டியர் கிட்டி👸
- Get link
- X
- Other Apps
டியர் கிட்டி👸
ஆன் ஃப்ராங்கோட டைரியோட ஒவ்வொரு நாள்குறிப்பும் ஆரம்பிக்கிற விதம் "Dear Kitty"... Kittyங்கிறது அவளோட டைரிக்கு அந்தப் பொண்ணு வச்ச நேம்... சரி, ஆன் ஃப்ராங்க் வெறும் டைரி மட்டும் தான் எழுனுனாங்களானு கேட்டா இல்லனு தான் பதில் வரும்... ஏன்னா அந்தப் பொண்ணு சில கதைகளையும் எழுதி வச்சிருந்தாங்களாம்... ஒன்னு ரெண்டு இல்ல, கிட்டத்தட்ட 34 ஃபேரி டேல்ஸ்... இதை எழுதுறப்போ அந்தப் பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கிறீங்க? வெறும் பதிமூனு வயசு தான்...
சரி குட்டிப்பொண்ணு ஃபேரி டேல்ஸ் படிச்சு வளர்ந்ததால அதை எழுதிருக்கலாம்னு நினைக்கலாம்... பட் அந்தப்பொண்ணு ஒரு நாவலும் எழுதிருக்காங்க... அதோட நேம் "Cady's life", இதை பெரியளவுல எழுதாம சில சேப்டர்ஸ்ல முடிச்சிட்டாங்க....
ஆன் ஃப்ராங்க் |
அதுக்கு அப்புறம் அவங்க படிச்ச புத்தகங்கள்ல அவங்களை பாதிச்ச அழகான வார்த்தைகளை மட்டும் வச்சு ஒரு புக் எழுதுனாங்க... அதோட நேம் 'The beautiful sentences'...
கடைசியா எழுதுனது 'The secret annex'... Annexனா மெயின் பில்டிங்கோட இணைக்கப்பட்ட இன்னொரு பில்டிங்னு அர்த்தம்... எல்லாம் சரி, அது என்ன சீக்ரேட்?
அங்க தான் விசயமே! இவ்ளோ நேரம் நம்ம எழுதுனாங்க எழுதுனாங்கனு நீளமா சொன்ன எல்லாத்தையும் அந்தப் பொண்ணு எழுதுனது எப்போ தெரியுமா? ஹிட்லரோட ஆளுமைக்கு கீழ நெதர்லாந்து இருந்தப்போ யூதர்களான ஆன் ஃப்ராங்கோட ஃபேமிலி நாஜிக்களுக்குப் பயந்து ரகசிய இடத்துல மறைஞ்சிருந்தப்போ எழுதுனது தான் இந்த டைரிகுறிப்புகள், ஃபேரி டேல்ஸ், நாவல் எல்லாமே!
ஆன்
ஃப்ராங்குக்கு ரைட்டராவோ ஜர்னலிஸ்டாவோ வரணும்னு ஆசையாம்... ஆனா எந்த
எட்டப்பனோ அவங்க மறைஞ்சிருக்குற விசயத்தை போட்டுக்குடுத்துட்டான்... சோ
அவங்க முழு குடும்பமும் சிறை பிடிக்கப்பட்டாங்க...
அந்தப் பொண்ணும் அவங்க சகோதரியும் அவங்க அம்மாவோட சேர்த்து கேஸ் சேம்பருக்கு பதிலா நாஜிக்களோட முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டாங்க... அங்க டைபஸ் (typhus) என்ற கொள்ளைநோயால பாதிக்கப்பட்டு ஆன் ஃப்ராங்கும் அவங்க சிஸ்டர் மர்காட் ஃப்ராங்கும் இறந்து போயிட்டாங்க... அந்தப் பொண்ணு இறந்து சில வருடங்கள் கழிச்சு ஹிட்லரோட சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகு முகாம்ல இருந்து விடுதலை ஆன ஆன் ஃப்ராங்கோட அப்பா அவங்களோட டைரிய புக்கா வெளியிட்டாராம்!
இக்கட்டான
சூழல்ல மாட்டியிருக்கிறப்போ கூட தன்னோட மனவுணர்வுகளை தவறாம டைரியில பதிவு
பண்ணுன ஆன் ஃப்ராங்கால தான் செகண்ட் வேர்ட் வார் காலகட்டத்துல யூதர்கள்
நாஜிக்களால எந்தளவுக்குக் கொடுமைப்படுத்தப் பட்டாங்கனு உலகத்துக்கு
தெரியவந்துச்சு...
எது எப்படியோ இந்த உலகம் ஒரு நல்ல எழுத்தாளரை தைரியமான பத்திரிக்கையாளரை இழந்துடுச்சு... எந்த விதமான சூழ்நிலையும் நம்ம கனவுக்குத் தடை போட முடியாதுங்கிறதுக்கு ஆன் ஃப்ராங்கோட டைரி குறிப்புகளும், கதை எழுதிய முயற்சிகளும் சிறந்த உதாரணம்.
இதை எதுக்கு இப்போ சொல்லுறேன் தெரியுமா? இப்போ நம்மளும் பேண்டமிக் சிச்சுவேசன்ல ஹௌஸ் அரெஸ்ட்ல தான் இருக்கோம்... ஆனா இந்த பேண்டமிக்கால நம்ம கனவுகளை, எதிர்காலம் குறித்த திட்டமிடலை தடுத்து நிறுத்த முடியாது... So Be positive, இதுவும் கடந்து போகும்!
- Get link
- X
- Other Apps
Comments
Semma da
ReplyDeletethank you sis😍😍
Delete