பூங்காற்று 39

பூங்காற்று 39 திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி. " கிருஷ்ணா நீரஜா எழும்பிட்டாளா ? தலையில எண்ணெய் வச்சிக்கணும்டி" என்று கூறியபடி நீரஜாட்சியிடம் வந்தவர் அவளைச் சீக்கிரமாக குளித்துவிட்டு தயாராக கூற அவளும் அவர்சொன்னபடி குளித்துவிட்டு புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் அடுத்த சடங்குக்கு அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் சீக்கிரமாக குளித்துவிட்டு நீரஜாட்சிக்கு நலங்கு வைப்பதற்காக அவளும் சென்றுவிட்டாள். அங்கே மைதிலி , சீதாலெட்சுமி , மைத்திரேயி , ஸ்ருதிகீர்த்தி இவர்களுடன் அவர்களின் மாமியார்களும் இருக்க பத்மாவதியே முன் நின்று நீரஜாட்சிக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றி சடங்கை ஆரம்பித்தனர். அதே நேரம் மண்டபத்தில் ரகுநந்தன் விரதத்துக்காக தயாரானான். ஹர்சவர்தனும் , அவனது தந்தை , சித்தப்பா மற்றும் சகோதரிகளின் கணவர்கள் என அனைவரும் சூழ்ந்து கேலி செய்ய அவனும் திருமணச்சடங்குகளில் ஐக்கி...