பூங்காற்று 47

ரகுநந்தன் சோஃபாவில் சாய்ந்தபடி கண்ணாடி கதவுகளின் வழியே வெளியே தெரியும் காட்சிகளைக் கண்டபடியே "இவ்ளோ நடந்தும் எப்பிடி கேதரினை கல்யாணம் பண்ணிகிட்ட ? என்னால இதை இப்போ வரைக்கும் நம்ப முடியலைடா" என்று ஆற்றாமையுடன் கூறிக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிர்ப்புற சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து காபியை அருந்திக் கொண்டே கண்ணாடிக்கதவின் வழியே தோட்டத்தில் எதையோ சீரமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அழகை கண்களால் பருகியபடியே "நடந்த எல்லா விஷயத்தையும் என்னால மறக்கவும் மன்னிக்கவும் முடிஞ்சதுக்கு ஒரே ஒரு காரணம் தான் நந்து. நான் கேதரினை எந்த அளவுக்கு காதலிக்கிறேனோ அதே அளவுக்கு அவளும் என்னை காதலிக்கிறா" என்று உணர்ச்சிப்பூர்வமான குரலில் கூற ரகுநந்தன் வெகுண்டவனாய் " நீ லவ் பண்ணுனது டோட்டல் லண்டன் சிட்டிக்கும் தெரியும்டா. பட் அவ உன்னை லவ் பண்ணுனானு நீ எதை வச்சு சொல்லுற ? உனக்கே நல்லா தெரியும் , அவ உன் லைஃப்ல வந்ததே உன் ஃபேக்டரி ப்ராடெக்டோட ஃபார்முலாவை திருட தானு. அப்புறம் நீ எப்பிடி அவளோடது லவ் தானு நம்புன ?" என்று படபடவென்று பொறிய அவனை கையமர்த்தினா...
Super semma
ReplyDelete