பூங்காற்று 52 (Final)

ஐந்து வருடங்களுக்கு பிறகு... பட்டாசு சத்தம் செவிப்பறையை தாக்க கண் விழித்தான் ரகுநந்தன். உறக்கம் கலைந்ததும் அவன் விழிகள் தேடிய ஒருத்தி அவன் அருகில் இல்லையென்றதும் ஏமாற்றம் புயலாய் தாக்க விருட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்தான். கீழே அனைவரும் பண்டிகை நாளுக்கான உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டவனுக்கும் மெதுவாக அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. தூக்க கலக்கத்தோடு நேரே கீழே இறங்கி வந்தவனை பார்த்த பத்மாவதி தலையில் அடித்துக் கொண்டார். " ஏன்டா பண்டிகை நாளும் அதுவுமா இன்னைக்கும் லேட்டாவா எழுந்திருப்ப ? போய் ஸ்நானம் பண்ணிட்டு வா! ம்ம்..சீக்கிரம்" என்று அவனை கங்காஸ்நானம் செய்ய அனுப்பிவைத்தார் அவர். அவனும் தாய் சொல் தட்டாத தனையனாக குளித்துமுடித்து வேஷ்டி சட்டையில் கீழே வர "சித்தப்பா" என்றபடி அவன் கையை பிடித்துக் கொண்டாள் ஒரு குட்டி தேவதை. அவளை கண்டதும் முகம் பூவாய் மலர அவளைத் தூக்கிக் கொண்டான் ரகுநந்தன். அவனிடம் "சித்தப்பா இந்த பட்டு பாவாடை நேக்கு நன்னா இருக்கா ?" என்று வினவினாள் அந்த குட்டி தேவதை ஸ்ரீமதி ; ஹர்சவர்தன் மற்றும் கிருஷ்ணஜாட்சியின...
Comments
Post a Comment