அலைவரிசை 35

Image
  “பொதுவா திறமைசாலிங்களுக்கு யார் மேலயும் பொறாமை வராது... பின்ன யாருக்கு வரும்? எந்த ஃபீல்ட்லயும் அரைகுறை நாலெட்ஜ் இருக்குறவங்களுக்கும், நாலேட்ஜ் இல்லனா கூட இருக்குற மாதிரி சீன் போடுற காலி டப்பாக்களுக்கும் தான் பொறாமை வரும்... ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க, எல்லாரும் எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு பிறக்குறதில்ல... புது விசயத்த கத்துக்கிற ஆர்வமும், ஹார்ட் ஒர்க்கும் இருந்தா யார் வேணும்னாலும் எந்த விசயத்தையும் கத்துக்கலாம்... சோ ஆர்வமும் ஹார்ட் ஒர்க்கும் இல்லாத சோம்பேறி திலகங்கள், ஓவர் நைட்ல ஒபாமா ஆக ஆசைப்படுற ஹாஃப் பாயில்ஸ் எந்த ஃபீல்ட்லயும் முன்னேறாம முன்னேறிப் போறவங்களைப் பாத்து பொறாமைப்படுறதும் அவங்களை பத்தி காஸிப் பேசுறதுமா இருப்பாங்க”                                               -கே.கேவின் மனதின் குரல் சென்னை சிட்டி பண்பலை அலுவலகம், எழும்பூர் (எக்மோர்)... “ பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ? இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ? மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்.. குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்.. புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. ஆடியோ கன்சோலில் பாடலை இடை

அலைவரிசை 31

 



“பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”

                                              -கே.கேவின் மனதின் குரல்

E15, சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ்...

தந்தையும் மகனும் எதிரெதிரே அமர்ந்திருக்க அவர்களுக்கு மத்தியஸ்தம் பேசுபவனைப் போல நின்று கொண்டிருந்தான் ஷ்ரவன்.

அவர் வந்த தகவலை ஷ்ரவன் கூறியதும் வேண்டாவெறுப்பாக ஃப்ளாட்டுக்கு வந்தான் கேசவ். வந்தவரை வரவேற்கும் எண்ணமும் அவனுக்கில்லை என்பதை அவனது அலட்சியமான உடல்மொழியே காட்டியது.



பத்மானந்தும் மகனிடம் அதை எதிர்பார்த்து வரவில்லை என்பதால் அவனது அலட்சியம் அவரைப் பாதிக்கவில்லை.

வந்ததிலிருந்து இப்படியே பார்த்தபடி அமர்ந்திருப்பது அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

“வாட் யூ வாண்ட்?”

“ஐ வாண்ட் யூ பேக் டு கார்கி குரூப்ஸ் ஆப் இண்டஸ்ட்ரீஸ்”

“உங்க பேச்சை நான் கேப்பேன்னு இன்னும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு பாருங்க, ஜோக் ஆப் த இயர்”

“என் பேச்சை நீ கேக்க மாட்டேனு நான் புரிஞ்சிக்கிட்டு ரொம்ப நாளாச்சு... ஆனா இன்னொரு நம்பிக்கை இருக்கு... உன் அம்மாவோட பேர்ல இருக்குற பிசினஸ் கவிழ்ந்துடாம நீ பாத்துப்பனு நம்புறேன்”

என்ன சொன்னால் அவன் ஒப்புக்கொள்வான் என்பது பத்மானந்திற்கு தெரியும். அதை சரியாக செய்து முடித்தார் மனிதர்.

கேசவ் தந்தையை முறைத்தான். இந்த மனிதர் வேண்டிக்கேட்காவிட்டால் கூட இந்தியாவிற்கு திரும்பும் அவனது முடிவை அவன் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அதே நேரம் தனது முடிவைப் பற்றி அவரிடம் தெரிவிக்கும் எண்ணமும் கேசவிற்கு இல்லை.

இதுவரை அவனது தந்தை யாரிடமும் வேண்டுகோள் விடுத்து அவன் பார்த்ததில்லை. முதல்முறையாக அவனிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதாவது கார்கி குழுமத்தின் சேர்மன் என்ற கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டு இறங்கி வந்திருக்கிறார்.

பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது கேசவிற்கு. மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த சோஃபாவில் வசதியாகச் சாய்ந்து கொண்டவன் கால் மேல் கால் போட்டுக்கொண்டான்.

“ஆக்ஸ்வலி, நீங்க இப்பிடி ரெக்வஸ்ட் பண்ணுறப்ப பாக்க நல்லா இருக்கு... ஒன் மோர் டைம் ப்ளீஸ்”

கேலியாக கேட்டான் கேசவ். அவன் கேட்ட தொனியில் பத்மானந்தின் முகம் கடுத்தது.

“கடுப்பா இருக்கா டாட்? உங்களுக்கு எப்பவும் அடுத்தவங்களை கடுப்பாக்க தான பிடிக்கும்? த்சூ த்சூ... பாவமா இருக்கு”

“ஐ அம் நாட் இன் த மூட் டு ஹியர் யுவர் சில்லி ஜோக்ஸ் கிரிஷ்.. உன்னால இந்தியாக்கு வர முடியுமா முடியாதா?”



இந்தியா திரும்பும் முடிவிலிருந்தவன் அவரது திமிர்த்தனமான கேள்வியில் கடுப்பாகி “வர முடியாது மிஸ்டர் பத்மானந்த்” என்று சொல்லிவிட்டு அவனது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான்.

இப்போது கூட இந்த மனிதர் மகன் என்ற பாசத்தில் இங்கே வரவில்லை என்பது புரிந்ததும் அவனுக்குள் எழுந்த ஏமாற்றமும் இயலாமையும் கோபமாக உருமாறியது.

பத்மானந்தும் அவனைப் போலவே கோபத்துடன் எழுந்தவர் இந்தியா வர முடியாதென மைந்தன் மறுப்பதற்கான காரணமாக பிரக்ருதி தான் இருக்கக்கூடுமென என்ற அனுமானத்திற்கு வந்தார்.

இதை இப்படியே விட்டுவிட்டால் காலத்திற்கும் மகனைத் தூரத்தில் நிறுத்தி பார்க்கும் நிலமை வந்துவிடுமென அவரது கல் நெஞ்சின் இளகிய ஓரத்தில் இன்னும் குறையாமல் அவன் மீதிருந்த பாசம் அவரை அச்சப்படுத்திப் பார்த்தது.

ஷ்ரவன் மகனுக்கும் தந்தைக்குமான பிணக்கைத் தீர்த்து வைக்க நண்பன் இருக்கும் அறையின் கதவைத் தட்டினான்.

“விடு ஷ்ரவன்... ஐ வாண்ட் டு பி அலோன்”

“இனாஃப்... லெட் மீ இன்சைட்”

கதவு திறந்தது. பத்மானந்தை பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

“ஏன் கிரிஷ் இவ்ளோ கோவப்படுற? அவர் சொன்னத கொஞ்சம் கன்சிடர் பண்ணு”

“ஐ ஹேட் ஹிம்டா... இன்னும் ஏன் இங்க இருக்குறார் இந்த மனுசன்?”

“ப்ச்! கத்தாத கிரிஷ்”

“முடியலடா... ஏன் எனக்கு மட்டும் இப்பிடி நடக்குது? ரத்தச்சொந்தமா மிஞ்சியிருக்குற இந்தாளும் சரியில்ல... காதலிச்சவளும் சரியில்ல... இவருக்குக் கம்பெனி முக்கியம்... அவளுக்குப் பணம் முக்கியம்... எனக்கு மட்டும் கம்பெனில ஷேர் இல்லனா இவர் இங்க வந்திருப்பாரா?”



உள்ளே இருந்து மைந்தன் புலம்பியதைக் கேட்ட பத்மானந்த் காதலித்தவளுக்குப் பணம் தான் முக்கியமென மைந்தன் கூறியதைக் கேட்டதும் அவரின் மனம் மடமடவென திட்டம் தீட்டியது.

ஃப்ளாட்டை விட்டு வெளியே வந்தவர் பிரக்ருதி அவர்களின் ஃப்ளாட்டில் நுழையப் போவதை பார்த்துவிட்டு “பிரக்ருதி” என்று அழைக்க அவளும் திரும்பினாள்.

“சொல்லுங்க அங்கிள்”

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்மா”

முதலில் யோசித்தவள் பின்னர் சம்மதித்தாள்.

நீரூற்றின் அருகே கிடந்த பெஞ்சில் அமர்ந்தனர் இருவரும்.



“என்ன பேசணும் அங்கிள்?”

“நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல... நீயும் கிரிஷும் லவ் பண்ணுறது எனக்குத் தெரியும்”

பிரக்ருதி அமைதியாக அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையாட்டினாள்.

“நீயும் அவனும் லவ் பண்ணுறதுலாம் ஓ.கே... ஆனா கல்யாணம் பண்ணுறதுக்கு என் சம்மதம் வேணும்ல”

“கிரிஷ் உங்களை சம்மதிக்க வைப்பான்னு நம்புறேன்”

“நல்லா பேசுறம்மா... எனக்குப் பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலனா அவனை நான் என் குடும்பத்துல இருந்து ஒதுக்கி வச்சிடலாம்னு இருக்குறேன்”

“இவங்களோடது பெரிய ராஜகுடும்பம்” என வாய்க்குள் முணுமுணுத்தாள் பிரக்ருதி.

“என்னம்மா சொன்ன?”

“ஒன்னுமில்ல அங்கிள்... கண்டினியூ”

ஏனோ முன்பிருந்த தயக்கமும் பயமும் அப்போதில்லை அவளுக்கு.

“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்... அப்புறம் உன் இஷ்டம்”

“என் இஷ்டம் என்னனா, சீக்கிரமே கிரிஷை கல்யாணம் பண்ணி அவனை மாதிரி ஒரு சிடுமூஞ்சி பையனையும் என்னை மாதிரி கியூட் ஏஞ்சலா ஒரு பொண்ணையும் பெத்துக்கணும்... ஓவரா வாய் பேசுற அவனோட தாத்தா கிட்ட அவங்களை ஒப்படைச்சிட்டு நான் என்னோட ஆர்.ஜே வேலைய பாக்கணும்... இவ்ளோ தான் அங்கிள்... நீங்க ரொம்ப பேசி டயர்ட் ஆகிருப்பிங்க அங்கிள்... போய் ரெஸ்ட் எடுங்க”

பத்மானந்தைச் சீண்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் பிரக்ருதி.

அதீத நம்பிக்கையோடு செல்பவளை கேலிப்புன்னகையோடு பார்த்துவிட்டு “இதெல்லாம் நடக்கணும்னு இருந்தா கடவுள் ஏன் என்னை இங்க அனுப்பிருக்க போறார்? சில்லி கேர்ள்” என்றார்.

பிரக்ருதியோ பத்மானந்த் மீதிருந்த பயம் அகன்று இப்போது E15 ஃப்ளாட்டின் அழைப்புமணியை அழுத்திக் கொண்டிருந்தாள்.

திறந்தவன் ஷ்ரவன். பிரக்ருதியை அவன் யோசனையாகப் பார்க்கவும் “கிரிஷ் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொன்னவாறு உள்ளே நுழைந்தாள் அவள்.

“கிரிஷ் எங்க இருக்க?” என்று உற்சாகமாக கேட்டபடி வந்தவள் அவன் சிடுசிடுவென அறைக்குள் இருந்து வெளியே வரவும் சற்று அமைதியானாள்.

“உனக்கு இப்ப என்னடி வேணும்?” என்று கொதிப்புடன் அவன் கேட்கவும்

“கொஞ்சம் தனியா பேசணும் கிரிஷ்” என்றாள் அவள்.

“என்ன சொல்லி என்னை இரிட்டேட் ஆக்கப்போற?”

“நான் உன்னை இரிட்டேட் ஆக்க வரல கிரிஷ்”

“அப்ப எதுக்கு?” என்றவனிடம் மீண்டும் தனியே பேசவேண்டுமென அழுத்திக் கூறினாள் பிரக்ருதி.

ஷ்ரவன் இருவரையும் பார்த்துவிட்டு ஃப்ளாட்டை விட்டு வெளியேறினான்.

“இப்ப சொல்லு... என்ன விசயம்?”

“ஐ லவ் யூ கிரிஷ்”

எதையும் யோசிக்காமல் திருதிடுப்பென அவள் கூறவும் கேசவ் அதிர்ந்தான்.

“கிருதி ஆர் யூ ஷ்யூர்?”

உறுதிபடுத்திக்கொள்ள அவன் கேட்க “யா! ஐ அம் இன் லவ் வித் யூ மேட்லி” என்றவள் அவன் முகம் குழப்பத்திலிருக்கும் போதே அங்கே கிடந்த மோடாவை எடுத்துப் போட்டாள்.

கேசவ் புரியாமல் விழிக்கும் போதே அதிலேறியவள் அவன் உயரத்திற்கு இருப்பதை அளந்து காட்ட அவன் இதழில் மென்னகை பூத்தது.

“என்ன பண்ணுற நீ?”

“கீழ நின்னு பேசுறப்ப கம்ஃபர்டபிளா இல்ல... அதான் இப்பிடி ஒரு அரேஞ்மெண்ட்... இப்ப நான் சொல்லுறத கவனமா கேளு... நீ அன்னைக்கு சொன்னல்ல, உன் லைஃப் பார்ட்னர் கூட சிம்பிளா ஒரு லைஃபை வாழணும்னு... அந்த லைஃப் பார்ட்னரா நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்... சந்தோசமான வாழ்க்கைக்கு நீ பணக்காரனா இருக்கணும்னு அவசியமில்லனு இப்ப புரிஞ்சுக்கிட்டேன்... ஐ டோண்ட் வான்ட் டு மிஸ் யூ... பிகாஸ் வாழ்க்கைல சில விசயமெல்லாம் ஒரு தடவை போச்சுனா மறுபடி கிடைக்கவே கிடையாது... சில்லி ரீசன்காக உன்னை நான் இழந்துட்டேன்னா நீ எனக்கு மறுபடி கிடைக்காமலே போயிடுவனு பயமா இருக்கு... ஐ லவ் யூ கிரிஷ் அண்ட் ஐ டோண்ட் வாண்ட் டு லூஸ் யூ” என்றவள் பதில் பேச நேரமளிக்காமல் கேசவின் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டாள்.



கேசவ் இப்போதும் அதிர்ந்தான். ஆனால் பிரக்ருதி காதலை கூறியதை விட கிரிஷாகவே தன்னை ஏற்றுக்கொண்டதில் ]ஆயிரம் மடங்கு அதிக சந்தோசத்தை அனுபவித்தவன் “ஐ லவ் யூ டூ” என்று புன்னகையோடு கூறிவிட்டு அவளை அணைத்துக்கொண்டான்.

இப்போதே அவளிடம் தான் யாரென்பதை கூற மனம் பரபரத்தது.

பிரக்ருதி அவனிடமிருந்து விலகியவள் “இந்த வீக்கெண்ட் நாங்க இந்தியாக்குப் போறோம் கிரிஷ்... ஐ வில் டெல் அபவுட் யு டு அப்பா... நீயும் உன் ஃபாதரை சம்மதிக்க வை... அந்த கறார் அங்கிள் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னை குடும்பத்த விட்டு விலக்கி வச்சிடுவேன்னு பயம் காட்டுனார்... சோ ப்ளீஸ் அவரை எப்பிடியாச்சும் சம்மதிக்க வை” என்க

“வாட்? நீ அப்பா கிட்ட பேசுனியா?” என கேட்டான் அவன்.

“யெஸ்... இங்க வர்றதுக்கு முன்னாடி அவர் கிட்ட பேசிட்டு தான் வந்தேன்”

இயல்பாக சொல்லிவிட்டு மோடாவிலிருந்து இறங்கினாள் அவள். அதே நேரம் வீட்டின் கதவு திறந்து உள்ளே பிரவேசித்தார் பத்மானந்த்.

பிரக்ருதியின் முகத்திலிருந்த புன்னகையையும் கேசவின் முகத்திலிருந்த தெளிவையும் பார்த்துவிட்டு எதிலோ தோற்றது போல உணர்ந்தார் அவர்.

மகனிடம் வந்தவர் “என்னப்பா மருமக கிட்ட பேசிட்டியா?” என்று கேட்க

“இன்னைக்கு தான் என் லவ்வை அவ அக்செப்ட் பண்ணிருக்குறா... தயவு பண்ணி எதுவும் சொல்லி குட்டைய குழப்பிடாதிங்க” என்றான் கேசவ்.

பத்மானந்த் சத்தமாக நகைத்துவிட்டு “என் மகனோட வாழ்க்கைய கெடுக்க எனக்கு என்ன பைத்தியமா? இப்ப நான் ஏதாவது சொன்னா இந்த பொண்ணு உன்னை விட்டு விலகிடுவானு பயப்படுறியா கிரிஷ்? கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸோட சேர்மன் பத்மானந்தோட ஒன் அண்ட் ஒன்லி சன்னை வேண்டாம்னு சொல்ல எந்தப் பொண்ணுக்குத் தைரியம் இருக்கு? உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா வரப் போற லக்சரியான லைஃபை என்னோட குறுக்கீட்டால இழக்குற அளவுக்கு பிரக்ருதி ஒன்னும் ஏமாளி இல்ல கிரிஷ்... கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நாங்க பேசுனப்ப இந்த விசயத்த நான் அவ கிட்ட சொன்னேன்... அப்பவே மருமகப்பொண்ணு தெளிவாயிருப்பா... அதான் உன் கிட்ட வந்து லவ்வ சொல்லிட்டா போல” என்றார்.

அவர் கூறிய தகவல் பிரக்ருதிக்கும் கேசவிற்கும் ஒரு சேர அதிர்ச்சியைக் கொடுத்தது.

பத்மானந்த் கூறியபடி கார்கி குழுமத்தை மேலாண்மை செய்யும் குடும்பத்தின் வாரிசா கேசவ் என பிரக்ருதி அதிர, தான் பணக்காரன் என்பதை தந்தை மூலமாக அறிந்த பிற்பாடு தன்னிடம் பிரக்ருதி காதலைக் கூறினாளா என்று கேசவ் அதிர்ந்தான்.

இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

“இவர் சொல்லுறது உண்மையா கிரிஷ்?” – பிரக்ருதி.

“இது நான் கேக்க வேண்டிய கேள்வி கிருதி” – கேசவ்.

இருவருக்கும் இடையே புகுந்தார் பத்மானந்த்.

“நான் சொன்னது எல்லாமே உண்மை... கிரிஷ் கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸோட மேஜர் ஷேர்ஹோல்டர் அண்ட் டைரக்டரும் கூட... இதை நான் அப்பவே உன் கிட்ட சொல்லிட்டேனேம்மா... என்னமோ தெரியாத மாதிரி கேக்குற?”

அவர் கூறிய பொய்யில் செயலாற்ற முடியாமல் அதிர்ந்து போனாள் பிரக்ருதி.

“பணத்துக்காக இந்தப் பொண்ணு உன்னை ஏத்துக்க மாட்றாங்கிறத நீ ஷ்ரவன் கிட்ட புலம்புனப்ப நான் கேட்டுட்டேன் கிரிஷ்... என் மகனை ரிஜெக்ட் பண்ணுற அருகதை எந்தப் பொண்ணுக்கும் இல்ல... அதனால நீ ஒன்னும் பணத்துல குறைஞ்சவன் இல்லனு அவ கிட்ட சொல்லுறதுக்காக தான் தனியா அழைச்சிட்டுப்  போய் பேசுனேன்... வேண்டாவெறுப்பா வந்தவ நீ பணக்காரன்னு சொன்னதும் அவ்ளோ சந்தோசப்பட்டா... நான் நினைச்ச மாதிரி உன்னோட உயரம் என்னனு புரிஞ்சதும் உன்னை லவ் பண்ணுறதா உன் கிட்ட சொல்லிட்டா... விளக்கம் போதுமா கிரிஷ்?”

கேசவ் தந்தையையும் பிரக்ருதியையும் மாறி மாறி பார்த்தான். அவனால் தந்தையின் பேச்சை நம்ப முடியவில்லை. பிரக்ருதியை அவன் பார்க்க அவளோ எதுவும் பேசாமல் சிலையாய் நின்றாள்.

“கிருதி நீ அப்பா கிட்ட பேசுனேன்னு சொன்னல்ல?”

“ஆமா கிரிஷ்... ஆனா நாங்க பேசிக்கிட்ட விசயமே வேற”

“ஏன்மா பொய் சொல்லுற? இத்தனை நாள் இல்லாம திடீர்னு இன்னைக்கு உனக்கு என் மகன் மேல காதல் பொங்கி வர என்ன காரணம்? முட்டாள் கூட அந்தக் காரணத்த கெஸ் பண்ணிடுவான்... நீ காதலிச்சவன் வெறும் கிரிஷ் இல்ல, கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸோட டைரக்டர் கேசவ் கிரிஷ்னு தெரிஞ்சதும் அவனோட பணத்துக்காக நீ லவ்வ ஏத்துக்கிட்ட”

பத்மானந்த் பேசிக்கொண்டே போக கேசவின் மனதிலும் பத்மானந்த் கேட்ட அதே கேள்வி உதயமானது.

என்றுமில்லாத திருநாளாக இன்று ஏன் இவள் எனது காதலை உணர்ந்ததாக கூறினாள்? அப்போதே உன்னால் எனக்கு நான்கு கோப்பை ஃப்ராப்புசீனோவை தவிர வேறென்ன தரமுடியுமென எகத்தாளமாக கேட்ட பிரக்ருதி அவன் கண் முன் வந்து போக இம்முறையும் பிரக்ருதியிடம் உண்மையான காதலை எதிர்பார்த்து தோற்றுப்போய்விட்டதாக உணர்ந்தான் கேசவ்.

தன் எதிரே நிற்பவளின் குழப்பமும் அதிர்ச்சியும் அப்போது அவனுக்கு நாடகமாக தான் தோன்றியது. பிரக்ருதி அவனது முகபாவம் மாறியதும் ஏதோ அபாயமென சுதாரித்தாள்.

குயுக்தியோடு அவளை நோக்கி கொண்டிருந்த பத்மானந்திடம் “பொய் சொல்லாதிங்க அங்கிள்... நீங்க என் கிட்ட கிரிஷ்சோட அப்பானு மட்டும் இன்ட்ரோ பண்ணிக்கிட்டிங்க... வேற எதுவும் சொல்லல.. முக்கியமா அவன் பணக்காரன்ங்கிற பேச்சு நமக்குள்ள வரவேல்ல” என்று உறுதியாய் மறுத்தாள்.



கேசவ் அவளைத் தன் புறம் திருப்பியவன் “திடீர்னு இன்னைக்கு உன் மனசு மாறுனதுக்கு என்ன காரணம்?” என்று கேட்டான்.

“இன்னைக்கு என் மனசு மாறல கிரிஷ்... நான் உன்னை ரொம்ப நாளா லவ் பண்ணுறேன்... ஆனா உன் கிட்ட சொல்லல... ஏன்னா,” அவள் முடிக்கும் முன்னரே இடையில் புகுந்தான் கேசவ்.

“ஏன்னா நான் பணக்காரன் இல்ல... இன்னைக்கு இவர் வந்து உண்மைய சொன்னதும் உனக்குள்ள தூங்கிட்டிருந்த காதல் முழிச்சிடுச்சு... சோ இப்பவும் நீ என்னை எனக்காக லவ் பண்ணல... கேசவ் கிரிஷ்ங்கிறவனோட பணத்துக்காக நீ லவ் பண்ணுறதா சொல்லிருக்க... சீ”

கேசவின் ‘சீ’ என்ற வார்த்தையிலும் அவன் முகம் காட்டிய அருவருப்பிலும் பிரக்ருதி உடைந்து போனாள்.

அவளது முகம் மெதுமெதுவாக அழுகைக்குத்  தாவுவதையும், கேசவ் கொதிப்புடன் நிற்பதையும் ஏதோ சினிமா பார்ப்பது போல வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார் கலகக்காரரான பத்மானந்த்.


Comments

Post a Comment