பூங்காற்று 46

நீரஜாட்சி செயினை வீசி எறிந்தவள் சட்டென்று எழுந்து போகையில் மொபைலில் அழைப்பு வந்தது. ரகுநந்தன் தான் அழைக்கிறானோ என்ற நப்பாசையுடன் அவசரமாக திரையை பார்க்க அழைத்தவரோ தாத்தாவின் நண்பரான கும்பகோணம் கிருஷ்ணமூர்த்தி. அவர் எப்போதுமே சகோதரிகள் இருவருக்கும் போன் செய்து நலம் விசாரிப்பது வழக்கம். எனவே உடனே அழைப்பை ஏற்றவள் "சொல்லுங்க தாத்தா! எப்பிடி இருக்கிங்க ?" என்று அவரிடம் பேச ஆரம்பித்தாள். அவர் "அம்மாடி நீரஜா! தஞ்சாவூர்ல உங்களோட ஆத்துல சில மராமத்து வேலை பண்ணனும்னு உன் மாமாக்கு ஒரு வாரம் முன்னாடி சொல்லிருந்தேன்டிமா. , அவன் அதை மறந்துட்டானா ? ஆத்தை இப்பிடியே போட்டுட்டேள்னு வை , அப்புறம் சிதிலமாயிடும்" என்று அவள் பிறந்த வீட்டை பற்றி கூற நீரஜாட்சி "என்ன சொல்லுறிங்க தாத்தா ? மாமா தான் அடிக்கடி போய் அந்த வீட்டை பார்த்துக்கிறாங்களே" என்று வினவ அவர் "இந்த ஆறு மாச காலமா அவன் அங்கே வரலைடிமா. ஹர்சனோட விவாகத்துல ஆரம்பிச்ச பிரச்சனையால வேங்கடநாதனுக்கு மனவுளைச்சல் , கோதண்டராமனுக்கும் முடியாம போயிடுத்து. இதுல பட்டுவும் என்னாட்டம் வயசாளி. அதனால யாரோட கவனமு...
Comments
Post a Comment