Posts

Showing posts from February, 2024

அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 9

Image
  “மனுசங்க எப்பவும் அடுத்தவங்களோட கம்பேர் பண்ணி பாத்து தங்கள பத்தி டவுனா ஃபீல் பண்ணுவாங்க... ஆனா சிக்மண்ட் ஃப்ராய்ட் என்ன சொல்லுறார் தெரியுமா? ‘உங்களோட நீங்க கம்பேர் பண்ணிக்க வேண்டிய ஒரே ஆள் கடந்த காலத்துல இருந்த நீங்க மட்டும் தான்’... அதாவது ப்ரசண்ட் லைப்ல இருக்குற நான் என்னோட பாஸ்ட் லைஃப் கூட தான் என்னை கம்பேர் பண்ணி பாக்கணும்... என் கடந்த காலத்தோட நிகழ்காலத்தை கம்பேர் பண்ணுனா ஒன்-எய்டி டிகிரி சேஞ்ச் ஓவர் எனக்குள்ள நடந்துருக்குனு புரியுது... பிகாஸ் கேசவ் கிரிஷ்ங்கிற ஜோவியல் ஃபெல்லோ கே.கேங்கிற இன்ட்வோவெர்ட் பெர்சனா மாறிருக்கான்... இந்த சேஞ்ச் ஓவரால எனக்கு கிடைச்ச பெரிய நன்மை என்ன தெரியுமா? ஜோவியல் பெர்சனா இருந்தப்ப என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டவங்க இப்ப என் கூட பேசவே கொஞ்சம் பயப்படுறாங்க... அந்த பயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”                                               -கே.கேவின் மனதின் குரல் தி சாக்சனி அப்பார்ட்மெண்ட், மோண்ட்ஃபோர்ட் ட்ரைவ்... ஜெண்டர் ரிவீலிங் பார்ட்டிக்காக அலங்கரிக்கப்பட்ட அப்பார்ட்மெண்டின் லானில் எங்கு நோக்கினும் மிண்ட் வண்ணமும் மிஸ்டி ரோஸ் வண்ணம

அலைவரிசை 8

Image
  “உங்களுக்கு ஒரு விசயம் பிடிச்சிருக்குனா மத்தவங்க என்ன நினைப்பாங்க, உலகம் என்ன நினைக்கும்னு கவலைப்படாம அதை செஞ்சிடுங்க... இந்த உலகம் சந்தோசமா வாழ்ந்தாலும் பேசும், சங்கடப்பட்டு வீழ்ந்தாலும் பேசும்... இன்னொரு தடவை மனுசப்பிறவி கிடைக்குமோ இல்லையோ! கிடைச்ச ஒரு பிறவியில மனசு என்னென்ன செய்யணும்னு ஆசைப்படுதோ அது எல்லாத்தையும் நியாயம் தர்மத்துக்கு உட்பட்டு செஞ்சு தீர்த்துடணும்... இந்த ஆட்டிட்டியூட் சில நேரங்கள்ல உங்களை மத்தவங்க கண்ணுக்குச் சுயநலவாதியா கூட காட்டலாம்... என்னங்க பண்ணுறது, அடக்குமுறையில வாழுறவங்களுக்கு நம்மளோட நியாயமான சின்ன சின்ன ஆசைகள் கூட சுயநலமா தான் தெரியும்”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் ஜெண்டர் ரிவீலிங்க் பார்ட்டி என்ற பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் பார்ட்டி மேலைநாடுகளில் பிரபலம். பெண் குழந்தை என்றால் கருவிலேயே அழிக்கும் முட்டாள்தனமும், பெண் குழந்தை பிறந்தால் செலவு என முகம் சுளிக்கும் பழக்கமும் மேலைநாட்டினருக்குக் கிடையாது என்பதால் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை இருபதாவது வார ஸ்கேனிலேயே மருத்துவர் சம

அலைவரிசை 7

Image
  “உங்களுக்கு அற்புதமான மனுசங்க கிடைச்சாங்கனா அவங்களை தக்க வச்சுக்க நீங்க போராடணும்... ஏன்னா இந்த உலகத்துல அற்புதமான விசயங்களை சொந்தமாக்கிக்கிறதுக்கு காம்படிசன் அதிகம்... சோ யாருக்காகவும் எதுக்காகவும் அவங்களை விட்டுக்குடுத்துடக்கூடாது... சில நேரம் நம்ம அவங்க மேல கோவப்படலாம், சண்டை போடலாம்... ஆனா வேண்டாம்னு தூக்கிப்போடக்கூடாது... நம்ம கூழாங்கல்னு நினைச்சு தூக்கிப் போட்டவங்க உண்மையிலயே வைரம்னு தெரிய வர்றப்ப அந்த வைரம் வேற யாருக்கோ சொந்தமாகிருக்கும்”                                          -கே.கேவின் மனதின் குரல் மெடிக்கல் சிட்டி டல்லாஸ் மருத்துவமனை... மகப்பேறு மருத்துவரிடம் மாதாந்திர பரிசோதனைக்காக பிரணவியை அழைத்து வந்திருந்தான் பிருத்வி. அவர்களோடு பிரக்யாவும் பிரக்ருதியும் வந்திருந்தனர். பரிசோதனை முடிந்ததும் பிருத்வி அலுவலகம் சென்று விடுவான் என்பதால் அவர்கள் பிரணவிக்குத் துணயாக வந்திருந்தனர். கணவனும் மனைவியும் ஐந்தாவது மாதத்துக்கான அனாமலி ஸ்கேனை எடுப்பதற்காக மருத்துவருடன் சென்றிருக்க பிரக்யாவும் பிரக்ருதியும் அவர்களுக்காக மருத்துவமனையின் வரவேற்பரையில் காத்திருந்தனர். பிரக்ருதி தனது நகப்