அலைவரிசை 40

Image
  “சின்ன வயசுல சின்ட்ரெல்லா கதை படிச்சவங்க நிறைய பேர் இருப்பிங்க... நம்ம எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் ட்ரீம் பாய் அந்தக் கதையில வர்ற ப்ரின்ஸ் போல தான் இருப்பான்... சோ அவனை மாதிரி ஒருத்தனோட நம்ம லைஃப் மிங்கில் ஆச்சுனா பெரிய பேலஸ்ல காஸ்ட்லியான ட்ரஸ், அழகான ஜுவெல்ஸ், விதவிதமான சாப்பாடுனு வாழ்க்கையே சொர்க்கம் போல இருக்கும்னு குழந்தைத்தனமான கற்பனை நமக்குள்ள இருக்கும்... வளர வளர இந்த மாதிரி இன்சிடெண்ட்ஸ் எல்லாமே கதைகள்ல மட்டும் தான் வரும்னு நினைச்சு ரியாலிட்டியில நமக்கான ஹீரோவ தேட ஆரம்பிச்சிடுவோம்... அப்பிடி தேட ஆரம்பிக்கிறது தான் நல்லதும் கூட... அதை விட்டுட்டு இன்னும் சினிமா, சீரியல், கதைகள்ல வர்ற மாதிரி பணக்கார ஹஸ்பெண்டுக்காக கனவு காணுறவங்க, ரியாலிட்டிய மறக்கணும்னு வீண் கற்பனையில காலம் கழிக்கிறவங்களுக்கு வாழ்க்கை கசப்பான எதார்த்தத்தை கன்னத்துல அறையுற மாதிரி காட்டுறப்ப அதை ஏத்துக்கவும் முடியாம கற்பனையில வாழவும் முடியாம ரொம்ப கஷ்டப்படுவாங்க... சோ சொர்க்கம் மாதிரியான லைஃப் வேணும்னா அதுக்காக நம்ம நல்லா படிக்கணும், ஹார்ட் ஒர்க் பண்ணணும், வீண் செலவு பண்ணாம பணத்த சேவ் பண்ணணும்னு சின்ன வயசுல இருந்தே க

அலைவரிசை 34

 


“லீடர்ஷிப் குவாலிட்டி, ஹெல்பிங் டெண்டன்சி இந்த ரெண்டு குணத்துக்கும் ஒரு சிமிலாரிட்டி உண்டு... இது ரெண்டுமே ஒருத்தருக்குப் பிறவியிலயே வரணும்... இடையில நம்மளால வலுக்கட்டாயமா இந்தக் குணங்களை ஒருத்தருக்குள்ள திணிக்க முடியாது... இன்னொரு ஒற்றுமை என்ன தெரியுமா? தலைமைப்பண்பு நிறைஞ்சவங்களும் சரி, உதவுற மனப்பான்மை உள்ளவங்களும் சரி, நான் அப்பிடியாக்கும் இப்பிடியாக்கும்னு பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணமாட்டாங்க... அவங்க செய்ய வேண்டியத அழகா ப்ளான் பண்ணி சைலண்டா பெர்ஃபெக்டா செஞ்சு முடிச்சிடுவாங்க... உண்மையான தலைவன் பேசி சீன் போட்டுட்டுருக்க மாட்டான்... அதே போல உதவும் மனப்பான்மை உள்ளவங்க வலது கை செய்யுறத இடது கைக்குத் தெரியாத மாதிரி பாத்துப்பாங்க”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

தனது புதிய ரெஸ்ட்ராண்டுக்கு செண்டிமெண்ட் காரணமாக ‘பம்பிள் பி’ என்ற பெயரையே சூட்டியிருந்தான் ஜேக்கப். அதன் திறப்புவிழாவுக்குப் பிரக்ருதியும் பிரக்யாவும் மட்டும் வந்திருந்தனர்.

பிரணவி கால் வீக்கத்தால் அன்று வீட்டிலேயே இருந்து கொண்டாள். லியானாவின் தொழில்முறை நண்பர்களும் இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் வருகை தந்திருந்தனர்.

தோழிகள் வாங்கி வந்த பரிசு ஜேக்கப் லியானா தம்பதியினருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. 

“இந்த க்ரூட் ப்ளாண்டை உன் ஆபிஸ் ரூம் டேபிள்ல வச்சுக்கலாம் ஜேக்... இந்த கேட் டாலை அந்த கார்னர்ல வைப்போம்”

தம்பதியினர் பரிசுகளை எங்கே வைக்கலாமென ஆர்வமாகப் பேசிக்கொண்டனர். வந்தவர்களுக்கு பரிசாக கிப்ட் ராப் செய்யப்பட்ட குக்கிகள் அடங்கிய பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ரெஸ்ட்ராண்டின் ஆம்பியன்சையும் இண்டீரியரையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும். அப்போது ஜேக்கப் யாரிடமோ வீடியோ காலில் பேசுவது கேட்டது.

அவன் உச்சரித்த ‘கேசவ்’ என்ற பெயரில், அழைத்தவன் யாரென தெரிந்துவிட்டதால் பிரக்ருதி இடத்தைக் காலி செய்தாள். ஷ்ரவன் அழைத்தானென பிரக்யா மட்டும் போய் பேசிவிட்டு வந்தாள்.

பிரக்ருதியின் கண்கள் அங்கிருந்து சற்று தொலைவில் தெரிந்த தேவாலயத்தை நோக்கியது. அங்கே தான் ஜேக்கப் லியானாவின் திருமணம் நடைபெற்றது. அங்கே தான் கேசவ் அவளிடம் காதலைக் கூறினான்.





எண்ணற்ற நினைவுகளை உள்ளடக்கிய டல்லாஸை விட்டு எப்போது கிளம்புவோம் என்ற சிந்தனையே பிரக்ருதியை ஆக்கிரமித்திருந்தது.

வீடியோ அழைப்பை பேசி முடித்ததும் பிரக்யா அவளை அழைக்க இருவரும் ஜேக்கப் லியானாவிடம் விடைபெற்றனர்.

“நாங்க இந்தியா கிளம்புறோம்... பேபி பிறந்து கொஞ்சம் மாசம் கழிச்சு நவி மட்டும் வருவா... அதுக்கு அப்புறம் ஃப்ரீயா இருந்திங்கனா வெகெஷனுக்கு இந்தியாவுக்கு வரணும்” என அவர்களை கேட்டுக்கொண்டு இருவரும் சாக்சனி அப்பார்ட்மெண்ட்சுக்குக் கிளம்பினர்.

அவர்கள் E13 ஃப்ளாட்டை அடைந்த போது அங்கே பிரணவியிடம் பிருத்வி கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“நான் செஞ்சது தப்பு தான் நவி... ஆனா அதுக்கு நீ குடுக்குற தண்டனை ரொம்ப பெருசு... கொஞ்சம் யோசிச்சுப் பாரு ப்ளீஸ்”

“இனிமே யோசிக்கிறதுக்கு எதுவுமில்ல பிருத்வி... வழிய விடுங்க, நான் சர்டிஃபிகேட்ஸை பேக்ல வைக்கணும்”

“நான் கல்லு மாதிரி இருக்கிறப்ப நீ ஏன் இந்தியால வேலைக்குப் போய் கஷ்டப்படுவேன்னு அடம்பிடிக்கிற?”

“எனக்கு உங்க சம்பாத்தியதுல வாழ பிடிக்கல... நான் ஒன்னும் சம்பாதிக்க வக்கில்லாதவ இல்ல... எனக்கும் என் பிள்ளைக்கும் இனிமே நான் தான எல்லா நல்லது கெட்டதையும் பாத்துக்கணும்”

அவர்களின் உரையாடல் போன திக்கை கண்டு இரு தோழியரும் அதிர்ந்து போயினர்.

பிரணவிக்கு இருக்கும் வருத்தம் பிள்ளை பிறந்ததும் சரியாகிவிடும். பெரியவர்கள் அறிவுரை கூறி பிருத்வியின் மனதை மாற்றிவிடுவார்கள் என்று தான் இத்தனை நாட்கள் அவர்கள் எண்ணியிருந்தனர்.

ஆனால் பிரணவி வேறு ஏதோ திட்டத்துடன் இருக்கிறாள் போல! அவளின் இந்த முடிவு தம்பதிகளுக்குள் இடைவெளியை அல்லவா ஏற்படுத்திவிடும்!

வேகமாக உள்ளே வந்த பிரக்ருதி பிரணவியிடம் சென்றாள்.

“என்ன பண்ணுற நவி? மாமா இப்பிடி நடந்துக்குறது என்ன புதுசா? இந்த தடவை உன் கோவம் நியாயமானது... பட் அதுக்குனு ஏன் சர்டிஃபிகேட்ஸ் எல்லாத்தையும் இந்தியாக்கு எடுத்துட்டு வர்ற?”

“இங்க திரும்பி வர்ற ஐடியா எனக்கு இல்ல”

“ஏய்”

பிரணவி அவளை தள்ளி நிறுத்திவிட்டு சான்றிதழ்களை தனது பெட்டிக்குள் வைத்தாள்.

“நவி யூ ஆர் ஓவர்-ரியாக்டிங்”

டக்கென்று பெட்டியை மூடியவளின் முகத்தில் கோபச்சிவப்பு.

“நான் ஓவர்-ரியாக்ட் பண்ணுறேனாடி? அப்பிடியே வச்சுக்க... உங்க யாரோட ஒபீனியனை பத்தியும் எனக்குக் கவலை இல்ல... நானும் என் பிள்ளையும் இனிமே இங்க வரமாட்டோம்”



பிடிவாதமாக உரைத்தவளை கவலையோடு பார்த்தாள் பிரக்யா.

“சோட்டிய பத்தி யோசிச்சிங்களா அண்ணி? அவளுக்கு அப்பாவும் வேணும்ல?”

“நான் வேண்டாம்னு சொன்னது என் புருசனை தான்... என் பொண்ணுக்கு அப்பாவா பிருத்வி எப்ப வேணும்னாலும் இந்தியாக்கு வந்து பாத்துட்டுப் போகலாம்”

தனது முடிவில் உறுதியாக இருந்தவள் பிருத்வியை கவலைக்குள்ளாக்கினாள் என்றால் மகிழினியைக் கோபத்திற்குள்ளாக்கினாள்.

இத்தனை நாட்கள் அமைதி காத்தவர் மகனின் சோகத்தைத் தாங்க இயலாதவராக கொதித்துப் போனார்.

“உன் இஷ்டத்துக்கு முடிவெடுப்ப... அதை நாங்க கேக்கணுமா? உன்னை சொல்லி குத்தமில்லடி... ஊருல இல்லாத அழகினு உன்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டானே என் பிள்ளை, அவனைச் சொல்லணும்... டேய் பிருத்வி! இவ கிட்ட என்னடா பேச்சு... உடனே இவளைப் பெத்த மகராசனுக்குக் கால் பண்ணு... என் மகன் வாழ்க்கைய சீரழிக்க தான் இந்த மகாராணிய கட்டி வச்சியா பெரியமனுசானு நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேக்கேன்... அவர் அதட்டுனா இவ தானா வழிக்கு வருவா” என்றார் அவர்.



பொறுமைசாலிகளின் அமைதி எவ்வளவு அழகானதோ அதை விட பன்மடங்கு கொடுமையானது அவர்களின் கோபம். அவர்கள் கோபத்தில் இருக்கும் போது அதை இன்னும் அதிகப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. ஆனால் மகிழினிக்கு அது புரியாமல் போக, அவர் விட்ட வார்த்தைகள் இன்னும் பிரணவியின் கோபத்தை வீரியமாக்கிவிட்டது.

மகிழினியின் எதிரே வந்தவள் “இன்னொரு தடவை எங்கப்பாவ மரியாதை குறைவா பேசுனிங்கனா வயசுல பெரியவங்கனு பாக்க மாட்டேன்... நீங்க தைரியமான ஆளா இருந்தா எங்கப்பாக்குக் கால் பண்ணுங்க பாப்போம்... அப்பிடி ஒரு இன்சிடெண்ட் நடந்துச்சுனா இந்த ஜென்மத்துக்கும் என் பிள்ளையும் நானும் உங்க பார்வையில படாம எங்கயாச்சும் போயிடுவோம்... உங்களுக்கு அது தான் வேணும்னா தாராளமா கால் பண்ணுங்க” என்றாள் மூர்க்கமாக.

“நவி டென்சனாகாத... உனக்கு பிரஷர் ஜாஸ்தியா ஆகிடும்”

“அப்பிடி ஆகி நான் செத்தா கூட நிம்மதியா இருக்கும் கிருதி... என்னைய நிம்மதியா இருக்கவிடமாட்றாங்க பாரு”

ஏன் இவ்வாறு கத்துகிறாள் என்பது புரியாமல் அனைவரும் விழிக்க பிரணவி அழுது கொண்டே அவளது அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

என்ன செய்வதென புரியாமல் அனைவரும் விழிக்க பிரக்ருதியோ அவள் மாதாந்திர சிகிச்சைக்குச் செல்லும் மகப்பேறு மருத்துவரைத் தொடர்பு கொண்டு அவளின் நிலையைக் கூறி மருத்துவரீதியான விளக்கம் கேட்டாள்.

“இதை ப்ரீ-நேட்டல் டிப்சரன்னு சொல்லுவோம்... இதுல்லாம் ப்ரெக்னென்சில சாதாரணமானது தான்... இது மேட்டர்னல் மூட் டிஸ்ஸார்டர் மாதிரி... அவங்களோட கோவம், ஆன்சைட்டி தான் இப்பிடி நடந்துக்குறதுக்குக் காரணம்... எப்பிடி போஸ்ட் பார்ட்டம் டிப்ரசனை கவனிக்கணுமோ அதே மாதிரி இதையும் கவனிக்கணும்... ஃபேமிலி மெம்பர்ஸ் இதை புரிஞ்சுக்கிட்டு அவங்களை கவனமா பாத்துக்கணும்... ஏழுல ஒரு பொண்ணுக்கு இந்த ப்ரீ-நேட்டல் டிப்ரசன் வரும்... இதுக்கான காரணம் என்னனு இது வரை மெடிக்கல் ஃபீல்ட்லயே யாராலயும் தெளிவா சொல்ல முடியல... அவங்களை அனுசரணையா பாத்துக்கோங்க”

மருத்துவரின் அறிவுரையை அவர்கள் அனைவரிடமும் விளக்கினாள் பிரக்ருதி.

“என்னமோ போ... நானும் தான் ரெண்டு பிள்ளைங்களை பெத்துருக்கேன்... எனக்குலாம் இப்பிடி ஆனது இல்லம்மா... உன் அக்காவுக்குத் தான் எல்லாம் வித்தியாசமா நடக்குது” என மகிழினி நொடித்துக் கொண்டார்.

“எவ்ரி ப்ரெக்னென்சி இஸ் நாட் தி சேம் ஆன்ட்டி... உங்களை மாதிரி அனுபவப்பட்ட லேடீஸ் செய்யுற தப்பே உங்க கூட உங்க மருமகளை கம்பேர் பண்ணி மட்டம் தட்டுறது தான்... டாக்டர் சொல்லுறத வச்சு பாத்தா நவி சென்னையில இருக்குறது தான் பெஸ்ட்னு தோணுது... எனக்கு எங்க அக்காவோட மனநிம்மதி முக்கியம்... உங்களை மாதிரி வீட்டு வாரிசு தான் முக்கியம், மருமகள் எக்கேடு கெட்டா எனக்கென்னனு இருக்க முடியாதுல்ல”

அதற்கு மேல் மகிழினியோ பிருத்வியோ வாதிடவில்லை. பிரக்ருதியும் பிரக்யாவும் மட்டும் யோசனையில் ஆழ்ந்துவிட்டானர்.

இப்படியே போனால் பிரணவிக்கும் பிருத்விக்கும் இடையே விரிச்சல் விழுந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் வியாபித்ததை வெளிக்காட்டிக் கொள்ளவும் முடியவில்லை.

பிரணவியின் எண்ணவோட்டம் என்னவென்பது புரியாமல் போக இந்தியாவுக்குச் செல்லும் வரை அமைதி காக்க முடிவெடுத்தனர் இருவரும்.

இருவரது சிந்தனையையும் கலைப்பது போல பிரக்ருதியின் மொபைல் இசைத்தது.

தொடுதிரையில் ‘கவின்’ என்ற பெயர் வரவும் பிரக்ருதியின் முகத்தில் பளிச்சென்ற வெளிச்சம். அவன் அவளுடன் விஸ்காம் படித்தவன். இருவருமாகச் சேர்ந்து தான் வானொலி தொகுப்பாளருக்கான டிப்ளமோவும் படித்தனர்.

அவனது அதிர்ஷ்டம் பிரபலமான வானொலியில் அவன் ஆர்.ஜே ஆகிவிட்டான். அங்கே தான் பிரக்ருதியும் நேர்க்காணலுக்குச் செல்லவிருந்தாள். அதற்குள் வாசன் அவளை பிரணவிக்குத் துணையாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டார். மீண்டுமொரு முறை நேர்க்காணல் வாய்ப்பு வந்தால் தகவல் கூறுவதாக கவின் கூறியிருந்தான்.

அதற்கு தான் அழைக்கிறானோ என்ற எதிர்பார்ப்புடன் அழைப்பை ஏற்றாள் பிரக்ருதி.

“ஹாய் கிருதி! இங்க லேட்நைட்... இப்ப அங்க நூன் தானே?”



“ஆமாடா... என்ன திடீர்னு கால் பண்ணிருக்க? எதுவும் இண்டர்வியூ?”

“யெஸ்... கமிங் ட்வென்டி ஃபர்ஸ்ட் இண்டர்வியூ... நீ எய்ட்டீன்த்ல சென்னைக்கு ரிட்டன் வந்துடுவல்ல?”

“வந்துடுவேன் கவின்... இன்ஃபார்ம் பண்ணுனதுக்கு தேங்க்ஸ்டா... எப்பிடி இருக்குற நீ?”

“நீ விட்டுட்டுப் போனப்ப எப்பிடி இருந்தேனோ அப்பிடியே தான் இன்னும் சிங்கிளா இருக்கேன்டி”

சோகமாக கூறினான் அவன். பிரக்ருதி சத்தமாக நகைக்க “சிரிக்காத... உன் அக்காவோட நாத்தனார், கண்ணாடி போட்ட பொண்ணு ஒன்னு உண்டே, அது சிங்கிள் தானே?” என்று காரியத்தில் கண்ணாக கேட்டான்.

“அவ கமிட் ஆகி ரொம்ப நாளாச்சு தம்பி... டோண்ட் வொரி... உனக்கு வேற எதாச்சும் பொண்ணு சிக்கும்”

“சிக்கிட்டாலும்... கூடவே இருந்த உனக்கே என்னை பிடிக்கல... இதுல எங்க இருந்து எவளோ ஒருத்திக்கு என்னை பிடிக்க போகுது?”

மீண்டும் சோகரசம் வழிந்தது அவனது குரலில்.

“டேய் டேய் டேய்! போதும்டா... உன்னை ஃப்ரெண்டா வச்சுக்கிட்டதுக்கே பிள்ளைப்பூச்சி மாதிரி தொல்லை பண்ணுற... லவ் பண்ணுனா மூட்டைப்பூச்சி மாதிரி கூடவே இருந்து கடிப்ப... வேண்டாம் சாமி” என பிரக்ருதி கூற இவ்வாறாக அவர்களின் நீண்டு ஒருவழியாக முடிந்தது.

உரையாடலின் முடிவில் நேர்க்காணலில் கலந்துகொள்ள வரும் போது எவ்வாறு தயாராக வேண்டுமென்ற டிப்ஸ்களை கொடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான் கவின்.

“யாருடி அது?” என பிரக்யா கேட்க

“கவின்” என்றாள் பிரக்ருதி.

“அவனுக்கு உன் மேல க்ரஷ்ல”

“ப்ச்! அப்பிடிலாம் இல்ல... உன்னை கரெக்ட் பண்ணுறதுக்காக பக்கி என் பின்னாடி சுத்துச்சு... நீ இப்ப கமிட் ஆகிட்டனு தெரிஞ்சதும் தேவதாஸ் மாதிரி புலம்பறான்... ஆனா ஒன்னு, அவன் மத்த பசங்க மாதிரி ஏதோ ஒரு நோக்கத்துக்காக பொண்ணுங்களோட பழகுறவன் இல்ல... நல்ல ஃப்ரெண்ட்ங்கிற உறவுக்கான மரியாதைய குடுப்பான்... வாய் தான் கொஞ்சம் நீளம்”

“அஹான்! நான் ஒன்னு சொல்லவா?” என பிரக்யா ஆரம்பிக்க

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்... வயிறு கபகபங்குது... எதாச்சும் செஞ்சு சாப்பிடுவோம் வா” என அவளைத் தள்ளிக்கொண்டு போனாள் பிரக்ருதி.

****** 

கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகம், கார்கி டவர்ஸ், சாந்தோம்...

பங்குமாற்றம் பற்றிய கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பத்மானந்த் தலைமை வகித்தார் என்பது பெயரளவுக்குத் தான். மெய்யாக கூட்டத்தின் தலைமையாக இருந்தவன் கேசவ்.

தற்போது அவர்களின் குழுமத்தின் பங்குகளின் விலை பங்குசந்தையில் இறங்குமுகமாக இருப்பதையும், அரபு நாடுகளில் ஆரம்பித்த ரீடெய்ல் செயின் ஸ்டோர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கவிருப்பதையும் புள்ளிவிவரங்களுடன் விளக்கிக் கொண்டிருந்தான் ஷ்ரவன்.

அவனது விளக்கத்திற்கு பிறகு கார்கி குழுமத்தின் சிக்கல் நிறைந்த தொழிலான டெலிகாம் நிறுவனத்தின் மேலாண்மை மாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கை இயக்குனர்களால் பரவலாக முன்மொழியப்பட்டது. பின்னர் அக்குழுமத்தில் பெரியளவில் பங்குகளை வைத்திருக்கும் பத்மானந்த் தனது பங்குகளில் மூன்று சதவிகிதமும், கார்கியின் பங்குகளை வாங்கியிருந்த சுசித்ரா ஐந்து சதவிகிதமும், நீரவின் இறப்பிற்கு பிறகு யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்த பங்குகள் ஐந்து சதவிகிதமும் பங்குமாற்றத்திற்கான பங்குகளாக அறிவிக்கப்பட்டன.

அவற்றை கேசவிற்கு ஒதுக்குவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தின் நடுவே பேச எழுந்த கேசவ் “லிபர்ட்டி ரீடெய்ல் லிமிட்டட் நம்ம கம்பெனியோட செவன் பர்சென்டேஜ் ஷேரை வச்சிருக்காங்க... அந்தக் கம்பெனியோட டோட்டல் ஷேர்ஷையும் வாங்கி அதை கார்கி குரூப்போட சப்-ஆர்டினேட்டா மாத்தலாம்ங்கிற ஐடியா இருக்கு... 

அதோட பாஸ்ட் டூ இயர்ஸ்ல பேண்டமிக் சிச்சுவேசன் காரணமா ஏகப்பட்ட எம்ப்ளாயிஸை ஹயர் பண்ணிருக்கோம்... அதனால நமக்கு வீண்செலவு ஏற்படுறதா நம்ம ஃபினான்ஷியல் அபிஷியல்ஸோட ரிப்போர்ட்ஸ் சொல்லுது... சோ இங்க காஸ்ட்-கட்டிங்குக்காக லே-ஆஃப் அனவுன்ஸ் பண்ண வேண்டிய கட்டாயத்துல நாம இருக்குறோம்...

இன்னொரு பக்கம் பெட்ரோ கெமிக்கல் பிசினஸ்ல ரெவன்யூ கம்மியாகிட்டே வருது... இதனால நம்ம கடனோட அளவும் அதிகமாகுது... இதை கண்ட்ரோல்ல கொண்டு வர்றதுக்கு கார்கி குரூப்ஸோட ஃபினான்ஷியல் எக்ஸ்பர்ட்ஸ் தீவிரமா முயற்சி பண்ணிட்டிருக்குறாங்க... ப்ளீஸ் கிவ் மீ எய்ட்டீன் மன்த்ஸ், ஐ வில் ப்ரூவ் மைசெல்ஃப்” என்று தனது உரையை முடித்துக்கொண்டான்.



அவன் அமர்ந்ததை கண்டு பொறாமையில் வெந்து கொண்டிருந்தனர் கமலானந்தும் சரணும்.

தமையன் மாறியதில் கூட கமலானந்த் அதிரவில்லை. சுசித்ரா தனது பங்குகளை கேசவிற்கு மாற்றிவிட்டு வெறும் இயக்குனராக மட்டும் இருப்பதாக கூறியது தான் உச்சபட்ச அதிர்ச்சி அவருக்கு.

சரணை ஏற்றி வைக்க நினைத்த சிம்மாசனத்தில் கேசவை ஏற்றி வைத்ததில் தனது மனைவியும் ஒருவர் என்பதை அவரால் சீரணிக்கவே முடியவில்லை.

எது எப்படியோ சரண் மற்றும் கமலானந்த் என்ற குரங்குகளிடம் கார்கி குழுமம் சிக்கி சின்னாபின்னமாகாமல் தற்காலிகமாக காப்பாற்றிய நிம்மதியில் ஷ்ரவனும் கேசவும் அடுத்தக்கட்ட வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர். அவர்களின் கையில் இன்னும் பதினெட்டு மாதங்கள் தானே உள்ளது!

Comments

  1. Sorry pa ethula Vara dialogue appavuku phone pana eagavathu poven.bp increase ayie sethuduren Dr sollurathu munadiya episode la vanthu erukura mathri erukupa.illa athu munadi potta demo va pa.
    Please kutham solla illa eathu padicha mathri erukurathala sonenpa

    ReplyDelete
    Replies
    1. Athu fb la teaser share panunapo padichirupinga.. ipo thaan epi la varuthu.. neenga correcta kandupidichurukinga

      Delete

Post a Comment