அலைவரிசை 32

Image
  “True talent and hardwork always winனு சொல்லுவாங்க... இது ரியாலிட்டில அவ்ளோ சீக்கிரம் பாசிபில் இல்ல... ஏன்னா இங்க ஹார்ட் ஒர்க் பண்ணுற திறமைசாலிங்களை விட போற போக்குல எதையோ செஞ்சுட்டு அதை விளம்பரப்படுத்துற காலி டப்பாக்கள் தான் ஜெயிக்கிறாங்க... உதாரணத்துக்கு சினி ஃபீல்டை எடுத்துக்கோங்க... அடுத்தவங்க கதைய திருடி மூவி எடுக்குறவங்க தான் இன்ஸ்டெண்ட் வெற்றிய ருசிக்கிறாங்க... ஹார்ட் ஒர்க் பண்ணுற டைரக்டர், வித்தியாசமான முயற்சி பண்ணுற டைரக்டர் ஜெயிக்கிறதுக்கு குறைஞ்ச பட்சம் ஃபைவ் டு டென் இயர்ஸ் ஆகுது... லைக்வைஸ் ஆர்ட்டிஸ்டா பெர்ஃபார்ம் பண்ணுற ஆக்ட்ரசை விட க்ளாமர் காட்ட ரெடியா இருக்குறவங்க தான் சீக்கிரமா ஸ்டார் அந்தஸ்தை அடையுறாங்க... அவங்களை ரசிக்கிற கூட்டம் தான் அதிகம்... பட் கூட்டம் வரணும்ங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்ங்கிற மனப்பான்மை ரொம்ப கேவலமானது... சோ லேட்டா ஜெயிச்சாலும் உங்க உழைப்பாலயும் திறமையாலயும் மட்டும் ஜெயிக்க பாருங்க... அந்த வெற்றிய தான் உங்களால மத்தவங்க கிட்ட பெருமையா சொல்லிக்க முடியும்... கேவலமான வழியில ஜெயிச்சா அந்த வெற்றியும் நிலையா இருக்காது... நான் இப்பிடி தான் ஜெய

அலைவரிசை 17

 



நீங்க ஹேப்பியா இருக்குறப்ப உங்களுக்கு நெருங்கின யாராச்சும் அதை பாத்து குதர்க்கமா பேசுனாங்கனா, எழுதி வச்சுக்கோங்க, அவங்க உங்களோட வெல்விஷரா இருக்க முடியாது... வெல்விஷர் ரூபத்துல நீங்க எப்படா உருப்படாம போவிங்கனு காத்திருக்குற ப்ளாக் ஷீப் அவங்க... ஹானஸ்ட்லி, நம்மளோட வளர்ச்சியும் முன்னேற்றமும் நமக்கு நெருக்கமான எல்லாருக்கும் சந்தோசத்தை மட்டுமே குடுக்கும்னு நினைச்சிங்கனா நீங்க அப்பாவியா தான் இருப்பிங்க... இன்னைக்குக் காலகட்டத்துல அண்ணன் முன்னேறுனா தம்பிக்குப் பிடிக்கிறதில்ல... அப்பிடி இருக்கிறப்ப நல்லவர்னு நீங்க நினைக்குற யாரோ ஒருத்தருக்கு மட்டும் எப்பிடி உங்களோட முன்னேற்றமோ சந்தோசமோ பாசிட்டிவா தோணும்?”

                                              -கே.கேவின் மனதின் குரல்

கட்டர்மில் ட்ரைவ், டல்லாஸ்...

ஜேக்கப்பின் வீட்டில் பார்ட்டி களை கட்டியிருந்தது. லியானாவின் நண்பர்கள், அவளது பெற்றோர் மற்றும் ஜேக்கப்பின் பெற்றோர் என அனைவரும் வருகை தந்திருந்தனர்.

ஜேக்கப் பிருத்வியின் வீட்டுக்கு வந்து தனிப்பட்ட முறையில் பிரக்ருதிக்குத் தங்கள் திருமண அறிவிப்பு பார்ட்டிக்கான அழைப்பிதழைக் கொடுத்ததால் அவளுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. தனியே போக முடியாதென அடம்பிடித்து அவள் பிரக்யாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டாள்.

ஷ்ரவனும் கே.கேவும் பார்ட்டிக்குச் செல்வதால் அவர்களின் காரிலேயே பார்ட்டிக்குச் செல்வதற்கும் அனுமதி வாங்கிவிட்டனர் இருவரும்.

அவர்களோடு காரில் வந்து ஜேக்கப்பின் வீட்டிற்கும் வந்துவிட்டனர். கே.கேவும் ஷ்ரவனும் பரிசாக வாங்கிய ஷேம்பெய்ன் பாட்டிலுடன் நுழைந்தனர்.





வேற கிப்ட் எதுவும் கிடைக்கலயா?”

ஷ்ரவனின் காதை கடித்தபடி மெதுவாக வினவினாள் பிரக்யா.

இந்த மொமண்டுக்கு ஏத்த கிப்ட் இது தான்

பிரக்யாவும் பிரக்ருதியும் ஜேக்கப்லியானாவுக்காக வாங்கிய பூங்கொத்தை சுமந்தபடி வீட்டுக்குள் நுழைந்தனர்.

‘Fall in love’ என்ற வார்த்தைகள் சுவரில் ஒட்டப்பட்டிருக்க அவற்றை பேபி பிங்க் மற்றும் பீச் வண்ண பலூன்கள் இதயவடிவில் சூழ்ந்திருந்தன.

வீட்டின் ஹாலானது சிறுசிறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஒரு மேஜையில் கேக் மற்றும் பார்ட்டிக்கு வந்தவர்களுக்கான பானங்கள் மற்றும் சாக்லேட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.    

நால்வரும் தங்களின் பரிசுப்பொருட்களை அவர்களிடம் கொடுக்க நன்றியோடு அவற்றை வாங்கிக்கொண்டனர் இருவரும்.

டெகரேஷன் எல்லாம் சூப்பரா இருக்கு ஜேக்

எல்லாமே லியாவும் நானும் சேர்ந்து பண்ணுனது தான்

அடுத்த சில நிமிடங்களில் மோதிரத்தோடு லியானாவிடம் வந்த ஜேக்கப் தன்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்க அவளும் புன்னகையோடு சம்மதிக்க விருந்தினர்கள் ஆர்ப்பரிக்க அவனது மோதிரம் அவளது விரலை அலங்கரித்தது.



பின்னர் இருவரும் ஷாம்பெய்ன் பாட்டிலை நுரைக்க நுரைக்க திறந்து குதூகலித்தனர். அடுத்து கேக்கை இருவரும் சேர்ந்து வெட்ட கரகோஷம் எழுந்தது அங்கே.

ஆளுக்கொரு துண்டு கேக்குடன் அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் நகர்ந்தனர்.

ஷ்ரவனைத் தள்ளிக்கொண்டு தனியே சென்ற பிரக்யா அவனது கேக்கையும் சேர்த்து சாப்பிட்டபடி முந்தைய தினம் ஏன் அவன் கத்திக்கொண்டிருந்தான் என வினவினாள்.

அது உனக்கு எப்பிடி தெரியும்?” சாப்பிடப்போன கேக் துண்டை அந்தரத்தில் நிறுத்தியபடி கேட்டான் அவன்.

கே.கே நீ கத்துனத கேட்டுட்டு உன்னைச் சமாதானம் பண்ணுனதா கிருதி சொன்னா... அவ ஜிம்முக்குக் கிளம்பிட்டு கே.கேவை கூப்பிட வந்தப்ப நீங்க ரெண்டு பேரும் பேசுனதை கேட்டுட்டா... ஏதோ ஷேர் ட்ரான்ஸ்ஃபர் அது இதுனு பேசுனிங்களாம்... இதுக்கு முன்னாடி ஷேர் ட்ரேடிங் கன்சர்ன்ல ஒர்க் பண்ணுனியா?”

ஷ்ரவன் கொஞ்சம் நிதானித்தவன் கேக்கை விழுங்கினான்.

ஆன்சர் இன்னும் வரல



பிரக்யா நினைவுறுத்தவும் புருவத்தைக் கீறியவன்

இல்ல... ஐ வாஸ் வொர்க்கிங் அஸ் சீஃப் ஃபினான்ஸ் ஆபிசர்

அப்புறம் ஏன் இங்க...” என அடுத்த கேள்வியைக் கேட்டதும் பக்கென்று நகைத்தான் ஷ்ரவன்.

நான் ஒன்னும் கொலை பண்ணிட்டு இங்க வந்து தலைமறைவா ஒளிஞ்சிருக்கல... பயப்படாத...  இப்ப ஷேர் ட்ரேடிங்கை விட்டுட்டு நம்மளை பத்தி நம்ம லவ்வ பத்தி பேசலாமா?”

என்னைப் பத்தி உனக்கு எல்லாமே தெரியும்... நீ உன்னைப் பத்தி சொல்லு

இப்ப என்ன? என்னோட இந்தியன் லைஃப் பத்தி உனக்குத் தெரியணுமா?”

ஷ்ரவன் பிரக்யாவிடம் கேட்க அதே கேள்வியைத் தான் கே.கேவும் பிரக்ருதியிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

ஏனென்றால் பங்குமாற்றம் பற்றிய பேச்சுவார்த்தையை அவளும் கேட்டிருந்தாளே! நாம் பிரக்ருதி கே.கேவிடமே வருவோம்.

ஆமா! எனக்குத் தெரியணும்... உனக்கு என்னமோ நடந்திருக்கு... அதனால தான் நீ சைக்கலாஜிக்கலா அஃபெக்ட் ஆகியிருக்க... சொல்லுடா ப்ளீஸ்

நான் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டிருக்குற டாக்டர் என்னை பழைய விசயங்களைப் பேசக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காங்க... என்னால ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ல முடியும்... நானும் ஷ்ரவனும் அக்யூஸ்ட் இல்ல... இந்தியால எங்களால நிம்மதியா இருக்க முடியாதுனு இங்க ஓடி வந்திருக்குறோம்... ஜேக்கப் ஷ்ரவனோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்... இங்க வந்ததும் எங்களுக்கு அவன் சப்போர்ட்டா இருந்தான்

ஷேர் ட்ரான்ஸ்ஃபர்?”

ஷ்ரவன் இதுக்கு முன்னாடி ஒரு கன்சர்ன்ல சீஃப் ஃபினான்சியல் ஆபிஷரா ஒர்க் பண்ணுனான்... அதோட எம்.டிக்கும் அவனுக்கும் அடிக்கடி தகறாரு வந்ததால ரிசைன் பண்ணிட்டான்... அங்க இப்ப ஷேர் ட்ரான்ஸ்ஃபர் பண்ணப்போறாங்கனு தெரிஞ்சவங்க இன்ஃபார்ம் பண்ணுனாங்க... அதை தான் என் கிட்ட சொல்லிட்டிருந்தான்... உனக்கு பிரக்யாவோட லைஃபை பத்தி எந்த பயமும் வேண்டாம்... அதுக்கு நான் கேரண்டி

எனக்குலாம் எதை பத்தியும் பயமில்ல... உன் ஃப்ரெண்ட் என்ன மாணிக்கமா வாழுற மாணிக் பாட்ஷாவா? அட அப்பிடியே கிரிமினலா இருந்தாலும் நாங்க அவனை நல்லவனா மாத்திடுவோம்என்றாள் பிரக்ருதி அமர்த்தலாக.



கே.கே கேக்கை காலி செய்தவாறு கண்ணாடி கதவின் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே சத்தமாக நகைத்தான். இருவரும் கதவருகே நின்று கொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லாம் ஹாலில் நின்று உரையாடிக்கொண்டிருக்க அவனது சிரிப்பு சத்தத்தைக் கேட்டு சில தலைகள் கதவை நோக்கி திரும்பின.

பிரக்ருதி முட்கரண்டியை அவன் கண்ணில் குத்துவது போல காட்டினாள்.

ஏன்டா சிரிக்கிற?”

உனக்குப் பயமில்லனு சொன்னியே, அதை நினைச்சேன், சிரிச்சேன்

அதுக்கு ஏன் சிரிக்குற?”

எங்க ஃப்ளாட்ல இருந்து நான் உன்னை வெளிய பிடிச்சுத் தள்ளுனப்ப நீ பிருத்வி ப்ரோ கால்ல விழுந்த... அப்ப அவரை பாத்து நீ ஒரு லுக் விட்டியே, அதுல கலப்படம் இல்லாத அக்மார்க் பயம் தெரிஞ்சுது

சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான் அவன்.

பிருத்வி மாமா மேல எனக்குக் கொஞ்சம் பயம்னு ஒத்துக்குறேன்

அவர் கிட்ட மட்டும் தான் பயமா?”

பிரக்ருதி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இரகசியக்குரலில் பேச ஆரம்பித்தாள்.

ஆக்ஸ்வலி எனக்கு அவரை விட இன்னும் ரெண்டு விசயம் மேல ரொம்ப பயம்... நம்பர் ஒன் பேய், நம்பர் டூ டெத்

அவள் இரகசியம் பேச வாகாக தலையை குனிந்து காது கொடுத்த கே.கே, பிரக்ருதி கூறிய இரண்டு விசயங்களைக் கேட்டதும் சிரிப்பு பீறிட நிமிர்ந்தான்.

பிறக்குற எல்லாரும் செத்து தான் ஆகணும்... அதை நினைச்சுப் பயப்படுறது வேஸ்ட்... ஆனா நம்பர் ஒன்னுனு பேயை சொன்ன பாரேன்... முடியல கிருதி

சிரிக்காத வளந்த பனைமரமே

மிச்சம் வைத்திருந்த ஒரு துண்டு கேக்கை உருட்டியபடி அவள் சீற கே.கே அதை முட்கரண்டியில் குத்தி தனது வாயில் போட்டுக்கொண்டான்.

நீ இவ்ளோ பயப்படுறதால உன் கிட்ட ஒரு கதைய சொல்லியே ஆகணும் கிருதிஎன்றபடி கேக் ப்ளேட்டை வைத்தவன் இரண்டு சாக்லேட்களை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

என்ன கதை என்று கேட்டவண்ணம் கதவைத் திறந்து அவனோடு வெளியே சென்றாள் பிரக்ருதி. அங்கிருந்த மற்ற வீடுகளிலும் மின்விளக்கு அலங்காரங்களும் வீட்டின் முன்னே வினோதமான கூடாரங்களும் போடப்பட்டிருந்தன.

அவற்றை வேடிக்கை பார்த்தபடியே கே.கே கூறிய கதையைக் கேட்க தயாரானாள்.

சொல்லட்டுமா?”

அட சொல்லுயா... அப்பிடி என்ன பயங்கரத்தை நீ சொல்லப் போறனு பாப்போமே

சற்று அலட்சியமாக அவள் கூற நமட்டுச்சிரிப்புடன் ஆரம்பித்தான்.

ஆக்ஸ்வலி இது ஒரு அர்பன் லெஜண்ட்என அவன் கூறுகையிலேயே

ஸ்டாப் ஸ்டாப்! இந்தக் கதைய ஆல்ரெடி உன் ஃப்ரெண்ட் பிரகி கிட்ட சொல்லிட்டான்... ‘தி லேடி ஆப் ஒயிட் ராக் லேக்தானே? போடா டேய்என்றபடி நகர முயன்றாள் பிரக்ருதி.

அவளது கையைப் பிடித்து இழுத்து நிறுத்திஅட நில்லும்மா... நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... இந்த அர்பன் லெஜண்ட் வேற... இது ஆப்ளீன்ல நடந்ததுஎன்றான் கே.கே.

பிரக்ருதி கண்களை அகல விரித்துஒவ்வொரு ப்ளேசுக்கும் ஒரு அர்பன் லெஜண்டா? இது டெக்சாஸா இல்ல டெவிள் ப்ளேஸா?” என்றாள்.

இந்த அர்பண்ட் லெஜண்டோட நேம்தி ப்ளாக் ஐய்ட் சில்ரன்’... ஆப்ளீன்ல ப்ரையன் பெத்தேல்னு ஒருத்தர் கார்ல ஏறுனப்ப கார் கண்ணாடியை இரண்டு பசங்க தட்டுனாங்களாம்... அவங்க தலைய குனிஞ்சு நின்னதும் அவர் என்னனு கேட்டாராம்... எங்க அப்பா அம்மா எங்களை இங்க விட்டுட்டுப் போயிட்டாங்க, ப்ளீஸ் எங்களுக்கு லிப்ட் குடுங்கனு அந்தப் பசங்க கேட்டாங்களாம்...

அவங்களோட தலை குனிஞ்சு இருந்தாலும் ஸ்கின் கலர் வெளிறிப் போய் இருந்துச்சாம்... பெத்தேலும் அவங்களுக்கு லிப்ட் குடுக்குறதுக்காக கார்க்கதவைத் திறந்துட்டு இறங்குனாராம்... அப்ப அவங்கள்ல ஒரு பையன் நிமிர்ந்து அவர் கிட்டதேங்க்ஸ்னு சொன்னானாம்... அந்த டைம்ல அவர் அவனோட கண்ணைப் பாத்துட்டார்... அவனோட கண்ணு முழுக்க கருப்பா இருந்துச்சாம்... பெத்தேலுக்குப் பயம் அதிகமாகி உடனே காருக்குள்ள உக்காந்துட்டாராம்... அந்தப் பசங்க அதுக்கு அப்புறம் ரொம்ப கோரமான குரல்ல கதவைத் திறக்க சொன்னாங்களாம்... எங்களை உள்ள விடு உள்ள விடுனு கத்திட்டே இருந்தாங்களாம்.. பெத்தேல் பயந்து காரை எடுத்துட்டு ஓடிட்டாராம்...

இதே இன்சிடெண்ட் ஒரு கபிள்சுக்கும் நடந்துச்சாம்... அவங்க வீட்டுக்கதவை தட்டி எங்கப்பா அம்மா இன்னும் கொஞ்சநேரத்துல இங்க வந்துடுவாங்க... அது வரைக்கும் நாங்க உள்ள வரலாமானு அந்தப் பசங்க கேட்டதும் அந்த கபிள்ஸ் பாவப்பட்டு வீட்டுக்குள்ள அழைச்சுக்கிட்டாங்க

பாதியில் நிறுத்தினான் அவன். நகம் கடித்தபடி கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பிரக்ருதி ஆர்வத்தின் உச்சியில் இருந்தாள்.

அங்க போனதும் என்னாச்சு? சொல்லுடா இல்லனா என் மண்டை வெடிச்சுடும்

அங்க போனதும் அவங்கள்ல ஒருத்தன் நான் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கலாமானு கேட்டானாம்... அப்ப அந்த வீடு லேடி அவங்களோட கண்ணு கருப்பா இருந்ததை பாத்துட்டாங்க... பயத்தோட சரினு சொன்னவங்க, ரெண்டு பசங்களும் ரெஸ்ட் ரூம் போனதும் ஹஸ்பென்ட் கிட்ட அந்தப் பசங்க கண்ணு கருப்பா இருந்ததை சொல்லிடுறாங்க... வெளிய வந்த பசங்க அவங்க பேரண்ட்ஸ் வந்துட்டாங்கனு சொல்லிட்டு கதவை திறந்து ஓடிட்டாங்களாம்... அந்த லேடி கண்ணாடி கதவு வழியா வினோதமான உயரமான மனுசங்க அவங்களோட நடந்து போறதை பாத்துருக்காங்க

அப்புறம் என்னாச்சு?”

அந்த வீட்டுல நிறைய அமானுஷ்யமான இன்சிடெண்ட்ஸ் நடந்துச்சாம்... அவங்க வீட்டுல வளத்த பூனை செத்துப் போச்சாம்... அந்த லேடிக்கும் அவங்க ஹஸ்பெண்டுக்கும் கேன்சர் வந்துச்சாம்... இது எல்லாமே ப்ரையன் பெத்தேல் ஏப்ளீன் ரிப்போர்ட்டர் நியூஸ்ல சொன்னது

பிரக்ருதி கதையில் மூழ்கிவிட்டாள்.  கதை முடிந்ததும் கண் சிமிட்டியவள்நான் பயப்படலையேஎன்றாள் நக்கலாக.

சரிம்மா... நீ தைரியசாலி தான்... இப்ப வீட்டுக்குள்ள போகலாமா?” என்று அவளை அழைத்தான் கே.கே.

நீ போ கிரிஷ்... நான் இங்க நின்னு வேடிக்கை பாத்துட்டுருக்குறேன்என்றபடி பக்கத்து வீட்டைக் காட்டினாள். அங்கே ஆரஞ்சு வண்ண கூடாரங்கள் போடப்பட்டு வினோதமான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.



கே.கேவும் உள்ளே செல்ல சில அடிகள் நடந்தான். அப்போது தான் அச்சம்பவம் நடந்தேறியது.

பிரக்ருதி பக்கத்து வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது அவளது கையை யாரோ சுரண்டினார்கள். திரும்பி பார்த்தவள் அங்கே ஒரு சிறுவனும் சிறுமியும் தலையைக் குனிந்து நிற்கவும்ஹாய் பசங்களாஎன்றாள்.

அவளிடம்எங்கப்பாவும் அம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க... நாங்க உங்க வீட்டுக்குள்ள வரலாமா?” என்று சொன்னபடி அச்சிறுமியும் அவளுடன் நின்று கொண்டிருந்த சிறுவனும் ஒரே நேரத்தில் நிமிர்ந்தனர்.

அவர்களின் முகம் வெளிறி கண்கள் கருப்பு வண்ணத்தில் இருக்க பிரக்ருதி பயத்தில் உறைந்து போனாள்.

தொண்டை இறுகிப் போய் குரல் வெளிவராமல் சண்டித்தனம் செய்ய கண்கள் மட்டும் வீட்டை நோக்கி செல்லும் கே.கேவிடம் திரும்பியது.

அவர்கள் மெதுவாக பிரக்ருதியின் கையைப் பற்றவும் பயத்தை தூக்கியெறிந்தவள்கிரிஷ்என்று கத்தியபடி அவனை நோக்கி ஓடினாள்.

அவள் கத்தியதும் திரும்பிப் பார்த்தான் கே.கே.

பிரக்ருதி அவனை நெருங்க சில அடிகள் இருந்த போது ஏதோ காலில் தடுக்கி குப்புற விழ போக, அவளைக் காப்பாற்றுகிறேன் என்று கதாநாயகன் அவதாரம் எடுத்து வந்த கே.கே அவள் மேலே வந்து விழுந்த வேகத்தில் தானும் தரையில் விழுந்தான்.

தலை நச்சென்று தரையில் அடித்து வலி சுரீரென உறைத்த அதே நொடியில் அவன் மீது விழுந்த பிரக்ருதியின் உதடுகள் விபத்தாக அவனது இதழில் பொருந்தி போக வலி மறைந்து இப்போது மின்சாரத்தின் அதிர்வு கே.கேவின் உடலெங்கும்.



அதே அதிர்ச்சி தான் பிரக்ருதிக்கும்.

அடியே! இது தான் சாக்குனு அவனுக்கு லிப் டு லிப் கிஸ் அடிக்கிறியா?” என்று அவளது மனசாட்சி கழுவி ஊற்ற வேகமாக எழுந்து அமர்ந்தாள் பிரக்ருதி.

அவள் எழுந்ததும் பதற்றத்தோடு எழுந்த கே.கேசைட் அடிக்கிறேன்னு ஃப்ளர்ட் பண்ணி பண்ணி இப்ப லிப் டு லிப் கிஸ்சே குடுத்துட்டல்லஎன்று ஆரம்பிக்க

ஐயா சாமி! நான் ஒன்னும் ஆசையா உன்னை கிஸ் பண்ணல... பேயை பாத்து பயந்து ஓடி வந்து உன் மேல விழுந்ததுல உன் லிப்ல என் லிப் டச் பண்ணிடுச்சுஎன அந்தக் குழந்தைகள் நின்ற திசையைக் காட்டினாள் பிரக்ருதி.

அதை தான் கிஸ்னு சொல்லுவாங்கஎன்றபடி பிரக்ருதி கை காட்டிய திசையை நோக்கினான் கே.கே

அவன் பார்த்ததும் அவர்கள் வீட்டை நோக்கி வர பிரக்ருதியோ கே.கேவின் பின்னே பதுங்கினாள்.

ஏன் மரம் மாதிரி நிக்கிற கிரிஷ்? வா ஓடிடலாம்

ப்ச்! என்ன தான் செய்யுறாங்கனு பாப்போமே

பேய் என்னடா பண்ணும்? ஒன்றரை டன் வெயிட்ல ஓங்கி அடிச்சு நம்மளை மர்கயா பண்ணிடும்... தப்பான நேரத்துல உனக்குத் தைரியம் வருதேஎன்று புலம்பியவள் அக்குழந்தைகள் கைக்கெட்டும் தூரத்தில் வரவும் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவர்களோ கே.கேவை பார்த்துட்ரிக் ஆர் ட்ரீட்?” என்று கேட்டனர்.

அவர்கள் கேட்டது புரியாமல் பிரக்ருதி மெதுவாக கண்களை விழிக்க கே.கேவோட்ரீட்என்று கூறினான்.

பேய் கூட என்னடா பேச்சுவார்த்தை?” என அவனது விலாவில் அவள் குத்த அவளது கையைப் பற்றி முன்னே இழுத்தான் கே.கே.

பயத்தோடு அவள் முன்னே வந்து நிற்கவும் அக்குழந்தைகள் பூசணிக்காய் வடிவ ப்ளாஸ்டிக் பையை நீட்டவும் சரியாக இருந்தது.

பிரக்ருதி பயத்துடன் பார்க்கும் போதே அச்சிறுவனின் பையிலும் சிறுமியின் பையிலும் வீட்டிலிருந்து எடுத்து வந்த சாக்லேட்டுகளை போட்டான்.

அவர்கள் சிரித்தபடி அங்கிருந்து கிளம்பி பக்கத்துவீட்டுக்குச் செல்ல பிரக்ருதியோ வியர்த்து வழிந்தபடி நின்று கொண்டிருந்தாள்.

கே.கே அவளது தலையில் தட்டவும் உணர்வு வந்தவளாக திடுக்கிட்டாள்.

என்னடா பேய்கு சாக்லேட் குடுக்குற?” என்றவளிடம்

அட மக்கு! இன்னுமா பேய் பிசாசு கதையெல்லாம் நம்புற... இன்னைக்கு என்ன டே?” என்று கேட்க

மண்டேஎன்றாள் பிரக்ருதி.

அது எனக்குத் தெரியாதா? சரி விடு... இன்னைக்கு என்ன டேட்?”

அக்டோபர் தேர்ட்டி ஃபர்ஸ்ட்

அக்டோபர் தேர்ட்டி ஃபர்ஸ்ட் என்ன டேனு தெரியாதா?”

இல்லையென மறுப்பாக தலையசைத்தாள் அவள்.

ஹாலோவீன்

கே.கே கூறவும் குழம்பி தெளிந்தாள் பிரக்ருதி.

அப்ப அந்த பசங்க?”

அவங்க ஹாலோவீனுக்காக ப்ளாக் ஐய்ட் சில்ரன்கெட்டப் போட்டுருக்காங்க... அவங்க பேய் இல்ல... நம்ம உள்ள பேசிட்டிருக்குறப்ப கண்ணாடி கதவு வழியா அந்த வீட்டுல அவங்க ட்ரிக் ஆர் ட்ரீட்னு கேட்டுட்டு இருந்ததை பாத்தேன்... அதுக்கு அப்புறம் தான் அவங்க கெட்டப்பை வச்சு ஞாபகம் வந்த அர்பன் லெஜண்ட் கதைய உன் கிட்ட சொன்னேன்... பாவம் நீ! பயத்துல எல்லாரும் அழுவாங்க... மயங்கி விழுவாங்க... ஆனா நீ லிப் டு லிப் கிஸ் அடிச்சிருக்க

பிரக்ருதி அவன் கேலியாகச் சொல்லி முடிக்கவும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.

பப்பி ஷேமா ஆகிடுச்சே



அவள் சிணுங்கவும்தயவு பண்ணி வெக்கப்பட்டு எனக்குப் பயத்த உண்டாக்காதஎன்றவாறு கே.கே அவளது கழுத்தில் கை போட்டு வீட்டுக்குள் இழுத்துச் சென்றான்.

செல்லும் போதேஇனிமே மேட் லிப்ஸ்டிக் போடு... அது தான் கிஸ் பண்ணுனாலும் ஒட்டாதுஎன்று இலவச அறிவுரைகளை அவன் அள்ளிவிட

போடா தடியா... பொண்ணுங்களே பிடிக்காதுனு அவ்ளோ சீன் போட்டுட்டு இப்ப கிஸ்ல மாஸ்டர் டிகிரி வாங்குனவன் மாதிரி டிப்ஸ் அள்ளி விடுற.... ஐயோ! கழுத்தை நெறிச்சு கொன்னுடாத... தள்ளி போ செவன் பாயிண்ட் ஃபைவ்என்று அவனை விலக்கித் தள்ள முயன்று தோற்று, சிணுங்கியவாறு சென்றாள் பிரக்ருதி.

வெளிப்பார்வைக்கு இயல்பாக பேசி சிரித்தாலும் அவனுக்கும் அவளுக்கும் அது தான் முதல் இதழ் முத்தம் என்பதால் உண்டான சிலிர்ப்பை அவர்களின் இதயம் உள்ளுக்குள் அனுபவித்ததை இருவரும் ரசிக்க தான் செய்தார்கள்!

Comments

Post a Comment