அத்தியாயம் 11
அத்தியாயம் 11 நாம் அனைவரும் ஒரு ‘ ஜட்ஜ்மெண்டல் சொசைட்டி ’ யில் வாழ்ந்து வருகிறோம் . நமது அன்றாட நடவடிக்கைகள் நம்மை அறிந்தவர்களாலும் முன்பின்னறியாத நபர்களாலும் விமர்சனத்துக்குள்ளாவதை கண்டுகொள்ளாமல் நகர்வதற்கு நாம் பழகிக்கொண்டிருக்கிறோம் . ஏன் என்னைப் பற்றி இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்பதற்கான தைரியத்தை நாம் வளர்த்துக்கொள்வதில்லை . வளர்ப்பதற்கு இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிப்பதும் இல்லை . இப்படிக்கு சந்திரிகை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி , மில்லர் மெமோரியல் லைப்ரரி ... சோர்ந்து போயிருந்த சந்தோஷை அழைத்துக்கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்தாள் சந்திரிகா . அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைண்மெண்டுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடியவாறு மிகவும் மெதுவான குரலில் சந்தோஷிடம் அவனது சோர்வுக்கான காரணத்தைக் கேட்டாள் . “ இன்னைக்கு எங்கண்ணி நான் வச்சிருந்த பி . டி . எஸ் ஆல்பம் கலெக்சன் எல்லாத்தையும் தூக்கி குப்பையில வீசிட்டாங்க சந்து ... நான் இல்லாத நேரத்துல செஞ்சிருக்காங்க ... இன்னைக்கு மானி
Semma semma semma semma semma semma
ReplyDeleteIva Maya na appo unmaiyana mahima yara irukum.. oru velai ruhi than original athai ponna