பூங்காற்று 34

ஹர்சவர்தன் சாதாரணமாக ஹாலின் சோஃபாவில் சென்று அமர்ந்து கொள்ள கிருஷ்ணஜாட்சிக்கு இவனைப் பார்த்துவிட்டு நீரஜாட்சி கோபப்பட்டால் என்ன செய்வது என்ற தவிப்பு. அவளது தவிப்பை அதிகரிப்பது போலவே நீரஜாட்சியின் ஸ்கூட்டியின் சத்தமும் கேட்க அவள் " ஹர்சா! நீரு வந்துட்டா , நீங்க ஒழுங்கா இப்போவே உங்க வீட்டுக்குப் போயிடுங்க. இல்லைனா..." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நீரஜாட்சி " கிருஷ்ணா" என்று அவளது பெயரை ஏலம் விட்டபடி வராண்டாவில் நுழைந்துவிட்டாள். கிருஷ்ணஜாட்சி வாயிலைப் பார்த்து திரும்ப உள்ளே நுழைந்த நீரஜாட்சி அங்கே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த ஹர்சவர்தனைக் கண்டதும் "நீங்களா ?" என்று மெல்லிதாக அதிர்ந்தாள். அவன் புன்னகையுடன் "நானே தான். உனக்கு அதுல என்ன டவுட் ?" என்று கேட்டுவிட்டு அவனது போனை நோண்ட ஆரம்பிக்கவும் நீரஜாட்சி பார்வையாலேயே இவன் இங்கே என்ன செய்கிறான் என்று கிருஷ்ணஜாட்சியிடம் வினவ அவள் பாவமாக விழித்தபடி நின்று கொண்டிருந்தாள். நீரஜாட்சிக்கு அவன் அமர்ந்திருக்கும் தோரணை எரிச்சலூட்டினாலும் ஒரு வழியாக பொண்டாட்டி அருமை இப்போதா...