அலைவரிசை 36

Image
  அலைவரிசை 36 “இனிப்பான பொய்ய விட கசப்பான உண்மை பெஸ்ட்னு சொல்லுவாங்க... உண்மைய சொல்லுறதால உங்களுக்கு உண்டாகுற பாதிப்பு ரொம்ப சின்னது தான்... ஆனா அந்த சின்ன பாதிப்பை ஃபேஸ் பண்ண பயந்துட்டு பொய் சொல்லி தப்பிச்சோம்னு வைங்க, ஃபியூச்சர்ல ரொம்ப அவமானப்படுவோம்... பொய் சொல்லி ஒரு உறவை நீங்க காப்பாத்தணும்னு நினைச்சிங்கனா அந்த உறவு தற்காலிகமானதா தான் இருக்கும்ங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்கோங்க... அதே நேரம் ஒருத்தர்   உங்க கிட்ட உண்மைய சொல்லி தன்னோட தப்பை ஒத்துக்கிட்டா அதை எந்தக் காரணத்துக்காகவும் ஃபியூச்சர்ல சொல்லிக் காட்டி திட்டாதிங்க... அப்புறம் இனி ஜென்மத்துக்கும் உங்க கிட்ட உண்மையா இருக்கணும்ங்கிற எண்ணம் அவங்களுக்கு வராது”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்ட், ஷெனாய் நகர்... பால்கனியைத் தொட்டுக் கொண்டிருந்த அலங்கார பாக்குமரங்களைப் பார்த்தபடி காபியை அருந்திக் கொண்டிருந்தாள் பிரக்ருதி. அந்த 2BHK ஃப்ளாட்டின் சமையலறையில் பிரக்யா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்புகளை விவாதித்துக் கொண்டிர

அலைவரிசை 4

 



“பணம் இருக்குற இடத்துல சந்தோசம் இருக்காதுனு சொல்லுறவன் யாருனு பாத்திங்கனா பணக்காரனா தான் இருப்பான். இந்த வார்த்தையை பணக்காரங்க சொல்லுறதே ஏழைங்களும் மிடில் கிளாஸ் மக்களும் பணக்காரங்களா ஆகவே கூடாதுங்கிற எண்ணத்துல தானோனு எனக்கு அடிக்கடி தோணும். ஒரு பணக்காரனை ஒரு நாள் மட்டும் நம்மளை மாதிரி மெட்ரோ ட்ரெயின்ல வேலைக்குப் போகச் சொல்லுங்க, ஒரு மாசம் மட்டும் ஈ.எம்.ஐ, ரெண்ட், கரெண்ட் பில் எல்லாம் கட்டி, பேலன்ஸ் சேலரியை வச்சு குடும்பத்தையும் நடத்திட்டு குழந்தைங்களுக்கு, சேவிங்சுக்கு, வயசான காலத்துக்கு ரிட்டயர்மெண்ட் ப்ளான்ஸ்கு அமவுண்ட் ஒதுக்கி பட்ஜெட் போட்டு வாழச் சொல்லுங்க. அப்ப அவனுக்குத் தெரியும் பணத்தோட அருமை, பணத்தால வர்ற வாழ்க்கை குடுக்குற சந்தோசத்தோட அருமை. The definition of happiness differs according to our perspective about our lifestyle”

                                        -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

கட்டர்மில் ட்ரைவ், டல்லாஸ்...

ஜேக்கப் தனது வீட்டு கராஜிலிருந்து ட்ரக்கை கிளப்பும் சத்தத்தைக் கேட்டபடி காருக்குள் அமர்ந்திருந்தனர் கே.கேவும் ஷ்ரவனும்.

“நேத்து நைட் முழுக்க நீ ஏன் ஃப்ளாட்டுக்கு வரல?”



ஷ்ரவன் காரின் ஸ்டீயரிங் வீலை முறுக்கியவன் ட்ரக் வெளியே வந்ததும் காரை கராஜுக்குள் செலுத்தியபடியே

“ஃப்ரெண்ட் ஒருத்தனை பாக்க ஆர்லிங்டனுக்குப் போயிருந்தேன் கே.கே” என்றான்.

“எனக்குத் தெரியாம அப்பிடி எந்த ஃப்ரெண்டை பாக்க போன?”

சந்தேகமாக கேட்டபடி கராஜுக்குள் புகுந்து நின்ற காரிலிருந்து இறங்கினான் கே.கே.

“என்னோட ஸ்கூல்மேட் மச்சி” என்ற ஷ்ரவன் பேச்சை மாற்றவும் அதற்கு மேல் தோண்டி துருவாமல் வெளியே நின்று கொண்டிருந்த ட்ரக்கை நோக்கி அவனோடு நடந்தான் கே.கே.

பம்பிள் பி (Bumble Bee) என்று எழுதப்பட்ட க்ரீம் வண்ண ட்ரக்கைப் பார்த்தபடி இருவரும் வந்தனர்.

“கிளம்பலாமா கய்ஸ்?”

ஜேக்கப் ஓட்டுனர் இருக்கையிலிருந்தபடி கேட்கவும் இருவரும் ட்ரக்கில் ஏறினர்.

நேரே ட்ரக் சென்று நின்ற இடம் ‘ட்ரக் யார்ட் கமிஷரி’. கமிஷரி என்பது கமர்ஷியல் கிச்சன். அங்கே மூவரும் ட்ரக்குடன் வந்ததற்கு காரணம் அவர்களுடைய ட்ரக் ‘ஃபுட் ட்ரக்’ (food truck) என்பதே.

ஆம்! ஜேக்கப்போடு சேர்ந்து கே.கேவும் ஷ்ரவனும் ‘பம்பிள் பி’ என்ற ஃபுட் ட்ரக்கை நடத்தி வருகின்றனர்.

டல்லாஸ் நகர விதிகளின்படி ஃபுட் ட்ரக் வைத்திருப்பவர்கள் கமிஷரியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் ட்ரக்கிலேயே சமைக்க அனுமதி கிடையாது. வீட்டிலிருந்து சமைத்து விற்பதும் விதிமுறையை மீறிய செயல்.

எனவே அங்கே ஃபுட் ட்ரக் பிசினஸை ஆரம்பிப்பவர்கள் கட்டாயம் அருகிலிருக்கும் கமிஷரியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அங்கேயே உணவைச் சமைத்து ட்ரக்கில் வைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்வது வாடிக்கை.

அவர்கள் மூவரும் அதற்காக தான் அங்கே வந்திருந்தனர்.

ஷ்ரவன் ட்ரக்குக்கு எரிபொருளை நிரப்பிவிட்டு அன்றைய மெனு என்ன என்பதை கேட்டுச் சென்றான்.

சென்றவன் ட்ரக்கிலிருந்த கரும்பலகையை எடுத்து அன்றைய மெனுவை சாக்ஸ்பீஸால் எழுத ஆரம்பித்தான்.

கமிஷரியின் சமையலறையில் ஜேக்கப்பும் கே.கேவும் தங்களுக்குத் தேவையானவற்றை தயாரிக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் மெனுவில் இடம்பிடிப்பவை சாக்லேட் பானங்கள், கோல்ட் காபி வகைகள், வேஃபிள்ஸ் மற்றும் ஹாட் டாக் வகையறா மட்டுமே. இந்த நான்கு வகையறாவுக்கு அடிப்படையாகத் தேவைப்படுபவற்றை கமிஷரியின் கிச்சனிலிருந்தே தயாரித்து கொண்டு செல்வார்கள் ஜேக்கப்பும் கே.கேவும்.

வேஃபிள்ஸ், ஹாட் டாக்குக்கு தேவையான பச்சை காய்கறிகள், பிக்கில் எனப்படும் பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், கோல்ட் காபி தயாரிக்கத் தேவையான ஐஸ் கட்டிகள், சிரப்கள் என அனைத்தையும் அங்கிருந்து எடுத்துச் சென்று தேவைக்கேற்றவாறு ட்ரக்கின் குளிர்பதனப்பெட்டியிலும் ஃபுட் வார்மர்ஸ் (food warmers) எனப்படும் சூடாக்கும் கொள்கலன்களிலும் நிரப்பிக் கொள்வார்கள்.

ட்ரக்குக்குத் தேவையான தண்ணீரையும் எரிபொருளையும் நிரப்பி அன்றைய மெனுவை எழுதும் வேலை ஷ்ரவனுடையது.

இதில் இலாபம் வருமா என்று சிந்தித்தெல்லாம் அவர்கள் இத்தொழிலில் இறங்கவில்லை. வண்ணமயமான உணவுப்பொருட்களைக் காணும் போதும் அவற்றை தயாரிக்கும் போதும் தனது மனதுக்குள் புது உற்சாகம் பிறப்பதாக கே.கே உணர்ந்தான். எனவே ஜேக்கப் மட்டுமே ஆரம்பித்த இத்தொழிலில் அவனுடன் பங்குதாரராக கே.கேவும் ஷ்ரவனும் சேர்ந்து கொண்டனர்.

இதோ இன்றைய மெனுவைத் தயாரித்து முடித்தவர்கள் கைகளைக் கழுவிக்கொண்டனர்.

கமிஷரியின் நிறுவனர் அந்த வார வீக்கெண்ட் பார்ட்டியில் கலந்துகொள்ள முடியுமா என ஷ்ரவனிடம் வழக்கம் போல கேட்டார்.

“நோ மிஸ்டர் ஆண்ட்ரூ... வீக்கெண்ட்ல ரெஸ்ட் எடுக்கலனா எங்களுக்குப் பைத்தியமே பிடிச்சிடும்” என அவன் மறுக்க

“இட்ஸ் ஓ.கே... எல்லா ட்ரக் ஓனர்சும் இந்த வாரம் வருவாங்க... அதனால கேட்டேன்.. நோ இஸ்யூஸ்” என்றபடி ஆண்ட்ரூ கிளம்ப கே.கேவும் ஜேக்கப்பும் உணவுப்பொருட்களை அடுக்கத் தொடங்கினர்.

“இன்னைக்கு என்ன டிஃபரண்டா செஞ்சிருக்கிங்கடா?” என்ற ஷ்ரவனிடம்

“டுடே ஸ்பெஷல் இஸ் பபிள் வேஃபிள், சாக்லேட் குக்கீ க்ரம்பிள் க்ரீம் ஃப்ராப்புசினோ, சாக்லேட் மார்ட்டினி அண்ட் கார்ட் டாக்” என்றான் ஜேக்கப்.

அனைத்தையும் நிரப்பிக்கொண்டதும் அவன் ட்ரக்கைக் கிளப்ப அவர்கள் வழக்கமாக விற்பனை செய்யும் வழித்தடங்களில் பயணிக்க ஆரம்பித்தது ‘பம்பிள் பி ஃபுட் ட்ரக்’.



ட்ரக் வழக்கமாக நிற்கும் பூங்கா ஒன்றின் அருகே நிற்க அங்கே நாற்காலிகளைப் பரப்பினான் ஷ்ரவன்.

அப்போது அங்கே சில சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்களும் வர வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

“ஒன் ஹாட் டாக் வித் மெக்சிகன் ஸ்பைஸ்ட் ஹாட் சாக்லேட்”

ஒரு சிறுவன் வந்து கேட்க மடமடவென ஹாட் டாக்கை தயாரித்து சாக்லேட் பானத்தோடு கலந்து நீட்டினான் கே.கே.

அச்சிறுவன் ட்ரக் உயரத்துக்கு எம்பி எடுக்க சிரமப்படவும் தானே இறங்கி வந்து அவனிடம் நீட்டினான் கே.கே.

“தேங்க்யூ அங்கிள்” என்று சிரித்தவனின் பார்வை அங்கே இருந்த பபிள் வேஃபிள் மீது படவும்

“யூ வாண்ட் தட்?” என்று கேட்டான் கே.கே.

“நோ அங்கிள்” என்றபடி ஓட முயன்றவனை பிடித்து நிறுத்தியவன் பபிள் வேஃபிளை ஒரு கப்பில் மடித்து வைத்து அதனுள் ஐஸ் க்ரீம், ஹாட் சாக்லேட் சாஸை தாராளமாக ஊற்றி ராஸ்பெரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி பழத்துண்டுகளைத் தூவி அச்சிறுவனிடம் நீட்டினான்.



“பட் அங்கிள், ஐ டோண்ட் ஹேவ் மனி ஃபார் திஸ்” என அச்சிறுவன் தயங்கவும்

“இட் காஸ்ட்ஸ் நத்திங் (It costs nothing)” என்றவன் அவனது சிகையைக் கலைத்துவிட



“ஆனா எங்கம்மா இந்த உலகத்துல அன்புக்கு மட்டும் தான் விலையில்லனு சொல்லுவாங்க” என்றபடி வேஃபிள் கப்பை வாங்கிக் கொண்டான்.

கே.கே அவனது முதிர்ச்சியான பேச்சில் திகைத்தான்.

“இட்ஸ் ட்ரூ... பட் அது உன்னை மாதிரி குழந்தைங்களோட உலகத்துல மட்டும் தான்”

“அப்ப பெரியவங்களுக்குனு தனி உலகம் இருக்குதா அங்கிள்?”

“யா சேம்ப்... உன்னை மாதிரி குழந்தைங்களோட உலகம் ரொம்ப அழகானது... அதுல பொய், பேராசை, ஏமாத்துறது இது எதுவுமே இருக்காது... அன்பு மட்டும் தான் நிறைஞ்சு இருக்கும்... சோ அங்க லவ் காஸ்ட்ஸ் நத்திங்... ஆனா பெரியவங்க உலகம் அப்பிடி இல்ல... இங்க எல்லாத்துக்கும் விலை இருக்கு... உன்னோட இடத்துல உன் மாம், டாட் இருந்திருந்தா பபிள் வேஃபிள்சுக்கு நான் காசு வாங்கியிருப்பேன்... பிகாஸ் வீ ஆர் அடல்ட்ஸ்... அவர் வேர்ல்ட் இஸ் எண்டயர்லி டிஃபரண்ட் ஃப்ரம் யுவர்ஸ்... டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?”

அச்சிறுவன் தலையாட்டவும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பி வைத்தான் கே.கே.

மீண்டும் ட்ரக்குள் சென்றவனிடம் வந்த ஷ்ரவன் “டேய் ஃப்ரீயா குடுத்துட்ட... போச்சு டாலர் போச்சு” என்று கைகளை உதற

“இந்த டாலரை வச்சு கோட்டையா கட்டப்போறோம்? சில விசயங்களை பணத்தால வாங்க முடியாது... அதுல ஒன்னு அந்தப் பையன் சிரிச்சப்ப அவன் முகத்துல தெரிஞ்சுதே அந்தச் சந்தோசம்... நான் கடைசியா எப்ப சந்தோசமா இருந்தேன்னு எனக்கே ஞாபகம் இல்ல... இப்ப அவனோட சந்தோசத்தைப் பாத்ததும் ஐ அம் ஃபீலிங் குட்” என்றவாறு தோளைக் குலுக்கிவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்.

ஷ்ரவன் அவன் கூறியதைக் கேட்டு ஒரு நொடி முகம் சோர்ந்தான். இவன் எதையும் மறக்கவே மாட்டானா? நண்பன் இப்போது கூறிய சந்தோசத்தை அவன் முகத்தில் எப்படியாவது பார்க்க வேண்டுமென ஷ்ரவனும் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டான்.

ஆனால் கே.கே தான் இன்னும் மாறவில்லை. இந்த நாடு, இங்கே கிடைத்த புதிய நண்பன் ஜேக்கப், அவனுடன் ஆரம்பித்த இந்தத் தொழில் என எதுவுமே அவனை மாற்றவுமில்லை.

என்னவொன்று, முன்பு போலன்றி இப்போதெல்லாம் ஷ்ரவன் செய்யும் குறும்புக்கும் அழிச்சாட்டியத்துக்கும் சிரிக்கிறான். இதுவே முன்னேற்றம் தான்.

திடீரென ஞாபகம் வந்தவனாக “இன்னைக்கு டாக்டரை பாக்கப் போகணும் ஷ்ரவன்” என்றான் அவனிடம்.

ஷ்ரவன் ஆச்சரியமாகப் பார்க்கவும் “என்னடா பாக்குற? என்னை பழையபடி மாத்துறதுக்கு நீ ரொம்ப ட்ரை பண்ணுற... உன்னை நான் ரொம்ப படுத்துறேன்ல, கொஞ்சமாச்சும் பொறுப்பா நடந்துக்கணும்னு தோணுச்சு... சீக்கிரம் ரெகவர் ஆகணும்... உனக்கு ரொம்ப நாள் சுமையா இருக்கமாட்டேன்” என்றபடி சாக்லேட் சாஸ் சிந்திய கரங்களை ஃபுட் ட்ரக்கிலிருந்த ஷிங்கில் கழுவ ஆரம்பித்தான் கே.கே.

அவன் முதுகிலடித்த ஷ்ரவன் “நீ பழைய கே.கேவா ஆகணும்னு எனக்கும் ஆசை... அதுக்குனு நீ சுமை கிமைனு பேசுனா பாத்துட்டுச் சும்மா இருக்கமாட்டேன்... நான் எப்படா உன்னைச் சுமைனு சொன்னேன்? வாய் இருக்குனு இஷ்டத்துக்குப் பேசாத... அடுத்த கஸ்டமர் வந்தாச்சு... இப்பவாச்சும் ஒழுங்கா காசை வாங்கி கல்லாவுல போட்டுட்டு சர்வ் பண்ணு” என்று மிரட்டிவிட்டு வெளியே அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதிகள் கேட்டவற்றை தட்டில் அடுக்கி வைத்து டொமேட்டா கெச்சப் பாட்டிலோடு வெளியேறினான்.

ஏப்ரனின் முன்பக்க பாக்கெட்டில் கைகளை நுழைத்துக்கொண்ட கே.கேவோ எதையோ யோசித்தவனாக நின்றான்.

******

தி சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ், E13 ஃப்ளாட்...

“உங்களோட சேஃப்டிய உங்களால பாத்துக்க முடியும்னா நீங்க ரெண்டு பேரும் தாராளமா எங்க வேணும்னாலும் போகலாம்... உங்க விசயத்துல மட்டும் தான் என் மனசை மாத்திக்கிட்டேன்... இன்னும் நவியோட வேலை விசயத்துல் என்னோட ஸ்டேண்டிங் மாறலை... அது எப்பவும் மாறாது... என் பொண்டாட்டி பிள்ளைங்களை நான் சம்பாதிச்சு சந்தோசமா வச்சுப்பேன்... வேலையோட ஸ்ட்ரெஸ் நவிய பாதிக்க நான் விடமாட்டேன்”

பிருத்வி இவ்வாறு கூறவும் பிரக்ருதி தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்தாள். இந்தியாவுக்குத் திரும்ப செல்ல மாட்டேன் என அவள் சத்தியம் செய்த பிறகு தான் பிருத்வி அவன் வேலை செய்யும் அலுவலகம் அமைந்திருக்கும் ‘டூ கேலரியா டவருக்கு’ கிளம்பினான்.

கிளம்பும் முன்னர் பிரக்யாவிடம் அவளது இண்டர்ன்ஷிப் பற்றி கேட்டான்.

“நீ இண்டர்ன்ஷிப் பண்ணப்போற ஆபிசும் அங்க தானே இருக்கு... வா, நானே உன்னை ட்ராப் பண்ணுறேன்” என்றவனிடம்

“ஹாரி வருவான்னா... நான் அவனோட போய்ப்பேன்... உனக்கு டைம் ஆகுது... நீ கிளம்பு” என்று கூறிவிட்டாள் அவள்.

பிருத்வியும் கிளம்பிவிட பிரணவியிடம் பேசாமல் போன பிரக்ருதியை இழுத்து வைத்துப் பேசினாள் அவள்.

“உனக்கு ஏன்டி இவ்ளோ கோவம் வருது? பிருத்வி எது யோசிச்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்”

“உன் புருசனோட நியாயம் எனக்கு அநியாயமா தோணுச்சுனா நான் கோவப்படுவேன்... அதுக்கு இஷ்டம்னா நான் இங்க இருக்குறேன்... இல்லனா கிளம்பி போயிட்டே இருப்பேன்”

மீண்டும் முறுக்கிய தங்கையை எப்படியோ சமாளித்து அவளது அறைக்கு அனுப்பினாள் பிரணவி.

பிரக்யா அவளை நமட்டுச்சிரிப்போடு நெருங்கியவள் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு

“இன்னைக்கு ரொம்ப டென்சன் ஆகிட்டிங்கல்ல, ரிலாக்ஸ் அண்ணி... அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு மண்டைய உடைச்சாலும் நீங்க கூலா இருக்கணும்... அதுக்கு ப்ராக்டிஸ் பண்ணுங்க... உங்களோட மூட் ஸ்விங்ஸ் பாப்பாவ பாதிக்கும்” என்க

“இனிமே இவங்க சண்டையில நான் தலையிடவே மாட்டேன் பிரகி... எப்பிடியோ போகட்டும்” என்றாள் பிரணவி.

“யாரை சொல்லுற?” என்று அறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் பிரக்ருதி.

“உன்னைச் சொல்லல தங்கமே” என்று சமாளித்தவள் குரலை தணித்துக்கொண்டு “பாம்பு காது இவளுக்கு” என நாத்தனாரிடம் இரகசியம் பேசினாள்.

பின்னர் பிரக்யாவும் கிளம்ப ஆரம்பித்தாள்.

அவள் உடைமாற்றி வெளியே வரும் போது பிரக்ருதி அவளது தந்தையிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள்.

“இல்லப்பா... நான் ஆல்கஹால் எடுத்துக்கல... நான் உன் பொண்ணுப்பா... என்னை நீ நம்பவே மாட்டியா? உன் மருமகன் சொன்னதும் என்னைத் திட்டுற பாத்தியா?”

“அங்கிள் என்ன சொல்லுறார்? குடு நான் பேசுறேன்” என்றபடி அவளது மொபைலை வாங்கினாள் பிரக்யா.

“ஹாய் அங்கிள்... ஏன் கிருதிய மிரட்டுறிங்க? பாவம் அவ” என்கவும் மறுமுனையில் பிரணவி பிரக்ருதியின் தந்தையான வாசனோ சத்தமாகச் சிரித்தார்.



“அவ பாவமா பேசுறதை வச்சு நான் திட்டுறேன்னு நினைச்சியாம்மா? அது தான் இல்ல... என்னம்மா பிருத்வி இப்பிடி சொல்லுறானேனு கேக்க தான் செஞ்சேன், அதுக்கு தான் அவ இவ்ளோ ட்ராமா பண்ணுறா” என்றார்.

மருமகனை பெயர் சொல்லி அழைக்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வாசனும் பிருத்வியின் தந்தை மனோகரும் பால்ய சினேகிதர்கள். அவர் பார்த்து வளர்ந்த பையன் என்பதால் எப்போதும் உரிமையாக பெயர் சொல்லியே அழைப்பார் வாசன். அவர் அவ்வாறு அழைத்தால் தான் தனக்கும் திருப்தி என பிருத்வி கூறிவிட்டான்.

“உங்களுக்குத் தான் அண்ணாவை பத்தி தெரியும்ல அங்கிள்”

“தெரியும்மா... நான் ஸ்ட்ரிக்டா இருந்தாவே என் பொண்ணு மூச்சுக்கு முன்னூறு சண்டை போடுவா... இப்ப பிருத்வி கிட்ட அதே மாதிரி சண்டை போடுறா போல”

“ஆமா அங்கிள்! அண்ணாவை கேள்வி கேக்கவும் ஒரு ஆள் வேணும்ல”

“அது சரி தான்... இன்னைக்கு நீ இண்டர்ன்ஷிப்புக்காக போறியாமே... ஆல் த பெஸ்ட் பிரகிம்மா... உன் அப்பாக்கு முன்னாடி நான் விஷ் பண்ணிட்டேன்” என்று குழந்தையாய் குதூகலித்தார்.

பிரக்யா சிரித்தபடி நன்றி கூற மொபைலை வாங்கிக்கொண்டாள் பிரக்ருதி.

“அவளுக்கு விஷ் பண்ணுற... ஆனா என்னை ஆர்.ஜே இண்டர்வியூவை அட்டெண்ட் பண்ண விட்டியா நீ? போப்பா நான் உன் மேல இன்னும் எக்ஸ்ட்ரா கடுப்பாயிட்டேன்”



“டேய் கிருதி... நவி பாவம்ல... நீ தான் அவளை உன் அம்மா இடத்துல இருந்து கவனிச்சிக்கணும்”

“சரி சரி! உடனே செண்டிமெண்ட் சீனுக்குத் தாவிடாதப்பா... என்னை இங்க அனுப்பி வச்சிட்டு நீ அங்க ஸ்வீட், ஐஸ் க்ரீம்னு வெளுத்து வாங்காத... மனோ அங்கிள் என் கிட்ட நீ பண்ணுற எல்லாத்தையும் டெய்லி ரிப்போர்ட் பண்ணுவார்ங்கிறதை மறந்துடாத...  பி கேர்ஃபுல் மிஸ்டர் வாசன்”

மிரட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் பிரக்ருதி.

பிரக்யாவை அழைத்துச் செல்ல ஹாரி வந்துவிட அவள் கிளம்பிவிட்டாள்.

சகோதரிகள் இருவரும் அவளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தனர்.

அப்போது தான் பிரணவி பக்கத்துவீட்டுக்காரனின் கைவண்ணம் தன் தங்கையின் கன்னத்தில் சிவப்புத்தடமாக பதிந்திருப்பதைப் பார்த்தாள்.

“என்ன கிருதி அவன் உன்னை இப்பிடி அடிச்சிருக்கான்?” என கொந்தளித்தபடி ஐஸ் கியூபைத் தேடினாள் அவள்.

பிரக்ருதியோ சாவகாசமாக சோபாவில் சாய்ந்து கொண்டாள்.

“அவனை சைட் அடிச்சதுக்கு எனக்கு இது தான் பனிஷ்மெண்ட்... நம்ம பாட்டி ஒரு பழமொழி சொல்லும், ஞாபகம் இருக்குதா நவி? ஆளை பாத்தா அழகு போல, வேலைய பாத்தா எழவு போல... அது அந்த கே.கேவுக்கு ஹண்ட்ரெட் பர்சண்டேஜ் பொருந்தும்... ஆள் பாக்க ஜம்முனு இருக்கான், பட் ஹீ இஸ் அ ட்ரக் அடிக்ட்”

“கே.கேவா?”

“ஆமா நவி... அவன் பேர் கே.கே”

தங்கையின் அருகே அமர்ந்த பிரணவி ஐஸ் கட்டியால் அவள் கன்னத்தில் ஒத்தடம் கொடுத்தாள்.

“உனக்கு என் மேல இவ்ளோ பாசமா?”

குறும்பாய் கேட்டாள் பிரக்ருதி.

“ஆமா! நான் இப்ப ஐஸ் க்யூப் வச்சு விட்டா நீ எனக்கு மாங்கா ஊறுகா பண்ணிக் குடுப்பல்ல, அதனால தான்”

“அடப்பாவி! உன் காரியத்துல கண்ணா இருக்கியே”



“நான் என்ன எனக்காகவா கேக்குறேன்? உன்னை சித்தினு கூப்பிடப்போற என் பிள்ளைக்காக தான் கேக்குறேன்” என்று சொல்லிவிட்டு அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டாள் பிரணவி.

“ஊறுகா வேணும்னு கேளு, செஞ்சு குடுக்குறேன்... அதுக்குனு முகத்தை இப்பிடி வைக்காத... சகிக்கல”

“என் மூஞ்சி சகிக்கலையாடி?” என சோபாவிலிருந்த குஷனை எடுத்து பிரணவி அவளை அடிக்க அவள் அழுவது போல நடிக்க ஒரு வழியாக கே.கேவால் அங்கே உண்டான பூசல் மறைந்து மீண்டும் அந்த E13 ஃப்ளாட் பழைய உற்சாகத்துக்கு மாறியது.

Comments