இசை 18
- Get link
- X
- Other Apps
“காரண காரியங்கள் இல்லாம ஒருத்தர் மேல வர்ற வருத்தம் சில நேரங்கள்ல வந்த சுவடு இல்லாம மறைஞ்சிடும்... அந்த வருத்தம் உண்டாக்குன வடு அப்பிடியே தான் இருக்கும்... அதனால தானோ என்னவோ பேசுறப்ப கவனமா பேசணும்னு பெரியவங்க சொல்லுறாங்க... பிகாஸ் கோவத்துல விடுற வார்த்தையால நம்ம ஒருத்தவங்களை காயப்படுத்திட்டா காலப்போக்குல அந்தக் காயம் என்னவோ மறைஞ்சிடும்... ஆனா அந்த காயத்தோட தழும்பு மறையாம காலம் முழுக்க நம்ம வருத்தத்தோட வரலாறை சொல்லிட்டே இருக்கும்”
-ஆதித்யன்
கே.கே.வில்லா...
ஹால் சோபாவில் ஆதித்யனின் அருகே பதுமை போல வீற்றிருந்த பிரதியுஷாவின் முன்னே கிடந்த டீபாயில் காபி கோப்பைகளுடன் கூடிய ட்ரே வைக்கப்பட்டது.
நிமிர்ந்து பார்த்தவளிடம் “யூ ஆர் லுக்கிங் டயர்ட் ஸ்வீட்டி” என்றார் எமிலி. அவரிடம் முறுவலித்தவள் காபிக்கு நன்றி கூறி கோப்பையை எடுத்துக்கொண்டாள்.
பின்னரே பழைய சம்பவங்களால் அவள் கோபமுற்றிருக்கிறாளோ என்ற சந்தேகம் வைஜெயந்திக்கு அகன்றது.
“உஷா என்னை மன்னிச்சிடுடா”
சந்தியாவும் அனுபமாவும் பரிதாபத்துடன் ஏறிட்டனர்.
ஆதித்யனிடமோ சங்கடமான அமைதி குடிகொண்டிருக்க ஆதவன் பழைய நிகழ்வுகளைப் பற்றி பேசவேண்டாம் என்றான்.
“இல்ல ஆது... அன்னைக்கு உஷா சொன்னதை நம்பியிருந்தா ஹாசினி அண்ணிக்கு இப்பிடி ஒரு நிலமை வந்திருக்காது... அந்த மனுசன் கொலைகாரப்பாவினு அன்னைக்கே சொன்னாளே! நான் புத்தி கெட்டவளாட்டம் அவரை நம்பி இவளைச் சந்தேகப்பட்டேன்”
விக்ரம் அன்னையை சோகமாகப் பார்க்க பிரதியுஷா அவனை அழைத்துச் செல்லுமாறு எமிலியிடம் கண் காட்டினாள். வைஜெயந்தியை ஆறுதல்படுத்த துவங்கினாள் அவள்.
“அவருக்கு எங்களைப் பிடிக்காததால அப்பிடி நடந்துக்கிட்டார்னு நினைச்சேன்... ஆனா ஆன்ட்டியையே காயப்படுத்துற அளவுக்குப் போவார்னு நான் எதிர்பாக்கல சித்தி”
இனி பழைய சம்பவங்களைப் பற்றி பேசவேண்டாம் என்று கூறிவிட வைஜெயந்தி அமைதியானார்.
“சரி! நீங்க மூனு பேரும் ரெஸ்ட் எடுங்க... ஈவினிங் ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம்” என அவர் கூறவும் பிரதியுஷா தனது உடமைகளை எடுத்துக்கொண்டு முன்னர் வந்திருந்த போது தங்கியிருந்த அறைக்குச் செல்ல எத்தனித்தாள்.
ஆதித்யன் தடுக்கவும் என்ன என்பது போல நோக்கினாள்.
“என்னோட ரூம்ல நீ ஸ்டே பண்ணலாமே”
ஆலோசனை போல கூறினாலும் உண்மையில் அது கட்டளையே என்பதை பிரதியுஷா அறிவாள்.
வந்ததும் வாக்குவாதம் செய்ய விரும்பாதவளின் பார்வை தயக்கத்துடன் ஆதவன் பக்கம் திரும்ப அவனோ “என்ன லுக்? கூப்பிடுறது உன்னோட ஹப்பிமா... ஏதோ மூனாவது மனுசன் மாதிரி இவ்ளோ தயங்குற?” என கேலி செய்ய அதற்கு மேல் நிற்காது கிளம்பியவள் அறைக்குள் நுழைந்த ஆதித்யனிடம் படபடவென பொரிய ஆரம்பித்தாள்.
“எதுக்கு என்னை இங்க வரச் சொன்ன ஆதி?”
“ஆது தப்பா நினைச்சுப்பான்னு யோசிக்கிறியா?”
அவனிடமிருந்து வந்த கேள்வியில் திகைத்தாள். தனக்கும் அவனுக்குமிடையே ஆதவன் ஏன் வரப்போகிறான்?
“நான் அதுக்குச் சொல்லல... லாஸ்ட் டைம் நான் என்னோட ரூம்ல தானே இருந்தேன்”
“அம்மா டிஸ்சார்ஜ் ஆகி இங்க வந்ததும் நீ பழையபடி அந்த ரூம்ல தான் இருக்கனு தெரிஞ்சா கவலைப்பட ஆரம்பிச்சிடுவாங்க”
“ஆனா...”
இழுத்தவளை நிதானத்துடன் ஏறிட்டான்.
“ஜஸ்ட் மிசஸ் ஆதித்யனா நீ இருக்கப்போற டைம் பீரியட் வரைக்கும் இந்த ரூம்ல ஸ்டே பண்ணுனா போதும்” அடுத்து எதுவும் பேசவில்லை.
அவனது மனமெங்கும் ஆதவனையும் பிரதியுஷாவையும் சுற்றி வட்டமிட்டது. அவனுக்கு நினைவில்லாத நேரத்தில் நடந்த திருமணத்தால் அவனது காதலை ஆதவனிடமிருந்து பறித்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி!
ஆதவன் பழைய நினைவுகள் மீண்டபோதும் பிரதியுஷாவை ஆதித்யனின் மனைவியாக மட்டுமே ஏற்றுக்கொண்டான் என்பதை அவன் அறியவில்லை.
அவன் சந்தியாவிடம் வம்பிழுத்து கொண்டிருந்தான். அவளோ இவனது வாய் ஓயவே ஓயாதா என்று சலிப்புடன் பார்க்க “என்னாச்சு?” என்று வினவினான்.
“இல்ல உங்களுக்கு வாய் வலிக்காதானு யோசிச்சேன்”
“நான் ஒரு ஸ்டாண்ட்–அப் காமெடியன்மா... நிறுத்தாம பேசி எனக்குப் பழகிப்போச்சு”
“வாட்? ஸ்டாண்ட்–அப் காமெடியனா? இது எனக்குத் தெரியாதே”
அதிசயித்தாள் சந்தியா. அவன் நகைச்சுவையாக பேசுவான் என்று மட்டும் தான் கேள்விப்பட்டிருக்கிறாள் அவள்.
“என்னோட ஜோக்குக்கு இந்த டாஸ்மேனியாவே அடிமை... உஷா என்னை பத்தி சொல்லலயா?”
கேலியாக வினவினான் ஆதவன். கூடவே டீசர்ட்டின் பின்னே சரிந்திருந்த ஹூடியை தூக்கிவிட்டுப் பெருமைப்பட்டுக்கொண்டான்.
பொய்யான மெச்சுதலுடன் அவனைப் பார்த்த சந்தியா “சொல்லிருக்காளே! நீங்க சரியான மொக்கை ஜோக் ரோமியோனு” என்று சொல்லிவிட்டு நகர முற்பட அவளை வழிமறித்தான் ஆதவன்.
“ஒரு பொண்ணால ஒரே நேரத்துல இதயத்துல பட்டாம்பூச்சிய பறக்கவிடவும், அதே இதயத்தை நொறுக்கவும் முடியும்னு நீ இன்னைக்கு ப்ரூவ் பண்ணிட்ட”
சோகம் காட்டி பேச அவள் என்ன உளறல் என்பது போல முறைத்தாள்.
“ரோமியோனு சொல்லி என் ஹார்ட்ல பட்டர்ஃப்ளை பறக்க வச்ச நீயே என்னோட ஜோக்க மொக்கைனு சொல்லி என் ஹார்ட்ட உடைச்சிட்ட தியா” என்றான் சோகமாக.
“ஒரேயடியா குறை சொன்னா மனசு உடைஞ்சிடுவிங்களேனு தான் ரோமியோங்கிற வேர்டை ஆட் பண்ணுனேன்... மத்தபடி உங்களை போய் ரோமியோனு சொல்லுறதுக்கு நான் என்ன பைத்தியமா?”
அசராது பதிலளித்துவிட்டு நகர்ந்தாள் சந்தியா.
அங்கிருந்து ஜகா வாங்கினான் ஆதவன்.
வந்தவனின் பார்வையில் யோசனையில் ஆழ்ந்திருந்த ஆதித்யன் படவும் “ஹேய் ப்ரோ இந்த தியா பொண்ணு என்னை மொக்கை ஜோக் ரோமியோனு சொல்லுதுடா” என்று குறைபட்டபடி வந்து அவனருகே அமர்ந்துகொண்டான்.
அன்னையைப் பற்றிய கவலையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பத்மஹாசினிக்கு வெளிக்காயங்கள் தான் ஆறிவிட்டதே. அதிலும் பிரதியுஷா ஆஸ்திரேலியாவுக்கு வருவதாகச் சொன்னதும் பத்மஹாசினியின் மன அமைதியும் திரும்பிவிட்டது. அப்படி இருக்கையில் எதை குறித்து ஆதித்யன் இவ்வளவு யோசிக்கிறான்?
அவன் தொப்பென்று அமரவும் ஆதித்யன் கவனம் கலைந்தது.
“நான் கேக்குறதுக்கு ஓபனா பதில் சொல்லுவியா ஆது?”
“உனக்கு மெமரி திரும்புனப்ப பிரதியுஷாவ என்னோட ஒய்ப்னு சொன்னதும் நீ எப்பிடி ஃபீல் பண்ணுன?”
“இப்ப எதுக்கு இந்தக் கேள்வி?”
“பதில் சொல்லு ஆது”
“உஷாவ உன்னோட ஒய்ப்னு அம்மா காட்டுனதுக்கு அப்புறமா தான் எனக்கு பழைய மெமரி திரும்புச்சு... எனக்குக் கஷ்டமா இல்லனு பொய் சொல்லமாட்டேன் ஆதி... இழந்த காதலையே நினைச்சு வருத்தப்பட எனக்கு இஷ்டமில்ல... நீயும் உஷாவும் பிரிஞ்ச சோகத்துல அம்மா மனசளவுல நொறுங்கிட்டாங்க... எனக்கு அவங்களை நினைச்சு கவலையா இருந்துச்சு... வாழ்க்கைல எல்லா இக்கட்டுல இருந்தும் மூவ் ஆன் பண்ணி முன்னேறுறவன் தான் புத்திசாலி... நானும் மூவ் ஆன் ஆகிட்டேன் ஆதி... உஷா என்னோட பாஸ்ட்... பட் உன்னோட ப்ரசன்ட்... உன்னோட ஃபியூச்சர்லயும் அவ இருந்தா அம்மாவ மாதிரி நானும் சந்தோசப்படுவேன்”
நிதானமாக தனது மனநிலையை எடுத்துரைத்தவன் ஆதித்யனைத் தோளணைத்தான்.
“யூ ஹேவ் டூ மூவ் ஆன் ஆதி... ஜெனோ திரும்பிவர மாட்டா”
ஆதித்யன் மத்திமமாகத் தலையசைத்தான்.
“சரி அதை விடு... அந்தப் பொண்ணு என்னை மொக்கை ஜோக் ரோமியோனு சொல்லிட்டாடா... அவ வாயால என்னை நகைச்சுவை மன்னன்னு சொல்லவைக்கணும்... அதுக்கு எதாச்சும் ஐடியா குடுடா”
தீவிரக்குரலில் கேட்கவும் ஆதித்யனும் இயல்புநிலைக்குத் திரும்பினான்.
“நெக்ஸ்ட் ஸ்டாண்ட் அப்கு ரெடியாகுடா... வழக்கத்தை விட இந்தத் தடவை ஸ்க்ரிப்ட் பயங்கர ஃபன்னியா ரைட்டப் பண்ணு... உன்னோட ஹியூமர் சென்சை அவளுக்குக் காட்டு” என்றான்.
“சூப்பர்டா... நானும் சாமும் டிஸ்கஸ் பண்ணுறோம்... செமய்யா ஒரு ஸ்க்ரிப்டை எழுதுறோம்... அந்தச் சந்தியாக்கு என்னோட ஹியூமர் சென்சை ப்ரூவ் பண்ணுறோம்”
சபதமிட்டுவிட்டு எழுந்தான் ஆதவன்.
அவன் ஸ்கிரிப்டை யோசிக்கச் சென்றுவிட ஆதித்யன் அவனது அறைக்குச் சென்றான். இனி ஈடனுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. நீலகண்டன் பார்த்துக்கொள்வார்.
தனது ஜெர்கினைக் கழற்றி படுக்கை மீது வீச முயன்றவன் அங்கே உறங்கிக் கொண்டிருந்த பிரதியுஷாவைக் கண்டதும் உயர்ந்த கையை இறக்கிக்கொண்டான்.
உறங்குபவளின் முகத்தில் கவலை தனது ரேகையைப் பதித்திருந்தது. முதல் முறையாக அவளைப் பார்த்து இரக்கம் சுரந்தது ஆதித்யனுக்கு. பெரியளவில் அவளைப் பற்றி தெரியாது! அவள் இந்தியாவுக்குச் சென்ற பின்னர் நீலகண்டன் அவ்வபோது அவளை எண்ணிப் புலம்புவதைக் கேட்டிருக்கிறான்.
“தன்னோட பொறுப்பைத் தட்டிக்கழிக்காத தாமுவோட குணம் உஷாம்மாக்கு... அதனால தான் அனுவுக்கு ஒன்னுனதும் அவ கோவப்படுறா தம்பி... அவ வயசு பொண்ணுங்க மாதிரி வாழ்க்கைய அனுபவிக்காம அனுவோட பொறுப்பை தன் முதுகுல ஏத்திக்கிட்டா... நீங்க அவசரப்பட்டு வார்த்தைய விட்டுட்டிங்க தம்பி”
முதலில் அவரது புலம்பலை ஒதுக்கியவன் சந்திரமோகனின் சுயரூபம் தெரிந்த பிறகு உண்மையில் அவசரப்பட்டு பிரதியுஷாவிடம் வார்த்தைகளை விட்டுவிட்டோமோ என்று வருந்தினான்.
இப்போதும் அந்த வருத்தம் அவனுக்குள் இருக்கிறது. அதை அறியாதவளாக உறங்கிக்கொண்டிருந்த பிரதியுஷாவைப் பெருமூச்சுடன் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
மாலையில் பிரதியுஷா எழுந்ததும் அவளோடு மருத்துவமனைக்குச் சென்றான். சந்தியாவும் அனுபமாவும் மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்லலாம் என வீட்டிலேயே இருந்துகொண்டனர்.
மருத்துவமனையில் பத்மஹாசினிக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவரை முதலில் சந்தித்தனர் இருவரும்.
“மிசஸ் கதிர்காமனுக்கு இன்ஜுரிஸ் எல்லாமே கியூர் ஆயிடுச்சு... ஆனா அவங்க மனசுல உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் வீணாக்கிட்டோம்னு குற்றவுணர்ச்சி இருக்கு... அது தான் அவங்களோட மன அழுத்தத்துக்குக் காரணம்... அவங்க உங்க ஒய்பை பத்தி வாய் விட்டுப் புலம்புனப்போவே நீங்க சுதாரிச்சிருக்கணும் ஆதி... இப்ப நான் குடுக்குற கவுன்சலிங், உங்க ஒய்ப் இங்க வந்தது எல்லாமே சேர்ந்து அவங்களளை நார்மலாக்கிடும்... கிட்டத்தட்ட இவங்க வர்ற நியூசை கேட்டதுல இருந்து அவங்க மெண்டல் ஹெல்த்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தான்... ஆனா ஒரு விசயத்த மட்டும் நியாபகம் வச்சுக்கோங்க, ஒரு தடவை மன அழுத்தத்தால பாதிக்கப்பட்டவங்க அதுல இருந்து மீண்டுட்டா அவங்கள கண்ணாடி பாத்திரம் மாதிரி கவனமா பாத்துக்கணும்”
நீண்ட உரைக்குப் பிறகு இருவரும் அவரது அறையை விட்டு வெளியேறினர்.
பத்மஹாசினி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்த பிரதியுஷா அவரைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.
நிமிர்வு, கம்பீரம் எல்லாம் காணாமல் போய் பாதி ஆளாக படுக்கையில் கிடந்தார் அப்பெண்மணி. கண்ணீர் திரையுடன் அவரை நெருங்கியவள் அவரது கரத்தை வருடிக்கொடுக்கவும் கண் விழித்தார்.
அவளைக் கண்டதும் இருண்ட வானில் மின்னல் ஒளிருவதைப் போல புன்சிரிப்பும், கண்களில் ஜீவனும் திரும்பியது பத்மஹாசினிக்கு.
“உன்னை பாக்கணும்னு எவ்ளோ நாளா காத்திருந்தேன் தெரியுமா?”
தடுமாறியபடி கூறிவிட்டு அவசரமாக எழுந்து அமர முயற்சித்தவரை ஆதித்யன் அணைவாக எழுப்பி அமரவைத்தான்.
“இனிமே இங்க இருந்து போகமாட்டல்ல? அனு எங்க?” அவரது விழிகள் அலைபாய்ந்தது
“அனுவும் தியாவும் சித்திக்குத் துணையா வீட்டுல இருக்காங்க ஆன்ட்டி... நாளைக்கு மானிங் வந்து உங்கள பாப்பாங்க... நீங்க டென்சன் ஆகாம ரெஸ்ட் எடுங்க... அப்ப தானே சீக்கிரமே ரெகவர் ஆக முடியும்”
கண் கலங்கியது பத்மஹாசினிக்கு.
“எப்பிடியும் நான் எழுந்து நடமாட இன்னும் சில மாசங்கள் ஆகும் உஷா... முதல்ல பிசியோதெரபியெல்லாம் எதுக்குனு யோசிச்சேன்... நான் ஒருத்தி நடக்காம போறதால என்ன கேடுனு தோணுச்சு... ஆனா நீ மறுபடியும் இங்க வர ஒத்துக்கிட்டதும் ட்ரீட்மெண்டுக்கு ஒத்துக்கிட்டேன்”
ஆதித்யனுக்கு அன்னையின் உயிர்ப்பான பேச்சில் மனபாரம் அகன்றது. செவிலியிடம் அவரைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு பிரதியுஷாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான் அவன்.
கார் கிங்ஸ்டனுக்கு செல்கையில் பிரதியுஷா மெதுவாக வாயைத் திறந்தாள்.
“நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் ஆதி”
காரை ஓட்டியபடியே “என்ன முடிவு?” என்றான் அவன்.
“அந்த முடிவைக் கேட்டா நீ என்னை தப்பா தான் நினைப்ப”
சலிப்புடன் உச்சு கொட்டியவன் “வீணா இழுக்காம என்ன முடிவுனு சொல்லு” என்றான்.
“நான் இனிமே இந்தியாக்குத் திரும்பி போகமாட்டேன்... இங்கயே இருந்துடுறேன்”
ஆதித்யன் அவளது பேச்சில் அதிர்ந்து காரை ஓரங்கட்டினான். அவளது முகத்தை ஆராய்ந்தவன் ஏதோ சொல்ல வருவதற்குள் பிரதியுஷாவே முந்திக்கொண்டாள்.
“நான் எந்த வசதிவாய்ப்புக்காகவும் மனசு மாறல... ஆது என்னை மறந்துட்டு மூவ் ஆன் ஆனதாலயும் இப்பிடி பேசல... எல்லாம் சரியாயிடுச்சுனு நானும் அனுவும் இந்தியாக்குத் திரும்பி போயிட்டா மறுபடியும் ஆன்ட்டிக்கு அதை நினைச்சு டிப்ரசன் வந்துடுச்சுனா விளைவுகள் மோசமாயிடும் ஆதி... அவங்களோட அந்த அன்புக்கு நான் காட்டுற பிரதியுபகாரம் இது... இதுக்கு வேற மாதிரி நீ அர்த்தம் எடுத்தாலும் ஐ டோன்ட் கேர்”
பிற்பாதி வார்த்தைகள் ஆதித்யனை நிம்மதியடைய செய்தது. அன்னையை எண்ணி இனி அவன் வருந்தவேண்டியதில்லை.
அவளின் பேச்சில் முற்பாதி வார்த்தைகள் இரண்டாண்டுக்கு முன்னர் அவர்கள் திருமணம் முடிந்த ஏழாம் நாள் பிரதியுஷாவிடம் அவன் உரைத்தது தான்.
ஆதவன் இல்லையென்றதும் தன்னுடன் வாழவும் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கவும் அவள் நடிக்கிறாள் என்றான் அவன். அது சந்திரமோகனின் துர்போதனையால் வெளியிட்ட வார்த்தைகள்.
“எப்ப நீ என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டியோ அப்பவே உயிலோட ஷரத்து படி ஈடன் க்ரூப் மறுபடியும் எங்களுக்குச் சொந்தமாயிடுச்சு... இனி நீயோ அனுவோ இங்க இருந்தாலும் இல்லாமலே போனாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்ல”
அந்த வார்த்தைகள் தான் பிரதியுஷாவின் சுயமரியாதையைத் தூண்டிவிட்டது. நீயும் வேண்டாம் உன் உறவும் வேண்டாமென இந்தியாவுக்குத் திரும்ப வைத்தது. எங்கே மீண்டும் அதே வார்த்தைகளை அவன் உதிர்ப்பானோ என்ற ஐயம் அவளுக்கு. அதனால் தான் முன்னரே காரணத்தை விளக்கிவிட்டாள்.
“நான் அன்னைக்குப் பேசுனதுக்குக் காரணம் சந்துரு மாமானு சொல்லி தப்பிக்க விரும்பல... எனக்கு உன் மேல நல்ல அபிப்ராயம் இல்ல... அதான் அப்பிடி பேசிட்டேன்... இப்ப நினைச்சா ரொம்ப அபத்தமா இருக்கு... இவ்ளோ மோசமா பேசிட்டோமேனு அசிங்கமாவும் இருக்கு... ஐ அம் சாரி... இனிமே எப்பவுமே அந்த மாதிரி பேசமாட்டேன்”
அவளது பதிலுக்குக் காத்திராது காரைக் கிளப்பினான் ஆதித்யன். பிரதியுஷாவுக்கு அவன் மன்னிப்பு வேண்டியதில் ஆச்சரியம். நிம்மதியுடன் தனது ஆஸ்திரேலிய வாழ்க்கையை எதிர்கொள்ள தயாரானாள் அவள்.
******
நாளையில இருந்து சண்டே வரைக்கும் எபி வராது மக்களே... என் டாட்டர் ஷிவானிக்கு பர்த்டே வருது... நாளைக்கு ஈவ்னிங் ட்ரெயின்... மண்டே எபி வந்துடும்... நன்றி!
- Get link
- X
- Other Apps
Comments
Super sis
ReplyDeletethank you sis
Delete