மழை 1

“போதைப் பழக்கம்! இதற்கு சிறியவர், பெரியவர் பாகுபாடில்லை. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வசியப்படுத்திவிடும் ஆற்றல் இதற்கு உண்டு. அதிலும் இளையவர்களில் குடும்பத்தினராலோ, சமூகத்தாலோ புறக்கணிக்கப்படுபவர்கள் தற்காலிக மகிழ்ச்சிக்காகப் போதைப் பழக்கத்தை நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். தங்களுக்கான பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதவர்களும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். இது போன்ற உட்புற, வெளிப்புறத் தூண்டல்களால் போதைப் பழக்கம் சிறார்களையும் பதின் பருவத்தினரையும் பற்றிக்கொள்கிறது” -லட்சுமணன்.ஜி, விகடன், 28.06.2018 கே.ஆர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை…. மருத்துவ உபகரணங்கள் சூழ்ந்த அந்த அறையின் படுக்கையில் விழி மூடி அசைவற்றுக் கிடந்தாள் ஒரு இளம்பெண். அவளையே பார்த்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தாள் மற்றொருத்தி. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்துக் கொண்டிருந்தவளுக்கு கடந்த சில நாட்களாக அதன் உதவி தேவையில்லை எனுமளவுக்கு உடலில் முன்னேற்றம் வந்திருந்தது. அதிலிருந்து தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்து படுக்கையில் வெளியுலக ஸ்ரமணையின்றி விழி மூட...
Nice
ReplyDeletethank you so much sis
DeleteSome people wordings only make us to live at the moment in which they describe..Your wordings also like that sis
ReplyDeletethank you so much sis... your comment made my day
Delete