பூங்காற்று 49

ரகுநந்தன் சாப்பாடு எடுத்து வைக்குமாறு சாதாரணமாக கூறிவிட நீரஜாட்சி எரிச்சலுடன் "நான் ஒ ன்னும் உன்னோட சர்வெண்ட் இல்ல. வேணும்னா நீயே எடுத்து போட்டு சாப்பிட்டுக்கோ" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள். ரகுநந்தன் தானே சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு "நீ சாப்பிடலையா நீருகுட்டி ?" என்று கேட்க அவள் "ம்ம்..அதான் எனக்கும் சேர்த்து நீயே சாப்பிட்டுட்டியே" என்று நொடித்துக் கொண்டவாறு பாத்திரங்களை உள்ளே எடுத்துச் சென்றாள். அவன் திடீரென்று வந்து நிற்பான் என்று அறியாததால் அவள் எப்போதும் போல தனக்கு மட்டுமே சமைத்திருக்க எவ்வளவு தான் அவன் மீது கோபம் என்றாலும் தனக்காக இவ்வளவு தூரம் வந்திருப்பவனை பசியோடு விட அவளுக்கு மனமில்லை. எனவே தனக்கு வைத்திருந்ததை அவனுக்கு கொடுத்துவிட்டு பாலை காய்ச்சிக் குடித்தவள் மொபைலும் கையுமாக வராண்டாவில் அமர்ந்துவிட அவள் சாப்பிடவில்லை என்பதை அறியாத ரகுநந்தன் அவளைப் பார்த்தபடியே ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். அலுவலகத்தில் வேலை பாக்கியிருப்பதால் தனது புதிய செகரட்டரிக்கு போன் செய்து தான் வருவத...
Sis move ayite iruku sis read pana mudiyala
ReplyDeleteSuper super sis interesting sis super
ReplyDelete