அலைவரிசை 36

Image
  அலைவரிசை 36 “இனிப்பான பொய்ய விட கசப்பான உண்மை பெஸ்ட்னு சொல்லுவாங்க... உண்மைய சொல்லுறதால உங்களுக்கு உண்டாகுற பாதிப்பு ரொம்ப சின்னது தான்... ஆனா அந்த சின்ன பாதிப்பை ஃபேஸ் பண்ண பயந்துட்டு பொய் சொல்லி தப்பிச்சோம்னு வைங்க, ஃபியூச்சர்ல ரொம்ப அவமானப்படுவோம்... பொய் சொல்லி ஒரு உறவை நீங்க காப்பாத்தணும்னு நினைச்சிங்கனா அந்த உறவு தற்காலிகமானதா தான் இருக்கும்ங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்கோங்க... அதே நேரம் ஒருத்தர்   உங்க கிட்ட உண்மைய சொல்லி தன்னோட தப்பை ஒத்துக்கிட்டா அதை எந்தக் காரணத்துக்காகவும் ஃபியூச்சர்ல சொல்லிக் காட்டி திட்டாதிங்க... அப்புறம் இனி ஜென்மத்துக்கும் உங்க கிட்ட உண்மையா இருக்கணும்ங்கிற எண்ணம் அவங்களுக்கு வராது”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்ட், ஷெனாய் நகர்... பால்கனியைத் தொட்டுக் கொண்டிருந்த அலங்கார பாக்குமரங்களைப் பார்த்தபடி காபியை அருந்திக் கொண்டிருந்தாள் பிரக்ருதி. அந்த 2BHK ஃப்ளாட்டின் சமையலறையில் பிரக்யா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்புகளை விவாதித்துக் கொண்டிர

அலைவரிசை 1

 



“வாழ்க்கையில ஃபேஸ் பண்ணுற ப்ராப்ளம்ஸால நாம உடைஞ்சு போகாம பாதுகாக்குறது அன்பும் மனநிம்மதியும் தான். மனசு நிம்மதியா இருக்கணும்னா அந்த மனசு என்ன சொல்லுதோ அதை கேக்கணும். மனநிம்மதியை நம்மளால விலை கொடுத்து வாங்க முடியாது. அதை ஒருத்தர் இன்னொருத்தருக்குத் தானம் பண்ணவும் முடியாது. நம்ம மனசு நிம்மதியா இருக்குறதும், டிப்ரசன்ல இருக்குறதும் நம்ம கையில தான் இருக்கு. Only our actions decide whether we live with peace of mind or in depression”

                                       -கே.கேவின் மனதின் குரல்

ஜிஞ்சர்மேன் 360 பப், மோண்ட்ஃபோர்ட் ட்ரைவ், டல்லாஸ்...

வயலட்டும் சிவப்புமாய் விளக்குகள் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருக்க இளைஞர் கூட்டமும், டி.ஜேவின் இசையும் அந்த பப்புக்கு உயிர்ப்பைக் கொடுத்துக் கொண்டிருந்த இரவுப்பொழுது. டெக்ஸாஸ் மாகாணத்தில் நான்கைந்து கிளைகளைக் கொண்ட பப் அது.

பப்பின் நடுப்படுகுதியில் அரைவட்டவடிவிலான மேடையில் டி.ஜே நின்று இசையை ஒலிபரப்பிக்கொண்டிருக்க அதன் கீழே ஆல்கஹால் கலந்த பானங்களும், ஆல்கஹால் இல்லாத பானங்களும் பெரிய கண்ணாடி பாட்டில்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதன் முன்னே இருந்த சிறு மேடையின் முன்னே காக்டெயில் ஷேக்கரைக் குலுக்கிக் கொண்டிருந்தான் அவன். அவனது வலிய புஜங்களின் தசைகள் காக்டெயில் ஷேக்கரை குலுக்கும் போது எழுந்து அடங்க சிகையிலிருந்து பிரிந்த கூந்தல் நெற்றியில் படர்ந்து அடர்ந்த புருவத்தைத் தொட்டு உறவாடிக்கொண்டிருந்தது.

காக்டெயில் ஷேக்கரைத் திறந்து கண்ணாடி கோப்பையில் பானத்தை ஊற்றியவன் அருகே இருந்த ஆரஞ்சு பழத்தின் தோலைச் சீவி அதை நெருப்பில் காட்டினான்.

பின்னர் அதை கோப்பையிலிருந்த இளம்ரோஜாவண்ண காக்டெயிலில் மிதக்க விட்டான்.

“யுவர் காஸ்மோபோலிட்டன்”

“தேங்க்யூ டூட்”

கோப்பையை வாங்கிய இளைஞன் நன்றி கூறவும் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான் அவன்.

அந்தப் புன்னகைக்கேற்ப வளைந்த உதடு நிக்கோடினுக்கு நூற்று நாற்பத்து நான்கு தடையுத்தரவு போட்டிருந்ததால் அதன் இளம் ரோஜாவண்ணம் மாறாமலிருந்தது.

அடுத்தடுத்து இளசுகள் வந்து கேட்ட காக்டெயில்கள் மற்றும் மோக்டெயில்களை தயாரித்து கோப்பையில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவனின் தோளை இடித்தான் இன்னொருவன்.

கிட்டத்தட்ட காக்டெயில் ஷேக்கரை வைத்திருந்தவனின் உயரத்தில் இருந்தான். கண்களில் ஆர்வம் ததும்பியது.

“டைன் இன் ஏரியால கோல்டன் லேம்புக்குக் கீழ நிக்குற ஸ்பெக்ஸ் போட்ட பொண்ணைப் பாரேன் கே.கே... ஷீ மே பி இந்தியன்”


குறுகுறுவென மீண்டும் அவளைப் பார்த்தவனது தோளில் பட்டென்று அடிவைத்தான் அந்த கே.கே.

“நம்ம இந்தியாவை விட்டு வந்து ஆறு மாசம் ஆகுது... ஆனா உன்னால இப்பவும் இந்தியன் கேர்ள்சை ஈஸியா கண்டுபிக்க முடியுதே.. நீயெல்லாம் மார்ச்ல (Mars) பிறந்திருக்க வேண்டியவன்டா ஷ்ரவன்” என்றான் கேலியாக.

உடனே அந்த ஷ்ரவன் என்பவன் “நீ என்னை ஏலியன்னு சொல்லுறியா கே.கே?” என்க

“நோ! அவ்ளோ தூரத்துல இருந்தவளை இந்தியன் கேர்ள்னு கண்டுபிடிச்ச உன்னோட தொலைநோக்கு பார்வையை வச்சு நீ ஒரு எக்ஸ்ட்ராடினரி ஸ்பீசிஸ்னு சொன்னேன்” என்றான் கே.கே கேலியாக.

“அடப்போ மேன்! இதுக்கு நீ என்னை ஏலியன்னே சொல்லியிருக்கலாம்” என்றான் ஷ்ரவன்.

“ஒன் ஷீ ஃப்ரீஜ்” என்றபடி ஒரு நவநாகரிக நங்கை க்ராப் டாப்புடன் வந்து நிற்கவும் இந்தியப்பெண்ணை மறந்தான் அவன். அவர்கள் இருவரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள். இப்போதைக்கு இது மட்டும் போதும்.

கே.கே அவனைப் பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்தபடி திரும்பிய போது தான் ஷ்ரவனின் கவனத்தைக் கவர்ந்த கண்ணாடி அணிந்த இந்தியப்பெண் அங்கே வந்தாள்.

சராசரி உயரத்தில் ஆகாயநீலவண்ண ஏ லைன் ஃப்ராக் அணிந்திருந்தாள். கண்களை கண்ணாடி பாதுகாத்தது. அவளருகே இன்னொருத்தியும் வந்தாள். மத்தியில் மட்டும் டக்கின் செய்யப்பட்ட புல் ஓவர் டீசர்ட், ஸ்கின்னி ஜீன்ஸ், பிசிறின்றி நேராக விரிந்திருந்த கூந்தல், கண்களில் மட்டும் எக்கச்சக்க துணிச்சல், என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியமான உடல்மொழி.

அவள் அந்தக் கண்ணாடிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்தபடியே அங்கே கிடந்த உயரமான இருக்கையில் ஏறியமர்ந்தாள்.

“ஒன் சன்செட் ப்ளீஸ்” என்றவள்

“நோ ஆல்கஹால் கிருதி” என அந்த கண்ணாடிப்பெண் அமர்ந்தபடி குறுக்கிடவும்

“ஓ.கே! வித்தவுட் டக்கீலா மிஸ்டர் பார்டெண்டர்” என்று சொன்னபடி கே.கேவின் பக்கம் திரும்பினாள். இருவருக்கும் இடையே காக்டெயில் கோப்பையை வைக்கும் சின்ன மேடை மட்டும் தான் இருந்தது.

அருகாமையில் தெரிந்தவனை கண்ணிமைக்காமல் பார்த்து “வாவ்” என்று வாய் விட்டுக் கூறி சீட்டியடிக்க கண்ணாடி அணிந்தவள் அந்த கிருதியின் புஜத்தில் கிள்ளினாள்.

“அவுச்! ஏன் பிரக்யா என்னை கிள்ளுன?” என ஆங்கிலத்தை தொலைத்து தமிழில் சிணுங்கினாள் கிருதி.

‘ஒன் சின்ட்ரெல்லா” என்று கே.கேவிடம் ஆர்டர் செய்த அந்த பிரக்யா

“நம்ம இங்க வந்தது ஹாரி எங்களுக்குக் குடுக்குற பார்ட்டிய என்ஜாய் பண்ணுறதுக்கு... நீ என்னடானா பார்டென்டரை சைட் அடிக்குற... அதுவும் இவ்ளோ ஓப்பனா” என அவளைக் கடிந்து கொண்டாள்.

“இந்த யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கால இருபத்து நாலு வயசு பொண்ணுக்கு இவ்ளோ ஹேண்ட்சம்மான பையனை சைட் அடிக்குறதுக்குக் கூட உரிமையில்லையா? போங்கடா இதுக்கு என் தாய் மண்ணே பெட்டர்”

“அங்க அங்கிள் இருக்குறார்ங்கிறதை மறந்துட்டுப் பேசுற நீ”

இதை சொல்லும் போது கேலிப்புன்னகை மலர்ந்தது அந்த பிரக்யாவிடம்.



உடனே கிருதியின் முகம் கூம்பியது. உதட்டைச் சிறுகுழந்தை போல பிதுக்கியவள்

“பார்டெண்டரை ரசிச்ச குஷியில வில்லனை மறந்துட்டேன் பாரேன்... இந்நேரம் ஆர்.ஜேவா ஹாய் ஹலோ வணக்கம்னு சொல்ல வேண்டியவளை உன் அண்ணிய பாத்துக்குற ஆயாவா ஆக்கிட்டார் அந்த மனுசன்” என்று குறை கூற

“அப்பவே அங்கிள் கிட்ட முடியாதுனு சொல்ல வேண்டியது தானே” என்று அவளது தோளை இடித்தாள் பிரக்யா.

“என்ன வார்த்தை சொல்லிட்ட பிரகி? நான் மட்டும் அப்பிடி சொல்லிட்டா மிஸ்டர் வாசனோட வளர்ப்பு சரியில்லனு அவரைத் தானே நாலு பேர் தப்பா பேசுவாங்க... அதோட கூட பிறந்த அக்கா கர்ப்பமா இருக்குறப்ப அவளைக் கவனிக்க மாட்டேன்னு சொன்ன சுயநலக்காரி இந்த பிரக்ருதினு நாளைக்கு வரலாறு என்னை கன்னாபின்னானு பேசும்... அதுக்காக தான் நான் இங்க வந்தேன்” என்றாள் பெருந்தன்மையோடு.

“ஏய் போதும்டி... எனக்கு சின்ன வயசுலயே காது குத்தி கம்மல் போட்டுட்டாங்க”

“அப்ப சைட்ல குத்திக்க பிரகி... இப்ப அது தான் ஃபேஷன்”

“அங்கிள் கிழிச்ச கோட்டை உன்னால தாண்ட முடியாதுனு உண்மைய ஒத்துக்க”

“இந்த தடவை உன் அங்கிள் போட்ட கோட்டை தாண்டவும் செய்வேன், அழிக்கவும் செய்வேன்.. வெயிட் அண்ட் வாட்ச்”

“சேலஞ்ச் பண்ணுறதுலாம் சரி... அண்ணாக்கு மட்டும் நம்ம இங்க வந்தது தெரிஞ்சா சோலி முடிஞ்சுது”

சொல்லும் போதே பிரக்யாவின் கண்களில் கலவரம்.

ஆனால் பிரக்ருதி அதற்கெல்லாம் அசரவில்லை. அலட்சியமாய் தோளைக் குலுக்கியவள்

“உங்கண்ணா அதான் என்னோட மாமா சரியான மேள் சாவனிஷ்ட்... அவர் மட்டும் வீக்கெண்ட்ல அவரோட ஃப்ரெண்ட் குடுக்குற பார்ட்டிய என்ஜாய் பண்ணுறதுக்கு பப்புக்குப் போவாராம்... ஆனா நம்ம போனா மட்டும் பொண்ணுங்க பப்புக்குப் போறது தப்புனு கலாச்சார வகுப்பு எடுப்பாராம்... ஆம்பளை பப் பார்ட்டினு போனா உடம்புக்குக் கேடுனு சொல்லுற சொசைட்டி பொண்ணுங்க போனா மட்டும் கலாச்சாரத்துக்குக் கேடுனு சொல்லுது... சை! கடுப்பா இருக்கு” என்றாள்.

“நீயோ நானோ சொசைட்டிய மாத்த முடியாது கிருதி” – ப்ரக்யா.

“அதுவும் இந்தியன் சொசைட்டிய மாத்தவே முடியாது” என்றவளின் கண்கள் பார்டெண்டரான கே.கேவின் மீது மீண்டும் படிந்தது.

“இவ்ளோ வளர்ந்த நாடு அமெரிக்கா... இங்கயே பார்டெண்டரா பசங்களை தான் வச்சிருக்காங்க... ஒரு பொண்ணு கூட இல்லை... இதுல நான் இந்தியாவ குறை சொல்லிட்டிருக்குறேன் பாரு” என்று தலையிலடித்துக் கொண்டாள் பிரக்ருதி.

“யுவர் சன்செட் மோக்டெய்ல் வித்தவுட் டக்கீலா அண்ட் யுவர் சிண்ட்ரெல்லா”

அவர்கள் முன்பிருந்த சிறுமேடையில் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த பானத்துடன் ஒரு கோப்பையும் அடர்ரோஜாவண்ண பானத்துடன் மற்றொரு கோப்பையும் வைக்கப்பட்டன.

அதை இருவரும் எடுத்துக்கொள்ளும் போதே “ஆக்ஸ்வலி இங்க ஒரு கேர்ள் பார்டெண்டரா ஒர்க் பண்ணுறாங்க... இன்னைக்கு அவங்க ஆஃப்” என்றான் கே.கே தெள்ளத்தெளிவாக தமிழில்.

“ஓ”



இருவரும் கோரஸாக பதிலளித்தனர். அடுத்த நொடியே அவர்கள் குடித்துக்கொண்டிருந்த மோக்டெயில்கள் புரையேறியது.

கண்கள் காதளவு விரிய “நீங்க தமிழ்லயா பேசுனிங்க?” என மீண்டும் கோரஸாக கேட்க ஆமாமென கே.கே தலையசைக்கும் போதே ஷ்ரவன் வந்தான்.

பிரக்ருதி கே.கேவை பார்த்து திருதிருவென விழிக்க அவனோ “சைட் அடிச்சு முடிச்சாச்சா? இல்ல இன்னும் பாக்கி இருக்கா?” என்று வினவினான்.

அவள் பதிலளிக்கும் முன்னர் முந்திக்கொண்ட ஷ்ரவன் பிரக்யாவிடம் கை நீட்டினான்.

“ஹாய்! ஐ அம் ஷ்ரவன்”

அவள் கை குலுக்காமல் நிற்கவும் “கடல் கடந்து வந்தாலும் தமிழ்ப்பொண்ணுங்களோட சீன் மட்டும் குறையாதுப்பா” என அலுத்துக்கொண்டான் அவன்.

இரு பெண்களும் பேசாமல் விழிக்கவும் கே.கேவை பார்த்தவன் “என்னடா இந்தப் பொண்ணுங்க இப்பிடி முழிக்கிறாங்க? அந்தளவுக்கு மிரட்டிட்டியா?” என்று கேட்க

“அதுல்லாம் ஒன்னுமில்ல... எனக்குத் தமிழ் தெரியாதுனு நினைச்சிட்டாங்க... நான் தமிழன்னு சொல்லவும் ஷாக்காமா” என்றபடி அந்த சிறு மேடையிலிருந்த திறப்பை திறந்து கொண்டு வெளியே வந்தான் கே.கே.

ஷ்ரவனின் பார்வை இன்னும் பிரக்யா மீதிருக்கவே “கடல் கடந்து வந்தாலும் சிம்ப் (simp) பண்ணுற உன்னோட குணம் மாறாதுடா” என்று அவனது கழுத்தை தனது கைகளால் இறுக்கினான்.

பிரக்ருதி தலையை உலுக்கிக் கொண்டவள் “ஹேய்! அப்ப நீங்க பார்டெண்டர் இல்லையா?” என்று கேட்க

“இல்லை” என்றான் கே.கே.

“அப்ப எதுக்கு எங்களுக்கு ட்ரிங்ஸ் குடுத்திங்க?” – ப்ரக்யா.

அவனது கேலிக்குப் பதிலாக வந்தான் கருப்பின இளைஞன் ஒருவன்.

“தேங்க்ஸ் டூட்... என் கேர்ள் ஃப்ரெண்ட் இப்ப தான் கிளம்புனா... இனிமே நான் கவனிச்சுக்குறேன்” என்றவன் கரத்தை முஷ்டியாக்கி ஃபிஸ்ட் பம்ப்பாக கே.கேவிடம் குத்தினான்.

பின்னர் இருவரும் கைகுலுக்க அந்த கருப்பின இளைஞன் பார்டெண்டர் வேலையை ஆரம்பித்தான்.

கே.கே அவனிடம் காக்டெயிலை வாங்கிக்கொண்டு ஷ்ரவனோடு நகர பிரக்ருதியும் பிரக்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அதற்குள் பார்ட்டி கொடுத்த ஹாரி இருவரையும் அழைக்கவும் அவனோடு சென்றவர்கள் டைன் இன் பகுதியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். அங்கே இருந்தவர்கள் அனைவரும் பிரக்யாவுடன் டெக்சாஸ் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை சமீபத்தில் முடித்தவர்கள். அதற்காக தான் ஹாரி இந்த பார்ட்டியையே ஏற்பாடு செய்திருந்தான்.

அனைவரும் பீட்சா, டெசர்ட்களை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க, பெர்ரி காப்ளரை சுவைத்துக் கொண்டிருந்த பிரக்ருதியின் கண்கள் அங்கே ஷ்ரவனோடு பானத்தை அருந்திக்கொண்டிருந்த கே.கேவின் மீது படிந்தது.

“சோ ஹேண்ட்சம்” என்றபடி கன்னத்தில் கை வைத்து ரசிக்க ஆரம்பித்தாள் அவள். ஏதோ ஒருவிதத்தில் அவன் அவளை வசீகரித்திருந்தான். ஆனால் பிரக்ருதியின் விளையாட்டுகுணம் அதை அவளுக்குப் புரியவிடவில்லை.

பிரக்யா நங்கென்று அவள் தலையில் குட்டவும் “ப்ச்! அவன் ஆள் பாக்க ஜம்முனு இருக்கான்... இதுக்கு அப்புறம் நான் அவனைப் பாப்பேனோ இல்லையோ, கொஞ்சநேரம் சைட் அடிக்க விடு பிரகி” என்றாள் கொஞ்சலாக.

“எப்பிடியோ போய் தொலை... ஆனா லவ் கிவ்னு என் கிட்ட வராத... அங்கிள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்... இப்பவே சொல்லிட்டேன்” என்று ப்ரக்யா எச்சரிக்கவும்

“ஐய்யய்யே! நான் அவனை சைட் தான் அடிக்குறேன் பிரகி... காதலாவது கண்றாவியாவது” என அலட்சியமாய் தோளைக் குலுக்கியவள்

“முதல்ல நான் ஆர்.ஜே ஆகணும்டி” என்றாள் கண்களில் கனவு மின்ன.

பிரக்யா சிரிப்பை விழுங்கியவள் “அப்ப உனக்கு லவ், மேரேஜ் இதுலல்லாம் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லை... அப்பனே முருகா! எங்க ஃபேமிலில ஔவையார், காரைக்கால் அம்மையார் மாதிரி இல்லற வாழ்க்கையை துறந்து உலகத்துக்காக வாழப்போற இந்த ஜீவனை படைச்சதுக்கு நன்றி!” என்று தலைமேல் கை தூக்கி கும்பிடு போடவும் அதிர்ந்தாள் பிரக்ருதி.

“ஏய் நான் எப்ப அப்பிடி சொன்னேன்? நானும் கல்யாணம் பண்ணிப்பேன்... ஆனா இந்த பார்டெண்டர் மாதிரி ஆளை பண்ணிக்கமாட்டேன்... புருசன்ங்கிறவன் கண்ணுக்கு லெட்சணமா இருந்தா மட்டும் போதுமா? நல்லா வசதியானவனா இருக்க வேண்டாமா?” என்றாள் அவள்.

“அப்ப மல்டி மில்லியனரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லு”

“அப்கோர்ஸ்... நானும் எத்தனை நாளுக்குத் தான் என்னோட ஸ்கூட்டி பெப்லயும் அப்பாவோட மாருதிலயும் போறது? ஒரு மெர்சிடிஸ் மேபாக், ஆடினு லக்சரி காரை என் கண்ணால பாக்க வேண்டாமா?”

“பாக்கணும்னா சொல்லு, நானே உன்னை ஆடி ஷோரூம்கு கூட்டிட்டுப் போறேன்... அதுக்குனு கல்யாணம் பண்ணிப்பியா?”

“நீ என்ன சொன்னாலும் நான் பணக்காரனா பாத்து தான் கல்யாணம் பண்ணிப்பேன்... என்னால எங்கம்மாவை மாதிரி சிக்கனமா செலவு செஞ்சு பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த முடியாது... ஹோம் லோன் வாங்கி பத்து வருசம் பதினைஞ்சு அதுக்கான இண்ட்ரெஸ்ட்டை கட்ட முடியாது”

இப்படி சொல்லும் போது யாரோ அவர்களை கடந்து சென்றார்கள்.

“இதுக்காக நீ ஒரு பணக்காரனை கல்யாணம் பண்ணுனா உலகம் உன்னை கோல்ட்-டிக்கர்னு சொல்லும் கிருதி”

“அஹான்! அப்ப ‘seeking a well educated and working girl with fair skin at 24 for my son’னு மேட்ரிமோனில விளம்பரம் குடுக்குறாங்களே அவங்களை ரேசிஷ்ட்னு சொல்லுவியா ப்ரகி? அவங்க வைக்குறதுக்குப் பேர் டிமாண்ட்னா நான் வைக்குறதும் டிமாண்ட் தான்”

“என்னமோ போ... பணக்காரனை கல்யாணம் பண்ணிப்பனு சொல்லுற... ஆனா பார்டெண்டரை சைட் அடிக்குற... உன்னைப் புரிஞ்சிக்கவே முடியல கிருதி”

அவர்களிருவரும் பேசிக்கொண்டிருக்கையில் பிரக்யாவுடன் டெக்சாஸ் பல்கலைகழகத்தில் முதுகலை படித்த ஜேனட்டுக்குத் திடீரென வயிறு வலி வந்துவிட அவள் அழுது அரற்றத் துவங்கினாள்.

ப்ரக்யாவைத் தவிர வேறு யாரிடமும் அவள் நெருங்கிப் பழக மாட்டாள். எனவே ஓடிச் சென்று ஹாரியோடு சேர்ந்து அவளைத் தூக்கியவள்

“கிருதி நான் ஹாரியோட கார்ல போய் ஜேனை அவளோட வீட்டுல விட்டுடுறேன்... நீ லேட் பண்ணாம டாக்சி பிடிச்சு வீட்டுக்குக் கிளம்பு... என்னை ஹாரி ட்ராப் பண்ணிடுவான்” என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

அதே நேரம் கே.கேவுடன் பானம் அருந்தியபடி பேசிக்கொண்டிருந்த ஷ்ரவன் ப்ரக்யா கிளம்புவதை கவனித்துவிட்டான்.

“ஹேய் அவ கிளம்புறா மேன்” என்று பரபரத்தான் அவன்.

“சோ வாட்?” இலகுவாக கேட்டுவிட்டு இன்னொரு மிடறு அருந்தினான் கே.கே.

“நான் அவளை ஃபாலோ பண்ணிட்டுப் போய் அவ எங்க தங்கியிருக்குறானு தெரிஞ்சிக்க போறேன்”

“டேய்! இப்ப தான் உன்னை சிம்ப் பண்ணாதனு சொன்னேன்”

“அடேய் இது சிம்ப் இல்லடா... கொஞ்சம் முயற்சி பண்ணுனா அந்தப் பொண்ணுக்கும் என் மேல  இண்ட்ரெஸ்ட் வர வாய்ப்பிருக்கு... ப்ளீஸ்டா ப்ளீஸ்டா என் கன்னுக்குட்டில நீ”

“சீ! அசிங்கமா கெஞ்சாத... போய் தொலை” என்றபடி கார்ச்சாவியை அவன் மீது வீசினான் கே.கே.

“தேங்க்யூ மச்சி!” என்று அவனை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்ட ஷ்ரவன்

“இந்தப் பொண்ணு மட்டும் எனக்கு ஓ.கே சொல்லி நாங்க கல்யாணம் பண்ணி எங்களுக்குப் பையன் பிறந்தா அவனுக்கு கே.கேனு தான் பேர் வைப்பேன்டா” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அவனது சினிமா வசனம் போன்ற வார்த்தைகளைக் கேட்டுச் சிரித்தபடி கோப்பையைக் காலி செய்தான் கே.கே.

மெதுவாய் நடந்து அங்கே கிடந்த சோபாவில் அமரலாம் என்று எண்ணியவனின் தலை சுற்றியது. அங்கே ஒளிர்ந்த வயலட்டும் சிவப்புமான விளக்கின் ஒளி அவனுக்கு வட்ட வட்டமாகத் தெரிந்தது. கண்ணைக் கசக்கியவன் பார்வை மங்கலாகி நிலை தடுமாறி சரியவும் அவனைத் தாங்கினாள் பழுப்புவண்ண கூந்தல்காரி ஒருத்தி.

ப்ரக்யா சொன்னபடி வீட்டுக்குக் கிளம்ப எத்தனித்த பிரக்ருதி கே.கேவை அந்தப் பெண் தன்னோடு அணைத்துச் செல்வதைப் பார்த்து விட்டாள்.

அவனோடு இருந்தவனைத் தேடின அவளது கண்கள். ஷ்ரவன் அகப்படவில்லை என்றதும் மீண்டும் அந்தப் பெண் சென்ற திசையில் பார்க்க அங்கேயோ அவள் கே.கேவின் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழற்றிக்கொண்டிருந்தாள்.

அருகே நின்றவர்கள் அவளது நண்பர் குழாம் போல. அதில் ஒருவன் மொபைலில் அங்கே நடப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.

“கம் ஆன் ஜூலி! யூ கேன் டூ இட்” என அவளை உற்சாகப்படுத்தினார்கள் அவர்கள்.

இன்னொரு தரப்பினரோ “ஜூலி! லூசர் லூசர்” என்று கூச்சலிட்டபடி தம்ஸ் அப் சிம்பலை கீழ் நோக்கி காட்டினர்.

அந்தப் பெண் ஜூலியோ “ஐ அம் நாட் அ லூசர்... ஐ வில் ப்ரூவ் இட்” என்றபடி கே.கேவின் முகம் நோக்கி குனிந்தாள்.

அப்போது தான் அவர்களுக்குள் ஏதோ பந்தயம் என்பதே பிரக்ருதிக்குப் புரிந்தது. என்ன கேவலமான பந்தயமோ அவளுக்குத் தெரியாது. ஆனால் ஒரு ஆண்மகனை அவனது அனுமதியின்றி தொடுவதும் பாலியல் சுரண்டல் தானே!

வேகமாக அங்கே சென்றவள் கூட்டத்தைப் பிளந்துகொண்டு அப்பெண்ணை நெருங்கினாள்.

அவளோ கே.கேவின் இதழை நோக்கி குனிய வேகமாக அவளது தோளைப் பற்றி விலக்கிவிட்டு பளாரென கன்னத்தில் அறைந்தாள்.

அப்பெண் அதிர்ந்து நிற்கையிலேயே இக்காட்சியை படம் பிடித்துக் கொண்டிருந்தவனது கரத்திலிருந்த மொபைலை பிடுங்கி கீழே எறிய அதன் தொடுதிரையில் விரிசல் விழுந்து உயிரை இழந்தது.

அவன் பிரக்ருதியை நெருங்கவும் “பார்டெண்டர்” என கத்தினாள் அவள்.



அவள் போட்ட கூச்சலில் பார்டெண்டரான கருப்பின இளைஞன் ஓடி வந்தான். கே.கே மயங்கி கிடப்பதை பார்த்தவன் “வாட் ஹேப்பண்ட் டு கேசவ்?” என்றபடி அவனது கன்னத்தில் தட்டினான்.

“ஐ டோண்ட் னோ... பட் தீஸ் பீபிள் ஆர் சஸ்பீசியஸ்” என்று அந்தக் கும்பலை கை காட்டினாள் பிரக்ருதி.

“ஓ.கே! என்ன நடந்துச்சுனு நான் சி.சி.டி.வில பாத்துக்குறேன்... ப்ளீஸ் கேசவை அவனோட ஃப்ளாட்ல விட்டுடுங்க” என்றான் அவன்.

அவனது ஷிப்ட் முடிய நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டிவிடும் என்றான். பிரக்ருதியும் அவன் கூறிய பெயரை கவனியாது முகவரியைக் கேட்க

“மோண்ட்ஃபோர்ட் ட்ரைவ்ல சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ், ப்ளாட் நம்பர் E15” என்றான் அவன்.

அதை கேட்டதும் பிரக்ருதியின் மூச்சு நின்றுவிட்டது. ஏனென்றால் அங்கே தான் அவளது அக்காவும் மாமாவும் வசித்து வருகிறார்கள். கர்ப்பவதியான அக்காவுக்கு உதவியாக பிரக்ருதி இந்தியாவிலிருந்து வந்த நாளிலிருந்து அங்கே தான் தங்கியிருக்கிறாள். எப்படி இவனை பார்க்காமல் விட்டாள்?

“இப்ப இது ரொம்ப முக்கியம் பாரு” என்று அவள் மண்டையில் தட்டியது மனசாட்சி.

இவனும் அங்கே இருப்பதால் காலதாமதமின்றி வீட்டுக்குச் சென்றுவிடலாம். மாமாவிடம் பார்ட்டிக்கு வந்ததையும் மறைத்துவிடலாமென திட்டமிட்டாள் அவள்.

ஆனால் விதி அவளுக்கு விரித்திருந்த வலை வலுவானது. பிரக்ருதியின் இந்த கணக்கு எதுவும் அதனிடம் செல்லுபடி ஆகாது.


**"*** 

காதல் அலைவரிசை 29.24 அமேசான் கிண்டில்ல இரண்டு பாகங்களாக படிக்கலாம் மக்களே. லிங் 👇🏻

பாகம் 1

பாகம் 2



Comments

Post a Comment