அலைவரிசை 35

Image
  “பொதுவா திறமைசாலிங்களுக்கு யார் மேலயும் பொறாமை வராது... பின்ன யாருக்கு வரும்? எந்த ஃபீல்ட்லயும் அரைகுறை நாலெட்ஜ் இருக்குறவங்களுக்கும், நாலேட்ஜ் இல்லனா கூட இருக்குற மாதிரி சீன் போடுற காலி டப்பாக்களுக்கும் தான் பொறாமை வரும்... ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க, எல்லாரும் எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு பிறக்குறதில்ல... புது விசயத்த கத்துக்கிற ஆர்வமும், ஹார்ட் ஒர்க்கும் இருந்தா யார் வேணும்னாலும் எந்த விசயத்தையும் கத்துக்கலாம்... சோ ஆர்வமும் ஹார்ட் ஒர்க்கும் இல்லாத சோம்பேறி திலகங்கள், ஓவர் நைட்ல ஒபாமா ஆக ஆசைப்படுற ஹாஃப் பாயில்ஸ் எந்த ஃபீல்ட்லயும் முன்னேறாம முன்னேறிப் போறவங்களைப் பாத்து பொறாமைப்படுறதும் அவங்களை பத்தி காஸிப் பேசுறதுமா இருப்பாங்க”                                               -கே.கேவின் மனதின் குரல் சென்னை சிட்டி பண்பலை அலுவலகம், எழும்பூர் (எக்மோர்)... “ பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. ஆடியோ கன்சோலில் பாடலை இடை

அலைவரிசை 9

 



“மனுசங்க எப்பவும் அடுத்தவங்களோட கம்பேர் பண்ணி பாத்து தங்கள பத்தி டவுனா ஃபீல் பண்ணுவாங்க... ஆனா சிக்மண்ட் ஃப்ராய்ட் என்ன சொல்லுறார் தெரியுமா? ‘உங்களோட நீங்க கம்பேர் பண்ணிக்க வேண்டிய ஒரே ஆள் கடந்த காலத்துல இருந்த நீங்க மட்டும் தான்’... அதாவது ப்ரசண்ட் லைப்ல இருக்குற நான் என்னோட பாஸ்ட் லைஃப் கூட தான் என்னை கம்பேர் பண்ணி பாக்கணும்... என் கடந்த காலத்தோட நிகழ்காலத்தை கம்பேர் பண்ணுனா ஒன்-எய்டி டிகிரி சேஞ்ச் ஓவர் எனக்குள்ள நடந்துருக்குனு புரியுது... பிகாஸ் கேசவ் கிரிஷ்ங்கிற ஜோவியல் ஃபெல்லோ கே.கேங்கிற இன்ட்வோவெர்ட் பெர்சனா மாறிருக்கான்... இந்த சேஞ்ச் ஓவரால எனக்கு கிடைச்ச பெரிய நன்மை என்ன தெரியுமா? ஜோவியல் பெர்சனா இருந்தப்ப என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டவங்க இப்ப என் கூட பேசவே கொஞ்சம் பயப்படுறாங்க... அந்த பயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”

                                              -கே.கேவின் மனதின் குரல்

தி சாக்சனி அப்பார்ட்மெண்ட், மோண்ட்ஃபோர்ட் ட்ரைவ்...

ஜெண்டர் ரிவீலிங் பார்ட்டிக்காக அலங்கரிக்கப்பட்ட அப்பார்ட்மெண்டின் லானில் எங்கு நோக்கினும் மிண்ட் வண்ணமும் மிஸ்டி ரோஸ் வண்ணமும் தான்.

“He or She’ என்ற பொன்னிற எழுத்துக்கள் மின்ன அதன் முன்னே இரு வண்ணங்களிலும் காட்டன்கள் நிரப்பப்பட்ட கண்ணாடி குவளைகள் மேஜையை அலங்கரித்தன.



ஆங்காங்கே பொன்னிற பலூன்களும் கிடக்க இருவண்ண பாப்சிகில்ஸ் குக்கீ, காட்டன் கேண்டிகளோடு மேஜையின் நடுநாயகமாக அமர்ந்திருந்தது மூன்றடுக்கு கேக் ஒன்று.

வெண்ணிற லாங் கவுனில் பிருத்வியோடு நின்று கொண்டிருந்தாள் பிரணவி. மேடிட்ட வயிறோடு தாய்மையின் பூரிப்பு மின்னும் வதனம் அவளை பேரழகியாக்கி இருந்தது.

பிரக்ருதியும் பிரக்யாவும் பிரணவியைப் போலவே உடையணிந்து வந்திருந்த பிருத்வியின் அலுவலக நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

பிரக்யாவின் விழிகள் என்னவோ பம்பிள் பி ட்ரக்கின் மாதிரியின் அருகே நின்று டோனட்களையும் இதர டெசர்ட்களையும் வந்தவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்த ஷ்ரவனை தான் அடிக்கடி தீண்டியது.

அருகே நின்ற பிரக்ருதி அவளது தோளை இடித்தாள்.

“போதும்டி... பார்வையிலயே அந்தப் பையனை தின்னுடுவ போல”

“சீ போடி”

நாணத்துடன் தனது கண்ணாடியை சரி செய்து கொண்டாள் பிரக்யா. ஏனோ அவளுக்கு ஷ்ரவனது நேற்றைய அக்கறையும் பதற்றமும் பிடித்திருந்தது.

எதையும் யோசிக்காமல் காயத்துக்கு மருந்திட்டு குழந்தையைப் போல அவளை ஏந்தி வீட்டில் சென்றுவிட்டவன் அவள் மனதில் நேற்றே கதாநாயகனாக உயர்ந்திருந்தான்.

அன்றிலிருந்து இன்று வரை தங்களை அன்பும் அக்கறையுமாக கவனித்துக்கொள்ளும் ஆண்மகனிடத்தில் பெண் மனம் சரிவது தானே வாடிக்கை. அது கிஞ்சித்தும் தவறாமல் பிரக்யாவின் விசயத்திலும் நடந்தேறிவிட்டது.

பார்ட்டி ஆரம்பித்த நேரத்திலிருந்து அவளது விழிகள் புது ஆர்வத்துடன் அவனை மட்டும் தான் தொடர்ந்து கொண்டிருந்தன. அதை பிரக்ருதி கவனித்து கேட்டதும் வெட்கம் வந்து முகம் சிவந்து விட்டது பிரக்யாவுக்கு.

“பார்றா வெக்கம்லாம் வருது... இத்தனை வருசமா உன் ஃப்ரெண்டா இருக்குறேன்... உனக்கு இவ்ளோ அழகா வெக்கப்பட தெரியும்னு இப்ப தான் எனக்குத் தெரியுது... அது எப்பிடி என்னோட ஃப்ரெண்டா இருந்துட்டு நீ இந்த மாதிரி நாணி கண் புதைப்பாய்?”

“நான் ஒன்னும் வெக்கப்படலயே”

“ஐயோடா! உன் முகத்தைப் பாத்தாலே தெரியுது மோளே!”

“அது ஃப்ளஷ்சாக்கும்”

“ஒத்துக்க மாட்டியே! கம் ஆன் பிரகி, ஒரு இளைஞனை பாத்து இளைஞி வெக்கப்படுறது நேச்சர்”

அவள் பிரக்யாவை கிண்டல் செய்து கொண்டிருக்கும் போதே டோனட்கள் அடுக்கப்பட்ட தட்டுடன் அவர்களருகே வந்து நின்றான் கே.கே.

பிரக்யாவை பிரக்ருதி கேலி செய்ததை முழுவதுமாக கேட்டவன் தன்னைக் கண்டதும் முகத்தை உர்ரென வைத்துக்கொண்ட பிரக்ருதியிடம் டோனட்டை நீட்டினான்.



“என்ன சமாதானக்கொடி கிடைக்கலனு டோனட்டை நீட்டுறியாக்கும்? உன் கையால செஞ்ச டோனட்டை நான் தொடக்கூட மாட்டேன்... எனக்கு மானம் ரோசம் நிறைய இருக்கு”

“அப்பிடியா? அதை மூட்டை கட்டி வச்சுக்க... தேவைப்படுறப்ப காசு குடுத்து வாங்கிக்கிறேன்... இப்ப யாரு உன்னை சமாதானப்படுத்த வந்தாங்க? ஒரு மரியாதைக்கு டோனட்டை நீட்டுனேன்... ஆமா, இளைஞன் இளைஞியை பாத்தா வெக்கம் வரும்னு சொன்ன மாதிரி கேட்டுச்சு”

“அதானே உண்மை”

“நீ சயின்ஸ்ல வீக் போல... ஃபேஸ் ப்ளஷ் ஆகுறதுக்கு அட்ரினலினால நடக்குற வேஸோடைலேஷன் (vasodiation) தான் காரணம்... ஃபேஸ்ல இருக்குற ப்ளட் வெசல்ஸ் வேஸோடைலேஷனால விரியுறப்ப அந்த இடத்துக்கு ப்ளட் சர்குலேசன் அதிகமாகும்... அதனால தான் ஃபேஸ் ப்ளஷ் ஆகுது... அதை விட்டுட்டு இளைஞன் இளைஞினு அரதப்பழசா ஒரு விளக்கம் வேற!”

கே.கேவின் நீண்ட விளக்கத்தின் இறுதியில் தொக்கி இன்ற கேலியில் பிரக்ருதி சற்றே கடுப்புற்றாலும் “இவ்ளோ நாளா இது எனக்குத் தெரியாம போச்சே” என அவனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டாள்.

ஆனால் அதற்கு பிறகு தான் தங்களது சண்டையை மறந்து அவனிடம் பேசிவிட்டோமே என்பது உறைத்தது அவளுக்கு. கடுப்புடன் அவனை திட்டப் போகும் போது பிருத்வி தங்களது பிள்ளை ஆணா பெண்ணா என அறிவிப்பதற்கான கவுண்ட் டவுனை ஆரம்பித்தான்.

அங்கிருந்தவர்களின் கவனம் முழுவதும் தம்பதிகள் வசம் சென்றது.



“சிக்ஸ்... ஃபைவ்... ஃபோர்.. த்ரீ... டூ... ஒன்”

கவுன்ட் டவுன் நின்றதும் பிருத்வியும் பிரணவியும் தங்கள் முன்னே வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியை திறக்க அதனுள் இருந்து மிஸ்டி ரோஸ் வண்ண பலூன்கள் பறக்க ஆரம்பித்தன.



“ஹேய் இட்ஸ் அ பேபி கேர்ள்”

உற்சாக கூச்சல்களும் வாழ்த்துகளும் கலவையாய் எழும் போதே பிருத்வியும் பிரணவியும் கேக்கை வெட்டினார்கள்.

அதனுள்ளிருந்து மிஸ்டி ரோஸ் வண்ண லேயர்கள் எட்டிப் பார்த்தது. கணவனும் மனைவியும் கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட பிரக்ருதியும் பிரக்யாவும் அந்த அழகிய தருணங்கள் யாவற்றையும் புகைப்படமாக்கிக் கொண்டிருந்தனர்.

ஷ்ரவனும் கே.கேவும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க “தேங்க்யூ” என்றனர் ஒரே குரலில்.



பின்னர் வந்திருந்தவர்களுக்கு இனிப்பும் கேக்கும் வினியோகிக்கப்பட பிருத்வி – பிரணவியின் ஜெண்டர் ரிவீலிங் பார்ட்டி இனிதே நடந்து முடிந்தது.

பார்ட்டி முடிந்து அஐவரும் கிளம்பியதும் லானை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர் பிரக்ருதியும் பிரக்யாவும். பிரக்ருதி மேஜை மீது மிச்சமிருந்த கேக்கை ஃப்ளாட்டுக்கு எடுத்துச் சென்றாள்.

லானிலிருந்த பிரக்யா பலூன்களை பொறுக்க ஆரம்பிக்கவும் அவளிடம் வந்த ஷ்ரவனோ “நேத்து தானே கால்ல அடிபட்டுச்சு... இப்ப ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு பலூனை எடுக்குற?” என்று கேட்டபடியே சிதறிக் கிடந்த பலூன்களை அவளுக்கு உதவியாக பொறுக்க துவங்கினான்.

“கால்ல தானே அடிபட்டுச்சு... கையில இல்லையே” என கேட்டபடி அவளும் முகிழ்த்த புன்னகையை மறைத்துக்கொண்டு பொறுக்கிய பலூன்களை அட்டைப்பெட்டியில் போட்டாள்.

“இவ்ளோ தூரம் நடந்து வந்து பாக்ஸ்ல போடுறப்ப கால் நோகும்ல” என்றவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

“என்ன இப்பிடி ஒரு லுக்? சரியான லூசுப்பையனா இருப்பான் போலனு தோணுதா உனக்கு? அது என்னவோ பொண்ணுங்களுக்கு காயம் பட்டா மட்டும் என் மனசு புழுவா துடிச்சுப் போயிடும்... பெரிய மனசுக்காரங்களா இருந்தாலே இது தான் பிரச்சனை” என்று பெருந்தன்மையாக அவன் கூற

“அப்பிடியா? அந்தப் பெரிய மனசு புழுவா துடிக்கிற எத்தனையாவது பொண்ணு நான்?” என்று கேட்டாள் பிரக்யா.

“ம்ம்ம்ம்... வெயிட்” என்றவன் விரல்களை தொட்டு எண்ண ஆரம்பித்தான்.

“லூசி, ரேயான், ஃப்ளோரா, டேனி, ஜெனி... ப்ச்... கவுண்டிங் குழம்புது” என்று உதட்டைப் பிதுக்கி வருத்தம் வேறு பட்டான் அவன்.

பிரக்யா அவனது செய்கையில் திகைத்தவள் “இது மனசா இல்ல மைதானமா? இத்தனை பொண்ணுங்களுக்காக துடிக்கிற அளவுக்கு அங்க இடம் இருக்குதே... அதான் கேட்டேன்” என்று சொல்லவும்

“நோ நோ நோ... என் மனசு கடவுள்... அடுத்தவங்களுக்காக துடிக்குற மனசு இருக்குதே அது தான் கடவுள்னு நம்ம ஆண்டவரே சொல்லிருக்கார் தெரியுமா?” என்று தீவிரமான குரலில் ஷ்ரவன் அளித்தானே ஒரு விளக்கம்!

பெண்களிடம் சகஜமாக பழகுவதை இதை விட கனகச்சிதமான வார்த்தைகளில் யாரும் விளக்கிவிட முடியாது. அவனது வார்த்தை பிரயோகத்தில் அவன் சொன்ன பொருள் மறைந்துவிட பிரக்யாவின் முகத்தில் புன்னகை குடியேறியது.



“இப்பிடி பாக்குற எல்லா பொண்ணுங்களுக்காகவும் துடிச்சிட்டே இருந்தா மனசுக்கு ஒரு கட்டத்துல சலிப்பு தட்டிடப் போகுது... கவனமா இரு”

“அதுக்கு வாய்ப்பே இல்ல... பிகாஸ் இனிமே அது வேற யாருக்காகவும் துடிக்கப் போறது இல்லயே”

பிரக்யா புரியாமல் பார்க்க கண்ணாடிக்குள் குழப்பம் பூசி தெரிந்த அவளது விழிகளின் அழகை ஒரு முறை ரசித்தான் ஷ்ரவன்.

பின்னர் புன்சிரிப்போடு “எனக்குச் சொந்தமா இருந்த வரைக்கும் என் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி பாக்குற எல்லாருக்காகவும் துடிச்ச மனசுக்கு நேத்துல இருந்து நியூ ஓனர் வந்துட்டாங்க... இனிமே அது அவங்களுக்காக மட்டும் தான் துடிக்கும்” என்றான்.

அவன் குறிப்பு காட்டி பேசியது பிரக்யாவுக்குப் புரிந்துவிட்டது.

இருப்பினும் “அப்பிடியா? யாருப்பா அந்த நியூ ஓனர்?” என்று தெரியாதவளைப் போல அப்பாவியாய் கேட்டாள் அவள்.

ஷ்ரவன் மனதுக்குள் “கண்ணாடி போட்ட கேடி” என்று செல்லமாக திட்டியவன் “கொஞ்சநேரத்துக்கு முன்னாடி பலூனை பொறுக்குனப்ப யாருக்காக என் மனசு துடிச்சுதோ அவங்க தான்” என்று சொல்லிவிட்டு கடைசியாய் இருந்த இதய வடிவ பலூனை அவளிடம் நீட்டினான்.

“பத்திரமா வச்சுக்க... உடைச்சிடாத” என்றவனின் குரலில் இப்போது கிண்டலோ கேலியோ விளையாட்டுத்தனமோ இல்லை.

“பலூனோ மனசோ எதையும் உடைக்கிற பழக்கம் எனக்கு இல்ல... உன் கிட்ட இருந்ததை விட என் கிட்ட இது ரெண்டும் பத்திரமா இருக்கும்” என்றாள் பிரக்யா.

அவ்வளவு நேரம் குறும்பாக காட்டிய குறிப்புகள் யாவும் மறைந்துவிட அக்கணத்தில் இருவரும் வெளிப்படையாக தாங்கள் சொல்ல வந்ததை சொல்லிவிட்டனர்.

வீட்டிலிருந்து வந்து அவ்வளவு நேரம் தனியாக அங்கிருந்த அலங்காரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பிரக்ருதி ஷ்ரவனும் பிரக்யாவும் ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்ததும் வாயடைத்துப் போய்விட்டாள்.

“பார்றா! கண்ணாலயே கப்பல் விடுறாங்களே... அப்பிராணி மாதிரி இருந்துட்டு இப்ப மணிரத்னம் பட ஹீரோ ஹீரோயின் மாதிரி கண்ணும் கண்ணும் நோக்கியா ரேஞ்ச்ல நிக்குதுங்க ரெண்டும்... எப்பிடியோ நல்லா இருங்கடா” என்றபடி தூரத்தில் இருந்து இருவரையும் ஆசிர்வதிப்பது போல கைகளை உயர்த்தி காட்டினாள் அவள்.

மிச்சமிருந்த டெசர்ட்கள் அனைத்தையும் E13 ஃப்ளாட்டில் ஒப்படைத்துவிட்டு லானுக்குத் திரும்பிய கே.கே பிரக்ருதி தனியே நின்று பேசியபடி கைகளை தூக்குவதை பார்த்துவிட்டு அவளிடம் வந்தான்.

“எதுக்கு இப்ப போலீஸை பாத்த அக்யூஸ்ட் மாதிரி கையை தூக்கி சரண்டர் போஸ் குடுக்குற?”

பிரக்ருதி தலையிலடித்தபடி அவனை நோக்கினாள்.

“என்ன வாய்டா இது? இதுல நல்ல வார்த்தையே வராது போல... நான் அவங்களுக்கு என் ஆசிர்வாதத்தை குடுத்துட்டிருக்குறேன்... அதை போய் அக்யூஸ்ட் அரெஸ்ட் சரண்டர்னு ஆக்கம் கெட்டத்தனமா பேசுற”

அவள் கை காட்டிய திசையைப் பார்த்தவனது புருவங்கள் ஆச்சரியத்தில் ஏறியிறங்கின.

அவன் அறிந்த வரை ஷ்ரவனுக்குப் பெரிதாக காதல், திருமண வாழ்க்கையில் நாட்டமிருந்ததில்லை. காணும் பெண்கள் அனைவரிடத்திலும் இலகுவாகப் பேசி பழகினாலும் யாரிடமும் அவன் மனதாற நெருங்கியதில்லை.

பிரக்யாவிடமும் அவன் சும்மா பேசி வம்பிழுப்பதாகவே கே.கே எண்ணியிருந்தான். ஆனால் அவன் கண் முன் கண்ட இக்காட்சி அவனது எண்ணத்தை மாற்றிவிட்டது.

மெல்லிய புன்னகை அரும்ப “ஃபீலிங் ஹேப்பி ஃபார் தெம்” என்றான் அவன் மனதாற.

பிரக்ருதி பேசாமல் நிற்கவும் “இன்னுமா உனக்குக் கோவம் குறையல? ஆக்ஸ்வலி உன் மேல நான் தான் கோவப்படணும்... நேத்து வேணும்னே என் தலையில க்ளேஜை கொட்டிட்டு எஸ்கேப் ஆகிட்டல்ல” என்று கேட்க

“ஹான்.. அது உனக்கு எப்பிடி தெரியும்?” என்று திருதிருவென விழித்தாள் அவள்.

“மாட்டுனியா? உன் கிட்ட கேக்குற வரைக்கும் எனக்கு நீ தான் கொட்டுனனு தெரியாது... ஆனா இப்ப உன்னோட திருட்டுமுழியே சொல்லுது, நீ தான் கொட்டிட்டு ஓடிருக்கனு... இட்ஸ் ஓ.கே! நான் உன்னை மன்னிச்சிட்டேன்... நீயும் கில்டியா ஃபீல் பண்ணாம என் கூட பழையபடி பேசலாம்” என்று பெரிய மனதுடன் அவன் உரைக்க

“எனக்கெதுக்குடா கில்டி ஃபீலிங்? நீ என்னை தின்னிபண்டாரம் ரேஞ்சுக்கு திட்டுன... அதுக்கு நான் உன்னை பழி வாங்குனேன்... பழி வாங்குனதுக்கு அப்புறமும் எனக்குக் கோவம் தீரல... அதான் உன் கிட்ட பேசல... இப்ப நான் உன் கிட்ட பேசணும்னா, எனக்கு ஃப்ராப்புசீனோ வாங்கி குடு” என்றாள் பிரக்ருதி.

“ரெண்டே நிமிசத்துல கொண்டு வர்றேன்” என்றபடி நகர முயன்றவனை வேகமாக டீசர்ட்டைப் பற்றி தடுத்து நிறுத்தினாள் அவள்.

“என்னடாப்பா உன் தள்ளுவண்டியில போனியாகாம இருக்குற ஃப்ராப்புசீனோவை என் தலையில கட்டலாம்னு திட்டம் போடுறீயா? ஒழுங்கா எனக்கு ஸ்டார்பக்ஸ்ல வாங்கி குடு” என்று மிரட்டலாய் கட்டளையிட

“சரி வந்து தொலை... வாங்கி தர்றேன்” என்று அவளுடன் ஸ்டார்பக்ஸுக்கு கிளம்பினான் கே.கே.

செல்லும் முன்னர் பிரக்யாவோடு கேக் வைத்திருந்த மேஜையை துடைத்துக் கொண்டிருந்த ஷ்ரவனை புன்னகையோடு பார்த்தவனின் மனதில் நிம்மதி நிறைந்திருந்தது.

வாகனத் தரிப்பிடத்திலிருந்து அவன் கார் கிளம்பும் சத்தத்தில் திரும்பிப் பார்த்த ஷ்ரவன் அவனோடு பிரக்ருதியும் செல்வதை கவனித்துவிட்டு

“ஒரு வழியா சண்டை முடிஞ்சு சமாதானப்படலம் ஆரம்பிச்சிடுச்சு போல” என்று கூற

“கிருதிய அவ்ளோ சீக்கிரம் சமாதானம் பண்ண முடியாது” என்றாள் பிரக்யா அமர்த்தலாக.

“அஞ்சு ரூபாக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி குடுத்தா போதும், அவ சமாதானம் ஆகிடுவா” என்று கேலி செய்து சிரிக்க

“அப்பிடியே ஆரஞ்சு மிட்டாய் தான் வேணும்னு அவ அடம் பிடிச்சா இந்த அமெரிக்கால அதை எங்க போய் தேடுவார் உன்னோட ஃப்ரெண்ட்?” என்றாள் பிரக்யா.

“ஐயோ அம்மா! தயவு பண்ணி இதை அவ காதுல போட்டுடாத... என் ஃப்ரெண்ட் பாவம்” என்று அவன் கை கூப்பவும் பிரக்யா நகைக்க இருவருமாக சேர்ந்து மேஜையைத் தூக்கிக்கொண்டு E13 ஃப்ளாட்டுக்குச் சென்றனர்.

அங்கே பிரணவி ஆசையோடு தனது மேடிட்ட வயிறை வருடிக்கொண்டிருந்தாள்.

“ஏஞ்சல் எப்ப வருவானு இருக்குதா நவி?” என்றபடி அவளது தோளை அணைத்தபடி அமர்ந்தான் பிருத்வி.

“ஆமா! அவ எப்ப வருவானு ஆர்வமாவும் இருக்கு... கொஞ்சம் பயமாவும் இருக்கு” என்றவளின் குரலில் கலக்கம்.

ஏன் என்பது போல பார்த்தவனிடம் “நீங்க எங்களுக்கு கண்டிசன் போடுற மாதிரி அவளுக்கும் போடுவிங்கல்ல, உன்னோட இடம் இது தான்னு நீங்க சொல்லுற வட்டத்துக்குள்ள தானே அவளும் வளரணும்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் அவள் கூற பிருத்விக்கோ அதிர்ச்சியாக இருந்தது.



“உங்களோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸை அவ ஃபாலோ பண்ணலைனா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாத்தாலே எனக்குப் பயமா இருக்கு பிருத்வி”

மனைவியின் பேச்சில் இருக்கும் பயம் பிருத்விக்கு சங்கடத்தைக் கொடுத்தது. தனது பேச்சை இத்தனை நாட்கள் அனைவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டனர் என்றல்லவா அவன் எண்ணியிருந்தான்.

ஆனால் அவர்கள் வேறு வழியின்றி அவனது கட்டுப்பாடுகளை கடைபிடித்திருக்கின்றனர். இப்போது பெண் குழந்தை பிறந்தால் அவளையும் தங்களைப் போல தங்க கூண்டுக்குள் அடைத்துவிடுவானோ என்ற பயம் பிரணவியை அவ்வாறு பேச வைத்திருந்தது.

தனது செயல்பாடுகளை கட்டாயம் மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது அவனுக்குப் புரிந்தது. ஆதரவாக பிரணவியை அணைத்திருந்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

“நீ நம்ம குழந்தைக்காக யோசிக்கிற மாதிரி தானே நானும் யோசிப்பேன் நவி... அவ என்னை பாத்து பயப்படுற சிச்சுவேசன் எப்பவும் வராது... ஐ ப்ராமிஸ்”

உறுதியாய் சொல்லிவிட்டு அவளது மேடிட்ட வயிற்றில் முத்தமிட்டான் பிருத்வி.

சரியாக அந்நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து சென்று திறந்தான்.

மேஜையோடு ஷ்ரவனும் பிரக்யாவும் நின்றனர்.

“உள்ள வாங்க... வேலையெல்லாம் முடிஞ்சுதா? சாரி ஷ்ரவன்... பார்ட்டியில ரொம்ப நேரமா நின்னதால நவியோட கால் வீங்கிடுச்சு... அவளை கவனிச்சிட்டு இருந்ததால என்னால அங்க வர முடியல.. நீங்க பண்ணுன ஹெல்புக்கு தேங்க்ஸ்” என்றவாறு அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தான்.

மேஜையின் மீது இருந்த இதயவடிவ பலூனை அவன் விசித்திரமாகப் பார்க்க பிரக்யா அதை எடுத்துக்கொண்டாள்.

“இதுல எந்தச் சிரமமும் இல்ல ப்ரோ... நீங்களும் பார்ட்டி அலுப்புல இருப்பிங்க... ரெஸ்ட் எடுங்க” என்று சொன்னபடி மேஜையை அந்த ஹாலின் ஓரமாக போட்டவன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.

பிரக்யா அவனை வழியனுப்பிவிட்டு கதவை மூட போக குறுக்கே கை வைத்து தடுத்தான் அவன்.

“என்ன?”

“இன்னைக்கு நைட் டேட் போலாமா?”

“ஹலோ என்னை பாத்தா டேட்டிங் வர்ற பொண்ணு மாதிரியா தெரியுது?”

“வர இஷ்டமில்லனா நோ கூட சொல்லலாம்”

சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு கதவு மீது சாய்ந்தபடி கூறினான் ஷ்ரவன்.



“எங்க போகலாம்னு நீ சொல்லவேல்ல”

“ஒய்ட் ராக் லேக் (White rock lake) பக்கத்துல போயிட்டு வருவோம்... டேட்டிங்குக்கு பெர்ஃபெக்ட் ப்ளேஸ் அது தான்”

“ஓ.கே... அப்ப ஈவ்னிங் பாக்கலாம்”

சிரிப்போடு கிளம்பினான் ஷ்ரவன். கதவைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் வந்த பிரக்யாவின் முகத்திலிருந்த நாணப்புன்னகையை பிரணவி கவனித்தாள். ஆனால் அது குறித்து தங்கையிடம் இப்போது கேட்க வேண்டாமென தீர்மானித்தவள் டோனட் சாப்பிடுவதில் கண்ணானாள்.


Comments