பூங்காற்று 44

மறுநாள் காலை வீட்டில் அனைவரும் காலையுணவுக்காக ஒன்றாக அமர்ந்து விட நீரஜாட்சி மைதிலியுடன் சேர்ந்து சமையலறையில் இருந்து பாத்திரங்களை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தாள். படிகளில் தட்தட்டென்று சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள் ரகுநந்தன் சட்டையின் கையை மடித்துவிட்டபடி இறங்கி வருவதைக் கண்டதும் "இந்த போஸுக்குலாம் குறைச்சலே இல்ல" என்று உதட்டைச் சுழித்துக் கொண்டாள். அவனும் ஒரு முறைப்புடன் வந்து அமர அவள் சட்டென்று நகர்ந்து சீதாலெட்சுமியிடம் சென்று அமர்ந்து கொண்டாள். அவர் அவளுக்கு இட்லியை ஊட்டிவிட அவருடன் அரட்டை அடித்தபடி சாப்பிட்டவளை கண்ணால் சுட்டபடி அவனும் சாப்பிட ஆரம்பித்தான். வேங்கடநாதன் "ஆமா ஹர்சாவும் கிருஷ்ணாவும் ஏன் இன்னும் வரலை ?" என்று கேட்கும் போதே இருவரும் படிகளில் இருந்து இறங்கி வர நீரஜாட்சி "கிருஷ்ணா இங்கே வா" என்று அக்காவை தன்னருகில் அமர வைத்தவள் சீதாலெட்சுமியிடம் ஏதோ சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். அதைக் கேட்டு கிருஷ்ணஜாட்சியின் முகம் சிவக்க ஹர்சவர்தன் நீரஜாட்சியிடம் "அப்பிடி என்ன தான் பாட்டி கிட்ட சொன்ன ந...
Semmmaaa.... ❤❤❤❤❤
ReplyDeleteThank you ma
DeleteVery nice👌
ReplyDeleteThank you sis
Delete