பூங்காற்று 51 (Pre-final)

நாளைக்கு இந்தக் கதை முடிஞ்சிடும் மக்களே! ஏப்ரல் 23 வரை இங்க இருக்கும். அன்று இரவுணவை முடித்துவிட்டு ரகுநந்தனிடம் காயம் வலிக்கிறதா என்று கேட்டாள் நீரஜாட்சி. அவனோ வலி குறைந்துவிட்டதாக கூற அவனுக்கு உள் அறையில் விரித்து தூங்கச் செல்லுமாறு சொல்லவும் அவனோ தான் வராண்டாவில் காற்றோட்டமாக உறங்க விரும்புவதாக கூறிவிட்டான். நீரஜாட்சி போர்வையை வானவெளியின் கீழே விரித்தவள் "நீ தூங்கு நந்து" என்று கூறிவிட்டு நகர முற்பட அவள் கையை பற்றி நிறுத்தியவன் "ரெண்டு பேரும் இங்கேயே தூங்குவோமா ? பிளீஸ்" என்று கூற நீரஜாட்சிக்கு அவனது குரலில் இருந்த ஏதோ ஒரு உணர்வு அவளை மறுக்காதே என்று உந்துவது போலத் தோன்ற சரியென்று ஒத்துக் கொண்டு கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள். வானவெளியின் வழியே வந்த நிலவொளியில் தன் மார்பில் சாய்ந்திருக்கும் மனைவியின் முகத்தை பார்த்தவன் " நீரு இந்த தருணம் ரொம்ப அழகா இருக்குல்ல..அழகா குட்டி குட்டி நட்சத்திரத்தோட மின்னுற வானம் , அதுக்கு நடுவுல அதோட கருப்பு நிறத்தை முடிஞ்சளவுக்கு விரட்ட நினைக்கிற நிலா வெளிச்சம் , அந்த நிலா வெளிச்சத்துல தங்கம் மாதிரி மின்னுற எ...
Super good going
ReplyDeleteThank you
Delete