மழை 2

“புள்ளி விவரங்களின் படி போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பெரும்பான்மையானோர் பதின் வயதினரே. 13லிருந்து 25 வயது வரை உள்ளவர்கள் தான் போதைக்கு அடிமையாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இப்போதைப்பழக்கம் அவர்களின் மரபணுவைக் கூட மாற்றிவிடும் அபாயம் உள்ளது” -திரு.ப்ரூனோ, போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் தடம், இருங்காட்டுக்கோட்டை... உலகளாவிய தானியங்கி கூட்டமைப்பு எனப்படும் FIAவின் (International Automobile Federation) தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டருக்கு மேலே நீளமுள்ள ரேஸ் தடத்தில் கார்கள் விர்விர்ரென்ற சத்தத்துடன் இலக்கை நோக்கிச் செல்லும் காட்சியைக் கண்டுகொண்டிருந்தாள் அந்தப் பதின்வயதினள். பதின்வயதிற்கே உரித்தான துடுக்குத்தனமும், அதீத ஆர்வமும் வழியும் களையான முகம்; அதில் இன்னும் குழந்தைத்தனத்தின் சாயல் ஒட்டியிருந்தது. அணிந்திருந்த ஜீன்சும் ஃப்ளாரல் ப்ளோசன் நெக் டாப்பும் இன்னும் சிறுபெண்ணாகவே அவளைக் காட்ட முயன்றன. அவளது கண்கள் அந...
Aha semma
ReplyDeleteEnnama nadakkapoguthu adhy ennannu theriya adutha epikku waiting
Super semma
ReplyDelete