அலைவரிசை 36

Image
  அலைவரிசை 36 “இனிப்பான பொய்ய விட கசப்பான உண்மை பெஸ்ட்னு சொல்லுவாங்க... உண்மைய சொல்லுறதால உங்களுக்கு உண்டாகுற பாதிப்பு ரொம்ப சின்னது தான்... ஆனா அந்த சின்ன பாதிப்பை ஃபேஸ் பண்ண பயந்துட்டு பொய் சொல்லி தப்பிச்சோம்னு வைங்க, ஃபியூச்சர்ல ரொம்ப அவமானப்படுவோம்... பொய் சொல்லி ஒரு உறவை நீங்க காப்பாத்தணும்னு நினைச்சிங்கனா அந்த உறவு தற்காலிகமானதா தான் இருக்கும்ங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்கோங்க... அதே நேரம் ஒருத்தர்   உங்க கிட்ட உண்மைய சொல்லி தன்னோட தப்பை ஒத்துக்கிட்டா அதை எந்தக் காரணத்துக்காகவும் ஃபியூச்சர்ல சொல்லிக் காட்டி திட்டாதிங்க... அப்புறம் இனி ஜென்மத்துக்கும் உங்க கிட்ட உண்மையா இருக்கணும்ங்கிற எண்ணம் அவங்களுக்கு வராது”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்ட், ஷெனாய் நகர்... பால்கனியைத் தொட்டுக் கொண்டிருந்த அலங்கார பாக்குமரங்களைப் பார்த்தபடி காபியை அருந்திக் கொண்டிருந்தாள் பிரக்ருதி. அந்த 2BHK ஃப்ளாட்டின் சமையலறையில் பிரக்யா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்புகளை விவாதித்துக் கொண்டிர

அலைவரிசை 5

 


“இரத்த சொந்தங்களுக்கு மட்டும் தான் நம்ம மேல உண்மையான பாசம் அன்பு இருக்கும்னு பொதுவா சொல்லுவாங்க. ஆனா எந்த ஒரு பொதுவான கருத்துக்கும் விதிவிலக்குனு ஒன்னு கட்டாயமா இருக்கும். சில நேரங்கள்ல இரத்த சொந்தங்கள் நம்மளை அவங்களோட சுயநலத்துக்காக உபயோகிக்கலாம். அவங்களோட போட்டி பொறாமைல நம்மளை பகைடையாக்கி விளையாடலாம். அந்த மாதிரி நேரங்கள்ல நமக்கு ஆதரவா நிக்குறவங்க நம்ம கூட ரொம்ப நாள் பழகுனவங்களா தான் இருப்பாங்க. அந்தப் பழக்கத்தோட அடிப்படை நட்பா இருக்கலாம். காதலா கூட இருக்கலாம். ஏன் அந்த ஒரு நபர் உங்களோட ஸ்பவுசா கூட இருக்கலாம். எவ்ளோ நெருங்கிய சொந்தமா இருந்தாலும் அவங்க மேல கண்மூடித்தனமான நம்பிக்கையை வைக்காதிங்க. அது பல சமயங்கள்ல நமக்கு பேக்ஃபயர் ஆகிடும்”

     -கே.கேவின் மனதின் குரல்

தி சாக்சனி அப்பார்ட்மெண்ட், மோண்ட்ஃபோர்ட் ட்ரைவ்...

மாலை நேரத்தில் ஓய்வாக அப்பார்ட்மெண்ட்வாசிகள் நடந்தபடி இருக்க கம்யூனிட்டியில் ஆங்காங்கே காணப்படும் நீரூற்றுகளில் ஒன்றின் அருகே கிடந்த கல்பெஞ்சில் அமர்ந்து யாரிடமோ காரச்சாரமாக விவாதித்துக் கொண்டிருந்தான் ஷ்ரவன்.

“திஸ் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்... நான் இப்பவும் உங்க எம்ப்ளாயினு நினைச்சுட்டே பேசுறிங்க சார்... இது நல்லதுக்கு இல்ல... நான் என்ன பண்ணணும், என்ன பண்ணக்கூடாதுனு சொல்லுற உரிமை உங்களுக்கு இல்ல... நான் கே.கேவுக்கு என்னால முடிஞ்ச உதவிய பண்ணுவேன்... அவன் ரெகவர் ஆகுறது உங்களுக்கு வேணும்னா வீண்வேலையா தெரியலாம்... ஆனா எனக்கு அவன் ரொம்ப முக்கியம்... நீங்க என்னை பத்தி கவலைப்படாம உங்க பிசினஸை கவனிங்க... காசை விட்டெறிஞ்சா ஆயிரம் காக்கா வரும்னு ஒரு காலத்துல என் கிட்ட நீங்க தானே சொன்னீங்க... விட்டெறிஞ்சு தான் பாக்குறது... வர்ற ஆயிரம் காக்கால எந்த காக்கா நல்லா கத்துதோ அதை உளவு பாக்க வச்சுக்கோங்க... நான் அதுக்கான ஆள் இல்ல... ப்ளீஸ் டோண்ட் கால் மீ அகெய்ன்... இதே மாதிரி எப்பவும் நான் பொறுமையா பேச மாட்டேன்”

கொதிப்புடன் “சை” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன் அப்பார்ட்மெண்டின் வாகனத்தரிப்பிடத்தில் ஒரு கார் இரைச்சலோடு வந்து நிற்கவும் அங்கே அவனது பார்வையைத் திருப்பினான்.

அந்தக் காரிலிருந்து இறங்கியவள் பிரக்யா. அவளைத் தொடர்ந்து இறங்கினான் ஹாரி.

“நீ கிளம்பு ஹாரி... நாளையில இருந்து ஆபிஸ் போகணும்ல... நான் வேற கம்பெனியில இண்டர்ன்ஷிப்புக்கு ட்ரை பண்ணுறேன்”

“நம்ம எல்லாரும் ஒன்னா இண்டர்ன்ஷிப் பண்ணலாம்னு நான் ஆசைப்பட்டேன்... பட் அன்பார்சுனேட்லி..”

“இட்ஸ் ஓ.கே டூட்... நானும் ஜேனும் இன்னொரு கம்பெனில ட்ரை பண்ணுவோம்... உனக்கு ஜேன் உன்னோட இல்லைங்கிற கவலை தானே”

பிரக்யா குறும்பாக வினவவும் ஹாரியின் முகத்தில் புன்னகை.

வழக்கம் போல அவளை அணைத்துவிட்டு காரில் ஏறி கிளம்பிச் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் திரும்பி மின் தூக்கியை நோக்கி நடந்தவளின் குறுக்கே வந்து நின்றான் ஷ்ரவன்.

அவன் திடுதிடுப்பென வந்ததும் பிரக்யா அதிர்ந்து இரண்டு அடிகள் பின்னோக்கி எடுத்து வைக்க அவனோ அவளை நோக்கி தைரியமாக அடியெடுத்து வைத்து முன்னேறினான்.

“நான் உன்னை ஃபாலோ பண்ணுனேன்னு போலீஸ்கு தகவல் குடுத்தல்ல?”

“அ... அது தான உண்மை... நீ என்னை உன்னோட கார்ல...”

சொல்லிக்கொண்டே நகர்ந்தவள் அங்கிருந்த மூன்றே படிகள் கொண்ட படிக்கட்டின் நுனிக்கு வந்துவிட்டாள்.

“ம்ம்ம்” என ஷ்ரவன் முறைத்தபடி அடுத்த அடி எடுத்து வைத்ததும் காலை பின்னோக்கி வைத்தவள் தவறி விழுந்தாள்.

ரெசிடென்சியல் கம்யூனிட்டியின் புல்தரை அவளைத் தாங்கிக்கொண்டதால் தப்பித்தாள் பிரக்யா. 





விழுந்த அதிர்ச்சியை அவளைப் பார்த்து நகைச்சுவை போல சிரித்த ஷ்ரவனின் சிரிப்பு துடைத்துப் போட்டுவிட வேகமாக எழுந்தவள் முழங்கையை உதறினாள்.

கண்ணாடியைச் சரி செய்தவள் “போதும்! ரொம்ப சிரிச்சு ஹார்ட் அட்டாக் வந்து போய் சேந்துடாத... கீழ விழுந்தவளை தூக்கிவிடணும்ங்கிற பேசிக் மேனர் கூட தெரியல... சிரிக்க வந்துட்டான்” என முணுமுணுத்துவிட்டு அவனைக் கடக்க முயன்றாள்.

“அச்சோ! அடி பட்டுடுச்சா செல்லம்? கைய காட்டுங்க புஜ்ஜுகுட்டி” என்றபடி அவளது கையைப் பிடித்து நிறுத்தி காயம் பட்டுள்ளதா என பதறுவது போல நடித்தான் அவன்.

“ஏய் கையை விடு” தனது கரத்தை அவனிடமிருந்து பிடுங்கியவள் முறைக்க ஆரம்பிக்கவும்

“முறைக்காத... அடிபட்டதும் செல்லக்குட்டி புஜ்ஜுகுட்டினு கொஞ்சி நீ விழுந்த தரையை அடிச்சு உன்னை சமாதானப்படுத்துறதுக்கு நீ என்ன குழந்தையா? என்னை போலீஸ்ல மாட்டிவிட்ட குட்டி சாத்தானுக்குலாம் ஹெல்ப் பண்ணுற அளவுக்கு நான் ஒன்னும் நல்லவன் இல்ல... இப்ப ஹக் பண்ணி ட்ராப் செஞ்சானே உன் பாய் ஃப்ரெண்ட் அவன் செய்வான் இந்த மாதிரி வேலைய எல்லாம்... அதான் எழுந்திரிச்சிட்டல்ல, போ போ போயிட்டே இரு” என்றான் ஷ்ரவன்.

பிரக்யா இடுப்பில் கையூன்றி பற்களைக் கடித்தாள்.

“அவன் ஒன்னும் என் பாய்ஃப்ரெண்ட் இல்ல”

“இருந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்ல... இந்தக் காலத்துல பாய்ஃப்ரெண்ட் இல்லாத பொண்ணை கூகுள்ல தேடுனாலும் கண்டுபிடிக்கிறது கஷ்டம்”

சலிப்பாக கூறிவிட்டு நடந்தவனோடு தானும் நடந்தவள் “எனக்கு பாய்ஃப்ரெண்ட் இருந்தாலும் இல்லாமலே போனாலும் அதை பத்தி நீ கவலைப்படாத மேன்... அதுக்குப் பதிலா ட்ரக் அடிக்சன்ல இருந்து உன் ஃப்ரெண்டை காப்பாத்து... இல்லனா போதை ஏறி புத்தி மாறி ஒரு நாள் இல்லனா ஒரு நாள் கொலைகாரனா உன் கண் முன்னாடி நிப்பான்” என்கவும்

“வாட்? என் ஃப்ரெண்ட் ட்ரக் அடிக்ட்னு உனக்கு யார் சொன்னது?” என கேட்டான் அவன்.

“கிருதி தான் சொன்னா... அவனோட பிஹேவியர் எல்லாம் ட்ரக் அடிக்ட் மாதிரி இருந்துச்சாம்”

ஷ்ரவன் அவளை அற்பமாகப் பார்த்து வைத்தான்.

“உன் ஃப்ரெண்ட் நேமை கிறுக்கினு மாத்திக்க சொல்லு... அந்த அஞ்சடி அமிர்தாஞ்சன் பாட்டில் என் ஃப்ரெண்டை ட்ரக் அடிக்ட்னு சொல்லுச்சாம், இவ என் கிட்ட அதுல்லாம் ஒரு கவுண்டர்னு எடுத்து விடுறாளாம்... போடி போ... இன்னொரு தடவை என் ஃப்ரெண்டை ட்ரக் அடிக்ட்னு சொல்லாத”

பிரக்ருதியைப் பற்றி அவன் கூறியதும் பிரக்யா கடுப்பாகி விட்டாள்.

“நீ என் ஃப்ரெண்டை பத்தி பேசாத”

“முதல்ல ஆரம்பிச்சது நீ தான்”

“என் ஃப்ரெண்ட் சொன்ன உண்மைய நான் சொன்னேன்”

“அவ சொன்னது உண்மையில்லனு தான் நான் அவளை கலாய்க்குறேன்”

“அடேங்கப்பா... பொண்ணுங்க கிட்ட கை நீட்டுற உன் ஃப்ரெண்டுக்கு ஓவரா வக்காலத்து வாங்காத மேன்... அவன் எல்லாரையும் மாதிரி நார்மல் ஹியூமன் பியீங்னா என் ஃப்ரெண்டை அடிச்சதுக்கு சாரி கேட்டுருப்பான்... அதை விட்டுட்டு கோவத்துல அடிச்சிட்டேன்னு சால்ஜாப்பு சொல்ல மாட்டான்”

“அவனை எங்க மன்னிப்பு கேக்க விட்டுச்சு உன் ஃப்ரெண்ட்? அவன் மூஞ்சிய பாத்தாலே அந்தம்மாக்கு காண்டாகுதாமே”

“பின்ன அவளை அடிச்சவனைப் பாத்தா ஐஸ்லாண்ட்ல இருக்குற மாதிரி குலுகுலுனு இருக்கணுமா?”

“நீ கூட தான் என்னை போலீஸ்ல மாட்டிவிட்ட... உன் மூஞ்சிய பாத்து நான் பொறுமையா பேசலையா? அதே மாதிரி உன் ஃப்ரெண்டும் அட்ஜெஸ்ட் பண்ணிருக்கலாம்”

“அவ அட்ஜஸ்ட் பண்ணிட்டுக் கேக்குறதுக்கு உன் ஃப்ரெண்ட் என்ன அவளோட லவ்வரா?”

“இதே மாதிரி நானும் கேப்பேன்... ஆனா நீ அதுக்கும் கவுண்டர் டயலாக் எடுத்து வச்சிருப்ப... அதை கேக்குற அளவுக்கு எனக்கு மனதைரியம் இல்லம்மா... என் ஃப்ரெண்ட் செஞ்சது தப்பு தான்... ஆனா அவன் ஒன்னும் ட்ரக் அடிக்ட் இல்ல... சோஷியல் மீடியால இருக்குற பூமர்ஸ் ஃபேக் நியூஸை பரப்புற மாதிரி இல்லாத ஒன்னை இருக்குறதா சொல்லிட்டு திரியாதிங்க”

அமர்த்தலாகக் கூறிவிட்டு மீண்டும் நீருற்றை நோக்கி அவன் சென்றுவிட பிரக்யா வாயைச் சுழித்து அழகு காட்டிவிட்டு மின் தூக்கிக்குள் நுழைந்தாள்.

அவர்களது ஃப்ளாட்டுக்குச் செல்லும் போது எதேச்சையாக அவளது விழிகள் E15 ஃப்ளாட்டை பார்க்கத் தவறவில்லை.

வீட்டுக்குள் நுழைந்ததும் பிரணவி அடை தோசையை வெளுத்து வாங்குவதை பார்த்ததும்

“ஐயோ கடலை பருப்பு கேஸ் ட்ரபிளை உண்டாக்கும் அண்ணி... இப்ப இது ரொம்ப அவசியமா?” என்று பதற

“நவி சுடச்சுட இன்னொரு அடை ரெடி” என்றபடி கையில் தோசைத்திருப்பி மீது அடை தோசையை சுமந்து கொண்டு வந்து பிரணவியின் தட்டில் வைத்தாள் பிரக்ருதி.

பிரக்யா அவளையும், ஓரத்தில் பொன்னிற முறுகலோடு கறிவேப்பிலை கடுகு அலங்காரத்தோடு மஞ்சள் வண்ண அடையையும் மாறி மாறி பார்த்தாள்.



பின்னர் தோழியை முறைத்தாள்.

“ஏய்! அவங்களுக்கு ஆல்ரெடி ஹார்ட் பர்ன் இருக்குடி... இதுல நீ அடை செஞ்சு குடுத்திருக்க?”

“தப்பு தப்பு தப்பு... வெறும் அடை மட்டுமில்ல... அடை வித் அவியல்”

“அடிங்க... இதுல வாழைக்கா வேற... ஏன்டி இப்பிடி?”

“ப்ச்! அவ ஆசையா கேட்டா பிரகி... ஒரு நாள் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது... நீ டென்சன் ஆகாத... உனக்கும் மொறுமொறு அடை பிடிக்கும்ல... வந்து டேஸ்ட் பாரு”



பிரக்யா மீண்டும் தனது அண்ணியை முறைத்துவிட்டு தனக்கும் பிரக்ருதிக்கும் பொதுவான அறைக்குள் நுழைந்தாள்.

அவள் உடை மாற்றும் போது முழங்கை முட்டியில் ஒட்டியிருந்த மிச்சமீதி மண் அவளுக்கும் ஷ்ரவனுக்குமான உரையாடல் நினைவிலாடியது.



அவனது நண்பனுக்கு எந்தளவுக்குப் பரிந்து கொண்டு வருகிறான்? நல்ல நண்பன் என்பவன் தவறு செய்யும் போது திருத்துபவன் தான். இப்படி ஜால்ரா போடுபவனாக இருக்க மாட்டான்.

அணிந்திருந்த டீசர்ட்டின் முக்கால்நீள கையை முழங்கை வரை ஏற்றிவிட்டவள் போனிடெயிலாக இருந்த கூந்தலை விரித்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தாள்.

அங்கே “நீ மாங்கா ஊறுகா செஞ்சு குடுக்கவேல்ல” என்று குறைபட்டுக் கொண்டிருந்தாள் பிரணவி.

“ஃப்ரிட்ஜ்ல இருந்தா மாங்காவ காணும்... நான் டார்கெட் க்ராசரிக்குப் போய் வாங்கிட்டு வர்றேன்... வந்துட்டியா பிரகி? நீயும் சாப்பிடு... வெஜிடபிள்ஸ் தீர்ந்துடுச்சு... நான் வாங்கிட்டு வந்துடுறேன்” என்றாள் பிரக்ருதி.

“அதுக்குள்ள எப்பிடி காலியாச்சு?”

“இருக்குற கேரட், கத்தரிக்காய், வாழைக்காயை வச்சு அவியல் பண்ணிட்டேன்... கர்ட் மேக்கர்ல பால் உறை குத்தியிருக்கேன்... பாத்து எடுத்து வச்சிடு... நைட் டின்னருக்கு மாமாக்கு ஆனியன் ரைத்தா தான் சைட் டிஷ்”

தோழியிடம் சொல்லிக்கொண்டு டார்கெட் க்ராசரி என்ற கடைக்குக் கிளம்பினாள்.

அங்கே சென்றதும் முதலில் லாலிபாப் ஒன்றை வாங்கி வாயில் அதக்கியபடி சிவப்பு வண்ண ட்ராலியோடு பழங்கள் காய்கறிகள் இருக்கும் பிரிவுக்கு நகர்ந்தாள்.

பிரணவிக்காக மாங்காய்களை அள்ளி ட்ராலியில் போட்டவள் பிரக்யாவுக்கு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் பிடிக்கும் என்பதால் ஸ்ட்ராபெர்ரி அடங்கிய டப்பா ஒன்றையும் எடுத்துக் கொண்டாள்.

பிருத்விக்குப் பெரும்பாலும் காலையுணவு ப்ரட் டோஸ்ட் அல்லது சாண்ட்விச் தான் என்பதால் அவோகேடோ பழங்களையும் எடுத்தவள் பழச்சாறு தயாரிக்க எலுமிச்சை ஆரஞ்சு பழங்களையும் வாங்கிக்கொண்டாள்.

அத்தோடு நகரலாம் என்று எண்ணியவளின் ட்ராலியை இன்னொரு ட்ராலி இடிக்கவும் பழங்களிலிருந்து பார்வையை அந்த ட்ராலி பக்கம் திருப்பியவள் அங்கே நின்றவனைப் பார்த்ததும் முகத்தில் கோபச்சிவப்பு ஏற நகர எத்தனித்தாள்.

அவன் வேறு யாருமல்ல, கே.கே தான். தன்னைக் கண்டதும் விலகிச் செல்ல முயன்றவளின் வழியை மறித்தவன்

“நான் உன் கூட கொஞ்சம் பேசணும்” என்றான்.

ஏனெனில் பிரக்யாவிடம் தான் பேசியதை சற்று நேரத்துக்கு முன்னர் தான் ஷ்ரவன் கே.கேவிடம் கூறியிருந்தான் “நீ அந்தப் பொண்ணு கிட்ட சாரி சொல்லிடு மச்சி” என்ற வேண்டுகோளுடன்.

அதனால் தான் அவளைக் கண்டதும் மன்னிப்பு கேட்க விரும்பினான் கே.கே.



ஆனால் பிரக்ருதி அதை கேட்கும் மனநிலையில் இல்லை.

அவனை முகம் கடுக்கப் பார்த்தவள் “ஒழுங்கா வழிய விடு... இல்லனா நடக்குறதே வேற... உனக்குலாம் கொஞ்சம் கூட ரோசமே இல்லையா? மானிங் தானே நான் திட்டுனேன்... மறுபடியும் என் முன்னாடி வந்து நிக்குற... போயிடு, அது தான் உனக்கு நல்லது” என்று மிரட்டியபடி ஜீன்ஸின் பாக்கெட்டிலிருந்த தனது மொபைலை எடுத்தாள்.

அவளது வார்த்தைகள் கே.கேவுக்கு எரிச்சல் மூட்டவும் தன் கையில் வைத்திருந்த லெட்டூஸ் நிறைந்த பாக்கெட்டை பொத்தென்று தனது ட்ராலியில் வீசினான் அவன்.

“ஓவரா மிரட்டாத... உன்னைப் பாத்தா எனக்குப் பயம் வரல... எரிச்சல் தான் வருது... ஒரு மனுசன் என்ன சொல்ல வர்றான்னு புரிஞ்சிக்காம உன் இஷ்டத்துக்குப் பேசிட்டே போற”

அந்தோ பரிதாபம்! அவனது கைக்கும் ட்ராலிக்குமிடையே இருந்த இடைவெளியில் நீண்டிருந்த அவளது கையிலிருந்த மொபைல் தவறி அவனது ட்ராலிக்குள் விழுந்து விட கோபத்தின் பிடியிலிருந்த பிரக்ருதியோ அதை கவனிக்காமல் அவனிடம் வாதாடுவதில் மும்முரமானாள்.

 “நான் வாயால தான் பேசுறேன்... ஆனா சார் கையால பேசுறதுல கில்லாடி ஆச்சே”

“ஏய்! அன்னைக்கு நான் நடந்துக்கிட்ட விதத்துக்கு நீயும் ஒரு காரணம்... நீ பப்ல பேசுன பேச்சு அப்பிடி... ப்ளஸ் நான் இருந்த கோலம் என்னை அப்பிடி யோசிக்க வச்சிடுச்சு”

“அடேங்கப்பா! இவர் பெரிய ஆணழகன்... இவரை நாங்க ஏமாத்துறோம்... இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? உன் கூட எனக்கு என்ன பேச்சு? வழிய விடு”

அவனது ட்ராலியை இடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தவள் பில் போடும் போது தான் போன் இல்லை என்பதை கவனித்தாள்.

சண்டை போட்ட எரிச்சலில் அதை கையில் எடுத்ததோ தவறவிட்டதோ அவள் மூளையில் பதியவில்லை. அதே நிலை தான் கே.கேவுக்கும்.

அவளுக்குப் பின்னே பில் போட வந்தவன் பணமின்றி அவள் தடுமாறவும் மன்னிப்புக்குப் பதிலாக தானே பணம் செலுத்தினான் அவளுக்கும் சேர்த்து.

பிரக்ருதியின் முறைப்பை பொருட்படுத்தாமல் “இவங்களுக்குப் பேக் பண்ணிடுங்க” என்றவன் அங்கே இருந்தவர்கள் முன்னிலையில் பிரக்ருதி சண்டை போட யோசிப்பதை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி அவளுக்கான பணத்தை செலுத்திவிட்டான்.

அவள் தனது பொருட்களை வாங்கிக்கொண்டு விருட்டென வெளியேற தனது பொருட்களை பில் போட எடுத்து வைத்தான். அப்போது தான் பிரக்ருதியின் மொபைல் அவற்றினிடையே விழுந்திருப்பதை கவனித்து எடுத்தான்.

“ஓ! இது தான் அவளோட மொபைலா?”

தனக்குள் கேட்டுக்கொண்டவன் பொருட்களுக்குப் பணத்தைச் செலுத்திவிட்டு வேகமாக வெளியே ஓடிவந்தான்.

பிரக்ருதி எப்படி வீட்டுக்குச் செல்வது என புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“மொபைல்ல பேமெண்ட் பண்ணலாம்னு வாலட்டை எடுத்துட்டு வராத என் முட்டாள்தனத்துக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்”

அவளை நெருங்கிய கே.கே “ஹலோ உன்னோட மொபைல்” என்று கூறவும் திரும்பிப் பார்த்தவள் வேகமாக மொபைலை அவளைப் பிடுங்கிக்கொண்டாள்.

“இது எப்பிடி உன் கிட்ட வந்துச்சு?”

“ஹூ னோஸ்?”

அசட்டையாய் தோளைக் குலுக்கினான் கே.கே.

“ஓ! உன் மொபைல்ல பேமெண்ட் க்யூ.ஆர் கோட் (QR code)  காட்டு”

“எதுக்கு?”

“எனக்கு எதையும் இலவசமா வாங்கிக்கிறது பிடிக்காது... தட்ஸ் ஒய்”

இப்போது அவள் அசட்டையாய் தோளைக் குலுக்கினாள்.



கே.கேவும் தனது மொபைலில் பணம் செலுத்தும் ஆப்பிலிருந்த க்யூ.ஆர் கோடை காட்ட அதை ஸ்கேன் செய்து தனது பொருளுக்கான பணத்தை அவனுக்குத் திருப்பியளித்தவள் பின்னர் அவனிடம் பேச்சை வளர்க்காமல் ஒதுங்கிக் கொண்டாள்.

கே.கே அவளிடம் ஏதோ பேச வந்தவன் திடீரென மொபைலின் தொடுதிரை யாரிடமோ இருந்து அழைப்பு வந்ததும் ஒளிரவும் அதில் கவனமானான்.

அவனது பேச்சை ஒட்டுக்கேட்க விருப்பமின்றி குரல் கேட்காத தொலைவில் நின்று டாக்சியை புக் செய்தாள் பிரக்ருதி. டாக்சி வந்ததும் அதில் ஏறியவள் பார்வையை டார்கெட் க்ராசரி கட்டிடம் பக்கம் திருப்பிய போது அங்கே கோபாவேசத்தோடு மொபைலில் பேசிக்கொண்டிருந்த கே.கே தெரிந்தான்.

டாக்சி நகர நகர அவனது உருவமும் மெதுவாய் மறைய ஆரம்பித்தது. இவன் ஏன் எப்போதும் கோபத்தை குத்தகைக்கு எடுத்தவனைப் போல சுற்றுகிறான் என்ற கேள்வியோடு சாக்சனி அப்பார்ட்மெண்ட் நோக்கி பயணித்தாள் பிரக்ருதி.


Comments