அலைவரிசை 35

Image
  “பொதுவா திறமைசாலிங்களுக்கு யார் மேலயும் பொறாமை வராது... பின்ன யாருக்கு வரும்? எந்த ஃபீல்ட்லயும் அரைகுறை நாலெட்ஜ் இருக்குறவங்களுக்கும், நாலேட்ஜ் இல்லனா கூட இருக்குற மாதிரி சீன் போடுற காலி டப்பாக்களுக்கும் தான் பொறாமை வரும்... ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க, எல்லாரும் எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு பிறக்குறதில்ல... புது விசயத்த கத்துக்கிற ஆர்வமும், ஹார்ட் ஒர்க்கும் இருந்தா யார் வேணும்னாலும் எந்த விசயத்தையும் கத்துக்கலாம்... சோ ஆர்வமும் ஹார்ட் ஒர்க்கும் இல்லாத சோம்பேறி திலகங்கள், ஓவர் நைட்ல ஒபாமா ஆக ஆசைப்படுற ஹாஃப் பாயில்ஸ் எந்த ஃபீல்ட்லயும் முன்னேறாம முன்னேறிப் போறவங்களைப் பாத்து பொறாமைப்படுறதும் அவங்களை பத்தி காஸிப் பேசுறதுமா இருப்பாங்க”                                               -கே.கேவின் மனதின் குரல் சென்னை சிட்டி பண்பலை அலுவலகம், எழும்பூர் (எக்மோர்)... “ பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. ஆடியோ கன்சோலில் பாடலை இடை

அலைவரிசை 8

 



“உங்களுக்கு ஒரு விசயம் பிடிச்சிருக்குனா மத்தவங்க என்ன நினைப்பாங்க, உலகம் என்ன நினைக்கும்னு கவலைப்படாம அதை செஞ்சிடுங்க... இந்த உலகம் சந்தோசமா வாழ்ந்தாலும் பேசும், சங்கடப்பட்டு வீழ்ந்தாலும் பேசும்... இன்னொரு தடவை மனுசப்பிறவி கிடைக்குமோ இல்லையோ! கிடைச்ச ஒரு பிறவியில மனசு என்னென்ன செய்யணும்னு ஆசைப்படுதோ அது எல்லாத்தையும் நியாயம் தர்மத்துக்கு உட்பட்டு செஞ்சு தீர்த்துடணும்... இந்த ஆட்டிட்டியூட் சில நேரங்கள்ல உங்களை மத்தவங்க கண்ணுக்குச் சுயநலவாதியா கூட காட்டலாம்... என்னங்க பண்ணுறது, அடக்குமுறையில வாழுறவங்களுக்கு நம்மளோட நியாயமான சின்ன சின்ன ஆசைகள் கூட சுயநலமா தான் தெரியும்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

ஜெண்டர் ரிவீலிங்க் பார்ட்டி என்ற பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் பார்ட்டி மேலைநாடுகளில் பிரபலம். பெண் குழந்தை என்றால் கருவிலேயே அழிக்கும் முட்டாள்தனமும், பெண் குழந்தை பிறந்தால் செலவு என முகம் சுளிக்கும் பழக்கமும் மேலைநாட்டினருக்குக் கிடையாது என்பதால் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை இருபதாவது வார ஸ்கேனிலேயே மருத்துவர் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் தெரிவித்து விடுவார்.

அதன் பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை வரவழைத்து நடத்தும் சடங்கே ‘ஜெண்டர் ரிவீலிங் பார்ட்டி’. இதே பார்ட்டியைத் தான் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தான் பிருத்வி.

அவனும் பிரணவியும் சேர்ந்து எப்படியெல்லாம் அந்தப் பார்ட்டியை நடத்தலாமென கலந்தாலோசித்து அதற்கான வேலைகளை பிரக்யாவுக்கும் பிரக்ருதிக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டனர்.

பார்ட்டி நடத்துவதற்காக அப்பார்ட்மெண்டின் லானை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே அங்கே செய்யவேண்டிய அலங்காரம், இருக்கை வசதி போன்றவற்றை பிரக்யாவும் பிரக்ருதியும் திட்டமிட்டனர்.

வந்த விருந்தினர்களுக்கு தேவையான பானங்களையும் சிற்றுண்டியையும் தயாரிக்கும் பொறுப்பை முன்னரே கே.கேவிடம் ஒப்படைத்து விட்டதால் அந்த டென்சனிலிருந்து அவர்களுக்கு விடுதலை.

இன்விடேசனில் ஆரம்பித்து பார்ட்டி நடைபெற போகும் இடத்தில் அலங்கரிப்படும் பலூன்கள் வரை அனைத்துமே வெளிர் டர்காயிஸ் நீலம் மற்றும் மிஸ்டி ரோஸ் வண்ணத்தில் வாங்கலாம் என முடிவெடுத்திருந்தனர் இருவரும். ஆண் குழந்தை என்றால் நீலம், பெண் குழந்தை என்றால் இளஞ்சிவப்பு என வண்ணத்தை வைத்தே குழந்தையின் பாலினத்தை அறிவிப்பார்கள்.

பிருத்வி தனது நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இன்னும் இரு தினங்களில் பார்ட்டி என்ற நிலையில் இணையத்தில் ஜெண்டர் ரிவீலிங் பார்ட்டிக்கான அலங்காரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் பிரக்யாவும் பிரக்ருதியும்.

அதில் ஒரு அலங்காரம் இருவருக்கும் பிடித்துவிட பிரணவியிடம் அதை காட்டி ஒப்புதல் பெற்றனர் இருவரும்.

“டேபிள் நம்ம வீட்டுல இருக்கு... க்ரீம் கலர் டேபிள் விரிப்பு வாங்கணும்... குட்டி குட்டி காட்டன் பால்ஸ் ரெண்டு கலர்லயும் வேணும்... பலூன் வாங்கியாச்சு... டெகரேட்டிவ் லெட்டர்சை நீ கார்ட்போட்ல டிசைன் பண்ணிடு... பாப்சிகில்ஸ் குக்கீ, காட்டன் கேண்டி இந்த ரெண்டும் வாங்கணும்”

பிரக்யா பட்டியலிட்டாள். முடிவில் இருவருமாகச் சென்று அனைத்தையும் வாங்கி வருவதாக முடிவெடுத்தனர்.

அப்போது தான் பிரக்ருதிக்கு கே.கேவின் மொபைலிலிருந்து அழைப்பு வந்தது.

“என்னப்பா திடீர்னு கால் பண்ணிருக்க?” என்றவளிடம்

“உன்னால கமிஷரிக்கு வர முடியுமா?” என்று கேட்டான் அவன்.

“ஏன்?”

“வாயேன், சொல்லுறேன்”

“பார்ட்டிகுத் தேவையான திங்ஸ் சிலது பர்சேஸ் பண்ணணும் கே.கே... ஐ அம் பிசி”



“ஓவரா பந்தா பண்ணாத... வா... அங்க வந்ததும் நீயே வாயடைச்சுப் போயிடுவ”

“பில்டப்லாம் ரொம்ப பலமா இருக்கு... நான் எதிர்பாத்த மாதிரி அங்க ஒன்னும் ஸ்பெஷலா இல்லைனா நீ என்னோட இன்னொரு முகத்தைப் பாப்ப”

“அந்த முகமாச்சும் மேக்கப் இல்லாம இருக்குமா?”

“என்ன கடி ஜோக்கா? அதுவும் என் கிட்டவேவா? அப் டு த மார்க் கூட இல்ல உன் மொக்கை ஜோக்... உனக்கு இன்னும் பயிற்சி வேணும் கே.கே”

“ப்ச்! வர்றேன்னு ஒரு வார்த்தையில முடிய வேண்டிய விசயம்... அதை இவ்ளோ லெங்க்தியான கான்வெர்சேஷனா மாத்த உன்னால மட்டும் தான் முடியும்”

கே.கே சலித்துக்கொள்ளவும் பிரக்ருதி கலகலவென நகைத்தாள்.

“ஒரு இளைஞி ஒரு இளைஞன் கிட்ட வேற எப்பிடி தான் கடலை போடுறதாம்? நீயே சொல்லு” என அவள் குறும்பாக வினவ

“இவ்ளோ ஓபனா ஃப்ளர்ட் பண்ண நீ யார் கிட்ட கத்துக்கிட்ட?” என சிரிப்போடு கேட்டான் கே.கே.

“யாரும் கத்து தரலை... இதுல்லாம் ஆர்கானிக் ஸ்பீச்சாக்கும்” என பதிலளித்தவள் “நான் ஃப்ளர்ட் பண்ணுறேன்னு தெரிஞ்சே கான்வெர்சேசனை கட் பண்ணாம பேசுற பாத்தியா, இதை நீ யார் கிட்ட கத்துக்கிட்ட கே.கே?” என விசமமாக வினவ

“கிருதிங்கிற பேர்ல ஒரு கிங்கோப்ரா சாக்சனில உலாவுது... அது கிட்ட கத்துக்கிட்டேன்” என்றான் அவன்.

“என்னை கிங்கோப்ரானு சொல்லாத... கடுப்பா இருக்கு”

“நீ அடிக்குற லூட்டில சில நேரம் எனக்கும் கடுப்பா தான் இருக்கு... உன்னால ஜேக்கப் என்னை கிண்டல் பண்ணுறான்... நீ என்னோட கேர்ள் ஃப்ரெண்டாம்”

“இதுல நீ கடுப்பாகுறதுக்கு என்ன இருக்கு? கிருதியோட பாய் ஃப்ரெண்ட்ங்கிற போஸ்டிங்குக்கு எத்தனை பேர் சென்னையில வெயிட் பண்ணுறாங்க தெரியுமா? எவ்ளோ எஃபோர்ட் போடுறாங்க தெரியுமா? நீ எதுவும் பண்ணாம உனக்கு அந்த பெருமை கிடைச்சிருக்கு... இதுக்குலாம் நீ குடுத்து வச்சிருக்கணும்”

பிரக்யா பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

பிரக்ருதி அவளை முறைத்தவள் “என்னடி சிரிப்பு?” என்க

“ஒன்னுமில்ல... உண்மைய நினைச்சேன், சிரிச்சேன்” என ராகமாக கூறியபடி பிருத்வியிடம் ஷாப்பிங் செய்வதற்காக கார்டை வாங்கிக் கொண்டாள்.

பிரக்ருதியும் பம்பிள் பி ஃபுட் ட்ரக் நிற்கும் கமிஷரிக்கு வருவதாக கூறி அழைப்பைத் துண்டித்தவள் பிரக்யாவோடு சேர்ந்து கிளம்பினாள்.

இருவரும் வாங்க வேண்டிய அனைத்தையும் வாங்கி சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ் முகவரியைக் கொடுத்து அங்கே டெலிவரி செய்யும்படி கூறிவிட்டு கமிஷரியை நோக்கி கிளம்பினர்.

அங்கே சென்றதும் ஷ்ரவன் தான் அவர்களை புன்முறுவலுடன் வரவேற்றான்.

“வாங்க வாங்க! இப்ப தான் உங்களை நினைச்சேன்... நீங்களே வந்துட்டிங்க”



“இப்ப எதுக்காக நாங்க வந்தே ஆகணும்னு ஒருத்தன் ஒத்தைக்கால்ல நின்னான்... எங்க அவன்?” என்று பிரக்ருதி கேட்க

“அவன் உங்களுக்காக ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்குறான்” என்றான் ஷ்ரவன்.

அப்படி என்ன தான் சர்ப்ரைஸ் என்று இருவரும் ஷ்ரவனோடு ட்ரக்குகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இடத்தை அடைந்தனர்.

அங்கே டர்காயிஸ் நீலமும் மிஸ்டி ரோஸுமாய் பளபளத்தது பபிள் பி ட்ரக்.



“ஹேய் எப்ப ட்ரக்கோட கலரை மாத்துனிங்க?”

ஆச்சரியமாக கேட்டாள் பிரக்ருதி. ட்ரக்குக்குள் இருந்து இறங்கினர் கே.கேவும் ஜேக்கப்பும்.

“ஹவ் இஸ் திஸ்?” என்று கைகளை விரித்து கேட்டபடி வந்தான் ஜேக்கப்.

“சூப்பரா இருக்கு” என இரு பெண்களும் ஒரே குரலில் கூறினர்.

“இந்த ஐடியா கேசவ் சொன்னது தான்” என்றான் ஜேக்கப்.

“சும்மா வந்து சர்வ் பண்ணுறதுக்குப் பதிலா எங்க ட்ரக்கோட மினி செட்டப் ஒன்னை அங்க அரேஞ்ச் பண்ணி அதுல சர்வ் பண்ணுனா எங்களோட ப்ராண்ட் நேம் இன்னும் நிறைய பேரை போய் சேரும்ல” என கே.கே கூற

“அதாவது எங்க ஃபங்சனை வச்சு உங்க ப்ராண்டுக்கு விளம்பரம் தேடிக்கப் போறிங்க... ம்ம்... நடத்துங்க நடத்துங்க” என விளையாட்டாக கூறினாள் பிரக்ருதி.

“ட்ரக்கோட ஃப்ளக்சை நாங்க ஸ்னாக்ஸ் டிரிங்ஸ் அரேஞ்ச் பண்ணப்போற சாமியானால நிறுத்தி வச்சிடுவோம்... அதுல்லாம் இன்னைக்கு நைட் ரெடியாயிடும்... என்னென்ன ட்ரிங்ஸ், ஸ்னாக்ஸ் வேணும்னு பிருத்வி சார் ஒரு லிஸ்ட் குடுத்தார்... அதுல வேற எதாச்சும் ஆட் பண்ணனுமானு பாத்து சொல்லு” என்றபடி பட்டியலை பிரக்யாவிடம் நீட்டினான் ஷ்ரவன்.

அதில் சேர்க்க வேண்டியவற்றை குறித்துக் கொடுத்தாள் பிரக்யா.

“ஓ.கே கய்ஸ்... நாளைக்கு ட்ரஸ் கோட் ஒயிட் கலர்... மறந்துடாதிங்க... நாங்க கிளம்புறோம்... தலைக்கு மேல வேலை இருக்கு” என விடைபெற்றனர் பெண்கள் இருவரும்.

வீட்டுக்குச் சென்றதும் வாங்கிய பொருட்களை சரி பார்த்துவிட்டு வேலையை ஆரம்பித்தனர் இருவரும். பிரணவியும் உதவி செய்ய வர அவளை ஓரமாய் அமர்ந்து வேடிக்கை மட்டும் பார்க்கும்படி கூறிவிட்டு எலக்ட்ரிக் ஏர் பம்பில் பலூன்களை ஊதி வைக்க ஆரம்பித்தனர்.

பின்னர் ‘He or She’ என்ற பொன்னிற எழுத்துக்கள் பொறித்த வட்டவடிவ பலகை, இளம்ரோஜாவண்ணமும் இளநீலவண்ணமும் கொண்ட காட்டன் பால்கள் நிரம்பிய கண்ணாடி குடுவை, அந்த இரட்டை வண்ணங்களில் ப்ளாஷ்டிக் மலர்கள் அடுக்கிய பூஜாடிகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்தவர்கள் கே.கேவும் ஷ்ரவனும் எந்தளவில் வேலைகளை முடித்துள்ளனர் என பார்வையிட பிரணவியின் அனுமதியோடு E15 ஃப்ளாட்டிற்கு சென்றனர்.

மறுநாளுக்குத் தேவையான சிற்றுண்டிகளுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தனர் ஷ்ரவனும் கே.கேவும்.

பச்சை காய்கறிகளை தேவைப்பட்ட வடிவத்தில் வெட்டிக் கொண்டிருந்தான் கே.கே. மறுபுறமோ க்ரேப் மற்றும் வேஃபிள்சுக்காக இளம்ரோஜா மற்றும் இளநீலவண்ண ஃபுட் கலர் கலந்த மாவை தயார் செய்து கொண்டிருந்தான் ஷ்ரவன்.



இன்னொரு பக்கம் கப் கேக்குகள் தயார் நிலையில் இருந்தன. டோனட்கள் இருவண்ண மினுமினுப்பு அலங்காரத்துடன் சிரித்தன.

இவ்வளவையும் கண்ட இரு பெண்களும் வாயைப் பிளந்தனர்.

பிரக்ருதி காய்கறி கூட்டத்தில் கிடந்த கேரட்டைக் கண்டதும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். கே.கே அவளை முறைக்க

“சும்மா சும்மா முறைக்காத... கேரட்ல பீட்டா கரோட்டின் இருக்கு... அது ஸ்கின் காம்ப்ளக்சனுக்கு ரொம்ப நல்லது... அதுவும் பச்சையா சாப்பிட்டா ரொம்ப ரொம்ப நல்லது” என்று நியூட்ரிஷியனிஷ்டாக மாறி பேசினாள் அவள்.



“உனக்கு என்ன? இப்பவே ஃபேர் காம்ப்ளக்சன்ல தானே இருக்க... இன்னும் ஃபேர் ஆனா பேய் மாதிரி வெளிறி போய் தெரிவ” என்றபடி மடமடவென காய்கறிகளை வெட்டினான் அவன்.

கூடவே சமையலறையில் அங்குமிங்குமாக அவள் ஒவ்வொன்றாக எடுக்கவும் எரிச்சலும் வந்தது அவனுக்கு. கே.கேவை பொறுத்தவரை வேலை செய்யும் போது இப்படி யாரும் பேசினாலோ தொந்தவு செய்தாலோ அவனுக்குக் கடுமையாக கோபம் வரும்.

இதோ பிரக்யாவும் தான் வந்திருக்கிறாள். அவள் என்ன சமையலறைக்குள் இவளைப் போல சடுகுடு ஆடிக்கொண்டா இருக்கிறாள்?

மற்றொரு கேரட்டை கபளீகம் செய்த பிரக்ருதியைக் கடுப்போடு பார்த்து முணுமுணுத்தது அவனது மனசாட்சி.

“அட ஹெல்த்துக்கும் நல்லதுப்பா” என்று அவனது முறைப்புக்குச் சமாதானம் சொன்னபடி காய்கறிகளை விட்டு டோனட்டின் மீது கண்ணானாள் பிரக்ருதி.

பொன்னிறத்தில் பொறித்தெடுக்கப்பட்டு இளநீலவண்ண க்ளேஜில் மினுமினுத்தபடி பார்க்கும் போதே வாயில் எச்சிலூற வைத்த டோனட்டை ஆவலோடு எடுத்தவள் “கிருதி எடுக்காதடி” என கண்களால் சைகை காட்டிய பிரக்யாவைக் கண்டு கொள்ளாமல் சுவைக்க ஆரம்பித்தாள்.

“வாவ்! வாவ்! என்ன ஒரு அருமையான சுவை... மிஸ்டர் கேசவ், உன்னோட ஒய்ப் ரொம்ப குடுத்து வச்சவ” என்று உற்சாகமாக குதித்தபடி அவனது தோளில் பாராட்டாக தட்டிக்கொடுத்தவள் அவனருகே கண்ணாடி கிண்ணத்தில் மிச்சமிருந்த டோனட் க்ளேஜை கவனக்குறைவாக தட்டிவிட அது கே.கேவின் ஆடையைக் குளிப்பாட்டி தரையில் வழிந்ததோடு மட்டுமன்றி தரையில் விழுந்த கண்ணாடி கிண்ணம் உடைந்து சிதறிவிட பதற்றத்தில் காதுகளை கைகளால் பொத்திக்கொண்டாள் பிரக்ருதி.



“கிருதி” என்றபடி வந்த பிரக்யாவின் காலை முத்தமிட்டன அந்தக் கண்ணாடித் துண்டுகள்.

காலில் முத்தமிட்டது யாரென எட்டிப் பார்த்தது பிரக்யாவின் ஏ நெகடிவ் இரத்தம்.

“அவ்ஸ்” என்றபடி வேதனையோடு நொண்டியவள் தடுமாறி விழப்போக அவளைப் பிடித்து தாங்கிய ஷ்ரவன் சமையலறையில் கிடந்த முக்காலியில் அமர வைத்துவிட்டு முதலுதவிப்பெட்டியை நோக்கி ஓடினான்.

பிரக்யா கண்ணாடித் துண்டை பிடுங்கவும் பிரக்ருதிக்கு வசைகள் விழ ஆரம்பித்தது.

“அறிவில்ல உனக்கு? அப்பிடி என்ன நாக்கு துடிக்குது? எப்போவாச்சும் விளையாடுனா பரவாயில்ல... எப்பவும் பைத்தியக்காரத்தனமா விளையாடுனா அதோட விளைவு இப்பிடி தான் இருக்கும்... மண்டையில மூளைக்குப் பதிலா கடவுள் தெர்மாகோலை வச்சுட்டார் போல... இடியட்”



பிரக்யாவின் காயத்தைக் கண்டதும் கடுப்புடன் அவளைத் திட்டித் தீர்த்தான் கே.கே. தனது ஆடையை உதறியவன் இன்னும் டோனட்டின் மேலே ஊற்ற வைத்திருந்த க்ளேஜ் சட்டையிலும் பேண்டிலும் ஒட்டிக்கொண்டிருக்கவும் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டான்.

பிரக்ருதியைப் தீப்பார்வை பார்த்தவன் “உன்னோட விளையாட்டுப்புத்தியால யாராச்சும் ஆபத்துல சிக்குனா தான் நீ திருந்துவ போல... நாளைக்கு பார்ட்டில இந்தப் பொண்ணு எப்பிடி கலந்துப்பா?” என்று கேட்க பிரக்ருதி வாயடைத்துப் போனாள்.

அவள் ஒன்றும் வேண்டுமென்றே கண்ணாடி கிண்ணத்தை உடைக்கவில்லையே!

கடுப்பு மேலிட “உனக்குத் தான் வாய் இருக்குங்கிற ரேஞ்ச்ல பேசாத கே.கே... எனக்காச்சும் கடவுள் தெர்மாகோலை வச்சிருக்கார்... உனக்கு அங்க வெறும் வேகண்ட் ஸ்பேஸ் தான் இருக்கு” என்று கூறிவிட்டு “சாரி பிரகி” என்றாள் பிரக்யாவிடம்.

“இட்ஸ் ஓ.கே கிருதி”

“இப்பிடியே சொல்லி சொல்லி இந்தப் பொண்ணை இர்ரெஸ்பான்சிபிளா மாத்திடாதிங்கம்மா”

“இல்ல ப்ரோ...”

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்... ஷ்ரவன்... எங்கடா போய் தொலைஞ்ச?”

அவன் கத்தவும் ஷ்ரவன் முதலுதவிப்பெட்டியுடன் ஓடி வந்தான்.

பிரக்யா அமர்ந்திருந்த முக்காலியின் கீழே ஒரு காலை மடித்து நின்றவன் “உன் காலை வை” என்கவும் பிரக்யா தயங்கினாள்.



“இல்ல... அது வந்து... நான் எப்பிடி?” என்றவளிடம்

“ஒன்னும் பிரச்சனையில்ல” என பதிலளித்தவன் தானே அவளது காலை எடுத்து தனது மடித்த காலின் மீது வைத்து கண்ணாடி துளைத்த காயத்தைச் சுத்தம் செய்யத் துவங்கினான்.

டிஞ்சர் காயத்தில் பட்டதும் எரியத் துவங்க பிரக்யா “அவுஸ்” என்றபடி உதட்டைக் கடித்து வலியை விழுங்கினாள்.

“ஒன்னுமில்ல ஒன்னுமில்ல... இதோ கட்டுப் போட போறேன்” என சிறுகுழந்தைக்குச் சமாதானம் கூறும் மருத்துவர் போல பேசிக்கொண்டே காயத்தில் களிம்பைத் தடவி கட்டுப் போட்டுவிட்டான் அவன்.

அனைத்தையும் பிரக்யா தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க பிரக்ருதியோ குற்றவுணர்ச்சியில் தத்தளித்தபடியே தன்னைத் திட்டித் தீர்த்த கே.கேவை முறைத்தாள்.

மனதுக்குள்ளே “மாமாவுக்கு மட்டும் இது தெரிஞ்சா நான் செத்தேன்” என்று புலம்பிக்கொண்டிருந்தாள் அவள்.

ஆனால் அவளது மனதைப் புரிந்துகொண்டவளைப் போல பிரக்யா பேச ஆரம்பித்தாள்.

“சின்ன காயம் தானே ப்ரோ... யாரும் அண்ணா கிட்ட இதை பத்தி சொல்ல வேண்டாம்... ஹலோ! நீயும் சொல்லிடாத” என கே.கேவிடமும் ஷ்ரவனிடமும் கோரிக்கை வைத்தாள்.

ஷ்ரவன் சரியென்று தலையாட்டியவன் அவளது காலை மெதுவாக எடுத்து முக்காலியின் அருகே தொங்கவிடவும் நன்றியாய் புன்னகைத்தாள் அவள்.

கே.கே பிரக்ருதியை அலட்சியமாக பார்த்துவிட்டு “இப்ப நீங்க எப்பிடி நடப்பிங்க?” என்று பிரக்யாவிடம் கேட்க

“நான் எதுக்கு மச்சி இருக்கேன்?” என்று இடையில் புகுந்த ஷ்ரவன் அவளைத் தூக்கிக் கொண்டான்.



ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்தேறிய இச்சம்பவத்தை கே.கேவாலும் பிரக்ருதியாலும் நம்ப முடியவில்லை. பிரக்யாவோ தனது முட்டைக்கண்களை உருட்டியபடி அவனது கரம் அழுத்தமாக பதிந்திருந்த இடையில் குறுகுறுப்பை உணர்ந்தாள்.

“நானே உன்னை வீட்டுல கொண்டு போய் விடுறேன்” என அவன் யாருடைய பதிலையும் எதிர்பாராமல் E13 ஃப்ளாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அங்கே மிச்சமிருந்தவர்கள் கே.கேவும் பிரக்ருதியும் மட்டும் தான்.

அவளை முறைத்தபடி கண்ணாடி துண்டுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தவனை மனதிற்குள் பொன்னான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவள் இன்னும் ஒரு கிண்ணத்தில் டோனட்டுக்கான இளஞ்சிவப்பு வண்ண க்ளேஜ் மிச்சமிருப்பதைப் பார்த்தாள்.

கீழே குனிந்து கண்ணாடித்துண்டுகளை பொறுக்கிக் கொண்டிருந்த கே.கேவையும் பார்த்தாள்.

“என் தலையில தெர்மாகோல் இருக்குனா சொல்லுற? இருடா இரு... உன் தலைய இப்ப க்ளேஜால நிரப்புறேன்”



சற்றும் யோசிக்காமல் அந்தக் கிண்ணத்தைத் தட்டிவிட அது சரிந்து இளஞ்சிவப்பு வண்ண க்ளேஜ் வழிந்து கே.கேவின் தலையை நனைத்தது.

அவன் என்னவென நிமிர்ந்து பார்த்த போது வில்லத்தனமான புன்னகையுடன் அவன் கண்ணிலிருந்து மறைந்து வெளியே ஓடிவிட்டாள் பிரக்ருதி.

இது பிரக்ருதியின் வேலை தானா இல்லையா என புரியாமல் க்ளேஜ் வழிந்த சிகையை உலுக்கிக்கொண்டான் கே.கே.


Comments