அலைவரிசை 40

Image
  “சின்ன வயசுல சின்ட்ரெல்லா கதை படிச்சவங்க நிறைய பேர் இருப்பிங்க... நம்ம எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் ட்ரீம் பாய் அந்தக் கதையில வர்ற ப்ரின்ஸ் போல தான் இருப்பான்... சோ அவனை மாதிரி ஒருத்தனோட நம்ம லைஃப் மிங்கில் ஆச்சுனா பெரிய பேலஸ்ல காஸ்ட்லியான ட்ரஸ், அழகான ஜுவெல்ஸ், விதவிதமான சாப்பாடுனு வாழ்க்கையே சொர்க்கம் போல இருக்கும்னு குழந்தைத்தனமான கற்பனை நமக்குள்ள இருக்கும்... வளர வளர இந்த மாதிரி இன்சிடெண்ட்ஸ் எல்லாமே கதைகள்ல மட்டும் தான் வரும்னு நினைச்சு ரியாலிட்டியில நமக்கான ஹீரோவ தேட ஆரம்பிச்சிடுவோம்... அப்பிடி தேட ஆரம்பிக்கிறது தான் நல்லதும் கூட... அதை விட்டுட்டு இன்னும் சினிமா, சீரியல், கதைகள்ல வர்ற மாதிரி பணக்கார ஹஸ்பெண்டுக்காக கனவு காணுறவங்க, ரியாலிட்டிய மறக்கணும்னு வீண் கற்பனையில காலம் கழிக்கிறவங்களுக்கு வாழ்க்கை கசப்பான எதார்த்தத்தை கன்னத்துல அறையுற மாதிரி காட்டுறப்ப அதை ஏத்துக்கவும் முடியாம கற்பனையில வாழவும் முடியாம ரொம்ப கஷ்டப்படுவாங்க... சோ சொர்க்கம் மாதிரியான லைஃப் வேணும்னா அதுக்காக நம்ம நல்லா படிக்கணும், ஹார்ட் ஒர்க் பண்ணணும், வீண் செலவு பண்ணாம பணத்த சேவ் பண்ணணும்னு சின்ன வயசுல இருந்தே க

அலைவரிசை 35

 



“பொதுவா திறமைசாலிங்களுக்கு யார் மேலயும் பொறாமை வராது... பின்ன யாருக்கு வரும்? எந்த ஃபீல்ட்லயும் அரைகுறை நாலெட்ஜ் இருக்குறவங்களுக்கும், நாலேட்ஜ் இல்லனா கூட இருக்குற மாதிரி சீன் போடுற காலி டப்பாக்களுக்கும் தான் பொறாமை வரும்... ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க, எல்லாரும் எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு பிறக்குறதில்ல... புது விசயத்த கத்துக்கிற ஆர்வமும், ஹார்ட் ஒர்க்கும் இருந்தா யார் வேணும்னாலும் எந்த விசயத்தையும் கத்துக்கலாம்... சோ ஆர்வமும் ஹார்ட் ஒர்க்கும் இல்லாத சோம்பேறி திலகங்கள், ஓவர் நைட்ல ஒபாமா ஆக ஆசைப்படுற ஹாஃப் பாயில்ஸ் எந்த ஃபீல்ட்லயும் முன்னேறாம முன்னேறிப் போறவங்களைப் பாத்து பொறாமைப்படுறதும் அவங்களை பத்தி காஸிப் பேசுறதுமா இருப்பாங்க”

                                              -கே.கேவின் மனதின் குரல்

சென்னை சிட்டி பண்பலை அலுவலகம், எழும்பூர் (எக்மோர்)...

பூவில் தோன்றும் வாசம்

அதுதான் ராகமோ?

இளம் பூவை நெஞ்சில் தோன்றும்

அதுதான் தாளமோ?

மனதின் ஆசைகள்..

மலரின் கோலங்கள்..

குயிலோசையின் பரிபாஷைகள்..

அதிகாலையின் வரவேற்புகள்..

புத்தம் புது காலை..

பொன்னிற வேளை..

ஆடியோ கன்சோலில் பாடலை இடையில் நிறுத்தவும் ப்ளே-அவுட் சிஸ்டம் சென்னை சிட்டி பண்பலையின் விளம்பரப்பாடலின் இரண்டு வரிகளைப் பாடியது.

தொடர்ந்து டி.எம்.டி முறுக்குக்கம்பிகள், நகை கடை விளம்பரங்கள், மழை பற்றிய சிறிய வானிலை அறிவிப்பு என ஒவ்வொன்றாக ஒலிபரப்பாகி முடிந்ததும் தனது முன்னே இருந்த மைக்ரோஃபோனை ஆன் செய்தாள் பிரக்ருதி.





“ஹாய் சென்னைவாழ் ஜனங்களே! மாண்டஸ் புயலால மண்டை சூடாகி, பெய்யுற மழை கூட ஆவியாகி போற அளவுக்கு டென்சனா இருக்கிங்களா? இதோ உங்களோட அழகான காதல் நினைவுகளை எழுப்பி உங்களை சில்லாக்க வந்துட்டேன் நான் உங்க கிருதி, இது ‘காதலும் காதல் சார்ந்த நேரமும்’... 

வேலண்டைன்ஸ் டே வர்றதுக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு... எல்லாரும் அவங்கவங்க லவ்வர்கு என்ன கிப்ட் குடுக்கலாம்ங்கிற யோசனையோட, எங்க வேலண்டைன்ஸ் டே செலிப்ரேட் பண்ணுறப்ப கலாச்சார காவலர்கள் கையால தாலி கட்ட வச்சிடுவாங்களோனு பயமும் கலந்து த்ரில்லா வெயிட் பண்ணிட்டிருக்குற காதலர் தினம் உலகளவுல காதலர்களுக்கு மட்டுமில்லங்க, திருமண வாழ்க்கையிலயும் அந்தக் காதலை கொண்டாடுற கணவன் மனைவிக்கும் ஒரு அற்புதமான நாள் தான்...

காதலை கொண்டாடுறதுக்கு தனி நாள் வேணுமா? உண்மையா காதலிக்கிறவங்களுக்கு எல்லா நாளும் வேலண்டைன்ஸ் டே தான்னு நம்ம லவ் மூடை ஆப் பண்ணுற ஆப் பாயில்ஸ் நிறைய பேர் உண்டு...

அவங்களை அவங்க ஸ்டைல்லயே நீங்க ஹேண்டில் பண்ணணும்னா என்ன செய்விங்க? எப்பிடி அவங்களோட இந்த இண்டலெக்சுவலான தாட்ஸ் தப்புனு புரியவைப்பிங்க? இது தான் நம்ம ப்ரோகிராமோட கடைசி கேள்வி...

ஓ! லாஸ்ட் காலர் வந்துட்டாங்க... அவங்க என்ன சொல்லுறாங்கனு கேப்போம்” என்று ஏற்ற இறக்கத்தோடு பேசி முடித்தவள் வாசகரின் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ கிருதி, ஐ அம் அனுஷா”

“ஹாய் அனுஷா! ஹவ் ஆர் யூ?”

“ஒரு ஐ.டி எம்ப்ளாயி கிட்ட கேக்க கூடாத கேள்வி இது”

அந்தப் பெண்ணின் தொனியில் சிரித்தாள் பிரக்ருதி.

“ஒர்க் ஃப்ரம் ஹோம்ல இவ்ளோ நாள் ஜாலியா இருந்துட்டு இப்ப ஆபிஸ் வர கஷ்டமா இருக்குதா அனுஷா?”

“ஒர்க் ஃப்ரம் ஹோம்கு ஆபிஸ் வர்றதே பெட்டர் கிருதி... நைட் ஷிப்ட் தூக்கத்தை கடன் வாங்குதுல்ல... அதை சொன்னேன்”

“ஓ.கே... நம்ம கேள்வி என்னனு தெரியும்ல?”

“ஓ யெஸ்... இந்த மாதிரி நிறைய இண்டலெக்சுவல்ஸ் என் கிட்டவும் கேட்டிருக்காங்க... நான் அவங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி தான் கேப்பேன்... ஜன்வரி ஃபோர்ட்டீன்த்ல சூரியனுக்கு தேங்க்ஸ் சொல்லுறதுக்கு பொங்கலை கொண்டாடுறாங்க... சூரியன் தான் டெய்லி வருதே, ஏன் பொங்கல் அன்னைக்கு மட்டும் ஸ்பெஷிபிக்கா பொங்கல் பொங்கி கொண்டாடுறிங்கனு கேப்பேன்.. அதுக்கு மேல நோ மோர் கொஸ்டீன்ஸ்”

“வாவ்! இன்னைக்கு ப்ரோக்ராம்ல உங்க பதில் தான் ஆசம்... அதுக்கு எதாச்சும் கிப்ட் குடுக்கணுமே... இந்த ப்ரோகிராமோட லாஸ்ட் சாங் நம்ம அனுஷாவோட ஃபேவரைட் சாங் தான்... சொல்லுங்க ப்ளே பண்ணிடுவோம்”

“எனக்கு உல்லாசப்பறவைகள் மூவில இருந்து ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’ சாங் ரொம்ப பிடிக்கும் கிருதி”

“சோ உங்களுக்காக வருது ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே ஃப்ரம் உல்லாசப்பறவைகள்... இதோட நான் குட் நைட் சொல்லுற நேரம் வந்தாச்சு... இது சென்னை சிட்டி எஃப்.எம் ஒன் ஜீரோ செவன் பாயிண்ட் டூ, நான் உங்க கிருதி... இது காதலும் காதல் சார்ந்த நேரமும்... இனிய இரவு வணக்கங்கள்... ஸ்டே டியூன்!”

மீண்டும் ஆடியோ கன்சோலில் அழுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளையராஜாவின் இசையில் பாட ஆரம்பித்தார்.

பிரக்ருதி நிகழ்ச்சி முடிந்து ஸ்டூடியோவை விட்டு வெளியேற உள்ளே நுழைந்தான் அடுத்த ஆர்.ஜேவான சலீம்.

“குட் நைட் கிருதி”

“குட் நைட் டூட்”

அவள் சென்னை சிட்டி பண்பலையின் ஆர்.ஜே ஆகி அன்றோடு பத்து நாட்கள் ஓடியிருந்தது. முதலிரண்டு நாட்கள் பயிற்சியில் கழிய அடுத்த அடுத்த இரண்டு நாட்களில் பண்பலையின் பிரபல ஆர்.ஜே சாகித்யாவோடு இணைந்து நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியான ‘செம காமெடி மச்சி’ அவளையும் அவளது நகைச்சுவையுணர்வையும் வாசகர்களிடத்தில் கொண்டு சேர்த்திருந்தது.

அவளது வேலை செய்யும் திறனில் நம்பிக்கை வந்ததும் பண்பலை நிர்வாகம் இரவில் ஒலிபரப்பாகும் ‘காதலும் காதல் சார்ந்த நேரமும்’ நிகழ்ச்சிக்கு ஆர்.ஜேவாக இருக்கும் பொறுப்பை பிரக்ருதியிடம் ஒப்படைத்தது.

அது நேரலை நிகழ்ச்சி என்பதால் ஸ்கிரிப்ட் தயாராக இருந்தாலும் ஆர்.ஜேவின் டைமிங் சென்சும் அங்கே முக்கியம். தொடர்ந்து மூன்று மணி நேரங்கள் ஒலிபரப்பாக்கும் அந்நிகழ்ச்சி இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும்.

முதலில் இரவு நேர வேலை என்றதும் யோசித்த வாசன் மகளின் பிடிவாதத்தில் அனுமதி கொடுத்துவிட்டார்.

இதோ கடந்த பத்து நாட்களாக ‘காதலும் காதல் சார்ந்த நேரமும்’ நிகழ்ச்சியை தனது வசீகர குரலால் நிரப்பி வருகிறாள் பிரக்ருதி.

அவளுக்கு அதில் இருந்த சிரமம் ஒன்றே ஒன்று தான். காதலைப் பற்றி கவித்துவமாகப் பேசுவது. ஆனால் விரும்பிய வேலை என்பதால் அதை ஒரு தடையாக அவள் கருதவில்லை.

 மூன்று மணி நேரம் பேசியதில் தொண்டை சற்று வறண்டிருப்பதாக தோன்ற காபி குடிக்கலாமே என நாவின் சுவை அரும்புகள் ஏங்கியபோது அவள் முன்னே ஆவி பறக்கும் காபி கோப்பை நீட்டப்பட்டது.

“தேங்க்ஸ்டா கவின்”



கோப்பையை வாங்கி உறிஞ்ச ஆரம்பித்தாள் பிரக்ருதி.

“நீ இன்னும் கிளம்பலயா?” என்ற கேள்வியில் அவனை கடுப்பேற்றினாள்.

“நான் எப்ப உனக்கு முன்னாடி போயிருக்குறேன் மண்டூகமே... காபிய குடிச்சிட்டுக் கிளம்பு... நான் பைக்ல ட்ராப் பண்ணிடுறேன்” என்றான் கவின்.

காபி கோப்பையை காலி செய்தபடி மறுப்பாய் தலையசைத்தவள் மொபைலை காட்டினாள்.

அதில் ரேபிட்டோ (Rapido) செயலியின் திரை இருந்தது.

“நீ அடங்கவே மாட்ட”

“அட போடா... நான் பைக் டாக்சி புக் பண்ணிட்டேன்... வேணும்னா நீயும் அந்த பைக் கூடவே வா”

“ஷெனாய் நகர்ல நான் ட்ராப் பண்ணுனா ஆகாதா?”

“நீ அரும்பாக்கம் போகணும்ல... ஐ வில் மேனேஜ் கவின்... கிளம்பு”

கோப்பையைக் கழுவி கவிழ்த்தியவள் தனது சிறிய ஷோல்டர் பேக்கை மாட்டிக்கொண்டு பைக் டாக்சிக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

வந்ததும் ஓ.டி.பியை சொல்லிவிட்டு பைக்கில் ஏறினாள் அவள். இது தான் அவளது தினசரி பயண நேரம். அவளை முன்பின் தெரியாத ஒருவனோடு பைக் டாக்சியில் அனுப்ப தயங்கி கவினும் அவள் கிளம்பும் பன்னிரண்டு மணியளவில் தான் வீட்டுக்குக் கிளம்புவான். அன்றும் அவ்வாறே!

மாண்டஸ் புயலின் தயவால் சென்னை நகரம் முழுமைக்கும் ஏ.சி போடப்பட்டிருக்க குளிரைச் சமாளிக்க கரங்களை தேய்த்து கன்னத்தில் வைத்துக்கொண்டபடி பயணித்தாள் அவள்.

அதேநேரம் டோஷிபா எஃப்.எம் ரேடியோவில் பிரக்ருதி கடைசியாக ஒலிபரப்பிய ஜெர்மனியின் செந்தேன்மலரே பாடலைக் கேட்டு முடித்திருந்தான் கேசவ்.

சற்று முன்பு தான் கார்கி டெலிகாமிலிருந்து வீடு திரும்பியிருந்தான் அவன். வெளியே மழைத்தூரல் ஆரம்பித்திருக்க அதை கண்ணாடி கதவுகளின் வழியே பார்த்தவாறு செவிகளை ரேடியோவில் கேட்ட பிரக்ருதியின் குரலில் பதித்தபடி உடை மாற்றி முடித்திருந்தான்.

பாடல் முடியவும் குளிருக்கு இதமாக தேநீரும் இரவுணவும் அவனது அறைக்கே சாலமன் மூலம் வந்து சேர்ந்தது.

வெளியே பெய்த மழைத்தூரல் மண்வாசனையைக் கிளப்ப சற்று முன்னர் ரேடியோவில் ஒலித்த பிரக்ருதியின் குரலோ அவன் மறக்க நினைத்த காதல் நினைவுகளை கிளறிவிட்டது.

புல்கா விள்ளலைச் சுவைத்தபடி நினைவலைகளில் மூழ்கி முக்குளித்தான் கேசவ்.

“என்ன கேவலமான மனசு இது? யாரை மறக்கணும்னு நினைக்குறேனோ அவளையே ஞாபகப்படுத்துது... சை”



அவன் அலுத்துக்கொள்ளவும் மானசீகமாக அவனைத் திட்டியது மனசாட்சி.

“நீ அவளை மறக்கணும்னு நினைக்கிறவன் மாதிரி தெரியல... அப்பிடி மறக்குறவனா இருந்தா நீ ஏன்டா அவ என்ன பண்ணுறா, எங்க இருக்குறா, என்ன வேலை பாக்குறானு ஷ்ரவன் மூலமா இண்டேரக்டா தெரிஞ்சிக்கிற? போதாக்குறைக்கு டெய்லியும் நைட் மூனு மணி நேரம் அவ குரலை எஃப்.எம்ல கேக்குறத பாஸ்ட் டென் டேய்ஸா பழக்கமா வேற வச்சிருக்குற... நீ அவளை மறக்குறவனா? இதுல நீ என்னை கேவலமான மனசுனு திட்டுற... கொன்னுடுவேன் ராஸ்கல்”

மனசாட்சியின் மிரட்டல் என்னவோ நியாயமானது தான்.

கேசவ் பிரக்ருதியை மறப்பவனாக இருந்தால் அவளைப் பற்றிய எத்தகவலையும் காதில் கேட்டிருக்கக்கூடாது. மாறாக ஷ்ரவன் பிரக்யாவிடம் பேசியதை பகிர்ந்து கொள்ளும் போது வாய் தவறி கூறிய தகவல்களை வைத்தே பிரக்ருதியின் தற்போதைய நிலையை ஊகித்துக் கொண்டான்.

அவள் பண்பலையில் வேலை செய்வதை அறிந்ததும் இதுவரை ரேடியோ என்ற ஒன்றை கண்ணால் கூட பார்த்திடாதவன் ரேடியோவை வாங்கி சென்னை சிட்டி பண்பலையை இரவு நேரங்களில் மட்டும் கேட்க ஆரம்பித்தான்.

தட்டிலிருந்த புல்கா முழுவதும் தீர்ந்த பிறகு கை கழுவிவிட்டு வந்தவன் தட்டுகளை சமையலறையில் வைக்க வரும் போது அவன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்ற எண்ணத்தில் அலட்சியமாக பேசிக்கொண்டிருந்த சரணையும் கமலானந்தையும் பார்த்துவிட்டான்.



“அந்த நிகிதா என்னை டார்ச்சர் பண்ணுறாப்பா”

“என்னவாம் அவளுக்கு?”

“ஷீ இஸ் ப்ரெக்னெண்ட் டாட்”

“வாட்? சரண் ஆர் யூ ஜோக்கிங்?”

“ஐ அம் சீரியஸ்லி ஸ்பீக்கிங் டாட்... ஷீ இஸ் ப்ரெக்னெண்ட்”

சரண் அவ்வாறு கூறியதும் அவனது கன்னத்தில் பளாரென அறை விழுந்தது.

“அறிவில்ல உனக்கு? அவளை கட் பண்ணிவிடுனு எத்தனை தடவை சொன்னேன்... அவ ப்ரெக்னெண்ட் ஆகுற வரைக்கும் நீ பூ பறிச்சிட்டு இருந்தியாடா?”

“நான் அவளைப் பாத்து மூனு மாசம் ஆகுது டாட்... ப்ளான் பண்ணி என்னை சிக்க வச்சிட்டா”

“அது உன் குழந்தை இல்லயா?”

“அவ என் குழந்தைனு தான் சொல்லுறா டாட்”

“யூ பாஸ்ட...”

“அவசரப்பட்டு வார்த்தைய விடாதிங்க டாட்” என இடைமறித்தான் சரண்.

“பின்ன உன்னை கொஞ்சணுமாடா? உனக்கு வேற பொண்ணுங்களே கிடைக்கலயா? அவளை நீரவை பழிவாங்குறதுக்காக யூஸ் பண்ண சொன்னேன்... இப்ப நீயே அவ வலையில விழுந்து பழியாக போற... இடியட் இடியட்... எனக்குனு வந்து பிறந்து தொலைச்சிருக்கியே”

கடுகடுவென அவரது அறைக்கு விரைய அவரைத் தொடர்ந்து ஓடினான் சரண்.

“அம்மா கிட்ட சொல்லிடாதிங்க டாட்” என்று கெஞ்சியபடியே.

இவ்வளவையும் மறைந்து நின்று கேட்ட கேசவின் மனமெங்கும் எரிமலை குழம்பு. முகம் சிவுசிவுவென இருக்க சாப்பிட்ட தட்டுகளை கழுவி கவிழ்த்தியவன் அவனது அறைக்கு வந்தான்.

அங்கே சுவரில் புகைப்படமாகச் சிரித்தான் நீரவ். அவனோடு ஷ்ரவனும் கேசவும் இடித்துக்கொண்டு நின்றிருந்தனர். 

“நான் தான் நீரவுக்கு குளோஸ்”

“நான் தான்டா”

புகைப்படத்துக்கு முந்தைய நினைவுகள் எழும்பி அடங்கின.

கண் முன் நடமாடியவன் இன்று நினைவுகளாக மாறியதற்கு காரணமானவள் அந்த நிகிதா. சரண் என்ற வில்லில் இருந்து எய்யப்பட்ட அம்பு தான் அவள். அந்த அம்பு விஷம் தோய்த்த அம்பென்பதை அறியாமல் காதல்தேவதை எய்த காதல் அம்பாக எண்ணியது நீரவின் மடமை.

அந்த மடமைக்கு அவன் விலையாக கொடுத்தது அவனது உயிரை. விலை கொடுத்தவன் உலகிற்கு விடையும் கொடுத்துவிட்டு கைப்பிடி சாம்பலாக மாறினாலும் அவனை சாகடித்த வில்லும் அம்பும் இன்னும் ஒன்றாக தான் இருக்கின்றன போலும்.

யோசிக்க யோசிக்க இரத்தம் கொதித்தது கேசவிற்கு. ஏதாவது செய்ய வேண்டுமென யோசித்தவனின் மனம் பிரக்ருதியின் நினைவுகளைக் களைந்து பழிவெறியை உடுத்திக்கொண்டது.

உடனே ஷ்ரவனை அழைத்தான்.

அவன் அழைப்பை ஏற்றதும் சரணும் அவனது தந்தையும் பேசிக்கொண்டதை ஒருவரி விடாமல் அவனிடம் கூறினான்.

“இன்னுமாடா அதுங்க ரெண்டும் கான்டாக்ட்ல இருக்குதுங்க?”

“கேவலப்பிறவிங்க ரெண்டும் ஜோடியா இல்லாம போனா தான் நீ ஆச்சரியப்படணும் ஷ்ரவன்”

“இப்ப என்ன செய்யலாம்னு இருக்க கேசவ்?”

“ஐ டோண்ட் ஹேவ் எனி ஐடியா... ஆனா அவங்க மூனு பேரையும் சில்லு சில்லா உடைச்சு உரு தெரியாம அழிக்கலனா என் ஆத்திரம் அடங்காது... இதுல மட்டும் நான் தோத்துட்டேன்னா மறுபடியும் டிப்ரசன்ல விழுந்துடுவேன்டா... இந்த தடவை எந்த சைகோதெரபியும் என்னை காப்பாத்த முடியாது”

“நான் இருக்கேன் கிரிஷ்... நீ ரொம்ப யோசிக்காத... முதல்ல கம்பெனில கைய வைப்போம்... அப்புறம் அதுங்களை கவனிக்கலாம்... இப்ப எதையும் யோசிக்காம தூங்கு”

ஷ்ரவனின் அறிவுரையைக் கேட்டுவிட்டு படுக்கையில் விழுந்தவனின் மனம் காரணமேயின்றி நிகிதாவோடு பிரக்ருதியை ஒப்பிட்டது.

“சீ! ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல”

அருவருப்போடு அவன் திட்டிய அதே நொடியில் ஷெனாய் நகரின் பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்டின் ஃப்ளாட்டில் இரவுணவாக நூடுல்ஸை விழுங்கி கொண்டிருந்த பிரக்ருதிக்கு விக்கல் வந்தது.



“க்கப்”

அவளது விக்கல் சத்தத்தில் பிரணவிக்குத் துணையாக படுத்திருந்த பிரக்யா கண் விழித்துவிட்டாள்.

இன்னும் ‘க்கப்’ நிற்காமல் இருக்க அவள் முன்னே தண்ணீர் டம்பளரை வைத்தாள் பிரக்யா.

“நீ தூங்கலயா பிரகி?” என கேட்டபடியே தண்ணீரை குடித்தாள் பிரக்ருதி.

“நல்ல தூக்கம்... உன்னோட ‘க்கப்’ எழுப்பி விட்டுருச்சுடி” என்றபடி கண்ணாடியற்ற விழிகளைத் தேய்த்துக் கொண்டாள்.

“நல்லது தான்... நான் எக் மேகி செஞ்சிருக்கேன்... ஒரு வாய் சாப்பிடு” என தோழிக்கு ஊட்டிவிட்டாள் பிரக்ருதி.

கேசவ் தன்னை பற்றி கேவலமான எண்ணுவதெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை. தெரிந்தாலும் அவள் அதை பற்றி அலட்டிக்கொள்ள போவதில்லை.

Comments

Post a Comment