அலைவரிசை 36

Image
  அலைவரிசை 36 “இனிப்பான பொய்ய விட கசப்பான உண்மை பெஸ்ட்னு சொல்லுவாங்க... உண்மைய சொல்லுறதால உங்களுக்கு உண்டாகுற பாதிப்பு ரொம்ப சின்னது தான்... ஆனா அந்த சின்ன பாதிப்பை ஃபேஸ் பண்ண பயந்துட்டு பொய் சொல்லி தப்பிச்சோம்னு வைங்க, ஃபியூச்சர்ல ரொம்ப அவமானப்படுவோம்... பொய் சொல்லி ஒரு உறவை நீங்க காப்பாத்தணும்னு நினைச்சிங்கனா அந்த உறவு தற்காலிகமானதா தான் இருக்கும்ங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்கோங்க... அதே நேரம் ஒருத்தர்   உங்க கிட்ட உண்மைய சொல்லி தன்னோட தப்பை ஒத்துக்கிட்டா அதை எந்தக் காரணத்துக்காகவும் ஃபியூச்சர்ல சொல்லிக் காட்டி திட்டாதிங்க... அப்புறம் இனி ஜென்மத்துக்கும் உங்க கிட்ட உண்மையா இருக்கணும்ங்கிற எண்ணம் அவங்களுக்கு வராது”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்ட், ஷெனாய் நகர்... பால்கனியைத் தொட்டுக் கொண்டிருந்த அலங்கார பாக்குமரங்களைப் பார்த்தபடி காபியை அருந்திக் கொண்டிருந்தாள் பிரக்ருதி. அந்த 2BHK ஃப்ளாட்டின் சமையலறையில் பிரக்யா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்புகளை விவாதித்துக் கொண்டிர

அலைவரிசை 6



எனக்கு ஜென்ரலைஸ் (generalize) பண்ணி பேசுறவங்களை சுத்தமா பிடிக்காது. For example, வீடே உலகம்னு வாழுற பொண்ணுங்க மட்டும் தான் நல்லவங்க, ஒழுக்கமானவங்க, இன்டிபென்டன்டான பொண்ணுங்க எல்லாரும் மோசமானவங்க, ஒழுக்கம்னா கிலோ என்ன விலைனு கேப்பாங்கனு சில  பத்தாம்பசலிகள் சொல்லுவாங்க... பெண் சுதந்திரத்துக்கும் ஒழுக்கத்தவறுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அந்த முட்டாள்களுக்கு யாராச்சும் புரிய வச்சா நல்லது... ஒரு பொண்ணுக்குச் சுதந்திரம் குடுத்தா கெட்டுப்போவானு சொல்லுறவங்க பெரும்பாலும் ஆண்களா தான் இருப்பாங்க... அப்ப ஆண்கள் இது நாள் வரைக்கும் சுதந்திரம்ங்கிற பேர்ல கெட்ட காரியங்களை தான் செஞ்சாங்களா? சுதந்திரத்தை பயன்படுத்தி ஆண்கள் எவ்ளோவோ நல்ல காரியங்களை செஞ்சாங்க, இப்பவும் செய்யுறாங்க... பொண்ணுங்களும் அதை செய்வாங்கனு ஏன் ஆண்கள் நம்புறதில்ல? ஆணோ பெண்ணோ, நம்ம ஒழுக்கமா இருக்கணுமா இல்லையாங்கிறதை நமக்கு குடுக்கப்படுற சுதந்திரம் தீர்மானிக்காது... சுயக்கட்டுப்பாடும், நல்லது கெட்டதை பகுப்பாய்வு செஞ்சு முடிவெடுக்குற பக்குவமும் தான் அதை தீர்மானிக்கும்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

மைண்ட்ஃபுல் ஹெல்த் சொல்யூசன், மிட்வே சூட் ரோடு, ஆடிசன்...

குளிரூட்டப்பட்ட அறையின் உள் அலங்காரமே எப்பேர்ப்பட்ட கொந்தளிக்கும் மனதையும் அமைதியடையச் செய்யும். வெளிர் டர்காயிஸ் வண்ண சுவர்ப்பூச்சும், அறையின் ஒரு மூலையில் இருந்த போன்சாய் மரமும் நீலநிற இருக்கைகளும் கண்களுக்கு இதமளித்தது.

அந்த இருக்கைளில் ஒன்றில் அமர்ந்திருந்தான் கே.கே. அவனது எதிர் இருக்கையில் அமர்ந்து அவன் கூறுவதை கையிலிருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்டிருந்தார் மருத்துவர் சுஷ்ருதா பீட்டர்ஸ். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண்மணி.

கே.கே டெக்சாஸுக்கு வந்த நாளிலிருந்து கடந்த ஆறு மாத காலமாக அவரிடம் தான் மனோதத்துவ சிகிச்சைக்கு வருகிறான். சைகோதெரபியோடு மாத்திரைகளும் தவறாது அவனுக்கு அளிக்கப்பட்டு வந்ததன் முன்னேற்றம் தான் சமீப நாட்களில் அவனுக்கு இருந்த மன அழுத்தமும், ஆன்சைட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டிருந்தன.



“உங்களோட மெண்டல் ஹெல்த்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது மிஸ்டர் கேசவ்... கடந்த கால சம்பவங்களுக்குக் காரணமானவங்க மேல உங்களுக்கு இருக்குற கோபம் மட்டும் தான் இப்ப தீர்க்கப்படாத பிரச்சனை... எப்பிடி டிப்ரசனையும் ஆன்சைட்டியையும் ஜெயிச்சிங்களோ அதே மாதிரி இந்தக் கோவத்தையும் உங்களோட கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திட்டிங்கனா நீங்க பழைய கேசவ் கிரிஷ்சா மாறிடலாம்”

அவர் சொல்லி முடித்ததும் விரக்தியான புன்னகை கே.கேவின் இதழில் நெளிந்தது.

“கேசவ் கிரிஷ்... இந்தப் பேரை நான் மறந்து ஆறு மாசமாகுது... எனக்கு இந்தியாவோட இருந்த தொடர்பு அறுந்து போன மாதிரி இந்தப் பேரோட இருந்த தொடர்பும் அறுந்து போன ஃபீல் டாக்டர்... இதை எனக்கு வச்சவர் மேல அடங்காத ஆத்திரம் இன்னும் மாறாம இருக்கு... அவரோட பிடிவாதமும், ஒரு பொண்ணோட துரோகமும் என் வாழ்க்கையில முக்கியமான நிறைய விசயங்களை என் கிட்ட இருந்து பிரிச்சிடுச்சு... அதுல என்னோட பேரும் ஒன்னு... அந்தப் பேரை யாரும் சொன்னா கூட கோவம் வருது டாக்டர்... பிடிக்கல”

அவனது முகமாறுதலைக் கவனித்தபடி குறிப்பேட்டில் எழுதிக் கொண்டார் சுஷ்ருதா.

பின்னர் நிமிர்ந்தவர் “அந்தப் பேரை வச்சவர் மேல கோவமா இருக்கீங்க... சரி... அது என்ன கேசவ் கிரிஷ்? டபுள் நேமா?” என்க

“அது என் தாத்தாக்களோட பேர் டாக்டர்... அம்மா தாத்தாவோட நேம் கேசவன்... இன்னொரு தாத்தாவோட நேம் கிருஷ்ணன்... ரெண்டையும் கலந்து வச்ச நேம் அது” என்றான் கே.கே என்ற கேசவ் கிரிஷ்.

“ஓ! உங்க தாத்தாவை உங்களுக்குப் பிடிக்குமா?”

“ரொம்ப பிடிக்கும் டாக்டர்” முகம் ஒளிர கூறினான் அவன்.

“வெல்!” என்றபடி குறிப்பேட்டை மடித்து வைத்தார் சுஷ்ருதா.

பின்னர் அவனை நேருக்கு நேராகப் பார்த்தார்.

“இந்த நேமை யாராச்சும் கூப்பிட்டா உங்களுக்கு இனிமே உங்க தாத்தாவோட ஞாபகம் வரணும்... ஏன்னா வச்சவங்க யாரா வேணும்னாலும் இருக்கலாம்... ஆனா பேருக்குச் சொந்தமானவங்க மேல உங்களுக்குப் பாசம் இருக்குங்கிறதை உங்க ஃபேஸ்ல தெரியுற க்ளோவே சொல்லுது... அப்ப ஏன் தேவையில்லாதவங்களுக்காக நீங்க அந்த நேமை வெறுக்கணும்?”

கே.கேவின் நெற்றியில் யோசனைக்கோடுகள்! அவன் யோசிக்கட்டும் என சில நிமிடங்கள் இடைவெளி விட்டவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

“இன்னும் என்னென்ன விசயமெல்லாம் உங்களுக்குக் கோவத்தை உண்டாக்குது?”

“பொண்ணுங்களை பாத்தாலே கோவம் வருது... குறிப்பா பணத்தாசை பிடிச்ச பொண்ணுங்க... ஐ காண்ட் டாலரேட் தெயர் ஸ்பீஷ்... நேத்து கூட பப்ல நான் மீட் பண்ணுன ஒரு பொண்ணு பக்கா கோல்ட்-டிக்கர் மாதிரி பேசுனா... அவ கிட்ட நான் கொஞ்சம் ரூடா பிஹேவ் பண்ணிட்டேன்”

அதையும் குறிப்பேட்டில் குறித்துக்கொண்டார்.

“நானும் ஒரு பொண்ணு தான் கேசவ்... என்னைப் பாத்தா உங்களுக்குக் கோவம் வருதா?”

“நோ டாக்டர்... அப்சல்யூட்லி நோ”

“உங்க அம்மாவை உங்களுக்குப் பிடிக்குமா?”

“ரொம்ப பிடிக்கும் டாக்டர்... ஐ ரியலி மிஸ் ஹெர்”

“குட்... ஒரு பொண்ணா இருந்தாலும் உங்கம்மாவை உங்களுக்குப் பிடிக்குது... அவங்க மேல உங்களுக்குக் கோவம் வர வாய்ப்பில்ல... ஏன்னா உங்களை பெத்தெடுத்தவங்க இல்லையா? பாக்குற பொண்ணுங்க எல்லாரையும் பணத்தாசை பிடிச்சவங்கனு யோசிக்காம இந்தப் பொண்ணும் என்னைக்கோ ஒரு நாள் ஒரு உயிரை இந்த உலகத்துக்குக் கொண்டு வரப்போற தாயா மாறுவானு யோசிக்க முயற்சி பண்ணுங்க... அம்மாக்கள்ல நல்லவங்க கெட்டவங்க கிடையாது கேசவ்... அம்மானாலே நல்லவங்க தான்... ஒரு பொண்ணு ஃப்ரெண்டா, காதலியா, மனைவியா இருக்குறப்ப கூட ஆணுக்குத் துரோகம் செய்யலாம்... ஆனா குழந்தைக்குத் துரோகம் செய்யுற அம்மாக்களை உங்களால அவ்ளோ ஈசியா கண்டுபிக்க முடியாது... இனிமே நான் சொன்ன கண்ணோட்டத்தோட பொண்ணுங்களை பாக்க முயற்சி பண்ணுங்க”

கே.கேவின் முகம் அவரது பேச்சில் கொஞ்சம் தெளிந்தது. வழக்கம் போல ப்ரிஸ்கிரிப்சனை அவர் நீட்டவும் வாங்கிக்கொண்டவன் சீக்கிரமே தனது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் யாவும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு மருத்துவமனையின் வாகனத்தரிப்பிடத்தை நோக்கி சென்றான்.

காரில் உறங்கியபடி இருந்தான் ஷ்ரவன். அவனைக் காணும் போது, தான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என்று தோன்றியது கே.கேவுக்கு. அவனுக்கு இருந்த மன அழுத்தம், மனச்சோர்வு, கோபம் போன்ற மனரீதியான பிரச்சனைகள் கொண்ட மனிதனை இந்திய சமூகம் பைத்தியம் என்று அழைத்து ஒதுக்கி வைக்கும்.

ஆனால் கே.கேவின் அதிர்ஷ்டம் அவனுக்கு ஷ்ரவனைப் போன்ற நண்பன் வாய்த்தான். அவன் மட்டுமில்லையென்றால் மனரீதியான பிரச்சனை கே.கேவை தற்கொலை முடிவுக்குத் தூண்டியிருக்கும். தனது வாழ்நாள் முழுமைக்கும் அவனுக்குக் கடமைப்பட்டவன் என்று எண்ணியபடியே காரின் கண்ணாடியைத் தட்டினான் கே.கே.

கண்ணயர்ந்திருந்த ஷ்ரவன் விழித்துக்கொண்டு கதவைத் திறந்துவிட்டான்.

“எல்லாம் ஓ.கே தானே மச்சி?”



“ஃபீலிங் பெட்டர் நவ்... கூடிய சீக்கிரம் நான் ஃபுல்லா ரெகவர் ஆகிடுவேன்னு நம்பிக்கை வருது ஷ்ரவன்”

ஷ்ரவன் சந்தோசத்தோடு நண்பனை அணைத்தான்.

கே.கே வேகமாக அவனை விலக்கியவன் “டேய் இது இந்தியா இல்ல... இப்பிடி பொசுக்குனு கட்டிப்பிடிச்சா இந்த நாட்டுல வேற அர்த்தம் எடுத்துப்பாங்க” என்று கூற

“சோ வாட்? பீயிங் கே (gay) இஸ் நாட் தெயர் மிஸ்டேக்டா... இட்ஸ் ஆல்சோ நேச்சுரல்... முட்டள்தனமான ‘அவனா நீ’ காமெடிய இந்தியாலயே விட்டுட்டு வந்துட்டேன்... சோ இங்க நம்மளை அப்பிடி நினைச்சாலும் கவலை இல்ல மச்சி” என்றான் ஷ்ரவன்.

சில நேரங்களில் விளையாட்டாக நடந்து கொண்டாலும் தன்னை விட ஷ்ரவனுக்கு மனமுதிர்ச்சி அதிகமென தோன்றியது கே.கேவுக்கு. நண்பனின் முதுகில் ஆதரவாகத் தட்டிக்கொடுத்தவன் காரைக் கிளப்பும்படி கூறினான்.

காரில் செல்லும் போது ஷ்ரவனிடம் சற்று நேரத்துக்கு முன்னர் டார்க்கெட் க்ராசரியில் காய்கறிகள் வாங்கிய போது நடந்த சம்பவத்தைக் கூறிக்கொண்டே வந்தான் கே.கே.

“அந்தப் பொண்ணு கிட்ட சாரி கேக்கலாம்னு தான் போறேன் ஷ்ரவன்... ஆனா அவ காட்டுற திமிர்த்தனத்துல மனசு மாறிடுது”

“நீ அடிச்ச கோவம் இன்னும் தீரலை போல”

“ஒரே நாள்ல மறந்து போகுமாடா? எனிஹவ், அடுத்த தடவை மன்னிப்பு கேக்க ட்ரை பண்ணுறேன்”

வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் அவன் கூறவில்லை. டாக்டர் சுஷ்ருதாவின் வார்த்தைகள் அவனுள் மாற்றத்தை விதைத்துவிட்டது.

அவன் யாரிடம் மன்னிப்பு கேட்க எண்ணினானோ அந்த பிரக்ருதி டார்கெட் க்ராசரியில் நடந்த சம்பவத்தை பிரக்யாவிடம் கூறிக்கொண்டிருந்தாள்.

“நான் நினைச்ச அளவுக்கு அவன் மோசமானவன் இல்ல பிரகி... ஆனா அவனை என்னால மன்னிக்கவே முடியாது”

பிரக்யாவோ ஷ்ரவனுக்கும் தனக்கும் நடந்த உரையாடலை தோழியிடம் கூறினாள். கூடவே கே.கே ஒன்றும் போதை மருந்துக்கு அடிமையானவன் இல்லை என்ற உண்மையையும் கூறினாள் அவள். ஆனால் பிரக்ருதிக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஷ்ரவன் அவளை கேலி செய்ததை மட்டும் பிடித்துக்கொண்டாள் பிரக்ருதி.

“அவன் என்னை அஞ்சடி அமிர்தாஞ்சன் பாட்டில்னு சொல்லிருக்கான்... நீ அவனைச் சும்மாவா விட்ட?” என கொதித்தாள் பிரக்ருதி.

“அடியே! அவன் உன் நேமை கிறுக்கினு மாத்திக்கச் சொன்னான்டி... அதை மறந்துட்டேன் பாரு”

“போதும் போதும்! அவன் ஒரு தடவை சொன்னதை நீ மறுபடியும் மறுபடியும் சொல்லிக் காட்டாத... அடுத்த தடவை அவனைப் பாத்தா அவன் மண்டையையும் சேர்த்து உடைக்குறேன்”

“அது கொஞ்சம் கஷ்டம் தான் கிருதி”

“ஏன் கஷ்டம்? எனக்குலாம் இரக்கமே கிடையாது.... அவன் மண்டையை நான் உடைக்குறது கண்டிப்பா நடக்கும்”

“அவனும் அவன் ஃப்ரெண்டும் ரொம்ப ஹைட்டா இருப்பாங்க கிருதி... நம்ம ஏணி வச்சு ஏறி தான் அவங்களை தலையில கொட்ட முடியும்... இதுல எங்க இருந்து அவன் மண்டைய உடைக்குறது?”

பிரக்யா கவலையாய் கூறவும் “பாயிண்ட்..” என்றபடி மோவாயில் கை வைத்து யோசிக்க ஆரம்பித்தாள் பிரக்ருதி.

“சீக்கிரம் இதுக்கு ஒரு வழிய கண்டுபிடிப்போம்”

இருவரும் ஒரே தீர்மானத்துடன் உறங்க சென்றனர்.

மறுநாள் விடிய பிருத்வி அவனது அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றதும் பெண்கள் மூவர் மட்டும் வீட்டிலிருந்தனர்.

பிரணவிக்கு இது நான்காவது மாதயிறுதி. வயிறு சற்று உப்பலாக தெரிய ஆரம்பித்திருந்தது. முன்பு போலன்றி மானிங் சிக்னஸ் நின்றுவிட்டது. என்னவொன்று அவளது நாக்குக்கு ருசியாக ஏதேனும் சமைத்துக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் ஒரு நாள் விரும்பிய உணவு மறுநாள் அவளுக்கு வெறுத்துவிடும்.

 அன்று காலையும் ப்ரூட் சாலடுடன் பாலை அருந்தி கால்சியம் மாத்திரையைப் போட்டுக்கொண்டவள் இனிப்பாக ஏதேனும் சாப்பிட கேட்டாள்.

“ஐஸ் க்ரீம் சாப்பிடிறிங்களா அண்ணி?”

“ப்ச்! அதை சாப்பிட்டு போரடிக்குது பிரகி... எனக்கு வேற எதாச்சும் வேணும்”

“எது வேணும்னு தெளிவா சொல்லு”

“எனக்கு ஃப்ராப்புசீனோ குடிக்கணும் போல இருக்கு” என்றாள் பிரணவி.

“சரி! நான் ஆர்டர் பண்ணவா?” என்று பிரக்ருதி மொபைலை எடுக்கவும்

“எதுக்கு ஆர்டர் பண்ணுற? மோன்ட்ஃபோர்ட் ட்ரைவும் செலஸ்டியல் ரோடும் மீட் பண்ணுற கார்னர்ல பபிள் பி ஃபுட் ட்ரெக் வரும்... அதுல ஃப்ராப்புசீனோ சூப்பரா இருக்கும்டி... வேஃபிள்சும் செம டேஸ்டா இருக்கும்... ஜஸ்ட் டூ மினிட்ஸ் நடந்து போனாலே வந்துடும்” என்றாள் பிரணவி.

“அண்ணி! ஃபுட் ட்ரெக் சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்குமா?”

“அதானே! ஃப்ராப்புசீனோலாம் ஸ்டார்பக்ஸ்ல குடிச்சா தான் நல்லா இருக்கும்... இவ ஏதோ தள்ளுவண்டி கடையில வாங்கி தர சொல்லுறா”

“அது ஒன்னும் தள்ளுவண்டிக்கடை இல்லடி... ஃபுட் ட்ரெக்” என திருத்தினாள் பிரணவி.



“அது தள்ளுவண்டி கடையோட அப்கிரேடட் வெர்சன் தான் நவி... உனக்கு அந்த ட்ரெக்ல விக்குற ஃப்ராப்புசீனாவே தான் வேணுமா?”

“ஆமா கிருதி... நீ வர்றதுக்கு முன்னாடி என்னோட கேர்டேக்கர் அங்க தான் வாங்கிட்டு வருவாங்க”

“சரி! நீ சொன்னா கேக்கமாட்ட... என்னென்ன வேணும்னு சொல்லு... நான் வாங்கிட்டு வர்றேன்”

தங்கை சம்மதித்ததும் பிரணவியின் முகம் ஜொளித்தது.

“அவங்க டெய்லி மெனுவை ஒரு ப்ளாக்போர்ட்ல எழுதி போட்டிருப்பாங்க... என் கேர்டேக்கர் ஜெனி அங்க போய் அதை போட்டோ எடுத்து வாட்சப் பண்ணுவாங்க... அப்புறம் நான் செக் பண்ணிட்டு ஆர்டர் பண்ணுவேன்”

“சரி... நானும் அங்க போயிட்டு வாட்சப் பண்ணுறேன்... பிரகி உனக்கு எதாச்சும் வேணுமா?”

“வேஃபிள்ஸ் வாங்கிட்டு வா கிருதி... சாப்பிட்டு நாளாச்சு”

அவர்கள் இருவரையும் வீட்டில் இருக்கும்படி சொல்லிவிட்டு மோன்ட்ஃபோர்ட் ட்ரைவும் செலஸ்டியல் ரோடும் சந்திக்கும் முனைக்கு கால்நடையாக சென்றாள் பிரக்ருதி.

அவளது தமக்கை கூறிய பபிள் பி ட்ரெக் அங்கே நிற்கவும் அதை நோக்கி சென்றவளுக்கு அதை நடத்துபவர்கள் கே.கேவும் ஷ்ரவனும் என்பது தெரியாது.

அவளை அனுப்பி வைத்த பிரணவிக்கும் அந்த விசயம் தெரியாது. இவ்வளவு ஏன்? பக்கத்து ஃப்ளாட்டில் குடியிருக்கும் கே.கேவையே முந்தைய தினம் தான் அவள் பார்த்திருந்தாள்.

பிரக்ருதி ட்ரக்கின் அருகே சென்றவள் கரும்பலகையைப் புகைப்படம் எடுத்து வாட்சப்பில் அனுப்பிவிட்டு திரும்பிய போது அங்கே ஒரு ஆடவனிடம் சாக்லேட் பானத்தை கொடுத்துக் கொண்டிருந்த கே.கேவை பார்த்ததும் திகைத்துப் போனாள்.

அவளது வாட்சப்பில் நோட்டிபிகேசன் வருவதைக் கூட கவனிக்கவில்லை. அதே நேரம் ட்ரக்கை நோக்கி திரும்பிய கே.கேவும் அவளைக் கவனித்துவிட்டான்.

பிரக்ருதி வேகமாக அங்கிருந்து நகர முற்படவும் அவளருகே வந்தவன் “உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்க

“ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்... நீ தான் இந்த ஃபுட் ட்ரக்கோட ஓனர்னு தெரியாது... தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்” என்றவள் நகர எத்தனித்தாள்.

கே.கேவோ அவளது கரத்தைப் பற்றி தன்னோடு இழுத்துச் செல்லவும் அவனைத் திட்டியபடி வேறு வழியின்றி அவன் இழுத்த திசையில் சென்றாள் பிரக்ருதி.



ட்ரக்கின் பின்புறம் வந்ததும் அவள் கரத்தை விடுவித்தான் கே.கே.

பிரக்ருதி அவனை முறைத்து “இன்னொரு தடவை என் கையை பிடிச்ச உன்னை நான் கொன்னுடுவேன்” என்கவும்



“ஐ அம் சாரி” என்றான் அவன்.

அவனை மேலும் கீழுமாகப் பார்த்தவள் “இது நீ என்னை கண்ட மாதிரி பேசுனதுக்குச் சரியா போச்சு... ஆனா பளார்னு கன்னம் சிவக்குற மாதிரி அறைஞ்சியே... அதுக்கு பதில் சொல்லு” என்றாள்.

“நீயும் என்னை பளார்னு அறைஞ்சுக்க”

பிரக்ருதி ஒரு நொடி திகைத்துப்போனாள்.

“நான் அறைஞ்சதும் வருத்தப்படக்கூடாது”

“ம்ம்”

“வலிக்குதுனு அழக்கூடாது”

அவள் தீவிரமான குரலில் கூறவும் கே.கேவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“நீ அடிச்சு வலிக்குற அளவுக்கு நான் ஒன்னும் வீக்கானவன் இல்ல”

மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டவன் அலட்சியமாக கூற பிரக்ருதியோ அவனது உயரத்துக்குத் தன் கை எட்டுமா என்று யோசித்தாள்.

“நீ ரொம்ப ஹைட்டா இருக்க... நான் எப்பிடி உன்னை அறையுறது?”

“அது உன் கவலைம்மா... முடிஞ்சா என்னை அறைஞ்சுக்கோ... உனக்கு நான் டைம் தருவேன்... நான் பத்து எண்ணுறதுக்குள்ள என்னை அறையணும்”

“ஆமா, இவரு பெரிய மாஸ்டர் மூவில வர்ற பவானி... கவுண்ட் டவுன் குடுக்குறாரு... பனைமரம் ஹைட்டுக்கு இருக்குற திமிரு” என்று கடுகடுத்தபடி கண்களை சுற்றும் முற்றும் அலைய விட்டவளின் முகம் திடீரென ஜொலித்தது.

“கண்டேன் ஸ்டூலை” என புன்னகையுடன் அவள் செல்லவும் கே.கே குழப்பமுற்றான்.

ஆனால் ஒரு முக்காலியைத் தூக்கிக் கொண்டு வந்தவளின் விசமப்புன்னகையைக் கண்டதும் ஆச்சரியப்பட்டவன் அதை அவன் முன்னே வைத்து அவள் ஏறி நிற்கவும் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

பிரக்ருதியோ “இப்ப என்ன சொல்லுற?” என்று கேட்க

“கம் ஆன்! ஸ்லாப் மீ” என்று சொன்னபடி கண்களை மூடிக்கொண்டான் அவன்.

“என்னமோ நான் உன்னைக் கிஸ் பண்ணப்போற மாதிரி கண்ணை மூடுற... அடச்சீ! கண்ணைத் திறந்து பாரு” என அவள் அதட்டவும் கண்களைத் திறந்தான்.

பிரக்ருதி தனது உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கொண்டவள் அவனது கன்னத்தில் பலமாக அறையவும் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர்.



பிரக்ருதியின் உள்ளங்கை எரிய ஆரம்பிக்க அறை வாங்கியவனோ ஏதோ கொசு கடித்தது போல தனது கன்னத்தை தடவிவிட்டுக்கொண்டான்.

“உனக்கு வலிக்கவே இல்லையா கே.கே?”

“லைட்டா”

“ஆனா என் கை வலிக்குதே”

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது”

“நீ என்னை அடிச்சாலும் எனக்குத் தான் வலிக்குது... நான் உன்னை அடிச்சாலும் எனக்குத் தான் வலிக்குது”

முணுமுணுத்தபடி முக்காலியிலிருந்து இறங்கியவள் அதை எடுத்துக்கொண்டு திரும்ப அங்கே ஷ்ரவன் வந்தான்.

பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டவன் “பழிக்குப் பழி வாங்கியாச்சா மிஸ் அமிர்தாஞ்சன்?” என்று அவன் கிண்டலிக்க

“உன்னை அப்புறமா வச்சுக்கிறேன் மேன்” என்று கடுகடுத்துவிட்டு முக்காலியை எங்கே எடுத்தாளோ அங்கே கொண்டு சென்று வைத்தாள் அவள்.

கையை உதறியபடி நின்று கொண்டிருந்தவளைப் பார்த்து நண்பர்கள் இருவரும் சிரித்தனர்.

அவளோ “சிரிச்சது போதும்... இங்க வந்து வியாபாரத்த பாருங்க” என்று அதட்ட ட்ரக்கினுள் சென்றான் கே.கே.

“என்ன வேணும்?” என்று கேட்டவனிடம்

“ஃப்ராப்புசினோ” என்றாள் அவள்.

“வேற?”

“ஃப்ரோஜன் சாக்லேட் மார்கரீட்டா, ஸ்ட்ரூப் வேஃபிள்ஸ்”

அனைத்தையும் ஒரு பாலீதீன் கவரில் வைத்து அவளிடம் நீட்டினான் கே.கே.

அதை வாங்கிக்கொண்டவள் நறுக்கென்று அவன் கையில் கிள்ளி வைக்க “அவுச்! அம்மா” என்று கத்தியபடி கையைத் தடவிக்கொண்டான் அவன்.

கடுப்புடன் “ஏன்டி கிள்ளுன?” என கேட்டவனிடம்

“வலிச்சுச்சா? அப்பாடா, இப்ப தான் முழுசா பழிவாங்குன திருப்தி எனக்குள்ள வந்துச்சு... கிருதி ஹேப்பி அண்ணாச்சி” என்று சொல்லிவிட்டு பாலீதீன் கவரோடு இடத்தைக் காலி செய்தாள் அவள்.

கே.கே கையைத் தடவியபடி “லூசு” என்று முணுமுணுக்க சில அடிகள் சென்றவள் அவனைத் திரும்பிப் பார்த்து கண் சிமிட்டினாள்.



அவன் திகைத்து நிற்கவும் “நீ அடிச்சதுக்கும் நான் கிள்ளுனதுக்கும் சரியா போச்சு... இனிமே நான் உன்னை சைட் அடிச்சா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று சத்தமாக கேட்டாள் அவள்.

அவளது கேள்விக்கு என்ன பதில் கூறுவதென கே.கே புரியாமல் குழம்பி நின்றான்.

“ஓ.கே! மௌனம் சம்மதம்... அப்பார்ட்மெண்ட்ல மீட் பண்ணலாம்... டாட்டா” என்றவள் ஓடிச் செல்லவும்

“டவுட்டே இல்லை... இந்தப் பொண்ணுக்கு பைத்தியம் தான்” என்றவன் தனது வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான். 

Comments