அலைவரிசை 35

Image
  “பொதுவா திறமைசாலிங்களுக்கு யார் மேலயும் பொறாமை வராது... பின்ன யாருக்கு வரும்? எந்த ஃபீல்ட்லயும் அரைகுறை நாலெட்ஜ் இருக்குறவங்களுக்கும், நாலேட்ஜ் இல்லனா கூட இருக்குற மாதிரி சீன் போடுற காலி டப்பாக்களுக்கும் தான் பொறாமை வரும்... ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க, எல்லாரும் எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு பிறக்குறதில்ல... புது விசயத்த கத்துக்கிற ஆர்வமும், ஹார்ட் ஒர்க்கும் இருந்தா யார் வேணும்னாலும் எந்த விசயத்தையும் கத்துக்கலாம்... சோ ஆர்வமும் ஹார்ட் ஒர்க்கும் இல்லாத சோம்பேறி திலகங்கள், ஓவர் நைட்ல ஒபாமா ஆக ஆசைப்படுற ஹாஃப் பாயில்ஸ் எந்த ஃபீல்ட்லயும் முன்னேறாம முன்னேறிப் போறவங்களைப் பாத்து பொறாமைப்படுறதும் அவங்களை பத்தி காஸிப் பேசுறதுமா இருப்பாங்க”                                               -கே.கேவின் மனதின் குரல் சென்னை சிட்டி பண்பலை அலுவலகம், எழும்பூர் (எக்மோர்)... “ பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. ஆடியோ கன்சோலில் பாடலை இடை

அலைவரிசை 25



“லைஃப் எப்ப சுவாரசியமா மாறும் தெரியுமா? நிறைய சவால்களும் பிரச்சனைகளும் வர்றப்ப தான்... ஒவ்வொரு பிரச்சனைய சமாளிக்கிறப்பவும் நமக்குத் தெரியாமலே நாம நிறைய விசயங்களை கத்துப்போம்... அதே மாதிரி சவால்களை சந்திக்கிறப்ப நம்மளோட அறிவை முழுசா யூஸ் பண்ணுற வாய்ப்பு கிடைக்கும்... உண்மையாவே நம்மளை காலத்துக்கு ஏத்த மாதிரி அப்கிரேட் பண்ணிக்க உதவுறது இந்த சேலஞ்சஸும் ப்ராப்ளம்ஸும் தான்... பிரச்சனை வேண்டாம்பானு ஒதுங்கி கம்ஃபர்டபிள் ஜோன்ல குண்டுசட்டி குதிரை மாதிரி ஓடுறவங்களுக்கு ஒரு நாள் இல்லனா ஒரு நாள் வாழ்க்கை சலிப்பு தட்டிடும்... சோ வாழ்க்கையில நிறைய பிரச்சனை வருதுனு சோர்ந்து போகாதிங்க... ஒவ்வொரு பிரச்சனையும் வர்றப்பவே அதுக்கான தீர்வையும் சேர்த்து தான் கொண்டு வரும்ங்கிறத மறந்துடாதிங்க”

                                              -கே.கேவின் மனதின் குரல்

அதீத கட்டுப்பாடுகள் எங்கேயும் ஒழுக்கத்துக்கு வித்திடாது. அவை அத்துமீறலுக்கு மட்டுமே வழிவகுக்கும். எங்கே தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதோ அங்கே தான் குற்றங்களும் அதிகமாகும்.

எப்படி எல்லையற்ற சுதந்திரம் ஆபத்தானதோ அதே போல அளவுக்கு மீறிய கட்டுப்பாடும் ஆபத்தானதே. அதிலும் சரியான பாதையில் போய் கொண்டிருப்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் கட்டுப்பாடு விதிப்பவர் மீதான மரியாதைக்கு உலை வைத்துவிடும்.

பல நேரங்களில் இதை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதில்லை. அதன் காரணமாகவே சில பெரியவர்களின் பேச்சுக்கு இளையவர்கள் செவிமடுப்பதில்லை.

தற்போது அதே நிலையைத் தான் பிரக்யாவிற்கும் பிரக்ருதிக்கும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார் மகிழினி.

அவர்களது உடையிலிருந்து கூந்தல் அலங்காரம் வரை தொட்டதெற்கெல்லாம் கண்டிப்பு தான். அதை பிரக்ருதி உதறிவிட்டுப் போவதை போல பிரக்யாவால் முடியவில்லை.

வெளிநாட்டுக்கு வந்தாலே பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்ற அசட்டுத்தனமான எண்ணம் தான் இத்தகைய கட்டுப்பாடுகளுக்குக் காரணம் என்பது அவளுக்கும் புரிந்தது. ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா!

மகிழினி சாக்சனி அப்பார்ட்மெண்ட்சுக்குள் காலடி எடுத்து வைத்த தினத்திலிருந்து முதலில் பறிபோனது ஹாரியின் நட்பு தான். பின்னர் ஒவ்வொன்றாக போய் போய் கடைசியில் “பக்கத்து ஃப்ளாட்காரன் கூட உனக்கு என்ன பேச்சு?” என ஷ்ரவனிடம் பேசுவதை தடுப்பதில் வந்து நின்றது.

பிரக்ருதியும் என்ன தான் கண்டுகொள்ளாது இருந்தாலும் அவளுக்குமே மகிழினியின் செயல்பாடுகள் எரிச்சலை உண்டாக்கியது.

முன்பு போல அவள் இஷ்டத்துக்கு டார்கெட் ஸ்டோருக்குச் சென்று ஷாப்பிங் செய்ய முடிவதில்லை. பம்பிள் பி ட்ரக்கில் விற்கப்படும் சிற்றுண்டிகளை வாங்கி தின்ன முடிவதில்லை.

ஜிம்முக்குக் கிளம்பினாலோ “இப்பவே உன் உடம்பு ஆம்பளையாட்டம் மாறிடுச்சு” என்று நொடித்துக் கொள்வார் அவர்.

“ஆம்பளையோ பொம்பளையோ ஃபிட்நெஸ் முக்கியம் ஆன்ட்டி” என்பாள் பிரக்ருதி.

“க்கும்! நாங்கல்லாம் ஜிம்முக்குப் போயா உடம்பை ஃபிட்டா வச்சுகிட்டோம்?” என்று குறைபட்டவரின் முன் தள்ளிய வயிற்றை காட்டி சிரித்தால் அது உருவகேலியாகி விடுமோ என்ற அச்சத்தில் அன்றிலிருந்து ஜிம்மைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டாள் அவள்.

இவ்வளவு ஏன்! இரவு நேரங்களில் நீரூற்றின் அருகே அமர்ந்து கதை பேசும் சுதந்திரமும் பறிபோனது இரு பெண்களுக்கும்.

பல்லைக்  கடித்துக்கொண்டு நாட்களை நகர்த்தியவர்களிடம் பிரணவிக்கு வளைகாப்பு செய்து பூச்சூட ஆசைப்படுவதாக கூறினார் மகிழினி.

சிறப்பாக செய்ய வீட்டினர் அனைவரும் திட்டமிட்டனர். பிரணவிக்குப் பட்டுப்புடவையும் பிருத்விக்கு பட்டுவேஷ்டி சட்டையும் ஆன்லைனில் வாங்கப்பட்டன.

காப்புகள் மற்றும் வளையல்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டன. ஐந்து வகை சாதங்களை தானே வீட்டில் சமைத்துவிடுவதாக பிரக்ருதி கூறிவிட மலர்களை இந்தியன் ஸ்டோரில் வாங்கி வந்து வீட்டை அலங்கரிக்கும் வேலையை பிரக்யா செய்வதாக ஒப்புக்கொண்டாள்.

அவனுடன் பணியாற்றும் இந்தியர்களை வீட்டிற்கு அழைக்க வேண்டுமென மகிழினி கட்டளையிட அதற்காக அழைப்பிதழ் பிரிண்ட் செய்யும் வேலையில் இறங்கினான் பிருத்வி.

அப்போது தான் பக்கத்து ஃப்ளாட்டில் குடியிருக்கும் ஷ்ரவனையும் கேசவையும் அழைப்போம் என்றான் அவன்.

“அந்த ரெண்டு பசங்களையும் ஏனோ என்னால நல்லவிதமா நினைக்கவே முடியல... வயசுப்பொண்ணுங்க இருக்குற வீட்டுல அவங்களை அடிக்கடி நீங்க வர வச்சு ஹெல்ப் கேட்டதே எனக்குப் பிடிக்கல... இதுல நீ அவங்களை வளைகாப்புக்கு வேற கூப்பிட போறியாக்கும்?”

“அவங்க ரெண்டு பேரும் பிரணவிக்கு அவசர காலத்துல ஹெல்ப் பண்ணிருக்காங்கம்மா... மத்த பசங்க மாதிரி இல்ல, ரொம்ப டீசண்டானவாங்க” என அவர்களுக்குப் பரிந்து பேசி எப்படியோ மகிழினியைச் சம்மதிக்க வைத்தான் பிருத்வி.

“வளர்பிறையில பூசம், திருவோணம் நட்சத்திரம் இல்லாத சுபமுகூர்த்த நாள்ல வளைகாப்பு வச்சிக்கலாம்மா” என குடும்ப ஜோதிடர் நாள் குறித்து கொடுத்துவிட்டார்.

அனைத்து ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து முடிக்க வளைகாப்பு நாளும் வந்தது.

மருமகளுக்குத் தன் கையாலேயே கூந்தலில் பூ முடித்து அலங்கரித்தார் மகிழினி. இதர ஒப்பனைகளை பியூட்டிசியன் வசம் பெரிய மனது செய்து ஒப்படைத்துவிட்டார்.

அன்றும் அனார்கலியை அணியப்போன பிரக்ருதியையும் பிரக்யாவையும் அதட்டி புடவை அணியவைத்தவர்

“இப்பிடி முடிய விரிச்சுப் போட்டுட்டு நல்ல காரியத்துல நிக்க கூடாது... ஒழுங்கா தலைய பின்னி பூ வைங்க” என்று கட்டளையிட்டுவிட்டு நகர்ந்தார்.

பிரக்ருதி அதில் காண்டாக பிரக்யா அவளைச் சமாதானம் செய்து புடவை அணிய வைத்தாள்.

“ஃபெதர் கட்டிங்கை எப்பிடி பின்னி பூ வைக்குறது? இதுல்லாம் ஓவரோ ஓவர்டி... இத்தனை வருசம் உங்கம்மாவை வச்சு குடும்பம் நடத்துனதுக்கு மனோ அங்கிளுக்கு வேர்ல்ட்’ஸ் பெஸ்ட் ஹஸ்பெண்ட் அவார்டே குடுக்கலாம்” என அலுத்தபடி எப்படியோ கூந்தலை பின்னலாக கட்டி முடித்தாள்.

பெண்கள் தயாரானதும் ஹாலில் சத்தம் கேட்க எட்டிப் பார்த்தனர் இருவரும்.

வந்திருந்தவர்கள் ஷ்ரவனும் கேசவும் தான். பிருத்வி கேட்டுக்கொண்டதற்கிணங்கி ஃபார்மல் உடையில் வந்திருந்தனர். பிரக்யா ஷ்ரவனை ஆர்வத்துடன் பார்ப்பதை மகிழினி கவனித்துவிட பிரக்ருதி அவளை அவசரமாக பிரணவி தயாராகி கொண்டிருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டாள்.

அதற்காக ஷ்ரவனிடம் மனதிற்குள் ஆயிரம் முறை திட்டு வாங்கினாள் என்பது வேறு கதை. அவனருகே நின்று கொண்டிருந்த கேசவ் பிருத்வியிடம் ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்கும் சாக்கில் ஹாலுக்கு வந்த பிரக்ருதியைப் பார்ப்பதை தவிர்த்தான்.

சிறிது நேரத்தில் பிருத்வியின் அலுவலகத்தில் பணியாற்றும் இந்தியர்கள் குடும்பத்தோடு வந்துவிட்டனர்.

சமையலறையில் தயாராகி இருந்த ஐந்து வகை சாதங்களை அழகிய பாத்திரங்களில் எடுத்து வைத்தாள் பிரக்ருதி.

“சர்க்கரை பொங்கல், லெமன் ரைஸ், கர்ட் ரைஸ், டோமேட்டோ பாத் அண்ட் புளியோதரை... எல்லாம் சரியா தான் இருக்கு... இதுக்கு மேல கார்னிஷிங்குக்கு கொஞ்சம் போல மல்லித்தளை போட்டா பெர்ஃபெக்டா இருக்கும்”

தனக்குத் தானே பேசிக்கொண்டே கொத்துமல்லி இலைகளை கத்தியால் பொடியாக நறுக்கி தயிர்சாதத்தின் மீது தூவினாள். சர்க்கரை பொங்கல் முந்திரி அலங்காரத்துடன் நெய்வாசம் வீச, எலுமிச்சை சாதம், புளியோதரை மற்றும் தக்காளி சாதத்தில் கறிவேப்பிலையை அழகுக்காக வைத்தாள்.

“வாவ்! பிரக்ருதி ஒரு வேலைய அழகா பண்ணி முடிக்க உன்னால மட்டும் தான் முடியும்டி... இன்னைக்கு எல்லாரோட பாராட்டுமழையிலயும்  நனைஞ்சு எனக்கு ஜலதோஸம் பிடிக்காம நீங்க தான் கடவுளே பாத்துக்கணும்”

 தனது சமையலை புகழ்ந்தபடி அதை மொபைலில் அவள் புகைப்படம் எடுத்த போது தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டது.

யாரென திரும்பிப் பார்த்தவள் அங்கே கேசவ் நிற்கவும் புடவையை நீவி விட்டுக்கொண்டாள்.





அதாவது இந்தப் புடவையில் நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்காமல் கேட்டாள் அவள். அதை புரிந்து கொண்டவனோ

“என் ஃப்ரெண்ட் ஒருத்தனோட பாட்டிக்கு எண்பத்தஞ்சு வயசு... அவங்க அடிக்கடி சொல்லுவாங்க, புடவையோட ஸ்பெஷாலிட்டியே எவ்ளோ கேவலமானவங்க அதை கட்டுனாலும் அவங்களை பேரழகியா காட்டுறது தானாம்... அதை இன்னைக்கு ரியாலிட்டில பாத்து தெரிஞ்சிக்கிட்டேன்... இந்தியா போனதும் கண்டிப்பா அவங்க கிட்ட இந்த இன்சிடெண்டை சொல்லுவேன்” என்றபடி அவள் சாதம் எடுத்து வைத்த பாத்திரங்களை ஹாலுக்கு எடுத்துச் சென்றான்.

இவன் இப்போது என்னை பாராட்டினானா அல்லது கலாய்த்தானா என புரியாமல் விழித்தபடி அவனைப் பின் தொடர்ந்தாள் பிரக்ருதி.

நல்ல நேரம் ஆரம்பித்ததும் விளக்கேற்றிய மகிழினி முதலில் தன் மருமகளுக்குத் தங்க காப்பை மாட்டிவிட்டார். பின்னர் வளையல்களை அணிவித்து சந்தனம் பூசி குங்குமமிட்டு மகனையும் மருமகளையும் பூத்தூவி ஆசிர்வதித்தார்.



பின்னர் வந்திருந்த சுமங்கலிகள் அனைவரும் அவரைப் பின்பற்றி பிரணவிக்கு வளையல் அணிவிக்க பிரக்யா அவர்களுக்கு கொடுத்துவிட வளையல் வெற்றிலை பாக்குடன் தாம்பூலப்பையை எடுத்து வைக்க அவளுக்கு உதவுகிறேன் என அருகே அமர்ந்து கொண்டான் ஷ்ரவன்.

சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா

அவன் பாட்டு பாடியபடி அவளது தோளை இடிக்க பிரக்யாவோ நொடிக்கு ஒரு முறை அன்னை தங்களை கவனித்துவிடுவாரோ என்று பதறிக்கொண்டிருந்தாள்.

“ப்ச்! இப்ப எதுக்கு டென்சன்?”

“எங்கம்மா மட்டும் நம்மளை பாத்தாங்கனு வையேன், எனக்கு தீபாவளியே கொண்டாடிடுவாங்க”

“ஐய்! அப்ப எனக்குத் தலை தீபாவளியா?”

“ஜோக்கா? இப்ப கேக்குறப்ப சிரிப்பே வரல ஷ்ரவன்”

“அப்ப நாலு நாள் வெயிட் பண்ணி சொல்லட்டுமா?”

“அதை கேக்க நான் இங்க இருக்கணுமே”

“ஏன்?”

“நீ இப்பிடியே மொக்கை போட்டுக்கிட்டு இருந்தா நாலு நாளுக்குள்ள என்னை இந்தியாக்கு கூட்டிட்டுப் போயிடுவாங்க”



அவளது அனுமானம் சரியாகிவிட்டது. ஆம்! ஷ்ரவனும் பிரக்யாவும் நெருக்கமாக அமர்ந்து உரையாடுவதை மகிழினியின் துப்பறியும் விழிகள் கண்டுகொண்டன.

வளைகாப்பு முடிந்து பேசிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தவர் வந்தவர்களுக்கு உணவு பரிமாற மகளையும் பிரக்ருதியையும் அழைத்துக்கொண்டார்.

கேசவும் ஷ்ரவனும் கூட பரிமாற வரவும் “நல்ல பசங்க தான் போல” என்று எண்ணியவர் பரிமாறும் போதும் மகளும் ஷ்ரவனும் பார்வையையும் சிரிப்பையும் பரிமாறிக்கொள்வதை கவனிக்காமல்  இல்லை.

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் வீட்டினரோடு சேர்ந்து ஷ்ரவனும் கேசவும் உணவருந்தினர்.

பிரக்ருதி கேசவின் தட்டினருகே ஒரு கிண்ணத்தில் பாயாசத்தை ஊற்றி வைக்க அவனோ “எனக்குப் பாயாசம் வேண்டாம்” என மறுத்துவிட்டான்.

அவள் எடுத்துக்கொண்டதும் சாப்பிட ஆரம்பித்தவன் பிரக்யா பாயாசம் வைக்கவும் புன்னகையோடு எடுத்து ஸ்பூனால் சாப்பிட ஆரம்பித்தான்.

பிரக்ருதி அவனை முறைக்க “சிலரோட கையால சாப்பிட்டா பாயாசம் கூட பாய்சனா மாறிடும்” என்று குத்தலாக பதிலளித்துவிட்டு மீண்டும் சுவைக்க ஆரம்பித்தான்.

பிரக்ருதி கடுப்புற்றவள் பிரக்யாவின் காதில் முணுமுணுத்தாள்.

“எப்பிடியும் நீ குடியிருந்த கோயில் இவனுங்களுக்கு பாயாசத்தை வீட்டுக்குக் குடுத்துவிட சொல்லும்... அதுல உப்பை அள்ளி போட்டு குடுக்குறேன் பாரு”

“ஏய்! ஷ்ரவனும் அதை குடிப்பான்”

“குடிக்கட்டும்டி... அவனுக்குச் சேர்க்கை சரியில்ல, அதுக்குப் பனிஷ்மெண்ட்னு நினைச்சுக்க”

சாப்பாடு முடிந்ததும் பிரக்ருதி எதிர்பார்த்தபடி மகிழினி ஷ்ரவனுக்கும் கேசவுக்கும் சாப்பாடு மற்றும் பாயாசத்தை பாத்திரங்களில் வைத்து கொடுக்கும்படி கட்டளையிட ஒரு வில்லத்தனமான புன்னகையோடு சமையலறைக்குள் சென்றாள் பிரக்ருதி.

பிரக்யாவோ ஷ்ரவனிடம் பாயாசம் சாப்பிட வேண்டாமென கூற சென்றவள் “பிரகி” என்று மகிழினி அழைத்ததும் அவரது அறைக்கு ஓடிவிட்டாள்.

“என்னம்மா?”

உதடுகள் பேசினாலும் விரல்கள் வேகமாக மொபைலின் தொடுதிரையில் தட்டச்சு செய்து கொண்டிருந்தன.

மகிழினி அவளது மொபைலை பிடுங்கியவர் அறைக்கதவை சாத்தினார்.

அன்னையை புதிராக பார்த்த பிரக்யா “வளைக்காப்பு நடக்குறப்பவே கிருதி அப்பாவுக்கும் அங்கிளுக்கும் வீடியோவை ரெக்கார்ட் பண்ணி அனுப்பிட்டாம்மா” என்று மொபைலை வாங்கியதற்கான அர்த்தத்தை வேறாக புரிந்துகொண்டு கூறினாள்.

“அந்த வீடியோல நீயும் அந்த ஷ்ரவன் பையனும் பேசிக்கிட்டது சிரிச்சதுலாம் ரெக்கார்ட் ஆகிருக்குமா பிரகி?” என கேட்டு அவளை அதிர வைத்தார் மகிழினி.

“அம்மா...”



“என்னடி அம்மா? உன்னை இங்க எதுக்கு அனுப்பி வச்சோம்? படிக்கிறதுக்கு தானே... அதை விட்டுட்டு என்ன வேலை பாத்துட்டிருக்க? நானும் உன் அப்பாவும் உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தோம்... அது எல்லாத்தையும் இப்பிடி உடைச்சு சுக்குநூறாக்கிட்டியேடி”

வழக்கமான நடுத்தரவர்க்கத்து தாயாக அவர் குமுற தொடங்கினார். பிரக்யா வாயைத் திறவாது நிற்கவும் கதவைத் திறந்தவர் பிரக்ருதியை உள்ளே அழைக்க அவளும் “என்ன ஆன்ட்டி?” என்று கேட்டபடி வந்தாள்.

அவள் வந்ததும் கதவை அடைத்தவர் பிரக்ருதி திகைக்கவும் “இவளும் அந்தப் பையனும் பழகுறது உனக்குத் தெரியுமா கிருதி?” என்று கேட்க பிரக்யாவைப் பார்த்தாள்.

அவளோ எல்லாம் தெரிந்துவிட்டது என சைகை மொழியில் கூற பிரக்ருதி ஆமென தலையாட்டினாள்.

“அப்புறம் ஏன் என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?”

“அவ பெர்ஷ்னல்ல நான் எப்பிடி தலையிட முடியும் ஆன்ட்டி?”

“ஏன்டி நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் தானே... அவ தப்பான வழியில போனா நீ தானே அட்வைஸ் பண்ணி திருத்தணும்... ஆனா நீ வாயை மூடிட்டு கம்முனு இருந்திருக்க”

“ஆன்ட்டி அவ லவ் தானே பண்ணுனா... என்னமோ கொலை பண்ணுன மாதிரி பேசுறிங்க”

“லவ்வா? இவளுக்காக நான் என் சொந்தத்துல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டேன்... லவ் கருமம்லாம் எங்க குடும்பத்துக்குச் சரியா வராது”

“காலம் மாறிடுச்சு ஆன்ட்டி... நீங்க கொஞ்சம் இறங்கி வரலாம்... ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க, பிரகி என்னை மாதிரி சட்டுனு முடிவெடுக்குறவ இல்ல.. அவ ஒருத்தனை லவ் பண்ணுறானா கண்டிப்பா நாலையும் யோசிச்சிருப்பா... வாழப்போறது அவளும் ஷ்ரவனும் தானே... நீங்க அட்சதைய போட்டுட்டு கிளம்ப போறிங்க... அதுக்கு ஏன் இவ்ளோ டென்சன்?”

இவ்வாறு சொல்லி மகிழினியின் முறைப்பை வாங்கி கட்டிக்கொண்டாள் பிரக்ருதி.

“அம்மா இருந்து வளர்த்திருந்தா நீ இவ்ளோ தூரம் பேச மாட்ட... என் பொண்ணுக்கு எது நல்லது எது கெட்டதுனு என்னை விட உனக்குத் தெரியுமா? அவ செஞ்ச தப்பை திருத்தாம கூட்டுக்கள்ளாளியா இருந்து வேடிக்கை பாத்திருக்க”

“ஷ்ரவன் ரொம்ப நல்லவன் ஆன்ட்டி”

“நல்லவனா இருந்தா மட்டும் வாழ முடியாதும்மா... அவன் எப்பிடி, அவன் பேரண்ட்ஸ் எப்பிடி, என்ன மாதிரி குடும்பம் இது எதையும் விசாரிக்காம இவ லவ் பண்ணுனாங்கிற காரணத்துக்காக மட்டும் அவனை என் மருமகனா என்னால ஏத்துக்க முடியாது”

பிடிவாதமாக பேசும் மகிழினியை பிரக்யா எப்படி சமாளிக்கப் போகிறாள் என்ற கவலை சூழ்ந்துகொள்ள கலக்கமாக அவளை ஏறிட்டாள் பிரக்ருதி.

ஆனால் பிரக்யாவோ அன்னையின் கோபமொழிகளை எதற்கும் எதிர்வினையாற்றாது தெளிவாக நின்றாள். அவளது காதலை மகிழினி ஏற்றுக்கொள்வாரா? 

Comments

Post a Comment