பியூட்டி அண்ட் த பீஸ்ட்
- Get link
- X
- Other Apps
ஒரு காலத்துல ஒரு பணக்கார வியாபாரி இருந்தாராம்.. அவருக்கு மூனு மகள்கள் இருந்தாங்க... முதல் ரெண்டு மகள்களும் ஆடம்பர மற்றும் அலங்கார பிரியைகள்... மூனாவது மகள் தான் பியூட்டி... பெயருக்கு ஏத்த மாதிரி அவ பயங்கர அழகு... ஆனா ரொம்ப எளிமையான அன்பான பொண்ணு... அவங்கப்பா மேல உயிரையே வச்சிருந்தா...
இப்பிடி இருக்குறப்ப ஒரு நாள் அந்தப் பணக்கார தந்தையோட சரக்கை ஏத்திட்டுப் போன கப்பல் கடல்ல தொலைஞ்சு போயிடுச்சு... அவருக்கு பயங்கரமான நஷ்டம்... அதனால சொத்துக்களை வித்து நஷ்டத்தை ஈடுகட்டிட்டு அவங்களோட பேலசை விட்டுட்டு சாதாரண வீட்டுக்கு குடி வந்தார். முன்னாடி மாதிரி வேலையாட்கள் யாரும் கிடையாது. எல்லா வேலையையும் மூனு மகள்கள் தான் செஞ்சாங்க... ஆனா பியூட்டியை தவிர மத்த ரெண்டு பேரும் வேலை செய்யுறதுல நிறைய ஓபி அடிப்பாங்க...
இப்பிடியே நாள் போக ஒரு நாள் அந்த வியாபாரியோட கப்பல் சரக்கோட கரைக்கு வந்துடுச்சு.. அவருக்கு பயங்கர சந்தோசம்... இனிமே சரக்கை வித்து பணம் சம்பாதிச்சிடலாம்னு நிம்மதியானவரு அதை எடுத்துக்கிட்டு வர துறைமுகத்துக்கு கிளம்ப ரெடியானார்... அப்போ மூனு மகள்கள் கிட்டவும் திரும்பி வர்றப்ப உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரணும்னு கேட்டார்.
"எனக்கு அழகான டிரஸ் வேணும்பா" - மூத்தமகள்.
"எனக்கு ஜூவல்ஸ் வேணும்பா" - ரெண்டாவது மகள்.
"எனக்கு ஒரே ஒரு ரோஸ் மட்டும் வாங்கிட்டு வாங்கப்பா" - மூனாவது மகளான பியூட்டி.
அவளை பாத்து ரெண்டு சகோதரிகளும் பைத்தியக்காரினு நினைச்சுக்கிட்டாங்க. அவங்கப்பாவோ தனக்கு செலவு வைக்கக்கூடாதுனு நினைச்ச பியூட்டி கிட்ட கண்டிப்பா ரோஸ் வாங்கிட்டு வருவேனு வாக்கு குடுத்துட்டு கிளம்புனார்.
துறைமுகத்துக்கு போய் சரக்கை மீட்டுட்டு அதை வித்து சம்பாதிச்ச பணத்துல டிரஸ்சும் ஜூவல்சும் வாங்கிட்டு ஊருக்குத் திரும்புற பாதிவழில தான் பியூட்டி கேட்ட ரோசை மறந்துட்டோமேனு வியாபாரிக்கு பல்ப் எரியுது. அவர் குதிரைல வந்த இடம் காடு... சோ அங்க எதாச்சும் ரோஸ் செடி நிக்குதானு பாத்துட்டே வந்தப்போ சுத்தி மரங்கள் அடர்ந்த பகுதில தன்னந்தனியா நின்னுச்சு ஒரு மாளிகை... அதுல விளக்குகள் எரிஞ்சிட்டிருந்துச்சு...
அந்த மாளிகையோட தோட்டம் அவ்ளோ அழகா இருட்டு நேரத்துல நிலா வெளிச்சத்துல கண்ணுக்கு குளிர்ச்சியை குடுத்துச்சு... அதை ரசிச்சிட்டே மாளிகைக்குள்ள வந்தார் வியாபாரி. அங்க யாரும் இல்ல.
"ஹலோ யாராச்சும் இருக்கீங்களா?"
அவரோட கேள்விக்குப் பதில் வரல. சோ யாருமே இல்ல போலனு நினைச்சிட்டு டைனிங் ஹால் பக்கம் போனவர் அங்க டைனிங் டேபிள்ல சாப்பாடு வெரைட்டி வெரைட்டியா இருக்குறத பாத்ததும் உக்காந்து சாப்பிட ஆரம்பிச்சார்... சாப்பிட்டதும் தூக்கம் வர உடனே அங்க சுத்தி முத்தி பாத்து ஒரு பெட்ரூமை கண்டுபிடிச்சிட்டார்.
அங்கே போனதும் ஆள் ஃப்ளாட் ஆயாச்சு. மறுநாள் காலையில எழுந்து வீட்டுக்குக் கிளம்ப ரெடியானப்போ ரோஸ் நியாபகம் மறுபடியும் வந்துச்சு. குதிரைய கட்டிப்போட்டிருக்குற தோட்டத்துல ரோஸ் செடி இருக்குதானு தேடுனார். அங்க நிறைய ரோஸ் இருக்கவும் ஒரே ஒரு ரோஸை பறிச்சார் அந்த வியாபாரி.
அப்போ கொடூரமான வாய்ஸ் ஒன்னு கேட்டுச்சு.
"எவ்ளோ தைரியம் இருந்தா நீ என் தோட்டத்து ரோஸை திருடிருப்ப?"
அந்தக் குரல்ல வெலவெலத்துப் போனார் அந்த வியாபாரி. யார்னு திரும்பி பாத்தா அங்கே ஒரு மான்ஸ்டர் அதாங்க ஒரு மிருகம் மாதிரி உடலமைப்பு கொண்ட ஜீவன் நின்னுட்டிருந்துச்சு.. அதை இனிமே பீஸ்ட்னு கூப்பிடுவோம்...
அந்த பீஸ்டை பாத்ததும் வியாபாரிக்கு பயம் வந்துச்சு... அதோட உருவம், குரல் எல்லாமே பயங்கரம்.
வியாபாரி பயத்தோட மன்னிப்பு கேட்டார். ஆனா பீஸ்ட் மன்னிக்கவேல்ல.
"சில தவறுகளுக்கு மன்னிப்பே தண்டனை மட்டும் தான்" இரக்கமில்லாம சொல்லுச்சு அந்த பீஸ்ட்.
உடனே அந்த வியாபாரி அரண்டு போயிட்டார்.
"நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. நீ என்னை கொன்னுட்டா என்னோட மகள்கள் அனாதை ஆயிடுவாங்க பீஸ்ட்"
கண்ணீர் விட்டு கதறுரார் அவர்... அப்போ பீஸ்டோட முகத்துல பல்ப் வெளிச்சம்.
"ஓ! உனக்கு மகள்கள் வேற இருக்காங்களா? அப்போ ஒன்னு பண்ணு, உன் பொண்ணுங்கள்ல ஒருத்திய இங்க அனுப்பி வை... உனக்கு பதிலா அவ என்னோட கைதியா இந்த பேலஸ்ல இருக்கணும்... அப்பிடி இருந்தா உன்னை உயிரோட விடுவேன்"
பீஸ்ட்டோட கண்டிசனை கேட்டதும் வியாபாரிக்கு நெஞ்செல்லாம் புண்ணா போச்சு... அழகா பிள்ளைங்களை பெத்து வளத்தது இந்த ராட்சசன் கிட்ட ஒப்படைக்கவானு அவரோட மனசு கதறுது.
ஆனா வேற வழியும் இல்லை. அதனால மறுப்பு சொல்லாம பீஸ்டுக்கு வாக்கு குடுத்துட்டு கிளம்புனார்.
வீட்டுக்கு வந்ததும் அவரோட மூனு மகள்களும் சந்தோசமா அவரை வரவேற்றாங்க. டிரஸ்சையும் ஜூவல்சையும் பாத்ததும் மத்த ரெண்டு பேருக்கும் வாயெல்லாம் பல்லா போச்சு. பியூட்டிக்கு அப்பா குடுத்த ரோஸ்சை பாத்ததும் சந்தோசம் தாங்கல.
wikimedia commons |
ஆனா அப்பாவோட சோகமான முகத்தை பாத்த பியூட்டிக்கு என்னமோ சரியில்லனு புரிஞ்சுது.
"என்னாச்சுப்பா? ஏன் டல்லா இருக்கீங்க?"
"அது ஒன்னுமில்லம்மா"
"ப்ச்... சொல்லுங்கப்பா.. உங்க முகமே சரியில்ல"
"இந்த ரோஸை நான் உனக்காக பறிச்ச இடம் ஒரு பீஸ்டோட பேலஸ்மா... அவன் என்னை கொன்னுடுவேனு மிரட்டுனான். உடனே நான் என்னை கொன்னா என் மகள்கள் அனாதை ஆயிடுவாங்கனு சொன்னதும் உன் மகள்ல ஒருத்திய இங்க கைதியா கொண்டு வந்து விட்டா உன்னை கொல்ல மாட்டேன்னு சொன்னான்மா"
இதை சொல்லுறப்ப வியாபாரியோட கண்ணுல கண்ணீரே வந்துடுச்சு. மத்த ரெண்டு மகள்களும் அரண்டு போய் முழிச்சாங்க. ஆனா பியூட்டி மட்டும் நிமிர்வா அவ அப்பாவ பாத்தா.
"எனக்காக ரோஸ் பறிக்க போனதால தான உங்களுக்கு இந்தப் பிரச்சனை வந்துச்சுப்பா... சோ நானே அந்த பீஸ்டோட கைதியா அவன் பேலஸ்சுக்கு போறேன்"
பியூட்டி இப்பிடி சொன்னாலும் அவளோட அப்பாவல ஒத்துக்க முடியல.
"இல்லமா! எனக்கு வயசாயிடுச்சு... என்னைக்கு இருந்தாலும் நான் செத்துடுவேன்.. அதுக்கு பதிலா என் மகள்களுக்காக நான் சாகுறேன்"னு திட்டவட்டமா சொல்லிட்டார் அந்த வியாபாரி.
ஆனா பியூட்டி தன்னோட பிடிவாதத்தை விடல. அவளுக்கு அவங்கப்பா மேல அவ்ளோ பாசம். சோ வியாபாரி வேற வழியில்லாம பியூட்டிய பீஸ்டோட பேலஸ்ல கொண்டு போய் விட்டார்.
அன்னைல இருந்து பீஸ்டோட கைதியா அவ அந்த பேலஸ்குள்ள இருந்தா. நேரத்துக்குச் சாப்பாடு, நல்ல ட்ரஸ், சொகுசானா பேலஸ் வாழ்க்கை இவ்ளோ இருந்தும் பியூட்டியோட மனசுல சந்தோசம் இல்ல.
எவ்ளோ வசதியா இருந்தாலும் சிறைச்சாலைய மனுச மனம் விரும்பாதுல்ல. டெய்லி மானிங் அவளும் பீஸ்டும் ஒன்னா தான் சாப்பிடுவாங்க. அமைதியா நேரம் கழியும். அப்புறம் லஞ்ச் டின்னர்னு ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடுற நேரங்கள் மௌனத்துல கழிஞ்சுது.
இப்பிடியே நாள் போச்சு. ஒரு நாள் சாப்பிடுறப்ப பீஸ்ட் ஒரு ஜோக் சொன்னான். அதுக்கு பியூட்டி சிரிக்கவும் அவனுக்கு ஆச்சரியமா இருந்துச்சு.. இவ்ளோ நாள் உம்மணாமூஞ்சியா இருந்தவ சிரிக்கிறாளேனு கூட கொஞ்ச நேரம் அவ கூட பேசவும் பியூட்டியும் அவனோட இயல்பா உரையாட ஆரம்பிச்சா..
கொஞ்சநாள்ல ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்க... அப்புறம் பீஸ்ட்டோட மனசுல பியூட்டி மேல லவ் வந்துச்சு.. ஒரு நாள் டின்னர் சாப்பிடுறப்ப பியூட்டி கிட்ட தன்னோட லவ்வை வெளிப்படுத்தினான் பீஸ்ட்.
"ஐ லவ் யூ பியூட்டி... வில் யூ மேரி மீ?"னு காதலோட கேட்டான் அவன்.
ஆனா பியூட்டியால அவனோட காதலை ஏத்துக்க முடியல.
"நான் உன்னை ஃப்ரெண்டா தான நினைக்கிறேன் பீஸ்ட்"னு சொல்லிட்டா.
அப்புறம் டெய்லி டின்னர் சாப்பிடுறப்பவும் அவன் ப்ரபோஸ் பண்ணுவான். மேடம் இல்லனு மறுப்பு சொல்லிடுவாங்க. ஒரு நாள் பீஸ்டால அமைதியா போக முடியல.
"நான் என்ன பண்ணுனா நீ சந்தோசப்படுவ பியூட்டி?"னு கேட்டான் அவன்.
"எனக்கு எங்கப்பாவ பாக்கணும் போல இருக்கு"னு பியூட்டி சொல்லவும் அவளை தன்னோட ரூமுக்கு அழைச்சிட்டுப் போனான். அவ கிட்ட ஒரு மோதிரத்தையும் கண்ணாடியையும் காட்டுனான்.
"உங்கப்பாவ பாக்கணும்னு இந்த கண்ணாடி கிட்ட கேட்டா அது அவரை காட்டும்.. அவரை பாக்கணும்னு ஆசைப்பட்டா இந்த மோதிரத்த மூனு தடவை திருகுனா நீ அங்க போயிடுவ... ஆனா நியாபகம் வச்சுக்க, ஒரு வாரத்துக்கு மேல நீ திரும்பி வரலனா என் உயிருக்கு ஆபத்து வந்துடும்"னு எச்சரிக்கை பண்ணி அது ரெண்டையும் அவ கிட்ட குடுத்தான்.
பியூட்டி கண்ணாடி கிட்ட அவங்கப்பாவ காட்ட சொன்னதும் அந்த மேஜிக் மிரரும் வியாபாரிய காட்டுச்சு. அவர் உடம்பு முடியாம இருக்குறதை பாத்ததும் பியூட்டிக்கு அழுகை வந்துடுச்சு. உடனே தன்னோட மோதிரத்தை மூனு தடவ திருகினதும் அவங்கப்பாவோட வீட்டுக்கு வந்துட்டா அவ.
மகளை ஒரு ராட்சசன் கிட்ட அனுப்பி வச்ச சோகத்துல வியாபாரிக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. பியூட்டி அவரை கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டா.
"அக்கா ரெண்டு பேரும் எப்பிடி இருக்காங்கப்பா?"
"அவங்க பெரிய வசதியான குடும்பத்துல மருமகளா ஆகிட்டாங்கம்மா"
தன்னோட ரெண்டு சிஸ்டர்சுக்காக சந்தோசப்பட்ட பியூட்டி ரெண்டு நாள்ல அதே சிஸ்டர்சை நேர்ல பாத்ததும் ஓடி போய் கட்டிப்பிடிச்சு கண்ணீர் விட்டா.
அவங்களுக்கோ பியூட்டியோட காஸ்ட்லியான டிரஸ் ஜூவெல்சை பாத்து பொறாமை. அதை வெளிக்காட்டிக்காம பீஸ்ட் பத்தி விசாரிச்சாங்க. அப்போ பியூட்டி முழு கதையையும் சொன்னா.
"நான் ஒரு வாரத்துல திரும்பி அங்க போகணும். இல்லனா பீஸ்டோட உயிருக்கே ஆபத்து"
பியூட்டி சொன்னதை கேட்டு அவ சிஸ்டர்ஸ் ஏடாகூடமா யோசிச்சாங்க. அவளை அங்க திரும்ப போகவிடாம சதி பண்ணுனாங்க. அவ போகணும்னு நினைச்சாலே "எங்களை விட்டுட்டு இவ்ளோ சீக்கிரம் அந்தப் பேலஸ்ல போய் கைதியா இருக்கப்போறியா?"னு அழுவாங்க.
அதனால பியூட்டி நாள் கணக்கை பாக்காம அங்கயே இருந்துட்டா. வியாபாரிக்கும் உடம்பு தேறிடுச்சு.. அப்பிடி இருக்குறப்ப ஒரு நாள் அவளுக்கு ஒரு கனவு வந்துச்சு, அதுல பீஸ்ட்டுகு உடம்பு சரியில்லாதது மாதிரி வந்ததும் வேகமா போய் தன்னோட மேஜிக்கல் மிரரை பாத்தா.
அதுல பீஸ்ட் மரணப்படுக்கைல கிடக்குறது தெரிஞ்சதும் மோதிரத்தை மூனு தடவை திருகுனா. உடனே பீஸ்டோட பேலஸ்குள்ள வந்துட்டா அவ.
அங்க பீஸ்ட் கண் மூடி கடைசி மூச்சுக்காக போராடிட்டு இருந்தான்.
அதை பாத்ததும் பியூட்டிக்கு தலைல இடி விழுந்த மாதிரி இருந்துச்சு.
ஓடிப் போய் அவன் பக்கத்துல உக்காந்தா.
"என்னை மன்னிச்சுடு பீஸ்ட்.. நான் லேட் பண்ணீட்டேன்"
"நீ வரமாட்டியோனு நினைச்சு நினைச்சே நான் கவலைல உடைஞ்சிட்டேன் பியூட்டி...இப்போ நீ வந்ததுக்கு அப்புறமோ நான் உன்னை பாக்குறது இது தான் கடைசி தடவைனு தோணுது"னு சொல்லிட்டே கண்ணை மூடிட்டான்.
பியூட்டிக்கு அழுகையும் சோகமும் ஒருசேர வந்துச்சு... ஏன் இவனுக்காக நம்ம அழுறோம்னு யோசிச்சப்ப தான் அவ இதயம் சொல்லுச்சு "பியூட்டி நீ பீஸ்டை லவ் பண்ணுற டியர்"னு.
உடனே அவனைக் கட்டியணைச்சு அழ ஆரம்பிச்சா அவ.
"ஐ லவ் யூ பீஸ்ட்... ப்ளீஸ் திரும்பி வந்துடு"
அவளோட கண்ணீர் அவனோட முகத்துல பட்டு ஓடிச்சு. அப்போ பீஸ்ட் கண்ணை திறந்தான்.
"பியூட்டி"
அவன் கண் முழிச்ச சந்தோசத்துல பியூட்டிக்கு இப்போவும் கண்ணீர் வந்துச்சு,.. ஆனா அது ஆனந்தக்கண்ணீர்.
அப்போ அவனை சுத்தி ஒரு ஒளிவட்டம் வந்து மறைஞ்சுது. அதுக்கு அப்புறம் பியூட்டி கிட்ட ஒரு அழகான இளவரசன் நின்னுட்டிருந்தான்.
"பியூட்டி... நான் தான் உன்னோட பீஸ்ட்"
பியூட்டி அவனை கண்ணீர் மல்க பாத்தா.
"ஒரு சூனியக்காரியோட சாபத்தால நான் பீஸ்டா மாறிட்டேன்... என்னைக்கு ஒரு பொண்ணு உண்மையான காதலோட என் மிருக முகத்த பத்தி யோசிக்காம என் கிட்ட வர்றாளோ அன்னைக்கு என்னோட சாபம் முடியும்னு அவ சொன்னா... இன்னைக்கு உன்னால நான் மறுபடியும் மனுசன் ஆயிட்டேன் பியூட்டி... ஐ லவ் யூ"
wikimedia commons |
பியூட்டியை இறுக அணைச்சுக்கிட்டான் அந்த இளவரசன். அதுக்கு அப்புறம் என்ன? They lived happily ever after.
- Get link
- X
- Other Apps
Comments
Aii beauty nd beast ennoda nithi ka version la.. superr
ReplyDelete😁😁😁just try pannunenma
DeleteAkka dharalama snow-white little mermaid ellam try pannunga.. enaku jolly dan
ReplyDeletekandippa try pannanumda... konjam free aagittu relaxa yeluthanum
Delete