஷ்ரவன்.

அவளது பெயரைக் கேட்டதும் மகன் காதலிக்கும் பெண் என்பது புரிந்தது. விசித்திரமான புன்னகையோடு அவளை ஏறிட்டவர் “நைஸ் டு மீட் யூமா... போய் என் பையனை பாத்துட்டு வந்து உன் கிட்ட பேசுறேன்.. நம்ம பேசிக்கிறதுக்கு நிறைய இருக்கு” என்று பூடகமாக உரைத்தார்.

அந்த மனிதரின் வில்லத்தனத்தால் விளைய போகும் அனர்த்தங்களைப் பற்றி தெரியாமல் ஷ்ரவனும் பிரக்ருதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

எந்த ஒரு மனிதன் வர்க்க பேதத்தைக் காரணம் காட்டி சகமனிதர்களை இழிவாக எண்ணுகிறானோ, அவன் கற்ற கல்வியாலும் பெற்ற செல்வத்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.


Comments

Post a Comment