அலைவரிசை 40

Image
  “சின்ன வயசுல சின்ட்ரெல்லா கதை படிச்சவங்க நிறைய பேர் இருப்பிங்க... நம்ம எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் ட்ரீம் பாய் அந்தக் கதையில வர்ற ப்ரின்ஸ் போல தான் இருப்பான்... சோ அவனை மாதிரி ஒருத்தனோட நம்ம லைஃப் மிங்கில் ஆச்சுனா பெரிய பேலஸ்ல காஸ்ட்லியான ட்ரஸ், அழகான ஜுவெல்ஸ், விதவிதமான சாப்பாடுனு வாழ்க்கையே சொர்க்கம் போல இருக்கும்னு குழந்தைத்தனமான கற்பனை நமக்குள்ள இருக்கும்... வளர வளர இந்த மாதிரி இன்சிடெண்ட்ஸ் எல்லாமே கதைகள்ல மட்டும் தான் வரும்னு நினைச்சு ரியாலிட்டியில நமக்கான ஹீரோவ தேட ஆரம்பிச்சிடுவோம்... அப்பிடி தேட ஆரம்பிக்கிறது தான் நல்லதும் கூட... அதை விட்டுட்டு இன்னும் சினிமா, சீரியல், கதைகள்ல வர்ற மாதிரி பணக்கார ஹஸ்பெண்டுக்காக கனவு காணுறவங்க, ரியாலிட்டிய மறக்கணும்னு வீண் கற்பனையில காலம் கழிக்கிறவங்களுக்கு வாழ்க்கை கசப்பான எதார்த்தத்தை கன்னத்துல அறையுற மாதிரி காட்டுறப்ப அதை ஏத்துக்கவும் முடியாம கற்பனையில வாழவும் முடியாம ரொம்ப கஷ்டப்படுவாங்க... சோ சொர்க்கம் மாதிரியான லைஃப் வேணும்னா அதுக்காக நம்ம நல்லா படிக்கணும், ஹார்ட் ஒர்க் பண்ணணும், வீண் செலவு பண்ணாம பணத்த சேவ் பண்ணணும்னு சின்ன வயசுல இருந்தே க

அலைவரிசை 33


"சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆட்டிட்டியூட் கொஞ்சம் அதிகம்... மோஸ்ட்லி நானும் அப்பாவ மாதிரியே எங்களை விட ஃபினான்ஷியல் ஸ்டேட்டஸ்ல குறைஞ்சவங்களை மதிச்சதே இல்ல... ஸ்கூல் டைம்ல நான் ஸ்போர்ட்ஸ் ப்ளேயரா இருந்தப்பா காஸ்ட்லியான ஷூஸ், காஸ்ட்லியான ஸ்போர்ட்ஸ்வேர்னு போடுறத பசங்க ஏக்கமா பாப்பாங்க... எனக்கும் அது ரொம்ப பெருமையா இருக்கும்... அப்ப மனசுல ஒரு திமிர் வரும், இங்க என்னை மிஞ்ச யாரும் இல்லனு... அந்த திமிர்ல I was blowing my own trumpet... இதை அப்பா பெருசா எடுத்துக்கிட்டது இல்ல... பட் அம்மா தான் இந்த சுயதம்பட்டம் அடிக்கிற குணம் தப்புனு எனக்குப் புரிய வச்சாங்க... வெட்டி பந்தாவும் செல்ஃப் டப்பாவும் ரொம்ப சீப்பான குணம்னு அவங்க சொன்னப்ப என்னால முதல்ல ஏத்துக்க முடியல... அப்புறம் தான் நம்மளை பத்தி நம்மளே பெரிய ஆள்னு சொல்லி சீன் போடுறது ரொம்ப காமெடியான விசயம்னு புரிஞ்சுது... நம்ம கிட்ட திறமையும் வசதிவாய்ப்பும் இருக்குனு காட்டிக்கிறது தப்பில்ல... ஆனா நம்ம கிட்ட மட்டும் தான் அது இருக்குனு காட்டிக்கிறது தான் சீப்பான காமெடியான பிஹேவியர்... இதை நான் முழுசா புரிஞ்சிக்கிட்ட சமயத்துல அம்மா என் கூட இல்ல”

                                              -கே.கேவின் மனதின் குரல்

ராஜா அண்ணாமலைபுரம்...

.லிவிங் ரூமின் சுவரில் மாட்டப்பட்டிருந்த மஹ்மத் ஹூசைனின் ஓவியத்தை ரசித்தபடி செஃப் வசந்தின் கைமணத்தில் தயாரான காபியை அருந்திக் கொண்டிருந்தான் கேசவ்.



அந்த ஓவியரின் இன்னும் சில ஓவியங்களை சேகரித்து வைத்திருந்தார் அவனது அன்னை கார்கி. அவர் உறுப்பினராக இருந்த மகளிர் க்ளப்பில் அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தை ஒரு முதியோர் இல்லத்திற்கு டொனேசனாக கொடுத்து விட்டார் அவர்.

அப்போது கேசவ் அவரைக் கேலி கூட செய்ததுண்டு.

“நம்ம காசு குடுத்து வாங்குனத யாரோ முன்ன பின்ன தெரியாதவங்களுக்குத் தானமா தூக்கி குடுக்குறதுலாம் முட்டாள்தனம்மா”

அவனது கூற்றை புன்னகையோடு மறுதலிப்பார் கார்கி.

“இந்த உலகத்துல பணத்தால வேல்யூ பண்ண முடியாத ஏகப்பட்ட விசயங்கள் கொட்டிக் கிடக்குது கிரிஷ்... அது எதுவும் உன் கண்ணுக்கும் தெரியாது... உங்கப்பா கண்ணுக்கும் தெரியாது”

அச்சமயத்தில் அம்மாவுக்குச் சாமர்த்தியம் போதாது என்று அவன் எண்ணியது கூட உண்டு.

இப்போது நினைத்துப் பார்த்தால் தான் அவரது அறிவுரைக்கான அர்த்தமே புரிகிறது. 

காபி காலி ஆனதும் எழுந்து சமையலறைக்கு வந்தான் கேசவ். ஒரு காலத்தில் விதவிதமான டெசர்ட்களை செய்வதை அவன் பொழுதுபோக்காக வைத்திருந்த போது அங்கே அடிக்கடி விசிட் செய்வான்.

அப்போதெல்லாம் வசந்திற்கு விடுமுறை விடப்படும். அவன் செய்யும் இனிப்புகளையோ டெசர்ட்களையோ சுவைக்கும் பலியாடுகளாக கார்கியும் நீரவும் சிக்கிக்கொள்வார்கள். சில சமயங்களில் சுசித்ராவும் அந்த விஷப்பரிட்சையில் இறங்கியதுண்டு.

இப்போது நினைத்துப் பார்க்கும் போது மனம் கனத்தது கேசவிற்கு.

சமையலறையில் வசந்தும் அவனது உதவியாளர்களும் காலையுணவைச் சுறுசுறுப்பாக சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருபக்கம் பத்மானந்த் மற்றும் கமலானந்துக்காக பேலியோ உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

கேசவ் அதை கவனித்தபடி காலி கோப்பையுடன் அங்கே நிற்கவும் வசந்த் ஓடி வந்தான்.

“நீங்க ஏன் சார் இவ்ளோ தூரம் வர்றிங்க? சாலமனை கூப்பிட்டிருந்தா வந்திருப்பானே”

“இட்ஸ் ஓ.கே வசந்த்... பை த வே உங்க காபி சூப்பர்... டல்லாஸ்ல நான் உங்க காபிய ரொம்ப மிஸ் பண்ணுனேன்” 

அவனது பாராட்டில் பூரிந்து நெளிந்தவன் மீண்டும் காலையுணவை கவனிக்கப் போய்விட்டான்.

கேசவ் காலி கோப்பையை கழுவி கவிழ்த்துவிட்டு சமையலறையை விட்டு வெளியேறிய போது சுசித்ரா எதிரே வந்தார்.

“உன்னை மாமா கூப்பிட்டார் கிரிஷ்”

“எதுக்கு சித்தி?”

“ஷேர் ட்ரான்ஸ்ஃபர் பத்தி பேசுறதுக்காக”

“அபிஷியல் மேட்டரை வீட்டுல பேசக்கூடாதுனு அம்மா போட்ட ரூலை கிடப்புல போட்டாச்சு போல”

சுசித்ரா அவனை மௌனமாகப் பார்த்தார்.

“அவர் எங்க இருக்கார் இப்ப?”

“கார்டன்ல இருக்கார்பா”

சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தவரிடம் “டுமாரோ ஹெட் ஆபிஸ்ல மீட்டிங் இருக்கும்... நீங்க அதுல கட்டாயம் கலந்துக்கணும் சித்தி” என்று கூறிவிட்டு தோட்டத்தை நோக்கி நடந்தான்.

சுசித்ரா யாரோ ஒருவரிடம் பேசுவது போல ஒட்டாமல் பேசும் தமக்கை மகனின் செய்கையில் மனம் வருந்தினாலும், தனது கடந்தகால திமிர்த்தனமான செய்கைகளின் விளைவே அது என ஏற்றுக்கொண்டார்.

வீட்டின் முன்பக்கம் கொய் மீன் குளத்தருகே தோட்டத்தைப் பார்த்தபடி இருந்த பெர்கோலாவின் கீழே கிடந்த நாற்காலிகளை ஆக்கிரமித்திருந்தனர் பத்மானந்த், கமலானந்த் மற்றும் சரண்.



அதில் கமலானந்த் மற்றும் சரணின் முகங்கள் விளக்கெண்ணெய் குடித்த விட்டில்பூச்சிகளைப் போல இருக்க ஏளனப்புன்னகையோடு அவர்களைப் பார்த்தபடி அமர்ந்தான் கேசவ்.

“என்ன பேசணும்னு சொல்லுங்க டாட்”

“ஷேர் ட்ரான்ஸ்ஃபர் பத்தி தான் பேசணும் கிரிஷ்”

“சாரி... இதை நாளைக்கு ஹெட் ஆபிஸ்ல வச்சு பேசுனா பெட்டர்னு தோணுது... ஷ்ரவன் இல்லாம என்னால எந்த முடிவும் எடுக்க முடியாது”

ஷ்ரவனின் பெயரைக் கேட்டதும் சரண் எரிச்சலுற்றான்.

“ஷேர் ட்ரான்ஸ்ஃபர் நமக்குள்ள பேசி முடிக்க வேண்டிய விசயம்... இதுக்கு அவனை மாதிரி ஸ்டாஃபோட ஒபீனியன் எதுக்கு?”

அவனிடம் பதில் பேச விரும்பாத கேசவ் தந்தையிடம் தனது பார்வையைத் திருப்பினான்.

“ஷ்ரவன் இன்னும் கார்கி டெலிகாமோட சி.எஃப்.ஓ தான்... உங்க தம்பி மகனுக்கு வந்திருக்குறது அம்னீசியாவா அல்சைமரானு ஒரு மெடிக்கல் செக்கப் பண்ணச் சொல்லிடுங்க டாட்... பிசிக்கலி ஆர் மெண்டலி வீக்கானவங்க கம்பெனி போர்ட்ல இருக்கக்கூடாதுங்கிறது என்னோட டிசிசன்... அண்ட் இவன் எங்க மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் பண்ணுனானோ அங்க போய் இவன் வச்சிருக்குற சர்டிபிகேட்ஸ் ஒரிஜினலா இல்லையானு செக் பண்ணிடுங்க... கங்க்ளமெரைட்டோட டைரக்டர் மாதிரி பேசாம பொட்டிக்கடை வச்சிருக்குறவன் மாதிரி ஷேர் ட்ரான்ஸ்ஃபர் பத்தி நமக்குள்ள பேசுவோம்னு இடியட் போல பிஹேவ் பண்ணுறான்”

சரணுக்கு கேசவின் எகத்தாளமான பேச்சில் கோபம் எழ சட்டையின் ஸ்லீவை மடித்துக்கொண்டு “என்னடா சொன்ன?” என்றபடி கேசவை நெருங்கினான் அவன்.

“சரண் ஸ்டாப்” என கமலானந்த் தடுக்க முயல அதற்குள் எழுந்த கேசவ் அவனெதிரே வந்து நின்றான்.

“ஞாபகமறதி மட்டும் தான் இருக்குனு நினைச்சேன்... உனக்குக் காதும் அவுட்டா?” என்று மீண்டும் நக்கலடித்தான்.

சரண் அவன் மீது கை வைக்க எத்தனித்த அடுத்த நொடியில் அவனது கையை முறுக்கி முதுகுப்புறம் கொண்டு வந்தவன் அவன் வலியில் துடிப்பதை ரசித்தபடி இன்னொரு கரத்தால் அவனது கன்னத்தில் அறைந்தான்.

“கிரிஷ் டோண்ட் பிஹேவ் லைக் அ தக்”

பத்மானந்த் தடுக்க தடுக்க கேளாமல் மாறி மாறி சரணின் கன்னத்தில் அறைந்தவனை கமலானந்த் அச்சத்துடன் நோக்கினார். கேசவின் கண்களில் தெரிந்த உணர்வு கோபத்திற்கும் மேலானது. அது ஏதோ அபாயத்திற்கான அறிகுறியாகத் தோன்றியது கமலானந்துக்கு.

“வேண்டாம் கிரிஷ்... வலிக்குதுடா” என சரண் கதறிய பிறகு பரிதாபப்பட்டு விடுவித்தான் கேசவ்.

மூவரும் அவனைப் பார்க்க, கேசவ் நிதானமாக சரணை அறைந்த கையை தட்டி ஊதிக்கொண்டான்.

“இனிமே என் கிட்ட இவன் திமிறிட்டு வந்தான்னா இதை விட மோசமா அடிவாங்கி சாவான்... உங்களுக்குக் கொள்ளி போட புள்ளை வேணும்னா என் கிட்ட மோதணும்ங்கிற தாட்ட மறந்துடச் சொல்லுங்க” என கமலானந்தை எச்சரித்தான் அவன்.

பத்மானந்த் அவனை திகைப்பாய் பார்க்கும் போதே “உங்க கையில இருக்குற கார்கி குரூப் இப்ப மூழ்குற கப்பல்... அதை மறுபடி கம்பீரமா நிக்க வைக்கணும்னா நான் சொல்லுறத கேக்க தயாராகுங்க... உங்க தம்பியும் அவர் பெத்த இந்த இடியட்டும் தான் முக்கியம்னா கார்கி குரூப்ல எனக்குச் சேர வேண்டியத பிரிச்சுக் குடுத்துடுங்க... அப்பிடி பிரிஞ்சா யாருக்கு நஷ்டம்னு உங்களுக்கே நல்லா தெரியும்... அண்ணனும் தம்பியும் நான் சொல்லுறத கேட்டிங்கனா இருக்கிறதாவது மிஞ்சும்... புரிஞ்சு நடந்துக்கோங்க” என எச்சரித்துவிட்டு இடத்தைக் காலி செய்தான் கேசவ்.

கமலானந்த் சரணை தன்னோடு அழைத்துச் செல்ல பத்மானந்த் செய்வதறியாது திகைத்துப் போனார். 

கேசவ் மேல்தளத்திலிருக்கும் அவனது அறைக்கு வந்தான். இதோடு  அவன் இந்தியாவுக்குத் திரும்பி இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. இந்த இரண்டு நாட்களில் அவனால் என்ன செய்தாலும் பிரக்ருதியின் நினைவுகளை தூசி போல தட்டிவிட்டு செல்ல முடியவில்லை.

வெளியே காட்டிக்கொள்ள அவனது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதனால் அடக்கி வைத்திருக்கும் கோபத்தை எங்கே காட்டுவது என தெரியாமல் தவித்தவனிடம் வசமாக வந்து சிக்கினான் சரண்.

அவனை இப்படி அடிக்கவேண்டுமென்பது கேசவின் நோக்கம் அல்ல. ஆனால் கடந்த காலத்தில் அவன் செய்த காரியங்கள் இன்னும் கேசவின் ஞாபகத்தில் உறைந்திருந்தன. அதை எப்படி அவனால் மறக்க முடியும்?

கார்கி குழுமத்தைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் பத்மானந்திடம் இருப்பதால் தானே கமலானந்தும் சரணும் ஆடுகிறார்கள். அதை முதலில் அவரிடமிருந்து பறிக்கவேண்டுமென அமெரிக்காவிலிருக்கும் போதே தீர்மானித்திருந்தான் கேசவ்.

அதற்கான பிள்ளையார்சுழியாக மறுநாள் நடக்கவிருக்கும் பங்குதாரர்கள் சந்திப்பை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டான்.

அவனது திட்டப்படி அனைத்தும் நடந்தால் அவனது அண்ணனின் கனவு நிறுவனமாக கார்கி டெலிகாம் மீதிருக்கும் களங்கத்தை துடைத்து விடுவான். இப்போதைக்கு அவனது மனதை அந்த இலட்சியத்தின் மீது திருப்பினால் பிரக்ருதியை மறந்துவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையோடு ஷ்ரவனின் எண்ணை மொபைலின் தொடுதிரையில் அழுத்தினான்.

அவன் அழைப்பை ஏற்றதும் வசைமாரி பொழிய ஆரம்பித்தான்.

“சென்னை வந்து டூ டேய்ஸ் ஆகுது.... இன்னும் வீட்டுக்குள்ளவே அடைஞ்சு கிடந்து என்னடா பண்ணுற? இப்பிடி இருந்தேனா நீயும் உருப்பட மாட்ட... உன்னை நம்பி அந்தாள் கிட்ட சவால் விட்ட நானும் உருப்பட மாட்டேன்”

“மூச்சு விட்டுட்டுத் திட்டுடா... செவன் பர்செண்டேஜ் ஷேர்ஸை என் பேருல வாங்குனோம்... அதுக்குனு நம்ம ஒரு கம்பெனி ஆரம்பிச்சோம்... எதாச்சும் ஞாபகம் இருக்குதா? இப்ப அந்த ஷேர்சை உனக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணுறதுக்கு என்னென்ன புரொசிஜர், அதுல எதுவும் லீகல் ப்ராப்ளம் வருமானு நானும் அப்பாவும் டிஸ்கஸ் பண்ணிட்டிருக்குறோம்”



“இங்க எங்கப்பா ஷேர் ட்ரான்ஸ்ஃபர் பத்தி பேசுறதுக்கு கார்டன்ல மீட்டிங் போட்டார்... அபிஷியலா ஹெட் ஆபிஸ்ல மீட்டிங் வச்சுக்கலாம்னு நான் ஸ்ட்ரிக்டா சொல்லி விரட்டி விட்டுட்டேன்... அதுக்கு இடையில அந்த ‘தலைவலி சரண்’ வேற என்னை ரொம்ப இரிட்டேட் பண்ணுனான்... நாலு போடு போட்டு அனுப்பி வச்சேன்”

“நானும் இருந்திருந்தா என் பங்குக்கு அவனுக்கு ரெண்டு அறை போட்டுருப்பேன்”

நண்பர்கள் இருவருக்கும் சரண் மீதிருக்கும் விரோதம் அத்தகையது. 

“இன்னைக்குத் தானே ஜேக்கோட ரெஸ்ட்ராண்ட் ஓப்பனிங் செரிமோனி நடக்குது ஷ்ரவன்?”

“ஆமாடா... நமக்கு நைட் லெவன் இருக்குறப்ப அங்க செரிமோனி நடக்கும்... நம்ம சார்பா பிரகி கிப்ட் குடுத்துடுவா... நான் இங்க வர்றதுக்கு முன்னாடி அவ கிட்ட கிப்ட் பண்ண சொல்லிட்டுத் தான் வந்தேன்... இந்நேரம் அவ கிப்ட் ஷாப்ல தான் இருப்பா... வீடியோல கனெக்ட் பண்ணட்டுமா?”

பிரக்யாவின் பெயரைக் கேட்கும் போது பிரக்ருதியும் நினைவுக்கு வந்தாள். அவளைப் பற்றிய பேச்சை வேண்டுமென்றே தவிர்த்தான் கேசவ். ஆனால் வீடியோவில் இணைக்கும்படி மட்டும் கேட்டுக்கொண்டான்.

ஷ்ரவனும் பிரக்யாவின் எண்ணுக்கு அழைத்த போது அவள் பிரக்ருதியோடு சேர்ந்து ஜேக்கப்பிற்கு பரிசு வாங்குவதில் மும்முரமாகியிருந்தாள்.

ஷ்ரவனிடமிருந்து வீடியோ அழைப்பு வரவும் அழைப்பை ஏற்றாள் அவள்.



“ஹாய் ஷ்ரவன்” என உற்சாகமாக கையசைத்தவள் கேசவும் கான்பரன்சில் இணைந்திருப்பதை பின்னர் தான் கவனித்தாள்.

“ஹலோ கிரிஷ்” என வேண்டாவெறுப்பாக அவனுக்கும் வணக்கம் வைத்தாள்.

நண்பர்கள் இருவரும் ஒரே குரலில் “ஹாய்” என்றனர்.

“கிப்ட் ஷாப்பிங்கா?” – ஷ்ரவன்.

“ஆமா! நாங்க ஈபேல வாங்கலாம்னு தான் நினைச்சோம்... அப்புறமா ப்ரைஸ் கம்பேர் பண்ணிட்டு வாங்கலாம்னு கிப்ட் ஸ்டோருக்கு வந்தோம்”

பிரக்யா பேசிக்கொண்டிருக்கையிலேயே பின்னணியில் பிரக்ருதியின் குரல் கேட்டது.

“வாட்? தேர்ட்டி டாலரா? இந்த மனேகி நேகோ (maneki neko) கேட் பொம்மை விலை ஈபேல ஜஸ்ட் ட்வென்ட்டி டாலர் தான்... பத்து டாலர் லாபம் வைக்கீறிங்களே... இதுல்லாம் டூ மச்”

கடைக்காரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தவளின் குரல் கேட்டதும் நண்பர்கள் இருவருக்கும் ஆச்சரியம். அவளது குரலைக் கேட்ட எவருமே இந்தப்  பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் காதல் முறிவு நடந்தேறியது என சூடம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு உற்சாகமும் துள்ளலும் நிறைந்த குரல். வழக்கமான அவளது வாதம் வேறு!



மனதிற்குள் கேசவ் எரிச்சல்பட்டுக் கொண்டான்.

“எவ்ளோ சீக்கிரம் மூவ் ஆன் ஆக முடியுது இவளால?”

அவள் தன்னை மறந்ததில் வந்த எரிச்சலா அல்லது இவ்வளவு விரைவில் மறந்ததில் வந்த எரிச்சலா என புரியவில்லை கேசவிற்கு. இந்த பட்டிமன்றத்தை மனதிற்குள் நடத்திக்கொண்டு அவளது குரல் தன்னை பாதிக்கவில்லை என்பது போல காட்டிக்கொண்டான்.

ஆனால் ஷ்ரவன் என்ன விசயமென பிரக்யாவிடம் விசாரித்தான்.

“ஜேக்குக்கு கிப்ட் பண்ணணும்னு மானிங்ல இருந்து ஆன்லைன்ல சுத்துனப்ப தான் ஈபேல ‘மனேகி நேகோ’ங்கிற ஜாப்பனிஷ் வாஸ்துல உள்ள வேவிங் கேட் டாலை பாத்தோம்... சைனீஷ் வாஸ்துவான ஃபெங் சுயிலயும் ஜாப்பனீஷ் வாஸ்துலயும் இந்தப் பூனை பொம்மை எங்க வைக்குறோமோ அங்க அதிர்ஷடமும் செல்வமும் பெருகும்ங்கிற நம்பிக்கை இருக்கு... அதனால தான் ரெஸ்ட்ராண்டுக்கு இத கிப்ட் பண்ணலாம்னு நினைச்சோம்... ஈபேல ட்வென்ட்டி டாலர்ஸ் தான்... ஆனா இங்க தேர்ட்டி டாலர்ஸ் சொல்லுறாங்க ஷ்ரவன்”

“அட இதுக்குலாமா பேரம் பேசுவிங்க? சும்மா வாங்கிட்டுப் போங்க”

“என் கிட்ட மொத்தமே தேர்ட்டி டாலர்ஸ் தான் இருக்கு... ஆல்ரெடி செவன் டாலர்சுக்கு க்ரூட் சிங்கோனியம் ப்ளாண்ட் ஒன்னு டேபிள் டெக்கரேசனுக்காக வாங்குனேன்... அதனால தான் கிருதி பூனை பொம்மைக்குப் பேரம் பேசிட்டிருக்குறா”

ஒருவழியாக இருபத்து மூன்று டாலர்களுக்கு மனேகி நேகோ பூனை பொம்மையை வாங்கிவிட்டு கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள் பிரக்ருதி.

“ஓ! அவ வாங்கிட்டா... நான் அப்புறமா கால் பண்ணவா?” என கேசவை பார்த்தபடி கேட்டாள் பிரக்யா.

அவனும் பிரக்ருதியும் பார்த்துக்கொண்டால் அது இருவருக்குமே மனவுளைச்சலைக் கொடுக்குமே என்ற கவலையில் அவ்வாறு கூறினாள் அவள்.

ஷ்ரவனும் அவளது எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டு அழைப்பைத் துண்டித்தான்.

பிரக்ருதி கிப்ட் ராப் செய்யப்பட்ட பூனை பொம்மையோடு வந்தவள் “ஏன் காலை கட் பண்ணுன? ஷ்ரவன் கிட்ட இந்தப் பொம்மைய காட்டிருக்கலாம் தானே?” என்க

“கான்பரன்ஸ்ல கிரிஷும் இருந்தான்” என்றாள் அவள்.

“ஓ!”

அவ்வளவு தான் பிரக்ருதியின் எதிர்வினை. பின்னர் வேறேதும் பேசாதவளை டார்கெட் ஸ்டோரிலிருக்கும் ஸ்டார்பக்சுக்குச் செல்லலாமா என அழைத்தாள் பிரக்யா.

“இப்பவே மணி பத்து ஆகுது... என்ன தான் உங்கம்மா நம்ம கிட்ட பேசலனாலும் இதுக்கு மேல லேட்டா போனா கண்டிப்பா நமக்கு திட்டு விழும் பிரகி”

“அதுவும் சரி தான்... அப்ப வீட்டுக்குப் போய் ஆன்லைன்ல ஃப்ராப்புசீனோ ஆர்டர் பண்ணலாமா?”

“வேண்டாம்”

ஒற்றை வார்த்தையாய் வந்த ‘வேண்டாம்’ அத்துணை அழுத்தமாக இருக்க ஏன் என்பது போல அவளைப்  பார்த்தாள் பிரக்யா.

“இனிமே எனக்கு ஃப்ராப்புசீனோ பிடிக்காது... எதெல்லாம் அவனை ஞாபகப்படுத்துதோ அதெல்லாம் என்னை விட்டு தூரமா இருக்கட்டும்னு நினைக்குறேன் பிரகி” என்றாள் பிரக்ருதி.

“அவனுக்கும் ஃப்ராப்புசீனோக்கும் என்னடி கனெக்சன்?”



“ப்ச்! நான் என்னமோ லவ் ப்ரெக் ஆன வருத்தத்துல பேசுறேன்னு நினைக்கிறல்ல... ரெண்டு நாளா நான் யோசிச்சுப் பாத்ததுல எனக்குப் புரிஞ்சதென்னவோ ஒன்னே ஒன்னு தான்... நான் பொய் சொன்னேன்னு நினைச்சு என் லவ்வை ரிஜக்ட் பண்ணுன வரைக்கும் கிரிஷ் செஞ்ச எல்லாம் சரி தான்... ஆனா நிஷாந்தை பாயிண்ட் அவுட் பண்ணி என்னோட கேரக்டரை அசாசினேட் பண்ண அவனுக்கு என்ன உரிமை இருக்கு? யார் ஒருத்தருக்கு நம்ம மேல அன்பு காட்டுறதுக்கு நம்ம உரிமை குடுக்குறோமோ அவங்க அன்பை மட்டும் காட்டுறதுக்காக அந்த உரிமைய பயன்படுத்துறது இல்ல... சில நேரங்கள்ல அவமானப்படுத்துறதுக்கும் அந்த உரிமைய யூஸ் பண்ணிக்கிறாங்க... என்னை அவமானப்படுத்துறதுக்கான உரிமைய நான் கிரிஷுக்குக் குடுத்திருக்க கூடாதுனு இப்ப என் மண்டையில உறைக்குது... காதல் உடைஞ்ச வலிய நான் எப்பவோ மறந்துட்டேன்... ஆனா அந்த அவமானம் குடுத்த வலி இன்னும் எனக்குள்ள இருக்கு... அது எப்பவும் மறையாது பிரகி... சப்போஸ் அவனையோ அவன் சம்பந்தப்பட்ட பொருளையோ பாத்தா அந்த அவமானம் மறுபடி மறுபடி உண்டாகுற ஃபீல் வருது” 

கோபம் துளிர்த்திருந்தது அவளது குரலில். பிரக்யா அவளை இயலாமையுடன் பார்க்க பிரக்ருதியோ எதுவும் நடக்காதவளைப் போல பரிசுகளை எடுத்துக்கொண்டு “போலாமா?” என்று கேட்டாள்.

அதே நேரம் கேசவோ எப்படி பிரக்ருதியால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது என்ற ஆராய்ச்சியில் ஆழ்ந்தான். 

ஆண்களைப் போல பெண்கள் காதல் தோல்வியை அணுகுவதில்லை.

ஆண்கள் தங்களது உடமையாக இத்தனை நாட்கள் இருந்த காதலி எப்படி தன்னை பிரியலாம்,  மறக்கலாம் என்ற ஈகோவில் ஆழ்ந்திருப்பர். இதை ‘possessive ego’ என்பார்கள்.

ஆனால் பெண்களோ ‘என்னை இவன் எப்படி இவ்வாறு நடத்தலாம்’ என காதல் தோல்வியை தங்களைப் பற்றி இத்தனை நாட்கள் இந்த சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்திற்கு நேர்ந்த அவமானமாகவே கருதுவர்.

இதை ‘Ego of proudness’ என்பார்கள். இத்தகைய ஈகோவானது தன்னை அவமதித்த முன்னாள் காதலனை அவர்களை விட்டு விலக்கிவைக்கும். இதுவும் பெண்கள் காதல் தோல்வியை எளிதில் கடப்பதற்கான உளவியல் காரணி ஆகும்.

ஆனால் பெரும்பான்மை ஆண்கள் இதை அவ்வாறு கருதுவதில்லை. பெண்கள் ஒரு ஆணின் காதலை எளிதில் மறந்துவிடுவார்கள் என்று வாதிட்டு பொதுவெளியில் பெண்கள் என்றாலே காதலித்து மறப்பவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கிவிடுவார்கள். அதற்கு கேசவ் ஒன்றும் விதிவிலக்கல்லவே!

Comments

Post a Comment