மழை 4

போதைக்காக சிறுவர்கள் ஒயிட்னர், இருமல் மருந்து, பெவிகால், பெட்ரோலை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் சக நண்பர்களிடையே தனது ஹீரோயிசத்தைக் காட்டுவதற்கென முதலில் போதைப்பழக்கத்தைத் துவங்குகின்றனர். பிறகு படிப்படியாக அதற்கு அடிமையாகி விடுகின்றனர். -தினகரன் 04.04.2018 லோட்டஸ் ரெசிடென்சி.. பல ஏக்கர் பரப்பில் விரிந்திருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு பிரிவிலும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளைப் போல வீடுகள் அமைந்திருந்தன. அதன் ஒரு பக்கத்தில் பசும்புல்வெளியுடன் சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்காவும், இன்னொரு பக்கத்தில் நீச்சல்குளமும் அமைந்திருந்தன. அந்த லோட்டஸ் ரெசிடென்சியின் நுழைவு வாயிலுக்குள் ஸ்கூட்டியுடன் நுழைந்தாள் சாருலதா. வாகன தரிப்பிடத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு தனது பேக் மற்றும் மொபைல் சகிதம் மின்தூக்கிக்குள் நுழைந்தவளை இரு கதவுகளைத் திறந்து அரவணைத்துக் கொண்டது அந்த மின்தூக்கி. C பிரிவின் மூன்றாவது தளத்தில் மின் தூக்கி நிற்கவும் அதிலிருந்து இறங்கியவள் தங்களின் வீடு அமைந்திருந்த வராண்டாவில் நடக்கத் துவங்கினாள். அவர்களின் ஃப்ள...
Super very interesting
ReplyDeletethank you sis
Delete