அத்தியாயம் 10
தரங்கிணி கண் விழித்தபோது அவள் பங்களாவின் விருந்தினர் அறையில் இருந்தாள். சுற்றி யாருமில்லை. “சித்து ஹாஸ்பிட்டல்ல இருக்கான்” சாரதாவின் குரல் மீண்டும் காதில் ஒலிக்கவும் விறுவிறுவெனப் படுக்கையிலிருந்து எழுந்தாள். இந்தப் பாவிகள் என் பிள்ளையை என்ன செய்தார்களோ என்று தாய்மணம் அரற்றியது. வேகமாக லிவிங் அறைக்கு வந்தவள் “எங்க போனிங்க சாரதாம்மா? என் மகனுக்கு என்னாச்சுனு சொல்லாம எங்க ஓடி ஒளிஞ்சிருக்கிங்க?” என்று கோபமாகக் கத்தினாள். அவளது குரல் கேட்டதும் மேல்தளத்தில் சாரதாவின் முகம் தெரிந்தது. பணத்திமிர், அதிகாரவெறி எல்லாம் காணாமல் போன முகம் அது. பதற்றத்தை மறைத்தபடி அவர் கீழ்த்தளத்துக்கு வருவதைக் காலணிகளின் சத்தம் உறுதிபடுத்தியது தரங்கிணிக்கு. “எதுக்கு இப்ப கத்துற? சித்துக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல… அதனால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்” என்றபடி வந்து நின்றார் அவர். “அவனுக்கு ஹெல்த் இஸ்யூனு ஏன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணல? இப்ப அவன் எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கான்?” பரபரத்த தரங்கிணியை எப்படி கட்டுப்படுத்துவதெனத் தெரியாமல் அயர்ந்து போனார் அப்பெண்மணி. “அவனை யாரும் தொந்தரவு பண்ணக...