அலைவரிசை 36

Image
  அலைவரிசை 36 “இனிப்பான பொய்ய விட கசப்பான உண்மை பெஸ்ட்னு சொல்லுவாங்க... உண்மைய சொல்லுறதால உங்களுக்கு உண்டாகுற பாதிப்பு ரொம்ப சின்னது தான்... ஆனா அந்த சின்ன பாதிப்பை ஃபேஸ் பண்ண பயந்துட்டு பொய் சொல்லி தப்பிச்சோம்னு வைங்க, ஃபியூச்சர்ல ரொம்ப அவமானப்படுவோம்... பொய் சொல்லி ஒரு உறவை நீங்க காப்பாத்தணும்னு நினைச்சிங்கனா அந்த உறவு தற்காலிகமானதா தான் இருக்கும்ங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்கோங்க... அதே நேரம் ஒருத்தர்   உங்க கிட்ட உண்மைய சொல்லி தன்னோட தப்பை ஒத்துக்கிட்டா அதை எந்தக் காரணத்துக்காகவும் ஃபியூச்சர்ல சொல்லிக் காட்டி திட்டாதிங்க... அப்புறம் இனி ஜென்மத்துக்கும் உங்க கிட்ட உண்மையா இருக்கணும்ங்கிற எண்ணம் அவங்களுக்கு வராது”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்ட், ஷெனாய் நகர்... பால்கனியைத் தொட்டுக் கொண்டிருந்த அலங்கார பாக்குமரங்களைப் பார்த்தபடி காபியை அருந்திக் கொண்டிருந்தாள் பிரக்ருதி. அந்த 2BHK ஃப்ளாட்டின் சமையலறையில் பிரக்யா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்புகளை விவாதித்துக் கொண்டிர

அலைவரிசை 2

 



Why should boys have all the fun? இது ஹீரோ மோட்டோகார்ப்போட ஸ்கூட்டர் விளம்பர ஸ்லோகன். இந்த டிவி கமர்சியல் பாக்குறப்பலாம் ‘அதானே, ஏன் பசங்க மட்டும் என்ன ஸ்பெஷல்?’ அப்பிடினு தோணும். ஆனா இந்த ஹிப்போக்ரிட்டிக்கல் சொசைட்டி ‘ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் கேர்ள்ஸ்’ டேக் போட்டு எழுதி வச்சிருக்குற ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ், டாலரோட வேல்யூ மாதிரி எப்பவும் ஏறுமுகமா தான் இருக்கும். அதாவது தலைமுறை கடந்தாலும் எவ்ளோ மாற்றங்கள் வந்தாலும் அந்த பிற்போக்குத்தனமான சோ கால்ட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸோட மதிப்பு குறையுறதே இல்ல”

                                        -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

தி சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ், மோண்ட்ஃபோர்ட் ட்ரைவ்...

1995ல் கட்டப்பட்ட அந்த ரெசிடென்சியல் கம்யூனிட்டி மூன்று மாடிகளும், கிட்டத்தட்ட 543 ஃப்ளாட்களையும் உள்ளடக்கியது. A,B,B1,C இந்த நான்கு பிரிவுகளும் ஒரு படுக்கையறை கொண்ட ஃப்ளாட்களைக் கொண்டவை. E,H,J பிரிவுகள் இரண்டு படுக்கையறை ஃப்ளாட்களை உள்ளடக்கியவை.



அதில் E பிரிவில் தான் பிரக்ருதியின் தமக்கையும் அவளது கணவன் பிருத்வியும் பிரக்யாவுடன் வசித்து வருகின்றனர். கருவுற்ற தமக்கையைக் கவனித்துக்கொள்ள அமெரிக்கா வந்த பிரக்ருதியும் கடந்த இரண்டு வார காலமாக அதே ஃப்ளாட்டில் தான் வசிக்கிறாள்.

ஆனால் இது வரை ஒருமுறை கூட கே.கேவை அவள் பார்த்ததில்லை. இத்தனைக்கும் சாக்சனி அப்பார்ட்மெண்ட்சின் உடற்பயிற்சிக்கூடத்தை தவறாது பயன்படுத்துபவள் அவள்.

யோசித்தபடியே டாக்சியில் வந்து அப்பார்ட்மெண்டின் முன்னே இறங்கியவள் டாக்சி டிரைவரின் உதவியால் எப்படியோ கம்யூனிட்டியின் மின்தூக்கி வரை அவனை அழைத்து வந்துவிட்டாள்.

E15வது ஃப்ளாட் அமைந்திருக்கும் மூன்றாவது தளம் (இந்தியாவைப் பொறுத்த வரை அது இரண்டாம் தளம். தரைத்தளத்தை அமெரிக்கர்கள் முதல் தளம் என்பார்கள்) வந்ததும் மெதுவாய் அவனைத் தோளில் சாய்த்து முதுகில் கைகொடுத்து வெளியே அழைத்து வந்தாள்.

அவனது ஃப்ளாட்டான E15 வந்துவிட அனிச்சையாக அவளது கண்கள் அவர்களின் ஃப்ளாட்டான E13 மீது படிந்து மீண்டது. கதவு பூட்டப்பட்டிருந்தது.

யாரும் வரும் முன்னர் இவனை ஃப்ளாட்டில் விட்டுவிடுவோம் என்று வேகமாகச் சென்றவள் கீபேட் லாக்கில் பார்டெண்டர் கூறிய பாஸ்வேர்டை போட்டதும் கதவு திறக்க சிரமத்துடன் அவனை இழுத்துக்கொண்டு ஃப்ளாட்டின் லிவிங் ரூமுக்குள் நுழைந்தாள்.

தொப்பென்று அவனை அங்கிருந்த சோபா மீது தள்ளிவிட்டாள். கே.கே நிலை தடுமாறி விழுந்தவன் “ஏய் நீரவ்...” என்று குழறலாய் பேசவும்

“மூக்கு முட்ட குடிச்சிட்டு உளற வேற செய்யுறான்... இந்த இடியட்டை சைட் அடிச்சதுக்கு நான் வெக்கப்படுறேன், வேதனைப்படுறேன்” என்று பற்களைக் கடித்தபடி கூறியவள் சரி கிளம்பலாம் என்று திரும்பிய போது கே.கேவிற்கு வியர்த்து வழிய ஆரம்பித்தது.

பிரக்ருதி பதற்றத்தோடு அவனை நெருங்கி நெற்றியில் கை வைத்துப் பார்க்க அவன் உடல் அனலாக கொதித்தது. போதைக்காக அருந்தும் பானங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்குமா என்ன?

யோசனையோடு மொபைலில் கூகுளிடம் அதே கேள்வியைக் கேட்க அதுவோ ‘Effects of Bad acid trip’ என்றது. அதை படித்ததும் பிரக்ருதி கே.கேவை அற்பப்புழுவைப் போல பார்த்தாளே ஒரு பார்வை!

“அடச்சீ! போயும் போயும் எல்.எஸ்.டி அடிக்டா இவன்? அடியே கிருதி, உன் பேரை கிறுக்கினு மாத்திக்க... இவனை மாதிரி ஒருத்தனை போய் சைட் அடிச்சிருக்க பாரு, உனக்கு இந்தப் பேர் தான் சூட்டபிளா இருக்கும்” என்று தன்னைத் தானே நொந்துகொண்டவள் வியர்த்து வழிந்து கை கால்களை ஆட்டியபடி கிடந்தவனின் சட்டை பட்டன்களை காற்றுக்காக கழற்றி விட்டாள்.

பின்னர் கைகளில் இல்லாத தூசியைத் தட்டித் துடைத்தவள் தங்களின் ஃப்ளாட்டுக்கு கிளம்பலாம் என்று வாயிலை நோக்கி வந்த போது பிரக்யாவிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது. அவள் எப்போதோ வீடு திரும்பியிருந்தாள்.

“இதோ வந்துட்டே இருக்குறேன் பிரகி” என்றவளிடம் பிரக்யா அணுகுண்டைத் தூக்கிப் போட்டாள்.

“அண்ணா வீட்டுக்கு வந்துட்டான்டி... அவன் வந்து பத்து நிமிசம் ஆகுது... வந்ததும் நீ எங்கனு கேட்டான்... நான் வேற வழியில்லாம நீ உடம்பு சரியில்லாம தூங்குறனு சொல்லிட்டேன்”

“அடப்பாவி! ஏன்டி பொய் சொன்ன?”

“நீ டைம்கு வந்திருந்தா நான் ஏன் பொய் சொல்லப் போறேன் எருமை?”

“பப்ல சின்னதா பிரச்சனை” என்றவள் கே.கேவுக்கு நடந்ததை விவரித்தாள்.

“எல்லாம் ஓ.கே கிருதி... ஆனா இப்ப நீ தானே பிரச்சனைல மாட்டிருக்க... அண்ணாக்கு மட்டும் நீ பக்கத்து ஃப்ளாட்ல இருக்குறது தெரிஞ்சா அவ்ளோ தான்” என்று பதறினாள் பிரக்யா.

“இப்ப நான் என்ன செய்யுறதுடி?”

“ஐ ஹேவ் அன் ஐடியா”

பிரக்யா தனது யோசனையைக் கூறவும் பிரக்ருதி பொங்க ஆரம்பித்தாள்.

“என்னடி லூசுத்தனமா பேசிக்கிட்டிருக்க? இதுல்லாம் சரியா வராது... இவன் போதையில இருக்கான் தெய்வமே”

“அவனை ஏதாச்சும் ஒரு ரூம்ல போட்டு லாக் பண்ணிடு... நான் மானிங் வாக் போக எழுந்திருக்கிறப்ப உன்னை வீட்டுக்குள்ள அண்ணாக்குத் தெரியாம அழைச்சிட்டுப் போயிடுறேன்”

“சப்போஸ் மாமா கொஞ்சநேரம் கழிச்சு என்னைப் பாக்குறதுக்கு நம்ம ரூமுக்கு வந்தா என்ன பண்ணுவ பிரகி?”

“அண்ணா வரமாட்டான்... நான் அவன் கிட்ட உனக்கு கோவிட் சிம்டம்ஸ் இருக்குனு சொல்லிட்டேன்”

“அடியே!”

“பதறாத பதறாத! வேற வழியில்ல கிருதி... அப்பிடி சொன்னதால தான் அண்ணா அண்ணிக்கு எதுவும் ஆகிடக்கூடாதுனு ரூம் பக்கம் வரல... இல்லைனா நீ மாட்டிருப்ப”

“என்னமோ போ! என் அப்பா பாட்டி ஒரு பழமொழி சொல்லும், கன்னி வாக்கு கழுதை வாக்காம்... நீ சொன்னது பழிச்சு எனக்கு மட்டும் கோவிட் வந்துச்சு, நீ செத்த பிரகி”



“உனக்கு கோவிட் வந்தா நான் ஏன்டி சாகப்போறேன்? நீ...”

“ஆத்தா! நீ உன் திருவாயை மூடு... இது வரைக்கும் சொன்னதே போதும்... மாமா தூங்குனதும் மெதுவா டோரை ஓப்பன் பண்ணி விடு பிரகி”

“வாய்ப்பே இல்ல... அண்ணிக்கு நைட் தூக்கம் வரமாட்டேங்குதுனு அண்ணாவும் அவங்களுக்குத் துணையா முழிச்சிட்டிருக்குறான்டி”

“ஐயோ! நவி இன்னுமா தூங்கல? அவளுக்காக தான் உங்கண்ணன் போடுற ரூல்சை நான் பல்லை கடிச்சிட்டு ஃபாலோ பண்ணுறேன்... என் தலையெழுத்துல இன்னைக்கு நைட் இந்த ட்ரக் பார்ட்டியோட வீட்டுல தான் தங்கணும்னு இருந்தா நான் என்ன பண்ண முடியும்? தங்கித் தொலையுறேன்... ஆனா ஷார்ப்பா ஃபைவ் ஓ க்ளாக் நான் வெளிய வந்துடுவேன்”

“சரிடி... நான் சொன்ன மாதிரி அவனை ஏதாவது ரூம்ல போட்டு பூட்டி வை... உனக்குத் தூக்கம் வரலைனா வாட்சப் பண்ணு... நம்ம விடிய விடிய பேசிட்டே இருப்போம்”

“விடிய விடிய கடலை போடுறதுக்கு நீ என்ன என்னோட லவ்வரா? ஒழுங்கா தூங்கு... காத்தால அஞ்சு மணிக்கு முழிச்சு உங்கண்ணனோட வேல்கனோ பார்வையில இருந்து என்னைக் காப்பாத்து”

“ஓ.கே கிருதி... குட் நைட்”

பிரக்யா அழைப்பைத் துண்டித்ததும் “உஃப்” என்று அலுப்பாய் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள் பிரக்ருதி.

சோபாவில் சரிந்து கிடந்தவனோ “நீரவ் சாரிடா...” என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான்.

ஏனோ பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தவள், தான் ஒருத்தி இருக்கும் பிரக்ஞை கூட இல்லாமல் புலம்புபவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளது கண்கள் ஃப்ளாட்டின் உள் அலங்காரத்தை நோட்டமிட ஆரம்பித்தது. ஒரு பார்டெண்டரால் இப்படிப்பட்ட ஃப்ளாட்டில் வாடகை கொடுத்து இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

அப்போது அவளது பார்வையில் கே.கேவும் ஷ்ரவனும் தோளோடு அணைத்தபடி நிற்கும் புகைப்படம் பட்டது.

“ஓ! ரெண்டு பேரும் சேர்ந்து இங்க இருக்காங்க போல”

இருவரும் தமிழர்கள். தன் மாமாவைப் போல மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களாக இருக்கலாம் என ஊகித்துக் கொண்டாள்.

திடீரென அந்த கே.கே எழுந்து அமர்ந்தான். கண்கள் அரையும் குறையுமாக திறந்தும் மூடியும் இருக்க சோபாவில் கைகளை ஓங்கி குத்தினான் அவன்.

“ஐ ஹேட் ஹிம் நீரவ்... அண்ட் ஐ ஹேட் ஹெர் டூ... அவளை மட்டுமில்ல ஒட்டுமொத்த பொண்ணுங்க இனத்தையே நான் வெறுக்குறேன்”

ஆவேசமாக கத்தியவனின் பார்வையில் படாமல் மெதுவாக நகர்ந்து சோபாவின் பின்னே ஒளிந்து கொண்டாள் பிரக்ருதி.

அவனோ மொத்த ஆவேசமும் வடிந்து மீண்டும் சோபாவில் பொத்தென்று விழுந்தான். விழுந்தவன் உறங்கியும் போய்விட்டான்.

சோபாவின் பின்னே ஒளிந்த பிரக்ருதியும் சிறிது நேரத்தில் கண்கள் சொக்கவும் அப்படியே அமர்ந்து தூங்கிவிட்டாள்.

அதே நேரம் நார்த் ஈஸ்ட் டல்லாஸ் பேட்ரோலிடம் மாட்டிக்கொண்ட ஷ்ரவன் காவல்துறை அதிகாரியிடம் விளக்கமளித்துக் கொண்டிருந்தான்.



“சார் ஐ அம் நாட் அ ஸ்டாக்கர் (stalker)... தட் கேர்ள் இஸ் மை ஃப்ரெண்ட்... ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்”

“தென் டெல் மீ, ஒய் டிட் யூ ஃபாலோ ஹெர் அட் திஸ் டைம்? யூ கேன் சிம்ப்ளி ஸ்பீக் வித் கேர் த்ரூ அ கால்”

ஷ்ரவன் தன்னை ஹைவே பேட்ரோல் அதிகாரியிடம் மாட்டிவிட்ட பிரக்யாவை அதோடு ஆயிரத்தோராவது முறையாகச் சபித்தான்.

“அடியே ஸ்பெக்ஸ் போட்ட சகுனி! நீ எப்பவாச்சும் என் கண்ணுல மாட்டுவல்ல, அப்ப இருக்கு உனக்கு”

கறுவியவன் என்னென்னவோ காரணங்களை அடுக்கவும் காவல்துறை அதிகாரி அவனிடம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் தற்போது பெண்கள் அளிக்கும் சிறு புகாரை கூட தங்கள் உயரதிகாரி கவனமாகக் கையாளச் சொல்லியுள்ளார் என்று கூறினார்.

ஷ்ரவனும் வேறு வழியின்றி பப்பில் நடந்ததை கூறிவிட்டு “ஐ வாண்ட் டு அப்ரோச் தட் கேர்ள்... தட்ஸ் ஒய் ஐ ஃபாலோட் ஹெர்... ஐ டோண்ட் ஹேவ் எனி ஈவில் மோட்டிவ் சார்” என்கவும் நமட்டுச்சிரிப்புடன் அவனை தன்னுடன் பேட்ரோல் ஸ்டேஷனுக்கு வரும்படி கட்டளையிட்டார் அவர்.

இது குறித்து உயரதிகாரியிடம் நேரில் விளக்கமளித்துவிட்டு செல்லலாம் என்று அவர் கூறவும் ஷ்ரவனும் அவரோடு கிளம்பினான்.

அவனை பேட்ரோல் அதிகாரியிடம் மாட்டிவிட்ட பிரக்யாவோ நகம் கடித்தபடி ஹாரியோடு போனில் உரையாடிக் கொண்டிருந்தாள்.

“ஓ.கே... நீ இண்டர்ன்ஷிப்ல ஜாயின் பண்ணப்போற கம்பெனி டீடெய்ல் அனுப்பு டூட்... நானும் ட்ரை பண்ணுறேன்”

“ஷ்யூர் பிரகி... பை த வே, நீ பேட்ரோல்ல மாட்டிவிட்டியே ஒரு பையன், அவனைப் பத்தி எனி அப்டேட்?”

“இப்ப வரைக்கும் பேட்ரோல் ஸ்டேசன்ல இருந்து எனக்கு எந்த அப்டேட்டும் வரல... அவனை மாதிரி ஸ்டாக்கருக்கு இப்பிடி தான் பாடம் கத்துக்குடுக்கணும் ஹாரி”

“கம் ஆன் பிரகி, பின்ன எப்பிடி தான் பசங்க உன்னை மாதிரி இன்ட்ரோவெர்ட் கேர்ள்ஸை அப்ரோச் பண்ணுறது? ஐ திங்க், ஹீ இஸ் சோ ஹேண்ட்சம் அண்ட் பெர்ஃபெக்ட் மேட்ச் ஃபார் யூ”

“டோன்ட் ப்ளாப்பர் ஹாரி... எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல”

“ஜஸ்ட் கிட்டிங் பிரகி... டுமாரோ மானிங் வீ வில் கோ தேர்... நமக்கு லக் இருந்தா செலக்ட் ஆவோம்”

“அதிர்ஷ்டத்தை நம்பாத டூட்... நம்ம க்ரேடும் ஹார்ட் வொர்க்கும் நமக்கான இடத்தைக் குடுக்கும்”

“கண்டிப்பா... உன் கிட்ட பேசுனாலே ஒரு பாசிட்டி வைப் வருது... தேங்க்ஸ் பிரகி... டுமாரோ பாக்கலாம்... குட் நைட்”

“குட் நைட் ஹாரி”

அழைப்பைத் துண்டித்தவள் இந்நேரம் ஷ்ரவன் காவல் நிலையத்தில் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருப்பான் என்றெண்ணியவாறே உறங்க ஆயத்தமானாள்.

அவளுக்கு உறக்கத்தில் நேரம் நகர நார்த் ஈஸ்ட் பேட்ரோல் ஸ்டேசனிலிருந்து பைசல் செய்துவிட்டு கிளம்பிய ஷ்ரவனோ திடீரென ஒரு அழைப்பு வரவும்

“ஆர்லிங்டன்ல தானே இருக்கீங்க... இதோ வர்றேன்... கே.கே எதுக்கு வரணும்? அவனுக்கு இப்ப நிம்மதி தேவை... அதை ஸ்பாயில் பண்ணிடாதிங்க... நானே வர்றேன்” என்றபடி தனது காரை ஆர்லிங்டன் நகரை நோக்கி செலுத்தினான்.

E15 ஃப்ளாட்டிலோ அமர்ந்து தூங்கியதில் பிரக்ருதியின் முதுகு வலி கண்டுவிடவே நெளிந்தபடி எழுந்தவள் நெட்டி முறித்தாள்.

அப்போது சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த கே.கே உறக்கத்தில் சரிந்து விழவே அவனது தலை மர டீபாயில் இடிக்க போக கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது தலைக்கும் டீபாய்கும் நடுவே தனது கையை வைத்து அடிபடாவண்ணம் தடுத்துவிட்டாள் பிரக்ருதி.

அவனோ உணர்வின்றி தலை தொய்ய உறங்கவும் மெதுவாக அவனது தலையை சோபாவில் எடுத்து வைத்தவள் சோர்வாக அவனருகே அமர உறக்கத்தின் பிடியிலிருந்தவன் தலையை உயர்த்தி அவள் மடியில் வைத்துக்கொண்டான்.

அதில் பிரக்ருதி அதிர அவனோ இடையோடு அவளை அணைத்துக்கொண்டு “ஐ மிஸ் யூம்மா” என்றான். பிரக்ருதி அவனது கரத்தை விலக்க பகீரத பிரயத்தனம் செய்தும் ஒரு இன்ச் அளவு கூட அவளால் நகர்த்தவும் முடியவில்லை. அவனிடமிருந்து நகரவும் முடியவில்லை.

“கடவுளே! இவன் மேல இரக்கப்பட்டு காப்பாத்துனதுக்கு என் நிலமைய இப்பிடி கவலைக்கிடம் ஆக்கிட்டியே... மலைய கூட புரட்டிடலாம் போல... இவன் கையை நகர்த்த முடியல” என்று மனதிற்குள் புலம்பினாள்.

பின்னர் இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு “ஜெய் பஜ்ரங்பலி” என்றவாறு மூச்சை இழுத்துப் பிடித்தபடி அவனது கையை நகர்த்த முயல அவனோ இன்னும் இறுக்கமாக அவளது இடையை அணைத்துக்கொண்டான்.

பிரக்ருதி கடுப்புடன் அவன் தலையில் குட்டலாமா என்று எண்ணியவள் பின்னர் தூங்கும் போது அவனது முகத்தில் தெரிந்த சோகத்தில் சற்று அமைதியானாள்.

“நீரவ்னு யார் பேரையோ சொல்லி புலம்புனான்... இப்ப அம்மாவ மிஸ் பண்ணுறேன்னு உளறுறான்... பாவம் இவன்... நாய் பூனையை நம்ம மடியில வச்சு கொஞ்சுறோம்ல அதே மாதிரி தான் இதுவும்” என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

“க்கும்! நாய் பூனைய மடியில போட்டுக்குறதும் இந்த ஆறடி பனைமரத்தை மடியில போட்டுக்குறதும் ஒன்னா உனக்கு?” அரை உறக்கத்தில் அவளுக்குள் இருந்த மனசாட்சி விழித்துக்கொண்டு கேலி செய்ய

“சேச்சே! சத்தியமா ஒன்னு இல்ல... அது ஜீவகாருண்யம்... இது மனிதநேயம்... போதுமா?” என்று மனசாட்சியை ஆப் செய்தவள் அவனை எழுப்ப முடியாது என்பதை உணர்ந்து சோபாவில் சாய்ந்து தூங்க தொடங்கினாள்.



இரவு வேகமாக முடிந்து விடியல் வந்தே விட்டது. எல்.எஸ்.டி ட்ரிப்பின் போதை குறைந்து மெதுவாய் கண் விழித்தான் கே.கே.

எப்போதும் தலையணையில் உறங்குபவன் அன்று ஏதோ வித்தியாசமாக உணரவும் தலையை உயர்த்தி பார்க்க அவனை மடியில் தாங்கியபடி சோபாவில் சாய்ந்து மெல்லிய குறட்டையுடன் உறங்கி கொண்டிருந்தாள் பிரக்ருதி.

ஒரு கணம் அவனுக்குத் தன் கண்ணால் கண்ட காட்சியையே நம்ப முடியவில்லை. பின்னர் பதறியடித்துக்கொண்டு எழுந்தவன் அவளை நன்றாக உற்றுப் பார்த்தான்.

இவள் நேற்றிரவு பப்பில் அரட்டை அடித்த தமிழ் பெண் அல்லவா! முதலில் அவள் பேச்சை ரசித்து சிரித்தவன் பின்னர் திருமணம் செய்தால் பணக்காரனை தான் திருமணம் செய்வேன் என்று அவள் கூறவும் முகம் மாறி அறிமுகமற்றவளை வெறுக்கத் துவங்கியது அவன் மனம்.

இவள் எப்படி என்னுடன் என் வீட்டில்? அவன் மூளை பரபரவென வேலை செய்தது. தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டவன் தனது சட்டையின் பட்டன்கள் கழண்டிருக்கவும் பிரக்ருதியின் முந்தைய நாளிரவு பேச்சையும் தனது நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து தப்பான முடிவுக்கு மிகச் சரியாக வந்தான்.

அடுத்த நொடியே “ஏய்! எழுந்திரி” என்று பிரக்ருதியை உலுக்கியவன் அவள் பதறி கண் விழிக்கவும் அவளை எரிப்பது போல முறைத்தான்.

“ஓ! விடிஞ்சிடுச்சா?” என்றபடி கைகளை உயரே தூக்கி சோம்பல் முறித்து கொட்டாவி விட்டவளை, வந்த கோபத்திற்கு மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசிவிடலாமா என்று கூட கொடூரமாக யோசித்தான் அவன்.

“ஹலோ! இது என் வீடு... இங்க நீ என்ன பண்ணுற?”

பிரக்ருதி மீண்டும் சோம்பல் முறித்தபடி “குட் கொஸ்டீன்... பட் ரொம்ப லேட்டா கேக்குற நீ... உன்னை பப்ல இருந்து அழைச்சிட்டு சாரி சாரி, தூக்கிட்டு வந்தது நான் தான்... ஆக்ஸ்வலி நீ நேத்து எல்.எஸ்.டி கன்சூம் பண்ணிட்டு போதையில தடுமாறுன... அதை யூஸ் பண்ணி...” என அவள் முடிக்கும் முன்னரே கே.கேவின் கரம் அவளது கன்னத்தில் பளாரென இறங்கியது.

பிரக்ருதி நிலை தடுமாறி கீழே விழுந்தவள் கன்னத்தைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். எழுந்தவள் அவனை கொன்று விடுமளவு கோபத்தோடு உறுத்து விழிக்க

“என்னடி பார்வை? கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம என்னோட நிலமைய யூஸ் பண்ணிக்கிட்டு இப்பிடி கேவலமா நடந்த உனக்குக் கோவமே வரக்கூடாது” என்றான் அவனது கழண்டிருந்த சட்டையை உதறிக் காட்டியபடி.

பிரக்ருதி அவன் கூறிய புகாரில் வெகுண்டெழுந்தாள். ஆனால் அவள் பேசும் முன்னரே முந்திக்கொண்ட கே.கே அவள் மீது புகாரை அடுக்கத் தொடங்கினான்.

அவனது நிலமையைப் பயன்படுத்திக்கொண்டு உதவுவது போல அவனது வீட்டுக்கு அத்துமீறி நுழைந்து தானும் அவனும் நெருக்கமாக இருந்தது போன்று நாடகத்தை அரங்கேற்றியதாக அவன் கூறவும் பிரக்ருதிக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை.

இது தான் உதவியவர் முதுகில் எட்டி உதைப்பது போல!

“நீ கோல்ட்-டிக்கர் மாதிரி பேசுறதை நான் கேட்டேன்... எல்லா பொண்ணுங்களும் ஒன்னு தான்னு இப்பிடி கேவலமா நடந்து நீ ப்ரூவ் பண்ணிட்ட... ஆனா நான் ஒன்னும் ஏமாளி இல்ல... நீ பண்ணுன இந்த ட்ராமாவ நம்பி உன்னை லைஃப் பார்ட்னரா ஏத்துப்பேன்னு கனவு கூட காணாத... கெட் லாஸ்ட்” என்று உறுமினான் அவன்.

பிரக்ருதியோ ‘நீ யாருடா கோமாளி’ என்ற ரீதியில் அவனைப் பார்த்துவிட்டு

“ஹலோ! நான் பேசுனதை ஒட்டுக்கேட்ட நீ கிளியரா ஒட்டுக் கேக்கலையா? நான் பணக்காரனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னேன்... உன்னை மாதிரி ஒன்னுமில்லாதவனை மயக்கி எனக்கு என்ன கிடைக்கப் போகுது?” என்று அவனைக் காயப்படுத்தும் நோக்கத்தில் கத்திவிட்டாள்.

கே.கே கோபம் குறையாமல் அவளது கையைப் பற்றியவன் “அப்புறம் ஒன்னுமில்லாதவன் வீட்டுல இன்னும் ஏன் நிக்குற?” என்று அவளை தரதரவென இழுத்துச் சென்றான்.



“ஏய்! மரியாதையா கையை விடு... என் கையை விட்டுப் பாரு... அப்புறம் தெரியும் நான் யாருனு” என்று மிரட்டியவாறு அவனது இழுப்புக்கு நடந்தவள் கதவைத் திறந்து அவன் வெளியே தள்ளவும் கீழே விழுந்தாள்.

விழுந்தவளின் முன்னே ஆறு ஜோடி கால்கள் நிற்கவும் மெதுவாய் தலையை நிமிர்த்தினாள்.

அங்கே அவளது தமக்கை பிரணதியோடு நின்று கொண்டிருந்தான் பிரகதியின் மாமாவும் பிரக்யாவின் அண்ணனுமான பிருத்வி. அவன் கண்களில் நூறு சதவிகிதம் அதிர்ச்சி என்றால், பிரணதியும் பிரக்யாவும் கலங்கிப் போய் நின்றனர்.

“மாமா!”

எச்சிலை விழுங்கினாள் பிரக்ருதி.

அவர்களை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் கதவை அடைத்துக்கொண்டான் கே.கே.


Comments