அலைவரிசை 57

Image
  “வானம் நிரந்தரமா அங்க இருக்குற சூரியன், நிலா, நட்சத்திரங்களுக்கு மட்டுமில்ல, அதுல பறக்குற பறவைங்களுக்கும் சொந்தம்... இவ்ளோ பெரிய வானமே பொதுச்சொத்தா இருக்குறப்ப மனுசங்க மட்டும் ஏன் செல்வாக்கு, அதிகாரத்த தனக்கு மட்டும் சொந்தமாக்கிக்க துடிக்கிறாங்கனு புரியல... ஒரு மனுசனுக்கு அடிப்படையான தேவை ஃபுட், ஷெல்டர், ட்ரஸ்... இப்ப அது கூட வேலையையும் சேர்த்துக்கலாம்... பிகாஸ் வேலைனு ஒன்னு இல்லனா மத்த மூனும் இம்பாசிபிள்... அதிகாரமோ செல்வாக்கோ அடிப்படையானது இல்ல... அது சமுதாயத்தால நமக்கு குடுக்கப்படணுமே தவிர கீழ்த்தரமா இறங்கி அதை அடையக்கூடாது... எந்த ஒரு மனுசன் அதிகாரவெறி, செல்வாக்குப்பசிக்கு அடிமையா மாறிட்டானோ அவனுக்கு வாழ்க்கையில திருப்திங்கிற ஒன்னு வரவே வராது... சாதாரண மக்களை மாதிரி சின்ன சின்ன சந்தோசங்களை அவங்களுக்கு ரசிக்கத் தெரியாது.                                               -கே.கேவின் மனதின் குரல் அபராஜித் ஷ்ரவனையும் கேசவையும் தவிப்போடு பார்த்தான். “எனக்குப் பொண்ணுங்க கூட முன்ன பின்ன பேசி பழக்கமில்ல சார்” என்றான் லட்சம் முறையாக. “நிகிதா கிட்ட பேசுனியே, அது என்ன கணக்கு?” என ஷ்ரவன் கிடுக்கு

அலைவரிசை 56

 

"நேசிக்கிற ரெண்டு பேருக்கு நடுவுல கருத்து வேறுபாடு வரலாம்... மனக்கசப்பு வரலாம்... ஆனா எந்த நிலமையிலயும் வார்த்தையை சிதற விட்டுடக்கூடாது... யோசிக்காம பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ஹைட்ரஜன் பாமை விட ஆபத்தானது... அது ஏற்படுத்துற அழிவை அவ்ளோ சீக்கிரம் சரி பண்ண முடியாது... நீங்க டன் கணக்குல காட்டுன நேசத்தைக் கூட ஒரே ஒரு மோசமான வார்த்தையால ஒன்னுமில்லாம ஆக்க முடியும்... நீங்க அதுக்காக எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் அந்த வார்த்தை உண்டாக்குன அழிவுல ஒன் பர்சன்டேஜை கூட உங்களால சரிபண்ண முடியாது... எதையும் பேசிட்டு வருத்தப்படுறதை விட பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் நிதானிச்சா எவ்ளோ மோசமான பிரிவுகளை கூட அவாய்ட் பண்ண முடியும்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

ஷ்ரவனோடு வீட்டுக்கு வந்த கேசவ் பத்மானந்தைத் தேடினான். அவரது அறைக்கதவு பூட்டியிருக்கவும் வசந்திடம் அவர் எப்போது வந்தார் என விசாரித்தான்.

“சார் வந்து ஹாப் அண்ட் ஹவர் ஆகுது... வந்ததும் ரூம் டோரை லாக் பண்ணுனவர் இப்ப வரைக்கும் ஓப்பன் பண்ணல கிரிஷ் சார்”

“சரி... நீங்க போய் சாப்பிடுங்க வசந்த்”

வசந்த் செல்லவும் பத்மானந்தின் அறைக்கதவைத் தட்டப் போனவன் ஷ்ரவன் தடுக்கவும்

“அவர் இவ்ளோ நேரம் உள்ள என்ன பண்ணுறார்னு தெரியலயேடா... கொஞ்சம் டென்சனா இருக்கு” என்றான் கவலையோடு.

“எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கும்... அதை அவரால டைஜெஸ்ட் பண்ண முடிஞ்சிருக்காதுடா... அவர் கமலானந்தை எவ்ளோ நம்புனார்னு நமக்கு நல்லாவே தெரியும்... உன்னையும் நீரவையும் எந்த இடத்துல வச்சிருக்குறாரோ அதே இடத்தை சரணுக்கும் குடுத்தார்... அவன் இப்பிடி ஏமாத்துவான்னு நினைச்சிருக்க மாட்டார்... அதிர்ச்சி அடங்கட்டும்... அவரே டோரை ஓப்பன் பண்ணுவார்”

ஷ்ரவன் எடுத்துக் கூறினாலும் கேசவின் மனம் அமைதியுறவில்லை என்ன இருந்தாலும் அவனைப் பெற்றவர் அல்லவா! அவர் வேண்டுமானால் பாசம் அன்பை பற்றி கவலைகொள்ளாதவராக இருக்கலாம். ஆனால் கேசவால் அப்படி இருக்க முடியாதே!

என்றைக்கும் இல்லாத திருநாளாக கேசவ் அன்று சீக்கிரமே வீடு திரும்பிவிட்டதை அறிந்து சுசித்ரா என்னவென விசாரித்தார்.

“இன்னைக்குச் சிலரோட சுயரூபம் என்னனு அப்பாக்குத் தெரிஞ்சிடுச்சு சித்தி... அந்த ஷாக்கை அவர் எப்பிடி ஃபேஸ் பண்ணப்போறார்னு தெரியல... அதான் நான் சீக்கிரமே வந்துட்டேன்” என்றான் கேசவ்.

அவன் பொதுவாக கூறினாலும் தனது கணவர் மற்றும் மைந்தனைப் பற்றிய உண்மைகள் மாமாவுக்குத் தெரிந்துவிட்டது என்பதை ஊகித்துக்கொண்டார் சுசித்ரா.

“மாமா இதை தனியா தான் ஃபேஸ் பண்ணணும்... வேற வழியில்ல கிரிஷ்” என்று பேச்சைச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

நேரம் கடந்து போக அவசர அவசரமாக வீட்டுக்குள் பிரவேசித்த கமலானந்த் தனக்கு முன்னர் அங்கே இருந்த கேசவையும் ஷ்ரவனையும் பார்த்ததும் அதிர்ந்தார். அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாது மறைத்தவர்

“இன்னைக்கு அண்ணன் சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டார்னு அவரோட பி.ஏ சொன்னார்... அவருக்கு உடம்பு சரியில்லயோனு கவலையா இருந்துச்சு... அண்ணனை தனியா விடுறதுக்கு மனசில்லாம ஓடி வந்தேன்” என்றார்.

அவர் எதற்கு வந்திருப்பார் என்பதை அறியாத அளவுக்கு ஒன்றும் அங்கிருந்த மூவரும் முட்டாள்கள் இல்லை.

கேலிப்புன்னகையோடு அவரை ஏறிட்ட கேசவ் மேற்கொண்டு பேச விரும்பாமல் அமைதி காத்தான்.

அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த வீடு கமலானந்த் வந்ததும் வேகமாக பத்மானந்த் அறைக்கதவை திறந்த சத்தத்தில் அதிர்ந்தது.

அது அவரது மனதிலுள்ள வேதனையின் ஓசை. நம்பக் கூடாத கயவர்களை நம்பி ஏமாந்தோமே என்ற கழிவிரக்கத்தின் கூக்குரல். இழக்க கூடாத அனைத்தையும் இழந்து மிச்சமிருக்கும் மைந்தனின் பாசம் இனி கிட்டுமா கிட்டாதா என திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்போடு தனியனாய் நிற்கும் ஒரு ஆணின் ஆக்ரோஷம்.

கோபம் குறையாமல் அனைவரும் அமர்ந்திருந்த ஹாலுக்கு வந்தவரின் பார்வை அங்கிருந்தவர்களை எடை போட ஆரம்பித்தது.

முதலில் கேசவ். அவரது நகலென பத்மானந்த் கர்வமாக சொல்லிக்கொள்ளும் இளையமகன். ஆனால் இப்போது நல்லவேளை, இவன் எனது நகலாக இல்லாமல் போனானே என்ற நிம்மதி பெருமூச்சு அவருக்கு.

அடுத்து அமர்ந்திருந்தவன் ஷ்ரவன். சந்திரமௌலியைப் போல நட்பையும் நண்பனையும் எந்தக் கட்டத்திலும் விட்டுக்கொடுக்காத நல்ல மனம் படைத்தவன். அவனையும் கூட எவ்வாறெல்லாம் வசைமொழி பாடியிருக்கிறோம் என வெட்கினார் பத்மானந்த்.

மனைவியின் தங்கை சுசித்ரா. அவளை தனது உடன்பிறவாத தங்கையாக பாவித்தவர் பத்மானந்த். சிறுபிள்ளைத்தனமாக கார்கியுடன் ஒவ்வொரு விசயத்துக்கும் போட்டி போடும் கூட மனைவியைப் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க சொல்வார் அவர். மனைவியின் மரணம் அவளைப் பாதித்ததால் ஒடுங்கிப்போய்விட்டாள் என்று எண்ணியிருந்தவருக்கு இப்போது உண்மை காரணம் தெரிந்துவிட்டதே!

கடைசியாய் அவரது கண்கள் வெறித்தது உடம்பிறந்த துரோகியான கமலானந்தை. எப்போதும் தன்னிலிருந்து அவரைப் பிரித்து பாராதவர் பத்மானந்த். ஆனால் கமலானந்த் இத்தகைய கயமைத்தனம் கொண்டவராக இருந்து அவரது மைந்தனையும் துரோகத்தின் மொத்தவுருவமாக வளர்த்திருப்பார் என்பது நம்பிக்கை துரோகத்தின் வேதனை என்னவென்பதை அவருக்குப் புரியவைத்துவிட்டது.

வினோதமாக நடந்துகொண்ட தமையன் அறையிலிருந்து வெளியே வந்து அனைவரையும் மாறி மாறி பார்ப்பதை புரியாமல் கவனித்த கமலானந்த் தயக்கத்துடன் அவரை நெருங்கினார்.

“அண்ணா” என்றவர் அடுத்த நொடி “அம்மாஆஆஆ!” என அலறியபடி கீழே விழுந்தார்.

ஏனெனில் ஒட்டுமொத்த கோபத்தையும் வேதனையையும் ஒரு கரத்தில் திரட்டி பளாரென அவரது கன்னத்தில் அறைந்திருந்தார் பத்மானந்த்.  

கீழே விழுந்தவர் உக்கிர ரூபமாக தன் முன்னே நிற்கும் தமையனை பார்க்க அஞ்சி தலை நிமிராமல் எழுந்தார்.

எழுந்தவரின் சட்டையைக் கொத்தாக பற்றிய பத்மானந்த் “ஏன்டா அப்பனும் மகனும் இப்பிடி சதி பண்ணி என் மகனை கொன்னிங்க?” என்று ஆவேசம் மாறாமல் கேட்டதும் கேசவுக்குப் பரமதிருப்தி.


கமலானந்த் பதில் பேசாமல் நிற்கவும் அவரது கோபம் இன்னும் அதிகரித்தது.

“ஏன் பேசாம நிக்குற? உன்னையும் உன் மகனையும் நான் கண்மூடித்தனமா நம்புனேன்... அப்ப கூட உங்களுக்கு தப்பு பண்ணுறோம்னு உறுத்தலையா? என் முதுகுக்குப் பின்னாடி எவ்ளோ பெரிய சதி பண்ணிருக்குறான் உன் மகன்... நான் குடுத்த டூ க்ரோர்ஸை வச்சு அந்தப் பொண்ணு நிகிதாவ என் மகனுக்கு எதிரா திருப்பிவிட்டு கொஞ்சநஞ்சமா துரோகமா பண்ணிருக்கீங்க அப்பனும் மகனும்?” 

“அண்ணா”

“சீ வாயை மூடு துரோகி... இன்னொரு தடவை உன் வாயில அண்ணாங்கிற வார்த்தை வரக்கூடாது”

அவர் ஆவேசம் குறையாமல் எச்சரிக்க கமலானந்த் இன்னும் அதிர்ச்சியும் அவமானமும் குறையாமல் நின்றிருந்தார்.

“எங்க உன் மகன்?” என கர்ஜித்தார் அவர்.

“அண்ணா”

“எங்கடா உன் மகன்? எங்க இருந்து என் குடும்பத்துக்குக் குழி பறிச்சிட்டிருக்குறான்னு சொல்லு”

“அவன்...” என கமலானந்த் தயங்க 

“இப்பவே அவனுக்குக் கால் பண்ணு... அவன் எங்க இருந்தாலும் நாளைக்கு மானிங் அவன் இங்க வந்தாகணும்... இல்லனா பத்மானந்தோட கோவம் என்னனு அவனும் பாப்பான்” 

உடனே கமலானந்த் மொபைலை எடுத்து சரணின் எண்ணுக்கு அழைத்தார்.

அழைப்பை ஏற்றவனிடம் “நீ நாளைக்குச் சென்னைக்கு வரணும் சரண்” என்றார் மொட்டை கட்டையாக.

தந்தையின் குரலில் இருந்த மாற்றத்தைக் கண்டுகொண்ட சரண் என்ன ஏன் என தோண்டித் துருவ ஆரம்பித்தான்.

“தேவையில்லாம கேள்வி கேக்காத சரண்... சென்னைக்கு வா, அப்புறம் பேசலாம்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

பத்மானந்த் அவரிடம் “என்ன சொல்லுறான் உன் மகன்?” என வினவ

“நாளைக்கு அவன் வந்துடுவான்ணா” என்றார்.

பத்மானந்த் அதற்கு மேல் பேச விரும்பாமல் அவரது அறைக்குச் செல்ல திரும்ப கமலானந்த் “என்னை மன்னிச்சிடுங்கண்ணா” என குனிந்த தலை நிமிராமல் கூறினார்.

அருவருப்போடு பார்த்த பத்மானந்த் “மன்னிக்கணுமா? என் மன்னிப்பு எப்பிடிப்பட்டதா இருக்கும்னு தெரிஞ்சும் கேக்குற பாத்தியா? கவலைப்படாத... உனக்கும் உன் மகனுக்கும் ஷ்பெஷல் மன்னிப்பு காத்திருக்கு... அது வரைக்கும் சந்தோசமா இருந்துக்க” என்று உறுமிவிட்டு சென்றார்.

கமலானந்த் திக்குத் தெரியாத காட்டில் நிற்பவரைப் போல உணர்ந்தார்.

“சுசி” என மனைவியை நெருங்கியவருக்கு

“உங்க சுயரூபம் மாமாக்குத் தெரியுற நாளுக்காக நான் காத்திருந்தேன்... இப்ப தான் எனக்குச் சந்தோசமா இருக்கு... மாமாவோட மன்னிப்புக்குக் கொஞ்சம் கூட தகுதியில்லாத ஆள் நீங்க” என பதிலடி கிடைத்தது.

கூடவே அவரது மொபைல் போன் பறிக்கப்பட்டது. 

அதை கேசவிடம் நீட்டினார் சுசித்ரா.



“ரூம்ல இவரோட லேப்டாப், பெர்ஷ்னல் மொபைல் இருக்கு... அதையும் எடுத்துக்க கிரிஷ்... இவர் புத்தி எனக்குனு தெரியும்... நமக்குத் தெரியாம அவனை வார்ன் பண்ணி எங்கயாச்சும் அனுப்பி வைக்கலாம்னு ப்ளான் போடுற ஆள் தான் இவர்” என்றார்.

ஷ்ரவனும் கேசவும் அவரது மொபைலையும் மடிக்கணினியையும் பறிமுதல் செய்துகொண்டனர்.

சுசித்ரா அவர்களிடம் “நீங்க மாமாவ போய் பாருங்கப்பா... ஹீ இஸ் ப்ரோக்கன்... ப்ளீஸ் டேக் கேர் ஆப் ஹிம்” என்க

“ஷ்யூர் சித்தி” என்ற கேசவ் நண்பனை அழைத்துக்கொண்டு பத்மானந்தின் அறைக்குச் செல்ல அங்கே அவர் இல்லை.

இருவரையும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அதற்குள் எங்கே சென்றிருப்பார் என்ற கேள்வியோடு வீடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியவர்கள் பத்மானந்தின் கார் தரிப்பிடத்தில் இல்லை என்றதும் பதறினர்.

ஆனால் பத்மானந்தின் கார் ஓட்டுனர் கூறிய செய்தியில் இருவரது பதற்றமும் அடங்கியது.

“மௌலி சாரை பாக்குறதுக்காக நம்ம சார் கிளம்புனாங்க... என்னை கார் ஓட்டவேண்டாம்னு சொல்லிட்டு அவங்களே காரை எடுத்துட்டுப் போயிட்டாங்க தம்பி”

ஷ்ரவன் உடனே தந்தையின் எண்ணுக்கு அழைத்தான்.

“ஆனந்த் அங்கிள் உங்களை பாக்குறதுக்காக வந்துட்டிருக்குறார்பா... ப்ளீஸ் அவரை கவனமா பாத்துக்கோங்க”

“என்னடா ஆச்சு? எதுவும் பிரச்சனையா?” என சந்திரமௌலி வினவ

“எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகப்போகுதுப்பா... அவருக்கு இங்க இருக்க பிடிக்கல... சோ நைட் அவரை உங்களோட தங்க வச்சிக்கோங்க... ப்ளீஸ் இப்பவும் குளோபல் எகனாமி பத்தி பேசி அவரை மூட் அவுட் பண்ணாம கொஞ்சம் ஜாலியா வச்சுக்கோங்க” என்றான் ஷ்ரவன்.

“டேய் டேய்! போதும்டா... நான் உனக்கு அப்பன்... அவன் என்னோட ஃப்ரெண்ட்... அவனை எப்பிடி பாத்துக்கணும்னு நீ எனக்கு லெக்சர் அடிக்காத... உனக்கும் மருமகளுக்கும் ஏதோ சண்டைனு கேள்விப்பட்டேன்... அதை பேசி ஷார்ட் அவுட் பண்ண பாரு... வந்துட்டான் எனக்கு அட்வைஸ் பண்ணுறதுக்கு”

“ப்பா!”

“என்னடா நொப்பா? நீ லவ் பண்ணுறனு கேள்விப்பட்டப்பவே ஒரு நாள் இல்லனா ஒரு நாள் இப்பிடி ஒரு நிலமை வரும்னு தோணுச்சு... சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுனு சொல்லுற மாதிரி உன் லவ் அவ்ளோ ஈஸியா சேராதுனு நினைச்சேன்... நான் நினைச்சபடியே ஆகிடுச்சு”



“ஐயோ டாடி... போதும் போதும்... உங்க கருநாக்கால சாபம் விடாதிங்க... நானும் பிரகியும் கூடிய சீக்கிரமே ஒன்னு சேர்ந்துடுவோம்... நீங்க ஆனந்த் அங்கிளை கவனிச்சிக்கோங்க” 

தந்தையிடம் கலாய் வாங்கி கட்டியதை காட்டிக்கொள்ளாமல் அழைப்பைத் துண்டித்தான் ஷ்ரவன்.

கேசவும் அவனும் அன்று வெகுநிம்மதியாக உணர்ந்தார்கள்.

அவனது அறைக்குச் சென்றதும் தங்கள் கம்பெனி செகரட்டரியை அழைத்து போர்ட் இயக்குனர் செய்த முறைக்கேட்டை பற்றி மினிஸ்ட்ரி ஆப் கார்பரேட் அஃபையர்சுக்கு புகாரளிப்பதற்கான வழிமுறைகளை உடனே ஆரம்பிக்கும்படி கட்டளையிட்டான். கூடவே முக்கியமான பங்குதாரர்கள் மற்றும் ஷ்டேக்ஹோல்டர்கள் கூட்டத்தைக் கூட்டவும் தேதி அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டான்.

அனைத்தையும் பேசிவிட்டு மொபைலை மெத்தையில் வீசியவன் தானும் அதில் விழுந்தான்.



நீண்டநாட்களுக்குப் பிறகு அவனது மனம் நிச்சலனமாக உணர்ந்தது.

கண் மூடிப் படுத்தவனின் மனம் அடுத்து செய்து முடிக்க வேண்டிய வேலையாக பிரக்ருதியைச் சுட்டிக்காட்டியது.

அவளிடம் ரேடியோவில் உரையாட வேண்டும் என்ற திட்டத்தை நினைவுபடுத்தியது அவனது மனம்.

உடனே எழுந்து அமர்ந்தவன் “இன்னைக்கு நைட் கிருதியோட ப்ரோக்ராமுக்குக் கால் பண்ணி அவ கிட்ட பேசணும்டா” என்கவும் ஷ்ரவன் ஏன் என வினவினான்.

“அவ மனசுல லவ் பத்தி என்ன நினைக்குறானு எனக்குத் தெரியணும்”

“நீ கால் பண்ணுனா அவ உண்மைய சொல்லுவானு நினைக்குறியா?”

“நான் குரலை மாத்தி பேசலாம்னு இருக்கேன் மச்சி”

“எப்பிடிடா உன்னால சிரிக்காம காமெடி பண்ண முடியுது? நடக்குற விசயத்தை பேசு... சாருக்கு எப்ப மிமிக்ரி பண்ண தெரிஞ்சுது? நீ ஹலோனு சொன்னாலே அவ காலை கட் பண்ணிடுவா”

ஷ்ரவன் கூறுவது நியாயமென பட்டது கேசவுக்கு. 

கொஞ்சம் யோசித்தவன் “நமக்கு எப்பவும் எந்த ஒரு விசயத்துலயும் ஹெல்ப் பண்ணுறது யாரோ அவங்களை வச்சே பேச வைப்போம்” என்றான்.

“யாரை சொல்லுற கிரிஷ்?”

“வேற யாரு? அபராஜித் தான்”

“இதுவும் நல்ல ஐடியா தான்... ஆனா பையன் மொரட்டு சிங்கிள்... அவன் எப்பிடி லவ்வ பத்தி கேப்பான்?”

“நீயும் நானும் ஒரு காலத்துல மொரட்டு சிங்கிள்னு சொல்லிட்டுச் சுத்துனவங்க தான்... நம்ம மாறல? அவனும் மாறுவான்”

இறுதியாக அபராஜித்தை வைத்து பிரக்ருதியின் வானொலி நிகழ்ச்சிக்குப் பேச வைக்கலாம் என்ற முடிவை எடுத்தனர் நண்பர்கள் இருவரும்.

Comments

Post a Comment