அலைவரிசை 36

Image
  அலைவரிசை 36 “இனிப்பான பொய்ய விட கசப்பான உண்மை பெஸ்ட்னு சொல்லுவாங்க... உண்மைய சொல்லுறதால உங்களுக்கு உண்டாகுற பாதிப்பு ரொம்ப சின்னது தான்... ஆனா அந்த சின்ன பாதிப்பை ஃபேஸ் பண்ண பயந்துட்டு பொய் சொல்லி தப்பிச்சோம்னு வைங்க, ஃபியூச்சர்ல ரொம்ப அவமானப்படுவோம்... பொய் சொல்லி ஒரு உறவை நீங்க காப்பாத்தணும்னு நினைச்சிங்கனா அந்த உறவு தற்காலிகமானதா தான் இருக்கும்ங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்கோங்க... அதே நேரம் ஒருத்தர்   உங்க கிட்ட உண்மைய சொல்லி தன்னோட தப்பை ஒத்துக்கிட்டா அதை எந்தக் காரணத்துக்காகவும் ஃபியூச்சர்ல சொல்லிக் காட்டி திட்டாதிங்க... அப்புறம் இனி ஜென்மத்துக்கும் உங்க கிட்ட உண்மையா இருக்கணும்ங்கிற எண்ணம் அவங்களுக்கு வராது”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்ட், ஷெனாய் நகர்... பால்கனியைத் தொட்டுக் கொண்டிருந்த அலங்கார பாக்குமரங்களைப் பார்த்தபடி காபியை அருந்திக் கொண்டிருந்தாள் பிரக்ருதி. அந்த 2BHK ஃப்ளாட்டின் சமையலறையில் பிரக்யா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்புகளை விவாதித்துக் கொண்டிர

அலைவரிசை 3

 



“நீ பணக்காரனா இருந்தா உனக்கு எல்லா சந்தோசமும் கிடைக்கும்னு யாராவது சொன்னா தயவு பண்ணி நம்பிடாதிங்க. ஏன்னா சந்தோசம்ங்கிறது இதுக்குலாம் அப்பாற்பட்டது. பணத்தால வசதியான பங்களாவை வாங்கலாம். ஆனா அதுல நிம்மதியா சந்தோசமா வாழுறது சம்பந்தப்பட்ட மனுசனோட மனநிலையை பொறுத்தது. உங்களோட மனசுல போராட்டம் இருக்குறப்ப உங்களால எப்பேர்ப்பட்ட ஆடம்பரத்தையும் நிம்மதியா அனுபவிக்க முடியாது.

     -கே.கேவின் மனதின் குரல்

விசாரணை கைதியைப் போல நின்று கொண்டிருந்தாள் பிரக்ருதி. பிரணவியும் பிரக்யாவும் அவளைப் பரிதாபமாக பார்த்தவாறு நின்று கொண்டிருந்தனர்.



அவர்கள் மூவரையும் முறைத்தபடி சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் பிருத்வி.

“சோ நேத்து நீயும் பிரக்யாவும் ஹாரி வீட்டுக்கு இண்டர்ன்ஷிப் பத்தி கேக்க போறேன்னு சொல்லிட்டு பப்புக்குப் போயிருக்கீங்க?”

ஆமாம் என்பது போல பிரக்ருதியும் பிரக்யாவும் தலையசைத்தனர்.



“அங்க மீட் பண்ணுனவனுக்கு உதவி செய்யுறதுக்காக நீ போயிருக்க... ஆனா அவன் உன்னைத் தப்பா பேசிட்டான்... அப்பிடி தானே கிருதி?”

“ஆமா மாமா”

அடுத்து அவனது பார்வை பிரணவியிடம் சென்று நிலைத்தது.

“இவங்க பார்ட்டிக்குப் போறாங்கனு உனக்கு முன்னாடியே தெரியும்... அப்பிடி தானே நவி?”

பிரணவியின் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

உடனே சோபாவிலிருந்து எழுந்தான் பிருத்வி. அவனது உடல்மொழியில் அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“என் வார்த்தைக்கு இந்த வீட்டுல எந்தளவுக்கு மரியாதை இருக்குனு இப்ப தெரியுது நவி... இவங்க ரெண்டு பேரும் தான் சின்னப்பசங்க... உனக்கு எங்க போச்சு அறிவு? டல்லாஸோட க்ரைம் ரேட் என்னனு தெரியுமா? அதுவும் பொண்ணுங்களுக்கு எதிரா நடக்குற க்ரைம் ஏராளம்... இது தெரிஞ்சும் நீ ஏன் இவங்களை பார்ட்டிக்குப் போக அலோ பண்ணுன நவி?”

பிரணவி பதில் கூறவில்லை. ஆனால் கணவனின் சூடான வார்த்தைகள் அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டன.

உடனே பிரக்யா பதறி அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

“அண்ணி நீங்க இப்ப அழக்கூடாது”

பிரக்ருதி பிருத்வியைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள்.

“ஒரு நாள் பார்ட்டிக்குப் போனதுக்கு ஏன் மாமா இவ்ளோ ஓவர் ரியாக்ட் பண்ணுறிங்க? அந்தப் பக்கத்து ஃப்ளாட்காரன் சரியான பைத்தியம்... அவன் ஒரு ட்ரக் அடிக்ட்... நான்னு இல்ல, என் இடத்துல யார் இருந்து உதவி பண்ணியிருந்தாலும் அவன் இப்பிடி தான் முட்டாள்தனமா நடந்திருப்பான்... யாரோ ஒரு மூனாவது மனுசனோட கோவத்துக்காக நீங்க எங்களை ஹர்ட் பண்ணுறிங்க.. திஸ் இஸ் டூ மச் மாமா”

“எது டூ மச்? உன் அப்பா எதுக்கு உன்னை இங்க அனுப்பி வச்சார்னு மறந்துட்டியா? அம்மா இல்லாத குறை என் பொண்டாட்டிக்குத் தெரியக்கூடாதுனு உன்னை அனுப்பி வச்சார்... நீ என்னடானு அவளுக்கு உதவியா இருக்காம பார்ட்டி பப்னு ஆட்டம் போடுற... அதை கூட நான் மன்னிச்சிடுவேன்... நீயே சொல்லுறல்ல, அவன் ஒரு ட்ரக் அடிக்ட்னு... அவன் வீட்டுல போய் ஒரு நைட் முழுக்க தங்கியிருக்க... இது தப்புனு உனக்குத் தோணலையா?”

பிரக்ருதிக்கு எரிச்சல் மண்டியது. அவள் செய்தது தவறு தான். அறிமுகமற்ற ஆண்மகனுடன் ஒரே வீட்டில் ஓரிரவை கழிப்பது அவள் வளர்ந்த விதத்துக்கு ஒத்து வராத செயல். ஆனால் அப்படி ஒரு தர்மசங்கடம் அவளுக்கு நேர்வதற்கு யார் காரணம்? இவர் தானே!

“தப்பு தான் மாமா... ஆனா அதுக்கு நீங்க தான் காரணம்... எப்ப பாத்தாலும் அதை செய்யாத இதை செய்யாத, அங்க போகாத இங்க போகாதனு ஆயிரம் ரூல்ஸ், ஐநூறு கண்டிசன்ஸ்... எங்கப்பாவோட ஜெராக்ஸ் காப்பியா என்னை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டே இருந்திங்க... நாட் ஒன்லி மீ, இவங்களையும் நீங்க உங்க கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கத் தான் ஆசைப்படுறிங்க...

அளவுக்கதிகமான கட்டுப்பாடு தான், அதை மீறுறதுக்கும் காரணமா இருக்கும் மாமா... லைஃப்ல எல்லாமே ட்ரையல் அண்ட் எரர் மெத்தட்ல கத்துக்கிட்டா மட்டும் தான் சரி எது தப்பு எதுனு புரியுமே தவிர இதை செய்யாத அதை செய்யாதனு கட்டுப்படுத்துனா, தப்புனு நீங்க சொல்லுறதை தான் செய்யத் தோணும்... நாங்க பார்ட்டிக்குப் போனதுக்கு எங்களை விட்டுட்டு அக்கா கிட்ட கத்துவீங்கனு தான், நான் நைட் அவன் வீட்டுல தங்குனேன்... இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்”

பிரக்ருதி விரல் நீட்டி குற்றம் சாட்டவும் பிருத்வி செய்வதறியாது நின்றான். மனைவியும் சரி, தங்கையும் சரி அவனது வார்த்தைகளை மீறியதில்லை. இது நாள் பிரக்ருதியும் அப்படி தான் இருந்தாள். ஆனால் இன்று ஏன் இப்படி தன் மீது குற்றம் சாட்டுகிறாள்?

அவனது முகம் யோசனையில் கலங்க பிரணவியால் கணவன் கலங்கி நிற்பதை பார்க்க முடியவில்லை. உடனே தங்கை மீது தான் கோபம் வந்தது அவளுக்கு.

பிரக்ருதியின் கையைப் பற்றி தன் பக்கம் திருப்பியவள்

“என் புருசன் கிட்ட இந்த மாதிரி கத்துறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? அவர் நம்ம நல்லதுக்குத் தானே சொன்னார்... நான் தான் புத்தி கெட்டுப் போய் உங்களை பார்ட்டிக்கு அனுப்பிட்டேன்... அது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்... உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகிடுமோனு பயந்து தான் அவர் இப்பிடி ரூல்ஸ் போடுறார் கிருதி... புரிஞ்சிக்காம பேசாத... ஒழுங்கா பிருத்வி கிட்ட மன்னிப்பு கேளு”

பிரக்ருதி தமக்கையின் கையை உதறியவள் “நான் எதுக்கு மன்னிப்பு கேக்கணும்? இவரோட சோ கால்ட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனால நீ வேலைக்குப் போகாம வீட்டுலயே முடங்கிட்ட... அவர் சீனியர் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் இன்ஜீனியர் ஆனதுக்குப் பார்ட்டி வச்சாரே, உன்னையும் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு அனுப்பியிருந்தா நீயும் இந்நேரம் புரொமோட் ஆகிருப்பல்ல... ஆனா இவரோட மேள் சாவனிஷ்ட் மெண்டாலிட்டி பொண்ணுங்கனாலே வீட்டுல சமையல் பண்ணி பாத்திரம் கழுவி, குழந்தை பெத்து அதை வளக்குற மிஷினா மட்டும் இருந்தா போதும்னு உன்னை கட்டாயப்படுத்துனதால இன்னைக்கு உனக்குனு ஒரு கெரியர் கூட இல்லாம போயிடுச்சு...

எங்க பாதுகாப்பை பத்தி இவ்ளோ பயப்படுறாரே, சம்பந்தப்பட்ட நாங்க எங்களால மேனேஜ் பண்ண முடியலனா ஏன் பப்புக்குப் போகப்போறோம்? உன் புருசனுக்கு எங்க பாதுகாப்பை நினைச்சுலாம் பயமில்ல... பப்புக்கு பார்ட்டிக்குப் போனா பொண்ணுங்க கெட்டுப்போயிடுவாங்கங்கிற அசட்டுத்தனமான எண்ணம்... இவரும் தான் மாசாமாசம் பார்ட்டி அட்டெண்ட் பண்ணுறார்... ஐ அம் அ சோஷியல் ட்ரிங்கர்னு மார் தட்டிக்கிறார்... இவர் என்ன கெட்டா போயிட்டார்? பார்ட்டிக்குப் போக தெரிஞ்ச எங்களுக்கு அங்க சுதாரிப்பா இருக்கணும்ங்கிறதும் ரொம்ப நல்லா தெரியும் நவிக்கா... என்னால யார் கிட்டவும் மன்னிப்பு கேக்க முடியாது” என்றாள்.

பிரக்யா இதற்கு மேல் பேசாதே என கண்களால் காட்டிய சைகைகள் அனைத்தும் வீணானது. பிரக்ருதி கடந்த இரு வார காலமாக பிருத்வி போட்ட கட்டுப்பாடுகளால் உண்டான கடுப்பை முழுவதுமாக கொட்டித் தீர்த்துவிட்டாள்.

பிரணவி தங்கையை முறைத்தவள் “போதும்டி! உன்னை எனக்குத் துணையா இங்க கூப்பிட்டது என்னோட தப்பு” என்றாள்.

பிரக்ருதியோ “நீ கூப்பிட்டேனு என்னோட ஆர்.ஜே இண்டர்வியூவை கூட அட்டென்ட் பண்ணாம இங்க ஓடி வந்தேன்ல, அது என்னோட தப்பு... ஏய் பிரகி, உன் ஃப்ரெண்ட் ஹாரிக்கு தெரிஞ்ச ட்ராவல்ஸ் இருக்குனு சொன்னல்ல, சீக்கிரமா எனக்கு இந்தியா ரிட்டர்ன் ஆகுறதுக்கு டிக்கெட் புக் பண்ண சொல்லுடி... நான் அவனுக்கு ஜிபே பண்ணிடுறேன்” என்று சொல்லிவிட்டு கதவை மடேரேன அறைந்துவிட்டு ஃப்ளாட்டிலிருந்து வெளியேறினாள்.

பெரிய பூகம்பம் வந்து முடிந்தது போல வீடு அமைதியாகிவிட பிருத்வியோ தலையை உலுக்கிக் கொண்டான்.

“விடு நவி... ஓவரா அவளை கன்ட்ரோல் பண்ணிட்டேன் போல... சின்னப்பொண்ணு தானே... கோவம் சரியானதும் வந்துடுவா” என்று மனைவியைச் சமாதானப்படுத்தினான் அவன்.

பிரணவியோ ஓவென அழ ஆரம்பித்தாள்.

“இல்ல பிருத்வி... அவ போகுறதுக்கு டிக்கெட் புக் பண்ண சொல்லிட்டா.. அப்ப கண்டிப்பா போயிடுவா... அவ என் கூட இருந்தானா எங்கம்மாவே இருக்குற மாதிரி பாதுகாப்பா தோணும்... அவ போயிடுவா பிருத்வி”

சிறு குழந்தையாய் அழுதவளைச் சமாதானம் செய்யும்படி தமையனிடம் கண் காட்டினாள் பிரக்யா.

“கிருதி?” என்று இழுத்தவனிடம்

“அவ ஃபவுண்டன் கிட்ட தான் இருப்பா... நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என பதிலளித்துவிட்டு கிளம்பினாள்.

அவளது அனுமானம் சரியாக இருக்க, பிரக்ருதியும் நீரூற்று அருகே அமர்ந்திருந்தாள். அந்த நீரூற்றிலிருந்து சில அடிகள் தள்ளி வாகனத் தரிப்பிடம் ஒன்று இருந்தது.

அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து வரிசையாய் நின்று கொண்டிருந்த கார்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பிரக்ருதி.

மனமோ கொந்தளித்துக் கொண்டிருந்தது. திடீரென அவளது தோளில் யாரோ கை வைக்கவும் திரும்பியவள் அங்கே பிரக்யா நிற்கவும் மீண்டும் கார்களைப் பார்த்தபடியே பேசினாள்.

“என்னை சமாதானப்படுத்தலாம்னு கனவு கூட காணாத பிரகி... நான் இந்தியாக்குப் போறது கன்ஃபார்ம்”

பிரக்யா அவளருகே அமர்ந்தாள்.

“போகலாம் கிருதி... ஆனா இப்ப இல்ல... பாப்பா பிறந்ததுக்கு அப்புறமா போகலாம்”

உடனே திரும்பி அவளை முறைத்தாள் பிரக்ருதி.

“முறைக்காத, அண்ணி பாவம்”

இங்கே சமாதானப்படலம் ஆரம்பிக்க E15 ஃப்ளாட்டிலோ ஷ்ரவனும் பார்டெண்டர் இளைஞனான ஜேக்கப்பும் கே.கேவிடம் விளக்கப்படலம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அதாவது முந்தைய நாளிரவில் பப்பில் நடந்ததை ஜேக்கப் விளக்கினான் என்றால் ஷ்ரவனோ நார்த் ஈஸ்ட் பேட்ரோலிடம் சிக்கிச் சின்னாபின்னமான வரலாறை விளக்கினான்.

“நீ ட்ரிங்சை வச்சுட்டு நகர்ந்ததும் அந்தப் பொண்ணு எல்.எஸ்.டியை உன்னோட ட்ரிங்ல கலந்துருக்கா... அது சி.சி.டி.வில ரெக்கார்ட் ஆகியிருக்கு... அவங்க எல்லாரும் ஸ்கூல் பசங்க... அவங்களுக்குள்ள ஏதோ பந்தயமாம்... அதுல வின் பண்ணுறதுக்காக அவ உன்னை கிஸ் பண்ண ட்ரை பண்ணுறப்ப அந்த இந்தியன் கேர்ள் தான் அவங்க கிட்ட இருந்து உன்னைக் காப்பாத்துனா”

ஜேக்கப் கூறியதைக் கேட்டதும் கே.கே ‘உஃப்’ என பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

“நான் தான் ஃப்ளாட் கீபேட் பாஸ்வேர்டை சொன்னேன் கே.கே”

கே.கேவின் முகத்தில் குற்றவுணர்ச்சி சூழ இவ்வளவையும் கவனித்த ஷ்ரவன் அவனது தோளில் தட்டினான்.



“உனக்கு வருத்தமா இருந்துச்சுனா அந்தப் பொண்ணு கிட்ட சாரி கேட்டுடு மச்சி” – ஷ்ரவன்.

“ப்ச்! சாரி கேக்குறது ஒன்னும் கஷ்டமில்லடா... ஐ ஸ்லாப்ட் ஹெர்... அந்தப் பொண்ணு எப்பிடி எடுத்துப்பானு யோசனையா இருக்கு” – கே.கே.

“எதையும் செய்யுறதுக்கு முன்னாடி யோசிக்கணும் கேசவ்... செஞ்சு முடிச்சதுக்கு அப்புறம் அதோட விளைவுகளை ஃபேஸ் பண்ண தயாராகணும்... இதை நீ தான் எனக்குச் சொல்லிக் குடுத்த” – ஜேக்கப்.

“ம்”

ஒற்றை சொல்லில் பதிலளித்தவன் “நெக்ஸ்ட் டைம் நான் அவளைப் பாக்குறப்ப சாரி சொல்லிக்கிறேன்... இப்ப நம்ம ரெடியாகுவோம்... இல்லைனா லேட் ஆகிடும்” என்று கூறி எழுந்தான்.

அடுத்த அரைமணி நேரத்தில் கே.கே, ஜேக்கப் மற்றும் ஷ்ரவன் மூவரும் குளித்து வேறு ஆடைகள் அணிந்து ஃப்ளாட்டை விட்டு வெளியேறினர்.

மூவரும் தரிப்பிடம் நோக்கி சென்ற போது தான் பிரக்ருதியும் பிரக்யாவும் நீரூற்றின் அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்தனர்.

“ஹேய்! இது அந்தப் பொண்ணுங்க தான்”

உற்சாகமாக கூறிய ஷ்ரவனின் பார்வை பிரக்யாவை மட்டுமே வலம் வந்தது.



அடுத்த நொடியில் அவர்கள் முன்னே சென்று நின்றனர் மூவரும்.

ஷ்ரவனைக் கண்டதும் பிரக்யா அதிர்ந்தாள் என்றால் பிரக்ருதியோ கே.கேவை எரிப்பது போல பார்த்துவிட்டு அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்தாள்.

“எக்ஸ்யூஸ் மீ!”

அவனது குரல் கேட்கவும் முறைத்தவள் “இப்ப எதுக்கு மேன் இங்க வந்திருக்க? இன்னொரு கன்னம் சும்மா தான் இருக்கு, அதுல அறைஞ்சிட்டுப் போவோம்னு வந்தியா? ஒரு கன்னத்துல அறை வாங்கிட்டு இன்னொரு கன்னத்தை காட்டுறதுக்கு நான் ஒன்னும் ஜீசஸ் க்றிஸ்ட் இல்ல” என கடுகடுத்தாள்.

“நடந்த எதுவும் எனக்குத் தெரியாது... அதனால நான் கொஞ்சம் கோவப்பட்டுட்டேன்”

“வாட்? கொஞ்சம் கோவப்பட்டியா? கொஞ்சம்னா எவ்ளோ சார்? உங்க பாஷைல கொஞ்சம் கோவம்னா பளார்னு கன்னத்துல அறையுறதா? அப்ப ரொம்ப கோவம்னா கொலை பண்ணிடுவிங்களோ?”

கே.கே மௌனமாக நின்றாலும் அவள் பேச பேச அவனுக்குள் கோபம் குமிழிடுவதை இறுகிய தாடையும், இறுக்கி மூடிய கரங்களும் சொல்லாமல் சொன்னது.



அதை கண்டெல்லாம் பிரக்ருதி அஞ்சவில்லை.

“ஐயோ பாவமேனு அந்த அசிங்கம் பிடிச்ச கும்பல் கிட்ட இருந்து உன்னை காப்பாத்துனது, ட்ராமா பண்ணி உன்னை வளைச்சுப் பிடிக்குறதுக்கு இல்ல... அது ஹியூமானிட்டி... எந்த விசயம் ஒரு பொண்ணுக்கு நடந்தா செக்சுவல் ஹராஸ்மெண்ட்னு சொல்லுறோமோ அது ஒரு பையனுக்கு நடந்தாலும் தப்பு தான்... உன்னை அவ அப்யூஸ் பண்ணிடக்கூடாதுனு நினைச்சு இங்க அழைச்சுட்டு வந்தேன்... உனக்குத் திடீர்னு வேர்த்து கொட்டுச்சு... ஹார்ட் அரெஸ்ட் வர்றப்ப சிலருக்கு இப்பிடி தான் வேர்வை நிறைய வரும்... அந்தப் பயத்துல தான் நான் கூகுள் பண்ணி பாத்துட்டு இது எல்.எஸ்.டி கன்சூம் பண்ணுனதால வந்ததுனு தெரிஞ்சதும் ஷேர்ட் பட்டனை கழட்டி விட்டேன்... அதுக்கு என்னமோ உன்னை கற்... சை... இனிமே என் வாழ்க்கைல நான் யாருக்கும் ஹெல்ப் பண்ண மாட்டேன்... உன் மூஞ்சிய பாத்தாலே எனக்கு காண்டாகுது”

மடமடவென திட்டித் தீர்த்தவள் பிரக்ருதியை அழைத்துக்கொண்டு இடத்தைக் காலி செய்தாள்.

சென்றவள் திடீரென நின்று கே.கேவை திரும்பி பார்த்தாள்.

அவன் என்னவென ஏறிடும் போது “எல்லா பொண்ணுங்களும் இப்பிடி தான்னு சொன்னல்ல, ஒரு பொண்ணு உங்களை பெத்தெடுக்காம சார் இந்த பூமிக்கு எப்பிடி வந்திங்க? ப்ளூடூத், ஒய்ஃபை மூலமாவா வந்திங்க?” என்று கேலியும் குத்தலுமாகக் கேட்டுவிட்டு நடையைக் கட்டினாள்.

அவள் கடைசியாகக் கேட்ட கேள்வியில் ஜேக்கப்புக்கும் ஷ்ரவனுக்கும் சிரிப்பு பீறிட்டு வர கே.கேவின் முறைப்பில் சிரிப்பை அடக்கிக்கொண்டு மூவரும் வாகனத் தரிப்பிடத்தை நோக்கி விரைந்தனர்.

காரிலேறும் போது “ஏன் கே.கே அந்தப் பொண்ணு பேசுனப்ப உனக்குக் கோவம் வந்துச்சுல்ல? அப்ப ஏன் சைலண்டா நின்ன?” என்றான் ஷ்ரவன்.

“நீயும் தான் உன்னை போலீஸ்ல மாட்டி விட்ட பொண்ணு உன் கண் முன்னாடி நிக்குறப்ப கூட சைலண்டா இருந்த... நான் ஏன்னு உன் கிட்ட கேட்டேனா? வேலைய பாருடா டேய்” என்று அவனது முதுகில் சுளீரென அடித்தபடி பின்னிருக்கையில் அமர்ந்தான் கே.கே.

“பாவம்டா... பிள்ளைப்பூச்சியை அடிச்சு என்ன பெருமை வரப்போகுது சொல்லு” என்று ஷ்ரவன் சமாளிக்க

“பிள்ளைப்பூச்சிக்கே நீ இவ்ளோ யோசிக்கறப்ப நான் அறைஞ்சது கிங் கோப்ராவை... அது கிட்ட இன்னொரு தடவை வாய் குடுத்து கடி வாங்க சொல்லுறியா?” என்றான் கே.கே.

“வாஸ்தவம் தான் கே.கே” என அவன் கூற ஜேக்கப் காரை அங்கிருந்து கிளப்பினான்.

Comments

Post a Comment